News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

நீங்க இன்னும் சாகலையா? மூர்க்கன் 13

by Sinamika Writes
1.8K views
A+A-
Reset

மூர்க்கன் 13

ராவணின் மொத்தக் குடும்பமும் கொடைக்கானல் வந்து இறங்கியபோது நள்ளிரவை நெருங்கி இருந்தது.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த தங்குமிடத்தில் அவரவர் அவரவர் அறைகளில் தஞ்சம் புகுந்து கொண்டனர்.

தங்கள் அறைக்குச் செல்லும் முன் ஈஸ்வரும், ராஜ்ஜும் ஒருவரை ஒருவர் பார்த்து சைகை செய்தவர்கள். தங்கள் மனைவியரை விட்டுவிட்டு இவர்கள் இருவர் மட்டும் செல்வது என பேசிக்கொண்ட பின் தான் தங்கள் அறைக்கு சென்றனர்.

சரியாக நான்கு மணி இருக்கும், அந்த தாங்க முடியாத குளிரில் எழுந்து பிரெஷ் ஆகி உடைமாற்றிவிட்டு பாத்ரூமைவிட்டு வெளியே வந்த ஈஸ்வர் மித்ராவைப் பார்த்தான். அவள் ஆழ்ந்த தூக்கத்தில் போர்வையை மார்புவரை போட்டுகொண்டு படுத்திருக்க.. “அப்பாடா! இப்போதான் நிம்மதியா இருக்கு. நாங்க போறதே யாருக்கும் தெரியக்கூடாதுனு இருந்தா. இவளும் வரேன்னு சொல்லிட்டு இருக்கா.. நாட்டி கேர்ள்” என்று சொல்லிக்கொண்டவன் அறையை சத்தமில்லாமல் திறந்து கொண்டு வெளியேறியவன் நேராக அங்கே வாசலுக்கு வர..

சரியாக ராஜ்ஜும் அங்கு வந்து சேர்ந்திருந்தான். “நீயும் விட்டுட்டு வந்துட்டியா?” என்று சிரித்தான்.

“ம்ம்.. ஆமா டா. இவங்களை கூப்டு போய் நாம எங்க பேசுறது. அண்ணாவையே ரொம்ப நாள் கழிச்சு இன்னிக்கு தான் பாக்கப் போறோம். அவர்கிட்டே நிறைய பேச வேண்டி இருக்கு ” என்றவன் “சரி வா போகலாம் ” என்று குளிர் தாங்க முடியாமல் நடுங்கிக்கொண்டே முன்னே சென்றான் ராஜ்.

“உங்க அண்ணனுக்கு மீட் பண்ண வேற நேரமே இல்லையா. இந்த குளிர்ல தான் மீட் பண்ணனுமா?” என்றான் ஈஸ்வர் சற்று கடுப்பாக. அவனுக்கு இவ்வளவு காலையில் எழுவதெல்லாம் பிரச்சனை இல்லை. ஆனால் இந்த தாங்க முடியாத குளிரைத்தான் அவனால் சமாளிக்கவே முடியவில்லை.

“இந்த நேரத்துல தான் டா ஆட்கள் நடமாட்டம் கம்மியா இருக்கும். யாரும் நம்மள பார்த்துட மாட்டாங்க” என்றவன் காரைக் கிளப்பி கொடைக்கானல் லேக்கிற்கு வண்டியை செலுத்தினான்.

அங்கே பார்க்கிங்கில் வண்டியைப் போட்டுவிட்டு இறங்கிய இருவரும் ஜாக்கிங் செல்லத் துவங்கினர்.

“டேய் உங்க அண்ணன் எங்க டா இன்னும் ஆளைக் காணோம் ” என்று சுற்றிலும் ராவணைத் தேடியபடி கேட்டான் ஈஸ்வர்.

“அந்த அடங்காப்பிடாரியை சமாளிச்சிட்டு வர வேணாமா , உன் பொண்டாட்டியும், என் பொண்டாட்டியும் மாதிரியா அந்த ரக்ஷணா. அவ சரியான ஆளு டா அவ கண்ணுல மண்ணைத் தூவி வர வேணாமா ” என்ற ராஜ். “வா இந்த குளிருக்கு இதமா ஒரு டீயை குடிச்சிட்டு . அதுக்கு அப்பறோம் அண்ணாவுக்கு போன பண்ணிப் பார்க்கலாம்.” என்றவன் ஈஸ்வரை அழைத்துக்கொண்டு அங்கே இருந்த டீ ஸ்டாலுக்கு சென்றனர்.

