ஆன்லைன் 10
‘வாடா உனக்காக தான் வெய்ட் பண்ணிட்டு இருந்தேன் போலாமா??’ என்று எழுந்து வந்து நெடுமாறனிடம் கை குலுக்கி உள்ளே அழைத்து சென்றான் ஆர்யன்.
அவன் ஆபீஸ் ரூமிற்குள் வந்தவன் “எப்படிப் போகுது உன் வேலை எல்லாம் ” என்றான்.
“அதுக்கு என்ன எப்பவும் போல தான் . என் வேலை நடக்க நான் நிறைய பேரை மீட் பண்ண வேண்டி இருக்கு. நிரைய விஷயம் தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு. ரொம்ப பிசி மச்சான் ” என்ற ஆர்யன் வந்து தன் முன் இருந்த பைல்களைக் காட்டி சொன்னான்.
“ஒரு வேலை செய்றதுன்னா அது சும்மாவா? இதெல்லாம் இல்லாம எப்படி ” என்றவன் தன் பாக்கெட்டில் இருந்து ஒரு கவரை எடுத்து ஆர்யனிடம் நீட்டினான்.
“என்ன டா இது?” என்றான்.
“உன்னோட கல்யாணத்துக்கு நண்பனா என்னோட ஒரு சின்ன கிப்ட்” என்றான்.
“சின்ன கிப்ட்டா!.. ஒரு பெரிய பிசினெஸ் ஓனரோட பையன் எனக்கு சின்ன கிப்ட் கொடுக்கலாமா? ” என்றபடி அந்த கவரை பிரித்துப் பார்த்தவன் முகம் மலர்ந்தது. அவனை நிமிர்ந்து பார்த்த ஆர்யன் “டேய் மச்சான்!.. என்ன டா இது.. “என்றான்.
“இது ஆரம்பம் தான் இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். இதை விட பெரிய கிப்ட்டா கொடுக்குறேன் ரெடியாகிக்கோ” என்றான்.
“சியூர்!” என்று எழுந்து வந்து மாறனைக் கட்டிக்கொள்ள..
“சரி போலாமா?” என்றான்.
“ம்ம் வெய்ட் பண்ணு , இந்த கிப்ட்டை பொக்கிஷம் மாதிரி வெச்சுக்கணும். இதை பத்திரமா வெச்சுட்டு வரேன்” என்று கப்போர்டை திறந்து உள்ளே அந்த கவரை வைத்தவன் அதை பூட்டி சாவியை தன் பாக்கெட்டில் போட்டுகொண்டு மாறனுடன் கிளம்பினான்.
“சரி மாப்பிள்ளைக்கு செயின், பிரெஸ்லெட் , மோதிரம் எல்லாம் வாங்கலாமா? இல்ல வேற ஏதும் வேணுமா? ” என்றான் மாறன்.
“டேய் ஒரு முறைக்கு தான் இதெல்லாம் செய்யணும்னு என் அம்மா சொன்னாங்க. அதுக்காக தான் உன்னை கூப்பிட்டேன், வா அங்க போனதும் என்ன வாங்கலாம்னு முடிவு பண்ணிக்கலாம்” என்றான்.
மதியம் மூன்று மணியைப் போல தன் அப்பாவைக் காண ஹாஸ்பிடல் கிளம்பி இருந்தாள் மீரா
வாசலில் தோட்டக்காரன் சாம்புவிடம் பேசிக்கொண்டிருந்த மணியிடம் வந்தவள் “அண்ணா நான் என் அப்பாவை பார்த்துட்டு வரேன் எப்படியும் ஒரு ரெண்டு மணி நேரத்துல வந்துருவேன். அதுக்குள்ள சார் வந்துட்டா அவர்கிட்டே சொல்லிருங்க ” என்று தன் பர்ஸுடன் கிளம்பி இருந்தாள்.
“சரிம்மா நீ வந்து தான் நைட்டுக்கு சமைச்சு வெக்கணும். சீக்கிரம் வந்திரு அப்பறோம் தம்பி வந்தா வீடே ரெண்டாகிரும்” என்றார்.
“இல்லன்னா சமைக்க எல்லாம் ரெடி பண்ணி வெச்சுட்டேன் . வந்து சமைச்சா போதும் ” என்று கிளம்பினாள்.
