News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

தப்பு 31

by Sinamika Writes
1.3K views
A+A-
Reset

தப்பு 31

“என்ன டா வந்து பத்து நாள் பக்கம் ஆச்சு ரூமை விட்டு வெளியவே வர மாட்டேங்குற ..” என்று தன் சட்டையை மடித்துவிட்டுக் கொண்டே கேட்டான் யுகேன்.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

“என்ன ப்ரோ கேள்வி இது. இளஞ்சோடிகள் புதுசா வேற கல்யாணம் ஆகியிருக்கு . நீங்களும் கல்யாணம் செய்தவர் தானே.. உங்களுக்கு தெரியாதா?” என்று நெளிந்தான் யுவன்.

அவனை ஒரு பார்வை பார்த்தவன் “நான் கல்யாணம் முடிச்சு தான் என் பொண்டாட்டியை கர்ப்பமாக்கினேன். ஆனா நீ அப்படியா?” என்றான்.

“அது.. அது இள வயசு ப்ரோ.. ” என்று பதில் சொல்லத் தடுமாறினான் யுவன்.

அப்போது சோபாவில் அமர்ந்து இருந்த யுவன் அருகே வந்த யுகேன் “இள வயசு.. ” என்று நக்கலாகக் கேட்க..

“ஆமா ப்ரோ..  “என்றான் அவனை நிமிர்ந்து பார்த்து .

யுவன் சற்றும் எதிர்பார்க்காமல் அவன் கன்னத்தில் பளார் என்று அறைந்து இருந்தான் யுகேன்.

இதை சற்றும் எதிர்பார்த்திராத யுவன் கன்னத்தில் கையை வைத்தபடி அதிர்ந்து யுவனைப் பார்த்தவன் கோபமாக எழுந்து நின்றான்.

“என்ன கோபமா?” என்று நக்கலாக சிரித்த யுகேன் “அப்பாவைப் பழி வாங்க நீ  ஆரா வாழ்க்கையில விளையாடி அவளை கஷ்டப்படுத்துவ.. அப்பறோம் நீயே மனசு மாறி வந்து அவளை ஏத்துக்குவ.. நீ நினைச்சா சேர்த்துக்கவும், வேணாம்னா தூக்கிப் போடவும் அவ என்ன நீ யூஸ் பண்ணி போடுற பொருளா? அவ இந்த வீட்டோட செல்ல ராணி டா. அவ எனக்கு அத்தை பொண்ணா இருக்கலாம். ஆனா நான் அவளை என் தங்கச்சியா தான் பாக்குறேன் ” என்று யுவன் முகத்திற்கு நேராக சொன்ன யுவன்.

“இது தான் முதலும் , கடைசியா இருக்கனும். நீ அவளை அழவெச்சு , கஷ்டப்படுத்தினது. இனி ஏதாவது ஒரு விசயத்துல நீ அவளை காயப்படுத்துனேனு தெரிஞ்சுதுனு வை.. உன் கையைக் காலை முறிச்சு மூலையில போற்றுவேன். நியாபகத்துல வெச்சுக்கோ.. ” என்று ஒற்றை விரலை நீட்டி எச்சரித்தான் யுகேன்.

முதலில் யுகேன் தன்னை அடித்ததும் அதிர்ந்து கோபம்  வந்தது யுவனுக்கு, பின் அவன் பேசும்போது அதில் இருந்த நியாயத்தை புரிந்து கொண்டு அவன் கோபம் நியாயம் தான் என்று உணர்ந்தவன் “ஹும்.. ப்ரோ. ஆரா மேலே உனக்கு இவ்ளோ பாசம் இருக்கா! உன் பாசத்தைப் பார்க்குற அப்போ எனக்கு ஆச்சர்யமா இருக்கு ” என்றவன் யுவன் அருகே வந்து அவன் தோளில் கையைப் போட்டவன் “ஒரு வாட்டி நான் தப்புப் பண்ணிட்டேன் ப்ரோ திரும்ப அப்படி ஒரு காரியத்தை நான் என் ஆராவுக்கு நிச்சயமா செய்ய மாட்டேன் .நீ அதை நம்பலாம் ” என்றான்.

“அப்படியா? நம்பளாமா?” என்று சிரித்துக்கொண்டே அவன் தோளில் கையைப் போட்டான் யுகேன்.

“நம்பலாம்” என்று நெஞ்சில் கை வைத்து அவனுக்கு வாக்குக்கு கொடுத்தான் யுவன்,

“ஹாப்பி டா ” என்ற யுகேன் “உனக்கும் எனக்கும் இருந்த ஒரு டூ ஆர் த்ரீ இயர்ஸ் ஏஜ் டிஃபரென்ஸ் இருக்குமா?”என்று கேட்டான் யுகேன்.

