மூர்க்கன் 15
“வாங்க !” என்று வந்து ஹாலில் இருந்து அவன் சேரில் அமர்ந்தவன் ராவண் .
அவனைக் கண்டதும் சேலையை இழுத்துப் போர்த்தி சற்று தயங்கி நின்றவர் “நல்லா இருக்கேன் மாப்பிள்ளை” என்றார்.
“உக்காருங்க” என்றவன் திரும்பி இளங்கிளியை பார்த்தவன் தன் மடியை கண்களால் சுட்டிக் காட்டி “உக்காரு” என்றான்.
அவளோ அதிர்ந்து விழித்தவள் “ம்ஹும்.. “என்று வேகமாக தலையை ஆட்ட..
“அட என்னம்மா நீ மாப்பிள்ளை தான் உக்கார சொல்றார் இல்ல உக்காரும்மா.. ” என்றார் விசாலாட்சி அவள் நிலைமை புரியாமல்.
“இல்லம்மா நான் நிக்குறேன்” என்றாள் அவள் தயக்கமாக.
“நமக்குள்ள என்ன இருக்கு , நீ ஏன் இவ்ளோ பார்மாலிட்டி பாக்குற.. வா.. வந்து உக்காரு.. ” என்றான் மீண்டும் மடியை பார்வையால் காட்டி.
“ம்ஹும்… மாட்டேன்” என்று இப்போதும் இளங்கிளி வேகமாக தலையாட்ட..
“மாப்பிள்ளை தான் உக்கார சொல்லறாரு இல்ல புள்ள.. வா வந்து உக்காரு ” என்று தன் பக்கம் சோபாவை தட்டி அதில் அமர அழைத்தார்.
“ஐயோ! இந்த அம்மாவுக்கு புரியவே மாட்டேங்குது. அங்க உக்கார்றதுன்னா அப்போவே வந்து உக்கார்ந்திருவேனே , இவரு மடியில வந்து உக்கார சொல்றாரே என்னை” என்று நினைத்தவள் “அம்மா முன்னாடி இவரு இப்படி பண்றாரே ” என்று சங்கடமாக இருவரையும் மாறி பார்க்க..
“அட வா புள்ள.. ” என்று விசாலாட்சி அவளை தன் அருகே அமர மீண்டும் அழைக்க…
ராவணை தயக்கத்தோடு பார்த்தபடி அவனை தாண்டி விசாலாட்சியின் அருகே செல்ல போனாள்.
அவளையே அழுத்தமாக பார்த்துக்கொண்டிருந்தவன் விசாலாட்சியிடம் அவள் செல்லும்வரை அமைதியாக இருந்தவன் சரியாக அவள் உட்கார போகும் வேலையில் சட்டென அவள் கையை பற்றி இழுத்து மடியில் அமர்த்திக்கொண்டவன்.
“உன்ன இங்க உக்கார சொன்னேன்” என்றான் அழுத்தமாக.
அவன் மடியில் அமர்ந்து கொண்டு தன் தாயை பாவமாக பார்த்தாள் இளங்கிளி.
விசாலாட்சிக்கு ஒரு கணம் ஒன்றுமே புரியவில்லை திகைப்பு அவரிடம். மறுபுறம் ராவண் மடியில் அமர்ந்து இருக்கும் தன் மகளையும் மாறி, மாறி அதிர்ச்சியாக பார்த்தவர் “இவ்ளோ நேரம் மாப்பிள்ளை இதுக்கு தான் கிளியை உக்கார சொல்லிட்டே இருந்தாரா… நான் வேற இது தெரியாம அவளை என் பக்கத்துல உக்கார சொல்லி கூப்பிட்டேனே.. ” என்று தர்ம சங்கடமாக இருவரையும் பார்த்தார்.
“உங்க பொண்ணு தான் உங்களை பாக்கணும்னு ரொம்ப ஆசை பட்டா . அதான் உங்களை இங்க வர சொன்னேன். இன்னும் வீட்டு வேலை எதுவும் முடியலையே.. இல்லேனா அங்கையே நாங்க ரெண்டு பேரும் வந்திருப்போம்” என்றான்.
