Home Uncategorizedஎன் உடம்பெல்லாம் ஏதோ பண்ணுதுடா… மூர்க்கன் 43

என் உடம்பெல்லாம் ஏதோ பண்ணுதுடா… மூர்க்கன் 43

by Sinamika Writes
8 views

மூர்க்கன் 43

“மித்து! என்னடா இது? இன்னும் தூங்காம முழிச்சிட்டு இருக்க?” என்று பதற்றமும் பாசமும் கலந்த குரலில் கேட்டபடி அவளருகே வந்தான்.

அவனைக் கண்டதும் அதுவரை இருந்த  சோர்ந்து போயிருந்த அவள் முகம் பிரகாசம் ஆனது. சட்டென எழுந்த மித்ரா, ஓடிச் சென்று அவன் இடுப்பை இறுக்கமாகக் கட்டிக் கொண்டாள். “நீ வரலன்னு எனக்குத் தூக்கமே வரல ஈஸ்வர்… ஏன் இவ்வளவு லேட்டு?” என்று அவன் மார்பில் முகம் புதைத்துச் சிணுங்கினாள்.

அவளைத் தன் ஒற்றைக் கையால் அணைத்துக் கொண்டவன், தன் தாயைப் பார்த்து, “அம்மா, நீங்களுமா இன்னும் தூங்கல?” என்றான்.

“நீ வராம இவ தூங்க மாட்டேன்னு அடம் பிடிச்சாடா. சரி,  சாப்பிட்டுத் தூங்குங்க. நான் உங்களுக்குச் சாப்பாடு எல்லாம் எடுத்து  வச்சிருக்கேன். எனக்கு உடம்பு கொஞ்சம் அசதியா இருக்கு, மாத்திரை போட்டுட்டு நான் என் ரூமுக்குத் தூங்கப் போறேன்” என்று கூறிய பார்வதி, இருவரையும் அர்த்தமுள்ள ஒரு பார்வை பார்த்துவிட்டுத் தன் அறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டார்.

ஈஸ்வர் மெல்ல மித்ராவைத் தன் பிடியிலிருந்து விடுவித்து, அவளது முகத்தை நிமிர்த்தினான். “மித்து, ரொம்ப பசிக்குதாடா? வா… நான் உனக்குச் சாப்பாடு ஊட்டி விடுறேன்” என்றான் அவளது கன்னத்தை மென்மையாகத் தட்டி.

மித்ரா அவனை அண்ணாந்து பார்த்தபடி, “இல்ல ஈஸ்வர்… எனக்கு அத்தை  ஊட்டி விட்டாங்க. நான் நல்லா சாப்பிட்டுட்டேன். அப்புறம் கொஞ்ச நேரம் டிவியும் பார்த்தேன். நீ சாப்பிடலல்ல? நீ உக்காரு, நான் பக்கத்துல இருக்குறேன், நீ சாப்பிடு” என்றாள் மிகவும் சமத்தாக.

அவள் சொன்னதைக் கேட்டதும் ஈஸ்வருக்குள் ஒருபுறம் ஏமாற்றமும், மறுபுறம் அளவற்ற மகிழ்ச்சியும் உண்டானது. தினமும் அவளுக்குத் தன் கைகளால் ஊட்டி விடுவதில் அவனுக்குக் கிடைக்கும் அந்த ஆத்மார்த்தமான திருப்தி இன்று கிடைக்கவில்லை என்ற சிறு வருத்தம் இருந்தாலும், தன் தாய் மித்ராவைத் தன் சொந்த மகள் போல் கவனித்துக் கொள்வதைக் கண்டு அவன் உள்ளம் குளிர்ந்தது.

“அப்படியா… என் அம்மா உனக்கு நல்லா ஊட்டி விட்டாங்களா? சரி, நீ என் பக்கத்துல உக்காரு” என்று அவளைத் தன் அருகில் நாற்காலியில் அமர வைத்தவன், தனக்கான உணவைப் பரிமாறிக்கொண்டு சாப்பிடத் தொடங்கினான்.

