News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

இன்னும் என்ன டி வெட்கம் உனக்கு. தப்பு 11

by Sinamika Writes
1.8K views
A+A-
Reset

தப்பு 11

அறையின் ஜன்னல் வழியே நுழைந்த இரவுத் தென்றல், மெல்லிய திரைச்சீலையை அசைத்துச் சென்றது. 

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

அறையிலிருந்த லேசான விளக்கு வெளிச்சத்தில், பூவிழியின் முகத்தில் படர்ந்திருந்த அச்சமும் நாணமும் யுகேந்திரனின் பார்வையிலிருந்து தப்பவில்லை.

“ஹையோ.. நான் மாட்டேன்!” என்று பயந்து பின்வாங்கிய பூவிழியைப் பார்த்த யுகேந்திரனின் முகத்தில், மீண்டும் அந்த ஆளுமையான குறும்புச் சிரிப்பு ஒட்டிக்கொண்டது..

கட்டிலில் தன் நீண்ட உடலைச் சாய்த்துப் படுத்துக்கொண்டவன், கைகளைத் தலைக்கு அடியில் கொடுத்துக்கொண்டு, “சரிடி… நீ பயந்துட்டே இரு. நான் கோபமாவே இருக்கேன். இனிமே என்கிட்ட பேசவும் வராதே,” என்று சொல்லிவிட்டு அலட்சியமாகத் திரும்பிப் படுத்துக்கொண்டான்.

பூவிழி அங்கேயே சில நொடிகள் தவித்து நின்றுவிட்டாள். அவளது விரல்கள் சேலைத் தலைப்பை முறுக்கிக்கொண்டிருந்தது. கணவனின் கோபம் தன்மீது நீடிப்பதை அவளால் தாங்க முடியவில்லை . அவனுடைய ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு வார்த்தையும் அவளுக்கு அத்தனை முக்கியம்.

மெல்ல அடியெடுத்து வைத்து அவன் அருகே வந்தாள். அவள் தன்னை நோக்கி நடந்து வருவது அவள் கொலுசின் மெல்லிய ஒலியும், அவளது வேகமான மூச்சுக்காற்றும் அவனுக்கு  உணர்த்தியது. மெதுவாகக் கட்டிலில் அவன் பக்கத்தில் அமர்ந்தாள் பூவிழி.

“மாமா…” என்று மிகவும் தாழ்ந்த குரலில் அழைத்தாள்.

யுகேந்திரன் அசையவில்லை.

“மாமா… நிஜமாவே கோபமா?” என்று சொல்லி, தன் பிஞ்சு விரல்களால் அவனது அகன்ற தோளைத் தொட்டாள்.

யுகேந்திரன் அதைத்தான் எதிர்பார்த்தான் போல! சட்டெனத் திரும்பி, அவள் மணிக்கட்டைப் பற்றி ஒரே இழுப்பாகத் தன் அருகே இழுத்துப் போட்டுக்கொண்டான்.

“ஆஹ்!” என்ற சிறு அலறலுடன் பூவிழி எதிர்பார்க்காமல் அவன் அகன்ற, சூடான மார்பின் மீது வந்து மோதினாள். அவள் கண்கள் அதிர்ச்சியிலும், நெருக்கத்தின் உணர்ச்சியிலும் விரிந்தன. அவள் இதயம் அவன் வெற்று மார்பில் பட்டு வேகமாக அடித்துக்கொண்டது.

“எனக்கு கோபம் போகணும்னுதானே என்கிட்ட வந்த? அப்புறம் எதுக்குடி  ஓடுற?”  அவன் குரல் மிகவும் தாழ்ந்து, அத்தனை கம்பீரமாக அவள் காதோரம் ஒலித்தது. அவனது சூடான மூச்சுக்காற்று அவள் கழுத்து வளைவில் பட்டுச் சிலிர்க்க வைத்தது.

“அது… நீங்க… நீங்க சொன்னது…” என்று பூவிழி தயங்கி, வார்த்தைகள் வராமல் தவித்தாள். அவனது கூர்மையான பார்வையை எதிர்கொள்ள முடியாமல், அவன் மார்பிலேயே முகத்தைப் புதைக்க முயன்றாள்.

யுகேந்திரன் அவள் தாடையைப் பிடித்து மெதுவாக முகத்தை நிமிர்த்தினான். “நான் என்னடி சொன்னேன்? தப்பா எதுவும் சொல்லலையே…”

“மாமா… அது வந்து…”

“அந்த அணில் மாம்பழத்தை எப்படி  சுவைக்குதோ… அதேபோல என் பொண்டாட்டியோட அழகை நான் ரசிக்கணும்னு, சுவைக்கணும்னு சொன்னேன்… இதுல என்னடி தப்பு? சொல்லு அமுக்காஞ்சி …” என்று அவள் விழிகளை உற்றுப் பார்த்துக் கேட்டான்.

அவள்  உதடுகள்  நடுங்க. “ஆனா மாமா… அது… வேணாம்.. வெட்கமா இருக்கு…” என்று தன் பார்வையை தாழ்த்திக்கொண்டாள்.

