News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

மூர்க்கன் 51

by Sinamika Writes
1.2K views
A+A-
Reset

மூர்க்கன் 51

பள்ளியில் குழந்தைகளை கொண்டு வந்து அவரவர் வகுப்பில் விட்ட பின்னர் தன்னுடைய அறைக்கு சென்றாள் மித்ரா.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

“மேடம் அடுத்த மாசம் சரஸ்வதி பூஜை வருது அன்னிக்கு நியூ அட்மிஷன் போட , குழந்தைகளை நம்ம ஸ்கூலில் சேர்க்க விளம்பரம் பண்ணனும்.,” என்றாள்.

“ம்ம்.. சரி பிருந்தா அதுக்கான வேலையை நீயே பார்த்துடு. ஓர் அளவுக்கு வசதியானவங்க அட்மிஷன் போட வந்தா அவங்ககிட்டே நோர்மல் பீஸ் சொல்லிடு, அண்ட் கஷ்டப்படற பேமிலி , வசதி இல்லாதவங்க இவங்க வந்த சும்மா பேருக்கு ஒரு பீஸ் ஸ்ட்ரக்ச்சர் கொடுத்திரு ” என்றாள்.

“ஓகே மேடம் ” என்றவள் அங்கேயே நிற்க.

“என்ன பிருந்தா வர எதுவும் கேட்கணுமா?” என்றாள்.

“ஆமா மேடம் “என்றாள் சற்று தயங்கி.

“சொல்லு ” என்று தன் லேப்டாப்பை ஆன் செய்துகொண்டே கேட்டாள்.

“மேடம் அது வந்து, வசதி இல்லாதவங்க வந்தா பிரீயாவே படிக்க அட்மிசன் போடாம ஏன் பேருக்கு பீஸ் வாங்குறீங்க ” என்றவள் “உங்ககிட்டே இருக்க வசதிக்கு நீங்க ப்ரீயாவே ஸ்கூல் நடத்தலாம். ஆனா ரெண்டு விதமா பீஸ் எனக்கு அது தான் கன்பியூஷன்  இருக்கு” என்றாள்.

“நீ சொல்றதும் சரி தான் பிருந்தா. வசதி இருக்கவங்ககிட்டே அவங்க வசதியை காரணம்  காட்டி  அதிக பீஸ் வாங்குறதுல எனக்கு விருப்பம் இல்ல. அதே போல வசதி குறைவா வருவாங்ககிட்டே ப்ரீயா படிப்பு கொடுக்கிறோம்னு சொன்னா.. அவங்க அதனால பயனடைவாங்க தான். ஆனா மத்த பேரன்ட்ஸ் அதையே அவங்களுக்கு எதிரா நினைச்சு நம்ம ஸ்கூலோட கல்வி தரத்தை குறைவா மதிப்பிட வாய்ப்பு இருக்கு. அது மட்டும் இல்ல இலவசமா கொடுக்குற எந்த ஒரு பொருளுக்கும் மதிப்பு இல்ல . அது படிப்பாவே இருந்தாலும்.. “என்றவள்.

“அவர்களால் குடுக்க முடியுற பீஸ் அவங்களுக்கும் அது நிறைவா இருக்கும், நம்ம ஸ்கூலோட தரம் மாறாம எல்லாருக்கும் ஒரே போல தான் கல்வி கொடுக்கிறோம்னு ஒரு நல்ல பேரும் அதுவும் எல்லாருக்கும் ஒரே போல படிப்பு கொடுக்குறதுங்கிறது நல்லது தானே ” என்றாள்,.

“நீங்க சொல்றதும் சரிதான் மேடம்.  நான் நம்ம ஸ்கூல்க்கு ஆட் கொடுக்க ஏற்பாடு செய்றேன் ” என்று த்ரிப்தியாக அங்கிருந்து சென்றிருந்தாள்.

அவள் சென்றதும் தன் வேளையில் மும்முரமானாள் மித்ரா.

மதியம் பன்னிரண்டடு மணி இருக்கும் ராஜ்ஜிடம் இருந்து அவளுக்கு கால் வந்தது.

“சொல்லு ராஜ்” என்று போனை அட்டென்ட் செய்து காதில் வைத்தாள்.

