மூர்க்கன் 49
நள்ளிரவு 12 மணியைக் கடந்து இருக்கும் ஊரே உறங்கிக்கொண்டு இருக்க.. இங்கே ஒருத்தி மட்டும் உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தாள். அவள் மனம் முழுவதும் பெண் பார்க்க வந்தவன் சும்மா செல்லாமல் இவ்வளவு நாள் அவள் பூட்டி வாய்த்த உணர்வுகளை எல்லாம் ஒற்றை முத்தத்தில் தூண்டிவிட்டல்லவா சென்றிருக்கிறான்.
இருட்டு அறையில் கட்டிலில் குப்புறப்படுத்துக்கொண்டு தன் மொபைல் திரையில் ருத்ரசேனாவின் போட்டோவைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்ன டா ஒரே முத்தத்துல என்னை இப்படி உன்னை மட்டுமே நினைக்கிற மாதிரி மாத்தி வெச்சுட்ட” என்று தனக்குத் தானே சொல்லி சிரித்துக் கொண்டாள்.
ருத்ரசேனா கிளம்பும்போது அவன் மொபைல் நம்பரை அவளுக்குத் தந்துவிட்டுத் தான் சென்றிருந்தான்.
அவன் வாட்ஸாப்பை திறந்து அவனுக்கு மெஸேஜ் அனுப்புவதும் .. பின் அதை அனுப்பலாமா? வேண்டாமா? என்று யோசித்தபடி டெலீட் செய்வதுமாக படுத்திருந்தாள் ரம்யா.
‘”ஒரு ஹாய் மெசேஜ் அனுப்ப எதுக்கு டி இவ்ளோ யோசிக்குற நீ.. ” என்று அவள் மனசாட்சி அவளை கேள்வி கேட்டது.
“அது எப்படி டி நானே போய் அவர்கிட்டே பேசுறது. என்னை எதுவும் நினைச்சுட்டு என்ன செய்றது. அலையுறேன்னு நினைக்க மாட்டாரா?” என்று பதில் கேள்வி கேட்டாள்.
“ஓஹோ.. அப்போ அவன் மட்டும் உன்னை பஸ்ட் டைம் மீட் பண்ணின அப்போ முத்தமெல்லாம் கொடுத்தான். எலெக்ட்ரோலைட் கொடுத்து உன்னை மேட்டர் பன்றேன்னு சொன்னான் அதெல்லாம் அலைஞ்சான் கேஸ் இல்லையா? “என்றது .
“ஹா… ஆமா .. நீ சொல்றதும் சரி தானே.. அவரே என்கிட்டே அவ்ளோ உரிமை எடுத்துகிற அப்போ .. எனக்கு முத்தம் குடுக்குற அப்போ.. என்கிட்டே பஸ்ட் நைட் பத்தி பேசுற அப்போ. நான் ஏன் ஒரு ஹாய் மெசேஜ் அனுப்பக் கூடாது ” என்று நினைத்தவள் மொபைலில் வேகமாக டைப் செய்து ருத்ரனுக்கு அனுப்பினாள்.
அவள் அனுப்பிய அடுத்த நொடி ப்ளூ டிக் ஆனது.
“ஹையோ! இவர் என்ன அனுப்பினதும் பார்த்துட்டார் என்று பதறினாள் ரம்யா.
அவன் இவ்வளவு நேரம் ரம்யாவின் வாட்சப்பில் இருந்த டிபியை தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் சேட்டில் டைப்பிங் என்று வருவதும். பின் மறைவதுமாக இருக்க.. அதை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
“இந்த ஹாய் அனுப்ப தான் இவ்ளோ நேரம் யோசிச்சிட்டு இருந்தியா ? “என்று அவனிடம் இருந்து பதில் வந்தது.
“நா என்ன பண்ணுவேன் . நீங்க ஏதும் நினைச்சுட்டு என்ன பண்றதுனு யோசிச்சிட்டு இருந்தேன் “எண்று அனுப்பினாள்.
“அப்பறோம் எப்படி தைரியம் வந்துச்சு எனக்கு மெசேஜ் அனுப்ப.” என்றான்.
