மூர்க்கன் 23
“ம்மா… ம்மா… ” என்று ஆதியின் குரல் கேட்டு தூக்கத்தில் இருந்து கண் விழித்தாள் இளங்கிளி.
தூக்க கலக்கம் அவளுக்கு கண்களை தேய்த்துவிட்டுக்கொண்டே எழுந்தவள் அவள் முன்னே ஆதியை தூக்கிக்கொண்டு நின்றிருந்தான் ராவண்.
அவனை கண்டதும்.. அவன் பார்வை மேயுமிடம் கண்டதும் அவசர அவசரமாக தூக்கத்தில் கலைந்திருந்த தன்னாடையை சரி செய்து கொண்டு வேகமாக எழுந்து நின்றாள்.
“இப்போ எதுக்கு இவ்ளோ அவசரம். இதெல்லாம் நான் பார்த்து எவ்ளோ நாள் ஆச்சுன்னு தெரியும் தானே.. ” என்றான்.
அவனை முறைத்துவிட்டு ஆதியை அவனிடம் இருந்து வாங்கியவள் “அதுக்கு தான் உங்க பொண்டாட்டி இருக்காங்களே அங்க போக வேண்டியது தானே.. ” என்றாள் .
“கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும், குரங்கு மாதிரி ஒரு வப்பாட்டி தேடும் இந்த மனசு. ஆனா நீ கிளி டி .. என்னோட கிளி.. எனக்கு பிடிச்சா.. நான் உன்கிட்ட தானே வருவேன்” என்று கலைந்த அவள் கூந்தலை காதோரம் ஒதுக்கி இருந்தான்.
அவன் கையைத் தட்டிவிட்டவள் “அப்போ நான் என்ன உங்களுக்கு வைப்பாட்டியா?” என்று சீறினாள் அவனிடம்.
அவள் கோபம் கண்டு ரசித்தவன் அதை மேலும் தூண்டி விட்டு ரசிக்க எண்ணி.. “ஆமா.. அப்படியும் வெச்சுக்கலாமே.. ” என்று அவள் கன்னம் வருட கையை மேலே உயர்த்தினான்.
ராவண் தொட வர.. இளங்கிளி தன் முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டாள்.
அப்போது ஆதியோ இளங்கிளியின் முகத்தைப் பற்றி தன்னைப் பார்க்குமாறு திரும்பியவன் “ம்மா கஃகக் .. கஃகக் யேனும்” என்று சிணுங்கினான்.
“கஃகக்!..” என்று புருவம் விடுங்க ஆதியையும், இளங்கிளியையும் ராவண் பார்க்க..
“கொஞ்சம் வெளியே போறிங்களா.. குழந்தை பசிக்குதுன்னு சொல்றான்” என்றான் அவனைப் பார்க்காமலேயே.
“பசிச்சா எதுவும் செய்து கொடு . அதுக்கு ஏன் என்னை போக சொல்ற.. ” என்று கையைக் கட்டிக்கொண்டு நின்றான்.
“ம்மா… கஃகக்.. யேனும் ” என்று மீண்டும் ஆதியின் சிணுங்கல் அதிகமாக.
“ஐயோ! கொஞ்சம் வெளியே போங்களேன் அவனுக்கு நான் பால் கொடுக்கணும் ” என்று மகனின் பசியாற்ற பெண்ணின் உள்ளம் பதை பதைத்து.
“பால் தானே ஊத்திக் கொடு.. “என்றான் ராவண் இப்பொது புரியாமல்.
“கடவுளே! ஆள் தான் நெடுமரம் மாதிரி வளர்ந்திருக்கே ஒழிய.. அறிவுங்குறது சுத்தமா இல்ல.. ” என்று புலம்பியவள். “ஆதிக்கு பால் கொடுக்கணும்… நான் கொடுக்கணும்” என்பர் வார்த்தைகளை அழுத்தமாக அவள் சொல்ல..