எப்போதும் ஈஸ்வர் அருகில் இருந்தால் மித்ரா ஓயாமல் எதையாவது பேசிக் கொண்டே இருப்பாள். “ஈஸ்வர் அது என்ன?”, “ஈஸ்வர் இது ஏன் இப்படி இருக்கு?” என்று அவளது கேள்விக் கணைகள் ஓயாது. ஆனால், இன்று அவளிடம் ஒரு விசித்திரமான அமைதி குடிகொண்டிருந்தது. எதையோ ஆழமாக யோசித்துக் கொண்டிருப்பவள் போல, தன் விரல்களை ஒன்றோடொன்று பிணைத்துக் கொண்டு தரையையே பார்த்துக் கொண்டிருந்தாள். 

இடைக்கிடையே திருட்டுத்தனமாக ஈஸ்வரின் உதடுகளையும் அவனது அகன்ற மார்பையும் பார்த்துவிட்டு, அவன் பார்க்கிறான் என்று தெரிந்ததும் சட்டெனத் தலையைக் குனிந்து கொண்டாள்.

அவளது இந்த மாற்றத்தை ஈஸ்வர் கவனிக்காமல் இல்லை. ‘இவளுக்கு என்னாச்சு? ஏன் ஒரு மாதிரியா இருக்கா? உடம்பு எதுவும் சரியில்லையா?’ என்று அவனுக்குள் கேள்விகள் எழுந்தாலும், அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை அவளிடம் அதைப் பற்றிக் கேட்கவில்லை.

சாப்பிட்டு முடித்து, தட்டுகளைச் சுத்தம் செய்துவிட்டு வந்தவன், மித்ராவிடம் அவளது இரவு நேர மாத்திரைகளை நீட்டினான். 

“இந்தா மித்து, இந்த மாத்திரையைச் சாப்பிடு” என்றான். 

அவளும் மறுப்பு ஏதும் சொல்லாமல் அதை வாங்கி விழுங்கிவிட்டுத் தண்ணீரைத் குடித்தாள்.

“சரி, ரூமுக்குப் போலாமா? தூக்கம் வருதா?” என்று ஈஸ்வர் கேட்க, அவளோ “ம்ம்…” என்று மட்டும் சுருக்கமாகத் தலையாட்டிவிட்டு, வழக்கம் போல் அவனது சட்டையின் ஓரத்தை தன் சிறு விரல்களால் இறுக்கமாகப் பற்றிக் கொண்டு அவன் பின்னாடியே அறைக்குள் நடந்தாள்.

அறைக்குள் நுழைந்ததும் ஈஸ்வர் தன் சோர்வை நீக்கிக் கொள்ள நினைத்தான். “மித்து, நீ 

 படுத்துக்கோ.  வெளில போயிட்டு வந்ததுனால ரொம்ப வேர்வையா இருக்கு. அப்படியே குளிச்சிட்டு டிரஸ் மாத்திட்டு வந்துடுறேன்” என்று கூறிவிட்டு, பக்கத்து அறையில் இருக்கும் பாத்ரூமுக்குச் சென்றான். 

இது வழக்கமான ஒன்று தான், அவள் முன் தான் வெற்று மேனியில் சுற்றுவது அவளை எதுவும் பதித்து விடக்கூடாது என்று கவனமாக இருந்தான் ஈஸ்வர்.

துண்டை மட்டும் எடுத்துக்கொண்டு அவன் குளியலறைக்குள் நுழைந்தான்.

குளிர்ந்த நீர் அவன் உடலின் களைப்பை மெல்ல மெல்ல நீக்கிக் கொண்டிருந்தது. ஆனால், அவன் மனதிற்குள் மித்ராவின் அந்த அமைதியான முகமே வந்து சென்றது. அவள் பார்வையும், பேச்சும். இன்று சரி இல்லை என்று அவனுக்குத் தோன்றியது.

