மூர்க்கன் 13
“மித்ரா ! டார்லிங் இங்க வா… “என்று ஹாலில் அமர்ந்து இருந்த மோகன் குரல் கொடுக்க..
அவன் அழைத்ததும் நாய் குட்டியைப் போல அறைக்குள் இருந்து தள்ளாடியபடி எழுந்து வெளியே வந்தாள் மித்ரா.
அவள் வந்ததும் எழுந்து சென்று அவள் தோளில் கை போட்டவன் “இன்னிக்கு நாம லேப் போலாமா?” என்றான்.
அவன் சொன்னதுமே புரிந்துவிட்டது அவளுக்கு. ரக்ஷணா புது போதை மருந்தை தயாரித்து விட்டாள் என்று. அதை தன்னை வைத்து பரிசோதிக்கப் போகிறார்கள் என்றும் அவளுக்கு தெரியும். ஆனால் அது குறித்து கவலை கொள்ளாமல் மோகனுடன் சந்தோசமாக லேபிற்கு சென்றாள்.
அந்த அளவுக்கு அவள் போதைக்கு அடிமை ஆகி இருந்தாள் . ஆக்கப்பட்டிருந்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.
அவன் தோளில் சாய்ந்துகொண்டு அவன் கைகள் தன் உடலில் அத்துமீறுவதை பொருட்படுத்தாமல் புதிதாக வந்துள்ள போதை மருந்தின் வீரியத்தை தன் உடலையே ஒரு எலி போல அர்ப்பணிக்க சென்று கொண்டிருக்கிறாள் இந்த பேதைப் பெண்.
ரக்ஷணாவிற்கு சோதனை எலியாக, , மோகனுக்கு போகப்பொருளாக தன்னையே கொடுத்திருக்கிறாள் இந்த முட்டாள் பெண். எவ்வளவோ முயன்றும் இதில் இருந்து மித்ராவை மீட்டுக் கொண்டு வர அவள் குடும்பத்தால் முடியவில்லை.
“ம்ம்.. பேபி, மோதுவா.. “என்று அவன் கை தரும் அழுத்தத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் பிதற்றிக்கொண்டே ரக்ஷணாவின் லேப்பிற்குள் நுழைந்தாள் மித்ரா.
அவனும் ரக்ஷணாவின் முன்பு மித்ராவிடம் அத்துமீறுவது சரியாக இருக்காது என்று அவளை விட்டுப் பிரிந்தான்.
உள்ளே வந்தவளை ரக்ஷணாவின் லேப் அசிஸ்டன்ட்கள் இரு பெண்கள் வந்து தள்ளாடிக்கொண்டிருந்தவளை ஆளுக்கு ஒரு பக்கம் பிடித்து சோதனைக் கூட்டத்திற்குள் அழைத்து சென்றனர்.
அங்கே இருந்த படுக்கையில் மித்ராவை படுக்க வைத்து அவள் கை கால்களை கட்டிப் போட்டுவிட்ட அந்த இரு பெண்களும் மித்ராவை பாவமாக பார்த்தனர். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறி இருக்க..
ரக்ஷணா ஒரு சிரிஞ்சில் மருந்தை ஏற்றிக்கொண்டு அந்த லேப்பிற்குள் நுழைந்தாள்.
“ஹாய்! ரக்ஷு, நியூ ட்ரக் எப்படி இருக்குனு பார்க்க ஆவலா இருக்கு” என்றாள் மித்ரா.
அவளை பார்த்து ஏளனமாக சிரித்தவள் “இந்த ட்ரக் மட்டும் நான் நினைச்சது போல ஒர்க் அவுட் ஆகிருச்சுன்னா உன்னை அடிமை படுத்தி என் தம்பி எப்படி வெச்சிருக்கானோ. அதே போல உன் அண்ணனையும் என் கைக்குள்ள நான் வெச்சுப்பேன்” என்று நினைத்தபடி அவள் நரம்பில் கொண்டு வந்த மருந்தை செலுத்தினாள்.
ஊசி ஏறியதால் இருந்த வலி கூட மித்ராவிற்கு சுகமாக இருந்தது. மருந்து மொத்தமாக உள்ளே சென்று சிறிது நேரத்தில் அவள் உடல் முழுவதும் பரவ ஆரம்பிக்க..
மித்ரா அப்படியே கண்கள் மூடி அந்த வலி நிறைந்த சுகத்தை அனுபவிக்க துவங்கி இருந்தாள்.
இதை எல்லாம் மற்றொரு அறையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ரக்ஷணாவின் லேப் அசிஸ்டன்ட்கள் மனம் பதறியது . மித்ராவிற்கு இந்த மருந்தினால் என்ன ஆகுமோ என்று. அவர்களிடம் இருந்த பதை பதைப்பு அங்கு இருந்த ரக்ஷணாவிடமும், மோகனிடமும் துளி கூட இல்லை. மாறாக இருவரும் ஒரு குரூர புன்னகையோடு அவளை பார்த்துக் கொண்டிருந்தனர்.
சற்று நேரத்தில் போதை மருந்து மித்ராவின் உடலில் முழுவதும் பரவி அவளை அப்படியே மெய் மறக்க செய்தது. படுத்திருந்த மித்ராவின் கன்னத்தில் ரக்ஷணா ஓங்கி அறைந்தாள்.
“ஏய் மித்ரா .. மித்ரா… இங்க பாரு என்னை பாரு.. ” என்று அவள் கன்னத்தில் மீண்டும் அறைந்தாள் ரக்ஷணா .
“ம்ம்… ம்ம்… யாரு?… ” என்று கண்களை திறக்க முடியாமல் மித்ரா மிகவும் சிரமப்பட்டாள்.
“ஏய் நல்ல கண்ணை திற ..” என்று மீண்டும் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் ரக்ஷணா .
“ரக்ஷு.. இரு ஏன் இவ்ளோ கஷ்டப்படுற.. ” என்று லாபிற்குள் சென்றவன் “மித்ரா.. மித்ரா டார்லிங்.. ‘என்று அவள் காதருகே குனிந்தான்.
அவளோ “ம்ம்… ம்ம்.. ” என்று முனகிக்கொண்டே மோகன் குரல் வந்த மறுபக்கம் திரும்பி அவனை பார்த்தவள் மெல்ல சிரிக்க…
“இந்த நிலைமையிலும் சிரிக்குறியா டி நீ.. ” என்று மோகனும் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.
போதை அதிகமானத்தில் மித்ராவாள் சரியாக பார்க்கவோ, பேசவோ முடியவில்லை.
இருவரும் மித்ரா மயங்கி விடாமல் இருக்க மாறி மாறி அவளுக்கு பேச்சு கொடுத்துக்கொண்டே கன்னத்தில் அறைந்தனர்.
“ஐயோ! என்ன டி இது மேடம் இப்படி அடிக்குறாங்க அந்த பொண்ணை” என்று பதறினாள் கயல்விழி .
“ஏய் சும்மா இரு டி சத்தம் போட்டு அவங்க காதுல அது விழுந்து தொலைக்க போகுது. அப்பறோம் உன்னையும் என்னையும் அந்த மித்ரா மாதிரி டெஸ்ட் எலியா மாத்திருவா அந்த ரக்ஷணா” என்றாள் ரம்யா.
அவள் சொன்னது கேட்டு வாயை மூடிக்கொண்டாள் கயல்விழி.
“நீ இங்க இருந்தா சரியா இருக்காது , நமக்கு தான் வேலை முடிஞ்சிருச்சு இல்ல. வா போகலாம்.” என்று கயல்விழியை இழுத்துக்கொண்டு அந்த லாபில் இருந்து வெளியேறி இருந்தாள் ரம்யா,
“ஓகே மோகன் , ட்ரக் வேலை செய்ய ஸ்டார்ட் பண்ணிருச்சு எப்படியும் இவ ஒரு டூ டேஸ் இதே நிலைமையில தான் இருக்க போறா எதுவும் அவளுக்கு முடியாலையின்னா எனக்கு எப்போனாலும் கால் பண்ணு சரியா ” என்றாள்.
“ம்ம்ம் ஓகே ரக்ஷு நீ போ.. எனக்கு இவ கூட முக்கியமான வேலை இருக்கு ” என்று தான் அணிந்து இருந்த சட்டை பட்டனை ஒவ்வொன்றாக கழட்டினான்.
அவன் நோக்கம் புரிந்த ரக்ஷணா “பார்த்து டா உன்னோட வேகத்தை ரொம்ப அதிகமா காட்டிடாத செத்துர போறா ” என்றுவிட்டு அந்த லேப்பை விட்டு வெளியேறி இருக்க..
சட்டையை கழட்டி எறிந்த மோகன் கை , கால்கள் கட்டப்பட்டு முழுவதுமாக தன்னிலை இழந்த நிலையில் படுத்திருந்த மித்ராவை மோகத்தின் உச்சத்தில் பார்த்தான் .
“சும்மா சொல்லக் கூடாது டி உன்னை எப்போ, எப்படி எங்க வெச்சு பார்த்தாலும் செம்ம கிக் ஆகுது எனக்கு” என்று அவள் அருகில் வந்து அவள் கை , கால்களில் இருந்த கட்டுக்களை அவிழ்த்துவிட்டு அவள் மேல் படர துவங்கினான்.
ஒரு உயிர் இல்லாத ஜடம் போல அவன் ஆட்டுவிக்கும் பாவையாய் கிடந்தவளை சிவந்த விழிகளோடு பார்த்துக்கொண்டிருந்தான் ஈஸ்வர் அதை மேலும் பார்க்க முடியாமல் தூக்கி போட்டு உடைத்தான்.
ரக்ஷணா லேபிள் நடந்த அனைத்தையும் கயல்விழி மூலம் கிடைத்த வீடியோவில் பார்த்து தான் இந்த கோபமே வந்தது அவனுக்கு.
“ஹையோ! என் லேப்டாப் ” என்று நெஞ்சில் கை வைத்துக் கொண்டு சிதறிக்கிடந்த லேப்டாப்பை எடுக்க கயல்விழி பதற..
“அட இரும்மா குறுக்க போகாத அப்பறோம் அந்த லேப் டாப் மாதிரி நீயும் சிதறிப்போயிருவ.. ” என்று அவள் கையை பிடித்து இழுத்து நிறுத்தி இருந்தான் ராஜ்.
தன் கையை பிடித்துவிட்டேன் என்று அவனை கயல்விழி முறைக்க..
அவனோ “இப்போ எதுக்கு இந்த பொண்ணு இப்படி முறைக்குறா ? ” என்று நினைத்தவன் “என்ன அப்படி பாக்குற.. ” என்றான்.
“நீங்க சொல்லி தானே நான் என்ன உயிரை பணையம் வெச்சு அங்க நடந்ததை வீடியோ வா எடுத்து தந்தேன்.இப்போ என் லேப்டாப்பை பாருங்க” என்று அழுதாள் கயல்விழி.
“உன்னை யாரு விடியோவை லேப்டாப்பில் அப்லோட் பண்ணி கொண்டு வர சொன்னது. உன்னோட போன் என்ன ஆச்சு?” என்றான்
“என் போன் உடைஞ்சிருச்சு சார் , அதான் அதுல எடுத்த விடியோவை லேப்டாப்பில் சேவ் பண்ணி வெச்சுட்டு இங்க எடுத்து வந்தேன். எனக்கு நேரமே சரி இல்ல. எப்போ இந்த விடியோவை எடுத்தேனோ அப்போ இருந்து போன் உடையது, லேப்டாப் உடையுது ” என்று புலம்பினாள்.
“புலம்பாத நான் உனக்கு புது லேப்டாப் வாங்கி தரேன் சரியா ” என்று அவன் கயல்விழிக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்க..
