News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

உனக்கு புள்ளை கொடுத்ததே நான் தான் டி மூர்க்கன் 18

by Sinamika Writes
1.7K views
A+A-
Reset

மூர்க்கன் 18 .

தனக்குப் புருஷனே இல்லை என்றவளை பார்த்து சிரித்த ராவண்

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

“அப்பறோம் எப்படி பிள்ளைங்க பிறந்துச்சு உனக்கு? அதுவும் ரெட்டை பிள்ளைகள் ? புருஷன் இல்லாம குழந்தை பெத்துக்க நீ என்ன  குழந்தையா ?” என்று ராவண்  நமுட்டுச் சிரிப்புடன் கேட்டான்.

அவள் முகத்தில் கோபம் கொப்பளிக்க, தன் கைகளை இறுக்கமாக மடித்துக்கொண்டு கோபத்தை கட்டுப்படுத்தியவள். ” நான் யாரா இருந்தா உங்களுக்கு என்ன வந்துச்சு. என் குழந்தைகளோட பிறப்பை கேலி செய்யுற உரிமை  உங்களுக்குக் கிடையாது ” என்றவளின் குரல் கோபத்தில் நடுங்கியது.

ராவண் தன் கைகளைக் கட்டிக்கொண்டு, இன்னும் கேலியாகப் புன்னகைத்தான். “சரிதான்… அப்படினா அந்த இரட்டைக் குழந்தைகள் எப்படித்தான் இந்த உலகத்திற்கு   வந்தாங்க… அதை நீயே உன் வாயால் சொல்லு கேக்குறேன் !” என்று அவளை சீண்டினான்.

“எனக்கு பிறந்தது ரெண்டும் ரெட்டைப் பிள்ளைங்கன்னு இவருக்கு எப்படித் தெரியும்  “என்று யோசித்தவள். “உங்களுக்கு.. எப்படி?..” என்று அவள் இழுக்க..

“எனக்கு எப்படித் தெரியும்னு கேக்குறியா?” என்றான்.

இளங்கிளி அவனையே பார்த்திருக்க..

“உனக்கு புள்ளை கொடுத்ததே நான் தான் டி.. ” என்றவன் குனிந்து அவள் இதழ் உரச .. இளங்கிளியின் மூச்சுக்கு காற்று உரச நெருங்கி நின்றவன் “எப்படி குழந்தை கொடுத்தேன்னு இன்னொரு முறை செஞ்சு காட்டவா?” என்று இரட்டை அர்த்தத்தில் பேச..

அவனை அதிர்ந்து பார்த்தவள் “ச்சீ!” என்று அவனை தன்னிடம் இருந்து தள்ளி நிறுத்தி இருந்தவள் அவனை பார்க்க..

“என்ன டி.. ” என்று மோகமும்.. காதலுமாக அவளை மேலும் நெருங்கினான் ராவண்.

“உ.. உங்க பேரு … ” என்று கேட்டாள் “ராவண் .. என் பேரு . எல்லாரும் அப்படித் தான் கூப்பிடுவாங்க. ஆனா உனக்கு பிடிச்ச பேர் என்ன தெரியுமா? நீயும், நானும் ஒண்ணா இருக்க நேரம் எல்லாம் நீ அந்த பேரை சொல்லி தான் நீ என்னைக் கூப்பிடுவ.. ” என்றவன் அவள் காதோரம் குனிந்து “என் மேல நீயும்.. உன் மேல நானும் இருக்க அப்போ என்னை நீ ஐரான்னு தான் கூப்பிடுவ.. ” என்று கிசுகிசுத்தான்.

அதை கேட்டதும் இளங்கிளி அதிர்ந்து அவனை விட்டு வேகமாக விலகியவள் “இல்ல.. என்கிட்டே எதுக்கு இப்படி எல்லாம் பேசுறீங்க நீங்க.. ” என்றவள் “அன்னிக்கு கடைவீதியில் உங்களை நான் பார்த்தேனே.. அப்போ உங்க கூட ஒருத்தவங்க வயித்துல குழந்தையோட இருந்தாங்களே .. அப்போ அவங்க யாரு?” என்று இளங்கிளி கேட்க..

“பரவால்லையே என்னை அன்னிக்கு அடையாளம் தெரியலைன்னு தான் நினைச்சேன். என்னை மறந்தாலும் என்னையும், என் கூட இருந்த ரக்ஷணாவையும் அதுவும் அவ கர்ப்பமா இருக்குறது வரையும் சரியா கவனிச்சு இருக்காளே.. ”  என்று நினைத்த ராவண்.

