News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

மூர்க்கன் 59,உன் மோகன் மித்ரா நான்..

by Sinamika Writes
1.1K views
A+A-
Reset

மூர்க்கன் 59

பால்கனி கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தவன் தூங்கிக்கொண்டிருந்த மித்ராவை பார்த்துவிட்டு ஈஸ்வரை பார்த்தான்.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

“உன்னால.. உன்னால தான் டா நான் போட்ட பிளான் எல்லாம் கெட்டுப் போயிருச்சு. நீ பண்ணின வேலையால தான் நான் இந்த நிலைமைக்கு இருக்கேன் ” என்று தான் போட்டிருந்த முகமூடியைக் கழட்டியவன் முகம் ஒரு பக்க முகம் சிதைந்து போய் தீக்காயங்களோடு இருந்தது,

அவன் விழிகளில் தெரிந்த கொலை உணர்ச்சியைக் கண்டாள் நடுங்கித் தான் போவார்கள். அந்த அளவுக்கு அவன் முகம் இருக்க… அவன் உள்ளமும் அதை போலவே குரூர எண்ணத்தில் இருந்தது.

ஈஸ்வரை குத்துவதற்காக ஓங்கிய கை கீழே இறங்கி இருக்க..

உறங்கிக்கொண்டிருந்த மித்ராவோ சட்டென ஏதோ வித்யாசத்தை உணர்ந்தவள் விழித்துக்கொண்டாள். விழித்தவள் தலையை தூக்கிப் பார்க்க அங்கே கோர முகத்தோடு ஈஸ்வரை குத்த வந்தான் மோகன்.

அதைக் கண்டு அதிர்ந்தவள் “ஈஈ..ஸ்வர்ர்ர்ர்ர்.!” என்று கத்திகொண்டே ஈஸ்வரின் மேல் அவனுக்கு எதுவும் ஆகிவிடாதபடி படுத்துக்கொள்ள..

அவள் மேல் குத்த இருந்த கை ஒரு கால் வேகமாக வந்து ஓங்கி உதைக்க.. அது பறந்து போய் இருட்டுக்குள் அங்கே இருந்த சோபாவின் கீழே விழுந்துவிட..

தனக்கு எதுவும் ஆகவில்லை என்று உணர்ந்து தலையை நிமிர்த்தி மோகனின் பின்னால் பார்த்தாள் மித்ரா. அங்கே ஒரு காலை தரையில் ஊன்றி மறு காலை அந்தரத்தில் உயர்த்தியபடி கைகளை சண்டை போடத் தயார் என்ற ரீதியில் முகம் முழுதும் ஆக்ரோஷத்துடன் நின்று இருந்தால் இளங்கிளி.

வேதவள்ளிக்கு திடீர் என்று உடல்நிலை சரி இல்லாமல் போய் இருக்கவே.. அவரை பரிமளா டாக்டரிடம் அழைத்து சென்றிருக்க… தன்னோடு துணைக்கு இருக்க சொல்லி பார்வதியை அழைக்க வந்தவள். அனைவரும் தூங்கும் நேரமாதலால் சத்தமில்லாமல்  அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே வர..

அங்கே கையில் கத்தியை ஓங்கியபடி நின்று இருந்தவனைப் பின்னிருந்து பார்த்த இளங்கிளி நொடியும் தாமதிக்காமல் வேகமாக வந்தவள் குழந்தை பிறந்து ஒரு வாரம் தான் ஆகி இருக்கிறது என்றும் கூட யோசிக்காமல் கால்களை தரையில் ஊன்றி சுழன்று மேலே எழுந்து அவன் கையில் இருந்த கத்தியை காலாலேயே உதைத்து தட்டி விட்டிருந்தாள்.

“கிளி! ” என்று உணர்ச்சி போங்க நன்றியோடு கூடிய பார்வையை அவள் மீது பதித்தவள் . தன் பார்வையை அடுத்த நொடி அவள் முன் ஈஸ்வரை மீண்டும் கொல்ல வந்த மோகனை எரிப்பது போல் பார்த்தவள் வேகமாக தன் உயரத்திற்கு  மேலெழுந்து  நின்றவள் அடுத்த நொடி தன் இடது கையை கட்டிலில் ஊன்றி கால்கள் இரண்டையும் நிலத்தில் ஊன்றி உந்தித் தள்ளியவள் ஒரே தாவலில் ஈஸ்வரைத் தாண்டி மேலெழுந்து பறந்து வந்து மோகன் மார்பிலே உதைத்து தள்ளி கட்டிலுக்கு மறுபுறம் வந்து நின்றாள்.

