மூர்க்கன் 46
கயலுடன் ஹாலுக்கு வந்து நின்ற ரம்யா தர்மசங்கடத்தோடு நின்றிருந்தாள். யாரையும் தலை நிமிர்த்திப் பார்க்கவே இல்லை.
“என்ன பொண்ணுக்கு வாய் மட்டும் தான் கொஞ்சம் ஜாஸ்த்தி போல.. மத்த படி ரொம்ப அடக்கமான புள்ளையா தான் இருக்கு “என்று மீனாட்சி அவளை கிண்டல் செய்ய..
“அட என்ன அக்கா நீங்க, பொண்ணு அந்த வாய் பேசுச்சு இல்ல.. அத வேற நாம எல்லாரும் கேட்டிருப்போம்னு வெட்கப்ட்டுட்டு தலையை குனிஞ்சு நிக்குது ” என்று மீனாட்சியின் தங்கை கோமளவல்லி அவருக்கு சளைக்காமல் கிண்டல் செய்தார்.
“ஹையோ! போச்சு இப்படியா என் மானம் போகணும் ” என்று மனதிற்குள் தன்னை நினைத்தே நொந்தது கொண்டாள்.
“என்ன இப்படி சொல்லிட்டீங்க. எங்க ரம்யா அதுக்கெல்லாம் வெட்கப்பட மாட்டா.. மாப்பிள்ளையை பார்க்க வெட்கப்ட்டுட்டு தான் தலையை குனிஞ்சு நிக்குறா.. ” என்று கயல் அவர்களோடு சேர்ந்து கொள்ள..
அவளை ஓரக்கண்ணால் பார்த்த ரம்யா “நீ உள்ள வாடி உனக்கு இருக்கு.. ” என்று அவளை திட்டினாள்.
“ப்ச்.. அஹ் போடி.. ” என்று அவள் நக்கல் செய்ய..
“வெட்கப்ட்டது போதும் ம்மா.. கொஞ்சம் தலையை நிமிர்த்தி உன் முகத்தை எங்க எல்லாருக்கும் காட்டுறது. அந்த வாய் பேசின புள்ள முகம் எப்படி இருக்குனு முழுசா நாங்க பாக்க வேணாமா?” என்றார் மீனாட்சி சிரித்துக்கொண்டே.
“நாம பாக்குறது இருக்கட்டும் பெரிம்மா.. அண்ணா முதல்ல பாக்கட்டும் அவர் அண்ணி வந்ததுல இருந்து வேற எங்கையும் பார்க்காம அவங்களை மட்டும் பார்த்துட்டு இருக்கார் ” என்று கோமளவல்லியின் மகன் செழியன் சொன்னான்.
“டேய் சும்மா இருக்க மாட்ட.. ” என்று அவனை ருத்ரசேனா அடக்க..
“அவனை ஏன் டா திட்டுற… இவ்ளோ நேரம் என்கூட பேசிட்டு இருந்த.. எங்க பொண்ணு வந்ததும் உன் கவனம் மொத்தமும் அங்க இல்ல இருக்கு. ” என்று ருத்ரனின் அருகே அமர்ந்து இருந்த ராவண் தன் பங்குக்கு காலை வாரினான்.
“அட போதும் உங்க கிண்டல் பேச்சு எல்லா, ரம்யா எல்லாரையும் பார்த்து வணக்கம் சொல்லும்மா” என்றார் வேதவள்ளி.
அவளும் அனைவர் கிண்டலையும் கேட்டு ஒரு மாதிரியாகிவிட.. அதை சமாளித்தபடி தலையை மெல்ல நிமிர்த்தி அனைவரையும் பார்த்தவள் கைகளைக் குவித்து வணக்கம் சொன்னாள்.
அவள் பார்வை அங்கிருந்த ஒவ்வொருவரின் மீதும் படிந்தது , அனைவரையும் பார்த்தவளுக்கு ருத்ரன் எங்கே அமர்ந்து இருக்கிறான் என்று தெரியவில்லை. நீண்ட நேரம் தலையை நிமிர்த்தி அனைவரையும் பார்க்க முடியாதலால் ஒருவித ஏமாற்றத்தோடு தலையை கவிழ்க்கப் போனாள்.
