News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

மூர்க்கன் 57

by Sinamika Writes
1K views
A+A-
Reset

மூர்க்கன் 57

“சொல்லு இவ்ளோ வருஷமா எங்க போன.. இப்போ எதுக்கு வந்த” என்று தன் முன் டிப் டாப்பாக டிரஸ் க்ரெ பேண்டும் , வைன் நிற ஷர்ட்டும் அணிந்து கண்ணில் கூலர்ஸ் அணிந்து மிகவும் ஸ்டைலாக தன் முன் நின்று இருந்த கர்ணனிடம் கேட்டான் ராவண் .

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

“என்ன மச்சான் என் தங்கச்சியையம், அவ பசங்களையும் ஆசையா பார்க்க வந்திருக்கேன். வந்தவனை வான்னு கூப்டு வெச்சு சந்தோசமா பேசுவீங்கன்னு இல்ல நினைச்சேன்” என்று இலங்கிலியின் ரூமுக்கு வெளியில் கோரிடரில் இருந்து பேசினான் கர்ணன்.

“தங்கச்சியா? ” என்றான் ராவண் நக்கலாக.

“ஓகே ஓகே.. கூல் மச்சான். கனி சாரி இளங்கிளி என் கூடப் பொறந்த தங்கச்சி கிடையாது தான். அதுக்காக அவ என்னோட தங்கச்சி இல்லேன்னு ஆகிடுமா? என்ன?” என்றான்.

“இங்க பாரு இளங்கிளி தனியா கஷ்டப்படாம அவளுக்கு நீ ஹெல்ப் பண்ணி அவளையும், என் பசங்களையும் நல்ல முறையில் நீ பாத்துக்கிட்டேன்னு தான் நான் உன்கிட்டே இவ்ளோ பொறுமையா நிக்கவெச்சு பேசிட்டு இருக்கேன். இல்லேனு வை அந்த ரக்ஷணா கூட சேர்ந்து நீ பண்ணின காரியத்துக்கு உன்னை என்ன பண்ணிருப்பேன்னு எனக்கே தெரியாது ” என்றான்.

“மச்சான்.. ” என்று ராவண் தோளில் கர்ணன் கையைப் போடப் போக. 

“இந்த மச்சான் கிச்சானு எல்லாம் பேசினேன்னு வை .. ” என்று தன் தோளில் வைக்க இருந்த கர்ணனின் கையைப் பார்த்துவிட்டு கர்ணனை நிமிர்ந்து பார்த்தான்.

அவன் பார்வையிலேயே கையை எடுத்துக்கொண்டவன் “இங்க பாருங்க ராவண் நீங்க என்மேல கோபப்படறது நியாயம் தான் . ஏன்னா நீங்க நம்பிக்கை வெக்குற அளவுக்கு நான் நல்லவனா அப்போ இல்ல. ஆனா எப்போ இளங்கிளியை நான் தங்கச்சியா பார்க்க ஆரம்பிச்சானோ அப்போவே இனிமேல் என்னை மாத்திக்கணும் எல்லாரையும் போல நாங்க ஒரு நோர்மல் லைப் வாழணும்னு முடிவு பண்ணினேன் ” என்றான்.

“அப்பறோம் ஏன் நாங்க ருத்ரன் வீட்டுக்கு  வந்ததும் நீ காணாமப் போன.. இப்போ எதுக்கு திரும்பவும் வந்திருக்க.. ‘ என்றான்.

“நான் அப்போ யார்கிட்டேயும் சொல்லமாய் போனதுக்கு காரணம் இருக்கு ” என்றவன் “ஒன்னு.. இளங்கிளிக்கு அவ குடும்பம் திரும்ப கிடைச்சிருச்சு. நீங்க எல்லாரும் அவளை இனி நல்லபடியா பார்த்துபிங்கன்னு நம்பிக்கை இருந்துச்சு. அப்பறோம் இன்னொன்னு எனக்கு திரும்பவும் அந்த ரக்ஷனாகிட்டே போய் வேலை பார்க்க விருப்பம் இல்ல. அவளோட அந்த கேடு கேட்ட வேளைக்கு நான் துணைபோகக்கூடாதுனு தான் ருத்ரன் சார் வீட்டுக்கு வரதா சொல்லிட்டு என் சொந்த ஊருக்கு போய்ட்டேன் ” என்றான்.

