மூர்க்கன் 37
ஆபீஸில் இருந்து வீட்டுக்கு வரும் வழிநெடுகிலும் மித்ரா ஈஸ்வரின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டேதான் வந்தாள். பயம் அவளை விட்டு இன்னும் முழுமையாக நீங்கவில்லை.
வீட்டுக்கு வந்ததும், அவளுக்கு லேசாகத் தலைவலிப்பதாகச் சொன்னதால், ஈஸ்வர் அவளுக்குப் பிடித்தமான சூடான பாலைக் கொடுத்து, அவளது நெற்றியை மென்மையாக வருடி, அவளைப் படுக்கையில் படுக்க வைத்தான்.
அவன் சட்டையை இருக்க பற்றிய படியே படுத்தவள் “ஈஸ்வர் நீயும் படுத்துக்கோ.. எனக்கு பயமா இருக்கு” என்றாள்.
“சரி நானும் படுக்கறேன் , நீ தூங்கு ” என்று அவள் அருகே படுத்துக் கொண்டான்.
அவன் சட்டையை இறுக்கமாக பற்றி அவன் மார்பில் முகம் புதைத்து அவனோடு ஒன்றி படுத்துக்க கொண்டாள்.
அவள் முகத்தை ஏறிட்ட ஈஸ்வருக்கு அவளை இப்படிப் பார்க்கவே என்னவோ போல இருந்தது, எப்படி கம்பீரமாக இருந்தவள் இன்று குழந்தை போல தன்னை கட்டிக்கொண்டு தூங்குகிறாள் என்று இருந்தது அவனுக்கு.
பயத்தில் களைத்துப்போயிருந்த மித்ரா, ஈஸ்வரின் கை விரல்களைப் பிடித்தபடியே சில நிமிடங்களில் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றாள்.
அவள் தூங்கியதை உறுதி செய்துகொண்ட ஈஸ்வர், மெதுவாகத் தன் கையை விடுவித்துக்கொண்டு ரூமை விட்டு வெளியே வந்தான். ஹாலில் வந்து அமர்ந்தவனுக்குள் ஒரு குற்ற உணர்வும், தவிப்பும் உந்தித்தள்ளியது. இனிமேலும் இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் மறைப்பது சரியாக இருக்காது என்று அவனுக்குத் தோன்றியது. முக்கியமாக, தன் அம்மாவிடம் இதை உடனே சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தான்.
தன் மொபைலை எடுத்து அம்மாவுக்கு கால் செய்தான். மறுமுனையில் பெல் போய்க்கொண்டிருந்தபோது அவன் இதயம் படபடவென்று அடித்துக்கொண்டது.
“ஹலோ, ஈஸ்வர் சொல்லுப்பா… நல்லா இருக்கியா? ஆபீஸ் வேலை எல்லாம் எப்படிப்பா போகுது ” என்று எடுத்தவுடனேயே பாசத்தோடு கேட்டார் ஈஸ்வர் அம்மா பார்வதி.
ஈஸ்வரின் தொண்டையை ஏதோ அடைப்பது போலிருந்தது. அவனால் சட்டென்று பேச முடியவில்லை. ஒரு நிம்மதியற்ற பெருமூச்சை மட்டும் விட்டான்.
“ஈஸ்வர்… என்னப்பா ஆச்சு? ஏன் ஒரு மாதிரி மூச்சு வாங்குது? ஏதும் பிரச்சனையாப்பா?” என்று பதறினாள் அம்மா.
“அம்மா… அது வந்து…” என்று வார்த்தைகள் வராமல் தயங்கினான் ஈஸ்வர். “உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்மா” என்றான்.
“என்னப்பா சொல்ற? எனக்கு பயமா இருக்கு, சீக்கிரம் சொல்லு. உனக்கு ஏதும் உடம்பு சரியில்லையா?” என்றார் பார்வதி.
ஈஸ்வர் தன் கண்களை மூடிக்கொண்டு, நடந்த உண்மைகளை ஒவ்வொன்றாக, மிகுந்த தயக்கத்தோடும், வேதனையோடும் சொல்லத் தொடங்கினான். மித்ராவுக்கு விபத்து நடந்ததில் இருந்து, அவளுக்குப் பழைய நினைவுகள் அனைத்தும் மறந்து போனது வரை, அவளது தற்போதைய நிலைமையைப் பற்றி எல்லாவற்றையும் விவரித்தான். அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டதற்கான சூழ்நிலை பற்றியும் எடுத்துக் கூறினான். இன்று ஆபீஸில் அவளுக்குள் ஏற்பட்ட அந்தப் பயத்தையும், தவிப்பையும் கூட மறைக்காமல் சொன்னான்.
