News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

ஆன்லைன் 3, PART-1

by Sinamika Writes
992 views
A+A-
Reset

ஆன்லைன் 3

மதியம் 1 மணி இருக்கும் தூங்கி எழுந்தவன் பிரெஷாகிவிடு விட்டு வெளியே வந்தான் மாறன்.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

மணி  வீட்டிற்குள் இருந்த ஷோ கேஸை துடைத்துக் கொண்டிருந்தார். அவன் படிகளில் இறங்கி வரும் சத்தம் கேட்டதும் அவனிடம் வந்தவர் “தம்பி! சாபிடறிங்களா?” என்றார்.

“ம்ம்.. ” என்றவன் டைனிங் டேபிள் நோக்கி செல்ல..

“மணி நீங்க வேலை இருந்தா பாருங்க நானே சாப்பிடுகிறேன் ” என்றவன் வந்து அமர்ந்து தனக்கு முன்னே இருந்த தட்டை எடுத்து வைத்தான்.

“சரிங்க தம்பி ” என்று அவர் அங்கிருந்து செல்ல..

அவன் முன் இருந்த பாத்திரங்களை திறந்து பார்த்தான் அதில் அவன் சொன்ன உணவுகள் செய்யப்பட்டு அழகாக அதை அலங்கரித்து இருந்தது , “ம்ம்..  ” என்று அதை பார்த்தவன் உணவை தட்டில் போட்டு சாப்பிட ஆரம்பித்தான்.

முதல் வாய் உணவு உள்ளே சென்றபோது குழம்பில் உப்பு குறைவாக இருந்தது, காலையில் மணி சொன்னது அவன் நினைவில் வந்தது. இப்பொது தான் அந்த பெண் சமைக்கக் கற்றுக்கொண்டு வருகிறாள் என்று.

சரி அடஜஸ்ட் செய்து சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று சாப்பிட ஆரம்பித்தான்,

சூப்பர் என்றும் சொல்லிவிட முடியாது, சுமார் என்றும் சொல்லிவிட முடியாத அளவுக்கு ஒரு சமையல்.

வேறு வழி இல்லையே சாப்பிட்டுத் தானே ஆக வேண்டும்  என்று நினைத்தவன் பசியாற சாப்பிட்டுவிட்டு தன் வண்டி சாவியை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பி இருந்தான்.

அவன் வந்தது அந்த சிட்டியில் இருக்கும் மற்றொரு பாருக்கு தான். ஒரே இடத்திற்கு தொடர்ந்து செல்வது மாறனுக்குப் பிடிக்காது. அதனால் அவன் வசிக்கும் இந்த சென்னை மாநகரத்தில் மூளை முடுக்கில் எதுவும் பாரோ.. ரெஸ்டோ பாரோ.. எங்கு இருந்தாலும் தேடி சென்றுவிடுவான். அதைவிட.. லோக்கல் டாஸ்மாக் கடைகளுக்குக் கூட அவன் சென்று வருவது வழக்கம். அவன் மூடை பொறுத்து போகுமிடம் மாறி இருக்கும் அவ்வளவே..

தனக்கு தேவையான மது பானத்தை சொல்லிவிட்டு தன் மொபைலை ஆன் செய்தான். வழக்கம் போல.. போனை தேய்த்துக்கொண்டே.. அமர்ந்திருக்க.. சற்று நேரத்தில் அவன் கேட்ட பணத்தை ஊற்றிக்கொண்டு வந்து அவன் முன் ஒரு கிளாஸை வைத்தான் பேரர்.

அதை கையில் எடுத்தவன் தன் மொபைல் திரையையே பார்த்துக்கொண்டிருந்தவன் அந்த கிளாஸை சுழற்றிக்கொண்டிருந்தான்.

அப்போது அவன் அருகே ஒருவன் வந்து அமர..

அவனை திரும்பிப் பார்த்துவிட்டு தன் வேலையை மீண்டும் தொடர்ந்தான்.

“என்ன வசந்த் என்ன ஆச்சு இன்னிக்கு டீல்?” என்றான் அவன்.

“எல்லாம் ஓகே நீ மானேஜரை பார்த்தா போதும் ” என்ற வசந்த் அவன் அருகே வந்து “ராகேஷ் அந்த சார் நம்ம பாருக்கு ரெகுலர் கஸ்டமர் தான் நீ வேணும்னா அவருக்கும் ட்ரை பண்ணி பாரு. கெத்து பார்ட்டி தான் காசு நிறைய இருக்கு.  “என்று சொல்லிவிட்டு தன் வேலையை பார்க்க போனான்.

வந்திருந்தவன் திரும்பி மாறனைப் பார்த்தான்.

மாறனோ மதுவை கொஞ்சம் கொஞ்சமாக ரசித்து ரசித்து குடித்துக்கொண்டிருந்தவன் தன்னை அதிலேயே மூழ்கிப் போகும் அளவுக்கு அடுத்தடுத்த க்ளாஸ்களை வாங்கி தன் வயிற்றில் ஊற்றிக்கொண்டிருந்தான்.

அவன் அருகே சேரை இழுத்துப் போட்டு அமர்ந்தவன் “ஹலோ சார் ” என்றான்.

போதையின் பிடியின் ஆரம்பத்தில் இருந்த மாறன் அவனை கண்களை சுறுக்கிப் பார்த்தவன் “ஹலோ.. ‘ என்று குளறினான்.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“சார் உங்களுக்கு மருந்து எதுவும் வேணுமா?” என்றான்,

“என்ன மருந்து.. எனக்கு உடம்பு நல்லா தானே இருக்கு ” என்றான் அப்படியே அந்த மேஜையில் சாய்ந்தபடி.

“ஐயோ அது இல்ல சார்… நீங்க இவ்ளோ ட்ரிங்க்ஸ் குடிச்சு கிடக்குற சந்தோசத்த விட.. இந்த ஒரு மருந்தைப் போட்டிங்கன்னா நிடைக்குற சந்தோசமே வேற லெவெள்ள இருக்கும் சார்” என்றான்.

“என்ன மாத்திரை ” என்றான் கண்களில் போதை மின்ன..

சுற்றிலும் நோட்டமிட்டபடி தன் பாக்கெட்டில் இருந்து ஒரு சிறிய கவரை எடுத்து நீட்டினான். அதில் இதய வடிவில் பச்சை வண்னத்தில் ஒரு மாத்திரை இருந்தது. “சார் இது தான் க்ரீன் ஹார்ட் இதுல ஒரு மாத்திரை மட்டும் போடுங்க அப்பறோம் இந்த பார் பக்கம் வரவே மாட்டீங்க.. இது எல்லாம் கொடுக்குற சந்தோசத்தை விட.. இந்த கிறீன் ஹார்ட் கொடுக்கும் ” என்றான்.

மேஜையில் படுத்திருந்தவன் எழுந்து அந்த கண்ணாடி போன்ற கவரை வாங்கிப் பார்த்தான் பச்சை நிற இதய வடிவ மாத்திரை இருந்தது. அதில் ‘SR’ என்று எழுதி இருந்தது.

“சரி ” என்று  அதை வாங்கி வாயில் போடப் போனான்.

“ஆஹ்!.. .சார்.. இப்பவே போடாதீங்க.. ஒரு இடத்துல செட்டில் ஆகிட்டு அப்பறோம் போடுங்க ” என்று அவன் கையைப் பற்றினான்.

அவனை பார்த்துவிட்டு தன் கைகள் மீதிருந்த அவன் கையைப் பார்த்தான்.

அந்த ஒற்றை பார்வையிலேயே அவன் கை தானாக விலகிக் கொண்டது.

தடுமாறியபடி எழுந்த மாறன் தன் பாக்கெட்டில் இருந்த பர்ஸை எடுத்தான்.

“ஐய்யோ சார் இப்போ வேணா.. நீங்க ஒருவாட்டி இதை ட்ரை பண்ணுங்க.. ஓகேனா அடுத்த முறை பணம் வாங்கிக்குறேன்” என்றவன் தன் மொபைல் நம்பரை அவனிடம் கொடுத்து “ஒரு ஹாய் போடுங்க சார்.. குரூப் இருக்கு அதுல உங்களை ஆட் பண்ணிக்கிறேன்” என்றான்.

“இதுக்கு வாட்ஸாப்ப் குரூப் வேற இருக்கா? ” என்றார்.

“ஆமா சார், புதுசா மாத்திரை வந்தா அப்டேட் பண்ணனுமே… அதான் சார் ” என்றான்.

“ம்ம். சரி ” என்று தலையை ஆட்டிவிட்டு அவன் கொடுத்த கவரை வாங்கி பாக்கெட்டில் வைத்தவன் அவன் போன் நம்பரையும் மறக்காமல் வாங்கி அவனுக்கு ஒரு ஹாய் அனுப்பிவிட்டு தான் சென்றான்.

தள்ளாடிய படியே வெளியே வந்தவன் பார்க்கிங்கிற்கு வர..

அங்கே அவனுக்காக காத்திருந்த ஆக்டிவ் டிரைவர் அவன் வந்ததும் பவ்வியமாக மாறன் முன் வந்தான்.

அவனிடம் கார் சாவியை நீட்ட.. வேகமாக அதை வாங்கியவன் வந்து கார் கதவை மாறனுக்காக திறந்துவிட்டான்.

காரில் ஏறிய மாறன் போதையில் அப்படியே பின் சீட்டில் சரிந்துவிட..

அவனை அழைத்துக்கொண்டு அவன் ஏற்கனவே சொன்ன அட்ரெஸிற்கு வந்தவன் மாறனை வண்டியில் இருந்து இறக்கிவிட்டான். அவனுக்கு பணத்தை கொடுத்துவிட்டு  தள்ளாடிக்கொண்ட  வீட்டிற்குள் நுழைய.. அவனுக்கு சமைத்து வைத்துவிட்டு வீட்டிற்கு கிளம்புவதற்காக வெளியே வந்த ஆஷா அவன் தள்ளாடி நடந்து செல்வதை பின்னிருந்து பார்த்தவள் இப்படி இந்த நேரத்தில் குடித்துவிட்டு வந்தவனை பார்த்து சற்று பயந்தவள் அவன் தன்னை பார்த்துவிடுவானோ என்று பயந்து வேகமாக கேட்டை திறந்து கொண்டு வெளியே சென்றாள்.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“இனிமேல் இந்த சார் கண்ணுளையே படக்கூடாது. இந்த நேரத்துல குடிச்சிட்டு வராரு” என்று நினைத்தாடி வெளியே சென்றாள்.

இங்கே தன் அறைக்கு மாறன் வரும்போது மணி ஐந்து இருக்கும் பாக்கெட்டில் இருந்த மாத்திரையை எடுத்து அப்படியே வாயில் போட்டு விழுங்கியவன் அது உடனே கொடுத்த போதையோடு அப்படியே சரிந்து விட்டான்.

சும்மாவே அவனை  அடக்க யாராலும் முடியாது இதில் இந்த க்ரீன் ஹார்ட் வேறு போட்டிருக்கிறான். லைவ் சேட்டில் வரும் பெண்ணின் நிலை என்னவாகப் போகிறதோ..

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.