Home Uncategorizedரூம்ல அண்ணி கூட என்ன எல்லாம் பண்ணுவார்.. மூர்க்கன் 26

ரூம்ல அண்ணி கூட என்ன எல்லாம் பண்ணுவார்.. மூர்க்கன் 26

by Layas Tamil Novel
35 views

மூர்க்கன் 26

போதைப்பழக்கத்தில் இருந்து மித்ராவை மீட்டுக் கொணர்வதற்கான  முயற்சிகள் தீவிரம் அடைந்து இருந்தது . ஒரு மாதத்திற்கு மேலாக அவளுக்கு எந்த போதை பொருளையும் கொடுக்காமல் அவளை கண்ணும் கருத்துமாக பார்த்து வந்தான் ஈஸ்வர்.

அவளுக்கு முற்றிலுமாக போதை மருந்து கொடுப்பதை நிறுத்தி இருந்தான் ஈஸ்வர். என்ன ஆனாலும் சரி இனி அவள் அந்த மருந்துகளை எடுத்துக்கொள்ளக் கூடாது என்று ஸ்ட்ரிக்ட்டாக மித்ராவை இந்த பழக்கத்தில் இருந்து மீட்டு வருவதற்காக அவளுக்கு சிகிச்சை அளிக்க வந்திருந்த சந்திரிகாவிடம் சொல்லி விட்டான் ஈஸ்வர் .

அவள் உடலில் போதை மருந்தின் தாக்கம் குறையக் குறைய மித்ராவின் உடல் நிலை மிகவும் மோசமடைந்து வந்தது. அவளால் எதிலும் கவனமாக இருக்க முடியவில்லை. எங்கோ பார்த்துக்கொண்டே இருப்பாள். திடீர் என்று வெறி கொண்டவள் போல கத்தி கூப்பாடு போட்டு ஈஸ்வரியும், சந்திரிகாவையும் ஒரு வழி பண்ணி விடுவாள்.

அவளை கவனமாக பார்த்துக்கொள்வதில் முக்கிய பங்கு சந்திரிகாவுக்கு தான் இருந்தது. காலையில் ஆபீஸ் சென்றுவிட்டு இரவு தான் வருவான் ஈஸ்வர். அவன் வரும்வரை மித்ராவை முழுவதுமாக கவனித்துக் கொள்ளும் பொறுப்பு அவளுடையதாக தான் இருந்தது.

வழக்கம் போல பிரம்மை பிடித்தவள் போல மூலையில் முடங்கி கிடந்த மித்ராவுக்கு கஷ்டப்பட்டு உணவை ஊட்டி விட்டவன் காலையில் கொடுக்கும் மாதிரியை அவளுக்கு கொடுத்து அவளை உறங்க வைத்துவிட்டு ஆபீஸ் கிளம்பிக் கொண்டிருந்தான் ஈஸ்வர்.

காலிங் பெல் சத்தம் கேட்டதும் வாட்சில் மணியைப் பார்த்தான் மணி ஒன்பதைக் காட்டவும் சந்திரிகா தான் வந்துவிட்டாள் என்று வந்து கதவை திறந்து விட்டான்.

“குட் மோர்னிங் சார் ” என்று அவள் சிரித்தமுகமாக உள்ளே வந்தவள் நேராக மித்ராவை பார்க்க தான் அவள் அறைக்கு சென்றாள்.

தூக்கத்தில் இருந்த மித்ரா திடீர் என்று கத்திக்கொண்டு படுக்கையை விட்டு எழுந்தாள்.

உள்ளே வந்த சந்திரிகாவோ “மித்ரா என்ன ஆச்சு?” என்று பதறி அவள் அருகே செல்ல..

“மித்ரவா!? யாரு அது?” என்று ஆத்திரத்தின் உச்சத்தில் பேசினாள் மித்ரா.

அவளை புரியாமல் பார்த்த சந்திரிகாவோ “நீ வேணும்னு தானே இப்படி சொல்ற.. எதுவும் தெரியாத மாதிரி பேசாத மித்ரா ” என்று சிரித்துக்கொண்டே அவள் அருகே சென்றாள் .