செல்லும் அவளையே பார்த்த சாம்பு “என்ன மணி அண்ணா இந்த பொண்ணு இனிமேல் இங்க தங்கி தான் வேலை பாக்கபோகுதாமா. சார் வேலை எல்லாம் இந்த பொண்ணு தான் இனி கவனிச்சுக்கணும்னு சொல்லிருக்கார்னு கேள்விப்பட்டேன் ” என்றான்.
“நீ கேக்குற விதமே சரி இல்ல சாம்பு பாத்து பேசு, தம்பி காதுல விழுந்தா அப்பறோம் உன் வேலை இருக்காது நியாபகம் இருக்குல்ல.. ” என்றவர் “அந்த பொண்ணு தினம் ரொம்ப தூரம் போய் வர வேண்டி இருக்கு. அதனால தான் அவர் இங்கையே தங்கி வேலை பார்க்க சொல்லிருக்கார். அதுவுமில்லாம அவ கஷ்டப்படுறா டா.. பாவம் வேலை சேர்த்து செய்தா சம்பளம் அதிகம் தரதா தம்பி சொல்லிருக்கு , அது அவ குடும்பத்துக்கு ஏதோ ஒரு வகையில பிரயோஜனம் இருக்குமே ” என்றார்.
“ஏன் நமக்கு எல்லாம் கஷ்டம் இல்லையா? பொண்ணுனதும் நம்ம சாருக்கு இறக்க குணம் எட்டிப் பார்த்துருக்கும் ” என்றான் சாம்பு .
“டேய் இப்போ எதுக்கு இப்படி பேசுற.. உன் பொண்ணுக்கு ஆபரேஷன்னு சொன்னதும் தம்பி யோசிக்காம அதுக்குத் தெரிஞ்ச டாக்டர்கிட்டே சொல்லி லட்சக்கணக்குல வர செலவை அது ஏத்துக்கல, அது மட்டும் இல்லாம உன் பொண்ணு படிப்பு செலவையும் தம்பிக்கு இறக்க குணம் இல்லேன்னா செய்திருக்குமா?” என்றார் மணி சற்று கோபத்தோடு சாம்புவின் அத்தமற்ற பேச்சை பொறுத்துக்கொள்ள முடியாமல்.
“அது தம்பி நல்ல நிலைமையில் இருக்க அப்போ செஞ்சது.. நான் அதை இல்லேன்னு சொல்லலையே ” என்றான் சாம்பு.
“நல்ல நிலையில இருந்தாலும், இல்லேன்னாலும் மாறன் தம்பி குணத்துல எப்பவும் தங்கம் தான் டா. அதோட மனசு இன்னும் அப்படியே தான் மாறாம இருக்கு. அந்த குணம் இருக்கிறதால தான் அந்த பொண்ணுக்கு உதவி இருக்கு. உனக்கு மாறன் தம்பியைப் பத்தி சரியா தெரியல ” என்றார் விட்டுக்கொடுக்காமல்.
“நல்ல குணம் இருந்து என்ன பண்றது, இப்போ பாரு தம்பி எப்படி ஆளே மாறிடுச்சுன்னு. தினமும் குடிக்குது .. என்னன்னவோ மாத்திரையைப் போட்டு அதோட பழக்க வழக்கம் எல்லாம் மொத்தமா மாறிடுச்சு “என்று சாம்பு தன் உண்மையான ஆதங்கத்தை வெளிப்படுத்தினான்.
“அது தான் எனக்கும் புரியல டா.. ஏன் இப்படி திடீர்னு மாறிடுச்சு. ஏன் இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்குன்னு தெரியல ” என்று மாறனின் சைகையை நினைத்து மணியும் வருத்தம் கொண்டார்.
இவர்கள் அனைவரும் அறியாத ஒரு சோகம் அவன் மனதில் இன்றளவும் அழியாத வடுவாக மாறி இருப்பது யாருக்கும் தெறியாத ஒன்று தான்.