அவன் சொல்லி முடித்ததும், மறுமுனையில் பெருத்த மௌனம் நிலவியது. அடுத்த சில நொடிகளில் ஈஸ்வர் அம்மாவின் விம்மல் சத்தமும், அழுகை சத்தமும் போனில் கேட்டது.
“என் அண்ணன் மகள் வாழ்க்கைக்கு இப்படியொரு சோதனையா? என் பெத்த மகனை விட அவளைத்தானே நான் ஆசையா வளர்த்தேன். அவளுக்கா இந்த நிலைமை? பாவி மகளே, எவ்வளவு கஷ்டப்பட்டுட்டு இருக்காளோ!” என்று அழுதுகொண்டே வருந்தினார்.
“அம்மா… அழாதீங்கம்மா. நீங்க இப்படி அழுதா நான் என்ன பண்ணுவேன்? அவளுக்கு உடம்புக்கு வேற எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனா, என்னைத் தவிர வேற யாரையும் அவளால அடையாளம் கண்டுக்க முடியல. அவ மனசும் உடம்பும் ரொம்ப பலவீனமா இருக்கு,” என்றான் ஈஸ்வர் கவலையோடு.
அம்மா தன் அழுகையைக் கட்டுப்படுத்திக்கொண்டு, “ஈஸ்வர், அவளை நீ மட்டுமே தனியாப் பார்த்துக்கிறது ரொம்ப கஷ்டம்பா. நீ ஆபீஸுக்கும் போகணும், அவளையும் கவனிச்சுக்கணும். அது சரிப்பட்டு வராது. நான் உடனே அங்க கிளம்பி வர்றேன். நானே வந்து என் மருமகளை, என் அண்ணன் மகளைப் பத்திரமாப் பார்த்துக்கிறேன்,” என்றாள் உறுதியோடு.
“இப்போவே வர்றீங்களா அம்மா? வேலை எதுவும் இருக்கா?” என்றான் ஈஸ்வர்.
“வேலையாவது, ஒன்னாவது! மித்ராவை விட எனக்கு இங்க என்ன பெரிய வேலை? இன்னும் இரண்டு நாள்ல இங்க இருக்குற எல்லா வேலைகளையும் சீக்கிரமா முடிச்சுட்டு, நான் அங்க வந்துடுறேன். அதுவரைக்கும் மித்ராவை ரொம்ப கவனமாப் பார்த்துக்கோடா ஈஸ்வர். அவளோடு மனசு கஷ்டப்படுற மாதிரி எந்த விஷயத்தையும் பண்ணிடாதே. அவளுக்கு இப்போ உன் துணையும் , பாசமும் மட்டும்தான் வேணும்,” என்று உருக்கமாகச் சொன்னாள்.
“சரிம்மா… நான் அவளைக் பார்த்துக்கிறேன். நீங்க பார்த்துப் பத்திரமா கிளம்பி வாங்க,” என்று கூறிவிட்டு, ஒருவழியாகப் போனை வத்தான்.
போனை சோபாவில் போட்டுவிட்டு, ஈஸ்வர் தன் கைகளால் முகத்தைத் துடைத்துக் கொண்டான். பார்வதி வருவதாகச் சொன்னது அவனுக்குள் ஒரு பெரிய நிம்மதியைத் தந்தது. ‘அம்மா வந்துவிட்டால் மித்ராவுக்கு ஒரு தாயின் அரவணைப்பு கிடைக்கும், அவளது பயமும் குறையும்’ என்று நினைத்து நிமிர்ந்தான்.
ஆனால், அந்த நிம்மதி சில நொடிகள் கூட நீடிக்கவில்லை.
திடீரென்று மித்ராவின் அறையிலிருந்து ஒரு பயங்கரமான அலறல் சத்தம் கேட்டது.
“அம்மா…!!! அம்மா… எங்கே இருக்கீங்க… அம்மா…!!!” என்று மித்ரா அலறி அழுதுகொண்டே கத்தும் சத்தம் வீடு முழுக்க எதிரொலித்தது.
