EPI 10
கேரளா வந்த முதல் இரு நாட்கள் அமைதியாக தான் சென்றது ஏனோ பூவிழியை தொந்தரவு செய்யாமல் அவளை நிம்மதியாக அந்த அழகை ரசிக்க விட்டான் யுகேந்திரன்
சின்னக் குழந்தை போல காலைப் பனியை ரசிப்பதிலும் அவர்கள் அமைத்திருந்த தோட்டத்திற்கு வரும் அழகழகான பறவைகளையும் மயில்களையும் கண்டு சந்தோஷம் கொள்ள அதன் பின்னே ஓடி அவற்றை துரத்தி விளையாடுபவளை பார்த்து ஆச்சரியமாக இருந்தது.
வயிற்றில் பிள்ளையை சுமந்து கொண்டிருக்கிறாள் அந்த தாய்மைக்கான முதிர்ச்சியும் அவளிடம் இருக்கிறது. அதேபோல சிறு சிறு பிடித்த விஷயங்களைக் கண்டால் மொத்தமாக அனைத்தையும் மறந்து முழுவதும் குழந்தைத்தனமாக மாறும் அவளது இன்னொரு பரிமாணம் யுகேந்தரனை ஆச்சர்யப்படுத்தியது.
அவளோடு காலையில் நேரமே இந்த இரண்டு நாட்களாக தோட்டத்திற்கு வந்து விடுகிறான். அவர்கள் வீட்டின் முன்பு ஒரு சிறிய தோட்டம் உள்ளது. அதில் பூக்கள், காய்கறி, பழ மரங்கள் என அதற்கென தனியாக தோட்டம் அமைத்திருந்தார் சாந்தம்மா.
வீட்டில் சமைக்கும் உணவுகளுக்குத் தேவையான காய்கறிகள் எல்லாம் இந்த தோட்டத்திலிருந்து தான் பறித்து செய்கிறார் அதை முதல் நாளில் வந்து பார்த்தவளிடம் இப்போது வரை அதன் மீது பிரியும் அதிகமாகி விட்டது பூவிழிக்கு.
பூவிழி பார்த்துடி நீ கர்ப்பமா இருக்க இப்படி ஓடி ஓடி விளையாடுறதை பார்த்தா குழந்தை இப்பவே டெலிவரி ஆயிடும் போல இருக்கு என்று அவளை அதட்டினான் யுகேந்திரன்.
அதெல்லாம் எதுவும் ஆகாது மாமா , இங்க பாருங்க அந்த மறைந்துள்ள ஒரு அணில் மாம்பழத்தை எப்படி சாப்பிடுதுன்னு.. என்று அவன் அருகே வந்தவள் தூரத்தில் இருந்த மாமரத்தில் பழுத்துத் தொங்கும் மாம்பழங்களுக்கு இடையில் புகுந்து ஒரு அணில் தன் குட்டிக்கைகளால் பிடித்து கொரித்துக் கொண்டிருந்தது.
“எங்க ?” என்று யுகேந்திரன் தெரியாமல் தேட..
“அங்க பாருங்க அதோ.. அங்க தான் ” என்று அவன் முகத்திற்கு அருகே குனிந்து கையை நீட்டி அணிலைக் காட்டினாள்.
அவள் நெருக்கத்தில்.. அவள் வாசனையில் யுகேந்திரனுக்கு அடுத்து எதையும் கவனிக்கும் மனநிலை மறந்து போனது. திரும்பி நெருங்கி நிற்கும் அவள் முகத்தைப் பார்க்க..
“அங்க பாருங்க.. அங்க பாருங்க மாமா.. ” என்று அவள் கண்கள் சுருக்கி சிரித்துக்கொண்டே சொல்ல..
அவள் சிரிப்பை தன்னை மறந்து ரசித்து இருந்தவனை திரும்பிப் பார்த்தவள் “என்னை ஏன் பாக்குறீங்க.. அங்க பாருங்க ” என்று அவன் முகத்தைப் பற்றி திரும்பியவள் தூரத்தில் இருந்த அணிலைக் காட்டினாள்.
அவள் முகத்தோடு உரசிக்கொண்டு தன் முகத்தை கொண்டு சென்றவன் அவள் மெல்லிய ஸ்பரிசத்தில் லயித்துக்கொண்டே அவள் காட்டிய திசையைத் திரும்பிப் பார்த்தான். அங்கே மரக்கிளையில் தொங்கிக்கொண்டிருந்த மாம்பழத்தை தன் குட்டி கைகளில் தாங்கிப் பிடித்து அணில் ஒன்று பழத்தை கொறித்துக் கொண்டிருந்தது.
பூவிழியின் நெருக்கத்தில் தாறுமாறாக ஓடிக்கொண்டிருந்த அவன் உணர்ச்சிகள் இப்பொது அந்த அணிலின் செயலைப் பார்த்ததும் அவன் சிந்தனைக் குதிரை கடிவாளம் இல்லாமல் ஓடத் துவங்கியது.
அந்த மாம்பழங்களை அணில் கையில் ஏந்தி இருப்பதை பார்த்ததும் அவன் எண்ணம் பூவிழியோடு இரவுகளில் ஒன்று கலந்த நினைவுகள் வந்து அவன் எண்ணத்தை வேறு திசைக்கு மாற்றி இருந்தது.
மெல்ல அவள் சேலையைத் தாண்டி அவன் கைகள் அவள் கனிகளை நோக்கி பிரயாணிக்கத் துவங்கின.. சேலைக்குள் இருந்த அவன் கைகள் அடுத்து செய்த செயலில் பூவிழி விக்கித்துப் போய் சட்டென அவனைத் திரும்பி பார்த்தாள்.
அவனோ குறும்பாக சிரித்தபடி அவளையே பார்த்துக்கொண்டிருக்க..
சட்டென அவன் கைகளை தட்டி விட்டவள். “என்ன பண்ணிட்டு இருக்கீங்க. நாம வெளிய இருக்கோம் மாமா ” என்று ரகசியமாக அவனிடம் சொன்னாள்.
அனைவர் முன்னைலையிலும் அவனை இதுவரை மாமா என்று அழைத்ததில்லை அவளை அப்படி அழைக்க சொன்னதே யுகேந்திரன் தான். அவளைப் பிடிக்கவில்லை என்றாலும் அவள் தனக்கு மனைவி ஆன பின்பு. தன்னை சார் .. சார்.. என்று அழைப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை. அதனாலேயே அவள் ஊரில் கணவனை எப்படி பெயர் சொல்லி அழைப்பார்களோ அப்படியே அழைக்க சொன்னான்.
அவளோ மாமா என்று அழைக்க ஆசையாக இருந்தது. ஆனால் ராஜேந்திரனும், மற்றவர்களும் இருக்கும்போது அவனை அழைக்காமல் அறைக்குள் இருக்கும்போது மட்டும் அழைப்பதாக அவனிடம் கெஞ்சிக் கூத்தாடி அவனிடம் சம்மதம் வாங்கினாள்.
அதனாலேயே இங்கு வந்த பிறகும் அனைவர் முன்னைலையிலும் அவனை மாமா என்று அழைக்காமல் அவன் அருகே அவனுக்கு மட்டும் கேட்கும்படி பேசினாள்.
“வெளியே இருந்தா என்ன? இங்க தான் யாரும் இல்லையே.. ” என்று சுற்றிலும் பார்வையை சுழல விட்டுக் கொண்டே அவள் இடையில் கையை வைத்து தன்னோடு சேர்த்து இழுத்தான் .
பூவிழிக்கு தங்களை யாரும் பார்த்துவிடுவார்களோ என்று பயம். தாங்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் காட்சி இங்கே வேலை செய்பவர்களுக்குத் தெரிந்தால் ராஜேந்திரனுக்கு தகவல் சென்றுவிடுமே.. அந்த பயம் தான் அவளுக்கு . அவள் பார்வையை சுற்றிலும் சுழல விட்டபடி “மாமா யாராவது பாத்துடப் போறாங்க . எனக்கு பயமா இருக்கு.. ” என்று கெஞ்சுவது போல பேசினாள்.
“நம்ம என்ன கள்ளக்காதலா டி பண்ணிட்டு இருக்கோம். எதுக்கு நீ இப்போ பயந்து நடுங்குற..” என்றான் அவள் இடையில் இருந்த கையை எடுக்காமல் அவன் பிள்ளையையும், அவளையும் ஸ்பரிசித்தபடி.
“இல்ல ரூம்குள்ளையினா பரவால்ல மாமா. அந்த மாதவன் சார் எதுவும் பார்த்துட்டா அப்பறோம் நேரா ஊர்ல இருக்க மாமாவுக்கு போன் பண்ணி சொல்லுவாரு.. அதான் கொஞ்சம் பயமா இருக்கு” என்றாள்.
இப்படி எங்கோ இருக்கும் தன் தந்தையை நினைத்து பயந்து கொண்டு தன்னை இரண்டு நாட்களாகவும், இன்றும் நெருங்க விடாமல் விளக்கி வைப்பவளைக் கண்டு கடுப்பானது யுகேந்திரனுக்கு.
அவளை முறைத்துவிட்டு வேகமாக தன் வீல் சேரை இயங்கிக்கொண்டே வீட்டிற்குள் சென்றவன் லிப்ட் மூலம் மாடிக்கு சென்றுவிட்டான்.
அவனின் இந்த திடீர் கோபம் கண்டு பூவிழிக்கு கண்கள் குளமானது.
அவன் பின்னாலேயே வேகமாக அவள் செல்வதற்குள் லிப்ட் மேலே சென்றுவிட்டது.
சோகத்தோடு அப்படியே நின்று இருந்தாள். ஆசையாக அணைக்கும் புருசனைக் கூட தள்ளி வைக்க வேண்டிய நிலை தனக்கு வந்துவிட்டதே என்று கவலைப் பட்டாள் பூவிழி.
பூவிழியிடம் கோபித்துக் கொண்டு அறைக்கு சென்ற யுகேந்திரனையும், அவன் பின்னே சோகமாக வந்த பூவிழியையும் பார்த்த சாந்தம்மா மெல்ல அவளை நோக்கி வந்தார்.
அவர் வருவதைப் பார்த்ததும் அவசரமாக தன் புடவைத் தலைப்பில் கண்ணீரைத் துடைத்துக்கொண்டவள் அவரைப் பார்த்து மென்மையாகப் புன்னகைக்க..
“என்னடி இது? அவனுக்கும் உனக்கும் இத்ரயும் வலிய சண்டையா?” என்றார்.
அவர் பேசியதில் புரிந்ததை வைத்து “ம்ம்.. சண்டை தான் எங்களுக்குள்ள.. ” என்று சொல்லும்போதே கண்களில் மீண்டும் நீர் கோர்த்துக்கொள்ள..
“எந்த காரணம் .. ” என்றவர் “ரெண்டு பேரும் தோட்டத்துல வெச்சு.. ” என்று சொன்னவர் அதற்கு மேல் சொல்ல வெட்கப்பட..
அவளுக்கோ சாந்தம்மா யுகேந்திரனின் லீலைகளை பார்த்துவிட்டார் என்று வெட்கமாகி விட்டது.
முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டு வெட்கப்புன்னகை சிந்தியவள் “அதுக்கு தான் சண்டையே.. அவருக்கு நான் புள்ளை மட்டும் தான் பெத்துக் கொடுக்கணும். அவரோட சந்தோசமா இருக்கக் கூடாது. அவரும் என்கூட நெருக்கமா இருக்கக் கூடாதுனு அவர் அப்பா சொல்லிருக்கார். ஆனா இவர் அதை எல்லாம் பெருசா எடுத்துக்காம என்கிட்டே வந்து கொஞ்சி குலவுறார்”என்றாள்.
என்னவோ சாந்தம்மாவிடம் அவளால் எதையும் மறைக்க முடியவில்லை . அவரைப் பார்த்தாள் நல்லவர் போல தான் அவளுக்கும் தோன்றியது.
அவள் சொன்னதைக் கேட்டவர் “ஐயா இப்படி எல்லாமா சொன்னார் ” என்றார்.
“ம்.. இங்க இருக்க மாதவன் சார் இருக்காருல்ல அவர் தான் நாங்க இங்க எப்படி இருக்கோம்னு அப்போ அப்போ ஊர்ல இருக்க சார் கிட்டே தகவல் சொல்லறாரு. அவர் எங்களை இப்படி எதுவும் பாத்துட்டா அப்பறோம் எனக்கு தானே பிரச்சனை . அதை தான் அவர்கிட்டே சொன்னேன். அதுக்கு கோச்சுட்டு போயிட்டார். நானும் என்ன தான் பண்ணுவேன், ஒரு பக்கம் இவர் அப்பா மகன்கிட்ட போகவே கூடாதுனு சொல்றார். இன்னோரு பக்கம் இவர் என்னைவிட்டுப் போகவே மாட்டேங்குறார். நான் என்ன தான் பண்றது ” என்று புரியாமல் பூவிழி சொல்லி அழ..
அவளைப் பார்க்கவே சாந்தம்மாவுக்கு பாவமாக இருந்தது “இப்படி புருஷன் பொண்டாட்டியை பிரிச்சு வெக்குறது எவ்ளோ பாவம் ” என்று நினைத்தவர்.
“நீ முதல்ல போய் உன் புருஷனை சமாதானம் பண்ணி அவன்கூட சந்தோசமா இருக்க வழியைப் பாரு. நான் அந்த மாதவன் உங்க பக்கம் வராத மாதிரி பாத்துக்கிறேன்” என்று அவளுக்கு ஆதரவாகப் பேச..
பூவிழியோ ஆச்சர்யமாக அவரைப் பார்த்தாள்.
“ம்ம்… போ.. ” என்று அவளை மேலே சொன்னார்.
பூவிழியும் தனக்காக ஒரு ஜீவன் தன் மீது அக்கறை காட்டுகிறதே என்ற சந்தோசத்தில் தன் கண்ணீரை துடைத்துக்கொண்டே லிப்ட்டில் ஏறினாள் மேலே செல்ல..
சாந்தம்மாவோ அவளை மேலே அனுப்பிவிட்டு இந்த மாதவனை கொஞ்ச நாள் இங்கன வர விடாம ஏதாவது பண்ணனும்.. என்று யோசனையில் மூழ்கினார் .
இங்கே அறைக்குள் வந்த பூவிழி யுகேந்திரனைப் பார்க்க..
அவனோ கட்டிலில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தான். பூவிழி கதவை தாளிட்டவள் மெல்ல அடிமேல் அடி வைத்து அவனை நோக்கி சென்றாள்.
அவள் வருவது தெரிந்தும் கண்டும் காணாதவன் போல அமர்ந்து இருந்தான்.
அவனிடம் வந்தவள் “மாமா என் மேல கோபமா?” என்றாள்.
யுகேந்திரன் எதுவும் பேசாமல் அமைதிகாக்க..
“வெளிய யாரும் நம்மளை அப்படி பாத்துருவாங்கன்னு தானே நான் வேணாம்னு சொன்னேன்” என்றாள் .
அதற்கும் அவன் எதுவும் பேசவில்லை,
“என்கிட்டே பேசுங்க மாமா இப்படி இருக்காதிங்க. எனக்கு அழுகை வர போல இருக்கு.. ” என்று சொல்லும்போதே அவள் குரல் கரகரத்தது.
அதை உணர்ந்தவன் திரும்பி அவளை பார்க்க..
கண்களில் கோர்த்திருந்த கண்ணீரை வெளியே விடாமல் உள்ளிழுத்துக் கொண்டவள் “சாரி மாமா.. ” என்றாள்.
“என் பொண்டாட்டி தான டி நீ.. ” என்று அவள் கையைப் பற்றி தன் பக்கம் இழுத்தான்.
“ம்ம்.. ” என்றாள் தலையை கவிழ்ந்து கொண்டே.
“உன்கூட நான் சந்தோஷமா இருக்கணும்னு நினைச்சா இருப்பேன். நீ வேணா எல்லாருக்கும் பயந்துட்டு இரு. என்னால அப்படி எல்லாம் இருக்க முடியாது ” என்றான்.
“இல்ல அப்படி இல்ல. நான் ரூமுக்குள்ள இதல்லாம் சரின்னு தானே சொன்னேன். நீங்க தோட்டத்துல வெச்சு என் சேலைக்குள்ள கையை விட்டு.. ” என்று அவள் தயங்க.
“ஏன் அங்க தான் யாரும் இல்லையே. சுத்தி யார் இருக்காங்க இல்லேன்னு பார்க்கமலா நான் உன்னைத் தொடுவேன்னு நினைச்ச நீ.. ” என்றான்.
“ஆனா சாந்தம்மா பாத்துட்டாங்களே.. அவங்க வந்து என்கிட்டே சொல்லும்போது எனக்கு எவ்ளோ கூச்சமா இருந்துச்சு தெரியுமா மாமா ” என்றாள் தலையை மேலும் குனிந்து கொண்டே.
சாந்தம்மா பார்த்துவிட்டார் என்றதுமே அவனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. தன் சிகைக்குள் கை விட்டு அழுந்தக் கோதியவன் “சரி இனிமேல் கவனமா இருக்கலாம் ” என்றான்,
அவன் பக்கம் ஒட்டி நின்றவள் நிமிர்ந்து யுகேந்திரனைப் பார்க்க..
அவன் என்ன என்றான்.
கோபம் இல்லையே… ” என்றாள்.
“கோபம் போகல ” என்றான்.
“இப்போ நான் என்ன பண்றது ” என்றாள் கைகளைப் பிசைந்து கொண்டே..
“அதுக்கு ஒரு வழி இருக்கு ” என்றான்.
அவள் என்ன என்று அவனைப் பார்க்க..
அவனோ அந்த அணில் மாதிரி நான் உன்னை.. என்றானே பார்க்கலாம்
அடுத்த நொடி அவனை அதிர்ந்து பார்த்தவள் “ஹையோ.. நான் மாட்டேன் ” என்று அவனைவிட்டு வேகமாக விலகிச் சென்றாள் பூவிழி.
அவள் விலகவும் மீண்டும் கோபம் வந்தது நம்ம யுகேனுக்கு. அவளை முறைத்துவிட்டு திரும்பி கட்டிலில் படுத்துக்கொண்டான் .
“இவருக்கு இதே வேலை தான் இப்படி கோச்சுட்டா நான் என்ன தான் பண்றது” என்று கைகளை பிசைந்து கொண்டு அவன் முதுகையே விரித்துகொண்டு நின்று இருந்தாள்.
அவனை பூவிழி சமாதானம் செய்வாளா? நாளை பார்க்கலாம்
கதை படிச்சீங்களா ஸ்டோரி எப்படிப் போகுது உங்க கருத்துக்களை சொன்னா தானே நான் கதை போக்கு எப்படி இருக்குன்னு புரிஞ்சுக்குவேன். மறுபடியும் எழுத உத்வேகமாக இருக்கும்

3 comments
Super story sis next epi ku waiting ❤️❤️❤️
❤️❤️❤️❤️❤️❤️❤️
💖💖💖💖