தப்பு 9 உனக்கு இன்னும் பெர்போர்மன்ஸ் பத்தல..
அறைக்குள் நுழைந்த அடுத்த நொடி பூவிழியின் கையைப் பற்றி தன் அருகே இழுத்தவன் “ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்றான் யுகேந்திரன் அவள் விழிகளை பார்த்துக்கொண்டே.
அதுவரை மார்போடு அணைத்துப் பிடித்திருந்த அவள் பை கீழே நழுவ.. “ஹா! ஒன்னும்.. ஒன்னுமில்ல மாமா நான் நல்லா தானே இருக்கேன்” என்று பொய் சொன்னாள்.
“ஏய்! இங்க பாரு.. என் கண்ணைப் பார்த்து ஒண்ணுமில்லன்னு சொல்லு பார்ப்போம்” என்று அவள் கையை மேலும் இறுக்கிப் பிடிக்க..
மெல்ல அவன் விழிகளை நிமிர்ந்து பார்த்தாள் பூவிழி. அவன் பார்வை அவள் விழிகளுக்குள் ஊடுருவியது. சட்டென அவள் கண்களில் கண்ணீர் வந்துவிட.. பார்வையை வேகமாகத் தாழ்த்திக்கொண்டு “ஒன்னுமில்ல எனக்கு. நான் நல்லா தான் இருக்கேன்” என்றாள் மீண்டும் .
“அதை என் கண்ணைப் பார்த்து சொல்ல சொன்னேன்” என்றான் அவள் மோவாயைப் பற்றி மேலே நிமிர்த்தி.
இப்போது அழுதே விட்டாள். அவளுக்கு சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் இருந்தது.
“இப்போ எதுக்கு டி அழற …” என்றான் எரிச்சலாக.
“ஹும் .. இல்ல நான் அழல” என்று சேலைத் தலைப்பில் கண்களை வேகமாகத் துடைத்துக்கொண்டாள்.
“என் அப்பா எதுவும் உன்கிட்டே பேசினாரா?” என்றான் சரியாக கணித்து.
அவளுக்கோ சொல்வதா? வேண்டாமா? என்கின்ற நிலை தான். அதற்கும் அவள் அமைதியாக இருக்க..
“நீ ஏன் அழறேன்னு எனக்கு புரிஞ்சிருச்சு. நான் உன்கூட கிளோஸ்ஸா இருக்குறது உனக்கு பிடிக்கல.. நீ என்கூட கிளம்பி வந்தது உனக்கு பிடிக்கல.. அதான் முகத்தை இப்படி வெச்சிருக்க. அழுதுட்டு இருக்க ” என்றான் வேண்டுமென்றே அவளைப் பேச வைக்க அவன் பேசினான்.
“ஐயோ! இல்ல மாமா! எனக்கு பிடிச்சிருக்கு.. ” என்றாள் அவசரமாக.
“என்ன பிடிச்சிருக்கு.. ” என்றான் அவள் பதட்டமான முகம் கண்டு.
“உங்கள.. “என்று அவனை நிமிர்ந்து பார்க்காமல் மெல்ல சொன்னாள்.
“அஹ்!.. கேக்கல.. திரும்ப சொல்லு ” என்று தன் வீல் சேரை அவளிடம் நகர்த்தியபடி சொன்னான்.
“ஐயோ!.. ” என்று இருந்தது அவளுக்கு.
“சொல்லு டி.. அமுக்காஞ்சி.. என்கூட வர பிடிக்கல தானே.. எனக்கு டிரீட்மென்ட் பார்க்க உன்னையும் கூட்டிட்டு வந்துட்டேன்னு உனக்கு என் மேல கடுப்பு அப்படித்தானே.. ” என்றான்.
“ம்ஹும்.. இல்ல மாமா. நீங்க உங்க உடம்பு குணமாக தானே இங்க வந்திருக்கீங்க, நீங்க எழுந்து நடந்தா எனக்கு தான் சந்தோசம் ” என்றாள் உண்மையான அக்கறையோடு.
“அப்பறோம் ஏன் டி கிளம்பினதுல இருந்து இப்போ வர முகத்தை உம்முன்னே வெச்சிருக்க” என்றான் அவள் கையைப் பற்றி தன் அருகே இழுத்து நிறுத்துக்கொண்டே.
“அது வந்து.. வந்து.. ” என்று அவள் ராஜேந்திரன் அவளை மிரட்டியதை, அவள் அம்மாவை கொன்றுவிடுவேன் என்று மிரட்டியதை சொல்ல முடியாமல் திணறினாள்.