அவள் உதைத்ததில் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு வேகமாக பின்னே சென்று கீழே தரையில் விழுந்தான் மோகன்.

துரித நேரத்தில் இரண்டு பெண்களின் தாக்குதலுக்கு உட்பட்டவன் நிலை குலைந்து தரையில் விழுந்திருக்க.. அங்கு என்ன நடந்தது என்று புரியவே அவனுக்கு நேரம் எடுத்து, தலையை உலுக்கி தன்னை சமன் செய்தவன் சுதாரித்துக்கொண்டு மேலே எழுந்தவனை மித்ராவும், இளங்கிளியும் பார்த்துக்கொண்டு நின்று இருந்தனர்.

அவன் மித்ராவைப் பார்த்துவிட்டு இளங்கிளியையும் பார்த்தவன் “என்ன மித்ரா என்னை தெரியலையா? நான் தான் உன்னோட மோகன் . உன்னையும் என்னையும் பிரிச்சு நம்ம ரெண்டு பேரையும் இந்த நிலைக்கு ஆளாக்கினானே இவன் உயிரோடவே இருக்கக் கூடாது. நீ நகரு.. ” என்று மீண்டும் ஈஸ்வரை கொல்வதற்காக அவனை நோக்கி வேகமாக சென்றான் மோகன்.

மித்ரவோ மோகனை பார்த்த அதிர்ச்சியில் இருந்தாலும், ஈஸ்வரை அவன் எதுவும் செய்துவிடுவானோ என்ற ரீதியில் கட்டிலின் அருகே கைகளை விரித்து ஈஸ்வரை மறைத்த படி நின்று இருக்க..

மோகன் கட்டிலை நெருங்குவதற்குள் இளங்கிளி அவன் முன் வந்து அவன் மார்பில் கை வைத்து பின்னே தள்ளியவள்  “என்னைத் தாண்டிப் போய் அவரைத் தொடுறா பார்க்கலாம் ” என்று அவன் முன் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நின்றாள்.

“ம்ம்ஹும்.. ” என்று நக்கலாக சிரித்தவன் “உன்னால என்னை என்ன பண்ண முடியும் . ஆப்டர் ஆள் நீ ஒரு பொம்பளை ” என்றவன் “அந்த ஐராவோட பொண்டாட்டி தானே நீ.. உன் மேல அப்போவே எனக்கு ஒரு கண்ணு இருந்துச்சு. என்னோட எல்லா பிளானையும் இந்த ஈஸ்வர் உள்ள பூந்து கெடுத்துட்டான். அவனால தான் இவ்ளோ வருஷம் நான் கஷ்டப்பட்டேன். அன்னிக்கு இவங்க ரெண்டு பேரும் அந்த மல்லிகைப் பந்தலில் ஒட்டி உறவாடிட்டு இருக்கறதைப் பார்த்து எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா” என்று கத்திகொண்டே சொன்னவன் வேகமாக இளங்கிளியை நோக்கி அவளை தாக்குவதற்க்காக வர..

இளங்கிளியும் அவனை தாக்க தயாரானாள் . அப்போது “டேய்.. ” என்று கத்திகொண்டே வந்த மித்ரா அங்கே இருந்த இரும்பு சேரை தூக்கி அவனைத் தாக்க..

தலையைப் பிடித்துக்கொண்டு மோகன் திரும்பி மித்ராவைப் பார்த்தவன் “என்ன மித்ரா , உன் மோகன் மித்ரா நான்.. ” என்றான்.

“மயிறு மோகன்.. யாரு யாருகிட்ட உரிமை கொண்டாடுறது ராஸ்கல் . உன்னால தான் டா என் ஈஸ்வர் இவ்ளோ வருஷமா கோமாவுல இருக்கார். “என்றவள் “கிளி நான் அப்போவே சொன்னேனே என் ஈஸ்வரை அணிக்கு அந்த மல்லிகைப் பந்தல்ல வெச்சு அடிச்சது மோகன் தான்னு . ஆனா நான் சொன்னதை நீங்க யாருமே நம்பள.. இப்போ பாருங்க அவனே அவன் வாயால உண்மையை ஒத்துக்கிட்டான் ” என்றாள் .

அப்போது அங்கு நடந்த களேபரத்தில் தூக்கம் களைந்து வெளியே எழுந்து வந்த பார்வதி அனைவரையும் பார்த்து அதிர்ந்து இருக்க. .

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“அம்மா ரூம்ல பையன் தனியா இருக்கான். நீங்க அவனை பார்த்துக்கோங்க.. இவனை இன்னிக்கு ஒரு வழி பண்ணிட்டு நாங்க வரோம் ” என்று பார்வதியை போக சொல்ல…

அவருக்கோ எதுவும் புரியவில்லை. மோகனையம், அவன் முகம் இருந்த கோலத்தையும் பார்த்தவர் “இவன் இன்னும் சாகலையா?” என்றார்.

“இன்னிக்கு செத்திருவான் ‘ என்றாள் மித்ரா ஆத்திரத்தோடு..

“ஏய் யாரைப் பார்த்து சாகலையான்னு கேக்குற.. இன்னிக்கு உன் மகன் தாண்டி சாகப் போறான். அன்னிக்கு அவன் என்னை அடிச்ச அப்போ வேடிக்கை பார்த்தவை தானே நீ.. உன்னையும் சும்மா விட மாட்டேன் ” என்று பார்வதியை நோக்கி வர..

அவனை அவரிடம் செல்ல விடாமல் இளங்கிளியும், மித்ராவும் அவன் வழியே குறுக்கே வந்து நின்று கொண்டார்கள்.

அவர்கள் பின்னால் இருந்த பார்வதியோ எட்டி மோகனைப் பார்த்தவர் “நீ முதல்ல  இவங்க ரெண்டு பேரையும் தாண்டி என் புள்ளைகிட்ட நீ போக முடியுமான்னு பாரு டா.. ” என்றார் .

“ஏய் கிழவி!.. ” என்று அவன் எகிறிக்கொண்டு வர. .

“ஐயோ! நான் போறேன் இவனை முடிச்சிட்டு வாங்க ரெண்டு பேரும் ” என்று அறையை விட்டு ஓட்டமும் , நடையுமாக அந்த வயதில் தள்ளாடிக்கொண்டே இளங்கிளியின் அறைக்கு சென்றுவிட்டார் பார்வதி.

“என்னங்கடி அந்த கிழவி உங்க ரெண்டு பேரையும் பத்தி பெரிய இதுவாட்டம் பேசிட்டுப் போகுது.. வாங்க டி பார்த்துக்கலாம் இன்னிக்கு நீங்களா ? இல்ல நானான்னு ” என்று அவர்கள் நோக்கி தாக்குவதற்காக சென்றான்.

அதற்குள் மித்ராவும், இளங்கிளியும் ஒன்று சேர்ந்து கை கோர்ந்தவர்கள் அவர்களைத் தாக்க வந்த மோகன் நெஞ்சில் காற்றில் பறந்து வந்து உதைக்க… அவர்கள் உதைத்த வேகத்தில் அந்த ஆளுயரக் கண்ணாடியை உடைத்துக்கொண்டு பால்கனியில்  இருந்த தடுப்பு சுவரில்  மோதி கீழே விழுந்தான்.

அந்த கண்ணாடிக் கதவு உடைந்து தூள் தூளாக சிதறி அறை எங்கும் சிதறி இருக்க.. அதில் இருந்து பரந்த துண்டுகள் சில பரந்து வந்து ஈஸ்வரின் மீதி மோதி அவனுக்கு காயத்தை ஏற்படுத்தி இருக்க…

“மித்ராஆ!.. ‘ என்று கத்திக்கொண்டே அந்த வலியைத் தாங்க முடியாமல் கத்தியே விட்டான் ஈஸ்வர்.

அவன் குரலை இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு கேட்ட மித்ராவோ அதிர்ச்சியோடு திரும்பி ஈஸ்வரைப் பார்த்தாள். இளங்கிளிக்கும் அதே இன்ப அதிர்ச்சி தான்.

அப்போது இவர்கள் அறையில் இருந்து வந்த சத்தத்தைக் கேட்டு ஹாஸ்பிடல் ஸ்கியூரிட்டி கார்ட்ஸ் அங்கே வர..

அவர்களை பார்த்ததும் தள்ளாடியபடி எழுந்த மோகன் எப்படி பால்கனி வழியே மேலே வந்தனா அதே வேகத்தில் கீழே இறங்கி இருந்தான்.

இங்கே ஈஸ்வரிடம் ஓடிய மித்ரா அவன் மேல் இருந்த கண்ணாடி சில்லுகளை, அதனால் ஏற்பட்ட காயங்களையும் பார்த்து துடித்துப் போனாள்,

ஈஸ்வர்.. ஈஸ்வர் உனக்கு எதுவும் ஆகளையே. .என்று அவனை மேலும் கீழும் பதட்டமாகப் பார்த்தாள்.

மித்ரா என்று கண்விழித்ததும் முதல் வார்த்தை சொல்லி பேசியவனால் அதன் பின் பேச முடியவில்லை. வார்த்தைகள் வராமல் அவன் உதடுகள் பரிதவிக்க.

அவன் அருகே வந்த இளங்கிளையோ ஈஸ்வர் மீதிருந்த கண்ணாடி சில்லுகளை அகற்றியவள் “நீங்க கண் முழிச்சதே எங்களுக்கு பெரிய நிம்மதி ஈஸ்வர். பொறுமையா பேசலாம் . மித்ரான்னு அவ பேரை சொல்லி கூப்பிட்டிங்க இல்ல சீகிரம்  பேசிருவிங்க நீங்க ” என்று அந்த நிலையிலும் நிதானமாக பேசியவள் “மித்ரா நீ பாத்துக்கோ நான் டாக்டருக்கு கால் பண்றேன்” என்று அங்கே வந்து இந்த களேபரங்களைப் பார்த்திருந்த நர்ஸிடம் விபரம் சொல்லி அனுப்பி வைத்தாள்.

மித்ராவுக்கு அழுகை நிற்கவே இல்ல. அவளால் ஈஸ்வர் கண்விழித்ததை இன்னமும் நம்பமுடியவில்லை. கண்களில் நிர்க்கமால் கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது . அவள் கண்ணீரை துடைக்க ஈஸ்வர் தன் கையை உயர்த்த முயல. அவனால் ஒரு துளி கூட தன் கைகளையும் கால்களையும் அசைக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்றும் வலுவிழந்தது போல ஈஸ்வர் உணர.. அழுது கொண்டிருந்தவள் அடிபட்ட பார்வை பார்த்தான் ஈஸ்வர்.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

அவன் பார்வையை புரிந்து கொண்டவள் அவன் கைக்குள் தன் கையைக் கோர்த்துக்கொண்டு அவன் அருகே அமர்ந்து கொண்டாள் . இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்திருக்க. .இருவரின் விழிகளும் இத்தனை நாள் தவற விட்டிருந்த காதலை ஒருவருக்கு ஒருவர் உணர்த்திக் கொண்டிருந்தது.

அவர்கள் இருவருக்கும் தனிமை கொடுத்துவிட்டு அங்கே இருந்தவர்களை வெளியே போகும்படி சைகை செய்த இளங்கிளி தன் மகனைக் காண தனது அறைக்கு சென்றாள் .

அங்கே குழந்தையைக் கையில் வைத்துக்கொண்டு அவனிடம் செல்லம் கொஞ்சியபடி அமர்ந்து இருந்த பார்வதியைப் பார்த்தவள் அவரிடம் வேகமாக வந்து ஈஸ்வர் கண் விழித்த விபரத்தை சொல்ல வந்தாள் .

பின் சொல்லாமல் அவரிடம் “அம்மா, குழந்தையை நான் பாத்துக்கிறேன். நீங்க கொஞ்சம் மித்ரா கூட இருங்களேன் அவ அழுதுட்டே இருக்கா ” என்று சொல்ல.

“அந்த கடன்காரன் என்ன டி ஆனான் . கொன்னுட்டீங்களா!?” என்றார் ஆர்வமாக.

“ஐயோ  , இல்ல ம்மா அவன் தப்பிச்சுப் போய்ட்டான் ” என்றாள் கிளி.

“போங்கடி அவனை தப்பிக்க விட்ருக்க கூடாது ” என்றவர் “அதுக்குள்ள என்ன டி ஆச்சு அவளுக்கு. மறுபடியும் பழசை நினைச்சு அழுகுறளா?” என்றவர். “சரி நீ அவனுக்கு பாலைக் கொடு அப்போவே அழுதான் . நான் என் சுண்டுவிரலை சும்மா கொடுத்து அழுகையை நிப்பாட்டி வெச்சிருக்கேன் ” என்றவர் குழந்தையை தொட்டிலில் படுக்க வைத்துவிட்டு மித்ராவை சமாதானம் செய்ய அவர்கள் அறைக்கு சென்றார்.

அறைக் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த பார்வதி அவர்கள் அறை இருந்த கோலம் கண்டு “ரூமையே நாஸ்தி பண்ணிட்டு போட்டான் அந்த படுபாவி. அவன் மூஞ்சி மாதிரியே இருக்கு.. ” என்று புலம்பியபடி கட்டிலுக்கு வந்தவர் நேராக மித்ராவை தான் பார்த்தார்.

அவளோ ஈஸ்வர் விழித்துக்கொண்ட சந்தோசத்தில் இன்னமும் அழுது கொண்டிருக்க.

அவளிடம் வந்தவர் “ஏய் மித்ரா, மறுபடியும் பழசை நினைச்சு அழுதுட்டு இருக்கியா டி. அவன் கிடக்கறான் கடன்காரன். திரும்ப வந்தா அவனை சும்மாவிடாத எதையாவது எடுத்து அவனை போட்டு தள்ளிரு . மத்ததை நான் பாத்துக்கிறேன் ” என்றவர்.

“என் புள்ளை என்ன பண்ணுனான் , அந்த படுபாவி இவனைக் கொள்ள வந்திருக்கான். நியாப்படி அவன் செஞ்ச காரியத்துக்கு தான் என் புள்ளை அவனை தண்டிச்சிருக்கான்.” என்றார்.

“அத்தை ஈஸ்வர்.. ‘என்று அவன் கண் விழித்ததை மித்ரா சொல்லப் போக..

அவரோ அதை கவனிக்காமல் மோகனை சகட்டு மேனிக்கு திட்டிக்கொண்டிருந்தார்.

“அத்தை ஈஸ்வர் ” என்று மீண்டும் மித்ரா அவரை அழைக்க..

“என்ன டி.. அந்த கடன்காரனை முழுசா திட்ட கூட விட மாட்டேங்குற..  “என்ற்படி அவளை பார்த்தவர் மித்ரா ஈஸ்வரையே சிரித்த முகமாகப் பார்த்திருக்க..

இத்தனை நாள் அவள் முகத்தில் இல்லாத சிரிப்பை இன்று கண்டு கொண்டவர் வேகமாகத் திரும்பி ஈஸ்வரைப் பார்த்தார்.

அவனோ பார்வதியையே மென்மையாக பார்த்து சிரித்தபடி படித்திருக்க..

ஈஸ்வர்ர்.. என்று கத்திக்கொண்டே அவன் மீது  அப்படியே படுத்தே விட்டார்.

“டேய் கண்ணா கண்ணு முழிச்சிட்டியா? ” என்று கேட்டவர் அவன் முகத்தைத் தாங்கி அவன் முகம் முழுதும் முத்தங்கள் பதித்தார்.

“ஏன்டா நான் வந்ததும் என்னை அம்மானு கூப்பிடல,. பேசு டா…. ” என்று அவனை உலுக்க..

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

“அத்தை அவனுக்கு பேச முடியல.. டாக்டர் வர சொல்லிருக்கு அவர் வந்து பார்க்கட்டும்  ” என்றாள் .

“சரி டி வரட்டும் என் புள்ளை கண்ணு முழிச்சுட்டான் . சீக்கிரம் அவன் பேசிறுவான் ” என்று மீண்டும் ஈஸ்வரைக் கட்டிக்கொண்டு அவனுக்கு முத்தங்கள் வழங்கினார்.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.