“நீ சொல்றதும் சரி தான் , அப்ரோமா போய் எப்படி உன் தங்கச்சியை சமாளிக்கணும்னு தெரியல எனக்கு. பத்ரகாளி மாதிரி ஆடுவா”என்று சலித்துக்கொண்டவன் “அண்ணா ரெண்டு டீ ஸ்ட்ராங்கா .. சக்கரை கொஞ்சம் தூக்கலா வேணும்” என்று ஆர்டர் சொல்லிவிட்டு அங்கே போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்தான். அவன் அருகே ராஜும் சென்று அமர்ந்தான்.

“அப்பறோம் அடுத்து என்ன டா பிளான். கிளி இந்த ஊர்ல தான் இருக்கான்னு தெரிஞ்சிருச்சு. இனி எப்படி தேடித் கண்டு பிடிக்கலாம்னு பிளான் வெச்சிருக்க” என்று ராஜிடம் கேட்டான் ஈஸ்வர்.

“இன்னிக்கு தானே வந்திருக்கோம். எப்படியும் இங்க தான் கொஞ்ச நாள் இருக்க வேண்டி வரும். அதுக்குள்ள அண்ணியை கண்டுபிடிச்சாகனும்” என்றான் ராஜ்.

. “என்ன மச்சான்! உங்கிட்ட என்ன பிளான் இருக்கு ” என்று தனக்கு எதிரே ட்ராக் பாண்ட் , டிராக் சூட் அணிந்து தலைக்கு கொள்ளவும். முகத்திற்கு மார்ஸ்க்கும் அணிந்து பேப்பர் படிக்கும் ராவணிடம் கேட்டான் ஈஸ்வர்.

“மச்சானாஆ!” என்று ஆச்சர்யமான ராஜ் எதிரே இருந்தவனைப் பார்க்க..

தன் மாஸ்க்கை கழட்டி பாக்கெட்டில் வைத்தபடி “ரெண்டு பேரும் எப்படி இருக்கீங்க?” என்றான் ராவண் சிரித்துக்கொண்டே.

“அண்ணாஆ! ” என்று ராஜ் ஆர்வத்தில் ராவணை கட்டிக்கொள்ள எழ.. 

“டேய் உன் ஆர்வத்தை கொஞ்சம் அடக்கு.. ” என்று ராஜ்ஜின் கையை பிடித்து இழுத்து தன் அருகே அமரவைத்தவன் “அங்க பாரு.. ” என்று தூரத்தில் ராவணை கண்காணிக்க ரக்ஷணாவால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆட்களை பார்வையால் சுட்டிக் காட்டினான் ஈஸ்வர்.

அவனும் அவர்களை உடனே திரும்பிப் பார்க்காமல் கண்டும் காணாதவன் போல அங்குமிங்கும் பார்த்துவிட்டு தூரத்தில் நின்றிருந்த இருவர் கையில் மொபைலை வைத்து நொண்டியபடி அவ்வப்போது திரும்பி ராவணையும் கண்காணித்துக் கொண்டிருக்க..

“டேய் ஈஸ்வர் உனக்கு எப்படி டா அண்ணா வந்ததும், அவங்க அவர் கூட வந்தவங்கன்னும் தெரிஞ்சுது ” என்றான் ராஜ் ஆச்சர்யமாக,

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“எப்பவும் நம்மை சுத்தி என்ன நடக்குதுன்னு ஒரு கண்ணு வெச்சுக்கணும் டா.. ” என்றவன் ராஜ்ஜின் தோளில் கை போட்டபடி.

“அப்பறோம் மச்சான் உங்க பொண்டாட்டி எப்படி இருக்காங்க . அவங்க குழந்தை எப்படி இருக்கு.. ” என்றான்,

“டேய் எழுந்து வந்தேன்னு வை என்னை நக்கல் பேசுற வாயில இருக்க மொத்த பல்லையும் பிடுங்கி வீசிடுவேன்” என்று இருந்த இடத்தில் இருந்து கர்ஜித்தான் ராவண்.

