EPISODE 11
“என் பசங்களை கூப்டு வெளிய போகணும்., அவங்களை இதுவரை நான் எங்கையும் கூப்பிட்டுப் போகல .. அதான் ” என்றாள் இளங்கிளி.
“ம்ம்.. ஆமா நீ சொல்றதும் சரி தானே..” என்ற ருத்ரன் “சரி லீவ் தானே எடுத்துக்கோ..” என்றவன் “கர்ணா!.. ” என்று சத்தமிட்டான்.
“சார்!.. ” என்று சொல்லிக்கொண்டே ஆதியையும், அல்லியையும் தூக்கிக்கொண்டு அங்கு வந்தான் கர்ணன்.
அவன் கையில் இருந்த குட்டிகள் இரண்டையும் பார்த்துவிட்டு சிரித்தவன் அல்லியை சென்று கையில் எடுத்துக்கொண்டவன் “கர்ணா நாளைக்கு உன் தங்கச்சிக்கு லீவு வேணும்னு சொல்ரா. பசங்களை கூப்டு வெளிய போயிடு வரணுமாம்” என்றான்.
“லீவா! ” என்றவன் “என்ன கனி என்கிட்டே கூட சொல்லல.. “என்றான் இளங்கிளியைப் பார்த்து,
“அண்ணா! எனக்கே இப்போதான் தோணுச்சு. அதான் சார்கிட்டே கேட்டேன் ” என்றாள் கிளி.
அவனோ என்ன செய்வது என்று தெரியாமல் பார்க்க..
“நாளைக்கு நீயும் லீவு எடுத்துக்கோ. கனியைப் கூப்டு வெளிய போய்ட்டு வாங்க ” என்றான்.
“சார், நாளைக்கு உங்களுக்கு தெரிஞ்சவங்க இங்க வராங்கனு சொன்னிங்க, இவ அது தெரியாம லீவு வேணும்னு சொல்லிட்டு இருக்கா. ” என்றவன் “கனி நாளைக்கு ஊர்ல இருந்து ஐயாவும்,அம்மாவும் வராங்க வாங்கக்கூட ஐயாவோட சொந்தக்காரவங்க வராங்கம்மா. ஒரு வாரம் இங்க தான் தங்கப்போறாங்க” என்றான்.
“அண்ணா! எனக்கு இது தெரியாது . நான் திடீர்னு தோணிச்சுனு சார்கிட்ட கேட்டேன். எனக்கு தெரிஞ்சிருந்தா நான் சார்கிட்டே கேட்டிருக்கவே மாட்டேன்” என்றாள்.
“இல்ல பரவால்ல.. ஒரு நாள் தானே.. நீங்க போய்ட்டு வாங்க அப்பறோம் ஒரு வாரம் இங்க தானே இருக்கப்போறாங்க” ” என்றான் ருத்ரசேனா.
“இல்ல சார் அவங்க வரட்டும். நான் அப்பறோம் போய்க்கிறேன்” என்றாள்.
“இல்ல கனி போய்ட்டுவா ஒன்னும் பிரச்சனை இல்ல. ” என்றான் ருத்ரன்,
“இல்ல சார் ஒன்னும் பிரச்சனை இல்ல அவங்க வரட்டும் “என்று இளங்கிளி உள்ளே சென்றுவிட்டாள்.
“ஆமா சார், நாங்க போய்ட்டா ஊர்ல இருந்து வரவங்களுக்கு சமைச்சு கொடுக்க ஆள் வேணும் இல்ல. காமாட்சி அக்கா தனியா இருந்து சமாளிக்கும். அவங்க எல்லாரும் வந்து போன அப்பறோம் நான் கனியைக் கூப்டு வெளிய போய்ட்டு வரேன்” என்றான் கர்ணன்.
“சரி கர்ணா, அப்போ நான் நம்ம சிங்காரம் எஸ்டேட் வரை போய்ட்டு வரேன். வர நைட் ஆகும். ஒன்னு பண்ணுங்க நீங்க வேணா இப்போ சும்மா வெளிய எங்கையும் போய்ட்டு வாங்களேன். எப்படியும் எல்லா வேலையும் முடிச்சிருப்பிங்க தானே.. ” என்றான் ருத்ரன்.
கர்ணனும் சரி ருத்ரசேனா கிளம்பினதும் இளங்கிளியையம், அவள் செல்லக்குட்டிகள் இருவரையும் அழைத்துக்கொண்டு பைக்கில் புறப்பட்டுவிட்டான்.
பிள்ளைகளுக்கு குளிராமல் இருக்க ஸ்வெட்டர், மப்ளர் எல்லாம் போட்டு கதகதப்பாக கர்ணனுடன் கடை வீதிக்குச் சென்றாள்.
ஆதிக்கும் , அல்லிக்கும் அத்தனை சந்தோசம். அங்கே கடைவீதிகளில் அழுக்கு ஒருவரை கையிலேந்தி ஊரை சுற்றிக் காட்டிக்கொண்டிருந்தார்கள் கர்ணனும், இளங்கிளியும்.
பஞ்சுமிட்டாய் வாங்கி அவளும் சாப்பிட்டு பிள்ளைகளுக்கு ஊட்டிவிட்டாள். வெளியே சாப்பிட்டனர். பின் மறுபடியும் ஊரை சுற்றினார்கள்.
ஆதி சுற்றித் திரிந்ததில் அலுப்பில் தூங்கி இருக்க.. “அண்ணா! போதும் இவளும் தூங்கிறப் போறா.. ரெண்டு பேரையும் அப்பறோம் வண்டியில வெச்சு கூட்டிப் போறது ரொம்ப கஷ்டமாகிடும்” என்றாள்.
அப்போது அல்லி இளங்கிளியின் கன்னத்தைப் பற்றி தன் பக்கம் திருப்பினாள்.
“என்ன டி அல்லி.. ” என்றாள் பிள்ளையை காட்டிக்கொண்டே..
தூரத்தில் கடைவீதியில் இருந்த பொம்மையைக் காட்டி “ம்மா… ம்மா… பொம்ம… பொம்ம.. ” என்றாள்.
“வேணுமா அது?” என்றாள்.
“ம்ம்.. யேனும்..யேனும்… ” என்று சிரித்தாள்.
“அண்ணா நீ இங்கையே இரு நான் இவளுக்கு அந்த பொம்மையை வாங்கிட்டு வரேன்” என்று ரோட்டைத் தாண்டி அவள் கட்டிய கடையில் பொம்மை வாங்கிக் கொண்டிருந்தாள்.
அது ஒரு ரோட்டுக் கடை.. அங்கே குழந்தைகளைக் கவரும் வண்ணம் பல பொம்மைகள்., விளையாட்டுப் பொருட்கள் இருந்தது. கடையில் கூட்டம் அதிகமாக இருந்தது , அது சீசன் என்பதால் வெளியூரில் இருந்து வந்தவர்கள் தான் அங்கு அதிகம்.
“அண்ணா அந்த பொம்மை என்ன விலை” என்று கேட்டுக்கொண்டிருந்தாள்.
அவள் இடுப்பில் இருந்த அல்லியோ அங்கிருந்த பொம்மைகளை கை நீட்டி நீட்டி காட்டி அது யேனும்.. அது.. என்று அனைத்தையும் காட்டிக்கொண்டு இருந்தாள்.
“இது எல்லாத்தையும் வாங்கி கொண்டு போய் வெக்க நம்ம வீட்ல எங்க டி இடம் இருக்கு.. ஒரு பொம்மை தான் ” என்றவள் “நல்லவேளை ஆதி தூங்கிட்டான் இல்ல அவனும் உன்கூட சேர்ந்து என் காசை எல்லாம் ஒரே நாள்ல கரைச்சிருப்பிங்க..” என்றவள் “சரி அவனுக்கும் ஒரு பொம்மை வாங்கலாமா?” என்றவள் பொம்மைகளை பார்த்துக் கொண்டிருக்க..
அல்லியோ தன் கையில் இருந்த பொம்மையை இப்படியும், அப்படியும் ஆட்டி ஆட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்போது அந்த வழியாக அந்த இரவில் நடந்து சென்ற ஒருவர் மீது அவள் பொம்மையை ஆட்டிக்கொண்டே அடித்துவிட்டாள் . அடிக்கும் சத்தம் கேட்டு சட்டென திரும்பிப் பார்த்த இளங்கிளி. “ஏய் அல்லி , சும்மா இருக்க மாட்ட நீ ” என்று அவள் கையில் இருந்த பொம்மையை வாங்கியவள் அவள் அடித்தவனிடம் “சார் சாரிங்க அவ தெரியாம அடிச்சிட்டா..” என்று பேசிக்கொண்டே தனக்கு எதிரே இருந்தவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“இட்ஸ் ஓகே! குழந்தை தானே ” என்றவன் அவள் முகத்தைப் பார்த்தவன் அப்படியே உறைந்து போனான்.
ஆம்.. இந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தேடியும் கிடைக்காதவள் இன்று எதேட்சையாக ராவண் கண்ணில் பட்டுவிட்டாள்.
“கிளி!.. ” என்று அதிர்ந்தவன் அவள் பெயரை தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டவன் அவளிடம் பேச வர.. அவளோ அவனைப் பார்த்து மெல்ல சிரித்துவிட்டுத் திரும்பி கடைக்காரரிடம், அவள் ஆதிக்காக வாங்கிய பொம்மைக்கு பணத்தை பேரம் பேசி வழங்கிவிட்டு திரும்ப.. அப்போதும் ராவண் அவளையே பார்த்துக்கொண்டிருக்கவும். அவனை தயக்கமாகப் பார்த்து சிரித்தவள் “சார் கொஞ்சம் வழி விடறீங்களா?” என்றாள்.
“கிளி.. நா.. ” என்று ராவண் பேசவர…
“ராகவ்! இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க. நான் திங்ஸ் வாங்கிட்டு வரதுக்குள்ள இங்க வந்துட்டீங்க.. ” என்று அவனை நோக்கி வந்தாள் ரக்ஷனா.
அவள் தன் அருகே வந்த அடுத்த நொடி இளங்கிளியை ரக்ஷணா பார்த்துவிடக் கூடாது என்று நினைத்தவன் சட்டென்று திரும்பி ரக்ஷனாவின் கையைப் பற்றிகொண்டவன் “ரக்ஷு.. நான் உனக்காக ஒரு கடை பாத்து வெச்சிருக்கேன். அங்கே எல்லாம் சூப்பரா இருக்கு. வா போகலாம் ” என்று அவள் கையைப் பற்றிக்கொண்டு அங்கிருந்து வேகமாக நடந்தான் ராவண்.
இளங்கிளியும் அவனை பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் குழந்தையுடன் ரோடை கிராஸ் செய்து கர்ணனிடம் வந்தவள் “அண்ணா இது ஆதிக்காக வாங்கினேன் நல்லா இருக்கா?” என்றாள்.
“ம்ம்ம்… நல்லா இருக்குமா.. ” என்றவன் குரல் இறுக்கமாக இருந்தது. அவன் பார்வை மொத்தமும் ராவண் கை கோர்த்து அழைத்து செல்லும் ரக்ஷ்ணாவின் மீது தான் இருந்தது.
யாரும் யாரையும் கவனிக்கவில்லை என்று அனைவரும் நினைத்திருக்க.. ஆனால் கர்ணனும், ரக்ஷ்ணாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ராவணுக்கு இளங்கிளியைப் பார்த்தும் அவளிடம் பேசமுடியாத நிலை. அவன் அருகே தான் அட்டை போல ரக்ஷனா எந்த நேரமும் ஒட்டித் திரிந்து கொண்டிருக்கிறாளே..
ரக்ஷணா ராவணிடம் பேசிக்கொண்டே ராவண் கவனிக்காத நேரம் பார்த்து கர்ணனைப் பார்த்து கணப்பொழுதில் அவளுக்கு போன் செய்யுமாறு கையால் சைகை காட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட..
கர்ணனுக்கோ தொண்டை அடைத்துக் கொண்டது. காரணம் அவன் எப்போது கொடைக்கானல் கிளம்பலாம் என்று முடிவு செய்தானோ அன்றே அவளிடம் பேச உபயோகிக்கும் சிம் கார்டை கழட்டி வைத்துவிட்டு புது சிம்கார்ட் போட்டுக்கொண்டான்.
இளங்கிளி கேட்டதற்கு இங்கிருப்பவர்கள் யாரும் தங்களுக்கு அழைத்தாள் அவள் கர்ப்பம் தெரிய வரும் அதனால் அவளுக்கும். , அவள் பிள்ளைகளுக்கும் பிரச்சனை என்று சொல்லி சமாளித்திருந்தான்.
ஆனால் இன்று அந்த சிம்கார்டை தேடி எடுக்கும் நிலைக்கு கர்ணன் தள்ளப்பட்டு விட்டான்.
இளங்கிளியை அழைத்துக்கொண்டு நேராக வீட்டிற்க்கு வந்தவன் முதலில் தேடி எடுத்து சிம்கார்டை போட்டவன் வெளியே வந்து யாரும் இல்லை என்பதை உறுதி செய்த பின் கைகள் நடுங்க ரக்ஷனாவிற்கு அழைத்தான்.
ஓரிரு ரிங்கில் எடுத்தவள் “சொல்லு டா துரோகி.. ” என்று அனலாக வந்து வார்த்தைகள் அவளிடம் வந்து விழுந்தது.
“மேடம்.. இல்ல அது வந்து.. நான் ” என்று வார்த்தைகள் தொண்டைக்குள்ளேயே அடைத்துக் கொண்டு அவனுக்கு பேச்சு வர மறுத்தது.
“என்ன டா.. என்னை பார்த்ததும் குலை நடுங்கிருச்சா.. “என்றவள் “என்ன பண்ரா உன்னோட தொங்கச்சி… அதான் அந்த கடன்காரிக்கு குழந்தை எல்லாம் பிறந்திருச்சு போல.. ” என்றவள் ஆமா அவ கையில ஒரு குழந்தை , உன் கையில ஒரு குழந்தை இருந்துச்சே… ” என்றாள்.
கர்ணன் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க. .
“டேய்!… ஒரு வேலை தங்கச்சி.. தங்கச்சின்னு சொல்லி அவளுக்கு இன்னொரு புள்ளையை நீயே கொடுத்துட்டியா?” என்று நாக்கில் பல்லைப் போட்டு கொஞ்சமும் இரக்கமில்லாமல் பேசினாள்.
“மேடம்.. அப்படி எல்லாம் பேசாதீங்க. கனிமொழி என் கூடப் பிறக்கலையினாலும் அவ இப்ப வரை என் தங்கச்சி தான் ” என்றவன் குரல் சற்று அழுத்தமாக விழுந்தது.
அவன் குரலில் இருந்த அழுத்தத்தை ரக்ஷனாவும் கவனிக்காமல் இல்லை.
“மேடம் குழந்தைகள் ரெண்டும் கனிமொழியோட குழந்தைங்க தான். அவளுக்கும், அவ புருஷன் ராவணுக்கும் பிறந்த குழந்தைங்க தான் , ரெட்டைப் பிள்ளைக” என்றான்.
“எதுவா வேணா இருந்துட்டு போகட்டும். நாங்க இங்க 10 நாள் இருக்கப் போறோம். அதுவரை எங்க ரெண்டு பேர் கண்ணுளையும் நீங்க யாரும் படவே கூடாது , அப்படி மட்டும் நான் உங்க யாரையாவது பார்த்தேன் . அப்பறோம் எல்லாரையும் இந்த கோடைகானலிலேயே குழி தோண்டி புதைச்சிருவேன் ” என்றவள் “என்னைப் பத்தி தெரியும் தானே.. ” என்றாள் கர்ஜனையாக.
“ம்ம்.. சரிங்க மேடம் நாங்க வெளியவே வரல.. ” என்றான்.
“ம்ம்ம்.. அது” என்றவள் அவனிடம் எங்கே தங்கி இருக்கிறான் என்று கேட்டுக்கொண்டவள் . “உங்களை கண்காணிக்க என்னோட ஆளுங்க அங்க தான் இந்த் பத்து நாளும் இறுக்கப் போறாங்க ஜாக்கிரதையா இருந்துக்கோ.. ” என்று அவனை எச்சரித்துவிட்டு போனை வைத்துவிட்டாள்.
அவளிடம் பேசி முடித்த கர்ணன் அந்த கொடைக்கானல் குளிரிலும் முகம் முழுதும் வியார்த்துக் கொட்டியது. தோளில் இருந்த துண்டால் முகத்தை துடைத்தவாறு உள்ளே சென்றவன் அங்கே கிளி தூங்கிக் கொண்டிருக்க.. அவளை ஆளுக்கு ஒரு பக்கம் கழுத்தைக் கட்டிக்கொண்டும். அவள் மீது தன் குட்டி கால்களை போட்டுக்கொண்டும் உறங்கும் ஆதியையும்,அல்லியையும் பார்த்தவன் .
“என் உயிரே போனாலும் அந்த ரக்ஷனாவை உங்க பக்கம் நெருங்க விடாம நான் பாத்துக்குவேன் ” என்று சபதம் எடுத்துக் கொண்டவன் போர்வையை மூவருக்கும் இழுத்துப் போர்த்திக்கொண்டு வந்து சுவற்றில் சாய்ந்து அமர்ந்தவன் இந்த பத்து நாளை ரக்ஷனாவின் கண்ணில் படாமல் இருந்துவிட வேண்டும் என்று நினைத்தவன் அதன் பின் வேறு எங்கும் ஊரை மாற்றிக்கொண்டு செல்லவேண்டும் என்று முடிவெடுத்த பின் தான் உறங்கவே சென்றான்.
ஸ்டோரி படிச்சிட்டீங்களா அப்போ கமெண்ட் பண்ணிடுங்க😍 கூடவே லைக் பண்ணுங்க.

2 comments
Romba interestingah poguthu sis..semma story
thank you thodarnthu padinga inum nirya twist and turns iruku 🤩💖