அந்தச் சத்தத்தைக் கேட்டதும் ஈஸ்வரின் இரத்தம் உறைந்து போனது போலிருந்தது. சோபாவில் இருந்து ஸ்பிரிங் போல எழும்பியவன், “மித்ரா…!!!” என்று கத்திக்கொண்டே அவளது அறையை நோக்கிப் பாய்ந்தான்.
அறைக்குள் நுழைந்தவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. தூங்கிக் கொண்டிருந்த மித்ரா, ஏதோ பயங்கரமான கனவைக் கண்டு திடுக்கிட்டு எழுந்து அமர்ந்திருந்தாள். அவளது கண்கள் அகல விரிந்து, முகம் முழுக்க பயத்தில் வேர்த்து விறுவிறுத்திருந்தது. படுக்கை விரிப்பைத் தன் கைகளால் சுருட்டிப் பிடித்துக்கொண்டு, “அம்மா… அம்மா…” என்று கதறி அழுதுகொண்டிருந்தாள்.
ஈஸ்வர் ஓடிப்போய் அவளருகே கட்டிலில் அமர்ந்து, அவளது தோள்களைப் பற்றினான். “மித்ரா… என்னாச்சுடி? என்னாச்சு?” என்று அவளைத் தன் பக்கம் திருப்பினான்.
மித்ரா அவன் முகத்தைப் பார்த்ததும், சட்டென்று அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவன் தோளில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள். அவள் அழுகை இன்னும் அதிகமானது. உடல் பயங்கரமாக நடுங்கியது.
“ஈஸ்வர்… அம்மா… அம்மா வந்தாங்க ஈஸ்வர்… ஆனா அவங்க முகம் எனக்குத் தெரியல. ஏதோ ஒரு இருட்டுக்குள்ள இருந்து என்னை கூப்பிட்டாங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்கு ஈஸ்வர். என்னை அந்த இருட்டுக்குள்ள இழுத்துட்டுப் போகப் பாக்குறாங்க… என்னை விட்டுடாதீங்க ஈஸ்வர்… என்னை விட்டுடாதீங்க!” என்று பயத்தில் உளறுவது போலக் கத்தினாள்.
அவள் கனவில் தன் அம்மாவை நினைத்துப் பயந்திருக்கிறாள் என்பதை ஈஸ்வர் புரிந்துகொண்டான். அவளது நினைவுகள் மாறினாலும், ‘அம்மா’ என்ற அந்தப் பாச உணர்வு அவளது அடிமனதில் ஏதோ ஒரு மூலையில் தவித்துக் கொண்டிருக்கிறது என்பதை அவன் உணர்ந்தான்.
“மித்ரா, இங்க பாருடி… அது வெறும் கனவுதான். யாரும் உன்னை இழுத்துட்டுப் போக மாட்டாங்க. உன் ஈஸ்வர் நான் இங்க இருக்கும்போது உன்னை யாராலயும் தொடக் கூட முடியாது,” என்று அவளது தலையைக் கோதி, அவளைத் தன் மார்போடு இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
“இல்ல ஈஸ்வர்… எனக்கு நிஜமாவே பயமா இருக்கு. என் அம்மா எங்கே? அவங்க ஏன் என் பக்கத்துல இல்ல?” என்று அழுதுகொண்டே அவனது சட்டையைக் கண்ணீரால் நனைத்தாள்.
ஈஸ்வர் அவளது முகத்தைத் தன் கைகளில் ஏந்தி, அவளது கண்களை நேராகப் பார்த்தான். “உன் அம்மா சென்னையில் இருக்காங்க மித்ரா, அவங்க சீக்கிரமாவே இங்க வந்துருவாங்க” என்றவன். என் அம்மா இன்னும் ரெண்டு நாள்ல இங்க வர்றாங்க மித்ரா. அவங்க வந்து உன்னை இதே மாதிரி ஆசையாப் பார்த்துப்பாங்க. அதுவரைக்கும் நான் இருக்கேன்ல? நான் உன்னைப் பார்த்துக்கிறேன்டி. அழாதே டி ,” என்று அவளது நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான்.