திடீரென… அந்த அமைதியான இரவைக் கிழித்துக் கொண்டு, ஈஸ்வரின் அறைப் பக்கமிருந்து ஒரு பயங்கரமான அலறல் சத்தம் கேட்டது!

“ஈஸ்வர்ர்ர்!… ஈஸ்வர்ர்ர்!… எங்க இருக்க?… எனக்குப் பயமா இருக்கு!… ஈஸ்வர்ர்ர்!” என்று மித்ராவின் மரண ஓலம் போன்ற அந்த அலறல் சத்தம் கேட்டு, ஷவரின் கீழே நின்றிருந்த ஈஸ்வர் பதறிப் போனான். 

நெஞ்சில் ஏதோ இடி விழுந்தது போல் ஒரு பயம் அவனுக்குள் தொற்றிக் கொண்டது. உடம்பில் இருந்த தண்ணீரைத் துடைக்கக் கூட அவனுக்குத் தோன்றவில்லை.   துண்டை மட்டும் எடுத்து இறுக்கிக் கட்டிக் கொண்டு, ஈர உடம்போடு,  தன் அறையை நோக்கிப் பாய்ந்து ஓடி வந்தான்.

மித்ராவின் அலறல் சத்தம் பார்வதிக்கு மாத்திரையின் வீரியத்தால் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததால் கேட்கவில்லை.

ஈஸ்வர் தன் அறைக்குள் வந்து பார்த்த போது, அங்கே மித்ராவைக் காணவில்லை. ஆனால், அவளது அலறல் சத்தம் அந்த அறையின் அட்டாச்ட் பாத்ரூமிற்குள் இருந்து கேட்டுக் கொண்டே இருந்தது. 

பாத்ரூம் கதவு பாதி திறந்திருந்தது.

“மித்து! என்னாச்சுடா?” என்று கத்திக்கொண்டே ஈஸ்வர் பாத்ரூமிற்குள் நுழைந்தான்.

அங்கே அவன் கண்ட காட்சி அவனது இதயத்தை ஒரு நொடி  நிறுத்தி இருந்தது.

அங்கே பாத்ரூமின் ஷவர் முழு வேகத்தில் திறந்துவிடப்பட்டிருந்தது. அதிலிருந்து கொட்டும் குளிர்ந்த நீரில், தன் உடம்பில் ஒட்டுத் துணி கூட இல்லாமல், ஆடைகளின்றி, வெற்றுக் கோலத்தில் மித்ரா சுருண்டு அமர்ந்திருந்தாள். 

தன் இரு கால்களையும் மார்போடு அணைத்துக் கொண்டு, தலையை முழங்கால்களுக்குள் புதைத்தபடி, உடல் நடுங்க  அழுது கொண்டிருந்தாள். 

ஷவர் நீர் அவளது உடலை நனைத்துத் தெறித்துக் கொண்டிருந்தது.

“மித்து! என்னடா இது… என்ன பண்ற இங்க?” என்று ஈஸ்வர் பதறிக்கொண்டு அவளருகே சென்றான். 

அவளை மீண்டும் இப்படி ஒரு கோலத்தில், தன் நினைவிழந்த நிலையில்  அழுது கொண்டிருப்பதைப் பார்த்ததும் அவனுக்குள் எல்லையற்ற தவிப்பும் வேதனையும் உண்டானது. அவன் கைகள் அவளைத் தொடத் தயங்கி நடுங்கின.

ஈஸ்வரின் குரல் கேட்டதும், மித்ரா சட்டெனத் தன் தலையை நிமிர்த்தினாள். அவளது கண்கள் பயத்தாலும், அழுகையாலும் சிவந்திருந்தன. ஷவர் தண்ணீர் அவளது முகத்தில் வழிந்து கொண்டிருந்தது.