“என் அப்பா தான் உன்கிட்டே ஏதோ சொல்லிருக்கார். உன்னை மிரட்டி இருக்கார். அதான் நான் இவ்ளோ கேட்டும் நீ எதுவும் என்கிட்டே சொல்ல மாட்டேங்குற.. “என்றவன் அவள் முகத்தை அழுத்தமாக பார்த்துவிட்டு. தன் பாக்கெட்டில் இருந்து போனை எடுத்தவன் “நான் அவர்கிட்டையே கேட்டுக்கிறேன்” என்று ராஜேந்திரனுக்கு அழைப்பது போல பாவனை செய்தான்.
“ஹையோ! மாமா வேணாம். நானே சொல்றேன் ” என்று அவனை நெருங்கி அவன் கையில் இருந்த போனை பிடுங்கி தன் மார்போடு வைத்து பிடித்துக்கொண்டாள்.
“அப்போ சொல்லு.. ” என்றான்.
“அது அது.. ” என்று மீண்டும் சொல்லத்தயங்கியவள் “உங்களை நான் நெருங்கக்கூடாதுனு சொன்னார்.. அப்பறோம்.. ” என்று ஆரம்பித்து அவளை அழைத்து ராஜேந்திரன் சொன்ன அனைத்தையும் சொல்லி முடித்தவள் “சார்கிட்டே இதை தயவு செய்து கேட்டுராதீங்க மாமா..” என்று கெஞ்சினாள்.
“சரி சொல்லல.. ” என்றவன் அவள் விழிகளை ஆழமாகப் பார்த்தான்.
அவள் படபடக்கும் பட்டாம்பூச்சி விழிகளில் அத்தனை சோகம், அழுத்தம், பயம் , ஏமாற்றம் என எல்லாமே அப்பட்டமாகத் தெரிந்தது.
“சரி இப்படியே என் கையைக் கட்டிகிட்டே நிக்குறதா நினைப்பா.. ‘ என்றவன் பார்வை அவள் விழிகளில் இருந்து அவள் மார்பு நோக்கி பயணம் செய்தது.
அவன் பார்வை சென்ற இடத்தை குனிந்து பார்த்தவள் அப்போதுதான் கவனித்தாள் அவனிடம் இருந்து போனை பிடுங்கும் அவசரத்தில் அவன் கையைப் பற்றித் மார்புக்கூட்டுக்குள் வைத்து அணைத்துப் பிடித்துக்கொண்டிருப்பதை.
சட்டென்று அவன் கையை விட்டவள் “அது நான் .. நான் தெரியாம..” என்று அவள் தடுமாற.
“தெரிஞ்சே வெச்சிருந்தாலும் நான் எதுவும் சொல்ல மாட்டேன். ஏன் தெரியுமா?” என்றான் .
அவளும் ஏன்? என்பது போல அவனைப் பார்க்க..
“அந்த இடம் எனக்கு ரொம்ப பிடித்த இடம்.. அங்க எவ்ளோ நேரம் இருக்க சொன்னாலும் நான் இருப்பேன்” என்று சொல்லி அவளைப் பார்த்து கண்ணடித்தான்.
அவன் பேசியதில் அவள் முகம் சிவந்துவிட.. மீண்டும் தலையை கவிழ்ந்து கொண்டாள்.
“என்ன நான் சொல்றது சரி தானே.. ” என்றான் குனிந்து அவள் முகத்தைப் பார்த்து.
“எனக்கு.. எனக்குத் தெரியல.. ” என்றாள் கைகளை பிசைந்து கொண்டே.
“உனக்குத் தெரியலையா? உனக்கும் அது தான் பிடிக்கும்னு எனக்குத் தெரியுமே.. நீ என்னை உன் நெஞ்சுல வெச்சு இறுக்கமா கட்டிக்கும்போது எல்லாம் எல்லாம் நான் தெரிஞ்சுகிட்டேன்” என்றான்.
“ஹையோ! இவர் எதுக்கு இப்படி எல்லாம் பேசுறாரு.. ” என்று உள்ளுக்குள் புலம்பினாள் பூவிழி.
“இங்க பாரு.. “என்றான் யுகேந்திரன்.
அவள் நிமிர்ந்து அவனைப் பார்க்க..
அவள் சிவந்த கன்னங்களை ரசித்தவன் கை நீட்டி அதை தன் கையை நீட்டி வருடியவன் “இங்க நான் வந்தது எனக்கு டிரீட்மென்ட் பண்றதுக்காக இல்ல.. உனக்கு டிரீட்மென்ட் கொடுக்கிறதுக்காக ” என்றான்.
அவள் புரியாமல் அவனைப் பார்த்தவள் “என..க்..கு.. டிரீட்மெண்டா?” என்று வார்த்தைகளை விழுங்கிக் கேட்டவள் “எதுக்கு மாமா..” என்றாள்.
“ம்ம்.. உனக்கு இன்னும் பெர்போர்மன்ஸ் பத்தல.. அங்க இருந்தா உன்னை சரியாவே கவனிக்க முடியாது, நீ வேலை வேலைனு ஓடிருவ . அதான் உன்னை இங்க தனியா கூட்டி வந்திருக்கேன். இனிமேல் டெய்லி தோணுற போது எல்லாம் உனக்கு நான் தான் டிரீட்மென்ட் கொடுக்கப் போறேன்” என்றான்.
பூவிழிக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் டிரீட்மென்ட் என்று எதை சொல்கிறான் என்று விளங்கவும் இல்லை.
அவள் திருதிருவென விழிப்பதை பார்த்து சிரித்தவன் “என்ன புரியலையா?” என்றான்.
“ம்ஹும்..” என்று அவள் தலையை இடவலமாக ஆட்ட..
“இன்னிக்கு நைட் புரிஞ்சிரும். இப்போ போய் பிரெஷ் ஆகிட்டு வா கீழ போலாம் ” என்றான்.
அப்போதும் இந்த மண்டுவுக்கு விளங்கவில்லை. சரி என்றவள் தன் துணிப்பையை எடுத்துக்கொண்டு அங்கிருந்த கப்போர்டில் வைத்தவள் அவன் இடையையும் வைத்துவிட்டு பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டாள்.
அவள் சென்றதும் தன் மொபைலை எடுத்துக்கொண்டு ஜன்னல் பக்கம் சென்றவன் தன் நண்பன் பாஸ்கருக்கு அழைத்தான். ரிங் போன சில நிமிடங்களிலேயே போனை அட்டென்ட் செய்த பாஸ்கர்.
“சொல்லு டா மச்சான்.. கேரளா போயாச்சா?” என்றான்.
“ம்ம்.. வந்துட்டோம் டா.. ” என்றவன் “பூவிழியோட அம்மாவைப் பத்தி எதுவும் தெரிஞ்சுதா?” என்றான்.
“இல்ல டா மச்சான் , அவங்களை பத்தின விஷயம் நான் எவ்ளோ தேடினாலும் ஒன்னுமே கிடைக்க மாட்டேங்குது என்றான் சற்று ஏமாற்றமாக.
“ம்ம்ம்.. பேசாம டிடெக்ட்டிவ் ஏஜென்சிகிட்டே விஷயத்தை சொல்லலாமா?” என்றான்.
” இல்ல டா வேணாம். உன் அப்பாவுக்கு எல்லா இடத்துலயும் ஆள் இருக்கு. அவருக்கு இந்த விசயம் தெரிய வந்தா எப்படி ரியாக்ட் பண்ணுவாருன்னே தெரியாது. எனக்கு கொஞ்சம் டைம் கொடு. நான் நம்ம ப்ரவீங்கிட்டேயும் சொல்லி அவன் சைட்ல இருந்து நமக்கு ஹெல்ப் பண்ண சொல்லலாம். அவன் போலீஸ் டிபார்ட்மெண்டில் இருக்கனால அவனால எதுவும் நமக்கு ஹெல்ப் கிடைக்கும்னு நினைக்கிறேன்” என்றான்.
“சரி டா அப்போ நீயே அவன்கிட்டே பேசிக்கிறியா? இல்ல நான் பேசட்டுமா?”என்றான்.
“இல்ல டா நீ உன் வைஃப் கூட என்ஜோய் பண்ணு , அவன்கிட்டே நானே பேசிக்கிறேன்”என்றவன் மேலும் சில விபரங்கள் கேட்டுவிட்டு போனை வைத்தான்.
பூவிழி முகம் கழுவிவிட்டு வெளியே வர..
“எனக்கு யார் முகம் கழுவி விடுவா.. நீ மட்டும் போய் பிரெஷ்ஷாகிட்டு வந்திருக்க” என்றான்.
“முதல்ல மாதிரினா பரவால்ல.. இப்போதான் அவருக்கு கொஞ்சம் உடம்பு சரியாகிருக்கே.. இவரே முகத்தை கழுவிக்கலாமே ” என்று நினைத்தாலும் அவளுக்கு யுகேந்திரனுக்கு இந்த பணிவிடைகள் செய்ய பிடித்து தான் இருந்தது.
எதுவும் பேசாமல் வந்தவள் அவன் வீல் சேரை தள்ளிக்கொண்டு பாத்ரூமிற்குள் செல்ல.. அவன் சிரித்துக்கொண்டே அவளோடு சென்றான்.
கதை படிச்சீங்களா ஸ்டோரி எப்படிப் போகுது உங்க கருத்துக்களை சொன்னா தானே நான் கதை போக்கு எப்படி இருக்குன்னு புரிஞ்சுக்குவேன்.

4 comments
Super
thank you💖🙏
Super
thank you💖🙏