ஆன்லைன் 9
ஆர்யனை சந்திக்க குளித்துக் கிளம்பி அறையை விட்டு வெளியே வந்தான் நெடுமாறன்.
இரவெல்லாம் விழித்திருந்ததில் கண்கள் எரிச்சலாக இருந்தது. கூடவே போதையும் வேறு சேர்ந்து இருக்க தலை வேறு லேசாக வலிக்க ஆரம்பித்து இருந்தது.
ஒரு காபி குடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தவன் அப்போது தான் மீராவின் நினைவு வந்தது. அதன் கூடவே இரவு அவளை பிறந்த மேனியாய் பார்த்ததும் அவன் நினைவில் வந்து போக..
இன்னமும் அவனுக்குள் இருந்த அந்த போதையின் வீரியம் அவன் உணர்வுகளை மின்னல் வேகத்தில் முடுக்கி விட்டிருந்தது.
தலையை வேகமாக உலுக்கி தன்னை நிலைப்படுத்த முயன்றவன் கால்கள் இரண்டும் கிச்சனை நோக்கி சென்றது.
அவன் கிட்சேனுள் நுழையும்போதே இதமான ஒரு நறுமணம் தோன்றியது. அவன் கண்கள் தானாக மூடி அந்த வாசனையை உள்ளிழுக்க..
“சார்!.. ‘ என்று அவன் அருகே மீராவின் குரல் கேட்டது.
பட்டென விழிகளை விரித்து பார்த்தவன் முன் கையில் காபி கப்புடன் நின்று இருந்தாள் மீரா.
லேசான நீல வண்ண தாவணி அணிந்து இருந்தாள் அதற்கு மேட்சிங்காக பாவாடையும், ஜாக்கெட்டும் போட்டிருக்க..
அவளை இரவெல்லாம் அங்குலம் அங்குலமாக ரசித்தவன் விழிகள் இப்போது அவளிடம் எதையோ தேடி அலைபாய்ந்தது.
மிகவும் எளிமையாக மிக அழகாக அவன் கண்களுக்குத் தெரிந்தாள் அவள்.
“சார்ர்ர்..” என்று மீண்டும் அவள் அழைத்ததில் தன்னிலைக்கு வந்தவன் “சரியா நான் வர நேரத்துக்கு காபி கொண்டு வந்துட்ட.. குட்!.” என்றான்.
“எப்படியும் நீங்க பத்து மணிக்கு மேல தான் எழுந்து கீழ வருவீங்கன்னு தெரியும் சார். அதை யோசிச்சு தான் உங்களுக்கு டீ போட்டேன் ” என்றாள்.
“டீயா? நான் டீ சாப்பிடுவேன்னு யார் சொன்னது உன்கிட்டே?” என்றான் முகத்தில் இறுக்கத்தை வரவழைத்துக்கொண்டு.
“ஹா! டீ பிடிக்காதா! யார்ரா நீ? டீ பிடிக்காம யாராவது இருப்பாங்களா என்ன?” என்று நினைத்தவள் அவனை ஒரு மார்க்கமாகப் பார்க்க.
“என்ன அப்படிப் பாக்குற? சொல்லு எனக்கு டீ வேணும்னு நான் கேட்டேனா உன்கிட்டே ” என்றான்.
“ம்ஹும் இல்ல சார் ” என்று அவள் அவசரமாக தலையை ஆட்ட..
“அப்பறோம் எதுக்கு இதை போட்ட” என்றான்.
“இல்ல நீங்க சரியா தூங்கிருக்க மாட்டீங்க. எப்படியும் ராத்திரி குடிச்சிருப்பிங்க… ” என்று அவனைப் பார்க்காமல் சொன்னவள் “எப்படியும் காலையில எழுந்திருக்க அப்போ தலை வலிக்கும். அப்போ சூடா இஞ்சி டீ குடிச்சா கொஞ்சம் நல்லா இருக்கும்னு போட்டேன்” என்றாள்.
தான் என்ன என்ன செய்வேன் என்று தெரிந்து வைத்திருக்கிறாள் என்று அவள் பேச்சில் இருந்தே தெரிந்து கொண்டான் மாறன்.
“ஓஹோ! அப்போ நான் என்னென்ன செய்வேன்னு நீ வேவு பாத்திருக்க.. அப்படி தானே.. ” என்றான்.
“ஹா! ” என்று அவனை அதிர்ந்து பார்த்தவள் “நான் எதுக்கு சார் உங்களை வேவு பாக்கணும், எனக்கு என்ன வேற வேலை இல்லையா?” என்றவள் “நீங்க தினம் குடிச்சிட்டு வரது இங்க வேலை பாக்குற மணி அண்ணன்ல இருந்து தோட்டக்காரன், வாட்ச்மன் , ஏன் வீடு கிளீன் பண்ண வர மேகலா அக்கா வரைக்கும் தெரியும். அப்போ எனக்குத் தெரியாதா “என்று அவன் முகத்திற்கு நேராக கையை ஆட்டி ஆட்டி அவள் பேசுகையில் அவள் அணிந்திருந்த வளையல் சத்தம் அவன் காதுகளுக்கு இதமாக இருந்தது.