அப்போது தான் அவனுக்கு உரைத்து. குழந்தைக்கு தாய் அமுதை கொடுக்க தான் தன்னை வெளியே செல்லச் சொல்கிறாள் என்றும் முற்றிலும் புரிந்தது. “அப்போ கஃகக்…?” என்று கேள்வியாகப் பார்க்க..
“ம்மா… கஃகக்.. ” என்று ஆதியின் சிணுங்கல் இப்பொது அழுகையாக மாறத்துவங்கியது.
அவனுக்கு பால் கொடுக்க வேண்டும், ராவணை சமாளிக்க வேண்டும் இது இரண்டும் சேர்ந்து இளங்கிளிக்கு பொறுமை போய்விட்டது. “யோவ் புள்ள பசிக்குதுன்னு சொல்றது உனக்கு தெரியல? இப்படி நின்னுட்டே இருந்தா நான் எப்படி இவனுக்கு பால் கொடுக்கிறது” என்று சத்தமிட்டாள்.
“யோவ்வா!” என்று அதிர்ந்து பார்த்தவன் இளங்கிளியை ஒரு மார்க்கமாகப் பார்த்துவிட்டு சிரித்தவன் “பால் தானே கொடு.. அதுக்கு நான் ஏன் வெளிய போகணும்” என்று அங்கே இருந்த சேரில் போய் கால் மேல் கால் போட்டு அமர்ந்தவன் கைகளைக் கட்டிக்கொண்டு அவளையே பார்த்துக்கொண்டு அமர்ந்து இருந்தான்.
பிள்ளையை பிடித்தபடி அவன் முன் வந்து நின்றவள் “உங்கள வெளிய போக சொன்னேன். இங்க வந்து உக்காந்திருக்கிங்க…” என்றாள் கடுப்பாக.
“ம்மா… கஃகக்.. ” என்று ஆதி இளங்கிளியின் முகத்தைப் பற்றி அழுதுகொண்டே தன் பக்கம் திருப்பினான்.
பிள்ளைக்கு பசியற்ற இடைஞ்சலாக வந்து உக்கார்ந்திருப்பவனைக் கண்டு எரிச்சலானது இளங்கிளிக்கு. அதுவுமில்லாமல் அவன் பால் வேண்டும் என்று சொன்ன கணத்தில் இருந்து அவனுக்குக் கொடுக்கவேண்டி பால் அதிகப்படியாகச் சுரக்க.. அது அவள் பிளவுசை தாண்டி சேலையை நனைக்கத் துவங்கி இருந்தது.
ராவண் எதிரே நின்று இருந்தவள் ஈரம் படிந்த சேலையை பார்த்ததும் புரிந்துவிட்டது ராவணுக்கு அதற்கு மேலும் அவளை சீண்டாமல் அமைதியாக வேறு பக்கம் திரும்பி அமர்ந்தவன் “நீ முதல்ல பையனுக்கு பாலைக் கொடு. நாம அப்பறோம் சண்டை போட்டுக்கலாம் “என்றான்.
அவன் பார்வை சென்ற இடமும், அதன் பின் அவன் திரும்பிக்கொண்டு விதமும் கண்டவள் குனிந்து தன்னைப் பார்க்க.. அவள் சேலை மாராப்பில் இருபக்கமும் நனைந்து இருப்பதை கண்டதும் “ஹா!” என்று அவசரமாக திரும்பிக் கொண்டாள்.
அவள் அதிர்ந்த குரல் கேட்டு சரியாக யூகித்தவன் முகத்தில் மெல்லிய புன்னகை தோன்றியது.
“விவஸ்தை கேட்ட மனுஷன் புள்ள பசிக்குதுனு அழுறது கூடப் புரிஞ்சுக்காம இங்கையே உக்காந்திருக்குறதைப் பாரு..”என்று வாய்விட்டே புலம்பியவள் திரும்பி தரையில் அமர்ந்து தன் சேலையை விலக்கி குழந்தைக்கு பசியாற்றத் துவங்கினாள்.