“அவளா? அவ.. “என்று பேச வர..

“அன்னிக்கு நீங்க பார்த்த பொண்ணு தான் இவரோட பொண்டாட்டி ” என்று பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது.

குரல் கேட்டதும் அதிர்ந்து இருவருமே திரும்பிப் பார்த்தனர். அங்கே கைகளைக் கட்டிக்கொண்டு இருவரையும் பார்த்தபடி ஈஸ்வர் நின்று இருக்க..

அவனை அங்கே போக வேண்டாம் என்று தடுத்தபடி அவன் பின்னால் வந்த மித்ரா ராவண் இளங்கிளியிடம் நெருங்கி நின்று இருந்ததை பார்த்துவிட்டு “டேய் இதுக்கு தான் போக வேணாம்னு சொன்னேன், உனக்கு கொஞ்சமும் அறிவே இல்ல டா.. இப்படியா நந்தி மாதிரி வந்து நிப்ப..” என்று மித்ரா ஈஸ்வரின் கையைப் பற்றி அங்கிருந்து அழைத்து செல்ல..

“இல்ல நீங்க நினைக்குற போல எதுவும் இல்ல. இவர் யார் என்னன்னே தெரியாது. என்னை எதுக்கு இவர்கிட்டே கூட்டி வந்திங்க நீங்க ?” என்று இருவரிடமும் கோபப்பட்டவள் ராவணை முறைத்துவிட்டு மித்ரா, ஈஸ்வரைத் தாண்டி அந்த இடத்தை விட்டு வெளியேறி இருந்தாள்.

ராவனோ தன்னை முறைத்துவிட்டு சென்றவளை பார்த்து சிரித்தவன் இத்தனை நாள் கழித்து அவளிடம் நெருங்கி இருந்ததில் எழுந்த உணர்வுகளுக்கு கடிவாளம் போட்டவன் தலையை அழுந்தக் கொத்திக்கொண்டு இளங்கிளியைக் காண சென்றான்.

அவன் சென்றதும் பின்னாலேயே மித்ராவும் செல்லப் போக..

“நீ எதுக்கு டி இப்போ உன் அண்ணா பின்னாடியே போற.. இப்படி வா.. ” என்று அவளை இழுத்து ராவண் , இளங்கிளி ரொமான்ஸ் செய்த அதே இடத்தில அவளை சுவற்றில் சாய்த்து நிற்க வைத்தவன் இந்த கிளைமேட் இந்த இடம் கூட நல்லா தான் இருக்கு என்றவாறு அவள் இதழ் நோக்கிக் குனிந்தான்.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“டேய் லூசு.. நம்ம எதுக்காக வந்திருக்கோம். நீ என்ன பண்ணிட்டு இருக்க.. ” என்று அவனை தன்னிடம் இருந்து தள்ளி நிறுத்தியவள் “வா போகலாம் “என்று அவன் கையை பற்றி தன்னோடு அழைத்தாள் .

“இப்படி எல்லாம் கூப்பிட்டா நான் வர மாட்டேன்” என்று ஈஸ்வர் சிறு குழந்தை போல கையையும், காலையும் ஆட்டி அடம்பிடிக்க..

அவன் செயலைக் கண்டு சிரித்துக்கொண்டே அவனிடம் வந்தவள் “விட மாட்டியே.. ” என்று அவன் முகத்தை தன் இரு கைகளிலும் ஏந்தினாள்.

“நான் இப்படவும் ரெடியா தான் இருக்கேன். நீ ஓகே மட்டும் சொல்லு போதும் ” என்று அவள் சொன்னதற்கு இரட்டை அர்த்தத்தில் பதில் சொன்னவன் “ம்ம்.. இப்போதைக்கு முத்தம் மட்டும் போதும்” என்று தன் இதழ் குவித்து கண் மூடி அவள் முன் நின்றான்.

“ராஸ்கல் எங்கே வெச்சு எப்படி பேசுற டா நீ. .இப்படி பேசுற உன் வாய்க்கு தண்டனை தான் கொடுக்கணும் ” என்றவள் எம்பி அவன் இதழை நறுக்கென்று கடித்து வைத்துவிட்டு சிரித்துக்கொண்டே அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.

“ஷ்!..ஆஆ…” என்று வலியில் அலறியவன் “இரு டி இதே பனிஷ்மெண்ட்டை உன் உடம்பு பூரா இன்னிக்கு நான் கொடுக்கல.. ” என்றபடி அவள் பின்னால் சென்றான்.