பேசிய அவள் இதழ்களையும் , படபடவென சிமிட்டிகொண்டிருந்த அவள் விழிகளையும். அவன் முன் அவள் தீவிரமாகப் பேசிக்கொண்டிருக்கையில் ஒரு பக்க தாவணி விலகி அவள் ஒருபக்க உப்பிய பன்னை அப்பட்டமாகக் காட்டிக்கொண்டிருக்க.. அதைக் கண்டு பெருமூச்சு விட்டவன் இரவெல்லாம் அதில் தானே லயித்து இருந்தேன் என்று நினைத்தவன் ஒரு ஏக்கப் பெருமூச்சை விட்டபடி அங்கிருந்த தன் பார்வையை கஷ்டப்பட்டு மீட்டெடுத்து அவள் விழிகளில் வந்து மீண்டும் பதித்தான் , அந்த அழகியின் விழியில் சொக்கியும் போனான்.
“நீ உன் கண்ணைக் காட்டிருந்தாலே போதுமே டி.. உனக்கு லட்சக்கணக்குல பணத்தை வாரிக் கொடுப்பேன். போயும் போயும் உடம்பை காட்டி பணம் சம்பாரிக்க வேண்டிய அவசியம் என்ன டி வந்துச்சு உனக்கு “என்று அவள் கழுத்தைப் பற்றி கேட்கவேண்டும் என்று தான் தோன்றியது. ஆனால் அவனால் முடியவில்லை.
“சார்.. நான் பேசிட்டே இருக்கேன் நீங்க பாத்துட்டே இருக்கீங்க ” என்றவள் அவன் முகத்தின் முன் கைகளை ஆட்ட..
ஆட்டிய அவள் கையைப் பற்றி முறுக்கியவன் அபப்டியே அவள் முதுகுக்கு பின்னால் வளைத்து அவளை பின்னிருந்து கழுத்தோடு அணைத்துப் பிடித்தான்.
இதை சற்றும் எதிர்பார்த்திராத மீராவோ அதிர்ந்தவள் அவனிடம் இருந்து திமிர நினைக்க.. அவள் அசைந்ததில் கையில் இருந்த சூடான டீ கொட்டிவிடப் பார்த்தது.
“ஹேய்! டீ ஒரு சொட்டு கீழே சிந்தக்கூடாது. அப்படி சிந்துச்சு உன்னோட ஒரு நாள் சம்பளம் கட் ” என்றான் அவளை தன்னோடு உரசிக்கொண்டு நிற்க வைத்தபடி.
சம்பளம் கட் என்றதும் தன் திமிறலை நிறுத்திவிட்டு அப்படியே டீ கப்பை அசையாமல் அவள் பார்க்க..
” நான் சொல்ற வரைக்கும் அசையாம இப்படியே இருக்க நீ.. ” என்றான்.
“சார், இப்போ எதுக்கு என் கையைப் பிடிச்சீங்க? விடுங்க என்னை ” என்றாள்.
“என் முகத்துக்கு நேரா கையை நீட்டி பேச உனக்கு எவ்ளோ தைரியம் ” என்றவன். அவள் தலையில் தோட்டத்தில் இருந்த செடியில் பறித்த பன்னீர் ரோஜா வாசனை அவன் நாசியை துளைக்க.. அதை உள்ளிழுத்துக்கொண்டே அவள் கையை மேலும் இறுக்கினான்.
“ஹா! சார் , கை வலிக்குது ” என்று அவள் வலியில் அலற.
“உன்னை அப்டியே இருக்க சொன்னேன் ” என்றான்.
அவளோ ஒரு நாள் சம்பளம் போய்விடுமே என்று பல்லைக் கடித்துக்கொண்டு அப்படியே நின்றிருக்க..
“ஆமா நீ ஏன் இப்போ தாவணி போட்டிருக்க?” என்றான்.
“இது என்ன கேள்வி ” என்ற ரீதியில் அவள் யோசிக்க..
“ம்ம்.. சொல்லு ” என்றான்.
“ஏன் சார் போடக்கூடாதா? “என்றாள்.
“இல்ல. இப்போ இருக்க பொண்ணுங்க எல்லாம் சுடிதார், ஜீன்ஸ்னு மோர்டெர்னா டிரஸ் பண்றாங்க. நீ தாவணி போட்டிருக்கியேன்னு பார்த்தேன் ” என்றான்.
