EPISODE 10 ஆரம்பிச்சுட்டியா..
“கனி! அடியே கனி!.. இங்க வந்து உன் பசங்க செஞ்சு வெச்சிருக்க வேலையைப் பாரு..” என்று பின்னால் இருந்து அவளோடு ருத்ரசேனனின் வீட்டில் வேலை செய்யும் காமாட்சி குரல் கொடுத்தார்.
“என்ன அக்கா, என்ன ஆச்சு?” என்று அவசரமாக சமைத்துக் கொண்டிருந்த கனிமொழி தன் சேலைத் தலைப்பில் கையை துடைத்துக்கொண்டே வெளியே வர..
அங்கே அவள் மகன் ஆதித்யனும், அவனோடு ஒட்டிப்பிறந்த அல்லியும் ஒன்று சேர்ந்து செய்து கொண்டிருந்த காரியத்தை கண்டு வாயடைத்துப் போயிருந்தாள் இளங்கிளி.
மழை வந்து சமையல் கட்டின் பின் புறம் தேங்கி இருந்த தண்ணீரில் இருவரும் உட்கார்ந்து கையால் அந்த தேங்கிய தண்ணீரை தப்பித் தப்பி அடித்துக்கொண்டு சிரித்தபடி விளையாடிக்கொண்டிருந்தனர்.
உடல் முழுவதும் செம்மண் பூசி இருக்க.. அந்த தண்ணீரை தன் பிஞ்சுக் கைகளால் இருவரும் அள்ளி அள்ளி ஒருவர் மீள் ஒருவர் ஊற்றி சிரித்தபடி விளையாட.. அவர்களின் இந்த கோலம் கண்டு அதிர்ந்த இளங்கிளி. ஒரு வயதே பூர்த்தி ஆகி இருந்த இந்த இரு வாண்டுகளையும் அதட்ட முடியாமல் தலையில் கை வைத்துக் கொண்டாள்.
“என்ன டி பாத்துட்டே இருக்க. இவங்க ரெண்டு பேருக்கும் வளர வளர சேட்டை அதிகமாகிருச்சு.. வந்து ரெண்டு அடியைப் போடு.. ” என்று காமாட்சி உசுப்பிவிட்டு..
“ஆதிஈ… அல்லிஈ.. ” என்று கத்திகொண்டே அவர்களை நோக்கி வேகமாக வந்த இளங்கிளி அங்கே ஒடிந்து விழுந்திருந்த மரக்கிளையில் இருந்து ஒரு குச்சியை எடுத்து பிள்ளைகளை அடிக்க சென்றாள்.
அதுவரை இவர்கள் வந்தது கூட தெரியாமல் ஆதியும்,அல்லியும் விளையாடிக் கொண்டிருந்தவர்கள். இலங்கிலியின் குரல் கேட்டதும் பயந்துபோய் அவளை பார்த்தார்கள்.
ஆதிக்கு தான் இளங்கிளியை கண்டு சற்று பயம். ஆனால் அல்லி அப்படி அல்ல.. அவளோ தன்னை நோக்கி அடிக்க வந்த இளங்கிளியை பார்த்து சிரித்தபடி எழுந்தவள் “ம்மாஆ!.. ” என்று தன் குட்டிக் கைகளை விரித்து அவளை நோக்கி சிரித்தபடி ஓடி வந்தாள்.
அவள் சிரிப்பில் அந்த குண்டு கண்ணம் குழிவிழ.. அதை கண்டதும் வந்த கோபம் அடையாளம் தெரியாமல் போனது இளங்கிளியே அறியவில்லை. அல்லி தன்னை நோக்கி வரவும் கையில் இருந்த குச்சியை கீழே போட்டுவிட்டு அவளை அள்ளி அணைத்து கட்டிக்கொண்டு எழுந்தவள் அப்படியே காற்றில் தன் பிள்ளையோடு சேர்ந்து கரகரவென சுற்றினாள்.
அதை பார்த்ததும் ஆதிக்கும் இருந்த பயம் போய் அவனும் அவர்களை நோக்கி ஓடி வந்து “ம்மா… நானு.. ” என்று மழலை மொழியில் அழைக்க.. சுற்றிக்கொண்டிருந்தவள் நின்று அவனையும் மற்றொரு கையில் தூக்கி சுற்ற ஆரம்பித்தாள்.
