Home Uncategorizedஉணர்வில்லா மூர்க்கனின் உயிர் நீயடி 22

உணர்வில்லா மூர்க்கனின் உயிர் நீயடி 22

by Layas Tamil Novel
8 views

மூர்க்கன் 22

கையில் ஒரு பெண்ணை ஏந்தியப்படி வந்து நின்ற ராஜ்ஜையும், கயலையும் பார்த்து அதிர்ந்து தான் போனாள் இளங்கிளி.

அவள் அதிர்ச்சியாவதை கண்டவன் “அண்ணி! இவ தான் நான் லவ் பண்ற பொண்ணு. பேரு கயல்” என்று அரை மயக்கத்தில் இருந்தவளை அறிமுகம் செய்து வைத்தான் ராஜ்.

“அந்த ராட்சசி தான் எனக்கு இப்படி பண்ணினா. அவளை சும்மா விடக்கூடாது.. ” என திடீரன்று அவள் தோளில் சாய்ந்து இருந்த கயல் உலர…

“அஹ்! அது.. அது ஒன்னும் இல்ல அண்ணி.. ” என்று சமாளிக்க முயன்றான்.

“ராட்சசியா!” என்று இளங்கிளி அவளை அதிர்ந்து பார்த்தவள்.  “அஹ்! நீங்க லவ் பண்ற பொண்ணா ?” என்று அதிர்ந்தவள் “இவங்க ஏன் இப்படி இருக்காங்க? தூங்குறாங்களா? ” என்றாள்.

“தூங்குறாளா!” என்பர் இப்பொது ராஜ் அவளை அதிர்ச்சியாக பார்த்தவன் “அண்ணி! இவ மயக்கத்துல இருக்கா.. தூங்கலை..” என்றான்.

“ஓஹ்!…” என்று அவன் கையில் இருந்த கயலை எட்டிப் பார்த்தவள் “ஏன் மயங்கினாங்க” என்றாள்.

அவளை அதிசயமென பார்த்தவன் “என்ன இவ்ளோ வெகுளியா இருக்காங்க ” என்று யோசித்தவன் “அண்ணி! இவளை படுக்க வைக்கணும். கை வலிக்குது “என்றான்.

“வலிக்குதாடா வலிக்கட்டும் .. எல்லாம்.. எல்லாம் உன்னால தான் டா… ” என்று போதையில் பிதற்றினாள் கயல்.

“ஏய் கொஞ்ச நேரம் வாயை மூடு டி.. ” என்று அவளை கடிந்தவன் “அண்ணி! ரூம் ” என்றான் வழிந்துகொண்டே.

அவளை கண்டு சற்று தள்ளி நின்ற இளங்கிளி “அந்த.. அந்த ரூம்ல ” என்று கீழே இருந்த ஒரு அறையை கை காட்டினாள் .

அவளை தூக்கிக்கொண்டு அந்த அறைக்குள் நுழைந்த ராஜ் மெத்தையில் அவளை கிடத்திவிட்டு. “குண்டூஸ் எவ்ளோ கணக்குற டி நீ.. ப்பா கையெல்லாம் வலிக்குது” என்று அவள் கன்னத்தை கிள்ளி முத்தம் வைத்துக்கொண்டே திரும்பியவன் அவன் பின்னே நின்று இருந்த இளங்கிளியை பார்த்து சற்று அதிர்ந்து தான் போனான்.

“அஹ்! அண்ணி!.. ” என்று தன் உதட்டில் இருந்த விரல்களை அவசரமாக கீழிறக்கியவன் அவளை பார்க்க..

“அவங்க ஏன் மயங்கி விழுந்துட்டாங்க. மாசமா இருக்காங்களா?” என்றாள்.

“ஐயோ! அண்ணி அதெல்லாம் எதுவுமில்லை.. அவளுக்கு மயக்க மருந்து கொடுத்துட்டாங்க , அதான் இப்படி மயங்கி இருக்கா ” என்றான்.