அவனையே அழுத்தமாக ராவண் பார்த்திருக்க..

“அப்பறோம் இவ்ளோ நாள் எங்க இருந்திங்க? அப்போ நீங்க ஐந்துக்கும் இப்போ நீங்க பார்க்கவே ஆள் மாறிட்டீங்க.. “என்று கேட்டுக்கொண்டே தன் அறைக் கதவை சாற்றிவிட்டு அவர்களிடம் வந்தாள் இளங்கிளி.

“என்ன கனி அண்ணான்னு கூப்பிடமா நீங்க வாங்கன்னு என்னை தள்ளி வெச்சு பார்க்குறியே.. ” என்றான் கர்ணன்.

அந்த பேச்சில் சற்று தடுமாறியவள் “எனக்கு உங்களை அப்படி கூப்பிடணும்னு தான் ஆசையா இருக்கு. ஆனா உங்க மேல் நான் பயங்கர கோபத்துல இருந்தேன். நீங்க என்ன போனீங்க ? உங்களுக்கு ஏதாவது ஆகிருச்சான்னு நான் நினைக்காத நாள் இல்ல தெரியுமா? ஏன் இன்னிக்கு காலையில் கூட இவரும் , ருத்ரன் சாரும் சேர்ந்து உங்களை எதுவும் பண்ணிட்டாங்களோன்னு கூட சந்தேகப்பட்டு இவர்கிட்டே கேட்டேன் தெரியுமா?” என்றாள்.

“எனக்கும் உன்ன, ஆதி, அல்லியை எல்லாம் விட்டுட்டு போறதுல சுத்தமா விருப்பம் இல்ல. நான் உங்க கூட இருந்திருந்தா அந்த ரக்ஷணா என்னை வெச்சே உங்களை எதுவும் செய்ய சொல்லிருப்பா. என்னால அது சாத்தியமா முடியாதுனு என்னக்கு தெரியும். ஏன்னா உங்க மூணு பேர் மேலையும் நான் அவ்ளோ பாசத்தை வெச்சுட்டேன். என் உயிரைக் கொடுத்தாலும் கொடுப்பேன் ஒழிய.. திரும்ப அவ சொல்ற பேச்சை கேட்க முடியாது. அதனாலதான் யார்கிட்டேயும் சொல்லாம நான் என்னோட சொந்த ஊருக்கே போய்ட்டேன் “என்றான்.

“எந்த ஊரு ?” என்று இளங்கிளியின் தோளில் கையைப் போட்டு அவளை அழைத்து கொண்டு வந்து அங்கே காரிடாரில் போடப்பட்டிருந்த  இருக்கையில் அமரவைத்தவன் தானும் அவள் அருகே அமர்ந்து கொள்ள..

“தஞ்சாவூருக்கு பக்கத்துல இருக்க ஒரு கிராமம் ” என்றவன் வந்து இளங்கிளியின் மற்றைய பக்கம் வந்து அமர்ந்தான்.

“கிராமத்துல இப்படி யாரும் நீட்டா டிரஸ் பண்ணி நான் பார்த்ததில்லையே” என்று கர்ணனின் மாற்றத்தைப் பற்றிக் கேட்டான் ராவண்.

“கிளி, மச்சானுக்கு குசும்பைப் பார்த்தியா ?” என்றபடி சிரித்த கர்ணன், தன் கூலர்ஸைக் கழட்டி கையில் வைத்தவாறு இயல்பான குரலில் தொடர்ந்தான்.

“கிராமத்துல இருந்துட்டே பழையபடியே இருந்தா எப்படி மச்சான்? காலத்துக்கு ஏற்ப நாமளும் மாறணும் இல்லையா? நான் ஊருக்குப் போனதும் சும்மா உட்கார்ந்து இருக்கல. கொஞ்ச காலம் வெளிநாட்டுல போய் வேலை செஞ்சு ஓரளவுக்கு பணம் சேர்த்தேன். என் அப்பா வெச்சிருந்த ஒரு இடம் நல்ல விலைக்கு வந்துச்சு. அதை வச்சு இப்போ சொந்த ஊர்லயும் இங்கேயும் சின்னதா முதலீட்டு பண்ணிட்டு இருக்கேன். கஷ்டப்பட்டு உழைச்சதுனால இப்போ பிசினஸ் நல்லபடியா போகுது மச்சான்” என்றான்.