“ம்கூம்.. உன்னை போய் உன் பிள்ளைகளை கண்டிக்க சொன்னேன் பாரு.. என்னை சொல்லணும்” என்று காமாட்சி சலித்துக்கொள்ள..
குழந்தைகள் இருவரையும் தரையில் இறக்கிவிட்டவள் அவர்களோடு சுற்றியதில் லேசாக தனக்கும் தலையை சுற்றுவது போல இருக்க.. பிள்ளைகளை இருபக்கமும் கட்டிக்கொண்டே அவர்களோடு தரையில் அமர்ந்து கொண்டாள்.
ஆதியும், அல்லியும் இளங்கிளியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு ஆளுக்கு ஒரு பக்கம் நின்று இருந்தனர். அப்போது அங்கே வந்த கர்ணன் “மூணு பேரும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க “என்று அங்கே வந்தவன் மூவரின் கோலம் கண்டு சிரித்தபடி வந்தவன் ஆதியை கையில் தூக்கிக்கொள்ள..
“மாமா! ஆனு.. ஆனு.. ” என்று தன்னையும் தூக்க சொல்லி கையை மேலே தூக்கி அவளையும் தூக்கச் சொல்லி வந்து அவன் முன்னே நின்றான்.
“ஏய்! இங்க எல்லாரும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க . புள்ளைங்க சேட்டை பண்ணுது வந்து கண்டிச்சு வைன்னு கூப்பிட்டா.. இவ வந்து புள்ளைங்களை அதட்டாம அதுங்க கூட சேர்ந்து விளையாடிட்டு இருக்கா. நீயாச்சும் எதுவும் கேட்பேன்னு பார்த்தா அவளை மாதிரியே பிள்ளைகளத் தூக்கிட்டு ரெண்டு பேரும் அதுங்களோட சேர்த்து சகதியை உடம்பு முழுக்க சாப்பிட்டு இருக்கீங்க.. ” என்று காமாட்சி இளங்கிளியையும், கர்ணனையும் அதட்டினாள்,
காமாட்சி இவர்கள் இருவரையும் அதட்டுவதைப் பார்த்த ஆதி “தாச்சி.. போ… போ.. ஆநா.. மாமா… ” என்று கர்ணனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு காமாட்சியை ஏதோ திட்டினான்.
கீழே நின்று இருந்த அல்லியோ ஒரு படி மேலே போய் தத்தித் தத்தி நடந்து சென்றவள் “தாச்சி.. தாச்சி.. ‘ என்று அவள் சேலையைப் பிடிக்கப் போக..
“காமாட்சின்னு இருக்க என் பேரை உன் புள்ளைங்க ரெண்டும் தாச்சினு மாத்திருச்சுங்க.. ” என்றவர் தன்னை நோக்கி சகதி அப்பிய கைகளை நீட்டியபடி வந்த அல்லியைப் பார்த்து “ஏய்! அல்லி அங்கையே நில்லு கிட்ட வராத .. என் சேலையும் அழுக்காகிடும்.. ” என்று காமாட்சி பின்வாங்க.
அல்லியோ அவரை மேலும் நெருங்கி செல்ல.. பின்னால் சென்ற காமாட்சி கால் இடறி அதே தேங்கி நின்று தண்ணீரில் பொத்தென விழுந்து விட..
இளங்கிளிக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
“அக்கா! எங்களை திட்டிட்டு இப்போ நீங்களே போய் அந்த சகதியில் விழுந்துட்டீங்களே.. ” என்றாள்.
“ஏய் கனி , சிரிக்காத டி.. எல்லாம் உன் பொண்ணு பண்ணினது , பாரு என் சேலை எல்லாம் சகதியில் நனைஞ்சு போயிருச்சு.. ” என்று கையை உதறிக்கொண்டு மேலே எழ..
அதற்குள் அவளை நெருங்கி இருந்த அல்லியோ “தாச்சி.. உம்மா… உம்மா.. ” என்று தரையில் கிடந்தவள் மேலே ஏறி அவள் கன்னத்தில் பச்சக் என்று முத்தத்தை வைத்து இருந்தாள்.