அவள் பார்வை தன் மீது விழாதா என்று ருத்ரனும் எதிர்பாத்திருக்க.. அவள் தலை குனியப் போனதைக் கண்டு அவனுக்கும் ஏமாற்றம் தான்.
“அண்ணி! எங்க அண்ணா இங்க இருக்கார். அவரைப் பார்க்காம தலையை குனிஞ்சா என்ன அர்த்தம் “என்றான்.
சட்டென தலையை நிமிர்த்தி குரல் வந்த திசையில் திரும்பிய ரம்யா செழியனைப் பார்த்தாள்.
“என் அண்ணா இங்க இருக்கார்” என்று தன் அருகே இருந்த ருத்ரசேனாவைக் கை காட்டினான் செழியன்.
அவனிடம் இருந்து தன் பார்வையை ருத்ரன் பக்கம் மெல்லத் திருப்ப..
இருவரின் பார்வையும் மோதிக்கொண்டது. அந்த ஒரு நொடி இருவர் இதயத்திலும் ஒரு பூகம்பமே உருவானது. ரம்யாவிற்கு இதயத்துடிப்பு அவள் காதுகளை அடைத்து இருக்க.. ருத்ரனுக்கோ அவள் விழிகளில் இருந்த அழுத்தமும், தன்னைப் பார்க்கும் பொது இருந்த உணர்வுகளாலும் அவன் மனதில் அந்த நொடிப்பொழுதில் ஆயிரம் எண்ணங்கள் சென்சார் இல்லாமல் ஓடத் துவங்கியது.
அதை மனதிற்குள்ளேயே தலையில் தட்டி மட்டுப்பட வைத்தவன் அவளைப் பார்த்து மெல்லியதாக புன்னகைத்தான்.
ரம்யாவும் அவன் விழிகளிலும், தோற்றத்திலும் பார்த்த கணத்தில் தன்னைத் தொலைத்தவள் அவன் புன்னகைக்கையில் சுருங்கிய கண்களை ரசித்தபடி மெலிதாக இதழ் வளைத்தாள்.
“சரி நாங்க இவ்ளோ காலைல கிளம்பி வந்தது ஒரு வகையில் நல்லதா போயிருச்சு… பொண்ணையும் பார்த்துட்டோமே அதை சொல்ல வந்தேன் ” என்றார் கோமளவள்ளி.
“அதனால என்னங்க , எங்ககிட்ட நீங்க இவ்ளோ சீக்கிரம் வருவீங்கன்னு சொல்லிருந்தா நாங்களும் நேரமே சமைச்சு எல்லா ஏற்பாடும் செய்து வெச்சிருப்போம் ” என்றார் கனகா.
“அது ஏன் கேக்குறீங்க. எங்க ருத்ரன் தான் கோடைக்கானல்ல இருந்து கீழ இறங்கி வர நேரம் ஆகும், அப்பறோம் பொண்ணு ஊருக்கு போக ரொம்ப லேட் ஆகிறும்னு வெரசா வண்டி ஓட்டிட்டு வந்தான். அவன் அவ்ளோ வெரசா வந்த அப்போவே யோசிச்சிருக்கணும் பொண்ணை பார்க்கத்தான் இந்த அவசரம்னு.. ” என்று அவர் கலாய்க்க.
“சித்தி .. ” என்று பல்லைக் கடித்து சிரித்தான் ருத்ரன்.
“ஆமா இங்க வாரத்துக்கு முன்ன உங்க பொண்ணு அந்தா வாய்பேசுச்சு.. இப்போ எதுவும் பேச மாட்டாளா? என்ன? எங்க புள்ளையை வந்து பெட்ஷீட் எல்லாம் மடிச்சு வெக்க சொன்னியேம்மா. . சொன்னது போல என் அக்கா மகனை வேலை வாங்கிருவியா நீ.. ” என்றார் கோமளம்.
அவரை நிமிர்ந்து பார்த்தவர் “ஏன் உங்க அக்கா மகனுக்கு வேணுங்குறதை நா செய்ற அப்போ அவர் இது கூட செய்ய மாட்டாரா என்ன?” என்றாள் ரம்யா.