இங்கே தன் அப்பாவைக் காண ஹாஸ்பிடலுக்கு வந்திருந்தாள் மீரா . அந்த சிறுநீரக அறுவை சிகிச்சை பிரிவில் ஐ சி யூ வில் அட்மிட் செய்திருக்கும் வெங்கடாச்சலத்தை வெளியே இருந்து பார்த்தாள்.
இரண்டு சிறுநீரகமும் பழுதாகி அதற்கு மாற்று சிறுநீரகம் கிடைக்காமல் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார். அவர் தற்போதையை நிலையை இரண்டு கிட்னியையும் டியலிஸில் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒருநாள் விட்டு ஒருநாள் இந்த சிகிச்சை செய்ய வேண்டும். அவருக்கு சீக்கிரம் உடல்நிலை சரியாகவேண்டும் என்று அந்த நகரத்தின் மிகப்பெரிய மருத்துவமனையில் அவரை அட்மிட் செய்திருக்கிறாள்.
அதனால் தான் அவளுக்கு இவ்வ்ளவு கஷ்டம். அவள் அம்மா சுமதி, அக்கா ரோஜா என எல்லோரும் வெங்கடாசலபதியை கவெர்மென்ட் ஹாஸ்பிடலில் சேர்த்துக்கொள்ளலாம் என்று எவ்வளவோ சொல்லியும் அங்கு சிகிச்சை சரியாக இருக்காது. அதனால் அவரை நல்ல மருத்துவமணையில் சேர்த்து சிகிச்சை பார்த்தே ஆகவேண்டும் என்று அவள் ஒற்றை காலில் நின்று இந்த மருத்துவமனையில் சேர்த்திருந்தாள்.
அவரைப் பார்த்துவிட்டு வராண்டாவிலேயே ஒரு ஓரமாக இருந்த இருக்கையில் அறையாக்கி அங்கேயே இத்தனை மாதங்களாக தங்கி தன் கணவனை பார்த்துக்கொண்டிருக்கும் சுமதியிடம் வந்து அமர்ந்திருந்தாள்.
“அம்மா, டாக்டர் வந்தாரா? என்ன சொன்னார். கிட்னி எதுவும் கிடைக்க வாய்ப்பு இருக்கா..? எதுவும் கிட்னி கிடைக்க வழி இருக்கா? எதுவும் சொன்னாரா?” என்று ஒரு எதிர்பார்ப்போடு கேட்டாள் .
எப்படியாவது அவருக்கு உடல்நிலை சரியாக வேண்டும் என்ற தவிப்பு அவளுக்கு.
“காலைல ரௌண்ட்ஸ் வந்தாரு டி.. அப்பா உடம்பு இன்னும் அதே நிலையில தான் இருக்குன்னு சொன்னாரு. கிட்னி கிடக்குறதுக்கான எந்த அறிகுறியும் இல்ல. இன்னும் ஒரு ரெண்டு மூணு மாசம் வர தான் அப்பாவுக்கு டியாலிசிஸ் தொடர்ந்து பண்ண முடியும். அதுவும் ஒரு அளவு தான் அவர் உடம்பு எடுக்குதுனு சொல்லிட்டு போறார். எனக்கு வேற பயமா இருக்கு ” என்று சுமந்து முந்தானையில் வாய்யைப் போற்றிக்கொண்டு அழுதார்.
அவரால் வெங்கடாசலபதியைப் பற்றிக் கவலை மட்டும் தான் பட முடிந்தது.
“சரி அக்கா சாப்பாடு எடுத்துட்டு வந்துட்டாளா?” என்றாள் மீரா.
“இன்னுமில்ல டி வர நேரம் தான் ” என்றார் சுமதி.
“சரி அவ வந்தா இருக்க சொல்லு. நான் போய் டாக்டரைப் பார்த்துட்டு வரேன் ” என்று எழுந்து மருத்துவரைக் காண சென்றாள்.
வெங்கடாசலபதிக்கு சிகிச்சை செய்யும் டாக்டர் பரந்தாமனைக் காண அவர் அறைக்கு வந்தவள் கதவை தட்ட..
“கம் இன்!” என்றார் உள்ளிருந்த படியே .
கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த மீராவைப் பார்த்ததும்.