“எங்க மச்சான் பல்ல பிடுங்குங்க பாக்கலாம் ” என்று ராஜ்ஜின் ஜெர்க்கினை சரி செய்வது போல பாவனையோடு ராவணை வம்பிழுத்தான்.

“நான் முடியாத நிலையில் இருக்கேன்னு என்னை கடுப்பேத்திட்டு இருக்க டா நீ.. அவ கர்ப்பத்துக்கு நான் காரணம் இல்ல.. அது யாரோட குழந்தைன்னு அந்த ரக்ஷனாவுக்கு தான் தெரியும். அவ என்கிட்டே பொய்யா நாடகம் ஆடி அவ வயித்துல என்னோட குழந்தை வளருதுனு சொல்லி என்னை அவ கண்ட்ரோல்ல வெச்சிருக்குறதா அவளுக்கு நினைப்பு ” என்றான் ராவண் எரிச்சலாக.

“சரி விடு மச்சான். யாரோட குழந்தைக்கு நீ உன்னோட இனிஷியலை கொடுக்க போற.. உனக்கு பெரிய மனசு தான்.” என்று ஏற்கனவே கடுப்பில் இருந்தவனை மேலும் கடுப்பேற்றினான் ஈஸ்வர்.

அதற்குள் டீயும் வந்துவிட.. அதை கையில் எடுத்த ராவண் “ரொம்ப பேசாத அப்பறோம் இந்த டீயை முகத்துல வீசிறுவேன் பாத்துக்க.. ” என்றான் ராவண்.

“எங்க என் புருஷன் மூஞ்சியில டீயை ஊத்துங்க பாக்கலாம்” என்று அங்கே கையைக் கட்டிக்கொண்டு நின்று இருந்தாள் மித்ரா,

அவள் குரல் கேட்டு மூவரும் திரும்பிப் பார்க்க..

அங்கே மித்ராவும், அவள் அருகே கயலும் கையைக் கட்டிக்கொண்டு நின்று இருந்தார்கள்.

“ஐயோ! இவளுங்க எப்படி இங்க வந்தாங்க.. ” என்று ராஜ் அதிர்ந்து பார்க்க..

ஈஸ்வரோ.. ” ஏய் மிது இங்க எதுக்கு டி வந்த.. ” என்றான் அதட்டலாக.

அவனை முறைத்தபடி அவன் அருகே வந்து  அமர்ந்த மித்ரா அவன் கையில் இருந்த டீ கிளாஸை வாங்கி குடித்தவள் “நானும் வரேன்னு சொன்னேனே எதுக்கு என்னை விட்டுட்டு வந்த?” என்று முறைத்தாள்.

“அது.. அது.. நீ நல்லா தூங்கிட்டு இருந்த அதான் தூங்கட்டும்ன்னு வந்துட்டேன் ” என்றான்.

அதுவரை அமைதியாக இருந்த கயல் “சார்! நீங்களா! நீங்க இன்னும் சாகலையா? ” என்று அதிர்ந்து கேட்டபடி ராவணை நோக்கி கயல் செல்ல..

“அடியே என்ன டி கேள்வி இது? உயிரோட இருக்கீங்களான்னு தானே கேக்கணும்  என்றவன் “காரியத்தையே கெடுத்து வெச்சிறாத.. ‘ என்று அவள் கையைப் பற்றி தன் கைவளைவிற்குள் அமரவைத்தவன் “அண்ணா! இன்னிக்கு நாம பேசின போல தான் ” என்று சலித்துக் கொண்டான் ராஜ்.

“ஏங்க.. சார் நம்ம முன்னாடி இருக்காருங்க.. அவர உயிரோட பார்த்த பிறகும் இப்படி அமைதியா இருக்கீங்க.. வாங்க அவரை இப்பவே நம்ம வீட்டுக்கு கூப்பிட்டுப் போலாம். வீட்ல எல்லாருக்கும் இவர் உயிரோட இருக்க விஷயம் தெரிஞ்சா எல்லாரும் சந்தோசப் பாடுவாங்க.. ” என்று ராவணை நேரில் கண்ட அதிர்ச்சியில் சற்று சத்தமாகவே பேசினாள்.