ஈஸ்வரின் வார்த்தைகளும், அவனது இதமான முத்தமும் அவளுக்குள் இருந்த அந்த இருட்டுப் பயத்தை மெல்ல மெல்ல விரட்டியடித்தது. அவனது அணைப்பில் இருந்த கதகதப்பு அவளது உடலின் நடுக்கத்தைக் குறைத்தது.
“நிஜமாவா ஈஸ்வர் சொல்ற? அம்மா வர்றாங்களா?” என்று கண்களைத் துடைத்துக் கொண்டே குழந்தை போலக் கேட்டாள்.
“ஆமாடி… நிஜமாத்தான் வர்றாங்க. இனிமே நீ பயப்படவே வேண்டாம். நான் உன் கூடவேதான் இருப்பேன்,” என்று அவளது கைகளைப் பிடித்துக்கொண்டு உறுதியளித்தான்.
அவன் தோளில் மெல்ல சாய்ந்தவள் அமைதியாக படுத்திருக்க.. அப்போது திடீர் என்று அவனை விட்டு விலகியவள் “ஈஸ்வர்… எனக்கு உடம்பெல்லாம் என்னவோ ஆகுது.. ” என்றாள் நெளிந்து கொண்டே..
“என்ன டி.. என்ன ஆச்சு?” என்றான் பதறிக்கொண்டு..
“தெரியல ஈஸ்வர்.. இங்க எல்லாம் என்னவோ செய்யுது” என்று தன மார்பை , அடிவயிற்றை தொட்டுக் காட்டினாள்
அவளுக்குள் எழும் அந்த விசித்திரமான, தீவிரமான உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் தவித்தாள்.
முன்பு அவளுக்குக் கொடுக்கப்பட்டிருந்த அந்த வீரியமிக்க போதை மருந்துகளின் பக்கவிளைவு , இன்று ஆபீஸில் ஏற்பட்ட பயம் மற்றும் தூக்கத்தில் கண்ட கொடூரமான கனவினால் ஏற்பட்ட ஹார்மோன் மாற்றங்கள் எல்லாம் சேர்ந்து, அவளது நரம்பு மண்டலத்தை மொத்தமாகக் குலைத்திருந்தது. உடல் வெப்பநிலை திடீரென அக்னிப் பிழம்பாய் ஏறியது. உடம்பெல்லாம் எரியத் தொடங்கியது.
அவளுக்குள் என்ன நடக்கிறது என்று புரியாமல் ஈஸ்வர் திகைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அந்த உடலின் அதீத வெப்பத்தைத் தாங்க முடியாமல், சட்டென்று எழுந்து தன் நைட் கௌனின் பட்டன்களைக் கழற்றி அதைக் கீழே நழுவவிட்டாள்.
ஈஸ்வர் அதிர்ச்சியில் உறைந்து போனான். “யேய் மித்ரா… என்னடி இது… என்ன பண்ற?” என்று பதறிப் போய் கத்தினான்.
“ஈஸ்வர்… எனக்கு என்னவோ பண்ணுது… உடம்பெல்லாம் சுடுது… எரியுது…” என்று அழுதுகொண்டே புலம்பினாள். அவளது கண்கள் காமத்தால் அல்ல, உடலின் புரியாத தவிப்பால் சொருகிக் கிடந்தன.
அவளை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் ஈஸ்வர் பதற்றத்தின் உச்சத்துக்கே சென்றான். அவளைத் தொடவும் முடியாமல், விலகவும் முடியாமல் அவன் தவித்த போது, மித்ராவே திடீரென அவனது டி-ஷர்ட்டைப் பிடித்துத் தன் பக்கமாக இழுத்தாள்.
தனக்கு இருக்கும் ஒரே பாதுகாப்பு, ஒரே ஆறுதல் இந்த மனிதன் மட்டும்தான் என்ற உள்ளுணர்வில், அவன் இதழ்களில் தன் இதழ்களை அழுத்தப் பதித்தாள்.
அந்தத் தீடீர் முத்தம் ஈஸ்வருக்குப் பேரதிர்ச்சியைத் தந்தது. ஆனால், அவளது இதழ்களின் வெப்பமும், அவளது உடலின் தவிப்பும் அடுத்த சில நொடிகளில் அவனது கட்டுப்பாட்டையும் உடைத்தது. அவளது நிலையை மறந்து, அவனும் அவளது முத்தத்திற்குத் தீவிரமாகப் பதிலளித்தான்.