“அடியாத்தி.. செய்யலாம் டி ஆத்தா தாராளமா செய்யலாம்” என்ற கோமளம். “அக்கா , பாத்தியா உன் மருமகளை எப்படி வாய் பேசுறான்னு” என்றவர் “பார்த்து ஜாக்கிரதையா இருந்துக்க இல்லேனா உனக்கும் வந்து வேலை சொல்லப்போறா ” என்றார்.
“ஐயோ! சின்னத்தை அப்படி எல்லாம் பேசாதீங்க. நான் என் அத்தையை எதுக்கு வேலை வாங்க போறேன். நான் கல்யாணம் பண்ணிட்டு உங்க வீட்டுக்கு மருமகளா வந்த அப்பறோம் மொத்த பொறுப்பையும் நானே எடுத்துப் பார்த்துகிறேன். என் அத்தை ஜாலியா டிவி சீரியல் பாக்கட்டுமே.” என்றாள் ரம்யா.
“ஏய் ரம்யா கொஞ்சம் பேசாம இரு டி.. “என்று அவளை அதட்ட.
“விடுங்க சம்மந்தி.. எப்படியும் என் மருமக என் வீட்டுக்கு வந்ததும் அவ பேசுறதை நாங்க கேட்டு தானே ஆகணும். அதை இப்போவே கேட்டுகிறோம் ” என்று எழுந்து அவளிடம் சென்ற மீனாட்சி அவளுக்காக வாங்கி வந்த மல்லிகைப்பூ சரத்தை எடுத்து அவள் தலையில் சூடினார்.
“சார் பொண்ணு பார்க்கும் வைபவம் முடிஞ்சிருச்சு , எல்லாரும் கொஞ்ச நேரம் பேசிட்டு இருங்க. நாங்க கொஞ்ச நேரத்துல டிபன் ரெடி பண்ணிர்றோம் ” என்று எழுந்தார் கமலா.
“நாங்களும் கூட வந்து ஏதாவது வேலை செய்ரோம் , சும்மாவே எவ்ளோ நேரம் உக்கார்ந்து இருக்குறது” என்று அவர்களோடு சேர்ந்து மீனாட்சியும் செல்ல.. அவரோடு கோமளமும் எழுந்து சென்றார்.
அவ்ர்கள் சென்றதும் ரம்யாவும் கயலுடன் அறைக்குள் சென்றுவிட்டாள்.
மித்ரா நேராக ருத்ரனிடம் வந்தவள் “ரம்யா கூட பேசணும் போல இருக்கும் போல உங்களுக்கு ” என்றாள்.
“உங்களுக்குப் புரியுது.. ” என்று ராவணை பார்த்தான்.
“டேய் நீ என்கிட்டே முதல்லயே சொல்லிருக்கணும். என்னவோ நான் வேணாம்னு சொன்னது போல என்னை பாக்குற.. ” என்றான் ராவண் .
“அதான் இப்போ புரிஞ்சிருச்சு இல்ல.. மீட் பண்ண ஏற்பாடு பண்ணு ” என்றான் ருத்ரன்.
“அண்ணா நான் வேணா அம்மாகிட்டே போய் கேட்டுட்டு வரட்டுமா?” என்று எழுந்தான் செழியன்.
“எதுவும் கேட்க வேணாம். அவங்ககிட்டே போய் சொன்னா கல்யாணத்துக்கு முன்ன என்ன அவசரம்னு சொல்லி தடுத்துருவாங்க ” என்றவன் திரும்பி ராவணைப் பார்க்க..
“ஏண்டா ரம்யாவைப் பார்க்காமலே கல்யாணம் பண்ணிக்கபோறேன்னு சொன்ன.. இப்போ என்ன டா பண்ணிட்டு இருக்க ” என்றான் ராவண்.
“அது பாக்குறதுக்கு முன்ன. இப்போதான் அவளை பார்த்துட்டேன் இல்ல. எனக்கு அவகிட்டே பேசணும் , ஏற்பாடு பண்ணு ” என்றான் ருத்ரன்.