“குழந்தைக்கு பசிக்குதுன்னா நீ பாலைக் கொடுக்க வேண்டியது தானே.. நான் எதுக்கு வெளியே போகனும்” என்றான்.
“ம்ம்.. உங்களை வெச்சுட்டு நான் எப்படி என் புள்ளைக்கு பால் கொடுக்க முடியும். உங்க கண்ணு சும்மா இருக்குமா.. ” என்று கடுப்பாக அவளிடம் இருந்து பதில் வந்தது.
“அப்படியா! நான் அமைதியா இருக்கணும்னு திரும்பி உக்கார்ந்தா நீ ரொம்ப தான் பேசுற டி.. ” என்றவன் எழுந்து வந்து அவள் முன் தரையில் சாஷ்டாங்கமாக படுத்து தலைக்கு கையை கொடுத்து அவளையும், பால் குடித்துக்கொண்டிருந்த அவன் பிள்ளையையும் ரசித்தான்.
ராவண் வந்து இப்படி அவள் முன் படுக்கவும் சட்டென தன் சேலையை கீழே இழுத்துவிட்டவள் அசைந்தாள் பிள்ளைக்கு தொந்தரவாக இருக்குமென்று ராவணை முறைத்தவள் “ஏன் இப்படி என்னை இம்சை பண்றீங்க.. “என்று சலித்துக்கொண்டாள்.
“நான் என்ன டி பண்ணினேன். உங்க ரெண்டு போரையும் தொந்தரவு பண்ணாம அமைதியா தானே இருக்கேன் “என்றான் .
“ஐயோ! சத்தம் போடாதீங்க.. அப்பறோம் பாத்தியிலையே குடிக்காம அழ ஆரம்பிச்சிருவான்” என்று மெல்ல அவனை எச்சரிக்கை செய்தாள்.
“சரி சரி.. ” என்று அவனும் மெல்லப் பேசியவன் மூடி இருந்த அவள் சேலையை விளக்கி மேலே போட்டவன் பிள்ளை பால் குடிக்கும் அழகை ரசிக்கத்துவங்கினான்.
“என்ன பண்றீங்க!..” என்று அதிர்ந்தவள் அவசர அவசரமாக சேலையை கீழே இறக்கி இறக்கிவிடப் போக..
“ம்ப்ச்.. சும்மா இரு டி.. இதெல்லாம் இவ்ளோ நாளா பாக்காம மிஸ் பண்ணிருக்கேன்” என்று மீண்டும் சேலையை ஏற்றிவிட்டவள் அவள் கையை பற்றிக்கொண்டு தன் மகனை ரசிக்க…
இவன் பிடிவாதம் அறிந்தவளோ அதற்கு மேலும் முடியாது என்று முடிவு செய்து தன்னை இந்த கோலத்தில் ரசிக்கும் ராவணை பார்க்க முடியாமல் தலையை வேறுபக்கம் திருப்பிக்கொண்டாள்.
ஆதியோ பசியாற்ற அவசர அவசரமாக பாலை அருந்த அந்த சத்தம் வேறு அவளுக்கு ஒரு மாதிரி ஆகி இருந்தது.
“தங்கம்.. என் சிங்கக்குட்டி.. எனர்ஜி ட்ரின்க் எப்படி டா இருக்கு.. இவ்ளோ வேகமா குடுக்குற.. அவ்ளோ ருசியாவா இருக்கு.. ” என்று ஆதியின் தலை முடியை வருட கைகளை உயர்த்தினான்.
அவன் கையை தட்டிவிட்டவள் “அவன் பால் குடுக்குற அப்போ எந்த தொந்தரவும் பண்ணாதீங்க… இல்லேன்னா எனக்கு தான் கஷ்டம் ” என்று திருப்பிக்கொண்டாள்.