“நானும், அண்ணாவும் வீட்டுக்கு கிளம்பறோம். நீயும் வந்திரு நாம லன்ச் முடிச்சிட்டு ஹாஸ்பிடல் போகலாம் ” என்றான்.

“ம்ம்.. ஓகே நான் ஒரு டென் மினிட்ஸ்ல கிளம்பறேன் ” என்றவள் போனை வைத்துவிட்டு குழந்தைகளை தன்னோடு வீட்டிற்கு அழைத்து செல்ல அவர்கள் வகுப்பிற்கு சென்றாள்.

முதலில் சென்றது யசுவின் வகுப்பிற்கு தான். அவள் சத்தமில்லாமல் ஜன்னல் வழியே யசு என்ன செய்கிறாள் என்று எட்டிப் பார்த்தாள்.

வகுப்பறையின் ஓரத்தில் இரண்டு ஜோடி கண்கள் ஒரு பென்சிலை மையமாக வைத்து முறைத்துக் கொண்டிருந்தன.

“அஞ்சு.. ஏய் அஞ்சு அது என்னோட பென்சில்டி.. கொடு,” என்று குரலில் சிறு அதட்டலோடு கையை நீட்டினாள் யசு.

” பொய் சொல்லாத யசு! இது என்னோட பாக்ஸ்லதான் கிடந்தது,” என்று அஞ்சலியும் விட்டுக் கொடுக்காமல் பென்சிலைப் பிடித்து இழுத்தாள்.

“ஏய் விடுடி.. என்கிட்டே இருக்கறதே ரெண்டு ப்ளூ கலர் பென்சில். நீ எப்போ பார்த்தாலும் என்னோடதைத்தான் எடுப்ப. உனக்குத்தான் இன்னைக்கு காலையில உங்க அம்மா புது பென்சில் பாக்ஸே வாங்கித் தந்தாங்களே! என்கிட்டே நீ தானே காட்டின..  அப்பறோம் எதுக்கு டி நான் வாங்கி  வெச்சிருந்த பென்சிலை எடுத்த.. ” என்றுஅவள் கையில் இருந்த பென்சிலை விடாமல் இழுத்தப்படி அவளை யசு முறைக்க,

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“ஏய் இது ஒன்னும் உன்னோட பென்சில் இல்ல .. இது என்னோடதுதான்!” என்று அஞ்சு பிடிவாதமாக மறுக்க, இருவருக்கும் இடையே அந்த பென்சிலுக்காக சின்னதாய் ஒரு யுத்தமே நடந்தது.

சிறிது நேரத்தில் யசுவின் பிடிவாதம் ஜெயிக்க, அஞ்சுவிடம் இருந்து அந்தப் பென்சிலைப் பிடுங்கியவள் நேராக அவள் இருக்கையிக்கு முன்னே இருந்த குட்டி சேரில் அமர்ந்து இருந்த தாராவிடம் சென்றவள் “தாரா இந்தா இது உனக்கு தான். நான் என் அம்மாகிட்டே சொல்லி உனக்காக வாங்கினேன்” என்று அவள் கையில் பென்சிலை திணித்தாள்.

அந்த புது பென்சிலைக் கண்டதும் தாராவின் முகம் அவ்வளவு சந்தோசமானது.. இதைக் கவனித்துக் கொண்டே வகுப்பிற்குள் நுழைந்த மித்ராவின் முகத்தில் மெல்லிய புன்னகை தோன்றி மறைந்தது.

யசுவைக் கூட்டிக்கொண்டு வெளியே வந்த மித்ரா “யசு… கிளாஸ்ல என்னது அஞ்சு கூட அந்தப் பென்சிலுக்காக அப்படி ஒரு சண்டை? உன்கிட்டதான் நிறைய பென்சில் இருக்கேம்மா, அப்புறம் ஏன் அவகிட்ட அவ்வளவு சண்டை போட்ட? அப்பறோம் அதே பென்சிலை உன்னோட கிளாஸ் மேட் தாராவுக்கு ஏன் கொடுத்த?”  என்றாள்.

அதைக் கேட்டதும் யசுவின் முகம் லேசாகச் சுருங்கியது.

“அத்தை … அஞ்சுக்கிட்ட நிறைய பென்சில் இருக்கு. அவங்க அம்மா அவளுக்கு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாங்க. ஆனா, தாரா பாவம்லமா? அவகிட்ட இருக்கற ஒரே ஒரு பென்சிலைக் குட்டியா சீவி சீவித்தான் எழுதுவா. அவளுக்குப் புது பென்சில் வாங்க வசதியில்லை. அதான் அஞ்சுக்கிட்ட சண்டை போட்டுக் வாங்கி தாராக்குக் கொடுத்துட்டேன்!” என்று யஷ்வந்திகாவின் முகத்தில் ஒரு பெருமிதம் குடிகொண்டிருந்தது.

அவளை ஒரு நொடி ஆச்சரியமாகப் பார்த்த மித்ரா, அவளின் அந்தப் பகிர்ந்தளிக்கும் மனசைக் கண்டு நெகிழ்ந்து போனாள். சிறு வயதிலேயே அடுத்தவர்களின் கஷ்டத்தைப் புரிந்து கொள்ளும் விதம் அப்படியே கயலைப் பார்ப்பது போன்று இருந்தது அவளுக்கு.

“அத்தை இன்னிக்கு லீவா? வீட்டுக்கு போறோமா நாம ” என்றாள் ஆர்வமாக,

“ஆமா டா.. ஈஸ்வர் மாமாவுக்கு இன்னிக்கு ஒரு செக் அப் இருக்கு அதுக்காக அத்தையும் உன் அப்பா, பெரியப்பா எல்லாரும் போறோம். எப்பவும் நான் தானே உங்களை ஸ்கூல்ல இருந்து கூட்டிப் போவேன். அதான் இன்னிக்கு ஹால்ப் டே லீவ் போட்டு உங்களை கூட்டிப்போறேன் ” என்று அவளுக்கு பதில் சொன்னபடியே ஆதி,அல்லி இருக்கும் க்ளாஸிற்கு சென்றாள்.

அங்கே அவள் வரும் முன்னேயே தங்கள் திங்க்ஸ்களை பேக் செய்து மித்ராவுடன் செல்ல தயாராக இருந்தனர் இருவரும்.

இருவரையும் அழைத்துக்கொண்டு வெளியில் வந்தவள் “நான் உங்களை லீவ் போட்டு வீட்டுக்கு கூட்டிப் போறேன்னு சொல்லவே இல்லையே. அப்பறோம் எப்படி ரெண்டு பேரும் ரெடியா இருந்திங்க ” என்றாள்.

“அத்தை அப்பா உன்கிட்டே இன்னிக்கு ஈஸ்வர் மாமாவை ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போலாம்னு சொன்னாரே.. நாங்க.. நாங்க அதை கேட்டுட்டோம். நீங்க மாமாவை ஹாஸ்பிடல் கூடிப்போற அப்போ உங்க கூட நாங்களும் வரனும்ல அதான் ரெண்டு பேரும் ரெடியா இருந்தோம் ” என்றாள் அல்லி.

“அத்தை நீ மாமாகூட ஹாஸ்பிடல் போய்ட்டு வந்து திரும்ப எங்களை வீட்டுக்கு கூட்டிப்போக நீங்க தானே வரணும். அதான் நானும் உங்க கூட இப்பவே வரேன் ” என்றான் ஆதி.

தன் அண்ணன்களின் மூன்று குழந்தைகளும் மூன்று வைரங்கள் மூவரும் அவரவர் குணத்தில் தங்கள் பெற்றோரை அப்படியே உரித்து வைத்திருந்தனர். அதை நினைத்து பெருமை கொண்டவளாக மூவருடனும் வீட்டிற்குக் கிளம்பினாள்.

வீட்டிற்கு வந்து சாப்பிட்டுவிட்டு ராவண் , ராஜ், மித்ரா மூவரும் ஈஸ்வரை வீல் சேரில் வைத்து வெளியே அழைத்து வர..

அப்போது வேகமாக அங்கே வந்து அல்லி “அத்தை நானும் வரேன் ” என்று வந்து அவள் கையை பற்றிக்கொண்டாள்.

“அல்லி அத்தை ஹாஸ்பிடல் போறாங்க டா.. நீ வா.. ” என்று அவளை அழைத்தாள் இளங்கிளி.

“அம்மா.. நான் அத்தை கூட தான் போவேன்.. அத்தை தனியா இருக்கும் ” என்று அவள் காலை விடாமல் கட்டிக்கொண்டாள் அல்லி.

“அடியே உன் அத்தை ஹாஸ்பிடலுக்கு போய்ட்டு சீக்கிரம் வந்திருவா டி.. எப்போ பாரு அத்தை அத்தைனு அவ பின்னாடியே சுத்திட்டு இருக்க வேண்டியது. அவளை கொஞ்ச நேரம் தான் விடறது.. ‘என்று தள்ளாடியபடி நடந்து வந்தார் வேதவள்ளி.

“போ அஜ்ஜி.. நான் அத்தை கூட தான் போவேன் ” என்று பிடிவாதம் செய்தாள் அல்லி.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“அல்லி! உன் அத்தைக்கு பையன் எதுவும் இருந்திருந்தா அவ பின்னாடியே சுத்துறதுல நியாயம் இருக்கு .. அவளுக்கு தான் அந்த கொடுப்பனையே இல்லையே..  கல்யாணம் ஆகி எவ்ளோ வருஷம் ஆச்சு. இ” என்றார் அவர்களின் உறவுக்கார பெண் ஒருத்தி. தங்கள் மகள் வளைகாப்பிற்கு பத்திரிக்கை வைக்க வந்தவர் சும்மா இருக்காமல் மித்ராவின் மனது புண் படும்படி பேசிவிட.. .

“பங்கஜம் எதுக்கு இப்படிப் பேசுற.. அவ நிலைமை தெரிஞ்சுமா இப்படி பேசுற நீ.. “என்று அவரை அதட்டினார் கமலா.

“என்ன நிலைமை கமலம் கல்யாணம் ஆகி முதல் ரெண்டு வருசத்துலையே புள்ளை பெத்திருந்தா இந்த நேரம் அதுவும்  இவங்களோட விளையாட்டிற்கும் இப்போ இவ புருசனும் இப்படி இருக்கார். இவர் என்னிக்கு சரியாகி வந்து என்னிக்கு இவ புள்ள பெக்குறது ” என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் பேசிவிட..

“பங்கஜம்.. “என்று பார்வதியின் குரல் அந்த ஹாலையே அதிர செய்தது.

“வந்தியா..பத்திரிக்கையை கொடுத்தியா.. கிளம்பி போயிட்டே இரு. என் மருமகளை பத்தி பேசுற உரிமை உனக்கு இல்ல தெரிஞ்சுக்கோ.. “என்று அவர் முன் வந்து நின்றார் பார்வதி.

“ம்கூம்.. நான் என்னவோ இல்லாததை சொன்னது போல இல்ல கோவப்படுறீங்க.. உன் மருமக பண்ணினது தான் ஊருக்கே தெரியுமே.. அவ ஒழுங்கா இருந்திருந்தா இந்த நேரம் இவ புருசனுக்கு இந்த நிலைமை வந்திருக்குமா ” என்று அப்போதும் பேசிவிட்டு தான் அங்கிருந்து கிளம்பி இருந்தார்.

இத்தனை நடந்தும் அமைதியாக நின்று இருந்த மித்ரா தன் முகத்தில் எந்த ஒரு உணர்வையும் காட்டிக்கொள்ளாமல் இருந்தாள்.

அவள் அருகே வந்த கயல் மித்ராவின் தோளில் கையை வைத்து “நீ ஹாஸ்பிடல் கிளம்பு மித்ரா ” என்றாள்.

“ம்ம்.. ” என்று அவளைப் பார்த்து மென்மையாக சிரித்த மித்ரா தன் காலை கட்டிக்கொண்டு மித்ராவையே கொஞ்சம் அதிர்ச்சியோடு  பார்த்துக்கொண்டிருந்த அல்லியை பார்த்தாள்.

“அத்தை கூட வரிங்களா குட்டி.. ‘என்றாள்.

“ம்ம்.. போலா அத்தை ” என்று அவள் சொல்ல..

அவளையும் தங்களோடு அழைத்துக்கொண்டு ஹாஸ்பிடல் கிளம்பி இருந்தனர்.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.