“ஈஸ்வர்!… என் உடம்பெல்லாம் ஏதோ பண்ணுதுடா… எனக்கு ஏதோ எரியுற மாதிரி இருக்கு… உள்ளுக்குள்ள என்னவோ பண்ணுது… எனக்குப் பயமா இருக்கு ஈஸ்வர்!” என்று கத்திக்கொண்டே, சட்டென எழுந்து வந்து ஈஸ்வரை இறுக்கமாகக் கட்டிக் கொண்டான்.

ஈஸ்வர் வெறும் துண்டுடன் மட்டுமே நின்றிருந்தான். ஆடையற்ற அவளது வெற்றுத் தேகம், அவனது அகன்ற, ஈரமான வெற்று மார்பில் வந்து முழுமையாக மோதி அணைத்துக் கொண்ட அந்த நொடி… 

இருவருக்குள்ளும் ஒரு மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது.

மித்ரா அவனது கழுத்தைக் கட்டிக் கொண்டு, தன் முகத்தை அவனது கழுத்து வளைவுக்குள் புதைத்துக் கொண்டு விசும்பி விசும்பி அழுதாள். 

அவள் உடலின் வெப்பமும், அந்த 

தொடுகையும் ஈஸ்வரின் நரம்புகளுக்குள் ஒரு சூடான உணர்வையும்,கட்டுக்கடங்காத தவிப்பை ஏற்படுத்தியது. அவனது ஆண்மை அவனுக்குள் தலைதூக்க முயன்றது.

அவள் மார்பகங்கள் அவனது நெஞ்சில் அழுந்திக் கொண்டிருக்க, அவளது மென்மையான உடலின் ஒவ்வொரு பாகமும் அவனது ஈர உடம்போடு உரசிக் கொண்டிருந்தது. 

ஈஸ்வருக்கு அது ஒரு இன்ப அவஸ்தையாக மாறியது. ஒருபுறம் அவளை நினைத்து அவனுக்குள் இருந்த பரிதாபமும் வருத்தமும், மறுபுறம் அவளது இந்த வெற்று மேனியின் நெருக்கத்தால் அவனுக்குள் கிளர்ந்தெழுந்த தீவிரமான  உணர்வும் அவனை நிலைகுலையச் செய்தன.

“மித்து… ப்ளீஸ்… கையை விடு… நீ டிரஸ் இல்லாம இருக்க… விடு” என்று அவனது குரல் தழுதழுத்தது.

 தன் உணர்வுகளுக்குக் கடிவாளம் போட அவன் கடுமையாகப் போராடினான். அவளைத் தள்ளி வைக்க அவனது கைகள் முயன்றன, ஆனால் அவளது உடலின்  ஈர்ப்பு அவனைக் கட்டிப் போட்டது.

“மாட்டேன்! நான் உன்னை விட மாட்டேன்! எனக்கு என்னவோ பண்ணுது ஈஸ்வர்… எனக்குள்ள என்னவோ ஆகுது… என்னை விட்றாத ஈஸ்வர்!” என்று அவள் பித்து பிடித்தவள் போல் உளறினாள்.

ஈஸ்வருக்கு புரிந்து போனது. அவள் உடலில் ஏற்படும் அந்த மாற்றம் ஏற்கனவே அவளுக்கு வந்தது போலவே மீண்டும் வந்திருக்கிறது என்று. 

அதன் விளைவுதான், அவளுக்குள் ஏற்பட்ட அந்த உணர்வை எரியும் உணர்வாக நினைத்து, பயந்து போய் அதைத் தணிக்க ஷவர் நீருக்குள் வந்து நின்றிருக்கிறாள்.

அவளது அறியாமையை நினைத்து அவனுக்கு அழுகை வந்தது. அதே சமயம், தன் கழுத்தில் முகம் புதைத்து, தன் உடலோடு உருகிக் கொண்டிருக்கும் அவளது அந்தப் பெண்மையின் வாசமும், 

தன் மீது உரசிக்கொண்டு நடுங்கும் அவளது உடலின் ஸ்பரிசமும் அவனது கட்டுப்பாட்டை மொத்தமாக உடைத்தன.

