மூர்க்கன் 47
வயலட் நிற ஸ்பெஸ் சில்க் சேலை அணிந்து அதற்கு ஊதா நிறத்தில் ப்ளௌஸ் அணிந்து இருந்தாள். கை இரண்டிலும் சேலைக்கு மேட்சாக வளையல் அணிந்து இருந்தாள்.
முகம் சற்று பதற்றத்தோடு இருக்க.. அவன் அம்மா வைத்துவிட்ட மல்லிகையின் மனம் அந்த அறை முழுதும் நிறைந்திருந்தது. அது வேறு அவன் நாசியை நிறைத்து அவன் உணர்வுகளுக்கு அழைப்பு விடுதிருக்க..
ஏற்கனவே தறி கேட்டு ஓடும் தன் மனதிற்கு கடிவாளம் போட முடியாமல் தடுமாறியவனை இந்த மல்லிகையும், அதன் மனமும் வேறு சோதித்துக் கொண்டிருந்தது.
உள்ளே வந்தவரிடம் என்ன பேசுவது என்று தடுமாறியவள் “உக்காருங்க.. “என்று கட்டிலைக் காட்டினாள்.
அவனும் சரி என்று சம்மதமாக வந்து கட்டிலில் அமர..
அவளும் வந்து அவனை விட்டு சற்று தள்ளி அமர்ந்தாள்.
“இன்னும் நாலு நாளைக்கு இப்படி தள்ளி உக்கார்ந்துக்க.. அதுக்கு அப்பறோம் நமக்குள்ள இவ்ளோ கேப் இருக்கக் கூடாது ” என்று எடுத்த எடுப்பிலேயே அவளிடம் அதிரடியாக சொன்னான்.
ருத்ரன் பேசியதில் அதிர்ந்து அவனை பார்த்தவள் முகமெல்லாம் வியர்த்து இருந்தது. அதை துடைத்தபடி “என்ன இப்படிப் பேசுறீங்க. இப்போதான் பார்த்திருக்கோம் அதுக்குள்ளையேவா ” என்றாள் அதிர்ச்சி மாறாமல்.
“எப்படியும் இப்படி எல்லாம் பேச தானே போறோம். ரெண்டு நாள்ல கல்யாணம் ஆகப்போகுது அப்பறோம் என்ன நமக்குள்ள பார்மாலிட்டி பேச்சு எல்லாம் . உரிமையவே பேசலாமே.. ” என்றான்.
அவன் பேச்சில் கொஞ்சம் பதற்றம் குறைந்தவளாக மெல்ல சிரித்தவள் “அப்போ நான் என் அம்மாகிட்ட பேசினது எல்லாம் கேட்டிருப்பிங்க.. அது நான் வேணும்னு பேசல.. சும்மா அவங்களை வெறுப்பேத்த தான் அப்படிப் பேசினேன். நீங்க என்னை தப்பா எதுவும் நினைக்கலையே.. ” என்றாள்.
“நிஜமா இல்ல.. பெட் சீட் என்ன உன்னோட இன்னேர்சை மடிச்சு வெக்க கூட நான் ரெடியா தான் இருக்கேன் ” என்றான் மீண்டும் அதிரடியாக.
“ஹையோ! என்ன பேச்சு இது.. “என்று அவள் வெட்கித்துப் போக.
இதற்கு மேலும் அதிரடியாக பேசி அவளை சங்கடப் படுத்த விரும்பாதவன் “சரி பேசல.. இப்போ கல்யாணத்துக்கு பிறகு இதெல்லாம் பார்த்துக்கலாம் ” என்றவன் ” நீ பேசினதுல எந்த தப்பும் இல்ல. நான் மட்டும் இல்ல என் வீட்டுலையும் உன்னை யாரும் தப்பா நினைக்க மாட்டாங்க ” என்றான்.
“ம்ம்.. ” என்று தலையை ஆட்டினாள்.
இன்னமும் அவள் பதட்டம் குறையாமல் கைகளை பிசைந்து கொண்டு அமர்ந்து இருப்பதை பார்த்தவன் அவளை இலகுவாக்க நினைத்து சாதாரணமாக பேச்சை ஆரம்பித்தான்.
