- Joined
- Oct 6, 2024
- Messages
- 91
மாறன் வசுந்தராவின் அருகில் அமர்ந்து இருந்த தன் தந்தையை பார்த்தான்.
அவர் உடனே "நான் இல்லை அவன் தான்" என்று ஜாடை செய்து மதியை சுட்டி காட்டி கூற...
அவனை முறைத்துவிட்டு வசுந்த்ராவை பார்த்தவன் "பாட்டி இப்போ எதுக்கு அந்த விஷயத்தை பத்தி பேசணும். முதல்ல மீட்டிங்க்கை பார்க்கலாம் . அப்பறோம் நாம தனியா பேசிக்கலாமே "என்று அவரை அடுத்து பேசவிடாமல் தடுக்க முயல.
"மிஸ்டர் மாறன் உங்க பாட்டிகிட்டே நீங்க பேசுறதை பார்த்த அவங்க சொல்ல போற அந்த குட் நியூஸ் உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும் போலயே.. அப்போ நாங்களும் அந்த குட் நியூஸை தெரிஞ்சுக்கணும். உங்க பாட்டியை தடுக்காதிங்க.. மீட்டிங் தானே நாங்க யாரும் அவசர படல... பொறுமையா அந்த குட் நியூஸை கேட்டுட்டு மற்றதை அப்பறோம் பார்க்கலாம் " என்றார் கூட்டத்தில் இருந்த ஒருவர் .
"பாத்தியா மாறா எல்லாரும் ரொம்ப ஆர்வமா இருக்காங்க . அப்போ கண்டிப்பா இப்போவே சொல்லியாகணும் "என்றவர் அடுத்து பேச வர...
எங்கே தனக்கும் காந்தளுக்கும் திருமணம் ஆன விஷயத்தை அனைவரிடமும் கூறிவிடுவாரோ... காந்தள் கேட்டுக்கொண்டது போல தங்கள் திருமணத்தை ரகசியமாக வைத்திருக்க முடியாமல் போய்விடுமோ என்று யோசித்தவன் வசுந்த்ராவை தடுக்க நினைக்க...
ஆனால் அதற்குள்ளாக "என்னோட முதல் பேரன் இளமாறனுக்கு நேற்று காலையில் ரெஜிஸ்டர் மெரைஜ் ஆகிடுச்சு . அவன் ஒரு வழியா தன் வழக்கை துணையை தேர்ந்தெடுத்து கைபிடிச்சதை உங்க எல்லாருக்கும் தெரிய படுத்துறேன் " என்று மாறனையும் , அவன் பின்னால் அதிர்ச்சியாக நின்று இருந்த காந்தளையும் பார்த்து கூறினார் .
அவர் பார்வையை கண்டு காந்தளுக்கு முதுகு தண்டு சில்லிட்டது . அவளுக்கு இவ்வளவு நேரம் மாறனும் , வசுந்த்ராவும் எதற்காக பேசிக்கொண்டிருந்தார்கள் என்று புரியாமல் பார்த்துக்கொண்டு இருக்க.. வசுந்தரவின் இந்த அறிவிப்பு அவளுக்கு அதிர்ச்சியே .
மாறன் திருமணம் செய்து கொண்ட விஷயம் கேட்டு அங்கு கூடி இருந்தவர்களில் பெரும்பாலானோருக்கு மகிழ்ச்சியே... தங்கள் பெண்ணை மாறன் குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு திருமணம் முடித்து வைக்க நினைத்து இருந்தவர்கள் இப்பொது வசுந்தராவின் இரு பேரன்களுக்கும் திருமணம் ஆகிவிட்டதை எண்ணி சிலருக்கு ஏமாற்றமும் இருந்தது.
அனைவரும் மாறனுக்கு வாழ்த்து சொன்னவர்கள் "என்ன மிஸ்டர் மாறன் இவ்ளோ பெரிய சாம்ராஜ்யத்தின் சிஇஓ நீங்க உங்க கல்யாணத்தை இவ்ளோ சிம்பிலா ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டிங்களே.. "என்றனர்.
சிலர் "மிஸ்டர் மாறன் எங்களை உங்க கல்யாணத்துக்கு தான் கூப்பிடல அட்லீஸ்ட் உங்க வைஃபை எங்க எல்லாருக்கும் இண்ட்ரோடியுஸ் பண்ணி வைக்கலாமே. அவங்க எங்கே இருகாங்க ? என்ன பண்ணிட்டு இருக்காங்க? " என்று ஆளுக்கு ஒரு கேள்வியை மாறன் முன் வைக்க..
அவர்களிடம் எல்லாம் பதில் கூற முடியாமல் தன் பாட்டியை திரும்பி முறைத்தான் மாறன் .
"என்னப்பா என்னை பார்க்குற.. ஓ... புரிஞ்சுது . உன்னோட மனைவி யாருன்னு இந்த பாட்டி வாயாலையே எல்லாருக்கும் சொல்லணும்னு நினைக்குறியா "என்றவர் காந்தள் பார்க்க..
அவளோ வேண்டாம் என்பது போல அதிர்ச்சியில் தலையை இடவலமாக ஆட்டினாள்.
அவளை பார்த்து "இங்கே வாம்மா..." என்று வசுந்தரா அழைக்க...
"இல்ல நான் வரல..."என்கிற ரீதியில் ஒரு வித பீதியில் காந்தள் தலையாட்டியவள் மாறனை பார்க்க..
"இனி யார் தடுத்தாலும் தன் பாட்டி தான் செய்ய நினைத்ததை நிறுத்த போவது இல்லை" என்பதை புரிந்து கொண்டவன் காந்தளை போக சொல்லி தலையை ஆட்டினான் .
"அட என்ன அவனை பாக்குற... நீ இங்கே இப்போ வர போறியா? இல்லையா ? "என்று அதட்டலாக காந்தளை அழைக்க .
அடுத்த நிமிடம் அவர் அருகில் போய் நின்றாள்.
வசுந்திரா காந்தளை அழைத்து தன் பக்கம் நிற்க வைத்ததும் அங்கு கூடி இருந்தவர்கள் ஒன்றும் புரியாமல் அவரை பார்க்க...
"மாறனை கல்யாணம் செய்துகிட்ட பொண்ணை எங்களுக்கு அறிமுகம் செய்து வைக்க சொன்னா , இப்போ எதுக்கு சம்மந்தம் இல்லாம மிஸ்டர் மாறனோட பியேவை கூப்டு நிக்க வெச்சிருக்கீங்க "என்று சிலர் கேள்வி எழுப்ப.
"சொல்றேன் சொல்றேன்... அவசரப்படாதீங்க "என்றவர் .
தன் அருகில் நின்று இருந்த காந்தளை பார்த்துவிட்டு "என் பெரிய பேரன் கல்யாணம் செய்திருக்கிறது வேற யாரும் இல்லை. அவன்கிட்டே பியேவா வேலை செய்யுற இந்த பொண்ணை தான் "என்றவர்
காந்தளிடம் திரும்பி "உன் பேர் என்னம்மா "என்றார் .
அங்கு கூடி இருந்தவர்களின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தயங்கியபடியே குனிந்து வசுந்த்ராவிடம் "க... காந்தள்.." என்றாள்.
"ம்ம்ம் காந்தள். நல்ல பேரா இருக்கே... " என்று அவளை பார்த்து சிரித்தவர் .
"இந்த காந்தளை தான் என் பேரன் மாறன் கல்யாணம் செய்திருக்கான் "என்றார்.
அங்கு கூடி இருந்த நீலகண்டன் முதற்கொண்டு அனைவர்க்கும் இது ஆச்சரியமாக அதிர்ச்சியாக இருந்தது .
"வசுந்திரா அம்மா என்ன இப்படி பண்ணிட்டாங்க... உங்க ரெண்டு பேரன்களும். ரெண்டு பேருமே உங்க தகுதிக்கும், அந்தஸ்திற்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாம இப்படி சம்மந்தமே இல்லாம கல்யாணம் செய்திருக்காங்க. நீங்களும் அதை பெருமையா எல்லாருக்கும் சொல்லிட்டு இருக்கீங்க.. ஏன் உங்க அந்தஸ்த்துக்கு ஏற்ற ஆளுங்க யாருமே இங்க இல்லையா . எங்க வீடு பொண்ணுங்களை எல்லாம் விட்டுட்டு இப்படி லோ கிளாஸ் இடத்துல இருந்து உங்க குடும்பத்துக்கு பொண்ணு எடுத்திருக்குறது உங்களுக்கு வேணும்னா சாதாரணமா இருக்கலாம் . ஆனா எங்க கௌரவத்துக்கு இதை ஏத்துக்க முடியல் "என்று கூட்டத்தில் இவரக்ளுக்கு ஆகாதவர்கள் சிலர் கூற.
அவர்கள் பேசியதை எல்லாம் கெட்டி காந்தளும் , கயல்விழியும் வருத்தமடைந்தனர் . அவர்கள் பேச்சில் காயம்பட்ட தங்கள் உணர்வுடைகளில் வெளிகாட்டிக்கொள்ளாமல் அமைதியாக நின்று இருக்க..
தன் இருபக்கமும் நின்று இருந்த காந்தள் , கடல்விழியின் கையை பிடித்துக் கொண்டு எதிரே பெரியவர்களை பார்த்து
"உங்க கௌரவத்துக்காக நீங்க நினைச்சதும் உங்க வீட்டுல எங்களால சம்மந்தம் பண்ண முடியாது . என் பேரன்களுக்கு என்ன பிடிக்குமோ அதை அவங்க இஷ்டத்துக்கு நடத்த விடுறதுதான் சரியா இருக்கும்னு நான் நினைக்குறே. ஏன்னா காலம் பூரா வாழ போறது அவங்க ரெண்டு பேரும் தான் . கௌரவத்தை பார்த்துட்டு பிடிக்காத ரெண்டு பேரை கல்யாணம் செய்து வைத்து அவங்களை கஷ்டப்படுத்த நான் விருமபல "என்றார்.
அவர் பதிலில் திருப்தி அடையாதவர்களில் சிலர் வெளியேறிவிட.. அதை பொருட்படுத்தாத வசுந்திரா மற்றவர்களை பார்த்து " உங்க எல்லாருக்கும் என் பேரன்களுடைய ரிசெப்ஷன் இன்விடேஷன் சீக்கிரமே அனுப்பி வைக்குறேன். மறக்காம எல்லாரும் என் பேரன்களுக்கு உங்க வாழ்த்துக்களை கொடுக்கணும்னு விரும்புறேன் "என்றவர் இருங்கியில் இருந்து எழுந்து பேத்திகளின் கைபிடித்து அங்கிருந்து செல்ல போக...
"பாட்டி நான் உங்களை எதுக்கு இங்கே வர சொன்னேன் . நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க "என்று அவர் செல்லும் வழி மறித்து நின்றான்.
அவனை முறைத்தவர் "நீ சொன்னதை தானே நான் செய்தேன். மாறன் இப்படி திடீர்னு கல்யாணம் செய்துட்டு வந்துட்டான் , அதுவும் நம்ம ஆஃபிஸில் வேலை கல்யாணம் செய்துகிட்டான் . நம்ம கம்பெனி ரூல்ஸை மீறிட்டான். அதனால அவனை இந்த் சிஇஓ பதவியில் இருந்து நீக்கணும்னு சொல்லி தானே என்னை இ்ங்கே வர சொன்னே. நீயே யோசிச்சு பாரு இந்த ஆஃபிஸில் வேலை பாக்குறவங்களுக்கு தான் அந்த ரூல்ஸ் எல்லாம் . அதோட சிஇஓ என் பேரனுக்கு கிடையாது "என்றவர் அவனை தாண்டி அங்கிருந்து செல்ல...
அவர் பின்னால் தமிழ்மாறனும், இளமாறனும் சென்றனர்.
மதியை தாண்டி செல்லும்போது அவனை பார்த்து சிரித்துவிட்டு மாறன் செல்ல...
அவன் பார்வையில் இருந்த ஏளனத்தை கண்டு கொதித்தெழுந்த மதி தான் போட்ட பிளானை எல்லாம் தன் பாட்டி இப்படி ஒன்றுமில்லாமல் செய்துவிட்டாரே என்று எண்ணி நொந்தது போனவன் தன் கோபத்தை அவர்களிடம் காட்டாமல் அங்கிருந்த பைல்களை கீழே தள்ளி மேஜையில் குத்தி தன் கோபத்தை காண்பித்து கொண்டு இருக்க...
அவன் கோபப்படுவதை பார்த்து மிராண்ட கயல்விழியை தன் பக்கம் திருப்பி "அவன் அப்படி தான் . நீ வா ... " என்று இருவரையும் தன்னோடு அழைத்து சென்றார் ...
அவர்கள் பின்னால் வந்த மாறன் "பாட்டி எங்கே போறீங்க... அடுத்தடுத்து மீட்டிங் இருக்கு "என்றான் .
"நீ பொறுமையா இருந்து மீட்டிங்கை முடிச்சிட்டு வா . நான் என் பேத்திகளை கூப்பிட்டு வீட்டுக்கு போறேன் "என்று அவன் பதிலுக்கு காத்திராமல் அங்கிருந்து செல்ல...
அடுத்து என்ன காந்தள் இல்லாமல் மாறனுக்கு வேலை ஓடுமா என்ன உடனே தன் பின்னால் வந்து கொண்டு இருந்த நீலகண்டனை அழைத்து "அங்கிள் நீங்க மீட்டிங்கை ஹண்டில் பண்ணிக்கோங்க மாற்றத்தை அப்பறோம் பார்க்கலாம்" என்று தன் பாட்டியின் பின்னால் அவன் காரில் வீட்டிற்கு புறப்பட்டான் .