அவள் வாயில் சூடான டீ கிளாஸை வைத்து குடி டி முதல்ல.. என்று சூடான தேநீரை அவள் வாயில் ஊற்ற..

“ஷ்.. ஹா.. சுடுதுங்க.. ” என்று நாக்கை வெளியே நீட்டி ஷ்.. ஷ்.. என்று கயல் சத்தமிட..

ராவண் தூரத்தில் நின்று இருந்த ஆட்களைப் பார்த்தான். அவர்கள் நின்ற இடத்தில் தங்களை மறந்து தூங்கிக்கொண்டிருக்க.. கொஞ்சம் பெருமூச்சு விட்டவனாக.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“நான் நல்லா இருக்கேன் கயல்” என்று மென்மையாக சிரித்தவன் . “எனக்கு என்ன ஆச்சுன்னு உனக்கு இப்போ தெரிஞ்சாகணும் ரைட்” என்றான்.

அவளும் உதட்டை குவித்து சூட்டை ஆத்திக்கொண்டே.. ம்ம்.. என்று தலையை ஆட்டினாள்.

அதை ராஜ்கிட்டே அப்புறமா கேட்டுத் தெரிஞ்சுக்கோ.. இப்போ எனக்கு டைம் இல்ல.” என்றவன் ஈஸ்வரைப் பார்த்து “கிளி இங்க தான் இருக்கா.. அவகூட இன்னொரு ஆள் இருந்தான் . அவனை சரியா என்னால கவனிக்க முடியல.. அதுக்குள்ள ரக்ஷனா என்னை இழுத்துட்டுப் போய்ட்டா.. நாம இங்க இருந்து ஊருக்கு கிளம்பரத்துக்கு முன்ன எப்படியாவது கிளியையும், என் குழந்தைகளையும் கண்டுபிடிச்சாகனும் என்றான்.

இவ்ளோ நாள் கிளி எங்க இருக்காங்கன்னு தெரியாம ரொம்பவே சிரமப்பட்டுட்டோம். இப்போதான் அவங்க இங்க கோடைகாணல்ல தான் இருக்காங்கன்னு தெரிஞ்சிருச்சே,, இன்னிக்கே அதுக்கான வேலையை நான் ஸ்டார்ட் பண்ணிட்றேன் ” என்றான் ஈஸ்வர்.

“என்னங்க கிளி அக்கா இங்க தான் இருக்காங்களா?!” என்றாள் ஆச்சர்யமும், அதிர்ச்சியுமாக.

“ம்ம்.. ஆமா கயல் . அவங்களை இனி தான் தேடிக் கண்டுபிடிக்கும்” என்றான் ராஜ்.

“சரி நான் கிளம்புறேன் அந்த ரக்ஷணாவுக்கு சந்தேகம் வந்திரும்” என்று எழுந்தான் ராவண்.

“ஆமா … ஆமா.. ரெண்டாவது பொண்டாட்டிக்கு எப்படி பயந்து சாகுற மச்சான் நீ.. முன்ன இருந்த ராவணா இதுன்னு என்னக்கு இன்னும் ஆச்சர்யம் தாங்கல.. “என்று கண்ணாடிதான் ஈஸ்வர்.

“என்னது சாருக்கு இன்னஒரு கல்யாணம் ஆகிருச்சா! அப்போ அக்காவோட கதி..” என்று கயல் அதிர..

“அதை உங்க சார் பாத்துப்பார் நீ டீயை முதல்ல குடி ” என்றான் ஈஸ்வர் நக்கலாக,

“டேய் சும்மா இரு கொஞ்சம் ” என்று அவனை அதட்டிய ராவண் “உனக்கு இருக்க சந்தேகம் மொத்தத்தையும் உன் புருஷன்கிட்ட கேளு ” என்றவன் இவ்வளவு நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்த  மித்ராவை ஏறிட்டவன் “என்ன டா உன் பொண்டாட்டி என்னைக் கண்டுக்கவே மாட்டேங்குறா … என்னை இவ்ளோ நாள் கழிச்சு பார்த்ததும் அண்ணான்னு ஓடி வந்து கடிப்பான்னு நினைச்சேன் , ஆனா இங்க அப்படி எதுவும் நடக்கலையே. ” என்று மித்ராவையே பார்த்தான்.