“ஏன் டி உனக்கு என்ன கஷ்டம் ” என்றவன் “என் பையன நான் கொஞ்சுறேன். அவனுக்கு முத்தம் கூடக் கொடுப்பேன்” என்று மெல் வந்து ஆதியின் கன்னத்தில் ராவண் முத்தம் பாதிக்க..
“ஷ்… ” என்று இளங்கிளியின் முனகல் அப்போது வந்தது .
சட்டென அவளை நிமிர்ந்த பார்த்த ராவண் “என்ன?” என்று புருவம் உயர்த்திக் கேட்டான்.
ஒன்றுமில்லை என்று தலையை இடவலமாக ஆட்டியவள் கீழ் இதழைக் கடித்துக் கொண்டே மறுபக்கம் திரும்பிக்கொண்டாள்.
அவளை புருவம் சுருங்கப் பார்த்தவன் குனிந்து தன் மகனின் கேசத்தை வருடியவன் “என்ன டா பண்ற உன் அம்மாவை ” என்று புரியாமல் கேட்டான் ஆதியிடம்.
“ஷ்!..ஆ…” என்று மீண்டும் அலறிய இளங்கிளி. “அவன் பால் குடிக்குற வரைக்கும் கொஞ்சம் சும்மா தான் இருங்களேன்.. ” என்றவள் வலியில் முகம் சுருங்க அவனைப் பார்க்க..
ராவணுக்கு ஏதோ புரிந்தது போல தோன்றியது. அவளை புருவம் சுருங்கப் பார்த்தபடி பிள்ளையை அதற்கு மேலும் தொந்தரவு செய்யாமல் விலகி தலைக்கு கை கொடுத்து படுத்துவன் இளங்கிளியின் முகத்தையே பார்க்க..
ஆதி கடித்ததில் வலி ஒரு பக்கம்.. ராவண் இப்படி விழி இமைக்காமல் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதில் கூச்சம் ஒரு பக்கம் என்று அவள் பாடு தான் இப்பொது திண்டாட்டம் ஆனது.
“கடிக்குறானா டி..” என்றான் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு.
“இதெல்லாமா கேப்பாங்க.. ” என்றாள்.
“கேட்டதுக்கு பதில் சொல்லு.. ” என்றான் அதிகாரமாக.
அவன் குரலில் இருந்த மாற்றத்தை உணர்ந்தவள் “ம்ம்.. “என்று மட்டும் பதில் தந்தாள்.
“காயம் ஆகிருச்சா?” என்றான்,
“ம்ம்..” என்றாள்.
அவள் அப்படி சொன்னதும் பால் குடித்துக்கொண்டிருந்த ஆதியை ராவண் முறைக்க..
அவன் கோபம் கண்டு பதறியவள் “குழந்தை தானே.. அவனுக்கு என்ன தெரியும்.. ” என்றாள் அவசரமாக,
“அதுக்குன்னு..” என்று அவன் கேட்க..
“அவங்க அப்பா மாதிரி தானே இவனும் இருப்பான். பசி வந்திருச்சுன்னா எதுவும் தெரியாது” என்று சொல்லிவிட்டு உதட்டுக்குள் சிரித்தவள் மறுபக்கம் திரும்பிக்கொள்ள..
அவளை விழுக்கென நிமிர்ந்து பார்த்தவன் அவள் சிரிப்பைக் கண்டு கொண்டதும் அதற்கு மேலும் பேசாமல் அப்படியே படுத்துக்கொண்டு அவள் வெட்கத்தை ரசித்தான்.
அதன் பின் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. இருவரின் மனதில் என்னென்னவோ எண்ணங்கள் ஓடியது. இவர்கள் என்ணத்தை ஆதி பால் குடிக்கும்போது எழும் சத்தம் நிதானத்துக்குக் கொண்டு வர.. மீண்டும் ராவண் , இளங்கிளியின் விழிகள் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு மீண்டும் பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டது.
ஸ்டோரி படிச்சிட்டீங்களா அப்போ கமெண்ட் பண்ணிடுங்க😍 கூடவே லைக் பண்ணுங்க.
