News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

மூர்க்கன் 60 , கோமாவுல இருந்து அதுவும் முழிச்சிருச்சா

by Sinamika Writes
1K views
A+A-
Reset

மூர்க்கன் 60

மருத்துவ ஆட்கள் வந்து ஈஸ்வருக்கு வேறு அறை கொடுத்திருக்க.. அவனை அந்த அறைக்கு மாற்றி இருந்தனர். வேதவள்ளிக்கு இரவு சாப்பிட உணவு ஜீரணம் ஆகாதது தான் பிரச்சனை என்று அவருக்கு மருந்துகள் கொடுத்து வீட்டிற்கு அனுப்பி இருந்தனர். அவர் காலையில் வந்து ஈஸ்வரைப் பார்ப்பதாக சொல்லிவிட்டு சென்றார்.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

விஷயம் கேள்வி பட்டு வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் அவனைப் பார்க்க வந்துவிட்டனர். வரதராஜன்,வேல்ராஜன் , பரிமளா , கமலா, ராஜ், கயல், ராவண் என குழந்தைகளையம் தங்களோடு அழைத்துக்கொண்டு அனைவரும் வந்திருந்தனர் ஈஸ்வர் கண்விழித்த செய்தி கேட்டு .

“ஈஸ்வர் எங்க எல்லாருக்கும் எவ்ளோ சந்தோசமா இருக்கு தெரியுமா? எங்க எல்லாரையும் விட உன் பொண்டாட்டி தான் டா ரொம்ப சந்தோஷப்படுவா ” என்று கமலா அவன் கைகளை பற்றிக்கொண்டு சொன்னார்.

அவனால் பேசமுடியாததனால் கமலாவிடம் மென்மையாக சிறிது அவர் சொல்வது உண்மைதான் என்ற ரீதியில் தலையை ஆட்டினான்.

“நான் இங்க வந்து கொஞ்ச நாள் தான் ஆகுது ஈஸ்வர் . ஆனா மித்ராவோட தவிப்பை. நீ கோமாவுல இருக்க அப்போ அவ கஷ்டப்படறதா எல்லாம் உன் அத்தை சொல்லி கேட்டிருக்கேன். அவ உன்மேல அவ்ளோ பாசம் வெச்சிருக்கா” என்றார் வேல்ராஜ்.

அவர் பேசியத்தைக் கேட்டு திரும்பி மித்ராவைப் பார்த்தான். அவளோ அல்லியை மடியில் வைத்துக் கொஞ்சிக்கொண்டிருந்தாள்.

“இல்ல குட்டி , ஈஸ்வர் மாமாவுக்கு இப்போ பேச முடியாது. ரொம்ப நாள் பேசாம தூங்கிட்டே இருந்தாங்க இல்ல . அதனால தான் அப்படி இருக்கும். டாக்டர் வந்து அவருக்கு நறுக்குன்னு ஒரு ஊசி போட சொல்வோம் அப்போ பேசிருவார் உன் மாமா ” என்று அவள் கன்னத்தில் முத்தம் வைத்துவிட்டு ஈஸ்வரைப் பார்க்க..

அவனும் அவளை ஏக்கமாகப் பார்த்துக்கொண்டிருந்தான். இத்தனை வருட காத்திருப்பு.. இத்தனை வருட தவிப்பு இருவருக்குமே.. அது அப்பட்டமாக இருவரின் முகத்திலும் தெரிந்தது.

“டேய் மச்சான் , அஞ்சு வருஷம் கோமாவுல இருந்து எழுந்திருக்க… நீ அவளை ரொமான்ஸ் லுக் விடுறது எனக்கு நல்லாவே தெரியுது. முதல்ல டாக்டர் வந்து உன்னை செக் பண்ணட்டும். அப்பறோம் இதெல்லாம் பண்ணலாமா? வேணாமான்னு பாத்துக்க.. ” என்றான் ஈஸ்வருக்கு மட்டும் கேட்கும் குரலில்.

ஈஸ்வரோ ராஜ் என்ன சொல்ல வருகிறான் என்று புரியாமல் பார்க்க..

அவன் பார்வையை புரிந்து கொண்ட ராஜ் “அது ஒன்னுமில்ல டா, உன்னை மாதிரியே அதுவும் 5 வருஷமா கோமாவுல தான் இருந்திச்சு. நீ முழிச்சிகிட்ட போல அதுவும் முழிச்சிருச்சா இல்ல.. அதுக்கு ஏதும் டிரீட்மென்ட் செய்யணும்னு பாக்கணுமே ” என்று அவன் காது கடிக்க..

அவன் சொன்னதைக் கேட்டு “டேய் என்ன டா என்னை செத்த பாம்பாவே நினைச்சுட்டியா நீ, நான் எழுந்து நடந்ததும் உனக்கு இருக்கு டா..  ” என்றே தோன்றியது அவனுக்கு. ஆனால் அதை வாய் விட்டு சொல்ல முடியாமல் அவனை ஏகத்துக்கும் முறைத்தான் ஈஸ்வர்.

அவர்கள் ஏதோ பேசிக்கொண்டிருக்க அதை கவனித்த மித்ரா “என்ன?” என்று புருவம் உயர்த்தினாள் . ஈஸ்வர் கண்களை சிமிட்டி ஒன்றுமில்லை என்று சிரித்துக்கொண்டான்.

“மித்ரா எங்களை மன்னிச்சிரு டி.. நீ ஈஸ்வரை அடிச்சது மோகன் தான்னு அப்போவே சொன்ன.. நாங்க தான் நீ சொன்னதை நம்பள.. இவர் தான் அவனை அந்த லேப்ல வெச்சே மொத்தமா கதையை முடிச்சாச்சுன்னு சொன்னார். இவர் எல்லாம் சரியா பண்ணிருப்பாருனு தான் நினைச்சேன்  “என்றாள் கயல்.

“விடு டி.. இப்போ  தெரிஞ்சிருச்சே.. அவன் உயிரோட இருக்கான்னு . ” என்றவள் அடிபட்ட பார்வை பார்த்தாள் ஈஸ்வரை. அவனால் தான் தங்களுக்கும் இத்தனை வருட போராட்டம் ஆரம்பமானது. அதே போல இன்று அவன் செய்த காரியத்தில் தான் ஆபரேஷன் முடிந்தும் கண்விழிக்காமல் இருந்தவன் இன்று நடந்த களேபரத்தில் இருந்து அவன் கண்விழித்ததும் இல்லாமல் தன் பெயரையும் அழைத்திருந்தது அவளுக்கு ஒருவித நிம்மதி தான்.

“நீ கவலைப் படவேண்டாம் மித்ரா. அவனை சீக்கிரமே கண்டுபிடிச்சு அவனால உனக்கு இனி எந்த பிரச்னையும் வராம நாம பாத்துக்கலாம் ” என்று அவளுக்கு ஆறுதல் சொன்னான் ராவண்.

“ராவண் அவன் மேல அபிஷியலா ஒரு கம்பளைண்ட் கொடுக்கணும். அப்போ தான அவனால வெளிய சுதந்திரமா நடமாட முடியாது . அவனுக்கும் கொஞ்சம் பயமிருக்கும். இந்த விஷயத்தை நாமளே பத்துக்கலாம்னு வெளிய சொல்லாம இவ்ளோ நாள் இருந்தது தான் நாம் செஞ்ச பெரிய தப்பு ” என்றார் வரதராஜன்.

அவர் சொல்வதும் சரி தான் என்று நினைத்தவன் “சரிப்பா நாளைக்கு அபிஷியலா அவன் மேல கம்பளைண்ட் கொடுத்திடறேன் “என்றவன் ராஜ்ஜைப் பார்த்தான்.

“சரின்னா நான் காலைல நம்ம ஆரியன்கிட்டே பேசிக்கிறேன் ” என்றான்.

“சரி எல்லாரும் வீட்டுக்கு கிளம்புங்க . குட்டிஸ் எல்லாம் தூங்கணும் இல்ல.. நாளைக்கு ஸ்கூல் போகணுமே.. ” என்றார் வேல்ராஜ்.