இங்கே கோபத்தோடு வந்த கிளியைப் பார்த்ததும் ராஜ்ஜும் , கயலும் எழுந்து நிற்க.. அவள் பின்னே வந்த ராவனோ இளங்கிளியின் கையைப் பற்றி அவளை தன் பக்கம் திருப்பினான். அவனை முறைத்த இளங்கிளி தன் கையை அவனிடம் இருந்து உறுவிக்கொண்டவள்.

“நான் வீட்டுக்கு போறேன்” என்று கயலிடம் சொல்லிவிட்டு அவர்கள் பதிலுக்கு காத்திராமல் அந்த சாலையில் இறங்கி விறு விறுவென நடந்து செல்ல,,

“ஐயோ! அக்கா! இருங்க இந்த இருட்டுல எங்க தனியா போறீங்க ” என்று அவளோடு பின்னால் சென்றாள் கயல்.

“என்ன அண்ணா? என்ன ஆச்சு? அண்ணி ஏன் கோவிச்சிட்டுப் போறாங்க?” என்றான் ராஜ்.

இளங்கிளியை ஆசையாக பார்த்தபடி தலையை அழுந்தக் கோதியபடி ராவண் பதில் பேசாமல் நிற்க. .

தன் உதட்டை தொட்டுப்பார்த்துக்கொண்டே அங்கே வந்த ஈஸ்வர். “உன் அண்ணனுக்கு அவசரம் டா.. அதான் அவங்க மேல பாஞ்சுட்டான் போல.. அவங்களுக்கு இவனை யாருன்னே தெரியாது. அப்படி இருக்கவங்ககிட்டே போய் உனக்கு நான் தான் புள்ளை கொடுத்தேன். மறுபடி எப்படி குழந்தை பெத்துகிறதுனு டெமோ காட்டட்டுமான்னு கேக்குறான். அப்படி கேட்டா உன் அண்ணிக்கு கோபம் வருமா? வராதா? ” என்றான்,

ஈஸ்வரை திரும்பி முறைத்த ராவண் “சரி எனக்கு நேரம் ஆச்சு ரக்ஷணா எழுந்திருவா. நான் கிளம்புறேன் ” என்றான் ராஜ்ஜிடம்.

“அண்ணா அதுக்குள்ள கிளம்புறீங்களா? அண்ணி கிடைச்சதும் அந்த ரக்ஷணாவை விட்டு வரேன்னு சொன்னிங்க. நாங்க அண்ணியை கொண்டு வந்து உங்க முன்னதை நிறுத்தியதும் நீங்க கிளம்பி இப்படியே எங்க கூட வருவீங்கன்னு இல்ல நான் நினைச்சேன்” என்றான்.

“இல்ல ராஜ், இப்படி உடனே கிளம்பி வர முடியாது. எனக்கு கொஞ்சம் டைம் வேணும்” என்றான்.

“எதுக்கு டைம் , அந்த ரக்ஷனாவை உடனே விட்டு வர சாருக்கு மனசு விரலையோ.. ” என்று நக்கலடித்தான் ஈஸ்வர்.

அதில் கடுப்பான ராவண் “டேய் ஈஸ்வர்.. ” என்று பல்லைக் கடித்துக்கொண்டு அவன் பெயரை அழைக்க..

“அம்மாஆ!..” என்று சரியாக அந்த நேரம் அலறினான் ஈஸ்வர். அவன் வயிற்றில் நறுக்கென்று கிள்ளிய மித்ரா “இப்போ எதுக்கு டா என் அண்ணாவை கடுப்பேத்திட்டு இருக்க நீ.. ” என்றாள்.

“பின்ன என்ன டி.. இளங்கிளிக்கு பழசு எதுவுமே நியாபகம் இல்ல . அப்படி இருக்கவகிட்டே போய் இவன் எடுத்ததும் பாய்ஞ்சுட்டு போனா என்னடி அர்த்தம் ” என்றான்.

அவன் கேட்பதும் நியாயம் தானே என்ற ரீதியில் மற்ற மூவரும் ராவணைப் பார்க்க..

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“சரி தப்பு என் மேல தான் “என்று கேசத்தை கோதியவன் “இனி பார்த்து நடந்துக்கிறேன்” என்று அவன் அங்கிருந்து கிளம்பி விட..

இவர்கள் மூவரும் அடுத்து என்ன நடக்கபோகிறதோ என்று யோசித்தபடி கார் நிறுத்தி இருந்த இடத்திற்கு வர..