“ஓஹோ!.. அப்போ மாசமா இல்லையா?” என்றாள் சற்று ஏமாற்றம் நிறைந்த குரலில்.

“கடவுளே! என்ன அண்ணி இப்படி இருக்காங்க . என் அண்ணன் எப்படி இவங்களை சமாளிக்குறாரு.. “என்று நினைத்தவன் “அண்ணி! நான் இவளை லவ் பண்ற விஷயமே இன்னிக்கு தான் இவளுக்கு தெரியும். அதுவும் மயக்கம் தெரிஞ்சா தான் நான் லவ் பண்றதை இவ புரிஞ்சுக்கிட்டாளானே தெரியும். இதுல எங்க மத்ததெல்லாம்.. ” என்றான்.

இருவரையும் பார்த்து தலையை ஆட்டியவள் “மயக்கம் போட்டுட்டா ஹாஸ்பிடல் இல்ல கூப்டு போகணும். இங்க ஏன் கூப்டு வந்திங்க ” என்றாள்.

“இது வேரையா? ம்ஹும்.. சமாளிப்போம்” என்று நினைத்தவன் “அது.. ஹாஸ்பிடல் போய்ட்டு தான் இங்க கூப்டு வந்தேன் ” என்று சமாளித்தான்.

“டேய்! எனக்கு உடம்பெல்லாம் எரியுது டா.. அந்த கடன்காரி என்ன பண்ணினான்னு தெரியலையே.. ” என்று உடல் முழுவதும் பரவிய போதை மருந்தின் வீரியம் வேலை செய்து கொண்டிருக்க.. அதை தாங்க மாட்டாமல் புலம்பினாள் கயல்.

“அப்போ அவங்க வீட்டுக்கு கூப்டு போகாம ஏன் இங்க கூப்டு வந்திங்க” என்றாள் அடுத்த கேள்வியாக.

“ஐயோ! அண்ணி மொத்தமா எல்லா கேள்வியும் கேட்டு முடிச்சிருங்க. நான் மொத்தமா பதில் சொல்றேன் ” என்றான் ராஜ் பொறுமை இழந்து.

“நீங்க லவ் பண்ற பொண்ணுன்னு சொன்னிங்களே.. அதான் ஒரு அக்கரையில கேட்டேன் ” என்றவள் அவனை பார்க்க..

அவனும் மௌனமாக அவளை பார்த்தான்.

இளங்கிளியும் அவனையே பார்த்துக்கொண்டிருக்க..

அப்போது தான் அவள் தன்னை பார்ப்பது புரிந்தது அவனுக்கு. “நானே முழுசா விவரமா சொல்லிடறேன்” என்றவன் “மித்ராவின் விஷயத்தில் ஆரம்பித்து. கயலுக்கு போதை மருந்து கொடுத்து அவளை இந்த நிலைக்கு ஆளாக்கியது வரை ஒன்றுவிடாமல் சொன்னவன். அவ இனிமேல் இங்க தான் இருக்க போறா அண்ணி . வீட்ல பேசி எங்க கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கணும். அதுக்கு முன்ன இவ மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கனும். அதுக்கு அப்ரோம்தான் மத்ததெல்லாம் ” என்று மொத்தையும் மூச்சு விடாமல் கூறி முடித்து இருந்தான்.

“என்ன நீங்க இதை முதல்லயே சொல்ல வேணாமா ? ” என்று கயலிடம் வந்தவள் “அப்போ இவளை ஹாஸ்பிடல் கூப்டு போகல நீங்க அப்படித் தானே.. ” என்றாள்.

“ம்ம்.. ஆமா அண்ணி, போதை மருந்து சாப்பிட்டிருக்கா . அதான் ஹாஸ்பிடல் போகாம இங்க கூப்டு வந்துட்டேன் ” என்றான்.

