மூர்க்கன் 16
அந்த பாக்டரியின் முன் வந்து ஈஸ்வரின் கார் சீறிப்பாய்ந்து வந்து நின்றது., காரை நிறுத்திவிட்டு வேகமாக இறங்கியவன் அதே வேகத்தோடு ராவணின் பேக்டரிக்குள் நுழைந்தான்.
அவனைக் கண்டதும் ராஜ் ஓடி வந்தான்.
“எங்க டா உன் அண்ணன்” என்றார் ஈஸ்வர். அவனிடம் இன்னமும் கோபம் குறையவில்லை.
“உள்ள வா.. ” என்று லிப்ட்டில் அவனோடு ஏறினான் ராஜ்.
“இங்க எதுக்கு டா என்னை வர சொல்லிருக்கான் அவன். மித்ராவை எப்படி டா அந்த மோகன்கிட்ட இவ்ளோ நாள் விட்டு வெச்சான் உன் அண்ணன் . நிஜமாவே எனக்கு உங்க மேல எல்லாம் சந்தேகமா இருக்கு. அவ மேல உங்க யாருக்கும் அக்கறையே இல்லையோன்னு எனக்கு தோணுது ” என்றான்.
“டேய் நீ என்ன டா பேசுற.. அப்படி எல்லாம் நாங்க மித்ராவை விட்டிருவோமா. அவளை அங்க இருந்து எவ்ளோ முறை ரிஸ்க் எடுத்து கூட்டிட்டு வந்தோம் தெரியுமா ? ஆனா அது எல்லாம் அந்த மோகனை அவ பாக்குற வரைக்கும் தான். அவனை பார்த்தாலே மந்திரிச்சு விட்டவ மாதிரி அவன் பின்னாடியே போய்டுறா. அம்மா ,அப்பா, நான் அண்ணா எல்லாரும் எவ்ளோவோ ட்ரை பண்ணினோம் ஆனா எந்த பலனும் இல்ல. ” என்றான்.
அவர்கள் சொன்னதை கேட்டு பெருமூச்சு விட்டவன் “இப்போ எதுக்கு உன் அண்ணன் என்னை இங்க வர சொல்லிருக்கான். எனக்கு அவனை பார்க்கவே பிடிக்கல” என்றான் கடுப்பாக.
“நீ வந்து நேர்ல பாரு அப்போ புரியும்” என்றான் ராஜ் குதர்க்கமாக.
அவனை விழி சுருக்கி பார்த்தவன் அமைதியாக நிற்க.. லிஃப்டும் அவர்கள் இறங்க வேண்டிய தளத்திற்கு வந்து சேர்ந்தது.
“வா டா.. ” என்று ராஜ் முன்னே நடக்க.. அவன் பின்னால் சென்றான் ஈஸ்வர்.
“என்ன டா இங்க கூப்டு வந்திருக்க.. ராவண் அவன் கேபின்ல இல்லையா? இது என்ன இடம்”என்றான்.
“இது சீக்ரெட் ரூம்டா.. இங்க வர கொஞ்ச பேருக்கு தான் அனுமதி இருக்கு. இந்த ப்ளோருக்கு எனக்கும், அண்ணாவுக்கும் மட்டும் தான் ஆக்சஸ் இருக்கு” என்று அவர்கள் ஒரு பெரிய மரக் கதவின் முன் வந்து நின்றனர். இரு புறமும் ராவணின் அடியாட்கள் நிற்க..
அந்த கதவின் வலது பக்கத்தில் இருந்த தோடு திரையின் முன்பு வந்து நின்றான் ராஜ்.
அவன் நின்றதும் அந்த திரை பச்சை நிறத்தில் ஒளிர்ந்தது. அது ராஜ்ஜின் முகத்தை முழுவதுமாக ஸ்கான் செய்தது. அது அக்சஸ் ஆனதும், மற்றொரு திரை வந்தது. அதில் தன் வலது கையை வைத்தான். அந்த திரை கை ரேகையை முழுவதும் ஸ்கான் செய்தது. அதன் பின் அந்த பிரமாண்ட கதவு திறந்தது.
“என்ன டா ஜேம்ஸ் பாண்ட் படத்துல வர போல செக்கியூரிட்டி எல்லாம் இவ்ளோ டைட்டா இருக்கு. அப்படி இங்க என்ன தான் டா பண்றீங்க” என்று அந்த பிரமாண்ட கதவை திறந்து கொண்டு அவன் பின்னே சென்ற ஈஸ்வர் அந்த அறையை பார்த்து அதிர்ந்து போனான்.
அந்த வாசல் கதவை போலவே அந்த அறையும் பிரமாண்டம் மிகுந்து தான் இருந்தது, ஒரு சிறிய மாளிகையை அங்கு இருக்க… அதை ஆச்சர்யமாக பார்த்தப்டி உள்ளே சென்றவனை மற்றொரு அறைக்கு அழைத்து சென்றான் ராஜ்.
அது ராவணின் ஆபீஸ் ரூம். அந்த அறைக்குள் சென்றதும் அங்கு போட்டு இருந்த பெரிய நாற்காலியில் அமர்ந்து இருந்த ராவணை பார்த்ததும் ஈஸ்வரின் முகம் இறுகியது.
ராவண் எதிரே இருந்த நாற்காலியை இழுத்து போட்டு அதில் ராவணை போலவே கால் மேல் கால் போட்டு அமர்ந்தவன் “எதுக்காக என்னை இங்க வரவழைச்சே.. ” என்றான் அவன் முகம் பார்க்காமலேயே பேசினான்.
“மித்ராவை எப்போ உன்கூட அழைச்சிட்டு போற.. ” என்றான். ராவண்.
அவன் அப்படி சொன்னதும் வெடுக்கென நிமிர்ந்து பார்த்த ஈஸ்வர் “உன் தங்கச்சியை உன்னால பாதுகாப்பா பாத்துக்க முடியல. அவளை அந்த மோகன் தூக்கிட்டு போய் மித்ராவை அவனோட செக்ஸ் ஸ்லேவ் போல நடத்துறான். அது எல்லாம் பார்த்தும் உனக்கு மனசு இரங்கல… உன் தங்கச்சி வாழ்க்கை வீணாகுதேன்னு கவலை படல. அவ எப்படி போனா என்ன எக்கேடு கேட்டா என்னன்னு நீ கல்யாணம் பண்ணிட்டு ஜாலியா இருக்க அப்படி தானே.. ” என்றான் .
“அவளோட வாழ்க்கையை அவ தான் கெடுத்துகிட்டா அதுக்கு நான் என்ன பண்ண முடியும்” என்றான் ராவண் அலட்சியமாக.
அவன் அலட்சியத்தை கண்டு கோபம் தான் வந்தது ஈஸ்வருக்கு. வெடுக்கென நாற்காலியில் இருந்து எழுந்தவன் டேபிளில் கை ஊன்றி ராவணின் முகத்திற்கு அருகே தன் முகத்தை கொண்டு சென்றவன். அழுத்தமான குரலில்
“ஹே! நீ எல்லாம் ஒரு அண்ணனா டா.. இவ்ளோ கல் நெஞ்சக்காரனா இருக்க. அவ உன் கூட தானே பிறந்தா . இப்படி அவளை பாக்குற அப்போ உனக்கு இங்க குத்தலை…” என்று ராவணின் மார்பில் தன் விரல் கொண்டு அழுத்தி கேட்டான்.
அவன் கையை பிடித்த ராவண் ” இங்க பாரு நான் நேரடியா விஷயத்துக்கு வரேன். மித்ரா முன்ன மாதிரி இருந்திருந்தா அவளை அந்த இடத்துல இருந்து அடிச்சு கூட நான் இழுத்துட்டு வந்திருப்பேன். ஆனா அவ நிலைமையே வேற.. அதை நீயும் தானே பார்த்த,. அப்படி இருக்க அப்போ அவள் சுயமா எதுவும் யோசிக்காம இருக்க அப்போ அவளை இங்க கூட்டிட்டி வந்தா தன்னை தானே காயம் பண்ணிக்குறா. அவளோட உயிரை விட்ருவேன்னு எல்லாரையும் மிரட்டுறா. அம்மாவும், அப்பாவும் மித்ரா உயிரோட இருந்தாலே போதும்ங்குற மனநிலைக்கு வந்துட்டாங்க.” என்றான்,
அதை அமைதியாக கேட்டவன் “அப்பறோம் என்னை எதுக்கு இங்க வரவழைச்சே.. நீங்க எல்லாரும் கூப்பிட்டே வராதவ நான் கூப்டா வந்திரப்போறா?” என்றான்.
“வர மாட்டா தான்,. ஆனா அவளை உன்னால சரி பண்ண முடியும். அவளை உன்னால மட்டும் தான் அந்த போதை பழக்கத்துல இருந்து வெளிக்கொண்டு வர முடியும்” என்றான் ராவண் அழுத்தமாக,.
“என்னாலையா? நான் எப்படி?” என்றான் புரியாமல்.
தன் இருக்கையில் இருந்து எழுந்த ஈஸ்வர் முன் வந்த ராவண். அவன் கண்களை நேருக்கு நேராக பார்த்து “நீ இப்பவும் மித்ராமேல அதே காதலோடு இருக்கியா? அவ இப்போ எந்த நிலைமையில இருக்கான்னு உனக்கு நல்லாவே தெரியும். இந்த நிலையிலும் அவளை நீ காதலிக்குறியா? அவளுக்கு நடந்ததை எல்லாம் மறந்துட்டு அவளை உன்னால ஏத்துக்க முடியுமா?” என்றான் .
ராவணின் ஒவ்வொரு வார்த்தையில் இருந்த அர்த்தத்தை உள்வாங்கிய ஈஸ்வர் “இப்பவும் அவ என் மித்ரா தான்” என்றான் ஒரே வார்த்தையில் இப்போதும் அவளை நான் காதலிக்கிறேன் என்று சொல்லிவிட்டான் ஈஸ்வர்.
அவன் சொன்ன அந்த வார்த்தையில் ராவண் முகம் மலர்ந்தது. ஈஸ்வர் தோளில் கையை போட்டவன் “நீ அவளை நல்லபடியா பத்துப்பேன்னு நான் நம்புறேன்” என்றவன் அப்டியே அவனை தன்னோடு அழைத்து சென்றவன் “அம்மா எங்க இருக்காங்க?” என்றான்.
“அவங்க மலேசியாவுல தான் இருக்காங்க. நான் இங்க வந்த விஷயம் தெரியாது” என்றான்.
“ம்ம்.. ” என்றவன் ஒரு அறையின் முன்னே வந்து நின்றவன் “உள்ள போ… ” என்றான்,
அவனை புரியாமல் ஈஸ்வர் பார்க்க..
“போ …. ” என்று அவன் முதுகில் கை வைத்து முன்னே தள்ளினான்.
யோசனையோடு அந்த அறைக்கதவை திறந்தவன் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தது .
அதே அதிர்ச்சியோடு தன் பின்னே நின்ற ராவணைப் பார்த்தவன். “மித்ரா!…” என்றவாறு திரும்பி அறைக்குள் இருந்த மித்ராவை பார்த்தான்.
உள்ளே இருந்த அறையில் கட்டிலில் படுத்திருந்தாள் மித்ரா. அவளிடம் வேகமாக வந்த ஈஸ்வர் “மிது.. மிது… ” என்று அவள் தோளை பிடித்து உலுக்கினான்,.
மயக்கத்தில் இருந்த மித்ரா மெல்ல கண்களை திறந்தவள் கண்களுக்கு ஈஸ்வர் முகம் மங்கலாக தான் தெரிந்தான். கண்களை கசக்கிகொண்டே பார்த்தவள் “மோகன்.. மோகன்… மோகன் எங்க?” என்று சுற்றிலும் இருந்தவர்களை பார்த்தபடி எழுந்தாள்.
அவள் கண் விழித்ததும் மோகன் என்றதுமே அதிர்ந்து போனான் ஈஸ்வர். அந்த அளவுக்கு அவன் இவளை தனக்கு அடிமையாக்கி இருக்கிறானே என்று இருந்து அவனுக்கு.
“மிது .. நான் தான் ஈஸ்வர் . அந்த மோகன் இங்க இல்ல.. அவன் உனக்கு வேணாம்” என்றான்.
“டேய் போடா முதல்ல.. நான் என் மோகன்கிட்ட போகணும்” என்று எழுந்தவள் வேகமாக அந்த அறையில் இருந்தவர்களை எல்லாம் தாண்டி வெளியே சென்றாள்.
ராஜ் சொன்னபோது நம்பாத ஈஸ்வர் இப்பொது மித்ரா செய்வதை கண்கூடாக பார்த்துவிட்டு அதிர்ந்து போனான்.
அவன் முகம் இறுகிப்போனது. வேகமாக மித்ராவின் பின்னால் ஓடியவன் அவள் கையைப் பற்றி தன் பக்கம் இழுத்தவன். “இனிமேல் நீ எங்கையும் போகப்போறது இல்ல.. என் கூட நீ கிளம்பி மலேசியா வா.. ” என்றான்.
“நான் வரல ..” என்று அவன் கையை உதறியவள் அந்த அறையில் மெய்ன் டோரை திறக்க முற்பட.. அது திறக்காமல் போயவிட்டது.
திரும்பி ராவணை பார்த்தவள் “கதவை திறந்து விடு.. ” என்றாள்.
ராவனோ அவள் முன் கை கட்டி நின்றவன் அழுத்தமாக இல்லை என்று தலையை ஆட்டினான்.
உடனே திரும்பி “ராஜ் கதவை திறந்து விடு..” என்றாள் நடுங்கிய குரலில்.
“முடியாது மித்ரா ” என்று அவனும் கை விரித்துவிட…
“ஐயோ! எனக்கு இப்போ மோகன்கிட்ட போகணும். என்னை வெளிய விடுங்க.. ” என்று தலை முடியை இரு கைகளிலும் பற்றிகொண்டவள் தரையில் அப்படியே அமர்ந்து கத்த துவங்கினாள்.
“மித்ரா சொன்னா கேளு… இனிமேல் நீ அந்த மோகனை பார்க்கவே முடியாது. அவனை இதோட மறந்திரு ” என்று அவள் முன் வந்து சொன்னான் ராஜ்.
அவன் அபப்டி சொன்ன அடுத்த நொடி தலையை நிமிர்த்திப் பார்த்த மித்ரா “அதை சொல்ல நீ யாரு டா.. ” என்றவள் அடுத்த நொடி எழுந்தவள் அந்த அறையில் முன்னும் பின்னும் அலைபாய்ந்து எதையோ தேடினாள்,
அவள் என்ன செய்யபோகிறாள் என்று ராவண் , ராஜ் இருவருக்கும் தெரியும். ஆனால் ஈஸ்வருக்கு ஒன்றும் புரியவில்லை. குழப்பமாக அவளை பார்த்தவன் “மிது.. என்ன வேணும் உனக்கு , எதை தேடுற..?” என்று அவள் கையைப் பிடித்தான்.
அவன் கையை உதறிய அடுத்த நொடி ஈஸ்வரின் கன்னத்தில் இருந்து ரத்தம் வழியத்துவங்கியது. அவன் கன்னத்தில் வடிந்த ரத்தம் அவன் சட்டையை நனைந்திருக்க…
அதை உணர்ந்த ஈஸ்வர் அதிர்ந்து மித்ராவைப் பார்க்க.. அவள் கையில் இருந்த பேனா முனையில் இருந்த ரத்தம் சொட்டு சொட்டாக தரையை தொட்டுக்கொண்டு இருந்தது.
அந்த ரத்தத்துளியை கண்டதுமே மித்ரா மயங்கி தரையில் சரிய.. அவளை சட்டென தாங்கி தன் மார்போடு அணைத்து பிடித்து இருந்தான் ஈஸ்வர்.
ராஜ் பதறிக்கொண்டு முன்னால் செல்ல.. அவன் குறுக்கே கையை நீட்டி நிறுத்திய ராவண்.
“ஈஸ்வர் இப்போ புரியுதா மித்ராவோட நிலை எந்த அளவுக்கு மோசமா இருக்குன்னு பார்த்தே இல்ல. இப்பவும் நீ அவளை காதலிக்குறியா ?” என்றான்.
மித்ராவை மார்போடு அணைத்தவாறு ராவணை திரும்பி பார்த்த ஈஸ்வர் “மித்ரா என்னோட உயிர் . நான் இவ்ளோ நாள் பொறுமையா இருந்ததுக்கு காரணமே அவளுக்கு பிடிச்சவனோட சந்தோசமா வாழ்வாங்குற நம்பிக்கையில் தான். ஆனா எப்போ அவ இப்படி ஒரு நரகத்துல மாட்டிகிட்டு சித்திரவதையை அனுபவிக்குறான்ன்னு தெரிஞ்சுதோ அப்போவே நான் முடிவு பண்ணிட்டேன், இனி இவளுக்கு பிடிச்சாலும் சரி, பிடிக்கலையின்னாலும் சரி மித்ராவோட வாழ்க்கை என்னோட தான்.” என்றவன் அவளை தன் கைகளில் ஏந்தியவன் “அடுத்த பிலைட்ல நான் மித்ராவை கூட்டிட்டு கிளம்புறேன்” என்று வாசல் நோக்கி நடக்க..
தன் பாக்கெட்டில் இருந்த ரிமோட் கொண்டே ராவண் கதவை திறந்து விட்டான் அவர்கள் இருவரும் செல்ல..
நள்ளிரவை கடந்து இருக்கும் இளங்கிளி தூக்கம் வராமல் மெத்தையில் புரண்டு படுத்தவள் அப்போது தான் அவர்கள் அறைக்கதவை திறந்து கொண்டு ராவண் உள்ளே வருவதை பார்த்தாள் .
வேகமாக படுக்கையை விட்டு கீழ் இறங்கியவள் அவனை பார்க்க…
ராவனோ வந்த வேகத்தில் இளங்கிளியின் முன்னே வந்தவன் அவள் முகத்தை கையில் ஏந்தி அவள் இதழில் மூர்க்கமாக முத்தமிடத் துவங்கினான்.
அவன் வந்து வேகத்தில் கொடி இடையவளுக்கு நிற்க முடியாமல் இரண்டடி பின்னால் சென்றாள். அவள் இடையில் கை கொடுத்து தன்னோடு தாங்கிப் பிடித்தவன் . அவள் இதழை விட்டுப் பிரிந்து அவள் விழிகளைப் பார்த்தவன். “இன்னிக்கு தான் நான் ரொம்ப நிம்மதியா, சந்தோஷமா இருக்கேன் டி.. ” என்றான்.
இளங்கிளி புரியாமல் அவன் விழிகளை ஏறிட..
“பூனை கண்ணை உருட்டாத டி.. ” என்று அவளை அள்ளி அணைத்தவன் அவள் கழுத்தில் முகம் புதைத்து தன் பற்த் தடத்தை பதிக்க ஆரம்பித்தான்.
“ரூமுக்குள்ள வந்தா என்னை பேசவே விட மாட்டேங்குறீங்க . நீங்க என்ன சொல்றிங்கன்னு எனக்கு புரியவே இல்ல.. ” என்றாள் நெளிந்துகொண்டே.
அவள் முதல் முறை இவ்வளவு நீளமாக பேசியதும் நிமிர்ந்து பார்த்தவன் “உன்னை பார்த்தா எனக்கு பேச தோணல.. மொத்தமா செய்ய தான் டி தோணுது” என்றான்.
அவன் சொன்னதில் விழுக்கென அவனை இளங்கிளி ஏறிட..
“என்ன செய்யலாமா?” என்று அவளை தூக்கினான்.
“ஹா!.. ஹையோ!… ஒரு நிமிஷம் இருங்க.. ” என்று பதறினாள் அவள்.
“என்ன டி! இன்னிக்கு அதிகம் பேசுற.. ” என்று சிரித்துக்கொண்டே அவளை கட்டிலுக்கு தூக்கி சென்றான்.
“அது.. அது வந்து.. ” என்று அவள் திணற..
“சொல்லு டி.. ” என்றான் கையில் இருந்தவள் முகத்தோடு தன் முகம் உரசிக்கொண்டே.
“இன்னிக்கு நான்.. . ” என்றவள் அவன் மீசை முடி குறுகுறுப்பை ஏற்படுத்த.. சினுங்கினாள்.
“ஹே! சிணுங்கி… இப்படி நான் தொட்டதுக்கெல்லாம் சினுங்கிகிட்டே இருப்பியா.. .” என்றவன் “இன்னிக்கு என்ன சொல்லு.. ” என்றான்.
“சிணுங்கியா!!! ” என்று மெல்ல சொன்னவள் அவனை பார்க்க..
“எப்போ தொட்டாலும் சினுங்கிகிட்டே இருக்கியே அதான் சிணுங்கி” என்றவன் “நான் செம்ம பெர்பாமென்ஸ் பண்ணணும்னு வந்திருக்கேன். இப்படி பேசி என்ன மூடை ஸ்பாயில் பண்ணிராத சரியா” என்றான்,
“இல்ல.. அது இன்னிக்கு முடியாதுன்னு தான் சொல்ல வந்தேன்” என்றாள் தலையை கவிழ்ந்து கொண்டே.
