- Joined
- Oct 6, 2024
- Messages
- 91
Epi-2
"டேய் என்ன விடுடா!!! என்னை எதுக்காக தூக்கிட்டு போற? என்னை எங்க தூக்கிட்டு போற? என்ன முதல்ல என்ன இறக்கி விடு இப்ப எதுக்கு நீ இங்க வந்த... என்னை இறக்கி விடு" என ஆலோன் தோளில் இருந்தவள் அவனை அடித்துக் கொண்டு துள்ளிக்குதித்து கீழே இறங்கினால் வென்மா.
தன்னிடம் திமிரி தன்னை விட்டு விலகி நின்றவளை கோபப்பார்வையோடு பார்த்த ஆலோன் அதே கோபத்தோடு அவளை நெருங்கியவன்.
அவள் கழுத்தில் கை வைத்து அந்த பாரின் சுவற்றில் அழுத்தி நிற்க வைத்தவன் "ஏய் உனக்கு என்னடி ஆச்சு என்ன பார்ட்டிக்கு வர சொல்லிட்டு நீ இங்க என்ன செய்து கொண்டு இருக்கிறாய்? இப்படித்தான் எல்லாரும் முன்னாடியும் டான்ஸ் ஆடுவியா நான் மட்டும் பார்க்க வேண்டியதை இப்படி எல்லாரும் பாக்குற மாதிரி ஆடி காட்டுவியா? " என அவன் கோபமாக அவள் கழுத்தில் கை வைத்து அழுத்தியவன் அவள் அதரங்களில் தன் அதரங்களை அழுத்தி முத்தம் வைத்து கேட்டான்.
"அதே தாண்டா நானும் கேட்கிறேன் நான் மட்டும் ஒட்டி உறவாட வேண்டிய இந்த உடம்ப எனக்கு மட்டும் சொந்தமான இந்த உடம்ப எனக்கு மட்டுமே நினைச்சுட்டு இருந்த உன்ன வேற ஒருத்தி கூட ஒரே கட்டில்ல அதுவும் உடம்பில் ஒட்டு துணி இல்லாம இருக்கிறது பார்க்கும்போது எனக்கு எப்படி இருந்திருக்கும்" என்றால் கோபமாக.
அவள் சொல்வதைக் கேட்டு ஒன்றும் புரியாமல் விழித்த... ஆலோன் "ஏய் உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருச்ச ஏன் ஏதேதோ உளறிக்கிட்டு இருக்க நீ சொன்னது மாதிரி எல்லாம் நான் எங்க? எப்போ?.." என அவன் பேச வர..
"போதும் ஆலோன் இதுக்கு மேல எனக்கு பேசுறதுக்கு ஒன்னும் இல்ல இனி உன்கிட்ட பேச எனக்கு எதுவுமே இல்ல தயவு செய்து எதுவும் தெரியாதவன் மாதிரி என்கிட்ட பேசி நடிக்காத என்ன முதல்ல விடு " என்றவள் அவனைத் தாண்டி வேக வேகமாக சென்றாள்.
வென்மா என்ன சொல்கிறாள் என்று அவனுக்கு உரைக்கவே இல்லை தன்னைத் தாண்டி செல்பவர்களை பார்த்து மீண்டும் வேகமாக அவள் முன்பு வந்து நின்றவன்
"நீ ஏதோ தப்பா புரிஞ்சுகிட்டேன்னு நினைக்கிறேன். நீ சொன்னதுல எதுவுமே எனக்கு சம்பந்தம் கிடையாது. நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளு" என்று முதல்முறையாக இத்தனை வருடத்தில் அவளிடம் இறங்கி வந்து பேசினான் ஆலோன்.