“அப்போ டாக்டர் பாக்க வேணாமா?”என்றாள் இளங்கிளி.

படுக்கையில் உடல் சூடு தாங்காமல் புரண்டு கொண்டிருந்தவளை பார்த்தவன் “வர சொல்றேன் அண்ணி!” என்றவன் பாக்கெட்டில் இருந்த போனை எடுத்துக்கொண்டு வெளியே சென்றான்.

அவன் சென்றதும் கயலை திரும்பி பார்த்தாள் அவளோ கட்டிலில் வெப்பம் தாளாமல் நெளிந்து கொண்டு இருந்தாள். உடனே AC ரிமோட்டை எடுத்து அதன் குளிர்ச்சியை அதிகம் செய்தாள் . சற்று நேரத்தில் அந்த அறையே குளிர்ந்துவிட.. கயல் மட்டும் இன்னமும் உடல் சூட்டை தணிக்க முடியாமல் திண்டாடினாள் . முகம், உடல் என அனைத்தும் வியர்த்துவிட்டது அந்த குளிரிலும். அவளால் இதை பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை.

சட்டென எழுந்து அமர்ந்தவள் “எனக்கு சூடு தாங்கல .. ” என்று அழைத்துக்கொண்டே புலம்பியவள் தன் ஆடைகளை களைய ஆரம்பித்தாள்.

அதில் பதறிய இளங்கிளி “ஏய் என்ன பண்ற.. இப்படி எல்லாம் பண்ணக் கூடாது ” என்று அவளை தடுக்க..

“என்னால தாங்க முடியல அக்கா ” என்று இளங்கிளியை பார்த்து அழைத்துவங்கினாள். அழுதுகொண்டே ஆடை மொத்தமும் துறந்துவிட்டு நிற்க.

அவளை அப்படிப் பார்த்ததும் கண்களை மூடியவள் “என்ன இப்படி நிக்குறா.. ” என்று யோசித்தவள் “அவளுக்கு கொடுத்த மருந்து இப்படி வேலை செய்ய வெக்கும் போல.. ” என்று நினைத்தவள் . “இப்படியே விட்டா பாவம் இவ ஏதாவது ஆகிடப்போகுது ” என்று கயல் அருகே வந்தவள் “நீ என்கூட வா..” என்று அவள் கை பிடித்து பாத்ரூமிற்குள் அழைத்து சென்றாள்.

“இங்க ஏன் கூப்டு வந்திங்க.. “என்று கேட்டுக்கொண்டே உள்ளே சென்றவளை இழுத்து ஷவர் முன்பு நிற்க வைத்து பச்சை தண்ணீரை திறந்துவிட்டாள்.

தண்ணீர் மேலே விழ விழ .. கயலுக்கு அப்போது தான் ஓர் அளவுக்கு உடல்நிலை சரியாவது போல தோன்றியது .  அவள் அபப்டியே கண் மூடி நின்று இருக்க.. அவளை பார்க்கவே பாவமாக இருந்தது இளங்கிளிக்கு . சற்று நேரம் அவளை ஷவரில் நிற்கட்டும் என்று விட்டவள் “ரொம்ப நேரம் தண்ணியில நின்னா உடம்பு சரி இல்லாம போய்டப்போகுது. நீ வா,.. டாக்டர் வந்திருப்பார் ” என்று பாத்ரூமில் இருந்த துண்டை எடுத்து அவள் உடலில் சுற்றியவள் கைத்தாங்கலாக கயலை அழைத்துக்கொண்டு வெளியே வந்தாள்.

சொன்னது போலவே டாக்டர் வந்து காத்திருக்க.. கயலுடன் வெளியே வந்தவர்களை பார்த்த ராஜ் அவள் இருந்த கோலத்தை கண்டதுமே அந்த அறையை விட்டு வெளியேறி இருந்தான்.