“நீ என்ன படிச்சிருக்க? உனக்கு ஒர்க் பண்ண ரொம்ப பிடிக்கும்னு உன் அப்பா சொன்னார். கல்யாணத்துக்கு அப்புறமும் வேலைக்குப் போகணும்னு நீ ஆசைப்பட்டேனும் சொன்னார் ” என்றான்.
“நான் எம். பார்ம் படிச்சிருக்கேன். மெடிசின்ஸ் புதுசா ரிசர்ச் பண்ணி, அதை டெவெலப் பண்ற டிபார்ட்மெண்டில் வேளையில் இருக்கேன் ” என்றாள்.
உண்மையிலேயே ரம்யா அதற்கு தான் படித்து இருந்தாள். ஆனால் ராவண் தான் ரக்ஷ்ணாவுடம் அவளை சேர்த்து விட்டிருந்தான். அதை நேரடியாக சொல்லாமல் தன் உண்மையான பாடிப்பாடி மட்டும் சொன்னாள் ரம்யா.
“ரொம்ப படிப்பாளியோ.. அப்போ உனக்கு இந்த படம் பார்க்குறது. .பாட்டு கேக்குறது இதுல எல்லாம் இண்டெர்ஸ்ட் இருக்காதுன்னு நினைக்குறேன் ” என்றான்.
“ஐயோ அப்டி எல்லாம் இல்ல. நான் நிறைய படம் பார்ப்பேன். இப்போ கூட நேத்து நைட் OTT யில் மொத ராத்திரி படம் கூடப் பார்த்தேனே… “என்றாள் அவசரமாக.
அதை கேட்டு ருத்ரன் ஆர்வமாக அவளை ஏறிட..
அப்போது தான் அவள் சொன்ன படப்பேரை உணர்ந்தவள் “ஆகான் .. நீங்க நினைக்குறது போல படம் இல்ல அது. ” என்று அவசரமாக அவள் மறுக்க..
“ஹேய்! வெய்ட் நான் எதுவுமே சொல்லலையே ” என்றவன் ” நீ பார்த்த அதே OTT யில் நானும் அந்த படத்தைப் பார்த்தேன் ” என்றான்.
அதைக் கேட்டதும் அப்பாடா என்று இருந்தது அவளுக்கு,
“சரி நான் ஒன்னு கேட்கட்டுமா? என்னை தப்பா எடுத்துக்க மாட்டியே “என்றான் ருத்ரசேனா.
“முதல்ல என்னனு சொல்லுங்க.. அப்பறோம் அது தப்ப இல்லையான்னு நான் முடிவு பண்ணிக்குறேன் ” என்று அழுத்தமாக அவனைப் பார்த்தவள் இப்போது கொஞ்சம் இயல்பு நிலைக்கு பேச ஆரம்பித்து இருந்தாள்.
அவளின் இந்த பேச்சு அவனை ரசிக்க வைத்தது.
“கோபம் வரும் போல.. ” என்றவன் “அந்த படத்துல வரது போல நம்ம மொத ராத்திரி அன்னிக்கு எதுவும் நீ ஓடிற மாட்டியே.. ” என்றான்.
அவனை முறைத்த ரம்யா “எனக்கு எந்த நித்திசையும் தெரியாது ” என்றாள்.
அதைக் கேட்டு ருத்ரன் சிரிக்க..
அவளும் சிரித்துக்கொண்டாள் அவனோடு சேர்ந்து.
“சரி நான் கேக்குறேன் நீங்க சொல்லுங்க.. ” என்றாள்.
“ம்ம்ம் கேளு. .உன்னை மாதிரி நான் முறைக்க மாட்டேன் ” என்றான்.
“நான் யாரையும் லவ் பண்ணி, அவன் கூட அந்த படத்துல வர ஹீரோயின் போல நான் ஓடிட்டா.. நீங்க என்ன பண்ணுவீங்க . அந்த மருது போல என்னை கொண்டு போய் விட என்கூட வருவீங்களா? இல்ல என்னவோ ஆகட்டும்னு அப்படியே விட்டுருவீங்கலா?” என்றாள் .