“உன் வெட்கம் தான்டி என்னைப் பைத்தியமாக்குது,” என்று முணுமுணுத்தபடி, அவள் சேலையில் கை வைத்தான்.

அடுத்து என்ன என்று அறிந்தவளாக விழுக்கென அவன் விழிகளைப் பார்க்க..

“யுகேந்திரனோ சரி வேணாம்னா விடு..” என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அவள் சேலையில் இருந்து கையை எடுத்தான்.

“ஹா!.. இல்ல மாமா இருக்கட்டும்” என்று எங்கே அவன் இதற்கும் தன் மீது கோவித்துக் கொள்வனோ என்று அவசரமாக அவன் கையை விளக்காமல் பிடித்து மீண்டும் தன் சேலையிலேயே வைத்தாள்.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

இப்பொது யுகேந்திரனின் இதழ்கள் தாராளமாக விரிந்தது. சிரித்துக்கொண்டே அவள் விழிகளைப் பார்த்தவன் பூவிழியின் சேலைத் தலைப்பை மெல்ல விலக்கிப் பக்கமாகத் தள்ளினான்.

அதற்கு மேல் அவனைப் பார்க்கப் பிடிக்காமல் அவள் பார்வையை தாழ்த்திக் கொள்ள..

“ஓய்! அமுக்காஞ்சி! என்னை பாரு டி..” என்றான் மெல்லிய குரலில்.

அவளோ “உங்க கண்ண பாக்க முடியல மாமா, இங்க ஏதோ செய்யுது” என்று தன் இடது பக்க மார்பைத் தொட்டுக் காட்டினாள்.

“இங்கையா?” என்று அவள் சுட்டிக்காட்டிய அதே இடத்தில் தன் உள்ளங்கையை அழுந்த வைத்தவன் அவளைப் பார்க்க.. 

அவன் தொட்ட இடம் குறுகுறுக்க.. சட்டென தன் கையை வேகமாக விளக்க.. இப்பொது அவன் நினைத்த இடத்தை அவன் கை தீண்டியது.. அவள் பிளவுசை தாண்டி திமிர்கொண்டிருந்த அழகில் அவன் சூடான கை பதியவும் . பூவிழி கண்களை இருக்க மூடிக்கொண்டாள்.

அந்த குழுமையான இடத்தில் , இருவரின் தேகமும் கதகதப்பை வெளிப்படுத்திக்கொண்டிருந்தது.

தாயாகப்போகும் அந்தப் பொலிவு, பூவிழியின் மேனியில் ஒரு புதிய அழகையும், பொலிவையும், அவள் மாங்கனிகளை முன்னைவிட அழகாக்கி இருந்தது. அதை அருகே பார்த்த யுகேந்திரனின் விழிகளில் மோகமும், அடக்க முடியாத ஆசையும் ஒன்றாக உருவெடுத்தது.

அவள் கண்களை இருக்க மூடி இருந்தாலும் அவன் கையின் கதகதப்பையும், அவன் நெருக்கத்தையும் , அவன் பார்வையின் வெப்பமே பூவிழியின் உடலைச் சிலிர்க்க வைத்தது.

“மாமா… வேணாம்…” என்று பூவிழி லேசாக முணுமுணுத்தாலும், அவளது கைகள் தானாகச் சென்று அவள் தோள்களை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டன. அவனது அணைப்பிலிருந்து விலக அவளது மனமும் உடலும் விரும்பவில்லை.

“என்ன டி வேணாம், எனக்கு வேணும்.. எல்லாமே வேணும்.. இப்பவே வேணும்.. உன்னைப் பார்த்தாலே என்னால கண்ட்ரோல் பண்ணிக்க முடியல டி..” என்றவன் “இங்க பாரு இப்படியே கண்ணை மூடிட்டே இருந்தா எப்படி . என்னை நீ இப்போ கண்ணைத் திறந்து பார்க்கணும் ” என்றான் கட்டளையிடுபவனாக.

அவன் குரலில் இருந்த கண்டிப்பாய் உணர்ந்தவள் விழிகள் தானாக திறந்து அவன் விழிகளைப் பார்க்க.. அவனோ அவள் இதழ்களுக்கு மிக அருகே நெருங்கியவன் “என்னையே தான் நீ பாக்கணும். வெட்கமா இருக்குன்னு சொல்லி கண்ணை மூடினா அப்பறோம் நான் உன்கூட பேச மாட்டேன்” என்று அவளிடம் எப்படி சொன்னால் வழிக்கு வருவாள் என்று அறிந்தவனாக பேசினான்.

“ஹும்… ‘ என்று அவள் படபடக்கும் விழிகளோடு தலையை ஆட்ட..

சிறுபிள்ளை போல மிரண்டு விழிப்பவளை கண்டு ரசித்தவன் உள்ளுக்குள் வந்த சிரிப்பை அடுக்கிக்கொண்டே தன் மோக விழிகளோடு அவள் விழிகளை ஏறிட்டான்.