“ம்ம்.. ரொம்ப பாஸ்ட் தான் நீங்க. சீக்கிரம் கல்யாணம் வெச்சுக்கலாம்னு சொல்லும்போதே யோசிச்சிருக்கணும்” என்றான் ராஜ்,
“ஏன் டா உனக்கு என்னை விட ஆறேழு வயசு வித்யாசம் இருக்கும். நீயே கல்யாணம் பண்ணி புள்ளை பெத்துட்ட.. நான் இன்னும் அப்படியே தா இருக்கேன். ஸ்லொவ்வா எல்லாம் ஸ்டார்ட் பண்ணி எப்போ நான் கல்யாணம் பண்ணி, எப்போ குடும்பஸ்தன் ஆகுறது ” என்றான் ருத்ரன் அவனிடம்
“ருத்ரன் உங்களுக்கு இவ்ளோ பேச வருமா?” என்று ஈஸ்வர் ஆச்சர்யமாகக் கேட்க..
“எங்க அண்ணா இப்போதான் அமைதியாகிட்டாரு. காலேஜ் டேஸ்ல எல்லாம் எவ்ளோ ஜாலியா இருப்பர் தெரியுமா?” என்றான் செழியன்.
அவன் பேசுவதை கேட்டுக்கொண்டிருக்க..
அப்போது இளங்கிளி அங்கே வந்தாள். இடுப்பில் ஆதி அமர்ந்து இருக்க அவன் ருத்ரனைப் பார்த்ததும் “உத்ரா!.. ” என்று தாவி அவனிடம் ஒட்டிக்கொள்ள…
“உன்னையும், அல்லியையும் நான் ரொம்ப மிஸ் பண்றேன் டா.. . “என்று அவனை கட்டி கன்னத்தில் முத்தம் வைத்தான்.
தன் மனதில் இருந்து சுத்தமாக இளங்கிளியின் மீது தான் வைத்து இருந்த ஒரு தலைக் காதலை ராவணின் மனைவி தான் அவள் என்று தெரிந்ததுமே முற்றிலும் அதை குழி தோண்டி புதைத்து விட்டான். அதனால் அவனால் இளங்கிளியை எந்த ஒரூ குற்ற உணர்வும் இல்லாமல் பார்க்க முடிந்தது,
“உங்ககிட்டே ரம்யா பேசணும்னு சொன்னா.. ” என்றாள் இளங்கிளி.
“பாருங்க உங்களை விட அண்ணி ரொம்ப பாஸ்ட்டா இருக்காங்க ” என்று கிண்டலடித்தான் செழியன்.
ருத்ரன் சிரித்தபடி எழ..
“அவ்ளோ அவசரம் உனக்கு ” என்று அவன் ஆர்வத்தைக் கண்டு ஈஸ்வர் கிண்டல் செய்ய..
அவன் கையில் ஆதியைக் கொடுத்துவிட்டு “வந்து வெச்சுக்கிறேன் உன்னை ” என்று இளங்கிளி காட்டிய வழியில் ரம்யாவின் அறைக்கு அவளைக் காண சென்றாள்.
ரம்யாவின் அறை முன்பு வரை வேகமாக வந்தவனுக்கு அவளைக் காண உள்ளே செல்ல தயக்கம் தொற்றிக்கொண்டது.
அப்போது அவள் அறைக்குள் இருந்து வெளியே வந்த கயல் “இவ்ளோ தூரம் வந்துட்டு இப்படி யோசிச்சா என்ன அர்த்தம் , அவ ஒன்னும் உங்களை கடிச்சு விழுங்கிட மாட்டா போங்க உள்ள.. ” என்று ருத்ரனின் கையைப் பற்றி அறைக்குள் தள்ளினாள் கயல். அவனிடம் ஒரு சகோதரன் என்ற உரிமையில் அவள் நடந்து கொள்ள..
அவனோ சிரித்துக்கொண்டே அறைக்குள் வந்தவன் திரும்பி பார்த்தான்.
அங்கே கைகளைப் பிசைந்தபடி நின்று இருந்தாள் ரம்யா,
வெளியே அனைவரும் இருந்ததால் அவளை அவனால் சரியாகப் பார்க்க முடியவில்லை . இப்பொது தான் அவளை நிதானமாகப் பார்க்கிறான்.