“ஏய் நீ யாரு? என்கிட்ட வராத உன்னை பார்த்தாலே எனக்கு பயந்து வருது.. ” என்று பின்வாங்கினாள் மித்ரா.

“மித்ரா என்னை தெரியல.. நான் தான் சந்திரிகா. உனக்கு டிரீட்மென்ட் பாக்குறது நான் தான்” என்றாள்.

“டிரீட்மெண்டா ? யாருக்கு?” என்றாள் சிறுபிள்ளை போல..

அவள் திரும்ப திரும்ப எதுவுமே நியாபகம் இல்லாதவள் போல பேசுவதை கண்டதும் எதுவோ சரி இல்லை என்று சந்திரிகாவுக்கு தோன்றியது. அதற்குள் மித்ராவின் அலறல் சத்தம் கேட்டு அறைக்குள் வந்த ஈஸ்வர் “என்ன ஆச்சு சந்திரிகா ” என்று குழப்பமாக மித்ராவை பார்த்தான்.

தான் அணிந்து இருந்த நைட் ட்ரெஸ்ஸின் சட்டையை இருக்க பற்றிக்கொண்டு இருவரையும் வெறிக்க வெறிக்க பார்த்தவள் “நீங்க எல்லாம் யாரு? நான் எங்க இருக்கேன்” என்று அந்த அறையையும் அவர்கள் இருவரையும் மிரட்சியோடு பார்த்தபடி கேட்டாள் மித்ரா.

“நாங்க.. யாரா? ஏய் மித்ரா என்ன விளையாடுறியா? நான் தான் ஈஸ்வர் டி.. ” என்று அவள் அருகே சென்றான்.

“ஏய் அங்கையே நில்லு என் கிட்ட வராத.. உன்னை பார்த்தாலே பொருக்கி மாதிரி இருக்கு. எதுக்கு நீ என்கிட்டே வர.. ” என்று சுவற்றோடு பல்லி போல ஒட்டிக்கொண்டு நின்றாள்.

“பொறுக்கியா? நானா? அப்படியே அறைஞ்சேன்னா பாத்துக்க.. என்னை பார்த்தா உனக்கு பொறுக்கி மாதிரியா டி தெரியுது .” என்று கோபத்தில் ஈஸ்வரும் பதிலுக்கு கத்தினான்.

“ம்ம்.. ஆமா , அப்படித்தான் தெரியுது ” என்றாள் வெள்ளந்தியாக.

“வேணாம் மித்ரா . நான் பொறுக்கினா அப்போ அந்த மோகன் யாரு. அவன் தான் டி… அந்த மோகன் தான் டி பச்சை பொருக்கி நான் இல்ல.. ” என்று எகிறிக்கொண்டே மித்ராவின் கையை பிடிக்க..

அவளோ அவன் கையை வேகமாக உதறிவிட்டு சந்திரிகாவின் பின்னால் ஓடி சென்று மறைந்து கொண்டவள் “எனக்கு இவனை பார்த்தா பயமா இருக்கு . என்னை இவன்கிட்டே இருந்து காப்பாத்துங்க.. ” என்று அழுதுகொண்டே கெஞ்சினாள் மித்ரா.

அவள் நடந்துகொள்வதும், பேசுவதும் பார்த்தாள் காலை வரை அவன் பார்த்த மித்ராவையா இப்பொது பார்க்கிறோம் என்று இருந்தது.

“மி.. மித்ரா என்ன ஆச்சு உனக்கு. நான் ஈஸ்வர் .. ” என்று தன் நெஞ்சில் கை வைத்து தட்டி காட்டியவன் “இங்க வா .. நான் உன்னை எதுவும் பண்ண மாட்டேன்” என்று அவளை நெருங்கினான்.

“இல்ல.. இல்ல.. நான் வரல.. நீயும் வேணாம்.. ” என்று சந்திரிகாவின் கையை இருக்க பற்றிக்கொண்டு அழுதாள்.