முத்தம் தந்த சுகத்தில் மித்ராவின் அழுகை நின்றது. ஆனால், அதற்கு அடுத்து என்ன செய்வது என்று அந்தப் பேதைக்குத் தெரியவில்லை. அப்படியே அவன் மார்பில் சாய்ந்து மூச்சு வாங்கினாள்.
ஈஸ்வர் மெல்ல அவளை விலக்கி, அவளது ஆடைகளற்ற முழு உடலையும் பார்த்தான். ஒரு பெண்ணாக அவளது அழகும், அந்த நெருக்கமும் அவனுக்குள் இருந்த ஆண்மையைத் தூண்டியது. தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அவனது நெஞ்சு வேகமாக எழும்பி அடங்கியது. அவளது இடுப்பில் இருந்த அவனது கைகள் லேசாக நடுங்கின.
அவன் தன்னை ஒரு விசித்திரமான பார்வையோடு பார்ப்பதை மித்ரா கவனித்தாள். ஆரம்பத்தில் அவளுக்குத் தன்னை மறைக்கத் தோன்றவில்லை என்றாலும், ஈஸ்வரின் அந்தத் தீவிரமான பார்வை அவளது அடிமனதில் இருந்த பெண்மையைத் தட்டி எழுப்பியது. அவனது பார்வையின் தீட்சண்யத்தைத் தாங்க முடியாமல், அவளுக்குள் சட்டென்று ஒரு நாணமும் வெட்கமும் சுழன்றடித்தது.
“ஈஸ்வர்…” என்று முணுமுணுத்தபடியே, தன் கைகளால் மார்பை மூடிக்கொண்டு, வெட்கத்தில் முகம் சிவக்கத் தன் உடலை அப்படியே குறுக்கிக் கொண்டாள். நினைவுகள் அழிந்தாலும், அவளுக்குள் இருக்கும் ‘மித்ரா’ இன்னும் சாகவில்லை என்பதன் அடையாளம் அது.
அவளது அந்தப் வெட்கத்தைப் பார்த்ததும் தான் ஈஸ்வருக்குச் சுயநினைவே திரும்பியது. ‘அவள் தன் நிலையில் இல்லை, ஏதோ உடல் உபாதையால் தவிக்கிறாள். அவளது இந்த நிலையைப் பயன்படுத்திக் கொள்வது தர்மம் இல்லை’ என்று அவனது மனசாட்சி அவனைக் குத்தியது.
சட்டென்று தன் உணர்ச்சிகளுக்கு அணை போட்டவன், அருகில் கிடந்த போர்வையை எடுத்து அவளது உடல் முழுக்கப் போர்த்தி அவளை அணைத்துக் கொண்டான்.
“மித்ரா… ஒன்னும் இல்லடி… பயப்படாதே…” என்று அவளது நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான். அவனது பாதுகாப்பான அணைப்பும், போர்வையின் கதகதப்பும் அவளது உடலின் நடுக்கத்தை மெல்ல மெல்லக் குறைத்தது.
அவளது தலைமுடியைக் கோதிக்கொண்டே, “இப்போ உடம்பு பரவாயில்லையாடி?” என்றான் மெதுவாக.
அவள் அவனது நெஞ்சில் முகம் புதைத்து, “ம்ம்… ” என்றவள் “ஆனா ரொம்ப அசதியா இருக்கு.. இன்னும் என்னவோ செய்யுது ஈஸ்வர்” என்றாள் கண்கள் சொருகியபடி.
“அப்படியே தூங்குடி…” என்று அவளைத் தட்டிக் கொடுத்துக்கொண்டே, தன் மொபைலை எடுத்து, சைலண்ட் மோடில் போட்டுவிட்டு அவளது குடும்ப டாக்டருக்கு மெசேஜ் அனுப்பினான் ‘டாக்டர், மித்ராவுக்கு உடம்பில் திடீரென அதீத வெப்பமும்,உணர்வுகளும் கட்டுக்கடங்காமல் தோன்றுகிறது , எனக்கு அவளை நினைக்க பயமா இருக்கு . காலையில் உங்களைச் பார்க்க வரேன் .’
போனை வைத்துவிட்டு, தன் மார்பில் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த மித்ராவைப் பார்த்தான். அவளை இன்னும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற உறுதி அவனுக்குள் கூடியது.
.
