மூர்க்கன் 14
“ராஜ் எல்லாம் ரெடியா அந்த அறிவு எங்க இருக்கான்னு தெரிஞ்சிருச்சா?” என்று போனில் மிகத் தீவிரமாக ராஜ்ஜிடம் பேசிக் கொண்டிருந்தான் ராவண்.
“ரொம்ப கோபமா இருக்கார் போலையே இப்போ நான் போனா எதுவும் சொல்லுவார். கொஞ்ச நேரம் கழிச்சு பேசுவோம்” என்று அவன் பேசுவதை அறைக்கு வெளியே நின்று கேட்டுக் கொண்டிருந்தாள் இளங்கிளி.
“என்ன அக்கா பண்ணிட்டு இருக்கீங்க” என்று அவள் பின்னே நின்று இருந்த வித்யா.
அவள் குரல் கேட்டு திட்டுகிட்ட இளங்கிளி திரும்பி அவளைப் பார்த்தவள் ” ஏய் வித்யா, இப்படியா டி வந்து பயப்படுத்துவ.. நானே அவர்கிட்டே பேசலாமா? வேணாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன். இதுல நீ வேற.. ” என்றாள் சலிப்பாக.
“என்ன அக்கா இது சார் உங்க புருஷன் தான.. அவர்கிட்டே பேச என்னக்கா பயம் உங்களுக்கு” என்றாள் வித்யா.
“அவரை பார்த்தலே எனக்கு என்னே தெரியல வித்யா உள்ளுக்குள்ள உதறல் எடுத்திருது. அவர் என்கிட்டே நல்லா தான் பேசுறார், பழகுறார். ஆனா எனக்கு தான் அவர் மேல இருக்க பயம் போகவே மாட்டேங்குது” என்றாள்.
“அக்கா, நான் ஒன்னு சொல்லட்டுமா..” என்றாள் வித்யா.
“என்ன டி?” என்றாள் இளங்கிளி.
“சார் மத்த நேரத்துல வேணா கோபமா உர்ருன்னு இருப்பார். ஆனா ராத்திரி டைம்ல எப்படியும் உங்க கூட இருக்கும்போது சந்தோசமா தானே இருப்பாரு. அவர் சந்தோசமா இருக்க நேரம் பார்த்து நீங்க கேட்க நினைக்குறதை கேட்டுடுங்க.” என்றாள்.
“ம்க்கும்.. அவர் எங்க என்னை ராத்திரி பேச விட்றார். பூன.. பூனன்னு சொல்லி சொல்லி என் வாயை முத்தம் கொடுத்தே மொத்தமா அடைசிச்சுடறார் இதுல இவ சொல்றது போல நான் பேசுறதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லையே” என்று இளங்கிளி யோசித்தவாறு நின்று இருக்க..
“அக்கா! அக்கா!.. ” என்று அவள் கை பிடித்து உளுக்கிய வித்யா.
“நான் சொன்னது சரி தானே. நைட் ரெண்டு பேரும் குஜாலா இருக்க நேரம் பாத்து பேசிருங்க” என்று கண்ணடித்தாள்.
“ம்ம்.. சரி டி.. ” என்று தலையை ஆட்டியவள். “சரி வா அவர் ஏதோ தீவிரமா பேசிட்டு இருக்கார். நம்ம கீழ போலாம்” என்று வித்யாவுடன் இளங்கிளி செல்லப்போக..
அப்போது பின்னால் இருந்து இரும்புக்கரம் கொண்டு அவள் இடையை வளைத்து செல்லவிடாமல்
நிறுத்தி இருந்தான் ராவண்.
இதை எதிர்பாராதவள் “ஹா.. ” என்று
பயத்தில் சற்று கத்திவிட..
அவளுக்கு முன்னே சென்ற வித்யாவோ “அக்கா என்ன” என்று அவளை நோக்கி வந்தாள்.
ராவணோ இளங்கிளியின் இடையை தன் விரல்களால் அழுந்த வருடிக்கொண்டு அப்படியே அவள் பின்னே நின்று இருந்தான்.
வித்யாவிற்கு ராவண் இளங்கிளியின் பின்னால் நின்று இருப்பதை கவனிக்கவில்லை. அவள் தன்னை நோக்கி வரவும் ராவண் கையை தன் இடையில் இருந்து அவசரமாக பிரித்தவள். “இங்க என்ன டி பண்ற வா கீழ போலாம்” என்று முன்னே செல்ல..