“ம்ம்… நீங்க என்னை மீட் பண்ணின அன்னிக்கே முத்தம் கொடுத்தீங்களே.. பஸ்ட் நைட் பத்தி எல்லாம் பேசுனீங்க.. அந்த தைரியம் தான் “என்றாள்.
அதை கேட்டு சத்தமாக சிரித்தவன் அவளுக்கு சிரிக்கும் எமோஜியை அனுப்பினான்.
“எனக்கு உங்களை பாக்கணும் போல இருக்கு.. என்னவோ தெரியல.. உங்க தோள் மேல சாஞ்சுக்கணும்னு இருக்கு ” என்று அனுப்பினாள்.
அதை படித்த மறு நொடி.
“பின் வாசல் கதவை திறந்து வை நான் இப்போ வந்துடறேன் ” என்று பதில் அனுப்பினான்.
“விளையாடாதீங்க மணி இப்போ எவ்ளோ தெரியுமா?”
“அதனால என்ன? நான் வரேன் “
“ஐயோ! இல்ல வேணாம். யாராவது பார்த்தா அவ்ளோ தான் பிரச்னையாகிடும்”
“அதை நான் பார்த்துகிறேன் “
“நான் வேணாம்னு சொன்னேன்”
கையில் கார் சாவியை எடுத்துக்கொண்டே.. அவளுக்கு டைப் செய்தான்.
“அப்போ வந்து கதவை தட்டுவேன் பரவல்லையா?”
“உங்களுக்கு பயமே கிடையாதா?”
“நான் காரை ஸ்டார்ட் பண்ணிட்டேன்”
ரம்யா பதில் பேச முடியாமல் போனையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவனை டீஸ் செய்யலாம் என்று ஆரம்பித்தாள். இப்பொது அது அவளுக்கே வந்து வினையாக முடிந்தது.
“நீங்க பண்றது சரி இல்ல.. பைத்தியக்காரத்தனம் ” என்றாள்.
“நீ தானே என்னை மிஸ் பன்றேன்னு சொன்ன? என்கூட இருக்கணும்னு சொன்ன?”
“நான் உங்களை மிஸ் பன்றேன்னு தான் சொன்னேன் ” என்று அவசரமாக பதில் அனுப்பினாள்.
“ரெண்டும் ஒன்னும் தான் “
“வேணாம்னு சொன்னா கேளுங்க ருத்ரா “
“நான் இன்னும் டென் மினிட்ஸ்ல வந்துருவேன். நீ பின் வாசலை திறந்து வைக்கலையின்னா நான் முன் வாசல் கதவை தட்ட வேண்டி வரும் . எப்படி வசதி” என்று காரை ஓடிக்கொண்டே அவளுக்கு வாய்ஸ் நோட் அனுப்பினான்.
அதை ஹெட்போன்ஸ் எடுத்து காதில் மாட்டி அதை கேட்டவள். “எல்லாம் என்னை சொல்லணும். நான் இப்போ என்ன பண்ணுவேன். யாராவது பார்த்துட்டா என்ன பண்ணுவேன்” என்று புலம்பியபடி எழுந்து யாரும் பார்த்திராத வண்ணம் பின் வாசலுக்கு வந்தவள் கதவை திறக்க..
அவள் திறந்த வேகத்தில் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தவன் கதவை சாற்றிவிட்டு தன் இரு கைகளிலும் ஏந்தியவன் அவள் இதழில் முத்தம் வைத்து “லவ் யூ செல்லம். என்னை ரொம்ப மிஸ் பண்ணுனியா?” என்று அவள் முகம் முழுதும் முத்தம் வைத்தான்.
இதை சற்றும் எதிர்பார்த்திராத ரம்யா அவன் முத்தத்தில் திக்குமுக்காடிப் போனவள் சுதாரித்துக் கொண்டு அவன் கையைப் பற்றி பின் வாசல் வழியே கதவை திறந்து கொண்டு வெளியே வந்தவள் அவர்கள் தோட்டத்துப் பக்கம் அவனை இழுத்துக்கொண்டு சென்றாள்.