“ம்ம்.. ஆமா” என்றான் யுவன்.

“இந்த ப்ரோ வர்ட் ரொம்ப தள்ளி இருக்க போல எனக்குத் தோணுது. என்னை பேர் சொல்லியே கூப்பிடு ” என்றான்.

“அது எப்படி ப்ரோ முடியும். நீங்க வேற வயசுல பெரியவர் நான் உங்க பேரை சொல்லிக் கூப்பிட்டு நீங்க என்னை அடிச்சுட்டீங்கன்னு வைங்க..  என்று கன்னத்தை தடவிக்கொண்டே கேட்டான்.

“டேய் ரொம்பப் பண்ணாத சரியா..” என்று  சிரித்தவன் “கால் மீ யுகேன்” என்றான்.

“ஓகே.. ஓகே.. யுகேன்” என்று அவனிடம் இருந்து பிரித்தவன் இரு கரங்களையும் நீட்டி யுகேனை தோளோடு அணைத்து தன் நட்பை வெளிப்படுத்தினான்.

“சரி நீ ஆராவை கூட்டிட்டு எங்கையும் வெளிய போயிட்டு வா . எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் கிளம்பறேன் ” என்று அவனை விட்டுப் பிரிந்து நின்றபடி கூறினான் யுகேன்.

“ஓகே யுகேன் , அநேகமா நீ பூவிழியை பார்க்கப் போறென்னு நினைக்கிறேன் சரியா என்னோட கெஸ்ஸிங்.. ” என்றான் யுவன்.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“ம்ம் ஆமா ” என்று சிரித்தவன் “என்னால அவளை பார்க்காம இருக்க முடியல.. என் அப்பாவோட பிளானை முறியடிக்கனும்னு அவளை வேற இடத்துல தங்க வெச்சேன். கல்யாணம் ஆன புதுசுல அவகிட்டே நான் முகம் காட்டி நல்ல முறையில் பேசினது இல்ல. ஒரு வீம்புக்காக தான் அவளோட சேர்ந்து வாழ ஆரம்பிச்சேன். ஆனா அவ என்னைக் கல்யாணம் செய்துக்கிட்டதுல இருந்து இப்போவரை என் மேல காட்டுற அன்பு கொஞ்சம் கூடக் குறையல. ” என்றவன் பெருமூச்சு ஒன்றை உதிர்த்தவன்.

“அவளை எந்தக் குறையுமில்லாம பாத்துக்கணும்னு நினைச்சேன். ஆனா எல்லாம் நம்ம அப்பாவால தான் கெட்டுப் போயிருச்சு. அவருக்கு ஏன் பூவிழி மேல இவ்ளோ கோபம், வன்மம்னு தெரியல.. அதுக்கான காரணம் தெரிஞ்சா தான் அதை சரி செய்ய என்னால முடியும். அதுக்கு அப்பறோம் தான் என்னால பூவிழியை இங்க கூட்டி வர முடியும். ” என்றான்.

யுகேன் சொன்னதை ஒரு நிமிடம் யோசித்தவன் “அந்தக் கவலையை நீ விடு. அதுக்கான காரணத்தை கூடிய சீக்கிரமே அவர் வாயலையே சொல்ல வெக்கிறேன். இல்ல அவரே உண்மைய சொல்றது போல நான் செய்றேன்” என்றான்.

அவனை ஆச்சர்யமாக பார்த்த யுகேன் “அப்படி மட்டும் நீ செய்துட்டா என்னோட நெக்ஸ்ட் ப்ராஜெக்ட் உன்னோட கம்பெனிக்கு கொடுக்கிறேன் “என்று டீல் பேசினான் யுகேன்.

“டீல் “என்றவன் “நான் அப்பாகிட்டே உண்மையை வாங்குறேன். நீ இப்போவே பூவிழியை இங்க அழைச்சிட்டு வந்திடு ” என்றான் யுவன் .

“ம்ஹும்.. அது இப்போதைக்கு முடியாது யுவன். அவளை இங்க அழைச்சிட்டு வந்தா மறுபடியும் அப்பா எதையாவது சொல்லி அவளை கஷ்டப்படுத்திட்டே இருப்பார். அவளை மறுபடியும் எனக்கு தெரியமா எங்கையும்  அனுப்பிவெச்சாலும் வெச்சிடுவார், இவளும் அவருக்கு பயந்து இதுக்கு முன்னாடி என்னை விட்டு போனது போல சொல்லமக் கொள்ளாம கிளம்பி போயிருவா. இந்த முறை அலெர்ட்டா இருந்தது போல எல்லா நேரமும் என்னால இருக்க முடியுமான்னு தெரியல , அவளை எந்த சூழ்நிலையிலும் நான் இழக்க விரும்பல டா..   “என்று பூவிழியின் மீது யுகேன் எவ்வளவு பாசம் வைத்திருந்தான் என்று அவன் சொன்ன வார்த்தையில் இருந்து புரிந்து கொண்டான் யுவன்,

“ஓகே அப்போ எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் நான் அப்பாகிட்டே இருந்து பூவிழியைப் பத்தி உண்மையை வாங்குறேன் “என்றான்.