இளங்கிளியோ கூச்சத்தோடு நெளிந்துகொண்டே அமர்ந்து இருந்தவள் அவர்கள் வீட்டில் பராமரிப்பு வேலை நடைபெறுகிறது என்றதுமே.. திரும்பி அவனை பார்த்தாள்.
“உன்னை இங்க அழைச்சிட்டு வரும்போதே சொன்னேனே மறந்துட்டியா?” என்றவன் கை அவள் வெற்று இடையில் தடவிக்கொண்டு இருந்தது.
அவளுக்கோ கூச்சமும், வெட்கமும் ஒரு சேர வந்துவிட.. அதை காட்டவும் முடியாமல் , சமாளிக்கவும் முடியாமல் திண்டாடியவள் பின்னே கை கொடுத்து தன் இடையில் இருந்த ராவணின் கையை பற்றி கீழிறக்க முயன்றாள்.
அவள் கைக்குள் அகப்படாமல் லாவகமாக அவள் கையை முன்னே கொண்டு வந்தவன் “கையை வெச்சிட்டு சும்மா இருக்க மாட்டியா? அத்தை முன்னாடி என்ன இதெல்லாம்” என்றான்.
இளங்கிளி அதிர்ந்து அவனைப் பார்க்க..
அவனோ இதழ்களுக்குள் சிரிப்பை அடக்கிக்கொண்டு வேறு பக்கம் பார்வையை திருப்பிக் கொண்டான்.
அபப்டியே திரும்பி தன் அம்மாவை பார்த்தாள் அவரோ எழுந்து சென்று விடலாமா என்ற ரீதியில் அமர்ந்து இருந்தார்.
“நா.. நா போய் குடிக்க எதுவும் கொண்டு வரேன்.. ” என்று அவன் கையை தட்டிவிட்டு எழுந்தவள் கிச்சனுக்கு செல்ல போக..
“அக்கா! உங்களுக்கு எதுக்கு சிரமம். உங்க அம்மா வந்துட்டாங்கன்னதும். ஐயா அப்போவே இன்டெர்க்காம்ல சாப்பிட தயார் பண்ண சொல்லிட்டார். எல்லாம் ரெடி..” என்று வந்தாள் வித்யா.
“என் கூட தானே இவர் இருந்தார். அப்பறோம் எப்போ இவகிட்டே சாப்பிட ரெடி பண்ண சொன்னார்” என்று அவள் நின்று இருக்க..
சோபாவில் இருந்து எழுந்தவள் இளங்கிளியின் அருகே வந்து அவள் தோளோடு கை போட்டு அணைத்து நிறுத்தியவன்.
“வித்யா நீ அத்தையை கூப்டு போய் சாப்பிட கொடு.. ” என்றான்.
“மாப்பிள்ளை நீங்க சாப்பிடலையா?” என்றார் விசாலாட்சி அக்கறையாக.
“இல்ல அத்தை எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு கிளம்பனும். ” என்றவன் “நீங்க போங்க நான் இவளை அனுப்பறேன்” என்று இளங்கிளியை அணைத்தவாறே வாசலுக்கு அழைத்து சென்றான்.
விசாலாட்சி ராவண் இளங்கிளியை நடத்தும் விதத்தை பார்த்து சந்தோஷமானார். இவனை புரிந்து கொள்ளவே சிரமமாக இருந்தது அவருக்கு. தன் கணவனை பிடித்து வைத்திருக்கிறான். தன் மகளை சந்தோசமாக பார்த்துக்கொள்கிறேன். தனக்கு தேவையானதை செய்து கொடுக்கிறான். இவனை எந்த ராகத்தில் சேர்ப்பது என்று அவருக்கு புரியவே இல்லை .
“அம்மா! வாங்க சாப்பிட போகலாம் ” என்று வித்யா அவரை பவ்வியமாக அழைக்க. .
தன் மகளையும், ராவணையும் ஒரு முறை திரும்பி பார்த்து சந்தோசப்பட்டவர் சாப்பிட சென்றுவிட..
வாசல் வரை அழைத்து வந்த ராவனோ திரும்பி விசாலாட்சி போய் விட்டாரா என்று பார்த்தான். அவர் அங்கு இல்லை என்றதும் அடுத்த கணம் அவளை அப்படியே அந்த பிரமாண்ட வாசல் கதவில் வைத்து அழுத்தி நிறுத்தி இருந்தவன் அவள் மெல்லிய ஆதாரங்களை தன் முரட்டு ஆதரங்களால் முற்றுகை இட்டு முத்தமிட துவங்கி இருந்தான்.
இதை எதிர்ப்பார்க்காத இளங்கிளியோ அதிர்ந்து அவனை பார்க்க ..
அவனோ கண்கள் மூடி இன்பமாக அவள் இதழில் கவி பாடிக்கொண்டிருந்தான்.
அப்படியே சுற்றிலும் தன் பார்வையை சுழல விட்டாள். அவர்கள் வீட்டில் வேலை செய்பவர்களும், அவனிடம் வேலை செய்யும் ஆட்களும் இங்கு நடப்பதே தெரியாதது போல.. வேறு பக்கம் பார்த்து கொண்டு நின்று இருந்தனர்.
தனக்கு வேண்டும் அளவு தேனருந்திவிட்டு தான் அவள் இதழை விடுவித்தான் ராவண்.
அவனை மிரட்சியாகப் பார்த்தவள் இதழில் இருந்த ஈரத்தை துடைத்துவிட்டவன்.
“என்ன தான் நான் உன்னை தினம் கிச் பண்ணினாலும். நீ இன்னிக்கு கொடுத்த கிஸ்ல நமக்குள்ள ஒரு நெருக்கம் இருந்துச்சு டி.. ” என்றவன் “சரி நான் கிளம்பறேன். நீ உன் அம்மாகூட சந்தோசமா என்ஜோய் பண்ணு , நான் நைட் தான் வருவேன்” என்றான்.
“மதியம் சாப்பிட.. ” என்றாள் அவள்.
“நைட் வந்து மொத்தமா சாப்பிடுகிறேன் உன்னை. நீ கொடுத்த கிஸ்ஸுக்கு இப்பவே மொத்தமா எடுத்துக்கனுன்னு இருக்கு எனக்கு. ஆனா ஒரு முக்கியமான வேலை இருக்கு அதை இன்னிக்கு முடிச்சே ஆகணும் ” என்றவன் அவள் கன்னத்தை தட்டி கொடுத்துவிட்டு சென்றுவிட..
அவன் கார் கிளம்பும்வரை அங்கேயே இருந்தவள் உள்ளுக்குள் எழுந்த உணர்வுகளை எண்ணி உடல் சிலிர்த்து தனக்குள் தோன்றிய எண்ணங்களுக்கு வடிகால் இல்லாமல் கரை புரண்டோடுவதை கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடியவள் கண்களை மூடி ஆழ்ந்த மூச்சை எடுத்துவிட்ட பின் உள்ளே சென்றாள்.
“ஐயோ இவனுக்கு ஏண்டா அந்த விடியோவை அனுப்பினோம்னு இருக்கு. தெரிஞ்சதுல இருந்து என்னை பாடா படுத்துறான் . ஏன் மித்ராவை இந்த அளவுக்கு போக விட்டிங்கன்னு என்ன கொரவளையை பிடிக்குறானே.. ” என்று புலம்பியபடி தன் கையில் இருந்த போனின் திரையில் தெரிந்த ஈஸ்வரின் எண்ணை பார்த்தவாறு புலம்பினான் ராஜ்.
சரியாக அந்த நேரம் உள்ளே வந்த ராவண் புலம்பிக்கொண்டிருந்தவனை புருவம் முடிச்சிட பார்த்தவன் அருகே வந்து அவன் கையில் இருந்த போனை அட்டென்ட் செய்து அதை ஸ்பீக்கரில் போட்டான்.
“ஹா! அண்ணா.. ” என்று பேச வந்தவனை தன் உதட்டில் கை வைத்து அழுந்த பார்த்த ராவண் “பேசு.. ” என்றான்,
“ஹலோ.. ராஜ், டேய் லைன்ல இருக்கியா டா.. ” என்று ஈஸ்வர் பேசினான்.
“இ.. இருக்கேன் டா.. சொல்லு ” என்றான் ராஜ்.
“என்ன டா சொல்றது. எனக்கு எப்படியாவது மித்ராவை அந்த இடத்துல இருந்து தூக்கணும் . அந்த பொண்ணு கயல்விழிகிட்டே பேசுனியா நீ. அவ போன் நம்பர் எனக்கு வேணும் கொடு” என்றான்.
“டேய்.. டேய் எதுக்கு இவ்ளோ அவசரப்படுற.. அந்த பொண்ணு இந்த நேரம் அந்த ரக்ஷணா கூட இருப்பா, நீ எனக்கு விடாம போன் அடிச்ச மாதிரி அவளுக்கும் போன் பண்ணி காரியத்தை கெடுத்துருவ.. கொஞ்சம் பொறுமையா இரு. நான் அந்த பொண்ணுகிட்ட பேசிட்டு உனக்கு ஈவினிங் கால் பண்றேன்” என்றான்.
“டேய் உனக்கு நிலைமையே புரியலையா இல்ல தெரிஞ்சும் எல்லாரும் எனக்கு என்னனு அமைதியா இருக்கீங்களா எனக்கு புரியல.. ” என்றான் .
“டேய் என்ன டா பேசுற.. எங்களுக்கும் மித்ரா மேல அக்கறை இருக்கு. சும்மா வார்த்தையை விடாத.. ” என்றான் ராஜ் சற்று கோபமாக,
“என்ன டா நான் சொன்னதும் ரோசம் வருதா உனக்கு. சொந்த தங்கச்சியை இப்படி ஒரு நிலையில விட்டுட்டு அண்ணங்காரன் கல்யாணம் செய்துட்டு அவன் பொண்டாட்டி கூட சந்தோசமா இருக்கான். நீ பிசினஸ், பிசினஸ்னு அவன் சொல்ற வேலையை செய்துட்டு மித்ராவை கண்டுக்காம விட்டுடுங்க. அவ வாழ்க்கை எப்படி போனா உங்களுக்கு என்ன வந்துச்சு. அவனவன் சந்தோசம் மட்டும் தான் இங்க பெருசா இருக்கு. அடுத்தவங்க பத்தி யாருக்கு என்ன கவலை ” என்றான் கோபமாக.
அவன் பேசுவதை ராவண் கோபக்கனல் தெறிக்க கேட்டுக்கொண்டு தான் இருந்தான். ராஜுவோ “ஐயோ! இவன் வேற நேரம் தெரியாம போனை பண்ணி வாய்க்கு வந்ததை பேசுறானே.. அண்ணா வேற கோபமா பாக்குறார் . இப்போ என்ன பண்ணுவேன் நான் ” என்று போனையும்,ராவணையும் மாரி மாரி பார்த்தவன் .”டேய் நீ டென்ஷனா இருக்க.. நான் கயல்கிட்டே கிட்டே பேசிட்டு ஈவினிங் கால் பண்றேன் ” என்று போனை கேட் செய்ய போனான்.
“என்ன டா நான் இவ்ளோ பேசுறேன். நான் பேசுவதை எல்லாம் கேட்டுட்டு உன் அண்ணனுக்கு இந்த நேரம் கண்ணு சிவந்திருக்கணுமே.. என்னை நேர்ல பார்த்தா கொல்லணும்னு அவனுக்கு தோணுமே… ” என்றான் ஈஸ்வர்.
“டேய் ஈஸ்வர் அப்போ அண்ணா இருக்காருன்னு தெரிஞ்சுட்டு தான் இப்படி எல்லாம் பேசுனியா?” என்று ராவணை பார்த்தான்.
“ஆமா.. நான் பேசினது எல்லாம் சரி தானே.. எந்த தப்பும் இல்லையே.. ” என்றான் ஈஸ்வர்.
ராஜிடம் இருந்து போனை வெடுக்கென பிடுங்கிய ராவண் “அப்படி உனக்கு அக்கறையா இருந்தா இன்னும் அரை மணி நேரத்துல நான் சொல்ற இடத்துக்கு வா… ” என்று போனை கட் செய்தவன் “லொகேஷனை அவனுக்கு சரி பண்ணிடு ” என்று தன் ஆபீஸ் ரூமை விட்டு வெளியேற…
“போச்சு இன்னிக்கு என்னவெல்லாம் நடக்கப் போகுதோ தெரியலையே.. என்பர் புலம்பியபடி ராஜ் ஈஸ்வருக்கு லொகேஷனை தட்டிவிட்டு ராவனோடு கிளம்பி இருந்தான் ,
