தப்பு 40 , PART-2
காருக்குள் இருந்து இறங்கி வந்தது வேறு யாரும் இல்லை ராஜேந்திரன் தான்
அவரை இங்கு சற்றும் எதிர்ப்பார்த்திருக்கவில்லை. காவேரிக்கு ராஜேந்திரனைக் கண்டதும் வியர்த்துவிட..
“என்ன நீயும், அவளும் என் மகனை என்கிட்டே இருந்து பிரிச்சு கூட்டிட்டு வந்து இங்க நிம்மதியா சந்தோசமா இருப்பிங்க போல.. “என்றபடி காவேரியை நோக்கி வந்தார்.
“அது.. அது நீங்க நினைக்குற போல இல்லிங்க.. நீங்க முதல்ல உள்ள வாங்க, நான் எல்லாமே அப்பறோம் விவரமா சொல்றேன். இப்போ ஒரு முக்கியமான வேலை இருக்கு.. ‘ என்று அவரை தாண்டி வாசலுக்கு செல்லப் போனார் காவேரி.
“ஏய்! எங்க டி போற.. நான் பேசிட்டு இருக்கேன் இல்ல. வாடி இங்க.. ” என்று காவேரியின் கையைப் பற்றி இழுத்து தன் அருகே நிறுத்தினார் .
“ஐயோ! நேரம் காலம் தெரியாம நீங்க வேற.. முதல்ல கையை விடுங்க. .” என்று தன்னைப் பற்றி இருந்த ராஜேந்திரனின் கையை உதறிய காவேரி அவரைத் தாண்டி வேகமாக தோட்டத்திற்கு சென்றார். அங்கண்ணன் எப்போதும் தோட்டத்தில் தான் இருப்பார்.
ராஜேந்திரனுக்கு பூவிழி பற்றி விபரம் தெரியாமல் போக.. அவள் உள்ளே வலியில் துடித்துக்கொண்டிருப்பதை அவர் அறியவில்லை.
“நான் இங்க ஒருத்தன் வந்திருக்கேன் . என்னை ஏமாத்தி ரெண்டு பேரும் இங்க வந்து தங்கிட்டு என்னையே சட்டை செய்யாம போறியா.. “என்றவர் வீட்டிற்குள் பூவிழியும், யுகேனும் இருப்பதை அறியாமல் வாசல் கதவை பூட்டிவிட்டு சாவியை எடுத்துக் கொண்டு “அவனும் இங்க தானே இருக்கான். என்கிட்டே சொல்லாம என்னை ஏமாத்தி எல்லாரும் ஒன்னு சேர்ந்து நாடகமா ஆடுறிங்க.. உங்க எல்லாரையும் இந்த வீட்டுக்குள்ளையே நான் பூட்டி வெக்குறேன் “என்றவர் காரை எடுத்துக்கொண்டே வெளியே வந்து கேட் வாசலையும் பூட்டிவிட்டு சாவியை எடுத்துக்கொண்டு அந்த வீட்டில் இருந்து கிளம்பி இருந்தார்.
தோட்டத்தில் இருந்து அங்கண்ணனை அழைத்து வந்த காவேரி “நீங்க போய் காரை எடுங்க.. நான் அவங்களை வர சொல்றேன் ” என்று வாசலில் ஏறியவர் கதவை திறக்க..
அது திறக்க முடியாமல் போனது. “என்ன ஆச்சு?” என்று குழப்பத்தில் மீண்டும் கதவை திறக்கப் போராட..
அப்போது உடை மாற்றிவிட்டு பூவிழியை தூக்கிக்கொண்டு வாசலுக்கு வந்த யுகேன் “ம்மா என்ன ஆச்சு.. கதவை திறங்க… ” என்று உள்ளிருந்து கத்தினான்.
“யுகேன் நானும் கதவை திறக்க தான் முயற்சி பண்றேன் ஆனா முடியல.. ” என்று அவர் மீண்டும் மீண்டும் கதவை திரைக்க முயற்சித்தார்.
அப்போது வேகமாக ஓடி வந்த சாமிக்கண்ணு.. “காவேரி அம்மா ராஜேந்திரன் ஐயா வந்து கேட்டை பூட்டி சாவியை எடுத்துட்டு போய்ட்டார் ” என்று அவசரமாக வந்து சொன்னார்.
அதைக் கேட்டதும் தான் காவேரிக்கு உரைத்தது. இந்த கதவையும் அவர் தான் பூட்டி இருப்பார் என்று.
“ஐயோ! இந்த புத்தி கெட்ட மனுஷனை என்ன தான் பண்றது. எதுக்கு இப்படி பண்ணிட்டு போறார். அதுவும் இந்த நேரத்துல.. ‘ என்று தலையில் அடித்து அழுதார் காவேரி.
வெளியே அவர்கள் பேசியதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த யுகேந்திரன் “அம்மா அழுகுறதுக்கு இப்போ நேரம் இல்லை. நான் பின் வாசல் வழியா பூவிழியை கூட்டி வரேன். காரை அங்க கொண்டு வர சொல்லுங்க.. ‘ என்று சொல்லிவிட்டு நொடியும் தாமதிக்காமல் பின் வாசல் வழியே பூவிழியை ஏந்தியபடி ஓடினான்.
காவேரியும் விஷயத்தை சாமிக்கண்ணுவிடம் சொல்ல.. அவர் வேகமாக காரை எடுத்துக்கொண்டு பின் வாசல் விரைந்தார்.
அவர்கள் வருவதற்குள் கேட்டைத் திறக்க வேண்டும் என்று காவேரியும், அங்குசாமியும் வாசலுக்கு ஓடினர். இருவரும் வயதானவர்கள் என்பதால் அவர்கள் பலம் கொண்டு கேட்டை திறக்க முடியவில்லை. கையில் கிடைத்த பொருட்களை வைத்து போட்டி இருந்த பூட்டை திறக்க முற்பட்டனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.
அப்போது “அம்மா விலகி நில்லுங்க.. ” என்று கத்திக் கொண்டே கார் ஹாரனை வேகமாக அழுத்தியபடி யுகேன் காரை வேகமாக ஓட்டிவந்தான் .
அவன் சத்தம் கேட்டு இருவரும் கேட்டை விட்டு தள்ளி நிற்க.
யுகேன் காரை வேகமாக ஓடிவந்து அந்த பிரமாண்ட கேட்டை மோதினான்.
அவன் காரை வேகமாக மோதியதில் கேட் நிலைகுலைந்து இரண்டாக விலகி நிற்க.. பூட்டி இருந்த பூட்டு தானாக உடைந்து போனது.
திரும்பவும் மோதி நின்ற காரை ரிவெர்ஸில் அவன் எடுக்க..
பின்னால் இருந்து பூவிழி கத்தினாள் அவளை விழாமல் பிடித்திருந்த சாமிக்கண்ணு “தம்பி பாப்பா வலி தாங்க முடியாம கத்துது கொஞ்சம் சீக்கிரம் ஆஸ்பத்திரி போங்க. .” என்றார்.
அவர் மடியில் படுத்திருந்த பூவிழியோ வயிற்றை பிடித்துக்கொண்டு அழ..
அதற்குள் சாமிக்கண்ணு உடைந்த கேட்டை கார் செல்வதற்காக திறந்துவிட்டார்.
காவேரியும் வந்து காரில் ஏறிக்கொள்ள.. பூவிழியை அழைத்துக்கொண்டு கார் புயல் வேகத்தில் ஹாஸ்பிடலை நோக்கி விரைந்தது.
அங்குசாமி வீட்டை பார்த்துக்கொள்ள அங்கேயே இருந்துவிட்டார்.
வீட்டைப் பூட்டிவிட்டு சாவியுடம் அந்த பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த ராஜேந்திரனின் காரை புயல் வேகத்தில் ஒரு கார் தாண்டி செல்ல..
“யாரு டா அது.. ” என்ற ரீதியில் அந்த காரைப் பார்த்தவருக்கு அந்து யுகேனின் கார் என்று தெரிந்ததும் . “இவ்ளோ வேகமா எங்க போறான் அவன் அதுவும் நான் வீட்டை பூட்டி தானே வந்தேன் . எப்படி இவன் வெளிய வந்தான் ‘ என்பர் யோசித்தவர் அவர்களை பின் தொடர்ந்து சென்றார்.
