News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

தப்பு 38,

by Sinamika Writes
982 views
A+A-
Reset

தப்பு 38

காவேரியும், பூவிழியும் வீட்டிற்கு வந்து ஒரு வாரம் கடந்திருக்கும். அவர்கள் இருவரும் பழைய நிலைக்கு மாறியதைக் கண்ட பின் யுகேன் சற்று நிம்மதியானான். இன்னும் பூவிழிக்கு காவேரியைப் பற்றிய முழு உண்மையும் தெரியாது. அதை காவேரியும் அவளுக்கு குழந்தை பிறந்த பிறகு சொல்லிக்கொள்ளலாம் என்று கேட்டுக்கொள்ள. அந்த பேச்சை தற்போதைக்கு எடுக்காமல் இருக்கிறான் யுகேன்.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

“அம்மா நான் கிளம்பி போனதுக்கு அப்பறோம் இவளை அந்த மாமரத்துப் பக்கம் அனுப்பாதீங்க.. என்னையே ஏமாத்திட்டுப் போய் மாங்காயை பறிச்சு சாப்ட்டிருக்கா இவ.. “என்றான் யுகேன்.

“எங்க என்னை சாப்பிட விட்டீங்க.. அதான் பின்னாலையே வந்து என்கிட்டே இருக்க மாம்பழத்தை பிடுங்கி நீங்க சாப்பிட்டீங்களே.” என்று பூவிழி அவனை முறைத்தாள்.

“நான் அதை சாப்பிடலையின்னா அப்பறோம் நீ சாப்ட்டிருப்ப.. அப்பறோம் அன்னிக்கு மாதிரி வயிறு வலிக்குதுன்னு கத்தி கூப்பாடு இல்ல போட்டிருப்ப நீ.. ‘ என்றான் அவனும் விடாமல்.

அவனை வாய்க்குள் திட்டிய பூவிழி எதுவும் பேசாமல் சாப்பிடாத துவங்க..

இவர்கள் இருவரின் செல்ல சண்டைகளை தினமும் பார்த்த காவேரிக்கு இது வழக்கமான ஒன்று தான்  என்ற ரீதியில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் “தம்பி இருங்க.. நான் போய் சூட இட்லி எடுத்துட்டு வரேன் “என்று உள்ளே சென்றார்.

அவர் சென்றதும் பூவிழியிடம் திரும்பியவன் “என்ன டி அமுக்காஞ்சி என்னை என்னவோ சொல்லி வாய்க்குள்ளையே திட்டுன.. என்ன விஷயம் “என்றான்.

“ம்ம்ம்.. நான் மாம்பழம் சாப்பிடத்துக்கு என்னை திட்டுனாங்க இல்ல.. நான் என்னவோ கத்திக் கூப்பாடு போட்டேன்னு சொன்னிங்கள்ல.. ஆனா வந்த அன்னிக்கு நீங்க பண்ணினது எல்லாம் மறந்துபோயிருச்சா உங்களுக்கு.. நீங்களும் வந்ததுல இருந்து சும்மாவா இருந்திங்கன்னு திட்டுனேன். இப்போ என்னங்குறிங்க இப்போ.. ” என்று எகிறினாள் அவள்.

முன்னை விட பூவிழி இப்பொது அதிகம் பேசுகிறாள். அது யுகேனுக்கும் தெரியும் . அவள் இப்படி மனதில் இருப்பதை மறைக்காமல் தன்னிடம் பேசுவதை எண்ணி அவன் சந்தோசம் தான் படுகிறான். அவனிடம் அவள் எடுத்துக்கொள்ளும் உரிமை அநத அவளுக்கு நெருக்கமாக மாறியதை எண்ணி சந்தோடம் அவனுக்கு.

“இந்தாங்க தம்பி..” என்று காவேரி வந்து அவனுக்கு தட்டில் இட்லியை வைக்க. .

“அம்மா.. நான் உங்களை எவ்ளோ உரிமையா அம்மான்னு கூப்பிடுறேன். ஆனா நீங்க இன்னும் என்னை வாங்க போங்க.. தம்பின்னு கூப்பிடறீங்க.. நீங்க இப்படி பேசுறது எனக்கு பிடிக்கல.. நீங்க என்னை இன்னும் தள்ளி வெச்சு தானே பாக்குறீங்க.. ‘ என்றான் சற்று வருத்தத்தோடு.

“ஐயோ அப்படி எல்லாம் இல்லப்பா.. எனக்கு முதல்ல இருந்தே அப்படியே கூப்டு பழக்கம் ஆகிருச்சு.. கொஞ்ச நாள் போனா மாறிடும்னு நினைக்குறேன் ” என்றார் அவர்.

“சரிம்மா.. சீக்கிரம் மாத்திக்கோங்க.. ” என்றவன் அடிக்கொரு முறை தன் மொபைலை எடுத்து பார்த்துக்கொண்டிருந்தான்.

அதை பூவிழியும் கவனித்துக் கொண்டிருந்தவள் “ஆமா எதுக்கு நீங்க சும்மா சும்மா போனை எடுத்து பார்த்துட்டு இருக்கிங்க . “என்று அவன் போனை எடுக்கப் போனாள்.

சரியாக அந்த நேரம் அவனுக்கு கால் வரவும் சட்டென எழுந்த யுகேன் “போனைக் குடு ” என்று அவளிடம் இருந்து பறித்துக்கொண்டு “நீங்க சாப்பிடுங்க. எனக்கு ஒரு முக்கியமான கால் வந்திருக்கு நான் பேசணும் ” என்று எழுந்து வெளியே சென்றுவிட்டான்.

அவன் இப்படி செய்ததில் அவளுக்கு கோபம் வந்துவிட்டது. ” யாருன்னு தானே கேட்டேன் . சொல்லிட்டு போனா என்னவாம் “என்று முணுமுணுத்தவள் சாப்பிட..

காவேரியும் பூவிழி யுகேன் மீது வைத்திருக்கும் அன்பை இந்த மாதிரியான சின்ன சின்ன சண்டைகளில் கண்டு நிம்மதியானார்.

“சீக்கிரம் சாப்டுட்டு போய் தூங்கு டி.. சும்மா எப்போ பாரு புள்ளைகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருக்குறது.. வர வர உனக்கு குறும்பு அதிகம் ஆகிருச்சு.. ஹாஸ்பிடல்ல இருந்து வந்ததுல இருந்து தம்பிகிட்டே நீ சண்டை போட்டுக்கிட்டே இருக்க .. இது சரி இல்ல பாத்துக்க.. ” என்றார்.

“ஆமா அவர்கிட்டே அப்படியே நான் சண்டை போட்டு அவர் வந்து என்னை சமாதானம் செய்றாரு போம்மா.. என் புருஷன் கூட நான் அப்படி தான் சண்டை போடுவேன். அவரே என்னை எதுவும் சொல்றது இல்ல.. நீ ஏன் பேசுற என்ன.. ” என்று அவரையும் திட்டியவள் எழுந்து கையைக் கழுவி விட்டு யுகேனை தேடினாள் .

அவனோ வாசலில் நின்று போன் பேசிக்கொண்டிருக்க..

“எப்போ பாரு போன் போன் தான். என்னைக் கண்டுக்குறதே இல்ல.” என்று முணுமுணுத்தவள் “அம்மா நான் தூங்கபோறேன் ” என்றாள்.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“ஏய் இரு டி பாலை காய்ச்சி வெச்சிருக்கேன். குடிச்சிட்டுப் போ.. “என்றார்.

“அதோ அங்க போன் பேசிட்டு இருக்காரு இல்ல. .. அவர் வந்ததும் அவர்கிட்டே கொடுத்த விடு . எனக்கு இப்போ பால் குடுக்குற மூட் இல்ல. அப்பறோம் குடிச்சிக்கிறேன் “என்றவள் திரும்பிப் பார்க்காமல் அறைக்குள் சென்றுவிட,.

“இவளுக்கு கொழுப்பு அதிகமாகிருச்சு. எல்லாம் அந்த தம்பி கொடுக்குற இடம்.. ” என்று யுகேனையும் திட்டினார்.

போன் பேசிவிட்டு  வந்த யுகேன் “எங்க ம்மா அவ.. “என்றான்.

“இப்போ தான் ப்பா உள்ள போனா.. என்னவோ தெரியல.. ஒரு தினுசா தான் இருக்கா. அவ பாலைக் குடிச்சிட்டுப் போடின்னு சொன்னா.. உங்ககிட்டே கொடுத்து அனுப்ப சொல்லிட்டு போறா.. ‘ என்றார்.

அதைக் கேட்டு சிரித்தவன் “ஆமா ம்மா, நானும் கவனிச்சிட்டு தான் இருக்கேன். ஒரு நாலு நாளா சண்டை போட்டுட்டே தான் இருக்கா அவ.. ” என்றவன் “பாலை ஊத்தி கொடுங்க நான் கொடுத்துறேன் ” என்றான்.

“அவளை செல்லம் கொடுத்து நீ தான்ப்பா கெடுத்து வெச்சிருக்க.. இப்படி எல்லாம் கிடையாது அவ.. இப்போ அவ இஷ்டத்துக்கு தான் இருக்கா. அவளுக்கு பிடிச்சதை மட்டும் தான் செய்யுறா ” என்றார்.

“நான் தான் அவளுக்கு பிடிச்சது போல இருக்க சொல்லிருக்கேன் ம்மா.. அப்போதான் அவ இன்னும் கொஞ்சம் தைரியமா இருப்பா. நாளைக்கே அப்பா வந்து அதுவும் பேசினா கூட தைரியமா அவரை பேஸ் பண்ணுவா ” என்றான்.

“என் பொண்ணு கொடுத்து வெச்சவ.. அவ உலகம் தெரியாம அப்படியே இருந்திருவான்னு நினைச்சேன். ஆனா அவளுக்காக பாத்துக்க.. நல்லதை சொல்லிக் கொடுக்க நீங்க இருக்கீங்க தம்பி அதுவே எனக்குப் போதும் ” என்று த்ரிப்திப்பட்டார்.

பாலை ஆற்றி இருவருக்கும் ஊற்றிக்கொடுக்க.. அதை எடுத்துக்கொண்டு அவர்கள் அறைக்கு வந்து கதவை சாற்றினான்.

பூவிழியோ கட்டிலில் அவனுக்கு முதுகு காட்டி ப்டுத்திருந்தாள்.

அவன் மாறுவது தெரிந்து அவள் திரும்பிப் படுப்பதைப் பார்த்ததிலேயே அவள் இன்னும் உறங்கவில்லை என்று புரிந்து கொண்டான் . பாலை மேஜையில் வைத்துவிட்டு “பூவிழி அந்த பாலை எடுத்துக் குடிச்சிரு.. நான் குளிச்சிட்டு வந்து குடிச்சுகிறேன் ” என்றவன் டவலை எடுத்துக்கொண்டு செல்லப் போக..

“எனக்கு பால் வேணாம் “என்றாள் கோபமாக,

அவள் பேச்சில் இருந்த கோபத்தைக் கண்டவன் புருவம் சுருக்கி அவளைத் திரும்பிப் பார்த்தான்.

அவளோ இன்னமும் முதுகு காட்டித் தான் படுத்திருந்தாள்.

“என்ன ஆச்சு இவளுக்கு.. “என்று யோசனையோடு அவள் அருகே வந்து அமர்ந்தவன் அவள் தோளைத் தொட்டு தன் பக்கம் திருப்ப..

அவள் அழுது வீங்கி சிவப்பேறிய கண்களைப் பார்த்தவன் பதறிவிட்டான்.

“ஏய் அமுக்கஞ்சி! என்ன டி ஆச்சு? ஏன் அழற?” என்றான்.

“ஏன் அழுகுறேனா.. என்கிட்டே நீங்க முன்ன மாதிரி சரியா பேசுறது இல்ல. என் பக்கமே வரது இல்ல.. எப்போ பாரு போனை கையில் வெச்சுட்டு நோண்டிகிட்டே இருக்கீங்க.. இவ்ளோவும் நீங்க பண்ணிட்டு நான் ஏன் அழுகுறேன்னு கேக்குறீங்க.. ” என்றவள் சொல்லிவிட்டு திரும்பி படுத்துக்கொள்ள..

“ஹேய்! நான் எப்போ டி உன்கிட்டே பேசாமப் போனேன் இல்லையே.. ‘ என்றான்.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“பேசுறீங்க தான் எப்படி .. சாப்டியா.. மாத்திரை சாப்பிட்டியா. .வயிறு வலிச்சா சொல்லு.. அதை பண்ணாத .. இதை பண்ணாத . இது பேசுறதா..”என்றாள்.

அவள் பேச்சில் அவனுக்கு சிரிப்பு தான் வந்தது, ஆனால் சிரிக்கவில்லை அவன் . அவள் கோபமாக இருந்த நேரத்தில் சிரித்தாள் அவள் அதற்கும் கோபித்துக்கொள்வான் என்று கணித்து வைத்திருந்தான் யுகேன்.

அவள் தோளில் கையை வைத்து திரும்பியவன் “இப்போ உனக்கு என்ன டி பிரச்சனை.. “என்றான்.

“எனக்கா? எனக்கு எந்த பிரச்னையும் இல்லையே.. நான் நல்லா தான் இருக்கேன், நீங்க தான் ரொம்ப பிஸியா இருக்கீங்க.. எந்த நேரமும் போன்.. போன்.. போன் தான். தூங்குற நேரம் கூட என்கிட்டே பேசாம எப்போ பாரு அந்த போன்லையே இருக்கீங்க.. இங்க நான் ஒருத்தி இருக்கேன் என் கூட கொஞ்ச நேரம் பேசலாம் .. இருக்கலாம்னு தோணுதா உங்களுக்கு.. ” என்று படபட பட்டாசை பொரிந்து தள்ளினாள்.

“ஏய் காவேரி அம்மா சொன்ன அப்போ கூட நான் பெருசா எடுத்துக்கல டி.. ” என்றான் அவள் பேசுவதை கேட்டு.

“என்ன சொன்னாங்க ” என்று அழுத விழிகளோடு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“ம்ம்.. உனக்கு வாய் ஜாஸ்தி ஆகிருச்சுனு . எவ்ளோ பேச்சு பேசுர நீ.. அப்படியே பட படன்னு பொரியுற டி நீ..” என்றான் நம்பமுடியாமல்.

“ம்ம்.. எல்லாம் நீங்க கொடுத்த ட்ரைனிங் தான் ” என்றாள் முணுமுணுவென்று.

“ஓஹோ.. நான் ட்ரைனிங் கொடுத்தா என்கிட்டையே இம்ப்ளிமென்ன்ட் பண்ணுவியா நீ.. ” என்று அவளை நெருங்கிப் படுத்தான்.

“ம்ம்… ட்ரெயினிங் கொடுத்தவங்க தான் இப்போ எல்லாம் கிட்டையே வரது இல்லையே.. அப்பறோம் எப்படி நான் இம்ப்ளிமென்ட் பண்றது.. ” என்று அவன் சட்டை பட்டனை நொண்டியபடி அவள் முகத்தை சுருக்கி சொல்ல..

முதலில் யுகேனுக்குப் புரியவில்லை.

குனிந்து அவள் முகத்தையே பார்த்தான் . அவளோ இன்னமும் அவன் சட்டை பட்டனையே நோண்டிக்கொண்டிருக்க..

“என்ன சொன்ன.. இன்னோரு முறை சொல்லு.. ‘ என்றான் புரியாமல்.

அவனை திருட்டுப் பூனை போல பார்த்தவள் “அதெல்லாம் சொல்ல முடியாது நீங்களா தான் புரிஞ்சுக்கணும் ” என்று அவனை விட்டுப் பிரிந்தவள் வயிற்றை தள்ளிக்கொண்டு மெல்ல எழுந்து கட்டிலைவிட்டு கீழே இறங்கினாள்.

அவளையே தலைக்கு கையைக் கொடுத்துப் படுத்துக்கொண்டே பார்த்தவன் பூவிழி சொன்னதை மீண்டும் யோசித்துப் பார்த்தவனுக்கு முகம் பிரகாசமாகிவிட..

கட்டிலை சுற்றி வந்து பால் டம்பளரை எடுத்துக் கொண்டே அவனை ஓரக் கண்ணால் பார்த்தாள்

பூவிழி..

அடுத்து என்ன செய்வான் யுகேன் நாளை பார்க்கலாம்

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.