ஈஸ்வருக்கு ஒன்றும் புரியவில்லை. “சந்திரிகா இவளுக்கு என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரி பேசுறா.. ஏதோ மறந்த மாதிரி.. ” என்றான் குழப்பமாக.

“சார் எனக்கும் ஒன்னும் புரியல.. நாம எதுக்கும் மித்ராவை ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போகலாம். ” என்றாள்.

“ஹாஸ்பிடலுக்கு போனா இவளை டெஸ்ட் பண்ணுவாங்களே… அப்போ மித்ரா ஒரு ட்ரக் அடிக்ட்னு தெரிஞ்சிரும் . அது பிரச்சனை ஆகிடுமே.. ” என்றான்.

“இல்ல சார் , எந்த பிரச்னையும் வராது . நான் சொல்ற இடத்துக்கு போலாம்” என்றவள். “நீங்க வெளிய இருங்க நான் மித்ராவுக்கு டிரஸ் மாத்தி அழைச்சிட்டு வரேன் ” என்றாள்.

ஈஸ்வரும் மித்ராவை பார்த்தவாறு அந்த அறையை விட்டு வெளியேறி இருந்தான்.

… ராவண் வீட்டில்.

மிக தீவிரமாக புஷ் அப்ஸ் எடுத்துக்கொண்டிருந்தாள் கிளி.

“86..87..88…89..” என்று அவள் எடுக்கும் புஷ் அப்பிற்கு கணக்கு எடுத்துக் கொண்டிருந்தாள் ஷைலு.

இளங்கிளியின் கைகள் நடுங்கியது . அவளால் தொன்னூரை தாண்ட முடியுமா என்று தோன்றவில்லை. மிகவும் ப்ரயத்தனப்  பட்டுக்கொண்டிருந்தாள் அவள் .

“ம்ம்.. அக்கா கம் ஆன் .. இன்னும் 10 கவுண்ட்ஸ் தான் முடிச்சிரலாம்..” என்று அவளுக்கு நிகராக தரையில் படுத்துக்கொண்டு அவளை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தாள் கயல் .

உடல் முழுதும் வியர்வை மழை நனைந்திருக்க.. அவள் அணிந்து இருந்த ஜிம் உடை அவள் வியர்வையில் நனைத்து இருந்தது.

“ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு பக்கம் நின்னு என் கதை ஏன் நிறைக்குறிங்க.. நானே… ” என்று மூச்சு முட்ட சொன்னவள் தொன்னூற்றை எட்டி இருந்தாள்.

“ஏ… சூப்பர்… ” என்று கயல் கை தட்டி ஆர்ப்பரிக்க..

“91…..” என்று என்ன ஆரம்பித்தாள் ஷைலு..

“போதும் அவளுக்காக மீதி இருக்க 10 புஷ் அப்ஸையும் நான் எடுக்குறேன்.. ” என்று அவர்கள் பேசியத்தை கை கட்டி கேட்டுக்கொண்டிருந்த ராவண் உள்ளே தன் சட்டையை கலட்டிக்கொண்டே வந்தான்.

“சார்.. ” என்று ஷைலு பின்வாங்க..

“ஐயோ!.. இவரா!” என்று கயல் தரையில் இருந்து எழுந்து கொண்டாள் .

ராவண் பின்னே வந்த ராஜ்ஜோ அவளை கண்டதும் கையை உயர்த்தி தன் இருப்பை காட்டினான்.

அவனை பார்த்து லேசாக வெட்கப்புன்னகை சிந்திய கயல் ஒதுங்கிக்கொள்ள..

“நீ எழுந்திரு நான் பண்றேன்” என்றான்.

கிளியோ.. இருந்த கோலத்தில் அப்படியே ஷைலுவை பார்க்க..

அவளோ “ஹையோ! மேடம் நான் எதுவும் சொல்லல.. நீங்க சார் சொல்றதையே செய்யுங்க.. ” என்றாள் அவசரமாக.