“எது?” என்றான் அவளை பார்த்து.
அவனை பார்த்துவிட்டு பார்வையால் கட்டிளைப் பார்த்தவள் “அது?” என்று படுக்கையை காட்டினாள்.
“ஏன்?” என்றான்.
அவன் தோள்களில் மாலையாக இருந்த கையை அவன் முகத்திற்கு முன்னே கொண்டு வந்தவள் மூன்று விரல்களை உயர்திக் காட்டினாள்.
அதை பார்த்ததுமே புரிந்து போனது அவனுக்கு .
“ஹே! இன்னியோட மூணு நாள் ஆச்சே டி… ” என்று மனதிலேயே கணக்கு போட்டு சொன்னான்.
“ம்ம்.. ” என்று மெல்ல தலையை ஆட்டினாள்.
“அப்பறோம் என்ன … ” என்றான்.
“இல்ல.. இந்த மாதிரி சமயத்துல.. இதெல்லாம் செய்ய மாட்டாங்களே… ” என்றாள் வெட்கத்தோடு.
“யாரு சொன்னா?” என்றான்.
அவளோ அவனைப் பார்க்க…
அவளை தூக்கி வந்து கட்டிலில் படுக்க வைத்தவன் “பொண்ணுங்களுக்கு இந்த மூணு நாளுல தான் அதிகம் மூட் ஆகும். ஆனா நான் அந்த மூணு நாளிலும் உன்னை டிஸ்டர்ப் பண்ணலையே. உன்னை நல்லா தானே பாத்துக்கிட்டேன். இப்போதான் 3 நாள் முடிஞ்சிருச்சே.. ” என்றவன் “உனக்கு ஒன்னு தெரியுமா? அந்த சமயத்துல ஆம்பளைங்களால பொண்ணுங்களை சமாளிக்க முடியாதவன் யாரோ தான் இந்த மாதிரி சொல்லிருக்கான் ” என்றான்.
அதுக்கு என்ற ரீதியில் இளங்கிளி அவனை பார்க்க…
“முடியாதவன் தாண்டி சாக்கு போக்கு கண்டுபிடிப்பான்” என்றவன் “முதல்ல ட்ரை பண்ணி பார்க்கலாம் டி.. உனக்கு பிடிக்கலையின்னா வேணாம்” என்றான்.
இளங்கிளி நெளிந்த படி படுத்திருக்க.. அவள் மறுப்பு சொல்லாததே அவனுக்கு சாதகமாகி விட.. சற்று நேரத்தில் அவள் இதழில் இளைப்பாறி அவள் உடலில் மோகம் கொண்டு அவளுள் தன்னை கலந்திருந்தான் .
அவள் பயந்தது போல அல்லாமல் அவன் சொன்னது போல தன் உடலில் எழும் உணர்வுகளை பெண்ணவள் கொஞ்சம் கொஞ்சமாக உணர துவங்கினாள்.
அவன் அசைவில் அவள் பித்தம் கொள்ள ஆரம்பித்தவள் அவள் கால்கள் அவன் இடையில் கொக்கி போட்டு அழுத்திப் பிடித்தவள் அவன் செயல்களுக்கு ஏற்ப தன்னை வளைத்து கொடுத்தாள்,
அவள் மொத்தமாக அவனிடம் சரணடைந்தாள்,” “இரு உடல்களும் ஒன்றாகிப் போன அந்த நிமிடம்,” “அவளது பயம் கலைந்து மோகம் சூழ்ந்தது.”
அவள் மோகங்கள் அனைத்தும் சிணுங்களாக வெளிப்பட.. சிணுங்காத டி!.. சிணுங்கி… என்று அவள் காதோரம் முத்தமிட்டவன் இருவரும் உயரத்தில் ஒன்றாக பறக்க துவங்கினர்.
ஆடி முடிந்த ஆட்டக் களைப்பில் அவளை தன் மார்போடு சேர்த்து அவன் படுத்திருக்க.. அவளோ.. அவன் நெஞ்சத்தை தன் மஞ்சமாக்கி கண்கள் செருக படுத்திருந்தாள்.