“வாம்மா! நானே உன்னைப் பார்க்கணும்னு தான் நினைச்சேன். கொஞ்சம் முன்ன தான் ஒரு டோனர் பத்தி நியூஸ் வந்துச்சு. அது பத்தி தான் உன்கிட்டே பேசணும்மா ” என்றார் பரந்தாமன்.
அவர் டோனர் கிடைத்துவிட்டார் என்று சொன்னதுமே அவள் முகம் பிரகாசமானது. தன் அப்பாவின் கஷ்டம் தீரப்போகிறது என்று.
“சார், அப்போ என் அப்பாவுக்கு ஆபரேஷன் பண்ணிடலாமா? அவருக்கு குணமாகிடுமா?” என்றாள்.
“பண்ணிடலாம் ம்மா.. ஆனா அதுல ஒரு சிக்கல் இருக்கு ” என்றார் பரந்தாமன்,
“என்ன சிக்கல் சார்?” என்றார் சற்று பதற்றமாக.
“அது ஒண்ணுமில்ல அந்த டோனர் ரொம்ப ஹெல்த்தியான ஆள். அவர் ஒரு கிட்னியை உன் அப்பாவுக்கு கொடுக்க ஒத்துக்கிட்டார் .ஆனா அதுல இருக்க சிக்கல் என்னன்னா அவர் பணம் நிரைய எதிர் பாக்குறார்” என்றார்.
“பணம்..” என்றதும் அவள் மனம் சற்று அதிர்ந்தது.
“எவ்.. எவ்ளோ சார்.. ” என்றாள் சற்று தடுமாற்றத்தோடு.
“அது எனக்குத் தெரியலம்மா. வழக்கமா இந்த மாதிரி கேஸ்க்கு எல்லாம் ஒரு புரோக்கர் நடுவுல இருப்பார் . அவர்தான் இந்த வேலை எல்லாம் பாக்குறது .இது கொஞ்சம் இல்லீகலான விஷயம்
என்றார்.
“சார் அப்போ நிரைய பணம் கேட்பாங்களா?” என்றாள் தவிப்போடு. “ஆம் என்று பரந்தாமன் சொல்லிவிட்டாள் அந்த பணத்திற்காக அவள் ஏதாவது செய்தாக வேண்டுமே என்ற தவிப்பு அவளுக்கு.
“நான் அந்த புரோக்கர் நம்பர் கொடுக்கிறேன் . நீங்களே அவர்கிட்டே நேரடியா பேசிப்பாருங்க . எனக்கு உங்களோட கஷ்டம் புரியுது. என்னால இந்த விஷயத்துல எதுவும் செய்ய முடியாது . ” என்றார் அவர் சற்று கவலையாக.
“ஐயோ இல்ல சார், எங்க சூழ்நிலை புரிஞ்சு நீங்க டாக்டர் பீஸ் கூடப் வேணாம்னு சொல்லிட்டீங்க. இதுக்கு மேல நான் உங்களை தொந்தரவு பண்ண விரும்பல சார் ” என்று எழுந்தவள் அந்த ப்ரோக்கரின் என்னை வாங்கிக்கொண்டு அவர் அறையை விட்டு வெளியே வந்தாள் மீரா.
கையில் இருந்த காகிதத்தை பார்த்தபடி யோசனையாக தன் தாயைக் காண செல்ல,, அங்கே அவர் மிகவும் பதற்றமாக இருந்தார். மீராவின் அக்கா ரோஜாவும் பதற்றத்தோடு ஐ சி யூ வையே பார்த்துக்கொண்டு நின்று இருந்தாள்.
அவர்களிடம் அவசராமாக ஓடி வந்தவள் “ரோஜா, என்ன ஆச்சு டி.. ” என்றாள் மீரா.
“தெரியல டி. .அப்பாவுக்கு மறுபடி உடம்புல ஏதோ பிரச்சனைன்னு வந்து நர்ஸ் சொன்னாங்க.. மூச்சு விட சிரமப்படறதா சொல்லிட்டு இப்போதான் உள்ளே போனாங்க ‘ என்றாள்,
சரியாக எந்த நேரம் பரந்தாமனும் ஐசியூவிற்குள் வேகமாக சென்றார்.
மூவரும் செய்வதறியாது பதற்றத்தோடு நின்று இருந்தார்கள்.