இளங்கிளி வியப்புடன் அவனைப் பார்த்தாள். “அண்ணா, உண்மையாவா சொல்றீங்க? நீங்க கஷ்டப்பட்டு இந்த அளவுக்கு முன்னேறி வந்ததுல எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. கேக்குறதுக்கே ரொம்ப சந்தோசமா இருக்கு” என்றாள் கண்களில் உண்மையான மகிழ்ச்சியுடன்.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

கர்ணனின் பேச்சில் பொய் இருக்கவில்லை என்று ராவணால் புரிந்து கொள்ள முடிந்தது.

“சரி , இவ்ளோ நாள் வராதவன் திடீர்னு வந்திருக்க.. அந்த ரக்ஷனாவுக்கு நீ திரும்பி வந்தது தெரிஞ்சா அவ உன்னை சும்மா விடுவாளா?” என்றான் ராவண்.

“அதைப் பத்தி எனக்கு எந்த கவலையும் இல்ல மச்சான். நான் பழைய கர்ணன்னு நினைச்சு அவ என் வழிக்கு வந்தா அவ தான் கஷ்டப்படணும்” என்று சிரித்தான்.

அவன் பேச்சில் இருந்த முதிர்ச்சியைக் கண்டு ஆச்சர்யப்பட்டேன் ராவண்.

“சரி உங்க என்கொய்ரி எல்லாம் முடிஞ்சுதா நான் போய் என்  தங்கச்சி பசங்ககூட கொஞ்ச நேரம் இருக்கலாமா?” என்றான்.

“என்ன அண்ணா இப்படிக் கேட்டுட்டீங்க வாங்க உள்ள,.. ” என்று கர்ணனை அழைத்தாள் இளங்கிளி.

கர்ணனும் எழுந்தவன் இளங்கிளி எழுந்து கொள்ள கையைக் கொடுக்க..

அதற்குள் எழுந்த ராவனோ இளங்கிளியின் கையைப் பற்றி அவள் எழுந்து கொள்ள உதவினான்.

அவன் செயலைக் கண்டு சிரித்த கர்ணன் “ஹலோ மச்சான், நீங்க இல்லாத அப்போ என் தங்கச்சியை கண்ணும் கருத்துமா பாத்துக்கிட்டது நான் தான். அவ ரெண்டு குழந்தை பெத்தும் .எந்த கஷ்டமும் இல்லாம அவங்களை வளர்க்க நானும் ஒரு காரணம். நீங்க என்ன என் தங்கச்சி கையை நான் புடிக்கவே கூடாதுங்குற மாதிரி நடந்துக்கிறிங்க ” என்றான்.

அவன் பேச்சில் இருந்த உரிமையைக் கண்டு அவன் மேல் இருந்த நம்பிக்கை அதிகரித்தது ராவணுக்கு . சட்டென்று இளங்கிளியின் கையை அவனிடம் நீட்டியவன் “நீயே இவளை கூட்டிப் போ.. நான் போய் என் தங்கச்சியை பார்த்துட்டு வரேன் ” என்றவன் திரும்பி மித்ராவைப் பார்க்க செல்ல..

அவனை விழி விரித்து சிரித்த படி பார்த்த இளங்கிளி “அண்ணா! என் புருஷன் பொறாமைப்படுறார். இதுவும் நல்லா தான் இருக்கு ” என்று அவனோடு உள்ளே சென்றாள்

கர்ணனும், இளங்கிளியும் ஒன்றாக உள்ளே வரவும் கர்ணனை அங்கு பார்த்த ஆதி அவனை குறுகுறுவெனப் பார்த்தான்.

கிட்டத்தட்ட ஐந்து வருடம் உருண்டோடி இருக்க.. இவர்கள் இருவருக்கும் தன்னை நினைவில் இருக்குமா? என்று யோசனையில் அவனிடம் சென்றான் கர்ணன்.

“என்ன டா அப்படிப் பகிரும் பாக்குற என்னை ” என்று அவன் உயரத்திற்கு கீழே குனிந்தவன் ஆதியை கையில் தூக்கிக்கொள்ள..

அவனையே இன்னமும் அதே போல பார்த்திருக்க..

அப்போது விளையாடிக் களைப்பில் உள்ளே இருந்த மற்றொரு அறையில் உறங்கிக்கொண்டிருந்த அல்லி கண்ணை கசக்கிக்கொண்டு வெளியே வந்தவள் அங்கே கர்ணனின் கையில் இருந்த ஆதியையும், அவனை தூக்கிக்கொண்டிருந்தவையும் மாறி மாறிப் பார்த்தாள்.

அவள் எழுந்து வந்ததை பார்த்த பரிமளாவோ “அடடா அல்லிக்குட்டி எழுந்தாச்சா.. இங்க பாரு யாரு வந்திருக்காங்கனு ” என்றார்.

ஒரு நிமிட மௌனம் அவளிடம் சற்று நேரம் கர்ணனையும், ஆதியையும் மாறி மாறிப் பார்த்தவள் அடுத்த நொடி “மாமா!.. ” என்று அவனை அடையாளம் கண்டு அவனிடம் ஓடினாள் .

எல்லோருக்கும் ஆச்சர்யமே.. அவர்கள் முழுதாக பேச ஆரம்பிக்கும் முன் அவர்களோடு கர்ணன் இருந்தது . இத்தனை வருடங்கள் கழித்து இன்று தான் பார்க்கிறான். ஆதி எதுவும் பேசவில்லை என்றாலும், அவன் கர்ணனிடம் அமைதியாக இருந்தான். ஆனால் அல்லி.. அது யாருமே எதிர்பாராதது.

“அல்லி!… ” என்று மற்றொரு கையால் அவளை அள்ளி தூக்கியவன் “என்னை நியாபகம் இருக்கா டா உனக்கு  ” என்றான்.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“ம்ம்.. தெரியும் மாமா ” என்று சமத்தாக பதில் சொன்னாள்.

இதையெல்லாம் வாசலில் நின்று பார்த்திருந்த  ராவண். “அவ என் பொண்ணு பழியோ, பாசமோ.. எதையும் மறக்க மாட்டா” என்றான்.

அவனைத் திரும்பிப் பார்த்த இளங்கிளியோ… “ம்ம்.. அவ என்னையும் மாதிரியும் தான்” என்றாள்.

“சரி டி.. ‘என்று வந்து அவள் தோளில் கையைப் போட்டுக்கொண்டான்.

“என் அண்ணா என்னை தாங்குறதைப் பார்த்துட்டு நீங்க உங்க தங்கச்சியை தாங்கப் போனீங்க. போன வேகத்துலையே திரும்பியும் வந்திருக்கீங்க.. ” என்று நக்கலடித்தாள்.

“அதுவா அக்கா, அங்க மித்ரா அவ புருஷனை கட்டிக்கிட்டு அப்படியே தூங்கிட்டு இருக்கா..  “என்று பின்னால் வந்தாள் கயல்.

“நீயும் அவளை பார்க்க போனியா கயல் ” என்றாள்.

“ஆமா அக்கா, உங்க வீட்ல எல்லாரையும் நம்ம டிரைவர்கிட்டே சொல்லி வீட்ல விட சொல்லிட்டு வந்தேன். சரி அப்டியே மித்ராவையும் பார்க்கலாம்னு போனேன் . அவ தூங்கிட்டா.. ” என்றாள்.

ஆதி, அல்லியுடன் சிறிது நேரம் நேரத்தைக் கடத்தியவன் “சரிம்மா நான் கிளம்பறேன் ” என்றான்.

“அண்ணா இங்க எங்க இருக்கீங்க ?” என்றாள் இளங்கிளி.

அவன் வீட்டு விலாசத்தை சொன்னவன் “டிஸ்சார்ஜ் எப்போ?” என்றான்.

“நாளைக்கு ” என்றாள்.

“சரி நீங்க வீட்டுக்குப் போனதும் அம்மாவை அழைச்சிட்டு வரேன்  “என்றவன் “வரலாம் தானே.. ” என்றான் சற்று யோசித்து.

“ஹே கர்ணா! என்ன இது. அழைச்சிட்டு வா… ” என்றான் ராவண்.

அவனே சொல்லிவிட்ட பின் என்ன தயக்கம் ராவணை சற்று நெகிழ்வோடு பார்த்த கர்ணன் “தேங்க்ஸ் ” என்றான்.

“ம்ம்.. ” என்ற ராவண் “நீ இங்க பிசினஸ் பண்றேன்னு சொன்னியே. அதுவும் ஹெல்ப் வேணும்னா சொல்லு” என்றான்.

“ஓகே” என்றவன் தன் பிசினஸ் கார்டை எடுத்து நீட்ட..

அதை வாங்கி சாதாரணமாகப் பார்த்த ராவண் கருப்பு நிற மார்பில் கார்டில் பொன்னிறத்தில் பொறிக்கப்பட்டிருந்த கர்ணனின் கம்பெனி பெயரை படித்ததும் விழிகள் தாங்க விரிந்து கொண்டது .

சட்டென அவனை நிமிர்ந்து பார்த்தவன் “அட்லி அந்த கம்பெனி உன்னோடதா! ” என்றான் ஆச்சர்யமாக,

அதைக் கேட்டதும் வேகமாக ராவனிடம் வந்த ராஜ் “அண்ணா, நாம் ஆபீஸ்ல பேசிட்டு இருந்த கம்பெனி இவரோடதா?” என்றான் அவனும் ஆச்சர்யமாக,

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

“என் கம்பெனி பத்தி உங்களுக்குத் தெரியுமா?” என்றான் கர்ணன் ஆச்சர்யமாக ,

“வெஸ்ட் மாம்பழத்துல இருக்க பிளாக் ஸ்டோன் அப்பார்ட்மென்ட்டை நாங்க வாங்க இருந்தோம் . எங்களை விட ஒரு கம்பெனி அந்த அபார்ட்மென்ட்டை வாங்க விலை பேசுறதா உன் கம்பெனி பத்தி நியூஸ் வந்துச்சு. நீ தான் அந்த கம்பெனி வெச்சிருக்கென்றது சர்ப்ரைஸ் தான் எனக்கு” என்றான் ராவண்.

ராவண் நிறைய பிசினஸ் செய்கிறான் என்று தெரியும் அவனுக்கு ஆனால் கர்ணன் இருக்கும் அதே ரியல் எஸ்டேட் துறையில் ராவண் இருக்கிறான் என்று ஆச்சர்யம் ஆனவன்.

“எனக்கு எந்த பிரச்னையும் இல்ல மச்சான். அந்த இடம் சிட்டிக்கு நெருக்கத்துல இருக்குறதால எதிர்காலத்துல அது நல்ல விலைக்கு போகும்னு கணக்கு போட்டுத்தான் பேசினேன். உங்களுக்கு வேணும்னா அந்த அபார்ட்மெண்டை நீங்களே வாங்கிக்கோங்க , நான் வித்ட்ரா பண்ணிக்கிறேன்” என்றான்.

“நோ.. நோ.. எந்த ப்ரோபலமும் இல்ல. நீயே அதை வாங்கிக்கோ” என்று அவனுக்கு பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்தான் ராவண்.

“சரி அது என்ன அட்லீன்னு பேரு வெச்சிருக்க.. நான் கூட அட்லீயோட கம்பெனியா இருக்கும்னு அண்ணாகிட்டே சொல்லிட்டு இருந்தேன்” என்றான் ராஜ்.

“அவரோடது இல்ல. ” என்று சிரித்தவன் தன் கையில் இருந்த ஆதியை காட்டி இவங்க ரெண்டு பேரோட முதல் எழுத்து ‘A A என் அம்மா பேரோட முதல் எழுத்து T” என்று அடுத்து சொல்ல வர..

“அப்போ கடைசி இருக்க L I அல்லி பேரோட கடைசி எழுத்தா?” என்றான் ராஜ்,

“ம்ம்ம்.. ஆமா ” என்று கர்ணன் சிரிக்க..

தன் குழந்தைகள் மீது எவ்வளவு பாசம் வைத்திருந்தாள் கர்ணன் தன் கம்பெனிக்கு தன் பிள்ளையின் பெயர்களை வைத்திருக்கிறான் என்று நினைத்து இளங்கிளியும், ராவணும் ஒருவரை ஒருவர் நெகிழ்சியாகப் பார்த்திருந்தனர்.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.