அதை கயலும் கவனித்தாள் . மெல்ல வந்து அவளை கட்டிலில் அமரவைத்து வேறு டவலை எடுத்து அவள் தலையை துவட்டிவிட்டாள். அவளுடைய சேலையை எடுத்துவந்து அவளுக்கு கட்டிவிட்டவள் டாக்டரிடம் கொண்டு வந்து அமர் வைத்தாள்.

“சார் இவங்க கண்டிஷன் பத்தி எல்லாமே சொன்னாங்க. ” என்றவர் கயலின் நாடியை பிடித்து பரிசோதித்தார் . பின் அவளை முழுமையாக பரிசோதித்தவர் “இவங்களுக்கு என்ன மாதிரியான ட்ரக்ஸ் கொடுத்திருக்காங்கன்னு தெரியணும். அப்போ தான் மேற்கொண்டு எந்த பாதிப்பும் வராம பார்த்துக்க முடியும் ” என்றவர் அவளுக்கு வேண்டிய மருந்தை எழுதி கொடுத்தவர் “இவங்களை சாப்பிட வெச்சு இந்த மருந்தை எல்லாம் கொடுங்க ” என்றார்.

அப்போது ராஜ் உள்ளே வர.. “இவங்களுக்கு சில டெஸ்டஸ் எல்லாம் எடுக்கணும். நாளைக்கு காலையில சாப்பிடாம இவங்களை கிளினிக்கு அழைச்சிட்டு வந்திருங்க ” என்றவர் நாளை செய்ய வேண்டிய டெஸ்ட்களை எடுத்து கொடுத்தவர் “ரிசல்ட் வாங்கிட்டு என்னை பார்க்க வாங்க. அடுத்து என்ன பண்ணலாம்ணு ரிப்போர்ட் பாத்துட்டு முடிவு பண்ணிக்கலாம்” என்று அவர் கயலுக்கு ட்ரிப்ஸ் போட்டுவிட்டவர் கூடவே ஒரு நர்ஸையும் இருக்க சொல்லிவிட்டு . அங்கிருந்து கிளம்பி இருந்தார்.

ராஜ் கவலையாக கயலை பார்த்தான் . அவனால் தானே இப்படியொரு நிலைமைக்கு அவள் வந்திருக்கிறாள் என்ற குற்ற உணர்வு அவனுக்கு.

“நீங்க பாத்துக்கிறிங்களா நான் போய் இவளுக்கு சாப்பிட எதுவும் எடுத்துட்டு வரேன்” என்று அந்த அறையை விட்டு வெளியே சென்றுவிட..

கயல் அருகே வந்து அமர்ந்தவன் அவள் தலையை வருடிக்கொண்டுத்த படி அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

இளங்கிளி உணவோடு வந்தவள் நர்ஸ் உதவியுடன் கயலை அமர வைத்து அவளை தன் தோளில் சாய்த்துக்கொண்டு உணவை கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டிவிட்டு அவள் சாப்பிட்டு முடித்தபின் முகத்தை துடைத்துவிட்டு எழ..

“அண்ணி! ரொம்ப தேங்க்ஸ் கயலை இவ்வளவு அக்கறையா பாத்துக்கிறிங்க நீங்க” என்றான் குரல் தழுதழுக்க.

“இதுல என்னங்க இருக்கு. என் தங்கையா இருந்தா இதெல்லாம் செய்திருக்க மாட்டேன்னா ” என்றவள் “மித்ராவை காப்பாத்த இவ எவ்ளோ கஷ்டப்பட்டிருக்கா . அதுக்கு கைமாறா இது இருக்கட்டுமே.. “என்றவள் சிரித்துக்கொண்டே வெளியேற..

“சரி அண்ணி! அப்போ நானும் கிளம்புறேன் ” என்றான்.