“என் மித்ராவை இந்த நிலைமைக்கு தள்ளிட்டு எப்படி டா உங்களால நிம்மதியா இருக்க முடியுது. என்கிட்டே இது நடந்த அப்போவே சொல்லி இருந்தா இந்த நேரம் மித்ரா இவ்ளோ கஷ்டமும் படவேண்டிய அவசியம் இருக்காதே.. ” என்று ராஜின் சட்டையை பிடித்து உலுக்கி இருந்தான் ஈஸ்வர்.
“டேய் ஈஸ்வர் , இப்படி எல்லாம் நடக்கும்னு எங்களுக்கு என்ன டா தெரியும் அவ சந்தோஷமா இருக்குறான்னு தான் நாங்க நினைச்சோம். ஆனா போகப் போக அந்த மோகனும், ரக்ஷணாவும் சேர்ந்து நம்ம மித்ராவை இந்த நிலைக்கு கொண்டு வருவங்கன்னு நான் நினைக்கவே இல்ல.. ” என்று ஈஸ்வரின் கையை பிடித்து தன் சட்டையில் இருந்து எடுத்துவிட்டான்.
“தப்பு பண்ணிட்டேன் நான் பெரிய தப்பு பண்ணிட்டேன். என்னை பிடிக்கலையின்னு சொன்னாலும் பரவல்லைன்னு மித்ராவை தூக்கிட்டு போய் நான் தாலி கட்டிருக்கணும் அதை செய்யாம விட்டது இப்போ அவளை இந்த நிலைமையில் கொண்டு வந்து விட்ருச்சு” என்று தலையை கோதியபடி இங்குமங்கும் நடந்தவன் அதே வேகத்தோடு வந்து கயல்விழியின் அருகே வந்து நின்றான்.
அவன் வேகம் கண்டு பதறிய கயல் பின் வாங்கி சுவற்றில் மோதி நின்றவள் ஈஸ்வரை பயந்து போய் பார்த்தாள்.
“இங்க பாரு உனக்கு எவ்ளோ பணம் வேணாலும் தரேன் எனக்கு மித்ரா வேணும். அவளை அங்க இருந்து நான் கூட்டிட்டு வரணும் அதுக்கு அங்க எதுவும் வாய்ப்பு இருக்கா ” என்றான்.
கயல்விழிக்கு அவன் சொல்வது புரியவே சில வினாடிகள் எடுத்தது , மூச்சை இழுத்து தன்னை சத்ருப்ய நிதானித்தவள் அருகே இருந்த ராஜ்ஜை பார்த்தாள்.
உடனே ஈஸ்வர் கையைப் பிடித்து தன் பக்கம் இழுத்தவன் “அவளுக்கு கொஞ்சம் டைம் கொடுக்கலாம் டா.. ” என்றான்.
“சார் நீங்க எனக்கு பணம் எல்லாம் கொடுக்க வேணாம். தினம் அங்க மித்ரா மேடம் படர அவஸ்தையை நான் கண் கூடா பார்த்துட்டு தான் இருக்கேன். எனக்கு கொன்ஜம் டைம் கொடுங்க நான் சொல்றேன் ” என்றவள் அங்கிருந்து கிளம்பி விட..
இன்னமும் கோபமும் , ஆத்திரமும் அடங்காமல் இருந்த ஈஸ்வர் நேராக அவன் வீட்டில் இருந்த மதுபாட்டிலை எடுத்து குடிக்க போனான்.
என்னவோ தோன்றவும் அதை குடிக்காமல் தூக்கி போட்டு உடைத்தவன் மொத்த பாட்டில்களையும் தரையில் தள்ளி உடைத்து இருந்தான்.
டேய் ஈஸ்வர் என்ன டா ஆச்சு என்று பதறி அவன் முன் வர,,
இது இது எல்லாம் தான் என் மித்ராவை இந்த நிலைக்கு ஆளாக்கி இருக்கு. இது தானே மனுஷனோட மூளையை மழுங்கடிக்க செய்து இப்படி பட்ட போதையே எனக்கு வேணாம், என் மித்ராவோட வாழ்க்கையை சீரழிக்க எந்த போதையும் எனக்கு வேணாம் என்றான்.
