அயோக்கியன் 22
“என்னப்பா இதெல்லாம் நான் இந்த தலைவர் பதவி வேணும்னு நான் உங்ககிட்ட கேட்டேனா? எதுக்கு இப்படி என்கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லாம இந்த முடிவை எடுத்தீங்க.. ” என்றான் ராக்கி சற்று கோபமாக.
” என்னை என்னப்பா செய்ய சொல்ற நானும் எத்தனை நாள் தான் பிரச்சாரம் பிரச்சாரம் என்று ஓய் உளைச்சல் இல்லாம சுத்திக்கிட்டே இருக்கிறது எனக்கும் கொஞ்சம் ரெஸ்ட் வேண்டாமா? அப்புறம் எனக்கும் இந்த கட்சியை வழிநடத்துற பொறுப்பு உன்கிட்ட தான் இருக்கனும்னு தோணிச்சு. நான் தனி ஒருத்தனா தான் இந்த கட்சியை ஆரம்பிச்சு இவ்வளவு நேரம் கொண்டு வந்து இருக்கேன்” என்றார்.
” அப்பா வீடு, வாசல்,சொத்து, பிசினஸ் அப்படின்னு சொன்னா நீங்க சொல்றதுல நியாயம் இருக்கு. ஆனா இது அப்படிப்பட்டது இல்லையே இது ஒரு கட்சி மக்களுக்காக உருவாக்கின பொது சொத்து இதுல நான் தலைவரா இருந்தா சரியா எப்படி வரும் ” என்றான்.
” நம்ம கட்சியிலையும் நம்பிக்கையான ஆளுக நிறைய இருக்காங்க தான். ஆனா காசு பணம்னு பாத்துட்டா அவங்க புத்தி மாறிடும் ராக்கி. அப்புறம் மக்களுக்கு செய்ய வேண்டியது அவங்களால சரியா செய்ய முடியாது, செய்யவும் விட மாட்டாங்க. அதனால தான் உன்ன கட்சி பொறுப்பை ஏத்துக்க சொல்றேன். நான் ஒன்னும் உன்னை சிஎம் போஸ்ட்ல போய் உட்காருன்னு சொல்லலையே. நம்ம கட்சியை வழிநடத்துற ஒரு நல்ல பதவியில தானே உன்னை உட்கார வைக்கிறேன். இதுக்கு ஏன் முடியாதுன்னு சொல்ற நீ”என்றார்.
“ஆமா மச்சான், மாமா சொல்றதும் சரிதானே. நீங்க ரொம்ப நாளா அவர்கூடவே இருக்கீங்கம் கட்சி, மீட்டிங், பிரச்சாரம்னு போயிருக்கிங்க. பத்தாதத்துக்கு எதுவும் பிரச்சனையின்னா அதை நீங்க தானே ஒத்தை ஆளா நின்னு சமளிக்குறிங்க. அவர் சொன்னதுபோல செய்ங்க” என்றான் ராகவ்.
“ம்க்கும் நீயுமா ஏன் டா ராகவ்” என்ற ரதி.
“மாமா நான் சொல்றதைக் கேளுங்க. அவன் ரவுடி யாராவது கோபத்துல எதுவும் சொல்லிட்டா அவ்ளோதான், சார் உடனே கன்ன தூக்கி டப்பு டப்பு ன்னு சுட்டுத் தள்ளிட்டு போயிட்டே இருப்பார். இவரை நம்பி கட்சி பொறுப்பை கொடுத்தா. அப்பறோம் இவர் அடிக்கடி ஜெயிலுக்கு தான் போகணும். என்னால எல்லாம் இவனைப் போய் அடிக்கடி ஜாமீன் எடுத்துட்டு இருக்க முடியாது” என்றாள் ரதி.
அவளை முறைத்த ராக்கி “இவளை ஹனிமூன் கூப்டு போய் தப்புப் பண்ணிட்டேன். அங்க நடந்ததை வெச்சு எங்க வந்து முடிச்சுப் போட்டு பேசுறா இவ..” என்று நினைத்தவன். ” கேட்டீங்களா அப்பா என் பொண்டாட்டிக்கே நான் கட்சித்தலைவர் ஆகுறதுல விருப்பம் இல்லை, எனக்கு இந்த பதிவியும் வேண்டாம், ஒன்னும் வேண்டாம் ஆளை விடுங்க” என்று விறுவிறுவன மாடி ஏறி அழைக்கச் சென்றான்.
“என்ன செல்வி இவன் எப்படி இருக்கான். அவனை தான் இந்த பதவிக்காக என்னென்ன செய்கிறான் தெரியுமா, ஆனால் இவனுக்கு இந்த பதவி தானா தேடி வருது வேண்டாம்னு சொல்லிட்டு போறானே” என்று வருத்தமாக கேட்டார் சிவராஜன்
“பொறுங்க பேசி பார்ப்போம் அவனுக்கு யோசிக்க கொஞ்சம் டைமிங் கொடுக்கலாமே” என்றார்.
சிவராஜனிடம் தயங்கியபடி வந்த வேலு, “மாமா நானும் இப்படி சொல்றேன்னு நினைக்காதீங்க, உங்ககிட்ட சாதாரண பிஏ வா வேலை பார்க்க வந்தேன். இப்ப என்ன உங்க மருமகனா ஆக்கிட்டீங்க. இதுவே எனக்கு பெரிய பதவி கொடுத்த மாதிரி தான். இதுல இந்த கட்சித் செயலாளர் போஸ்டிங் எல்லாம் எனக்கு வேண்டாம் மாமா. அது சரியா வருமான்னு எனக்கு தெரியல. குடும்பத்தில் இருக்கிறவங்களை கட்சி பொறுப்புல நியமிக்கிறீங்கன்னு சொன்னா அது பின்னாடி பல பிரச்சனைக்கு உள்ளாகும். அதெல்லாம் யோசிச்சு தான் சொல்றேன் புரிஞ்சுக்கோங்க” என்றான்
“என்ன வேலு நீயும் இப்படி பேசுற? அப்போ என்ன பத்தி யாருமே யோசிக்கிறது இல்ல அப்படித்தானே. நான் இத்தனை வருஷம் கட்டிக்கார்த்த இந்த கட்சியை ஒரு நியாயமான ஆளுகிட்ட கொடுக்கணும்னு நினைக்கிறேன். நான் பார்த்த வரைக்கும் எல்லா விஷயமும் தெரிஞ்சது ராக்கி மட்டும் தான். அதனாலதான் அவனுக்கு அந்த கட்சித் தலைவர் பொறுப்பையும், நீ நேர்மையானவன்னு உன்கிட்ட இந்த செயலாளர் பொறுப்பையும் கொடுக்கிறேன். ஆனா ரெண்டு பேருமே இப்படி வேண்டாம்னு முகத்துல அடிச்ச மாதிரி சொல்லிட்டு போறீங்க. நீங்களே இப்படி கை விட்டா நான் என்ன பண்ணுவேன் ” என்று சொல்லும்போதே சிவராஜன் உடைந்து போனார்.
அவர் பேசியது கேட்டு மற்றவர்களுக்கும் வருத்தமாகிப் போனது மாநில தலைவராக இருந்துவிட்டு எவ்வளவு தூரம் இறங்கி வந்து பேசுகிறார் என்று அவர்களுக்கு தோன்றியது
வேலுவிற்கு அதற்கு மேல் என்ன சொல்வது என தெரியவில்லை. அவன் அப்படியே நின்று இருக்க அவன் அருகில் வந்த திகழினி “அப்பா நீங்க கவலைப்படாதீங்க ராக்கியும், வேலும் நீங்க சொன்ன போஸ்டிங்கில் உட்காருவாங்க. அதுக்கு நான் பொறுப்பு” என்றாள் “நீதான் இந்த கட்சியோட…ம்ம்ம்..” என்று யோசித்தவள் “அது என்னப்பா?” என்றாள்
“செயலாளர் மா” என்றார் சிரித்துக் கொண்டே.
“ஆஹ் அதான் செயலாளர் நீ தான் இந்த கட்சியோட செயலாளர்” என்றவள் ” யாரும் எத பத்தியும் கவலைப்படாதீங்க. அப்பா சொன்னது போல எல்லாம் நடக்கும். போய் முதல்ல எல்லாரும் தூங்குங்க” என்று எல்லோரையும் அனுப்பிவிட்டு அவளும் செல்ல வேலுவும் குழப்பத்தோடு அவளோடு கிளம்பி இருந்தான்.
இங்கே அறைக்குள் சிவராஜ்னிடம் பேசிவிட்டு கோபமாக வந்த ராக்கி கட்டிலில் படுத்து விட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தான். வெளியே பத்திரிக்கையாளர்கள் அவனை பற்றி பலவிதமாக பேசியதை எல்லாம் யோசிக்க வைத்திருந்தது.
அதைவிட ரதி பேசியதை தான் அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவளே தன்னை மட்டம் தட்டி பேசுகிறாளே என்ற எண்ணம் அவனுக்கு தோன்ற ஆரம்பித்திருந்தது
கீழே பேசி விட்டேன் ரூமுக்கு வந்த ரதி கதவடைத்துவிட்டு விட்டு உள்ளே வர “ஏய் நில்லுடி” என்றான் கோபமாக.
அவனை அவள் முறைக்க..
“ம்கூம்.. இந்த குறைப்புக்கு ஒன்னும் பஞ்சமில்லை.. அத்தனை பேர் முன்ன என்னை கழுவி ஊத்திட்டு வந்து இவ என்னை முறைக்குறா” என்று நினைத்தவன் “வாடி இங்க “என்று அதட்டலாக அழைத்தான்.
“என்னடா அதட்டுற..” என்று அவளும் திமிராக அவன் முன் வந்து நின்றாள்.
“எதுக்குடி அப்படி பேசின” என்றான் கோபமாக.
“எப்படி பேசினேன்” என்றாள் அவளும் திமிராக.
“தெரியாத மாதிரியே கேக்குறா பாரு திமிரு புடிச்சவ” என்று முறைத்தவன்.
“எனக்கு சப்போர்ட் பண்ணி நீ பேசலனாலும் பரவாயில்லை. ஆனா இப்படி எல்லாரும் முன்னாடி என்ன அவமானப்படுத்துற மாதிரி பேசுற, உன் புருஷன் தாண்டி நான் என்னை விட்டுக் கொடுக்க உனக்கு எப்படி மனசு வந்தது” என்றான் சற்று ஆதங்கம் நிறைந்த குரலில்.
“புருஷனா இருக்க போய் தான் நீ பண்ணின வேலைக்கு போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்காம அமைதியா இருக்கேன். நீயே யோசிச்சு பாரு அவ்வளவு பெரிய பதவி உனக்கு தேவையா?” என்றாள்.
“நீ என்ன சொல்ல வர” என்றான் எழுந்து அமர்ந்தபடி.
“ம்ம்ம் ஒரு கொலைகாரன்கிட்ட.. ஒரு ரவுடிகிட்ட கட்சிப் பொறுப்பை கொடுக்க வேண்டாம்னு சொன்னேன். இதில் என்ன தப்பு இருக்கு அப்படித்தானே? நீ கொலைகாரன் தானே? ரவுடி தானே?” என்றாள்.
அவள் பேசுவதை கேட்க கேட்க ராக்கிக்கு கோபம் தான் தலைக்கு ஏறியது
“என்ன பத்தி எல்லாம் தெரிஞ்சு தானடி நீ லவ் பண்ணின.. என்னை கல்யாணம் பண்ணின.. அப்ப எல்லாம்தப்பா தோணலையா? இப்போ என்ன புதுசா வந்துட்ட நியாயம்னு சொல்லிட்டு” என்றான்.
“ஆமாடா நீ ரவுடின்னு தெரிஞ்சுதான் நான் உன்னை கல்யாணம் பண்ணினேன் .ரவுடியா இருந்தாலும் உன்கிட்ட ஒரு நியாயம் இருந்தது. நீ செய்ற விஷயத்துல ஒரு தெளிவு இருந்தது .அதெல்லாம் பார்த்து தான் இம்ப்ரஸ் ஆகி உன்ன லவ் பண்ணினேன் , கல்யாணமும் பண்ணினேன். ஆனா நீ ஒருத்தனை என் கண்ணு முன்னாடியே சுட்டு கொன்ன பாரு அப்பவே உன் மேல இருந்த மொத்த மதிப்பும் சரிஞ்சிடுச்சு. ஒரு உயிரை எவ்வளவு சாதாரணமா எடுக்க உன்னால முடியுது. அவ்வளவு இரக்கமில்லாதவன்னா நீ. அதை பார்த்ததிலிருந்து உள்ளுக்குள்ள பதறுதுடா. என் ராக்கி நீ இல்ல நீ வேற மாதிரி இருக்க” என்றாள் தழுதழுத்த குரலில்.
“ஏய் நான் சாதாரண மனுஷனா இருந்தா நீ சொல்றது போல ,எதிர்பார்க்கிறது போல என்னால இருக்க முடியும். ஆனா நான் ஒரு சிஎம்ஓட பையன் இதுவரைக்கும் ரவுடி, கட்டப்பஞ்சாயத்து , சண்டை சச்சரவுன்னு பல வேலைகள் செஞ்சிருக்கேன். இதுக்கு முன்னாடியும் நிறைய விஷயங்கள் பண்ணியிருக்கேன். அதெல்லாம் உனக்கு பாதி தெரிஞ்சும் தெரியாம தான் இருக்கு. தெரிஞ்சத வச்சுட்டு மட்டும் நீ என்ன எடை போடக்கூடாது இத்தனை நாள் ஆகியும் உனக்கு என்னை பத்தி இன்னும் புரியலையா? என்றான்.
“இப்போ நீ என்ன சொல்ல வர.. இதுக்கு முன்னாடியும் கொலை எல்லாம் பண்ணி இருக்கேன். இது என்னோட முதல் கொலை இல்லைனு சொல்கிறாயா? என்றாள் அழுத்தமாக.
ராக்கி அமைதியாக அமர்ந்திருக்க அவன் அருகே நெருங்கி வந்து அவன் முகத்தை நிமிர்த்தி தன்னை பார்க்க வைத்தவள் “சொல்லுடா இதுக்கு முன்னையும் நீ கொலை பண்ணி இருக்கியா?” என்றாள்
“ம்ம் ஆமா என் அப்பாவை எவன் கொல்ல வந்தாலும் என்ன சேர்ந்தவங்களோட உயிருக்கு யார் ஆபத்துன்னு தெரிஞ்சாலும் அவங்கள நான் விட்டுவைக்க மாட்டேன்” என்றான்
“அப்போ உன் அப்பாவோட உயிருக்கோ… உன்னோட இருக்கவங்களுக்கோ என்னால ஆபத்துன்னு தெரிஞ்சா என்னையும் கொன்னுடுவியா ?” என்றாள்.
ராக்கி சற்றுமுன் யோசிக்காமல் “ஆமா அது நீயா இருந்தாலும்” என்றவன் எழுந்து அவளை நெருங்கி வந்து. “இங்க பார் நடந்த ஒரே ஒரு விஷயத்தை பார்த்துட்டு இப்படி கண்ணு மண்ணு தெரியாம என் மேல கோபத்தில் இருக்க. அது எனக்கு புரியுது. ஆனா நீ நினைக்கிற மாதிரி ரொம்ப மோசமானவன் நான் கிடையாது. அது முதல்ல புரிஞ்சுக்கோ. அந்த சூழ்நிலையில் அவனை கொல்றது தவிர எனக்கு வேற வழி இல்ல” என்றான்.
ரதி எதுவும் பேசாமல் அவனை அழுத்தமாக பார்க்க..
“மத்தவங்க மாதிரியே நீயும் என்னை பத்தி கேவலமா நினைச்சுட்ட இல்ல. அந்த பத்திரிக்கைகாங்கள்ல நீயும் ஒருத்திங்கிறது நிரூபிச்சிட்ட அப்படித்தானே” என்றவன் அவளை வலி நிறைந்த பார்வை பார்த்தபடியே “எனக்கு இந்த கட்சித் தலைவர் பதவியில விருப்பம் இல்ல தான். அதனால் தான் அப்பாகிட்ட வேண்டாம்னு சொன்னேன் . ஆனா நீ என்னை இவ்வளவு கேவலமா நினைச்சிருப்பேன்னு கொஞ்சமும் நான் எதிர்பார்க்கல. இதுக்காகவே அந்த பதவியை நான் ஏத்துக்க போறேண்டி உன்னால முடிஞ்சதை பாரு” என்றான்.
அவனை அதிர்ந்து ரதி பார்க்க.. “நீ என்ன சொன்னாலும் நான் இனி கேட்க போறதா இல்லை” அவளைத் தாண்டி விருட்டென கதவை திறந்து கொண்டு வெளியே சென்றான்.
ரதிக்கு ஒரே குழப்பமாக இருந்தது தான் பேசியது சரியா? தவறா? என்று அவளால் யோசிக்கக்கூட முடியவில்லை. அவன் செய்த அந்த ஒரு கொலை மட்டுமே அவள் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. தன் வயிற்றில் வளர்ந்த குழந்தையை தடவி பார்த்தவள்
“உன் அப்பா ஏண்டா இப்படி இருக்கான். ஒரு உயிர கொல்றது பாவம்னு அவனுக்கு தெரிய வேண்டாமா” என்று பேசிய படியே வந்து கட்டிலில் அமர்ந்து விட்டாள்.
இங்கே நேராக சிவராஜ்னிடம் வந்த ராக்கி “அப்பா தலைவர் பதவியை நான் ஏத்துக்கிறேன்” என்றான்.
அதைக் கேட்ட சிவராஜனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது அவனை கைநீட்டி தன்னிடம் அழைத்தவர். அவன் தோளில் தட்டிக் கொடுத்து “நீ சரின்னு சொல்வேன்னு எனக்கு தெரியும் நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்”என்றார்.
ரதியை மீறி தன் விருப்பம் மீறி இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்கிறான் ராக்கி. அதனால் அவன் வாழ்க்கையில் என்னவெல்லாம் இழக்கப்போகிறானோ அதை அவனால் தாங்கிக்கொள்ள முடியுமா? பார்க்கலாம் .