“எங்க போறீங்க கொளுந்தனாரே.. காலையில சீக்கிரமே டெஸ்ட் எடுக்க உங்க லவ்வரை ஹாஸ்பிடல் கூப்டு போகணுமே.. நீங்க வீட்டுக்கு எதுவும் போக வேணாம் . அவகூடவே இருங்க.. உங்க அண்ணா வந்துட்டாருன்னா எனக்கு வேலை அதிகம் ஆகிடும். அப்பறோம் உங்க வருங்கால பொண்டாட்டியை நான் சரியா பாக்கலையின்னு என்னை எதுவும் குத்தம் சொல்லிடப்போறிங்க. “என்று சிரித்தாள்.

“ஐயோ! அண்ணி என்ன இப்படி எல்லாம் பேசுறீங்க. உங்களுக்கு எதுவும் தெரியாது தான் நினைச்சிட்டு இருந்தேன். ஆனா நீங்க இவளை இவ்வ்ளவு அக்கறையா பார்த்துக்கிட்டதை கண்கூட நான் பார்த்த பிறகும் உங்களை அந்த மாதிரி எல்லாம் சொல்ல மாட்டேன்” என்றான்.

“சரி ” என்று சிரித்தவள் “நீங்க வந்து சாப்பிடறீங்களா ?”என்றாள் .

“இல்ல அண்ணி பசிக்கல . நீங்க எடுத்து வெச்சிடுங்க. ராத்திரி பசிச்சா போட்டு சாப்பிடுகிறேன் நான்” என்றான் ராஜ்.

அவனை பார்த்து மென்மையாக புன்னகைத்துவிட்டு சென்றுவிட்டாள்.

ராஜும் கயல் இருந்த அறைக்கு வந்தவன் நர்ஸிடம் நீங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க நான் எதுனா உங்களை கூபிட்றேன் என்று அனுப்பி வைத்துவிட்டு கயல் அருகே இருந்த சேரை இழுத்து போட்டு அவள் அருகே அமர்ந்தவன் அவள் கையை பிடித்துக்கொண்டு அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான்,.

இரவு பத்துமணியை கடந்து இருக்கும் வேலை எல்லாம் முடித்துவிட்டு வேலையாட்கள் சென்றுவிட..   இளங்கிளியும் கயல் அறைக்குள் எட்டிப் பார்த்தாள். அவள் கையை பிடித்துக்கொண்டே சேரில் சாய்ந்து உறங்கிக்கொண்டு இருந்தான் ராஜ்.

அவர்களை தொந்தரவு செய்யாமல் தன் அறைக்கு செல்ல திரும்பியவள் அவளை உரசும் நெருக்கத்தில் நின்று இருந்த ராவண் மீது மோதி நின்றாள்.

அவள் இடையை பற்றி கைகளில் ஏந்தியவன் ” அவங்க ரெண்டு பேரும் தூங்கட்டும். நமக்கு வேலை இருக்கு வா.. “என்று அவளை தூக்கிக்கொண்டு தங்கள் அறைக்கு சென்றான்.

அவன் தோளை கட்டிக்கொண்டு அதிர்ந்தவள் “இப்படியா சத்தம் இல்லாம வருவீங்க ” என்றவள் ராவணிடம் இருந்து புதுவிதமாக ஏதோ வாசனை வரவும் அவன் கழுத்து வளைவில் முகம் புதைத்து முகர்ந்து பார்த்தவள் முகம் மாறியது.

“எங்க போய்ட்டு வந்திங்க? யாரை பார்த்துட்டு வந்திங்க?” என்று இருகிய குரலில் அவள் கேட்கவும் சிரித்துக்கொண்டிருந்தவன் முகம் மாறியது. நடந்து கொண்டிருந்தவன் அபப்டியே நின்றுவிட்டான்.

இதை ராவண் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தன்னிடம் உள்ள சிறு மாற்றத்தை கூட உன்னிப்பாக கவனித்துவிட்டாளே என்று அவனுக்கு தோன்றியது.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured