News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

தப்பு 34, part-1

by Sinamika Writes
1.1K views
A+A-
Reset

தப்பு 34

“மச்சான் இந்த நேரத்துல இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க? தூங்கலையா நீங்க?” என்றபடி தோட்டத்திடல் தனிமையில் அமர்ந்து இருந்த ராஜேந்திரனிடம் வந்தார் கார்த்திகேயன்.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

அவர் குரல் கேட்டு இருந்த இடத்தில இருந்துதிரும்பிப் பார்த்த ராஜேந்திரன். “என்னைக் கேட்டுட்டு நீ என்ன பண்ணிட்டு இருக்க இங்க? தூங்கலையா?” என்றார் கார்த்திகேயன்.

“இல்ல மச்சான் தூக்கம் வரல.. மனசுக்கு ஒரு மாதிரி இருந்துச்சு. அதான் அப்படியே காத்தாட கொஞ்ச நேரம் இருந்துட்டு போலாம்னு வந்தேன் ” என்று வந்து அவருக்கு எதிரே இருந்த சேரில் அமர்ந்தார்.

“எனக்கு தான் திரும்பின இடம் எல்லாம் பிரச்சனையா வந்திருக்கு. உனக்கு என்ன டா பிரச்சனை ” என்றார் உரிமையாக.

“பிரச்சனை எதுவும் இல்ல தான், ஆனா மனசுக்கு ஒரு சின்ன நெருடல் ” என்றார் கார்த்திகேயன்.

“என்ன டா ஆச்சு??” என்றார் ராஜேந்திரன் அக்கறையாக.

“இல்ல மச்சான், நம்ம ஆராவை நினைச்சு தான் கவலையா இருக்கு ” என்றார்.

“ஏன் டா அவ தான் பிடிச்சவனையே கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமா தான இருக்கா? ஏன் பர்வதம் எதுவும் சொன்னாளா?” என்றார்.

“ம்ஹும்.. அவ முதல்ல தான் ரொம்ப வருத்தப்பட்டா. அப்பறோம் மாப்பிள்ளை தங்கமானவர்னு தெரிஞ்சதும் அவ எதுவும் சொல்றது இல்ல. ஆனா எனக்கு தான் கொஞ்சம் பயமாவே இருக்கு ” என்றார்.

“என்ன டா பயம் ” என்றார்.

“இல்ல.. மாப்பிள்ளை ஒரு அந்தஸ்த்தா நல்லா தான் இருக்கார். நல்லா தொழில் பண்றார் . நம்ம ஆரா மேல அவ்ளோ பாசமா இருக்கார். அவளை நல்ல படியா பாத்துகிறார் . ஆனா அவங்க குடும்பம், அம்மா., அப்பா இதைப் பத்திக் கேட்டாலே அமைதியாகிடறார். இல்லேனா வேற எதுவும் பேசி நாங்க கேக்க வந்ததுக்கு பதில் சொல்லாமலேயே விட்டுறார்.நாளைக்கே ஆரா அவ புகுந்த வீட்டுக்கு போய் வாழப்போறதா இருந்தா மாப்பிள்ளைக்குனு யாரு இருக்கா என்ன  எதுன்னு தெரியாம எப்படி அனுப்பறது ” என்று பெருமூச்சு விட்டவர்.

“இன்னும் கொஞ்ச நாள்ல ஆராவை அவர் வீட்டுக்கு கூட்டிப் போறதா வேற சொல்லி அவ வரத்துக்காக அவர் வீட்ல வேணும்னுகிறதை எல்லாம் வாங்கி குவிச்சிட்டு இருக்கார்.” என்றார் கார்த்திகேயன் மிகவும் கவலையாக.

“யுவனைப் பெற்றவன் நான் தான் நீ ஆராவைப் பத்தி எந்த கவலையும் படத் தேவையில்லைனு சொல்லணும்னு ராஜேந்திரனுக்குத் தோணுச்சு,ஆனா அவரால அது முடியாதே. அப்படி உண்மையை போட்டு உடைந்துவிட்டால் அவர் விஷயத்தையோடு சேர்ந்து பல விஷயங்கள் வெளியாகுமே.. ” என்ற பயம் அவருக்கு .

“சரி என் கதையை விடுங்க. நம்ம யுகேன் இருக்கான் அவன் எல்லாமே பாத்துப்பான் . அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு . எங்க ரெண்டு பேரையும் விட ஆரா மேல அவனுக்கு எப்பவும் ஒரு தனி பாசம் இருக்கும் ” என்றார்.

“உண்மைதான் டா அவனுக்கு ஆரா அவனை கட்டிக்கிற முறைன்னு நினைப்பே இல்ல அவளை அவன் கூடப் பிறக்காதவளா தான் பாக்குறான்  ” என்றார் ராஜேந்திரன்.

“சரி அதெல்லாம் விடுங்க மச்சான். நான் ஒன்னு கேக்குறேன் கோவிச்சுக்காம பதில் சொல்லணும் ” என்றார்

“என்ன கேக்க போற.. அந்த பூவிழியை நான் தான் வீட்டை விட்டு அனுப்பினேனா இல்லையான்னு தெரியணும் அது தானே.. ” என்றார் கடுப்பாக.

கார்த்திகேயன் அமைதியாக அவரைப் பார்க்க..

“என்கிட்டே யாரும் எதுவும் கேட்காதீங்க.. எனக்கு யாருக்கும் எதுவும் விளக்கம் சொல்லணும்னு எந்த அவசியமும் இல்லை ” என்றவர் விருட்டென எழுந்து அங்கிருந்து உள்ளே சென்றுவிட..

“ஆமா.. இல்லேன்னு ஒரு பதில் சொன்னா  முடிஞ்சு போகுது . இதுக்கு ஏன் மச்சான் இவ்ளோ கோபப்படுறார் ” என்று புரியாமல் அமர்ந்து இருந்த கார்த்திகேயனுக்கு மீண்டும் மனதிற்குள் கவலை குடிகொண்டது. அது ஆராவைப் பற்றியது அல்ல.. அவர் மனதில் இருக்கும் மற்றொரு உண்மையை பற்றிய கவலை கிட்டத்தட்ட பல வருடங்களாக மனதில் பூட்டி வைத்து அதை யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் கவலை அது .

இங்கே பேசிவிட்டு தன் அறைக்கு வந்து விளக்கைப் போட்ட ராஜேந்திரன் அவர் படுக்கையில் பள்ளி கொண்ட பெருமாள் போல தலைக்கு கை வைத்து கட்டில் நீளத்துக்கு படுத்திருந்த யுவனைப் பார்த்து சற்று அதிர்ந்து தான் போனார்.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“நீயா! உனக்கு என் ரூம் என்ன வேலை இருக்கு . இந்த நேரத்துல எதுக்கு இங்க வந்திருக்க.. ” என்றார்.

“என்னப்பா நீங்க இப்படிக் கேட்டுட்டீங்க. நான் இங்க வந்து எவ்ளோ நாள் ஆச்சு. உங்ககிட்டே பேசவே இல்லன்னு தான் உங்களைத் தேடி வந்திருக்கேன் ” என்றான்,.

“என்கிட்டே பேச என்ன இருக்கு? ” என்றவர் அவனை சட்டை செய்யாமல் போய் சோபாவில் அமர்ந்தார்.

“என்ன இருக்கா? நான் உங்க மகன். என்னோட அம்மா காவேரிதான்னு நீங்க எல்லார்கிட்டயும் எப்போ சொல்லபோறிங்க ?” என்றான்.

அவர் பேசாமல் இருக்க. எழுந்து அவரிடம் வந்தவர் அவன் எதிரே இருந்த டீப்பாயின் மேல் அமர்ந்து “ஏன்ப்பா..  நான் ஒன்னு கேப்பேன். அதுக்கு மறைக்காம பதில் சொல்லுங்களேன் “என்றான்.

“என்ன?” என்பது போல அவர் யுவனைப் பார்க்க..

“நான் உங்களோட மகன்னா யுகேன் எனக்கு என்ன முறை வேணும்?” என்றான்,

“இது கூட தெரியாதா உனக்கு. அவன் உன்னை விட ரெண்டு வயசு மூத்தவன் உனக்கு . யுகேன் உனக்கு அண்ணா ” என்றார்.

“சரி எனக்கு அவர் அண்ணா தான் ஒத்துகிறேன் . காவேரியோட பொண்ணுன்னு சொல்லி தானே பூவிழியை யுகேனுக்கு கல்யாணம் பண்ணி வெச்சிருக்கீங்க. பூவிழியோட அம்மா காவேரின்னா அப்போ எனக்கு அவ தங்கச்சி முறை. எனக்கு தங்கச்சிண்ணா… ” என்று இழுத்தவன் ராஜேந்திரனைப் பார்த்துக்கொண்டே.. “அப்போ யுகேனுக்கு?” என்று நிறுத்தினான்.

அவன் கேள்வியில் ராஜேந்திரனின் முகம் வெளுத்துவிட்டது. “எந்த கேள்வி வெளியே வரவே கூடாது என்று நினைத்தாரோ.. எதனால் காவேரி, யுவன், பூவிழியுடனான உறவை இவ்வளவு நாள் மறைத்து வைத்திருந்தாரோ அந்த கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் என்று அவர் முன் அமர்ந்து இருந்த யுவனை பதற்றத்தோடு பார்த்தான்.

“இப்படி எதுவும் பேசாம அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?” என்றான்.

“நீ கேக்குற எல்லா கேள்விக்கும் நான் பதில் சொல்லணும்னு எந்த அவசியமும் இல்ல. முதல்ல நீ இங்க இருந்து வெளியே போ எனக்கு தூக்கம் வருது ” என்றார்.

“நான் கேட்ட எந்த கேள்விக்கும் நீங்க சரியா பதிலே சொல்லலையே.. அப்பறோம்  எப்படி நான் இங்க இருந்து போக முடியும் ” என்றான்.

அவனை முறைத்துக்கொண்டு எழுந்தவர் “நீ கிளம்பு உன்னோட கேள்விக்கு எனக்கு பதில் சொல்ல இஷ்டமில்லை ” என்று அவனிடம் எரிந்து விழுந்தார்.

அவனும் பேக்கெட்டில் கை விட்டவாறு அவர் உயரத்திற்கு எழுந்து நின்றவன்   “இப்போ பதில் சொல்லலையின்னு அப்படியே விட்டுட்டு போறேன்னு நினைக்க வேணாம் மிஸ்டர் ராஜேந்திரன். உங்க வாயாலையே நான் தான் உங்க பையன், காவேரி தான் உங்க மனைவின்னு சொல்ல வைப்பேன். அதே போல பூவிழி யாருனு உங்க வாயாலையே சொல்ல வைப்பேன் ” என்றான்.

“சரி பாக்கலாம் நீ முதல்ல கிளம்பு ” என்று அவனை வெளியே தள்ளி கதவை சாற்றினார்.

சிரித்தபடியே வந்த யுவன் திரும்பி தன் அறைக்கு செல்லப் போக.. ஆரா கதவில் சாய்ந்து கைகளை கட்டியபடி நின்று இருந்தவள் அவனையே பார்த்தாள்.

இதன் தொடர்ச்சி 1 மணிக்குள் வரும் . வாட்சப்பில் லிங்க் ஷேர் பண்றேன்.

Pratilipi story link

https://pratilipi.app.link/PkK9ltbOO6b

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

வாட்ஸாப்ப் லிங்க் 

https://whatsapp.com/channel/0029Vb8QedDLSmbhyy4jm03V

இன்ஸ்டாகிராம் லிங்க் 

https://www.instagram.com/sinamikaslove_tale?igsh=MXVpNnNlengzdDhzMw==

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.