அவளை ஆழமாகப் பார்த்தவன் ” நீ லவ் பண்ணினவன் அந்த நித்திஷ் மாதிரி இருந்தா அவன் கூட போக விட்டிருக்க மாட்டேன். ஏன்னா நான் கட்டின தாலி உன் கழுத்துல இருக்கும்போது நீ எனக்கு மட்டும் தான் சொந்தம் ” என்றான் அழுத்தமாக.
அவன் வார்த்தையில் இருந்த தீவிரத்தை ரசித்தவள் “அதையும் மீறி ஒருவேளை நான் நம்ம மொத ராத்திரி அன்னிக்கு ஓடிட்டா என்ன செய்விங்க.. ” என்றாள்.
“உன்னை தூக்கிட்டு வந்து உன்கூட முதல் வேலையா மொத ராத்திரியை முடிச்சிருவேன் ” என்றவன் வார்த்தையில் இருந்து தீவிரத்தை உணர்த்த ரம்யா எச்சில் விழுங்கினாள்.
“ஹையோ!” என்று பொய்யாக பயந்தவள் போல அவள் நடிக்க..
“ஓடிப்போனதுல எனக்கு டையர்டா இருக்குமே.. அப்பவும் மொத ராத்திரி நடத்திருவிங்களா? என்ன?” என்று கன்னத்தில் கை வைத்து அவனிடம் வார்த்தைகளால் சீண்டினாள்.
அவள் குறும்புப் பேச்சில் தன்னைத் தொலைத்தவன் அவளைப் போலவே கண்ணத்தில் கை வைத்து குனிந்து அவளைப் பார்த்தவன் “அந்த கவலையே வேணாம் டி செல்லம். நீ டையர்டே ஆனாலும் உனக்கு எலெக்ட்ரோலைட் குடிக்க வெச்சு உன்னைப் பண்ண வெப்பேன் ” என்றான்.
முதலில் யோசித்தவள் பின் அர்த்தம் புரிந்து போக.. அவள் முகம் முழுதும் சிவந்து போனது. அவனையே பார்த்திருந்தவள் தன் வெட்கத்தை மறைக்க எழுந்து அமர..
அவள் கையைப் பற்றி தன் பக்கம் இழுத்தவன் ” இனி நீ என்னோட ப்ரொபேர்ட்டி செல்லம். யாருக்கும், எதுக்காகவும் நான் உன்னை விட்டுக் கொடுக்க மாட்டேன். நம்மக்கு மொத ராத்திரி நம்ம கல்யாணத்து அன்னிக்கு நடந்தே தீரும். ஏற்கனவே நான் ரொம்ப நாளை வேஸ்ட் பண்ணிட்டேன். இனி அப்படி இருக்காது. நம்ம மொத ராத்திரிக்கு இப்போ இருந்தே நீ தயாரா இருந்துக்க… சரியா? ” என்றான்.
அவன் இழுத்த வேகத்தில் அவன் மடியில் போய் விழுந்தவள் சுதாரித்து எழுந்திருக்க.. அதற்குள் அவளிடம் இப்படி சொல்லி மேலும் அவளை வெட்கப்பட வைத்தான் ருத்ரசேனன்.
அவன் மடியில் படுத்திருந்தவள் அப்படியே தன் இரு கைகளாலும் வெட்கத்தில் முகத்தை மூடிக்கொண்டு அவனை விட்டு எழுந்தவள் கட்டிலில் முகம் புதைத்துக் கொண்டாள் அவனை பார்க்க முடியாமல்.
அவள் வெட்கம், கூச்சம், அவளுள் எழும் உணர்வுகளை புரிந்து கொண்ட ருத்ரன் கட்டிலை விட்டு எழுந்து அவள் அருகே சென்று அவளைப் போலவே உரசிக்கொண்டு அருகே குனிந்து இரு கைகளையும் கன்னத்தில் முட்டுக்கொடுத்து படுத்தவன் “இன்னிக்கு இது போதும்னு நினைக்குறேன். மத்ததை நம்ம கல்யாணத்துக்கு பிறகு பார்த்துக்கலாம் ” என்று அவள் காதருகே தன் மூச்சுக் காற்று உரச சொன்னான்.
முகத்தை மூடி இருந்தவள் “நீங்க இப்படி எல்லாம் பேசுவீங்ன்னு தெரிஞ்சிருஞ்சா உங்ககிட்டே தனியா பேசணும்னு நான் கூப்ட்டிருக்கவே மாட்டேன் ” என்று படுத்திருந்த நிலையிலேயே அவனை திரும்பிப் பார்த்தாள்.
“நீ இப்படி எல்லாம் அழகா வெட்கப்படுவேன்னு தெரிஞ்சிருந்தா நான் சீக்கிரமே நம்ம கல்யாணத்தை இன்னும் பக்கத்துல வெச்சிருக்க சொல்லிருப்பேன். ” என்றான்.
அவன் சொன்னது கேட்டு கண்கள் சுருக்கி அவள் சிரிக்க..
கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு அவள் அருகே படுத்திருந்தவன் அவள் விழிகளை ரசித்துவிட்டு கீழ் இறங்கி அவள் இதழை மோகம் கொள்ளப் பார்த்தான்.
அவன் பார்வையில் இருந்த வித்தியாசத்தை உணர்ந்த ரம்யா சட்டென கட்டிலில் எழுந்து அமர..
அவள் கை பிடித்து இழுத்து கட்டிலில் படுக்க வைத்தவன் அவளுக்கு இரு பக்கமும் கையைப் போட்டு அவளை நகர விடாமல் பிடித்துக்கொண்டவன் “எலெக்ட்ரோலைட் வாங்கி வெச்சுருட்டுமா?” என்றான்.
அவளோ அவன் குறும்புப் பேச்சை தாங்க முடியாமல் மூடிக்கொண்டாள்.
“இப்பவே இப்படி வெட்கப்படுற.. கல்யாணத்துக்கு அப்பறோம் வெட்கப்பட நிரைய விஷயம் இருக்கு. அதுக்கு கொஞ்சம் மிச்சம் வெச்சுக்கோ.. ” என்றான்.
“ஹையோ! நீங்க முதல்ல கிளம்புங்க.. உங்களை கூப்பிட்டது தப்பாகிருச்சு ” என்று சிணுங்கினாள் ரம்யா.
“இப்படி சொன்னா நான் போக மாட்டேன். உன் முகத்தை காட்டு பார்த்துட்டு நான் கிளம்புறேன் ” என்றான் அவனும் பிடிவாதமாக.
“இவ்ளோ நேரம் அதை தானே பண்ணிட்டு இருந்திங்க. ” என்றாள் கைகளை விலக்காமல்.
“நான் வெளிய போகனும்னா நீ கையை எடு. உன்னோட சிவந்த வெட்கப்படுற முகத்தை நான் பார்க்கணும் ” என்றான்.
ருத்ரான் தன் முகத்தைப் பார்க்காமல் போக மாட்டான் என்று புரிந்து கொண்ட ரம்யா. மெல்ல தன் கைகளை முகத்தில் இருந்து விளக்கி அவனைப் பார்க்க..
அவள் கையை விளக்கிய அடுத்த நொடி ருத்ரன் அவள் இதழில் தன் இதழைப் பொருத்தி முத்தமிட்டு இருந்தான்.
அதில் அதிர்ந்த ரம்யாவின் விழிகள் அதிர்ந்து விழிக்க..
அவள் விழிகளைப் பார்த்துக்கொண்டே அவளுக்கு முத்தமிட்டு விளங்கியவன் “மிச்சத்தை அடுத்த மீட்டிங்ல பார்த்துக்கலாம் ” என்று எழுந்து அவளை இழுத்து அமர வைத்தவன் “ரொம்ப அழகா இருக்க டி.. நீ. ‘ என்று சொல்லிவிட்டு தன் உடையை சரி செய்தபடி அந்த அறையை விட்டு வெளியேறி இருந்தான்.