“ம்ம்.. ” என்று தலையை ஆட்டிய யுகேன். யுவனுடன் தன் அறையில் இருந்து படிகளில் கீழ் இறங்கி வர..

ஹாலில் அமர்ந்து டிவியில் நியூஸ் பார்த்துக்கொண்டிருந்த ராஜேந்திரன் யுகேனும், யுவனும் சிரித்துப் பேசிக்கொண்டே கீழ் இறங்கி வருவதைப் பார்த்தவர் இருவரும் தன் ஜாடையை உரித்து வைத்து இருப்பதை பார்த்து உள்ளுக்குள் பெருமையாக இருந்தாலும். அதே அவருக்கு பிரச்னையாகக்கூடும் என்று நினைக்கையில் எரிச்சலும் அடைந்தார்.

அவரைப் போலவே அவர்கள் இருவரையும் பார்த்த பர்வதம்  “ஏங்க நம்ம யுகேனும், மாப்பிள்ளையையும் பார்க்க.. ஒரே மாதிரி இருக்காங்க இல்ல.. ” என்றார் .

பூஜை அறை முன்பு நின்று சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த கார்த்திகேயன் திரும்பி அவர்கள் இருவரையும் பார்த்திருந்தவர் அப்படியே தன் பார்வையை அவர் ராஜேந்திரன் மீது திருப்பி இருக்க.. அவரைப் பார்த்துவிட்டு இவர்கள் இருவரையும் பார்த்திருந்தவருக்கு ஏதோ புரிவது போல தோன்றியது.

அவர் முன் வந்து நின்ற யுவன் “மாமா என்ன அப்படிப் பார்த்துட்டு இருக்கீங்க எங்க ரெண்டு பேரையும் ” என்றான்.

“ஆஹ்! அது ஒண்ணுமில்ல மாப்பிள்ளை. சும்மா தான் நீங்க ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்து வந்ததை பார்த்த அப்போ உங்க ரெண்டு பேரோட ஜாடையும் ஒன்னு போல இருக்குனு உன் அத்தை சொன்னா அதை தான் நான் யோசிச்சிட்டு இருந்தேன் “என்றான்.

“நல்லா யோசிச்சு சொல்லுங்க.. எங்க ரெண்டு பேரையும் பார்த்தா அது மட்டும் தான் தோணுதா? நாங்க வேற யாரோட ஜாடையில் இருக்க போல உங்களுக்குத் தோணல? ” என்றவன் திரும்பி ராஜேந்திரனைப் பார்க்க..

அவன் பேச்சில் அதிர்ந்தவர் “இவன் ஒருத்தன் போதும் என் மானத்தை வாங்குறதக்கு.  ” என்று யுவனை முறைத்துவிட்டு எழுந்தவர் தன் அறைக்குள் சென்றுவிட. .

“யாரு ஜாடை மாப்பிள்ளை ” என்றார் பர்வதம் யுவன் சொன்னதின் அர்த்தம் புரியாமல்.

“அது ஒன்னுமில்ல அத்தை அவன் எதுவோ இப்படி தான் உளறிட்டு இருப்பான். நீங்க என்ன எப்பவும் இல்லாம சாயங்காலம் பூஜை செய்துட்டு இருக்கீங்க ” என்றான் யுகேன்.

“அதுவா யுகேன் , இன்னிக்கு தானே நாம பூவிழிக்கு வளைகாப்பு செய்றதா இருந்துச்சு . அவ இருந்திருந்தா இந்த நேரம் வளைகாப்பு எல்லாம் விமர்சையா கொண்டாடி இருக்கலாம். அது தான் முடியாம போயிருச்சே. அதான் அவ வளைக்கப்புக்கு வாங்கின வளையல் எல்லாத்தையும் வீட்ல வெச்சு பூஜை பண்ணி அதை பக்கத்துல இருக்க நம்ம மாரியம்மன் கோவில்ல கொண்டு போய் கொடுக்கலாம்னு இருக்கேன்.நாளைக்கு வெள்ளிக்கிழமை இல்ல நிரைய பெண்கள் கோவிலுக்கு வருவாங்க. அவங்களுக்கு கொடுத்தா நம்ம பூவிழிக்கு நல்லதுன்னு  தோணுச்சு ” என்றார்.