அங்கே கயல் இளங்கிளியின் கையைப் பிடித்துக் கெஞ்சியபடி நின்று இருந்தாள். “அக்கா, சாரி.. தப்பு எல்லாம் என் மேல தான். நான் தான் உங்களை என் அக்காவா இருக்கும்னு தப்பா நினைச்சுட்டு இங்க கூட்டிட்டு வந்துட்டேன். வந்ததும் அவர் உங்களை தனியா இழுத்துட்டு போவாருனு நான் நினைக்கல.. உங்ககிட்டே அவர் எதுவும் பேசுவாருன்னு தான் நான் நினைச்சேன் ” என்றாள்.

இளங்கிளியோ இன்னமும் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு இருக்க.. “அக்கா ப்ளீஸ் என்னை மன்னிச்சிருங்க.. ” என்று அவள் கையைப் பற்றி மீண்டும் கயல் கெஞ்ச..

“இது கயலோட தப்பு மட்டும் இல்ல . எங்க எல்லாரோட தப்பும் கூட தான் . எங்களை மன்னிச்சிருங்க” என்று ராஜ்ஜும் இளங்கிளியிடம் மன்னிப்புக் கேட்க..

அவர்கள் அனைவரையும் பார்த்தவள் அதற்கு மேல் தன் கோபத்தை இழுத்துப் பிடிக்க முடியாமல் மனம் மாறியவள் “சரி இனிமேல் இப்படி பண்ணாதீங்க ” என்றாள்.

கயல் சரி என்ற ரீதியில் தலையை வேக வேகமாக ஆட்ட.. “போலாமா? குட்டிங்க எழுந்திருவாங்க ” என்றாள் இளங்கிளி. அவள் மனம் என்னவளோ போல ஆகிவிட்டது. அதை இவர்களிடம் காட்டாமல் தனக்குள்ளேயே மறைத்துக் கொண்டவளுக்கு பிள்ளைகளைப் பார்த்தாள் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் என்று வீட்டிற்கு அவர்களோடு கிளம்பி இருந்தாள்.

இங்கே இளங்கிளியைப் பார்த்துவிட்டு ஒருவித உற்ச்சாகத்தோடு ரக்ஷனாவுடன் தங்கி இருக்கும் காட்டேஜிற்கு வந்த ராவண் விசில் அடித்தபடி அறைக்குள் நுழைய அங்கே அவன் வருவதற்கு முன்பாகவே எழுந்து ஹாலில் அமர்ந்து இருந்த ரக்ஷணா அவன் துள்ளல் நடையும் , சந்தோஷமான முகமும் கண்டு குழப்பமாக அவனைப் பார்த்தாள்.

அவள் தன்னை கவனிப்பதை ராவணும் கண்டுகொண்டவன் “என்ன ரக்ஷு அப்படிப் பாக்குற.” என்று அவள் அருகே சென்று சற்று இடைவெளி விட்டு அமர்ந்தான்.

அவளோ “என்னிக்கும் இல்லாம உன்னோட முகத்துல இவ்ளோ சந்தோசம் தெரியுதே.. அதுக்கு என்ன காரணம்னு யோசிக்கிறேன் ராகவ் ” என்றாள் அவனை நெருங்கி அமர்ந்து கொண்டே.

“என்னை எதுக்காக கொடைக்கானல் போலாம்னு அடம் பண்ணி கூட்டி வந்தேன்னு எனக்கு இப்போதான் புரியுது ரக்ஷு.. ” என்றான் அவளை அழுத்தமாகப் பார்த்துக்கொண்டே.

“நாம ரெண்டு பேரும் ரொம்ப நாளா எங்கையும் போகலையே ஒரு ரிலாக்ஸா இருக்கட்டுமேன்னு தான் இங்கே கூட்டி வந்தேன் ” என்றவள் “ஏன்? என்ன ஆச்சு?”  என்றாள் குழப்பமாக.

“அதுவா.. சொல்றேன் ” என்றவன் அவள் காதருகே குனிந்து விஷயத்தை சொல்ல… அவன் பேசப் பேச ரக்ஷனா உறைந்து போனாள், அவள் முகம் வியர்த்து வெளிறிப் போனது.

அப்படி நம்ம ஹீரோ செல்லம் என்ன சொல்லிருப்பான் கெஸ் பண்றவங்க கமெண்டில் சொல்லுங்க பார்க்கலாம்

ஸ்டோரி படிச்சிட்டீங்களா அப்போ கமெண்ட் பண்ணிடுங்க😍 கூடவே லைக் பண்ணுங்க.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.