News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

கண்ட்ரோல் போகுது டி.. மூர்க்கன் 49 PART-2

by Sinamika Writes
2.5K views
A+A-
Reset

PART-2

“ஹேய்! இங்க ஏண்டி இழுத்துட்டு போற.. வா உன் ரூமுக்குப் போகலாம் “

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

“எதுக்கு எல்லாரும் இருக்கும்போதே எனக்கு கிஸ் அடிச்சீங்க. தனியா ரூமுக்குள்ள விட்டா அவ்ளோ தான்  ” என்றவள் சுற்றிலும் யாரும் இருக்கிறார்களா என்று பார்த்தபடி பேசினாள்.

“ரூம்குள்ள தான் எல்லாமும் பண்ணுவேன்னு யார் சொன்னது ” என்று அவளை இழுத்து மார்போடு சேர்த்து அணைத்தான்.

“உங்களுக்கு பைத்தியம் தான் பிடிச்சிருக்கு. மிஸ் யூன்னு சொன்னா உடனே கிளம்பி வந்துடணுமா?”

“நீ தானே சொன்ன.. “

“மனசுல பட்டத்தை சொன்னேன். அதுக்கு இப்படியா வந்து நிப்பீங்க?” என்று அவன் மார்பில் சாய்ந்து இருந்தவள் அப்படியே அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“என்ன டி ..” என்றவன் குனிந்து அவள் நெற்றியில் தன் முத்தத்தைப் பதிக்க.

அவளோ கண் மூடி அந்த முத்தத்தை ஆழ்ந்து மனதிற்குள் பதிய வைத்துக் கொண்டிருந்தாள்.

அவளை அப்படியே நிமிர்த்தி தன் முத்தத்தை தீவிரப் படுத்தியவன் குனிந்து அவள் கண்களில், மூக்கு நுனியில், காது மடலில் என முத்தம் பதித்தவன் அப்படியே கீழ் இறங்கி அவள் துடிக்கும் அதரங்களை , சிவந்த கன்னங்களையும் பார்த்துக்கொண்டே குனிந்து மெல்ல.. மெல்ல.. அவள் இதழை கொய்து தின்னத் துவங்கினான்.

கொஞ்சம் கொஞ்சமாக அவள் இதழின் ஒவ்வொரு மில்லிமீட்டரையும் தன் இதழ் கொண்டு மென்மையாக வருடி.. நாவல் சுவைத்து.. இதழ் குவித்து முத்தம் வைத்து என்று கீழ் உதட்டில் அமுதம் இருக்கிறதா.. மேல் உதட்டில் மதுரமும் இருக்கிறதா என்று ஆராய்ச்சி செய்து அதை சுவைத்து சுவைத்து அவளை கிற்ங்கடித்தான்.

அவனிடம் தன் இதழை ஒப்படைத்துவிட்டு மொத்த உலகத்தையும் மறந்துவிட்டு நின்று ஒருந்தவள் உணர்வுகளின் பிடியில் சிக்கிக்கொண்டு தவித்தவள் துவண்டு விழும் தருணத்தில் தன்னை வாரி சுருட்டி மனதை ஒன்றாக்கியவள் தன்னிடம் இருந்து ருத்ரசேனாவின் மார்பில் கை வைத்து அவனை தள்ளினாள்.

தள்ளிய அவள் இரு கைகளையும் பிடித்து தன்னோடு இழுத்து இரு கைகளையும் தன் இடையை சுற்றி இரு கையையும் ஒன்றாக கோர்த்து ஒரு கையால் பிடித்தவன் மற்றொரு கையால் அவள் பின்னங்கழுத்தைப் பிடித்து விட்ட இடத்தில் இருந்து மீண்டும் ஆரம்பித்தான் முத்தத்தை.

அவனிடம் இருந்து இதழை பிரித்து..

“சேனா..”

“ம்ம்..”

“போதும்…”

“இச்,,இச்.. “

“வே..”

“ம்ம்.. “

“வேணாம்..”

ம்ம்ம்…

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

என்று அவள் பேச அவனிடம் இருந்து பிரிய முற்பட..

அவனோ அவள்  இதழை அவள் பேச்சுகளுக்கு இடையில் நிறுத்த முற்பட்டு மூச்சு விடக் கூட அவகாசம் கொடுக்காமல் முத்தமிட்டுக் கொண்டிருந்தான்.

“ம்ம்.. ம்ம்ம்… ” என்று அவள் திணற முற்பட்டு அது முடியாமல் போக..

அவனிடமே தன் இதழை ஒப்படைத்துவிட்டாள்.

“நீண்ட நெடிய முத்தம் இல்லை அது.. ஆழ.. அழுந்த வைத்த முத்தம் அது.. இந்த இரவின் ஏகாந்தத்தில் இருவரின் ஏக்கத்தை தொலைக்க கொடுத்த முத்தம் அது..

“ரம்.. ‘

“… “

“ரம்யா..”

“…”

“கண்ட்ரோல் போகுது டி.. “

“ம்ம்… ” என்று அவன் பேச நினைக்கும் வார்த்தைகளைக் கூட முழுதாக பேச முடியாமல் அவள் இதழைக் கொய்வதிலேயே முனைப்பாக இருந்தவன் முத்த இடைவெளியின் பொது மட்டும் தான் அவனாலேயே பேச முடிந்தது.