இந்த முறை அவள் சேலை தலைப்பை பிடித்துக்கொண்ட ராவண் அடுத்த அடி அவளை எடுத்து வைக்க விடாமல் நிறுத்தி இருந்தவன்.”என்கிட்டே இருந்து தப்பிச்சு போலாம்னு நினைக்கறியா? ” என்று அவள் காதோரம் கிசு கிசுத்தவன் அவள் காது மடல்களை தன் ஈரமான நாவல் மெல்ல வருடினான்.
அதில் சிலிர்த்துவிட்ட பெண்ணவள் “ம்ம்.. இல்.. இல்லங்க..” என்றாள்.
அவள் திணறி பேசுவதை புரியாமல் பார்த்த வித்யா “என்ன அக்கா சொல்ற எதும் புரியலை” என்று அவள் அருகே வர..
எங்கே ராவண் செய்யும் லீலைகளை வித்யா பார்த்துவிடுவாளோ என்று பதறிய இளங்கிளி “ஏய் வித்யா இங்க ஏன் டி வர,, உனக்கு வேலை இருக்குல்ல நீ போ.. ” என்று அவளை விரட்டினாள்.
“என்னக்கா இப்போத்தானே கீழ போலாம்னு என் கூட வந்த அதுக்குள்ள என்ன ஆச்சு என்னை மட்டும் போக சொல்ற..” என்றாள் புரியாமல்.
“ம்ம்ம் அது.. அது.. ” என்று இளங்கிளி பதில் சொல்ல திணற..
“என் புருசனுக்கு எனர்ஜி ட்ரின்க் வேணும்னு சொன்னாரு நான் போய் கொடுத்து வரேன்னு சொல்லு.. ” என்று அவள் காதருகே குனிந்து ராவண் சொல்ல ..
“அதுவா அவருக்கு எனர்ஜி ட்ரின்க் வேணும்னு கேட்டார் நான் கொடுத்துட்டு.. ” என்று முடிக்கும்போது தான் தான் என்ன சொல்கிறோம் என்றே அவளுக்கு புரிந்தது.
விழுக்கென திரும்பி அவனை பார்த்தாள் இளங்கிளி .
“என்ன டி என்னை பாக்குற.. அங்க பாரு அவ இன்னும் போகாம அப்படியே நிக்குறா” என்று அவள் இடையில் கிள்ளினான் ராவண்.
“ஆ!.. ” என்று கத்த வந்தவள் வாயை அப்படியே மூடிக்கொண்டவள் . பல்லைக் கடித்துக்கொண்டு நின்றாள்.
“என்னக்கா எனர்ஜி ட்ரின்க் எப்படி செய்யணும்னு சொல்லுங்க நான் போட்டு சாருக்கு கொண்டு வரேன்” என்றாள் வித்யா.
“ஹா! ” என்று அவளை அதிர்ந்து பார்த்தவள்.
“அது.. அது.. நீ போ நானே வந்து போட்டுக்கிறேன்” என்று வித்யாவை அங்கிருந்து விரட்ட முயன்றாள்.
“ஐயோ! நீங்க வேலை செஞ்சா சார் எங்களை திட்டுவார், நீங்க அந்த எனர்ஜி ட்ரின்க் எப்படி செய்யணும்னு மட்டும் சொல்லுங்க நான் இப்படிங்குறதுக்குள்ள செஞ்சு உங்க ரூமுக்கு கொண்டு வந்து கொடுக்கிறேன்” என்றாள்.
“ஐயோ! இவ வேற நிலைமை தெரியாம பேசிட்டு இருக்காளே.. நான் என்னனு சொல்லுவேன்” என்று நினைத்தவள் ஒரு பக்கம் வித்யா விடாமல் இவளிடம் கேள்வி கேட்க.. மறுபக்கம் அவள் படும் அவஸ்தையை ரசித்தவாறு பின்னால் நின்று சில்மிஷம் செய்து கொண்டிருந்த ராவண். இவர்கள் இருவரையும் சமாளிக்க தெரியாமல் விழி பிதுங்கினாள்.