அவ்வளவு தான் காமாட்சியின் கோபம் எங்கே போனது என்றே தெரிய வில்லை. அல்லியை அணைத்து அவள் கன்னத்திலும் முத்தம் வைத்தவள். “உன் பொண்ணு இருக்காளே.. யாரை எங்க எப்படி சமாளிக்கணும்னு இப்பவே தெரிஞ்சு வெச்சிருக்கா பாரு. இவ்ளோ குட்டி வயசுல எனக்கு முத்தம் கொடுத்து தாஜா பண்ணிட்டா..” என்று அல்லியை அணைத்துக்கொண்டு எழுந்து நின்றாள்.
கர்ணனோ என் செல்லங்கள திட்டணும்னு நினைச்சுட்டு அவங்க முன்னாடி போனா யாராலயும் திட்டவே முடியாது, சிரிச்சே ரெண்டு பேரும் எதிர்ல இருக்கவங்களை சமாளிச்சிருவாங்க, அவங்க வழிக்கு கொண்டு வந்துருவாங்க” என்றான்.
“அது என்னவோ சரி தான்” என்ற கர்ணன் “கனி சமையல் வேலை முடிஞ்சுதா ” என்றான்.
“ம்ம்.. ஆச்சு அண்ணா. சார் வரதுக்குள்ள நான் போய் துணியை மாத்திட்டு வரேன் . நீங்க அவங்க ரெண்டு பேரையும் குடுங்க . அவங்களையும் குளிப்பாட்டி துணியை மாத்தி தரேன்” என்றாள்.
“இல்ல நீ போய் முதல்ல துணியை மாத்திட்டு வா… நீதானே சாருக்கு சாப்பாடு பரிமாறணும் . அவர் வந்ததும் உன்னை தானே சாப்பிடு போட சொல்லுவார். நானே இவங்களுக்கு குளிப்பாட்டி விடறேன்.” என்றவன் ஆதியையும், அல்லியையும் தன்னோடு அழைத்து சென்றான் குளிப்பாட்ட.
“போடி சீக்கிரம், அந்த மனுஷன் வேலையை விட்டு வந்ததும் சோறு ரெடியா இருக்கணும் . இல்லேன்னா எல்லாரையும் பிடிச்சு காச்சு மூச்சுன்னு கத்துவாரு..” என்று காமாட்சியும் உடை மற்ற சென்றுவிட..
இளங்கிளியும் அவசர அவசரமாக சென்று குளித்து உடை மாற்றி விட்டு வந்தவள் ஈரத்தலையை துண்டால் சுற்றிக்கொண்டே வெளியே வரவும்.. ருத்ரசேனன் வரவும் சரியாக இருந்தது.
உள்ளே பரபரப்பாக வந்தவன் “கனி சாப்பிடு ரெடியா” என்று கேட்டுக்கொண்டே கை கழுவிவிட்டு டைனிங்கில் வந்து அமர்ந்தவன் அவனுக்காக சமைத்த உணவை எடுத்துக்கொண்டு அங்கே வந்தவளைப் பார்த்து அப்படியே உறைந்து போனான்.
ஒல்லியான மெல்லிய சிவந்த தேகம்.. இரு பிள்ளைகளைப் பெற்றிருக்கிறாள் என்று சொன்னால் யாராலும் நம்பமுடியாது. அந்த அளவுக்கு அவள் வயிறு ஒட்டிப்போய் இருந்தது. கருப்பு நிற கட்டம் போட்ட நூல் சேலை தான் அணிந்து இருந்தாள். கழுத்தில் மஞ்சள் கயிறு.. காதில் ஒரு சின்ன ஜிமிக்கி அதுவும் இமிடேஷன் நகை தான் என்றாலும் அவளுக்கு அது மிக அழகாக இருந்தது. சேலைத் தலைப்பை இடுப்பில் செருகிக்கொண்டு கையில் கண்ணாடி வளையல் அணிந்து சூடான குழம்பு பாத்திரத்தை துணி கொண்டு பிடித்தபடி கீழே சிந்திவிடாமல் மெல்ல நடந்து வந்தவளையே ரசித்துக் கொண்டிருந்தான் ருத்ரசேனா.
இளங்கிளியோ அதை கவனிக்கவில்லை. கொண்டு வந்த பாத்திரத்தை மேஜையில் வைத்தவள் “சார் பரிமாறட்டுமா?” என்று அவன் அனுமதி வேண்டி அவனைப் பார்த்தாள்.
“ம்ம்.. ” என்றவன் “குளிச்சதும் அப்படியே வந்துட்டியா . தலை ஈரமா இருக்கும் போல.. உடம்பு சரி இல்லாம போயிரப் போகுது. மழை வேற விடாம பேஞ்சுட்டே இருக்கு” என்று இளங்கிளி பரிமாற்ற அவள் சமைத்த உணவுகளை ரசித்தபடி அவளிடம் கேட்டான்.
“ஆமா சார்.. எல்லாம் குட்டி வாழுங்க பண்ணின சேட்டை தான்” என்றவள் சகதியில் தன்பிள்ளைகளோடு விளையாடியதை சொல்லி சிரித்தாள் .
அவள் சிரிப்பதையம், பேசுவதையும் ஓரக்கண்ணால் பார்த்து ரசித்தபடியே சாப்பிட்டான் ருத்ரசேனா.
“இன்னிக்கு சாப்பாடு ரொம்ப நல்லா இருந்துச்சு கனி” என்றவன் “உன் கையாள தினமும் சாப்பிட நான் கொடுத்து வெச்சிருக்கேன்” என்றான்.
“என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க. எனக்கு தெரிஞ்சதை சமைச்சு வெச்சிருக்கேன். என் கையாள சாப்பிட்டதை போய் இவ்ளோ பெருமையா சொல்றிங்க. அதெல்லாம் எதுவுமில்லிங்க. நீங்க எங்களுக்கு சம்பளம் கொடுக்குற முதலாளின்குரதையும் தாண்டி எங்களுக்கு எவ்ளோவோ செஞ்சிருக்கீங்க. அதுக்கு முன்னாடி இதெல்லாம் எதுக்குங்க” என்றாள்.
“ஆரம்பிச்சுட்டியா.. இதையே எவ்ளோ வாட்டி நீ சொல்லிக்காட்டிகிட்டே இருப்ப.. ” என்றவன் அவளை நிமிர்ந்து பார்த்தான்.
அவள் தலையில் இருந்த ஈரம் சொட்டி கன்னத்தை தழுவி அப்படியே கழுத்திற்குள் இறங்க.. அதன் பின் பார்வையை கொண்டு செல்வது அநாகரிகம் என்று கிடைத்த காட்சியை மட்டும் ரசித்த ருத்ரன் அவள் விழிகளையே பார்க்க..
அவளோ அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் பார்வையைக் கண்டதும் சட்டென திரும்பியவன் சென்று கை கழுவிவிட்டு வந்தான்.
முதல் முதலில் இங்கு வேளைக்கு வரும்போது இளங்கிளியை பார்த்ததில் இருந்து அவள் மேல் தீராத காதலை வளர்த்துக் கொண்டான் ருத்ரசேனா .
இளங்கிளியிடம் அதை காட்டிக்கொள்ளாமல் அவளிடம் இன்றுவரை நட்போடும், கண்ணியத்தோடும் நடந்து கொள்கிறான் அவன். அவள் கதையை முழுவதும் கர்ணன் மூலமும், தன் பெற்றோர் மூலமும் கேட்டறிந்தவன் அவள் மீது இன்னமும் அன்பை வளர்த்திருந்தான்.
அது அவனுக்குள் மட்டுமே இருக்கும் ரகசியம் இன்றுவரை அதை யாரிடமும் சொன்னதில்லை. காட்டிக்கொண்டதும் இல்லை அவன்.
“சார் நாளைக்கு ஒரு நாள் எனக்கு லீவு வேணும்” என்று தயங்கியபடி கேட்டாள் இளங்கிளி.
“லீவா! இது என்ன கனி புதுசா இருக்கு. ” என்று சிரித்தான் ருத்ரன்.
ஸ்டோரி படிச்சிட்டீங்களா அப்போ கமெண்ட் பண்ணிடுங்க😍 கூடவே லைக் பண்ணுங்க. கமெண்ட், லைக் நிறைய வந்தா தானே அடுத்தடுத்து எபிசோடு எழுத எனக்கு ஆசையா இருக்கும். இன்னிக்கு ஈவினிங் குள்ள தப்புத் தண்டா காதல் அடுத்த எபிசோடு வந்துடும்