அந்த ஷவர் நீரின் கீழே, அவளோடு சேர்ந்து ஈஸ்வரும் நனையத் தொடங்கினான். கொட்டும் தண்ணீர் இருவரின் உடலையும் நனைத்தாலும், அவர்களுக்குள் மூண்டிருந்த அந்த உடலின் தகிப்பை, அந்த  தீயைத் தணிக்க அந்த ஷவர் தண்ணீர் போதவில்லை.

ஈஸ்வரின் மூச்சுக்காற்று சூடாக அவளது காதோரம் உரசியது. அவளது கைகள் அவனது முதுகில் தன் நகங்களைப் பதித்தன. அவளைச் சமாதானம் செய்ய முயன்ற ஈஸ்வர், அவளது உடலின் தீவிரமான அணைப்பில் மொத்தமாகத் தோற்றுப் போனான். 

இனி அவளைத் தள்ளி வைக்க அவனால் முடியாது என்ற நிலை வந்த போது, அவளது முகத்தைத் தன் கைகளில் ஏந்தினான்.

அவளது இதழ்கள் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தன. அவளது கண்களில் இன்னும் அந்தத் தவிப்பின் நீர் திவலைகள் மினுமினுத்தன. அவளது அந்தத் தவிப்பைத் தீர்க்கவும், தனக்குள் இருக்கும்  வேட்கையை அடக்கவும் வேறு வழி தெரியாதவன் போல, ஈஸ்வர் தன் முகத்தை அவளருகே கொண்டு சென்றான்.

அவள் நடுக்கத்தை நிறுத்தும் பொருட்டு, அவளது இதழ்களைத் தன் இதழ்களுக்குள் இழுத்து வைத்து, மிகவும் ஆழமாகவும் அழுத்தமாகவும் முத்தமிடத் தொடங்கினான்! அந்த ஈரமான குளியலறையில், கொட்டும் நீரின் சத்தத்திற்கு நடுவே, இரு உடல்களும் ஒன்றோடொன்று  உரசி மேலும் உணர்வுகளை தூண்டிவிட செய்தது.

கட்டிலின் மெத்தையில் மித்ராவை கிடத்தியிருந்த ஈஸ்வர், அவள் மீது தன் பார்வையை ஆழமாய் பதித்தபடி அவளையே உற்றுப் பார்த்தான்.

சற்று முன்பு வரை உடலில் ஏற்பட்ட ஏதோ ஒரு தவிப்பால், பிடிவாதம் பிடித்த மித்ராவுக்கு, இப்போது ஈஸ்வரின் இந்த ஆழமான, காதல் நிறைந்த நேரடிப் பார்வையைப் பார்த்ததும் சட்டென்று ஒரு தயக்கமும் கூச்சமும் தொற்றிக்கொண்டது. அவளது உள்ளங்கைகள் லேசாக வியர்த்தன.

“ஈஸ்வர்… ஏன் அப்படி பார்க்குற?” என்று தழுதழுத்த குரலில் கேட்டவள், அவனது பார்வையின் வீச்சு தாங்காமல் தன் முகத்தை அப்படியே பக்கவாட்டில் திருப்பிக் கொண்டாள். அவளது கன்னங்கள் சட்டென்று வெட்கத்தால் சிவந்து போயின.

அவளது இந்தத் திடீர் வெட்கத்தையும் கூச்சத்தையும் பார்த்த ஈஸ்வருக்குள் காதல் அலைமோதியது. அவளது முகத்தை மென்மையாகத் தன் கைகளில் ஏந்தியவன், “ஏன் மித்து, இப்போ மட்டும் எங்கேயோ பார்க்குற? முதல்ல என்னென்னவோ பேசி என்னை இம்சை பண்ணிட்டு, இப்போ கூச்சப்படுறியா?” என்று அவளது காதோரம் குனிந்து மெல்லிய குரலில் கேட்டு அவளை வம்புக்கு இழுத்தான்.

“போடா…” என்று வெட்கத்தில் இன்னும் சுருங்கியவள், தன் கைகளால் அவனது மார்பைத் தள்ளிவிட்டு முகத்தை மறைக்க முயன்றாள்.

அவளது அந்த அழகு வெட்கத்தை அணு அணுவாக ரசித்தான் ஈஸ்வர். இனி அவளுக்குள் இருக்கும் தயக்கத்தை உடைக்க வேண்டும் என்று முடிவு செய்தவன், அவளைத் தன் காதலால் முழுமையாக ஆட்கொள்ளத் தொடங்கினான்.

முதலில் அவளது நெற்றியில் தன் இதழ்களை அழுத்திப் பதித்தான். அங்கிருந்து மெல்லக் கீழே இறங்கி, கூச்சத்தில் மூடியிருந்த அவளது இமைகளின் மீது தன் மென்மையான முத்தங்களை வைத்தான். அவனது இதழ்களின் ஸ்பரிசம் பட்டதும் மித்ரா “ஈஸ்வர்…” என்று முனகியபடி அவனது தோள்களை இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள்.

அவளது சிணுங்கலை ரசித்தபடியே அவளது மூக்கு நுனியை மென்மையாக வருடியவன், அடுத்து அவளது சிவந்த கன்னங்களில் தன் முகத்தைப் புதைத்தான். அவளது கன்னங்களின் மென்மையை தன் இதழ்களால் வருடி அவளது வெட்கத்தை ரசித்தான். ஈஸ்வரின் இந்தத் தொடர்ச்சியான அன்பான தீண்டல்களில் மித்ராவுக்குள் இருந்த கூச்சம் மெல்ல மெல்ல மறைந்து, அவனிடமிருந்த பாசம் அவளை முழுமையாக ஆட்கொள்ளத் தொடங்கியது.

“மித்து… நீ அவ்ளோ அழகா இருக்கடி…” என்று காதலோடு கூறியவன், அவளது இதழ்களுக்குத் தாவினான். இந்த முறை அவளது இதழ்களை அவசரமில்லாமல், தன் மொத்த காதலையும் உணர்த்தும் விதமாக ஆழமாக முத்தமிட்டான். அவனது அன்பின் ஆதிக்கம் அவளை மெய்மறக்கச் செய்ய, மித்ராவும் தன் வெட்கத்தை மறந்து அவனது முத்தத்திற்கு முழுமையாக ஒத்துழைத்தாள்.

அங்கிருந்து அவனது முத்தப் பயணம் அவளது கழுத்துச் சரிவுக்கு நகர்ந்தது. அவளது கழுத்துச் சரிவில் தன் முகத்தை உரசிக் கொண்டே, அங்கிருந்த மென்மையான சருமத்தில் தன் அன்பை முத்திரையிட்டான். “ஈஸ்வர்…” என்று மித்ரா சுகமான தவிப்போடு அவனது தோள்களில் தன் கைகளை இன்னும் இறுக்கிக் கொண்டாள்.

அவளது உடலின் ஒவ்வொரு அசைவையும், அவளது மெல்லிய முனகலையும் தன் காதலுக்குக் கிடைத்த வெற்றியாக ரசித்துக் கொண்டே அவளைத் தன் கரங்களால் அரவணைத்துக் கொண்டான். அவளது கைகளைத் தன் கைகளோடு கோர்த்து, அவளது அருகாமையை முழுமையாக உணர்ந்து சுவைத்தான்.

அவளது வெட்கம் முழுமையாகக் கரைந்து போக, அவளது தவிப்பைத் தீர்க்கும் விதமாக ஈஸ்வர் அவளோடு ஓருயிராய், ஈருடலாய் முழுமையாக ஒன்றிணைந்தான். அந்தப் படுக்கையறை இருவரின் ஆழமான காதல் மூச்சுக் காற்றால் நிறைந்திருந்தது.

அடுத்த எபி ரொமான்ஸ் அள்ளும் படிக்க விருப்பம் உள்ளவங்க படிக்கலாம்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured