மூர்க்கன் 26
“என்னம்மா பண்ணிட்டு இருக்க?” என்று குரல் கேட்டு பின்னால் திரும்பிப் பார்த்தாள் இளங்கிளி.
அங்கே சிரித்தமுகமாக நின்றிருந்தார் பரிமளா. அவர் அருகே மீனாட்சி நின்று இருக்க..
இருவரையும் அங்கு அதுவும் இந்த நேரத்தில் பார்த்தவளுக்கு எதுவும் புரியவில்லை.
“அத்…” என்று அழைக்க வந்தவள் “வேலை எல்லாம் முடிஞ்சுது ஆதிக்கும், அல்லிக்கும் சுடுதண்ணி வெச்சிட்டு இருக்கேன்” என்றாள்.
“அவங்களைப் பத்தி தான் உன்கிட்டே பேச வந்தேன் ” என்றார் சற்று தயக்கத்தோடு.
“ஏன் தயங்குறீங்க? எதுவா இருந்தாலும் சொல்லுங்க ” என்று பிளாஸ்கில் சுடுநீரை ஊற்றியவள் அதை எடுத்துக்கொண்டு அவர்கள் முன் வந்து நின்றாள்.
மீனாட்சியும், பரிமளாவும் ஒருவரை ஒருவர் மீண்டும் பார்த்துக்கொண்டனர் .
அவர்கள் எதையோ கேட்கத் தயங்குவதை அறிந்தவள் “பரவால்ல கேளுங்க நான் எதுவும் நினைக்க மாட்டேன் ” என்றாள் மீண்டும்.
“அது.. அது வந்து அன்னிக்கு நான் ஆதியையும், அல்லியையும் எங்களோட தூங்க அழைச்சிட்டுப் போனேனே ” என்றார் பரிமளா .
“ஆமா நானே கேக்கணும்னு நினைச்சேன். அன்னிக்கு நைட் ரெண்டு பேரும் இடையில எதுவும் எழுந்துகளையா? உங்களுக்கு தொந்தரவு எதுவும் கொடுத்தார்களா?” என்றாள்.
“ச்சேச்சே ரெண்டு பேரும் சமத்துக் குட்டிங்க , நைட் முழுக்க கதை சொல்லுங்க பாட்டி … உப்பு மூட்டை தூக்குங்க தாத்தான்னு எங்களைத் தூங்க விடலையே..” என்று ஆர்வத்தில் உளறிவிட..
“அச்சோ! நீங்க அப்பவே என்கிட்டே கொண்டு வந்து விட்டிருக்கலாமே . என்கிட்டே வந்தா அமைதியா தூங்கிருவாங்க” என்றாள்.
“இல்லம்மா எங்களுக்கு நைட் தூங்கவே ரொம்ப நேரம் ஆகும். அவர்களோடு பேசி விளையாடிட்டு அவங்களை தூங்க வைக்குற அப்போவே நாங்களும் தூங்கிடறோம். அதுவும் நிம்மதியா ” என்றார் பரிமளா.
“என்னங்க அண்ணி நீங்க எதுக்கு இவ்ளோ தயங்குறீங்க.. நம்ம பொண்ணு தானே கனிமொழி அவகிட்டே கேக்குறதுக்கு என்ன ” என்ற மீனாட்சி. “அது ஒண்ணுமில்ல கனி நாங்க தூங்க ரொம்ப நேரம் ஆகுமா.. அதான் இன்னிக்கு ஒரு நாளைக்கு மட்டும் உன் பசங்களை எங்ககூட தூங்க வெக்கலாம்னு.. “என்று மீனாட்சியும் தயங்க.
“உன்கிட்டே என்ன கேட்டுட்டுகிட்டு என் பேரப்புள்ளைகளை நான் கூட்டிட்டுப் போறேன் ” என்று சொல்லவேண்டிய இடத்தில் இருப்பவர்கள் இன்று தன்னிடம் கேட்க தங்கிக்கொண்டு நிற்பதை நினைக்கையில் இளங்கிளியின் மனம் பாரம் ஆனது. ஒரு மாதிரி இதயம் பிசைந்தது அவளுக்கு. அதை காட்டிக்கொள்ளாமல் மென்மையாக சிரித்தவள் “இதுக்கு ஏன் தயங்குறீங்க .. நீங்க ஊருக்கு போற வரைக்கும் அவங்களை உங்க கூடவே தூங்க வெச்சுக்கோங்க.. நான் எதுவும் சொல்லல.. ” என்றாள்.
இளங்கிளி சம்மதித்ததும் பரிமளாவிற்கும், மீனாட்சிக்கும் அவ்வளவு சந்தோஷம் “சரிம்மா ” என்று இருவரும் சிரித்த முகமாக சொன்னவர்கள் “ரெண்டு பேரும் ஹால்ல தான் விளையாடிட்டு இருக்காங்க.. நாங்க அப்படியே எங்க ரூமுக்கு கூட்டிப்போறோம் ” என்றார் பரிமளா.
“ம்ம்.. சரிங்க.. ” என்றவள் “அவங்களுக்கு நைட் குடிக்க பால் மட்டும் ஊத்தி கொடுக்கிறேன் ஒரு நிமிஷம் இருங்க,.. “என்றவள் பாலை காய்ச்ச ஆரம்பித்தாள்.
“அண்ணி நான் இன்னிக்கு அல்லியை என்னோட படுக்க வெச்சுக்கிறேனே.. அவர் மேல படுத்துட்டு அன்னிக்கு பூரா பேசிட்டே இருந்தா.. அவருக்கு அவ்ளோ சந்தோசம் ” என்றார் மீனாட்சி.
“இல்ல இல்ல.. அல்லியை நான் கூப்பிடுகிறேன். அவ சமத்துப் பொண்ணு.. அவ என்கிட்டே நல்லா ஓட்டிகிட்டா “என்று பரிமளா மறுப்புக்கு கூற..
“ஒரு நாளைக்கு அல்லி என்கூட தூங்கட்டும், இன்னொரு நாள் ஆதி தூங்கட்டுமே..” என்றார் மீனாட்சி.
“அதுக்கில்ல மீனாட்சி.. ” என்று பரிமளா பேச வர..
“அப்போ விடுங்க நான் என் ரெண்டு பேரப் பசங்களையும் என்னோடவே வெச்சுக்கிறேன். நீங்க நாளைக்கு அவங்களை உங்க கூட தூங்க வெச்சுக்கோங்க ” என்றார் மீனாட்சி.
அவர் பேரப் பசங்க என்று சொன்னதும் பாலை ஆற்றிக்கொண்டிருந்த இளங்கிளியின் கை அபப்டியே நின்றது. அவர்களையம் அறியாமல் ஆதி, அல்லியின் மீதிருந்த உரிமை வெளிப்பட்டிருக்க.. அதை தாமதமாகப் புரிந்து கொண்ட இருவரும் ஒரு நிமிடம் அதிர்ந்து திரும்பிப் பார்க்க.. இளங்கிளியோ அவர்கள் பேசியதைக் கேட்காதது போல பாலை மீண்டும் ஆற்ற ஆரம்பித்தாள்.
“மீனாட்சி இப்படி தான் உளறிக் கொட்டுவியா? நல்லவேளை உன் பொண்ணுக்கு நாம பேசினது கேக்கல..” என்ற பரிமளா. “நம்ம சண்டையை வெளிய போய் வெச்சுப்போம், நம்ம பேசுறதைக் கேட்டு பசங்களை நம்ம கூட தூங்க அனுப்பமாட்டேன்னு சொல்லிறப்போரா ” என்றார் ரகசிய குரலில்.
“ஐயோ! நான் வேணும்னு பேசல அண்ணி. அதுவா வந்திருச்சு. . நான் என்ன பண்ணுவேன் ” என்றவர் “நம்ம போய் ஆதிகிட்டேயும், அல்லிகிட்டேயுமே கேப்போம் யார் வந்து நம்ம கூட தூங்குறேன்னு சொல்றங்களோ அவங்களை கூப்டுக்கலாம். எதுக்கு நமக்குள்ள தேவையில்லாத சண்டை ” என்று அவரும் ரகசியம் பேச..
இவர்கள் பேசிய ரகசியத்தை அங்கே ஒருத்தி தெளிவாகக் கேட்டுக்கொண்டிருக்கிறாள் என்று அறிந்திராமலே இருவரும் பேசிக்கொண்டிருக்க.. பாலை ஆற்றி இரண்டு பிளாஸ்குகளில் ஊற்றி எடுத்து வந்தவள் இருவரிடமும் ஆளுக்கு ஒன்றை நீட்டி “ரெண்டு பேரும் அல்லியை கூட வெச்சுக்கிறதுலையே இருக்கீங்களே.. ஏன் ஆதி வேணாமா?” என்றாள்.
“அச்சோ! ஆதி மேல எங்களுக்கு என்னங்க கோபம்? அவன் ரொம்ப நல்லப் பையன் தான்.. ஆனா…” என்று தயங்கிய பரிமளா, சற்று சுதாரித்துக்கொண்டு பேசத் தொடங்கினார்.
“ஆனா என்னம்மா?” புன்னகையுடன் கேட்டாள் இளங்கிளி.
“அது வந்தும்மா… இவன் பெரிய மனுஷன் மாதிரி பண்ற சேட்டைகள் இருக்கே, தாங்கவே முடியல!” என்று தன் சிரிப்பை அடக்கிக்கொண்டே தொடர்ந்தார் பரிமளா. “நேத்து ராத்திரி என்ன பண்ணான் தெரியுமா? எனக்குத் தூக்கம் கண் சொக்கி வந்துடுச்சு. ஆனா இவன் என்னன்னா, என் மூக்குக் கண்ணாடியை எடுத்து அவன் மூக்குல மாட்டிக்கிட்டு, ‘பாட்டி… நான் தான் பெரிய தாத்தா, சீக்கிரம் எனக்கு காபி கொண்டு வா’ன்னு உக்காந்துக்கிட்டு சண்டை பிடிச்சான்! ஒரு வயசுப் பையன் பண்ற கூத்த பாரேன்” என்று சிரித்தார்.
“அதுமட்டுமா என்கூட இருந்த அப்போ என்ன பண்ணான் தெரியுமா? பக்கத்துல கிடந்த தலையணை பூரா எடுத்து வரிசையா அடுக்கி வச்சுட்டு, இதுதான் என்னோட கார், எல்லாரும் வந்து இது மேல உக்காருங்க நான் கார் ஓட்டுறேன்னு சொல்றான். நீயே சொல்லு என் வயசுக்கு அவன்கூட நான் தலையணையில் உக்காந்து விளையட முடியுமா?” என்றவர் “ஆனா நம்ம அல்லி குட்டி பாவம், அவ அமைதியா கொஞ்ச நேரம் எங்ககிட்ட கதையைக் கேட்டுட்டு இருப்பா. அப்பறோம் கொஞ்ச நேரத்துல தூங்கிருவா.. இவன் இருக்கானே ஆதி.. எங்களையும் தூங்க விடறது இல்ல.. அல்லியையும் தூங்க விடாம அவளைத் எழுப்பி விளையாடச் சொல்லிட்டே இருப்பான். அதான் அவன்கிட்ட கொஞ்சம் பயம்!” என்றார்.
இளங்கிளிக்கு தன் பிள்ளைகளின் குறும்பைக் கேட்டு நெஞ்சுக்குள் அவ்வளவு பூரிப்பு. இத்தனை நாள் அவர்கள் செய்த சேட்டைகளை எல்லாம் ரசித்திருக்கிறாள் . ஆனால் தன் குடும்பம் அவர்களைப் பற்றி சிலாகித்துப் பேசியதை கேட்டு முகம் மலரச் சிரித்தவள், “அவனைத் தூங்க வைக்குறது தான் பெரிய விஷயமே.. அப்படி அவன் தூங்க அடம் பண்ணினானு வைங்க.. அவன்கிட்டே, ‘ஆதி குட்டி… உன்னோட கார்ல பெட்ரோல் தீர்ந்துடுச்சு, அதனால அது கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கப் போகுது, நீயும் கண்ணை மூடி ரெஸ்ட் எடு’ன்னு சொல்லுங்க… உடனே அமைதியா தூங்கிருவான்!” என்றுவிட்டு இருவரையும் அனுப்பி வைத்தாள்.
இளங்கிளி சொன்னதைக் கேட்டு முகத்தில் வியப்புடன் சிரித்தபடியே பரிமளாவும், மீனாட்சியும் “சரிம்மா, நாங்க போய் பார்க்கிறோம்” என்று ஹாலை நோக்கி விரைந்தனர்.
அங்கே ஹாலில் தரையில் கிடந்த தலையணைகளைக் கார் போல வரிசையாக அடுக்கி வைத்துவிட்டு, அதன் நடுவே உட்கார்ந்து கொண்டு “பீப்… பீப்…” என்று தன் மழலை மொழியில் சத்தம் போட்டுக் கொண்டிருந்தான் ஆதி. அவனுக்கு அருகில் அமர்ந்து அவனது பிளாஸ்டிக் பொம்மையை வைத்துத் தலையைச் சீவி விட்டுக் கொண்டிருந்தாள் அல்லி
பேரக் குழந்தைகளைக் கண்டதும் பரிமளாவின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிவது போல் ஒரு பிரகாசம் வந்தது. மீனாட்சியும் தன் பங்கிற்கு ஆதியை வாரி அணைத்துக் கொள்ள ஆசையாகக் கைகளை நீட்டினார்.
“டேய் ஆதி குட்டி… பாட்டி கூட யார் வர்றீங்க? கதை கேளுங்கன்னு அடம் பிடிக்கப் போறீங்களா, இல்லை கார் ஓட்டிட்டே தூங்கப் போறீங்களா?” என்று செல்லமாகக் கேட்டுக் கொண்டே அவர்களை நெருங்கினார் பரிமளா.
அவர் கேட்டதும் சட்டெனத் திரும்பிப் பார்த்த ஆதி, தன் குறும்புப் பார்வையை வீசிவிட்டு, “பாட்டி… கார்… வாவ்!” என்று கையைத் தட்டியபடி ஓடி வந்து பரிமளாவின் கால்களைக் கட்டிக்கொள்ள, அல்லியோ மீனாட்சியின் தோளில் சவாரி செய்யத் தாவினாள். பாட்டிகளோ தங்கள் சண்டைகளை மறந்து, ஆளுக்கு ஒருவரை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றுவிட்டனர்.
இங்கே அவர்களை அனுப்பிவிட்டு தன் அறைக்கு வந்த இளங்கிளி சேலையை எடுத்துக்கொண்டு குளிக்க சென்றவள் குளித்து முடித்து சேலையை சுற்றிக்கொண்டு வீட்டிற்குள் நுழைய அங்கே நம்ம ஹீரோ தலைக்கு கை கொடுத்து படுத்திருந்தான்.
அவனைப் பார்த்ததும் அதிர்ந்த இளங்கிளி பின் சுதாரித்துக்கொண்டு அறைக்கதவை பூட்டிவிட்டு உள்ளே வந்தாள்.
அவளை இதழ்களின் ஓரம் குறும்பு சிரிப்புடன் பார்த்தபடி “என்ன டி சிணுங்கி.. நான் வருவேன்னு குளிச்சு பிரெஷா வரியா ” என்று எழுந்து அமர்ந்தான்.
அவனை முறைத்துவிட்டு தலையில் சுற்றி இருந்த டவலை அவிழ்த்தவள் தலையை துவட்டிக்கொண்டே.. ராவணை சட்டை செய்யாமல் உடை மாற்ற ஆடையை எடுக்க அவனைத் தாண்டி செல்லப்போனாள்.
அவள் கையைப் பற்றி இழுத்து தன் மடியில் அமர வைத்தவன் “நான் பேசிட்டு இருக்கேன். என்னை சட்டையே செய்யாம போற நீ.. ” என்றான்.
“ம்ம்.. டிரஸ் மாத்த போகணும் விடுங்க என்னை” என்று அவன் மடியில் இருந்து எழப்போனாள்.
அவளை இழுத்து மீண்டும் தன் மடியில் அமர்த்திக்கொண்டவன் “அதை எதுக்கு இப்போ தேவையில்லாம மாத்திட்டு இருக்க.. இப்போ நீ கட்டி இருக்க சேலைக்கே இன்னும் கொஞ்ச நேரத்துல விடுதலை கொடுக்கப் போறேன் ” என்றான்.
தன்னை வளைத்துப் பிடித்திருந்த ராவணின் கையை பிரித்துவிட்டவள் திரும்பி அவனை முறைத்து “அதுக்கு வேற ஆளைப் பாருங்க.. ” என்றாள்.
“நீ இருக்க அப்போ நான் எதுக்கு டி வேற ஆளை தேடணும்” என்றவன் அவளை இழுத்து அவள் கழுத்தில் முகம் புதைத்தான்.
“ஹும்… விடுங்க. அதான் உங்க பொண்டாட்டி அந்த ரக்ஷனா இருக்காளே.. ” என்றாள்.
“என்ன டி காலையில ஈஸ்வர் பேசுவதை கேட்டு கடுப்பாகிட்டியா?” என்று போர்த்தி இருந்த சேலையையை லேசாக கீழே இறக்கி அவள் கூந்தலில் இருந்து விழுந்த நீர்த்துளி தோளில் இறங்க.. அதை தன் இதழ் கொண்டு பருகினான் ராவண் .
தன் கீழ் உதட்டை கடித்து மோகம் அடக்கியவள் “அவ பண்ணின காரியத்துக்கு இந்நேரம் நீங்க அவளை கொன்னு போட்டிருக்கம். ஆனா நீங்க என்ன பண்ணி வெச்சிருக்கீங்க. ” என்று சீறினாள் இளங்கிளி.
தான் பார்த்த இளங்கிளி இவள் இல்லை என்று இந்த நான்கு நாட்களிலேயே தெரிந்து கொண்டான் ராவண். அவள் கோபம், பிடிவாதம் எல்லாம் புதிதாக இருந்தது அவனுக்கு. அவள் கடந்து வந்த பாதையினால் ஏற்பட்ட மற்றம் இது என்று அவன் அறிவான்.
அவளை இருக்க அணைத்தவன் “இங்க பாரு நான் எது செய்தலும் ஒரு கரணம் இருக்கும்னு தெரியும் தானே உனக்கு. அதனால அந்த ரக்ஷனா விஷயத்தை நீ மனசுல போட்டு டென்ஷன் ஆகாத ” என்றவன் “ஏய் பொண்டாட்டி.. நான் எவ்ளோ நாளா நீ இல்லாம தவிச்சேன் தெறியுமா டி… உன்னை நினைச்சு நினைச்சு தினமும் நானே என்னை சமாதானம் செய்துக்க வேண்டி இருக்கு. நான் இல்லாம உன்னையே நீயும் சமாதானம் செய்துகிட்டியா?” என்று கிண்டலாகக் கேட்டான்.
“ச்சீ!.. என்ன இது இப்படி எல்லாம் பேசுறீங்க.. ரொம்ப மோசம் ஆகிட்டீங்க நீங்க. தப்பு தப்பா பேசிக்கிட்டு.. ” என்று அவன் தோளில் செல்லமாக அடித்தாள் இளங்கிளி.
“இதுல என்ன இருக்கு. புருசனும், பொண்டாட்டியும் அதிகம் பிரிஞ்சு இருக்க சமயத்துல ஒருத்தரை நினைச்சு ஒருத்தர் அவங்க தேவைகளை அவங்களே தீர்த்துகிறதுல என்ன தப்பு கண்டு பிடிச்ச நீ.. வெளியூர்ல.. வெளிநாட்டுல இருக்க புருஷன் , பொண்டாட்டிங்களைப் போய் கேட்டுப்பாரு அவங்க சொல்லுறவங்க என்ன எல்லாம் பண்ணினாங்கனு ” என்று ராவண் கண்ணாடிக்க..
“போங்க இதெல்லாம் யாராவது கேப்பாங்களா?” என்று அவள் சிணுங்கினாள்.
“சும்மா சொன்னேன் டி.. அவங்ககிட்டே கேக்க முடியாது, ஆனா உன்கிட்டே கேக்கலாம் தானே நான் ” என்று இறுக்கமாக அணைத்து அவள் கன்னத்தில் தன் கன்னம் உரசியவன் “சொல்லு என்னோட நினைப்பு வந்த அப்போ நீ என்ன பண்ணின.. ” என்றான். “அழுதேன்.. ” என்று அவளிடம் இருந்து அழுத்தமாக பதில் வந்தது.
இளங்கிளியின் குரலில் இருந்த மாற்றத்தை உணர்ந்தவன் “எனக்கு உன்னோட வலி புரியுது டி.. நான் இல்லாம நீ எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பேனு எனக்கு நல்லாவே புரியுது “என்றவன் அவளைக் கட்டிக்கொண்டு அப்படியே அமர்ந்து இருக்க..
இளங்கிளியும் ராவணின் தோளில் அபப்டியே சாய்ந்து அமர்ந்துவிட்டாள்.
நீண்ட நேரம் அப்படியே அமர்ந்து இருக்க.
“இன்னிக்கு முழுக்க இப்படியே என்னை காக்க வைக்கப் போறியா?” என்றான் ஏக்கமாக.
அவனுக்கு முதுகு காட்டி அமர்ந்து இருந்தவள் முகத்தை திருப்பி அவன் கன்னத்தில் முத்தம் வைத்து “நான் உங்களை வெயிட் பண்ண சொல்லவே இல்லையே.. ” என்றாள்.
அதை சொன்னது மட்டும் தான் அவளுக்கு நினைவில் இருக்கிறது… அவளிடம் இருந்து சம்மதம் வந்த மறுநொடி அவளைக் கீழே படுக்கவைத்து அவள் மேல் படர்ந்து முத்தம் பதித்துக்கொண்டிருந்தான் ராவண்.
அடுத்த எபி இன்னிக்கு படிக்க நினைக்குறிங்களா? அப்போ கமெண்ட் பண்ணுங்க . மூர்க்கன் அடுத்த எபி ரொமான்டிக் தூக்கலா வரப்போகுது படிக்க ரெடியாகிக்கோங்க. தடவை எப்போன்னு நான் வாட்ஸாப்ப் சேனலில் அப்டேட் பண்றேன்