தன் இடையை சுற்றி பிடித்திருந்த அவள் கைகளை விட்டுவிட்டு அவள் முகத்தை இரு கைகளிலும் ஏந்தி இதழுக்குள் மூழ்கிப் போனான் ருத்ரசேனா.

பெண்ணவளோ எதுவும் புரியாமல்.. அவனிடமே சரணடைந்துவிட்டாள்.

நீண்ட நேரம் கழித்து .. களைத்து.. அவள் இதழில் இருந்து இதழ் பிரித்து ரம்யாவைப் பார்த்தான்

அவளோ அவன் முத்தத்தில் திணறி.. கிறங்கி.. மயங்கி அப்படியே வலுவிழந்து கண்களை மூடிய நிலையில் அவனிடம் இன்னமும் முத்தம் வாங்குகிறோம் என்ற நினைப்பில் தலையை தூக்கியப்படி நின்று இருக்க..

அவள் முகத்தை இரு கைகளிலும் ஆசையாக ஏந்தியவன் சிவந்த கன்னங்களைத் தாண்டி சிவந்து தடித்து இருந்த இதழ்களை ஆசையாக தன் கட்டை விரல் கொண்டு வருடியவன் “இப்படியே ரெண்டு பேரும் கிளம்பி எங்கையாவது போய்டலாமா டி.. நாளைக்கு வரைக்கும் காத்திருக்கணுமா நீ என்னோடவளாக .இப்பவே நீ முழுசா எனக்கு தான். உன்னை இப்படியே தூக்கிட்டுப் போய்டணும் போல இருக்கு.. ‘ என்று அவள் மூடிய இமைகளில் முத்தம் பதித்து அவளை விட்டுப் பிரிய மனமில்லாமல் கேட்டான்.

மெல்ல கண்களைத் திறந்து அவனைப் பார்த்தவள் “இன்னும் 4 மணி நேரம் தான். அப்பறோம் நான் மொத்தமும் உங்களுக்கு தான் சேனா” என்றாள்.

“நாலு மணி நேரம் இருக்கு டி.. ” என்றான் சலிப்பாக.

அவன் பேச்சைக் கேட்டு சிரித்தவள் தன் கன்னத்தைத் தாங்கி இருந்த உள்ளங்கையை அப்படியே பற்றி அவன் புறங்கையில் கன்னம் வைத்து சாய்ந்து கொண்டவள்.

“என் கழுத்துல மூணு முடிச்சு போட்டு முழுசா உங்களுக்கு உரிமையானவளா மாத்திட்டு உரிமையா என்னைக் கூட்டிபோங்க சேனா”  என்றாள்.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

அவளின் சேனா என்ற அழைப்பு ருத்ரனுக்குள் ஒரு பேர் அலையே எழுந்து அடங்கியது.

அவளை அப்படியே சுருட்டி தனக்குள் ஒளித்து வைத்துக் கொள்ளலாம் என்று தான் தோன்றியது அவனுக்கு.

அவன் புறங்கையில் கன்னம் வைத்து சாய்ந்து  இருந்தவளை தன்னைப் பார்க்குமாறு நிமிர்த்தி.. “கிளம்பட்டுமா?” என்றான் அவளைப் பிரிய மனமே இல்லாமல்.

அவன் விழிகளை பார்த்தபடி வேண்டாம் என்று தலையை இடவலமாக ஆட்டினான்.

அவள் ஏக்கம் கண்டு மென்மையாகி சிரித்தவன்  “என்ன வரவே வேணாம்னு சொன்ன..  “

“ஆனா இப்போ வேணும்னு தோணுதே..”

“எது வேணும்..”

“மொத்தமா”

“அப்போ வா.. அந்த புதர் பக்கம் ஒதுங்கலாம்” என்று அவள் தோளில் கையைப் போட்டு ருத்ரசேனா நடக்க.

“ஹா!.. அஸ்கு புஸ்கு.. ஆசை தான் உங்களுக்கு… ” என்று அவனை விடுப்பு பிரிந்து நின்றவள் அவனைப் பார்த்துக் கொண்டே பொன்னோக்கி நடந்தவள் “நாளைக்கு.. மொத்தமா.. ” என்று வெட்கப்பட்டாள்.

“ம்ம்.. அதுக்கு அப்பறோம் சொல்லு.. கேட்டுட்டு கிளம்பறேன் “

“ம்ஹும்.. நான் சொல்ல மாட்டேன்.. ” என்று வாசல் பக்கம் சென்று கதைவடைக்கப் போனவள் அதன் இடைவெளியில் தன் முகத்தை மட்டும் நீட்டி அவனை ஏறிட்டாள்.

“அப்போ .. நாளைக்கு நான் செய்றேன்..” என்று அவளை நோக்கி ருத்ரசேனா நடக்க..

“போதும் போங்க சேனா.. காலைல பார்க்கலாம் ‘ என்று கதவை சாற்றிக் கொள்ள..

அவனும் சிரித்தபடி அங்கிருந்து கிளம்பி இருந்தான்.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.