பூவிழியின் வளைகாப்பை பற்றி அவன் மறந்த விட்டிருந்தான். அவர் சொல்வதும் உண்மை தான் என்று நினைத்தவன் பூஜை அறையை எட்டிப் பார்த்தான். பெரிய தாம்பாளத் தட்டு முழுதும் கண்ணாடி வளையல்கள் அழகாக அடுக்கி வைக்கப் பட்டு இருந்தது. அது இல்லாமல் ஒரு பெட்டியில் பூவிழிக்காக வாங்கி வைத்திருந்த வெள்ளி , தங்க, வைர வளையல்களும் இருந்தது .

தன் சூவை கழட்டி வைத்தவன் பூஜை அறைக்குள் சென்று அந்த மூன்று வளையல்களையும் எடுத்துக்கொண்டவன் . அத்தை இது என்கிட்டையே இருக்கட்டும். நானே பூவிழியோட வளையலை பத்திரமா வெச்சுக்கிறேன்”என்றான்

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“சரி  ப்பா, அது மட்டும் அவளுக்கு வாங்கல ” என்றவர் ஒரு பெட்டியை எடுத்து அவனிடம் நீட்டி இத தான் அவ வளைக்கப்புக்கு போட்டு விடலாம்னு வாங்கினா ஆரா” என்று அதையும், யுகேன் கையில் வைத்திருந்த கண்ணாடி வளையல்களையும் ஒரு பையில் போட்டு அவனிடம் நீட்ட..

அதை வாங்கிக்கொண்டு கிளம்பியவன் ” அத்தை நான் வரதுக்கு ரெண்டு நாள் ஆகும் . ஒரு பிசினெஸ் விஷயமா வெளியூர் போறேன். அதுவும் அவசரம்னா கால் பண்ணுங்க ” என்றான்.

“சரிப்பா நல்லபடியா போயிட்டு வா ” என்றவர் “நீ பிசினெஸ் பாக்க தானே போறேன்னு சொன்ன கண்ணு அப்பறோம் எதுக்கு இந்த வளையலை எடுத்துட்டு போற.. என்கிட்டே கொடு நான் வெச்சிருக்கேன். நீ ஊர்ல இருந்து வந்ததும் வாங்கி வெச்சுக்க.. ” என்று அவன் கையில் இருந்த வளையல் பையை வாங்கிக்க கொள்ள.

பூவிழியை பார்க்க கிளம்பி இருந்த யுகேந்திரன் அந்த வளையல்களை அவளுக்கு போட்டு அழகு பார்க்கலாம் என்று நினைத்து தான் அதை வருடம் இருந்து வாங்கி இருந்தான் . ஆனால் அதை அவரே திரும்ப வாங்கிக்கொள்ள.. எப்படி அதை திரும்ப கேட்பது என்று தெரியாமல் தவித்தான் யுகேன்.

“அம்மா உனக்கு கொஞ்சமும் அறிவே இல்ல , யுகேன் மாமா பூவிழியோட நியாபகமா அந்த வளையலை தன் கூட எடுத்துட்டு போகணும்னு நினைச்சு தான் உங்ககிட்ட அதை வாங்கிருக்கார். நீங்க அதை வெச்சு என்ன பண்ணப் போறீங்க ” என்று அங்கு வந்த ஆரா அவர் கையில் இருந்த பையை வாங்கி யுகேனிடம் கொடுத்தவள் “மாமா நீங்க உங்க பிசினஸை நல்ல படியா முடிச்சிட்டு வாங்க. ” என்றாள்.

தன் நிலையை புரிந்து கொண்டு ஆரா நடந்து கொண்டதை நினைத்து பெருமிதம் கொண்ட யுகேன் அவள் தலையை மென்மையாக வருடிக்கொடுத்தவன் ” சரி டா நான் கிளம்புறேன் ” என்று அங்கிருந்து பூவிழியைக் காணும் ஆவலில் கிளம்பி இருந்தான்.

“அத்தை நாங்களும் வெளிய போட்டு வரோம் “என்றான் யுவன் .

“எங்க மாப்பிளை “என்றார் பர்வதம்.

“சும்மா தான் ஏதாவது மூவி போலாம்னு அத்தை ” என்றான்.

“சரிங்க மாப்பிள்ளை, பாத்து கூட்டிட்டு போயிட்டு வாங்க. இவளுக்கு 3 மாசம் தான் முடிஞ்சிருக்கு . இன்னும் ஜாக்கிரதையா தான் இருக்கணும் ” என்றார்.

“சரிங்க அத்தை ” என்றவன் ஆராவுடம் கிளம்பி இருந்தான்.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.