“அது எப்படி ஷைலு முடியும். அக்கா இவ்ளோ நேரம் எவ்ளோ கஷ்டப்பட்டு 90 புஷ் அப்ஸ் எடுத்தாங்க. ஆனா சார் வந்து 10 எடுத்துட்டா சரியாகிடுமா.. ” என்றாள்.

அவளை திரும்பி ராவண் பார்க்க..

“ஹா! ஆத்தி.. ” என்று உள்ளுக்குள் ஜெர்க் ஆனவள்.

“இல்ல.. வெறும் 10 என்ன 100 கூட நீங்க சாதாரணமா செய்திருவிங்க.. அதான் சொன்னேன்” என்றாள்.

“வேற என்ன பண்ணனும் நீயே சொல்லு என்றான்.

“ம்ம்ம்… ” என்று  யோசித்தவள் “வேணும்னா இப்படி பண்ணலாமா… நீங்க அக்காவை உங்க முதுகுல உக்கார வெச்சிட்டு 10 புஷ் அப்ஸ் எடுங்க.. ” என்றாள் மிக சாதாரணமாக.

“ஹே! அதெல்லாம் எதுவும் வேணா… இன்னும் பத்து தானே நானே எடுத்துகிறேன்” என்றவள் “ஏங்க நீங்க இருங்க நான் வந்துடறேன் ” என்று அடுத்த தண்டால் எடுக்க போக..

இளங்கிளியின் கையை பிடித்து அவளை மேலே தூக்கியவன் என் மேல உக்காரு.. என்று தண்டால் எடுக்கும் பொசிசனில் சட்டென்று படுத்துவிட்டான்.

“ஹையோ! எதுக்குங்க இதெல்லாம் . என் வெயிட்டை எப்படி … ” என்று இளங்கிளி தயங்க.

“என்னை வெய்ட்டையே நீ தங்கின.. உன்னை நான் தாங்க மாட்டேனா.. ” என்று அவளை அழுத்தமாக ஒரு பார்வை பார்க்க..

அவளோ ” என்னங்க இது..  “என்று இளங்கிளி நெளிந்தவள் ஷைலுவையும், கயலையும் பார்க்க.. அவர்களோ ராவண் சொன்னதில் கிளியை பார்த்து புருவம் உயர்த்தி கிண்டல் செய்யும் தோரணையில் சிரிக்க..

‘ம்ம்.. உக்காரு டி.. ” என்று அவன் செல்ல அதட்டலில் அவன் மீது சம்மணமிட்டு அமர்ந்து ராவண் தோளை பிடித்துக் கொண்டாள்.

இளங்கிளி அமர்ந்ததும் தண்டால் எடுக்க ஆரம்பித்தான்.

“1.. 2.. 3…” என்று வேகமாக  என்ன ஆரம்பித்து இருந்தாள்.

ராவனோ மிகவும் சாதாரணமாக தண்டால் எடுத்துக் கொண்டிருந்தான். தன் மேலே இருந்தவள் எடை அவனுக்கு பாரமாக இல்லை.

“8.. 9…10…” என்று கயல் எண்ணி முடித்து கையை தட்டி இருக்க.. அவளோடு சேர்ந்து மற்றவர்களும் கையை தட்டினர்.

ராவண் முடித்துவிட்டு எழுவான் என்று நினைத்து இருக்க..  அவனோ தொடர்ந்து தண்டால் எடுத்துக்கொண்டே இருந்தான்.

இரங்கப் போன கிளியோ அவனை இருக்க பற்றி இருந்தாள் மீண்டும்.

“என்னங்க போதும் ” என்றாள்.

ராவனோ இன்னும் நிறுத்தாமல் தண்டால் எடுத்துக்கொண்டே இருந்தான் .

அவன் யார் சொல்வதையும் காதில் வாங்கிகொள்ளவில்லை. சிறிது நேரம் பார்த்துவிட்டு கயல் மீண்டும் என்னத்துவங்கி இருந்தாள்.

“1..2… ” என்று அவள் முதலில் இருந்து ஆரம்பிக்க..