அவள் நிலையை புரிந்து கொண்ட ராவண் சட்டென அவள் பின்னால் இருந்து வந்தவன் “அவ தான் சொல்றா இல்ல அவளே எனக்கு கொடுக்றேன்னு சொல்லிட்டு. நீ ஏன் இவ்ளோ ஆர்வமா இருக்க.. ” என்றான் சற்று கேலியும் , கிண்டலும் கலந்த குரலில்.
“ஐயோ ! சாரு… ” என்று பதறிய வித்யா.
“இல்ல சார் அது அக்கா.. .” என்று பயத்த்தில் பினாத்தினாள்,
“உன் அக்காவே எனக்கு கொடுப்பா நீ ஏதும் செய்ய வேணாம் சரியா” என்றவன் ” என்ன டி சரியா.. .நீயே கொடுக்குற தானே.. ‘ என்றான்.
“ஹா! அ.. ஆமா நா.. நானே கொடுத்துகிறேன் நீ போடி.. ” என்று அவசரமாக பேசினாள்.
“ம்ம்.. சரிக்கா” என்று அடுத்த நிமிடம் அந்த இடத்தை விட்டு சிட்டாக பறந்துவிட்டாள் வித்யா.
அவள் சென்ற அடுத்த நொடி ராவணின் பார்வை இளங்கிளியின் மீது படிந்தது.
“ஹய்யையோ.. இவருகிட்டே வசமா மாட்டிட்டேனே.. இப்போ என்ன பண்றது, இவர் பார்வையே சரி இல்லையே.. ” என்று முகத்தை குனிந்து கொண்டே பார்வையை மட்டும் நிமிர்த்தி அவனை திருட்டுத்தனமாக பார்ப்பது போல பார்த்தாள்.
“என்ன டி திருட்டு முழி முழிக்குற.. இவன்கிட்டே வசமா மாட்டிக்கிட்டேனேன்னு யோசிக்கிறியா?” என்றான் அவளை நெருங்கி.
“ம்ம்.. ஆமா … ” என்று தலையாட்டியவள் அடுத்த கணமே “ம்ஹும்.. இல்ல.. ” என்று அவனை பார்த்தாள்.
“நீ நினைச்சது தப்பே இல்ல.. என்கிட்டே நீ இப்போ வசமா தான் மாட்டிகிட்டே. நானும் உன்னை நோட் பண்ணிட்டு தான் இருக்கேன். நான் வீட்ல இருக்க அப்போ எல்லாம் நைட் மட்டும் தான் ரூம் பக்க்கமே வர.. மத்த நேரம் எல்லாம் ஏதாவது சாக்கு போக்கு சொல்லிட்டு இந்த பக்கமே வர மாட்டேங்குற… அப்படியே வந்தாலும் பெட் ரூம் வாசலையே நின்னு என்னை பார்த்துட்டு ஓடிற்ற.. ஏன் டி என்னை பார்த்தா இப்படி பயப்படுற.. நான் உன் புருஷன் அது உனக்கு நியாபகம் இருக்கா?”என்றான்,
“ம்ம்.. இருக்கு..” என்றவள் “விழிகளை உயர்த்தி அவனை பார்த்துவிட்டு. “உங்க பக்கத்துல வந்தாலே நீங்க சும்மா இருக்க மாட்டேங்குறீங்க.. திரும்ப திரும்ப நான் குளிக்க வேண்டி இருக்கு” என்று முணுமுணுத்தாள்.
அவள் சொன்னதை கேட்டு சத்தமாக சிரித்தவன் “உன்னை பக்கத்துல வெச்சிட்டு எப்படி டி நான் சும்மா இருக்குறது ” என்று அவள் இடையை பிடித்து கிள்ளினான்.
“ஷ்.. ஹையோ!.. ” என்று அவள் சினுங்க,.
“சரி சொல்லு நான் போன் பேசிட்டு இருக்கும்போது வந்து நின்னு பார்த்துட்டு இருந்த.. அப்பறோம் உன்னோட கூடப்பிறக்காத தங்கச்சி வந்தா. நைட் சந்தோசமா இருக்கும்போது உனக்கு என்ன வேணுமோ அதை கேளுன்னு சொன்னாளே. என்கிட்டே அப்படி என்ன டி கேக்கணும் உனக்கு” என்றான்.
“அது அது.. “என்று இளங்கிளி தயக்கமாக அவனை பார்க்க..
அவள் இடையில் கை கொடுத்து அறைக்குள் சென்றான்.
“ஹையோ! போச்சு… ” என்று இளங்கிளி அவன் இழுப்பிற்கு செல்ல..
அவளை கட்டிலில் அமர்த்திவிட்டு அவள் முன்னே ஸ்டூலை இழுத்துப் போட்டு அமர்ந்தான்.
“சரி சொல்லு, நைட் என்னை மயக்கி என்ன காரியம் சாதிக்கலாம்னு பார்த்த” என்றான்.
“ஹையோ! அப்படி எல்லாம் இல்ல” என்றாள் அவசரமாக.
“அப்பறோம் என்ன டி கேக்கணும் ” என்றான் பொறுமை இழந்து சற்று அதட்டலாக.
அதில் சற்று பயந்து அவனைப் பார்த்தவள் “அ.. அம்மாவை போய் பார்த்துட்டு வரணும். அவங்களைப் பாக்கணும் போல இருக்கு.. “என்றவள் விழிகளில் அழுகை.
“இவ்ளோ தானா இதுக்கு ஏண்டி அழற.. ” என்றான்.
“நீங்க தான் திட்டுறீங்களே… ” என்று விசும்பினாள்.
“உன்ன என்ன டி பண்றது , நமக்கு கல்யாணம் ஆகி 1 மாசத்துக்கு மேல ஆகுது இன்னமும் என்னை நீ புரிஞ்சுக்கவே இல்லையே ” என்றவன் அவளை இழுத்து தன் மடியில் அமர்ந்தியவன். “நான் உன்னை எப்படி அக்கறையா , அன்பா பாத்துக்கிறேன் நீ ஏன் என்னை பார்த்து இப்படி பயப்படுற.. என்னை புரிஞ்சுக்கவே இல்ல டி நீ ” என்றான்.
இளங்கிளி பதில் தெரியாமல் அவனையே பார்த்தவள் “நீங்க தான் என்னை என் அப்பா கொடுக்க வேண்டிய பணத்துக்கு கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்கிங்களே.. அப்பறோம் எப்படி நீங்க சொன்ன அக்கறை , அன்பு எல்லாம் என் மேல வெச்சிருப்பீங்கன்னு நான் உங்களை புரிஞ்சுக்க முடியும்” என்று மனதில் இருந்தது முதல் முறையாக கேட்டுவிட்டாள்,
“அப்போ எனக்கு உன்மேல் அக்கறை இல்லேனு சொல்றியா?” என்றான்.
“ம்ம்.. ” என்று மெல்ல தலையாட்டினான்.
“எதை வெச்சு சொல்ற.. “என்றான்.
“இதுவரை என்னை படுக்கைக்கு மட்டும் தான் நீங்க கூப்ட்டிருக்கிங்க. என்னை கூட்டிட்டு எங்கையும், ஏன் உங்க வீட்டுக்கு கூட போனதில்லை.. என்னையும் எங்கையும் வெளிய விட்டதில்லை.. என் அப்பாவை அடைச்சு வெச்சு கொடுமை படுத்துறிங்க . என் அம்மாவை நான் இப்போ வரை பாக்கல பேசல.. அவங்க எப்படி இருக்காங்கனு கூட எனக்கு தெரியல.. நான் எப்படி உங்களை நம்புவேன் ,புரிஞ்சுக்குவேன்” என்று மொத்தமாக கொட்டியே விட்டாள்.
அவள் பேசுவதை முழுமையாக கேட்டிருந்தவன் “அப்போ இத்தனை நாளா இப்போ என்கிட்டே சொன்னதை எல்லாம் மனசுல போட்டு வெச்சிட்டு தான் என்கூட நீ இருந்திருக்க அப்படி தானே.. ” என்றான்.
அவன் மடியில் அமர்ந்தவாறே தலை கவிழ்ந்து அமர்ந்து இருந்தாள்.
“இனி உன்கிட்டே நான் என்ன பேசியும் பிரயோஜனம் இல்ல.. நீ முதல்ல கிளம்பு இங்க இருந்து ” என்றான் கோபமாக,
அவன் சொன்ன வார்த்தை கேட்டு இளங்கிளியின் இதயம் நொறுங்குவது போல இருந்தது .
“என்ன .. என்ன சொல்றிங்க. நா எங்க போவேன்… ” என்றாள்.
“எங்க வேணா போ… என் மேல நம்பிக்கை இல்லாம எதுக்கு என்கூட இருக்கனும் நீ.. கிளம்பு முதல்ல உன் வீட்டுக்கு ” என்றான்.
“இல்ல …” என்று அவள் அழைத்துக்கொண்டே அவனை பார்க்க..
“கிளம்புன்னு சொல்றேன் இல்ல.. உன் அம்மா வீட்டுக்கு போகணும்னு சொன்ன தானே. நீ கிளம்பி போ.. அங்கையே இருந்துக்க சரியா… ” என்று சற்று கோபம் தெறிக்கும் வார்த்தைகளால் அவளிடம் பேசினான்.
“இல்ல. நான் அம்மாவை பாக்கணும்னு தான் நினைச்சேன். அது அங்க.. நான் …'” என்று கண்ணீர் வழிய அவள் அவன் மடியில் இருந்து எழுந்தாள்.
“போடின்னு சொல்றேன் இல்ல.. “என்று ராவண் கோபமாக அதட்ட..
அவன் கோபத்திலும், அதட்டலில் பயந்து தடுமாறி பின்னே சென்றாள்.
“ஏய் அங்க என்ன டி போற, உன் வீட்டுக்கு போறேன்னு சொன்னே இல்ல கதவு இந்த பக்கம் ” என்று கையை நீட்டினான்.
அவளோ அதட்டலில் பாய்ந்து கொண்டு வாசலுக்கு சென்றவள் வெளியேறும் முன் அவன் முகத்தை திரும்பி பார்த்தாள். அவனோ கோபமாக திரும்பி நின்று இருந்தான், அவனை பார்த்தபடியே வெளியேறினாள் அவன் அறையை விட்டு,
வெளியே சென்றவள் முன் அவள் அம்மா விசாலாட்சி அவள் முன் நின்று இருந்தார்.
அவள் திருமணத்தன்று பார்த்தவரா தன் முன் இருப்பது என்று சந்தேகமாக இருந்தது . கிழிந்த ஜாக்கெட்டும், கிழிந்த இடங்களில் தையலிட்டு பழுப்பேறிய சேலையுமாக இருந்தவர் , கழுத்தில் வெறும் பஞ்சால் கயிறு அதுவும் அழுக்கேறி இருக்கும், ஆனால் இப்போது அவரை பார்க்கவே பளிச்சென்று பட்டு சேலையும், கழுத்தில் தங்க சங்கிலியும் சிரித்த முகமுமாக நின்று இருந்தார் விசாலாட்சி.
தான் அழுதது தெரியக்கூடாது என்று அவசர அவசரமாக கண்ணீரை துடைத்துக்கொண்டவள் “அம்மாஆ! ” என்றாள் ஆசையாக.
இளங்கிளி எப்படி அவள் அம்மாவை பார்த்து சந்தோசமானாலோ அப்படி தான் அவரும் தன் மகளின் தோற்றம் கண்டு அவள் வாழும் விதத்தை புரிந்து கொண்டார்.
“கிளி எப்படி டி இருக்க.. ” என்றார்.
அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லக் கூட தோன்றாமல் நின்று இருந்தவள் “அம்மா .. அம்மா ஒரு நிமிஷம் இப்போ வந்துடறேன் ” என்று அவசரமாக சொன்னவள் அவர் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் வேகமாக மாடிப்படிகளில் ஏறினாள். அவள் எண்ணம் அறிந்து அவள் தேவையை உணர்ந்து செய்யும் கணவனை காண முதல் முறையாக ஆசையாக மேலே ஓடினாள்.
பெட் ரூமில் நுழைந்த அடுத்த நொடி அவள் வரவிற்காக காத்திருந்த ராவண் சிரித்துக்கொண்டே நின்று இருக்க.. “என்ன டி பகல்லையே மஜா பண்ணலாமா?” அதுக்குள்ள வந்துட்ட.. என்றான்.
அவளோ உள்ளே சென்ற வேகத்தில் அவன் பேசியதை கவனிக்காமல் சந்தோசத்தில் அவன் தோளை பற்றி எட்டி குதித்து அவன் இதழோடு தன் இதழை முதல் முறை பொருத்தி முத்தமிட்டாள்.