அவன் சொன்னது போல இப்போது பூவிழி கண்களை மூடவில்லை. அவள் விழிகளையே தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவள் விழிகளை பார்த்துக்கொண்டே மெல்ல குனிந்து அவள் கீழ் இதழை தன் வன் இதழால் மென்மையாக கவ்விப் பிடித்தான். அவள் ஈர உதடுகள் பட்டதும் அவள் மேனி சிலிர்த்துவிட்டது. அதை உணர்ந்தவன் கவ்விப் பிடித்த உதட்டை உறிஞ்சதுவங்கினான் அவள் விழிகளில் இருந்து தன் விழிகளை அகற்றாமல்.

பூவிழியும் அதே நிலையில் தான் இருந்தாள் , அவன் ஒற்றை இதழ் ஸ்பரிசத்தில் பெண்ணவள் ஹார்மோன்கள் எகிறதுவங்கியது… அவனுக்கும் தான்.

கண்களை மூட முடியாமல் , உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்த முடியாமல் அவள் விழிகளில் இப்பொது பதட்டம் நீங்கி மோகம் தொற்றிக்கொள்ள..

அதை கண்டவனுக்கு மேலும் உணர்வுகள் அலை போல ஆர்பரிக்கத் துவங்கியது.

அவள் கீழ் இதழில் இருந்து அவன் இப்பொது மேல் இதழுக்கு தன் இதழை கொண்டு சென்றான், முடியவில்லை பெண் அவளால். சட்டென அவன் தோளில் இருந்த கையை  எடுத்து அவன் இடையோடு சுற்றி அவனை இருக்க அணைத்துக் கொண்டாள்.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

அவளாக தரும் முதல் அணைப்பு .. .சிரித்துக்கொண்டான். அதற்குமேல் அவளால் முடியவில்லை. அவன் இதழ்கள் முத்தம் கொடுத்துக்கொண்டே இருக்க.. அவள் இதழ்களும் அவனுக்கு வழி கொடுத்து அவன் இதழுக்கு இசைந்து கொடுத்துக்கொண்டிருந்தது, அவளையுமறியாமல் அவள் கண்களை மூடிக்கொள்ள.. அவள் இதழில் கவிபாடிக்கொண்டே.. யுகேனின் கைகள் அவள் முகத்தில் இருந்து கழுத்துக்கு கீழே பயணித்தது,

அவன் தீண்டல் அவள் தவிப்பை கூட்டி இருந்தது.,

அவன் கைகள் இப்பொது அவள் பிளவுஸில் பதிந்தது. அதே நேரம் பூவிலியின் இதழ்கள் அவன் இதழ்களுக்குள்ளேயே முனகியது. அவள் கைகள் இரண்டும் எதிர் திசையில் பதிந்திருக்க.. அவை அவள் மென்மையை வருடிக்கொண்டே ஒன்று சேர்ந்து இப்பொது அவள் பிளவுஸ் ஹூக்குகளை ஒவ்வொன்றாக கழற்றிக்கொண்டிருந்து.

எல்லாம் தெரிகிறது அவளுக்கு.. ஆனால் தடுக்கும் எண்ணம் தோன்றவில்லை. முடியவில்லை அவளால்.

அவள் ஆடைக்கு விடுதலை கொடுத்தவன் அப்படியே பூவிழியை அல்லி அணைத்து தன் வெற்று மார்போடு அவள் கதகதப்பான மார்பை அழுத்தி அணைத்துக் கொண்டான்.

அவளை விட்டுப் பிரிந்து படுக்கையில் சாய்ந்து அமர்ந்தவன் இன்னமும் உணர்வுகளின் பிடியில் இருந்து மீளாமல் தவிக்கும் அவள் உதடுகளையும், முகத்தையும் பார்த்து சிரித்தவன் அப்படியே அவளை இழுத்து தன் மீது அமர்த்திக் கொண்டு அவளைப் பார்த்தான்.

இதை சற்றும் எதிர் பார்த்திராதவள் சட்டென்று கண்களைத் திறந்து அவனைப் பார்த்தவள் வெட்கத்தில் தன் முகத்தை மூடிக்கொள்ள..

“இன்னும் என்ன டி வெட்கம் உனக்கு. ” என்று அவள் கைகளை முகத்தில் இருந்து விழித்தவன். “இங்க பாரு நீயும், நானும் கணவன், மனைவி.. ரெண்டு பேருக்குள்ளேயும் எந்த ஒளிவு மறைவும் இருக்கக்கூடாது. கட்டில்லையும் சரி,.. வாழ்க்கையிலும் சரி..  “என்றான்.

கூச்சம்பட்டுக்கொண்டே அவனைப் பார்த்தவள் சிவந்த தன் சூடான முகத்தை மென்மையாக சம்மதம் என்று ஆட்டினாள்.

அவள் அனுமதி இல்லாமலேயே யுகேன் அவளை கொள்ளை கொண்டான். இப்பொது அவள் சம்மதமும் கிடைத்திருக்க சொல்லவும் வேண்டுமா? யுகேனின் ஆட்டத்திற்கு மகுடியாய் பூவிழி ஆடப்போகிறாள் அடுத்த எபியில் இன்று மாலை வரும்

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.