“அந்த மாதிரி வித விதமா போட எனக்கும் ஆசை தான். ஆனா அதெல்லாம் வாங்க நிறைய காசு வேணுமே சார் . இது என் அக்காவோடது. அவளுக்கு கல்யாணம் ஆன பிறகு தாவணி எல்லாம் போடுறது இல்ல. அதனால அதெல்லாம் வீணா தானே போகும். நாங்க நல்லா இருக்க அப்போ என் அப்பா அவளுக்கு நிறைய இது போல வாங்கி கொடுத்தார், அதை இப்போ நான் போட்டிருக்கேன் “என்று அவன் கேள்விக்கு கடுப்பாக பதில் சொன்னாள்.
“ஓஹ்! உன் அக்கா ட்ரெஸ்ஸா ?” என்றவன் பார்வை இப்பொது கீழ் நோக்கி சென்றது.
அவள் விலகிய தாவணியை தண்டி உப்பிய பன் துருத்திக்கொண்டு அவள் ஜாக்கெட்டை தாண்டி மேலேறி இருக்க.. இரவு அந்த பன்னின் மேல் புறத்தில் ஒரு மச்சம் இருப்பதைப் பார்த்ததாக நியாபகம் அவனுக்கு. அந்த பெட் லாம்ப் வெளிச்சத்தில் அது சரியாகவும் தெரியவில்லை.
அந்த போட்டு சைசில் அவன் பார்த்தது மச்சம் தானா? என்று அவன் பார்க்கும் ஆர்வத்தில் தலையை மேலும் கீழே கொண்டு வர..
அவன் மூச்சுக் காற்று அவள் கழுத்தில் சூடாக விழவும் , பட்டென அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
அவனோ அதை எதிர்பாராதவன் அவளையே பார்க்க..
“சார் என்ன.. என்ன பண்றிங்க?” என்று அவள் சற்று பதற்றத்தோடு கேட்க.
“அது.. பன்.. ச்சே .. இல்ல டீ .. ” என்று உளறியவன் “அது.. டீயில தொட்டு சாப்பிட பன் கிடைக்குமான்னு கேக்க வந்தேன் ” என்று சமாளித்தான்.
“அதை கேக்க எதுக்கு இவ்ளோ பக்கத்துல வந்திங்க ” என்று அவனை முறைத்தவள் “கையை விடுங்க சார் எனக்கு வலிக்குது” என்றாள் சிறு சிணுங்கலும், பயமும் சேர்ந்து .
“அது.. எனக்கு கையை நீட்டிப் பேசினா பிடிக்காது , இனிமேல் கையை நீட்டிப் பேசாத. அப்பறோம் மறுபடியும் இப்படி தான் உன் கையைப் பிடிச்சு திருகுவேன் ” என்றபடி அவள் கையை விட்டான்.
அவன் நெருக்கத்தில் நின்றிருந்தவள் சட்டென விலகி அவனைப் பார்த்தவள் “இந்தாங்க டீ ஆறிடும் கொஞ்சம் குடிச்சு பாருங்க ” என்றாள்.
அவனும் அதுவும் சொல்லாமல் அவள் கழுத்துக்கு கீழே செல்லத் துடித்த தன் பார்வையை கஷ்டப்பட்டு அவள் விழிகளில் நிறுத்தி இருந்தவன் டீயை வாங்கிக்கொள்ள…
“வேணுமா சார்? ” என்றாள் திரும்ப அவனிடம்.
அவனோ புரியாமல் “என்ன வேணும்? ” என்றான்.
“பன்னு .. பன்னு வேணும்னு கேட்டிங்களே.. ‘ என்றபடி அவள் அங்கே மேலே இருந்த கப்போர்டை திறக்கப் போனாள்.
தன்னிச்சையாக அவள் கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக அவன் தலை வேண்டும் என்ற ரீதியில் மேலும் கீழுமாக அசைந்தது.
அவன் பார்வை அவள் கவனம் அவன் பக்கத்தில் இல்லை என்றதும் அவனையும் அறியாமல் கீழே சென்றது.
நிலத்தில் இருந்த தன் பாதங்களை உயர்த்தி, விரல் நுனியில் நின்று, மேலே கப்போர்டில் இருந்த பன்னை எட்டி எடுத்தாள். அவள் உடல் சற்று மேலே உயர, அந்த அசைவில் அவள் ஆடை சற்று விலகி, அவளது ஒடுங்கிய இடை பளிச்சிட்டது.
இப்போது அவன் கவனத்தை முழுமையாக ஈர்த்தது என்னவோ ஆம்பல் தண்டு போல் வளைந்திருந்த அவளது மெல்லிய இடையில்தான்!