“அஹ் .. தாத்தா.. நாங்க நாளைக்கு மட்டும் லீவு போடுகிறோமே ப்ளீஸ்.. ” என்று அவர் காலைக் கட்டிக்கொண்டு கெஞ்சினான் ஆதி.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“ஆதி என்ன இது ஏற்கனவே தம்பி பாப்பாவை பார்க்க போகனும்னு நிறைய லீவு போட்டுட்டீங்க. இப்போ எதுக்கு தேவை இல்லாத லீவ் .கிளம்புங்க முதல்ல” என்றாள் கயல்.

“அம்மா .. நாங்க வேற ஸ்கூல் போகல தானே . அது நம்ம அத்தை ஸ்கூல் தானே.. அவங்க எதுவும் சொல்ல மாட்டாங்க.” என்ற யஷ்வந்திகா வேகமாக மித்ராவிடம் சென்றவள் “அத்தை நீங்க சொல்லுங்க எங்களுக்கு லீவு கொடுக்க சொல்லி.. ” என்று அவள் இடுப்பை கட்டிக்கொண்டு மித்ராவை கெஞ்சுவது போல பார்த்தாள்.

இவர்கள் பேசுவதை வைத்துப் பார்க்கும்போது மித்ரா ஒரு பள்ளியை நிர்வாகம் செய்கிறாள் என்று ஆச்சர்யமானது ஈஸ்வருக்குத் தான்.

அதே ஆச்சர்யத்தோடு அவளையே பார்க்க.. “கயல் ஒரு நாள் தானே.. அவங்களுக்கும் தூக்கம் கேட்டிருச்சு. இப்படியே ஸ்கூல் போனாலும் நல்லா இருக்காது. இவங்க போய் நல்லா தூங்கி எழட்டும் ” என்று குழந்தைகளுக்கு பரிந்து பேச..

“நீ எல்லாம் எதுக்கு டி ஸ்கூல் நடத்துற.. பேசாம இதுங்களை ஸ்கூல் நடந்த சொல்லு வேணும்னா ஸ்கூல் திறந்துக்கணும் பிடிக்கலையின்னா மொத்த ஸ்கூலுக்கு லீவு விட்டுக்கட்டும் ” என்று சலித்துக்கொண்டவள் “சரி அதான் ஸ்கூல் போகலையின்னு முடிவாகிருச்சே.. வீட்டுக்கு போய் நல்லா தூங்கி எழுந்து வரலாம். நாளைக்கு குட்டி தம்பியை வீட்டுக்கு கூட்டிப் போகணும்ல ” என்று மூவரையும் இழுத்துக்கொண்டு முன்னே செல்ல அவர்கள் பின்னால் ராஜும் சென்றான்.

ஈஸ்வருக்கும் , மித்ராவுக்கும் தனிமை கொடுக்க எண்ணி கயலுடன் பார்வதி வீட்டிற்கு கிளம்ப..

“சரி நீங்களும் கிளம்புங்க ” என்றான் அங்கே நின்றிருந்த ராவண்.

“இல்லப்பா நீ நாளைக்கு ஆபிஸ் போகணும் இல்ல நானும், கமலாவும் இருக்கோம் ” என்றார் பரிமளா .

“எனக்கு எந்த ப்ரோப்ளேமும் இல்லம்மா நீங்க கிளம்புங்க . நான் பாத்துக்கிறேன் ” என்று அவர்களை அனுப்பியவன் “மித்ரா எதுனாலும் எனக்கு உடனே கால் பண்ணு நான் முழிச்சிட்டு தான் இருப்பேன் “என்றவன் “சீக்கிரம் எழுந்து வாடா.. உன்கிட்டே சண்டை போடாம எனக்கு எதுவுமே சுவாரஸ்யமா இல்ல.. ” என்று ஈஸ்வரிடம் சொல்லிவிட்டு இளங்கிளி அறைக்கு சென்றிருந்தான்.

அங்கே சென்றவன் அவளோடு சேர்ந்து ஆர்வமாக குளிக்கத் தயார் ஆனான்.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.