அவன் தன் பின்னால் வந்து கெஞ்ச வேண்டும். நான் கோபப்படும்போது தன்னிடம் இறங்கி வந்து ஆலோன் பேச வேண்டும் என்று இத்தனை நாள் எவ்வளவோ முறை முயற்சித்து இருக்கிறார் ஆனால் அப்போதெல்லாம் இறங்கி வராத ஆள ஆளோன் இன்று இறங்கி வருவதை பார்த்து அவளுக்கு சந்தோஷப்படுவதா தன்னிடம் கெஞ்சிபவனை பார்த்து கர்வம் கொள்வதா என அவளுக்கு தோன்றவில்லை மாறாக அவளுக்கு இப்போது மிகவும் வலித்தது.
தன் கையைப் பிடித்துக் கொண்டு பேசுபவனை பார்த்த வென்மா அவன் பார்வையில் இருந்த காதலைப் பார்த்து ஒரு நிமிடம் தடுமாறி போனால் பின்பு இனி எக்காரணத்தைக் கொண்டும் இவனுக்காக இறங்கி வரக்கூடாது தன்னை ஏமாற்றியவனுக்காக எந்த விதத்திலும் பரிந்து பேசக்கூடாது என நினைத்தவள் அவன் கையை வேகமாக உதறிவிட்டு.
கைதட்டியவள் வாவ் அலோன் இத்தனை வருஷத்துல நீ என்கிட்ட ஒரு முறையாவது இன்னைக்கு பேசின மாதிரி இறங்கி வந்து ஒரு வார்த்தை ஒரே ஒரு வார்த்தை பேசி இருப்பியா ஒவ்வொரு முறையும் நான் தானே உன் கிட்ட வந்து சாரி கேட்கணும் உன்கிட்ட இறங்கி வந்து கெஞ்சனும் நீ வேணும்னு நானே வந்து எல்லாம் செய்யணும். ஆனா இன்னிக்கு முழுக்க முழுக்க தப்பு உன்னோடதுனு புரிஞ்சுட்ட பிறகு இப்படி கொஞ்சம் கூட யோசிக்காம இல்லாம இறங்கி வந்து என்கிட்ட பேசுறியே ச்சி... உன்னை நினைச்சு எனக்கு தான் வெக்கமா இருக்கு இனி என் பின்னாடி வராத உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ப்ளீஸ் கெட் அவுட் ஆப் மை லைஃப்
என்று கோபமாக கத்த...
அவள் கத்துவதை பார்த்து அங்கே பார்ட்டி நடந்து கொண்டு இடத்திற்கு வெளியே கும்பல் கும்பலாக நின்றிருந்தவர்கள் அனைவரும் திரும்பி இவர்கள் இருவரையும் பார்க்க எத்தனை பேர் முன்னிலையில் தன்னை இப்படி இழிவு படுத்தி பேசும் வென்மா பார்த்து ஆத்திரம் வந்தது ஆலோனிற்கு.
மீண்டும் வென்மா ஏதோ பேச வாய் எடுக்க சட்டென்று அவள் முகத்திற்கு நேராக தன் கையை நீட்டியவன் அவளை பேசிவிடாமல் தடுத்து இப்போ என்ன நான் உன் பின்னாடி வரக்கூடாது இவ்வளவு தானே என்றவன் கையெடுத்து அவளைப் பார்த்து கும்பிட்டு பின் அவள் சென்று கொண்டிருந்த வழியை தன் இடது கையால் காட்டி போ என்பது போல கோபமாக சைகை செய்து அவள் செல்வதற்கு வழிவிட்டு நின்றான்.
தான் இவ்வளவு கோபமாக இருப்பதற்கான காரணத்தைச் சொல்லியும் அதற்கான விளக்கத்தை கொடுக்காமல் தன்னை சமாதானம் செய்ய முயலாமல் இப்படி தான் மொத்தமாக போகிறேன் என்று சொன்னதும் போ என வழி விட்டு நிற்கும் ஆலோணை வழி நிறைந்த பார்வையில் பார்த்துக்கொண்டு நின்றிருந்த வென்மா.
ஐ ஹேட் யூ என சொல்லி முடிக்கும் முன்பே அவள் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்துவிட அதை அவன் பார்த்து விடக்கூடாது என்று வேகமாக திரும்பி அவனை விட்டு அவன் வாழ்க்கையை விட்டு அவன் தன்னை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு தூரமாக சென்று விட வேண்டும் என்று முடிவோடு அங்கிருந்து வேகமாக கிளம்பினாள்.
......
பாரில் இருந்து நேராக தன்னுடைய வீட்டிற்கு வந்த ஆலோன் கோபமாக வாசல் கதவை ஓங்கி உடைத்து உள்ளே என் வந்தவன் நேராக அவன் வீட்டில் இருந்த மினி பார்க்க சென்று அங்கிருந்து ஒரு பெரிய மது பாட்டிலை எடுத்து அப்படியே ராவாக தன் வாயில் சரித்தான்.
மடமடவென அவ்வளவு பெரிய பாட்டிலில் இருந்த மதுவை தன் தொண்டைக்குள் இறக்க ஏற்கனவே எரிந்து கொண்டிருந்த அவனது மன வேதனை மேலும் கொழுந்து விட்டு எறிய ஆரம்பித்தது.
குடித்து முடித்த பாட்டிலை கோபமாக சுவற்றில் விட்டெரிய அது சுக்கல் சுக்கலாக உடைந்து அந்த அறை முழுவதும் சிதறியது அதில் சிதறிய சில கண்ணாடி துண்டுகள் அவன் மீதும் பட்டு லேசான காயங்களோடு தெரித்து தரையில் விழுந்தது.
நள்ளிரவு வேளையில் அமைதியான அவன் வீட்டில் பாட்டில் உடைந்து சிதறும் சத்தம் கேட்டதும் அவன் வீட்டு வேலையாட்கள் எல்லாம் பதறி அடித்துக் கொண்டு அவன் இருந்த அறைக்கு ஓடி வந்தனர்.
அவர்கள் வந்து அவனை பயந்தபடி பார்த்துக் கொண்டு நின்றிருக்க அலோன் மற்றொரு மது பாட்டிலை எடுத்து தன் வாயில் சரிக்க அதை பார்த்த அவன் வீட்டு வேலையால் வேகமாக வந்து ஆலோன் கையில் கையைப் பிடித்துக் கொண்டு தம்பி வேண்டாம் இவ்வளவு குடிக்கிறது உடம்புக்கு நல்லதில்ல என்று அவனை தடுக்க...
அண்ணா முதல்ல ஏன் கைய விடுங்க நான் ஏற்கனவே கோவத்துல இருக்கேன் அப்புறம் உங்களை எதுவும் சொல்லிடப் போறேன் தயவு செய்து இங்கிருந்து போங்க என கத்தினால் ஆலோன்.
தம்பி சொன்னா கேளுங்க என்று அவன் வீட்டில் எத்தனை வருடமாக விசுவாசியாக வேலை செய்து கொண்டு இருக்கும் சேகர் அவன் கையை பிடித்துக்கொண்டு ஆலோனிடம் கெஞ்ச...
அவர் கையை உதறிய ஆலோன் அண்ணா இப்போ இங்கு இருந்து போகப் போறீங்களா இல்லையா என மேலும் கோபமாக அவன் கட்ட ஆலோனின் கோபத்தை பார்த்த மற்றும் ஊழியர்கள் அங்கே இருப்பது சரி இல்லை என அங்கிருந்து ஓடி விட்டனர்.
அவனின் கோபம் கட்டுக்கடங்காமல் இருப்பதை பார்த்த சேகருக்கு ஆலோனின் இந்தக் கோபம் பெரிய பிரச்சனையில் கொண்டு வந்து விடும் என உணர்ந்தவர் அவனை அவன் கோபத்தை கட்டுப்படுத்தி சமாதானம் செய்ய வென்மாவால் மட்டுமே முடியும் என்று தன் மொபைலை எடுத்து அவளுக்கு கால் செய்தார்.
இங்கே ... ஆலோனிடம் கோபித்துக் கொண்டு அவனிடமிருந்து மொத்தமாக விலகிச் செல்ல வேண்டும் அவனை மீண்டும் தான் பார்த்து விடக்கூடாது என்ற முடிவோடு நாட்டை விட்டே கிளம்பி இருந்தால் வென்மா சரியாக அவள் பிளைட் ஏறி தன்னுடைய சீட்டில் அமரவும் சேகர் அவளுக்கு கால் செய்யவும் சரியாக இருந்தது.
தன் பரிசில் இருந்த மொபைலை எடுத்து பார்த்த அதில் சேர்க்கும் அழைத்திருப்பதை பார்த்ததும் அவசரமாக காலை அட்டென்ட் செய்யலாம் என்று நினைத்தாள் ஏனென்றால் சேகர் அவ்வளவு எளிதில் வெண்மாவிற்கு கால் செய்ய மாட்டார் ஆலோனுக்கு எதுவும் பிரச்சினை அல்லது ஆளுநர் யாருக்காவது பிரச்சனை என்றால் மட்டுமே அவளுக்கு கால் செய்வார்.
இன்று அவர் அவளுக்கு அதுவும் இந்த நள்ளிரவில் கால் செய்திருக்கிறார் என்றால் அது கண்டிப்பாக ஆளானால் மட்டும்தான் என்பதை உணர்ந்தவள் இனி அவன் என்ன செய்தால் என்ன எக்கேடு கெட்டுப் போனால் தனக்கு என்ன என்று தன் அவனிடம் சாய்ந்த தன் மனதை இறுக பிடித்து அவனிடம் சாய விடாமல் மனதை கல்லாக்கி கொண்டு அமர்ந்தவள் தன் போனை சுவிட்ச் ஆப் செய்து பர்சில் போட்டாள்.
போன் எடுக்கப்படாமல் போகவே மீண்டும் போனை கட் செய்து விட்டு வெண்மாவிற்கு சேகர் கால் செய்ய இப்போது அவள் போன் சுவிட்ச் ஆஃப் என்று வந்தது சேகருக்கு ஒன்றுமே புரியவில்லை தம்பி கொஞ்சம் இருங்க நான் வெண்மாவை நேராவே போய் கூட்டிட்டு வரேன் எந்த பிரச்சினையா இருந்தாலும் நீங்க வென்மாகிட்ட பேசினா சரியாயிடுவீங்க இப்படி வீணா கோபப்பட்டு உங்க உடம்பு நீங்களே கெடுத்துக்காதீங்க என்றவர் திரும்பி விரைந்து வெண்பாவை காண செல்ல போக...
நில்லுங்க என்று கத்தினால் ஆலோன்.
அவன் குரலில் இருந்த கோபத்தை கண்டு திரும்பி வெண்பாவை அழைக்க சென்ற சேகரின் முதுகுத்தண்டு சில்லி இட்டது.
சற்று பயத்தோடு திரும்பி ஆலோணை பார்க்க நீங்க மட்டும் அவளை கூட்டிட்டு வர போனீங்கன்னா இனிமேல் இந்த வீட்டில உங்களுக்கு இடம் கிடையாது என்று தீர்க்கமாக ஆலோன் கூற...
அவன் அழுத்தமான வார்த்தைகளும் கோபமான பார்வையும் அவரை அங்கிருந்து நகர விடாமல் செய்தது அவர் அப்படியே உறைந்து நிற்க தரையில் உடறிச் சிறிது சிதறிய கண்ணாடி கல்லின் மேல் பூட்ஸ்னியாத தன் கால்களால் சென்று நேராக தன்னரைக்குள் சென்று கதவடைத்துக்கொண்டான்.
போனை சுவிட்ச் ஆப் செய்த வென்மா கனத்த இதயத்தோடு ஜன்னலை வெறித்தாள்.
முதன் முதலில் வென்மா ஆலோன் இருவரின் முதல் சந்திப்பில் தன் நினைவுகளை ஓடவிட்டாள்.

Author: sinamikawrites
Article Title: காதலா 2
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.