“எப்படி பேசுவேன் நான் , நீங்களும், அண்ணியும் இப்படி ஒரு நிலைமையில் இருக்க நான் தானே காரணம். உங்களை பார்த்ததும் ஓடி வந்து கட்டிக்கணும்னு தான் தோணுச்சு ஆனா.. அங்க உங்களை ரெண்டு பேர் கண்காணிச்சுட்டு இருக்கறதை பார்த்த பிறகு எப்படி வர முடியும். அதான் அமைதியா இருக்கேன்  ” என்றாள்.

“பழசை எல்லாம் மறந்துரு , எல்லாம் நடந்து முடிஞ்சிருச்சு இனி நடக்குறதை சரியா மாத்துற சக்தி நம்மகிட்டே தான் இருக்கு ” என்றவன் “நீ பீல் பண்ணிட்டு இருக்காம. இந்த ராஸ்களை இன்னும் எப்படி எல்லாம் டோர்சேர் பண்றதுனு யோசி.. என்னோட சிட்டுவேஷனை யூஸ் பண்ணி இவன் என்னைக் கடுப்பேத்திட்டே இருக்கான்” என்றான் ராவண் .

“சரிண்ணா இவனை நான் பாத்துக்கிறேன். நீங்க எப்போ நம்ம வீட்டுக்கு வரப்போறிங்க,, அந்த ரக்ஷனாவுக்கு ஒரு முடிவு கட்டப் போறீங்க” என்றாள் .

“இளங்கிளியை கண்டுபிடிச்சு அவளை பாதுகாப்பா நம்ம கூட அழைச்ச பிறகு நீ கேட்டது எல்லாம் நடக்கும்” என்றான்.

“ஐயோ! அப்போ உங்க ரெண்டாவது பொண்டாட்டியை அம்போன்னு விடப் போறிங்களா மச்சான்” என்றான் ஈஸ்வர் பதட்டமாக இருப்பது போல பேசி நடித்தான்,

“மித்ரா ஸ்லேப் ஹிம் ஹார்ட்லி… ” என்றவன் கயலிடமும் , ராஜ்ஜிடமும் சிறு தலையசைப்பு தந்துவிட்டு அங்கிருந்து திரும்பிப் பார்க்காமல் செல்ல..

“டேய் மச்சான்.. “என்று ஈஸ்வர் சத்தம் அடுத்த நொடி காணாமல் போய் மித்ரா அவனை அறையும் சத்தம் அந்த இருட்டில் ராவண் காதில் விழுந்தது. அதை கேட்டதும் திருப்தியாக புன்னகைத்தபடி ஜோக்கிங் சென்றான். அவனோடு வந்தவர்களும் ராவணுடன் கிளம்பி இருக்க..

“ஏய் உன் அண்ணா சொன்னான்னு இப்படியா அடிப்ப.. ” என்றான்,

“உன்னை கொள்ள சொன்னாலும் யோசிக்காம கொன்றுவேண்டா நான் ” என்றாள்.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

“நான் உன் புருஷன் டி.. ” என்றான் ஈஸ்வர் கன்னத்தை தடவிக்கொண்டே..

“சோ வாட்!.. ‘என்றபடி மித்ரா எழ..

“கயல் நீயும், மித்ராவும் முன்னாடி கிளம்புங்க.. நான் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்” என்று அவர்கள் இருவரையும் முன்னே போகச் சொல்ல..

“அதுக்கு எங்களை அனுப்பிட்டு நீங்க இங்க வர பொண்ணுங்களை சைட் அடிக்கவா.. அதெல்லாம் முடியாது, நீங்க எங்க போனாலும் நாங்களும் வருவோம் ” என்ற கயல் “இல்லையா மித்ரா.. ” என்றாள்.

“ம்ம்.. ஆமா கயல் , வா.. நாம அப்டியே சுத்திப்பாத்துட்டு வரலாம் ” என்று அவளை அழைத்துக்கொண்டு அங்கே இருந்து செல்ல..

ஈஸ்வரும், ராஜ்ஜும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு அவர்கள் பின்னால் சென்றனர்.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.