ஷைலுவோ.. 24… 25.. ” என்று இந்த ராவண் என்கிற மூர்க்கத்தனமாக தண்டால் எடுப்பதை பார்த்து மிரண்டவளாக எண்ணிக் கொண்டிருந்தாள்.

“87..88… ” என்று எண்ணிக்கை நீண்டது…

“ஐயோ.! இந்த சார் என்ன இவ்ளோ வெறியா தண்டால் எடுக்குறாரு… அக்கா அவர் மேல இருக்க அப்போவே இவ்ளோ வேகம்னா .. அப்போ அக்கா… ” என்று யோசித்தவள் எண்ணம் தாறுமாறாக ஓடத் துவங்க…

அவள் அருகே நின்று இருந்த ராஜ்ஜோ.. “என்ன எங்க அண்ணா இங்கையே இப்படி ஒர்க் அவுட் பன்றாரே.. அப்போ ரூமுக்குள்ள அண்ணிகூட என்ன எல்லாம் பண்ணுவாருன்னு யோசிச்சிட்டு இருந்தியா?” என்று அவள் காதருகே குனிந்து கேட்டான்.

“ஆஹ்! ஆத்தாடி.. ” என்று நெஞ்சில் கை வைத்துக்கொண்டவள்.

“அ.. அதெல்லாம் இல்லையே..” என்றாள் அவசரமாக.

“பொய் சொல்லாத செல்லம் .. .உன் மூஞ்சியே நீ என்ன நினைக்குறேன்னு காட்டி கொடுத்திருச்சு… ” என்றவன் “உன் கன்னம் ரெண்டும் தக்காளி பழம் மாதிரி சிவந்து இருக்கு . ” என்றான்.

அவள் தன் புறங்கையால் கன்னத்தை தொட்டிய பார்த்தவள் “சும்மா   எதையாவது சொல்லாதீங்க.. ” என்று முகத்தை திருப்பிக் கொள்ள..

“சூப்பர் சார்.. உங்க ஸ்டெமினா வாய்ப்பே இல்ல.. எப்படி இவ்ளோ பாஸ்ட்டா.. எனெர்ஜெடிக்கா இருக்கீங்க.. கொஞ்சம் கூட டையர்ட் ஆகவே இல்லையே சார் நீங்க..  “என்று ஆர்வம் தாங்காமல் கேட்டாள்.

“நான் எனர்ஜெட்டிக்க்கா இருக்க காரணமே இவ தான் ” என்று மூச்சு வாங்க நின்றவன் அவன் அருகே நின்று இருந்த இளங்கிளியை பார்த்தான்.

அவளோ ராவண் என்ன சொல்கிறான் என்று புரிந்தவளாக அவனை வெட்கத்தோடு பார்க்க..

“இவ  தான் நான் கேக்கும் போது எல்லாம் … ஏன் எப்போ கேட்டாலும் எனக்கு எனர்ஜி ட்ரின்க் எனக்கு சளிக்காம தருவா ” என்றான்.

“வாவ் மாம்.. சூப்பர்… அப்படி என்ன ட்ரின்க் சாருக்கு கொடுக்கிறிங்க.. சொல்லுங்க நானும் ட்ரை பண்றேன்.. ” என்றாள் .

“அண்ணா எனக்கும் சொல்லேன் “என்றான் ராஜ்..

கயலோ ஒரு படி மேலே போய் “அக்கா.. சாருக்கு அப்படி என்ன ட்ரின்க் கொடுக்கிற.. எனக்கும் சொல்லேன். நானும் சாப்பிடறேன்..  ‘என்றாள்.

“ம்ம்ம் அதை உங்க சார்கிட்டேயே கேளு அவரே சொல்வாரு… ” என்று ராவணை முறைத்துவிட்டு ஜிம் அறையை விட்டு வெளியேறி இருந்தாள்.

அவள் கோபத்தோடு செல்வதை கண்டு சிரித்தபடி இளங்கிளியின் பின்னே சென்றான் அவளை சமாதானம் செய்ய..

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured