News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

தப்புத் தண்டா காதல் 7

by Sinamika Writes
1.9K views
A+A-
Reset

EPISODE 7

டைனிங் டேபிளில் அனைவரும் அமர்ந்து இருக்க.. பூவிழியும் , கஸ்தூரியும் ஓடி ஓடி சமைத்த உணவை டேபிளில் எல்லோருக்கும் பரிமாறிக்கொண்டிருந்தனர்.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

தன் அப்பாவின் அருகே அமர்ந்து இருந்த யுகேந்திரனின் கவனம் முழுவதும் பூவிழியின் மீது தான் இருந்தது. அவள் ஆறு மாத வயிற்றை சுமந்து கொண்டு வேலை செய்வதைப் பார்க்க அவனுக்கு கஷ்டமாக இருந்தது.

தன் அக்கறையை தன் அப்பாவின் முன்னோ.. இல்லை மற்றவர்கள் முன்னோ காட்டிவிடக் கூடாது என்று அமைதியாக அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

அதற்கு காரணமும் இருந்தது, தன் குழந்தையை சுமக்கும் பூவிழிக்கு குழந்தையைப் பெற்றுத் தர மட்டுமே அந்த வீட்டில் அவளுக்கு உரிமை இருக்கிறது. குழந்தை பிறந்ததும் அதை இந்த குடும்பத்திடம் ஒப்படைத்துவிட்டு அவள் இந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டும்.

அந்த ரகசியம் யுகேந்திரனுக்குத் தெரியவே கூடாது என்று அவளிடம் சத்தியம் வாங்கி இருந்தார் ராஜேந்திரன். ஆனால் பூவிழியை மிரட்டி அவளை தனக்கு எதற்காக இவ்வளவு அவசரமாக திருமணம் செய்து வைத்தார் என்ற விஷயத்தை  திருமணமான அன்று இரவே பூவிழியை மிரட்டி உருட்டி உண்மையை தெரிந்து கொண்டான்.

தனக்கு தெரிந்த உண்மையை வெளிகாட்டிக்கொள்ளாமல் இன்று வரை அவன் இருக்கிறான். அதற்கு காரணம் தன் தந்தையின் செயல் தான். எதற்காக அவர் இப்படி ஒரு காரியத்தை செய்ய வேண்டும்., தன் திருமணத்திற்கும் தனக்கு பிறக்கும் வாரிசிற்கும் இவ்வளவு முக்கியத்துவம் அவர் கொடுக்க வேண்டும் என்றாள் தனக்கு உண்மையாகவே பூவிழியையோ அல்லது வேறு ஒரு பெண்ணையோ முறையாக திருமணம் செய்து வைத்திருக்கலாமே.. ஆனால் யாருக்கும் தெரியாமல் அவளை தனக்கு திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொடுப்பது மட்டுமே அவள் வேலை என்று அவள் அம்மாவை கடத்தி வைத்து இன்று வரை அவளை மிரட்டிக்கொண்டிருக்கிறாரே.. அது தான் அவனுக்கு ஏன் என்று விளங்கவில்லை. அதற்கான காரணமும் அவனுக்கு இன்று வரை புரியவில்லை.  அதனாலேயே தன்னால் நடக்க முடியும் என்ற விஷயத்தைக் கூட யாரிடமும் சொல்லாமல் மறைத்து இருந்தான்.

“ஏய் பூவிழி, அந்த சட்னியை எடு.. ” என்று பர்வதம் அதிகாரம் செய்தார்.

“இதோமா… ” என்று அவள் சட்னியை எடுத்துக்கொண்டு பர்வதத்திடம் செல்லப்போக..

“பூவிழி எனக்கு இட்லி வை ” என்று ராஜேந்திரன் அவளை அழைத்தார்.

“இதோ கொண்டு வரேன் சார்” என்று சட்னியை அவசர அவசரமாக பர்வதத்திற்கு ஊற்றிவிட்டு இட்லியை எடுக்கப் போக..

அவள் ஊற்றிய சட்னி அவர் கையில் சிந்திவிட்டது.

“ஏய்! அறிவு இருக்கா உனக்கு.. இப்படி தான் மேல சிந்துவியா.. ” என்று அவளை திட்டிக்கொண்டே டிஸ்ஸு கொண்டு தன் கையில் இருந்த சட்னியை துடைத்தார்.

“ஐயோ! நான் பாக்கலம்மா ” என்றவள் பதற்றத்தோடு அவரைப் பார்க்க..

“சரி சரி என் அண்ணா இட்லி கேட்டாரு இல்ல. .அவருக்கு பரிமாறு போ… என் மூஞ்சியை ஏன் பாத்துட்டு இருக்க ?” என்றார் அவர்.

“ஆஹ்! சரிங்க அம்மா ” என்றவள் இட்லியை எடுத்துக்கொண்டு போய் ராஜேந்திரன் தட்டில் வைத்தாள்.

“அப்படியே அந்த சட்னியை ஊத்து “என்றார்.

கையில் இருந்த ஹாட் பாக்ஸை கீழே வைத்துவிட்டு பர்வதத்திடம் இருந்த சட்னியை எடுக்கப் போனாள். “பூவிழி நான் கொண்டு வரேன், நீ இரு.. ” என்று கஸ்தூரி சட்னியை எடுத்துக்கொண்டு ராஜேந்திரனுக்கு வந்து ஊற்றினார்,

இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த யுகேந்திரன் ஒரு பெருமூச்சை மட்டுமே விட முடிந்தது. பூவிழியை ஆளாளுக்கு அவர்கள் இஷ்டத்திற்கு ஆட்டிப்படைப்பதை பார்த்துக் கொண்டு அவனால் அமைதியாக மட்டுமே இருக்க முடிந்தது.

இதற்கு சீக்கிரமே ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது.

“அண்ணா! நம்ம ஆரா படிப்பை முடிச்சிட்டு வந்துட்டா. அவளுக்கு நம்ம ஆபீஸ்ல நம்ம யுகேனுக்கு கீழ எதுவும் வேலை இருந்தா அவளுக்கு கொடுக்கலாமே.. ” என்றார் பர்வதம்.

“அம்மா! இப்போதான் படிப்பு முடிஞ்சு வந்திருக்கேன். அதுக்குள்ள நான் வேலைக்குப் போகணுமா?” என்று சிணுங்கினாள் ஆராதனா,

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“ஆமா பர்வதம் எதுக்காக அவளை இப்பவே வேளைக்கு அனுப்பணும்னு நீ நினைக்குற.. கொஞ்ச நாள் அவ நினைச்சதை செஞ்சுட்டு சந்தோசமா இருக்கட்டுமே.. ” என்றார் கார்த்திகேயன்.

“நீங்க சும்மா இருங்க. இவளை இப்படியே விட்டா அப்பறோம் சொல் பேச்சுக் கேக்காம சுத்திகிட்டு இருப்பா.. படிச்ச படிப்பு வீணாகிரும்” என்று தன் கணவனை அதட்டி அமைதிப் படுத்தினார்.

“மாமா அத்தை சொல்றதும் சரி தானே.. ஆரா எனக்கு கீழயே வேலை பார்க்கட்டும்., முதல்ல சின்ன சின்ன வேலைகளை அவ கத்துக்கட்டும். அப்பறோம் அவளோட படிப்புக்கு ஏற்ற வேலையை செய்யட்டுமே..” என்று யுகேந்திரன் கூற.

“பாத்திங்களா.. என் அண்ணன் பையன் சொல்றதை நல்லா கேட்டுக்கோங்க” என்றவர் “எப்போ இருந்து ஆராதனாவை வேளைக்கு அனுப்படும் யுகேன் ” என்றார்.

“யுகி மாமா.. ப்ளீஸ் அடலீஸ்ட் எனக்கு ஒரு வீக் அச்சும் பிரீ ஆஹ் இருக்கனும், நாளைக்கே வேலைக்கு வான்னு சொல்லாதீங்க” என்று ஆரா அவன் கையை பற்றிக்கொண்டு கெஞ்ச.

அவளைப் பார்த்து மென் புன்னகை செய்தவன் “ம்ஹும்.. ஓகே டேக் யுவர் ஓன் டைம் . ஆனா சீக்கிரமா ஜாயின் பண்ணிரனும்” என்றவனுக்கு ஒரு யோசனை அப்போது தோன்றியது.

“டேட்! நான் கொஞ்ச நாள் கேரளாவுல இருக்க நம்ம ரப்பர் எஸ்டேட்ல கொஞ்ச நாள் இருந்து , அங்க டிரீட்மென்ட் எடுக்கலாம்னு நினைக்குறேன். அதனால நாளைக்கே நான் அங்க போலாம்னு நினைக்கிறேன் , நம்ம ஆராதனாவையும் என்கூட கூட்டிட்டுப் போலாம்னு நினைக்குறேன். அவ அங்க வந்தா எனக்கு கொஞ்சம் ஹெல்ப்புல்லா இருக்கும். என்னோட எல்லா வேலையும் அவளே பாத்துக்கட்டும் ” என்றான்.

“மாமா!.. இப்போதான் டேக் யுவர் டைம்னு சொன்னிங்க.. ஆனா இப்போ என்னடான்னா நாளைக்கே நான் உங்க கூட ஒர்க் பண்ண வரணும்னு சொல்றிங்க. 

என்றாள் ஏமாற்றம் அடைந்தவளாக.

“ஆபீஸ் ஒர்க் இங்க வந்து பார்த்துக்கலாம் ஆரா. அங்க என்னோட பர்சனல் ஒர்க்ஸ் எல்லாம் நீ பாத்துக்க.. எனக்கு டிரீட்மென்ட் நடக்குற சமயம் எனக்கு வேணும்ங்குறதை செய்யணும், சமைச்சு கொடுக்கணும், என் டிரஸ் வாஷ் பண்ணிக் கொடுக்கணும் அவ்ளோ தான். அப்பறோம் நீ உனக்கு விருப்பமான வேலையை செய்துக்கலாமே.. நிரைய டைம் இருக்கும் உனக்கு அங்க” என்றான்.

“ஹா! இத்தனை வேலை இருக்கு இதெல்லம் செய்துட்டு என் பொண்ணு எப்படி அங்க வந்து ரெஸ்ட் எடுப்பா யுகா. அவளே இப்போதான் படிப்பு முடிச்சிட்டு வந்திருக்கா . அவளுக்கு இன்னும் ஒரு வேலையும் ஒழுங்கா பார்த்துக்கத் தெரியாது நீ அவளை போய் உனக்கு ஒத்தாசைக்கு வர சொல்ற..” என்று சொல்லி அசட்டு சிரிப்பு சிரித்தார் பர்வதம்.

“எல்லா வேலையும் கத்துகிறது தானே அத்தை இதுல என்ன இருக்கு , என் கூட ஆரா வரட்டும் ” என்றான் முடிவாக,

பர்வதத்திற்கோ ஆராவை யுகேனுடன் அனுப்புவதில் பிரச்சனை இல்லை. அங்கே போய் அவனுக்கு வேலை பார்ப்பது தான் பெரிய பிரச்சனையாக அவருக்குத் தோன்றியது. இங்கே வீட்டில் இத்தனை வேலைக்காரர்கள் இருக்கும்போதே சில சமயங்களில் அவனுக்கு வேலை செய்தே ஓய்ந்து விடுவார்கள், அங்கே ஆரா மட்டும் போய் தனியாக அவன் சொல்லும் வேலைகளை இழுத்துப் போட்டு செய்ய நேரிடும்” என்று  தவிப்பு அவருக்கு. அதை அவனிடம் சொல்லவும் முடியாமல் ,மெல்லவும் முடியாமல் தவித்துக்கொண்டிருந்தவர் தன் மகளைப் பார்க்க..

அவளோ ஊரில் இருந்த வந்த போது இருந்த சந்தோசம் இப்பொது முழுவதும் வற்றிப் போனவளாக.. முகத்தை சோகமாக வைத்துக் கொண்டிருந்தாள்.அவளை பார்க்கவும் பாவமாக இருந்தது அவளுக்கு.

யுகா!.. அவ சின்னப்பொண்ணு டா.. அவளுக்கு எந்த வேலையும் தெரியாது, தனியா அங்க வந்து அவ ஏன் கஷ்டப்படணும் என்றார் பர்வதம்.

“பர்வதம் யுகேனுக்கு ஹெல்ப் பண்ணத் தானே ஆராவை கூட கூப்பிட்றான். போய்ட்டு வரட்டும் ” என்ற கார்த்திகேயன் “யுகா! எவ்ளோ நாள் டிரீட்மென்ட் ” என்றார்.

“ம்கூம்.. வந்துட்டார் உத்தமரு.. நம்ம பொண்ணை அவனுக்கு வேலை செய்ய கூப்பிட்றான். நம்ம பொண்ணு அங்க தனியா போய் எப்படி வேலை செய்வான்னு கொஞ்சமாச்சும் தோணுதா இந்த மனுசனுக்கு.. கேட்டா இப்போ கஷ்டப்பட்டா தான் நல்ல விஷயங்களை கத்துக்க முடியும், எல்லா சூழிநிலைலையும் வாழ முடியும்னு போதனை பண்ணுவார்” என்று நினைத்துக்கொண்டார் பரவதம்.

“தெரியல மாமா, இப்போதான் எனக்கு இந்த ஐடியாவே தோணுச்சு. நாளைக்கு கேரளா போய்ட்டு தான் மத்ததை விசாரிக்கணும். ஒரு 10 ஆகலாம். இல்ல சில மாசங்கள் கூட ஆகலாம். டிரீட்மென்ட் எப்படிங்குறதை பொறுத்து தானே.. இருக்கு”என்றான்.

“என்னது மாசக்கணக்கு ஆகுமா! அதுவரை என் பொண்ணை நான் பிரிஞ்சிருக்கணுமா?” என்ற பர்வதம் “யுகா, அவளே இப்போதான் ஊர்ல இருந்து வந்திருக்கா. வந்ததும் வரத்துமா என் பொண்ணை என்கிட்டே இருந்து பிரிக்குறேன்ன்னு சொல்றியே இது நியாயமா டா” என்றார் ஏமாற்றமும், ஆதங்கமுமாக.

“அத்தை…” என்று யுகேன் பேச வர..

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“யுகா!.. நம்ம ஆரா இங்கையே இருக்கட்டும். நீ உன்னோட ஹெல்ப்புக்கு பூவிழியை கூப்டுக்க.. இவ்ளோ நாளா உனக்கு தேவைப்படுறதை எல்லாம் அவ தானே பாத்துகிறா. அதுவுமில்லாம நீ டிரீட்மென்ட் எடுத்துக்க போற.. அங்க உனக்கு ஹெல்ப் பண்ண பூவிழி தான் சரியா இருப்பா” என்றவர் “அப்பறோம் அங்க நம்ம வீட்ல வேளைக்கு ஆளுங்க தான் நிறைய பேர் இருக்காங்களே..சமைக்க , வீட்டை பாத்துக்க. தோட்ட வேலைக்குன்னு சோ ஆரா நீ டிரீட்மென்ட் முடிச்சு வர வரைக்கும் இங்கையே இருக்கட்டும், பர்வதம் தான் அவ கூட இருக்கணும்னு ஆசைப்படுறாளே… நீ பூவிழியோட நாளைக்கு கேரளா கிளம்பு” என்றான்.

யுகேனின் உதட்டிற்குள் ஒரு வெற்றிப்புன்னகை சிறிதாக அரும்பியது. அவன் எதிர்பார்த்தது இது தானே.. அவனுக்கு பூவிழியை இவர்களிடம் இருந்து பிரித்து தனியாக கூட்டிச் செல்ல வேண்டும். அவளை பம்பரம் போல சுழல விட்டு வேலை வாங்குபவர்களிடம் இருந்து அவளுக்கு விடுதலை தரவேண்டும் . கர்ப்பிணி என்று கூடப் பார்க்காமல் அவளை இப்படி ஆளாளுக்கு வேலை வாங்குவது அவனுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை.

முன்பிருந்து அவனுக்கு இந்த எண்ணங்களை எல்லாம் தோன்றும் தான், அதை கேட்கவும் அவனுக்கு தோன்றவும் இல்லை. காரணம் அவள் மீது அவனுக்கு பிடித்தம் என்பதே இத்தனை நாளில் இருந்ததில்லை. ஆனால் ஒரே நாள் ஒரே நாளில், ஏன் ஒரே இரவில் மொத்தமும் தலைகீழாக மாறி விட்டது , அவளை எப்போது முழுமையாக ஆட்கொண்டானோ அப்போதே  அவள் தன்னவளாகிவிட்டாள் என்ற எண்ணம் அவனுக்குள் அவனையும் அறியாமல் உதித்துவிட்டது.

அதன் பின் உருவான மாற்றம் இது, அதை அப்படியே அனைவர் முன்னிலையிலும் காட்டிவிட முடியாது என்று தான் ஆராவை இதற்குள் இழுத்திருந்தான், இப்பொது அவன் நினைத்தது நடந்தும் விட்டது.

அவன் இதைப் பற்றி யோசனையில் அமர்ந்து இருக்க..

ராஜேந்திரனோ.. அவளை கொஞ்ச நாள் கூட கூட்டிட்டுப் போகக் கூட யுகேனுக்கு விருப்பம் இல்ல போல.. பாரு எவ்ளோ யோசிக்குறான் என்று நினைத்தவர். நேத்து யுகேன் பூவிழியை கீழ அனுப்பாம உள்ளையே வெச்சிருந்தது சரி இல்லேனு நினைச்சேன், ஆனா இப்போ யுகேன் நடந்துக்கிறதை பார்த்தா அவனுக்கு அவளை சுத்தமா பிடிக்கல போல.. என்று தவறாக அவர் மனதில் நினைத்துக் கொண்டிருந்தார்.

“யுகேன்! என்ன யோசிக்குற.. ” என்றார் ராஜேந்திரன்.

“நோ டேட் , நீங்க சொன்னா சரியா தான் இருக்கும். அவளே வரட்டும் ” என்றான்.

“ஓகே பா.. ” என்று ராஜேந்திரன் சிரித்தபடி சொன்னவர் “பூவிழி நீ நாளைக்கு யுகேன் கூட கேரளா போற.. அங்க போறதுக்கு உனக்கு திங்ஸ் எல்லாம் இப்பவே பேக் பண்ணி வெச்சுக்கோ.. ” என்றார்,

இவ்வளவு நேரம் அங்கு நடப்பதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்தவள் மனதில் தன் மணவாளன் தன்னை விட்டுவிட்டு பிரிந்து செல்லப் போகிறானே.. என்ற ஏக்கமும், தவிப்பும் அவனுக்குள் ஓடிக்கொண்டிருக்க.. இப்பொது அவளே அவனுடன் செல்லவேண்டும் என்று கேட்டதில் இருந்து அவளுக்குள் புது வித உணர்வு , சந்தோசம் தோன்றியது, ராஜேந்திரன் சொன்னதும் வேகமாக கையில் இருந்த பாத்திரத்தை அபப்டியே டைனிங் டேபிளில் வைத்துவிட்டு “சரிங்க சார் ” என்றவள் தன் உடைமைகளை எடுத்துவைக்க உள்ளே சென்றுவிட..

அவள்  முகத்தில் தெரிந்த சந்தோஷத்தைக் கண்டுகொண்ட யுகேந்திரனோ குனிந்து உணவை சாப்பிடுவது போல பாவனை செய்தபடியே சிரித்துக்கொண்டான்.

ஆராவுக்கும், பர்வதத்திற்கும் இப்பொது தான் அப்பாடா என்று இருந்தது,

சாப்பிட்டு முடித்ததும் “ஆரா எனக்கு ஒரு டம்ளர் பால் வேணும் சூடா மேல கொண்டு வரியா?” என்றான் யுகேன்.

“ம்ம். சாப்பிட்டு எடுத்து வரேன் மாமா ” என்றாள் ஆரா சாப்பிட்டுக்கொண்டே.

“அவ எதுக்குப்பா வீணா மேல வரணும். எப்படியும் உன் பொண்டாட்டி இன்னும் கொஞ்ச நேரத்துல மேல தூங்க வருவா தானே.. அவகிட்டே கொடுத்து விடறேன் நீ போ..” என்றார்.

“அவளா! அவ வர எப்பவும் லேட் ஆகுமே அத்தை. எனக்கு வேற தூக்கம் வர போல இருக்கு .. ” என்று சோர்வாக இருப்பது போல காட்டிக்கொண்டான்.

“அப்போ அவளை இப்பவே பால் எடுத்துட்டு வர சொல்றேன் யுகா, நீ போ.. ” என்று அவனை அனுப்பினார்.

யுகேனுக்கு அவள் இப்பொது தனக்கு வேணும், எல்லோர் முன்னிலையிலும் அவளைக் கூப்பிட்டாள் பூவிழி வேலை இருக்கிறது என்று சொல்வாள். அவன் அப்பாவிற்கும் தேவை இல்லாத சந்தேகம் வரும் .அதனால் ஆராவை வைத்தே தன் காரியங்களை சாதித்துக் கொள்கிறான் இந்த யுகேந்திரன்.

அவன் மேலே சென்றுவிட.. அவன் பின்னாலேயே சிறிது நேரத்தில் கையில் பாலுடன் அவர்கள் அறைக்கு வந்த பூவிழி கதவை சுற்றிவிட்டு அவனிடம் வந்து பாலை நீட்ட..

கட்டிலில் அமர்ந்து புஸ்தகம் படிப்பது போல பாவனை செய்து கொண்டிருந்தவன் அவளிடம் இருந்து பாலை வாங்கி வைத்துவிட்டு. பூவிழியின் கையை பற்றி அவளை தன் அருகே அமர்த்திக்கொண்டவன் அவள் மேனியை புஸ்தகமாக்கி அதன் அனைத்துப் பக்கங்களையும் ஒன்று விடாமல் படித்து தன் மனதில் ஏற்றுக்கொள்ளும் முனைப்பில் மூழ்கிவிட்டான்.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

கதை படிச்சிட்டு ஒரு லைக், போன எபிசோட்க்கு கமெண்ட் வரல, இதெல்லாம் வந்தா தானே எனக்கும்தொடர்ந்து கதை எழுத ஆர்வமா இருக்கும். உங்க கமெண்ட் படிக்குற அப்போ சீக்கிரமா அடுத்த எபி எழுதணும்னு தோணும். அதனால உங்க ஆதரவை கமெண்ட்ல சொல்லணும் அப்போதானே அடுத்த எபிசொட் வரும்

You may also like

2 comments

Keerthu August 2, 2026 - 2:01 pm

Super epi sis next epi ku waiting ❤️❤️❤️

Reply
Layas Tamil Novel August 3, 2026 - 6:53 am

❤❤❤❤❤

Reply

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.