வஞ்சிக்கொடி போல் நளினமாய் வளைந்த அந்தச் சிற்றிடை, அவள் மூச்சுக்காற்றின் அசைவிற்கே மெல்லத் துடித்தது. நூல் பிடித்தாற்போல அமைந்த அந்த மெல்லிய வளைவும், அதன் மிருதுவான தோற்றமும் அவன் பார்வையைக் காந்தமென இழுத்து நிறுத்தியது.
எட்டி பிடிக்கும் அந்த ஒரு நொடி அசைவில், அவள் இடையின் மடிப்பும் நளினமும் அவன் நெஞ்சில் கணப்பொழுதில் தீயை மூட்ட, தன் பார்வையைக் கூட அங்கிருந்து விலக்க முடியாமல் ஸ்தம்பித்து நின்றான்.
கையிலெடுத்த பன்னை எடுத்த வந்து அவள் முன் நீட்டியவள் “இந்தாங்க சார்” என்றாள்.
அவள் பேச்சில் தான் அவன் கவனம் இப்பொது மாறியது.
தன் முன் நீட்டிக்கொண்டிருந்த பன்னை பார்த்தவன் அதை தொட்டுத் தழுவி அவள் கையைக் கடந்து அவள் பன்னில் நிலைத்து பின் பார்வை மேலெழுந்து அவள் விழிகளைப் பார்த்து “என்ன?” என்றான்.
“இவனுக்கு என்ன ஆச்சு?” என்ற ரீதியில் அவனைப் பார்த்த மீரா.
“சார் இந்தாங்க பன்னு கேட்டிங்களே சாப்பிடுங்க.” என்றான்.
“நான் எப்போ கேட்டேன் ” என்றான்.
“ஹா!” என்று அவனை குழப்பாகப் பார்த்தவள் “இவன் என்ன லூசா “என்று நினைத்த தன் மனதை கட்டுப்படுத்திக்கொண்டு..
“நீங்க தானே கேட்டீங்க டீயில தொட்டு சாப்பிட பன்..” என்று கையில் இருந்த பாக்கெட்டை அவன் முன் ஆட்டிக் காட்டினாள் .
“எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்ல வேணாம் ” என்று டீயை ஒரு சிப் பருகியவன் திரும்பி நடக்க..
“அப்போ வேணும்னு கேட்டிங்களே.. “என்றாள்.
“நீ கையில வெச்சிருக்க பன் வேணாம் ” என்றவன். “நான் கேட்டது நீ கையில வெச்சிருக்க பன்னை இல்ல.. ” என்றான்.
“அப்பறோம் வேற எந்த பன்னைக் கேட்டீங்க ” என்று அவள் குழப்பமாக அவன் முதுகையே வெறித்தவள் தன்னிச்சையாக தலையைக் குனிய..
அப்போது தான் அவள் தாவணி விலகி இருந்ததை கவனித்தாள். சட்டென தன் ஆடையை சேரி செய்து கொண்டே அவனை முறைதவளுக்கு அவன் பேச்சில் இருந்த அர்த்தம் புரிந்து போக.. “திமிரு புடிச்சவன் எப்படி வெக்கமே இல்லாம பேசிட்டுப் போறான் பாரு.. திமிரு புடிச்சவன் திமிரு புடிச்சவன் ” என்று அவனை ஏகத்துக்கும் வாய்க்குள் திட்டியவள் “இனிமே இவன் முன்னாடி கொஞ்சம் கவனமா இருக்கனும். வெட்கம் கெட்டவன் ” என்று நினைத்துக்கொண்டாள்.
அவள் தன்னைத் திமிரு புடிச்சவன் என்று திட்டியது அவனுக்கும் கேட்டது , அதைக் கேட்டு தன் இதழ் ஓரத்தில் மெல்லியதாக சிரித்தவன் டீயை முழுவதும் பருகிவிட்டு “ம்ம்.. நல்லா தான் டீ போட்டிருக்க ” என்று நினைத்தவன் ” எனக்கு பிரேக் பாஸ்ட் வேணாம் , மதியமும் எனக்கு சமைக்க வேணாம். டின்னர் மட்டும் செஞ்சிரு . நான் வெளிய கிளம்புறேன் ” என்றான்.
” அப்பாடா! வெளிய போறானா கிராதகன் ” என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டவள் கிச்சனில் இருந்தவாறே அவன் சொல்வதை எல்லாம் கேட்டவள் “ஓகே சார்!” என்று உள்ளிருந்தபடியே பதில் சொன்னாள்.
அவள் இப்போதைக்கு தன் முன்னாள் வரப்போவது இல்லை என்று தெரிந்தவன் தன் ஜீப் சாவியை எடுத்துக்கொண்டு ஆர்யனைப் பார்க்கக் கிளம்பி இருந்தான்.
