ஆன்லைன் 2
“ஹாய் ஆண்ட்டி கனிஷ்கா இருக்காளா?” என்று தன் தோழியின் வீட்டிற்குள் நுழைந்தாள் மீனு.
“மேல அவ ரூம்ல தான் இருக்கா மீனு ” என்றார் அவள் அம்மா பாக்கியம்.
“ஓகே ஆன்டி நான் போய் பாக்கறேன் ” என்று அவள் ரூமிற்கு சென்ற மீனு கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தவள் நேராக அவள் படுக்கையில் போய் தொப்பென்று விழுந்தாள்.
அப்போது தான் ஆபீஸ் செல்வதற்காக உடை மாற்றி விட்டு வந்த கனிஷ்கா பெட்டில் படுத்திருந்த மீனுவைப் பார்த்தாள்.
“என்ன டார்லிங் உன் அப்பா ஆபீஸ்க்கு போகல.. நேரா இங்க வந்திருக்க என்ன விஷயம் “என்று அவள் அருகே வந்து அமர்ந்தாள்.
அப்படியே ஊர்ந்து கனிஸ்காவின் மடியில் அவள் வயிற்றை கட்டிக்கொண்டு படுத்த மீனு “மனசெல்லாம் ஒரு மாதிரி இருக்கு டி “என்றாள்.
தலை வாரிக்கொண்டிருந்தவள் அதை அப்படியே விட்டுவிட்டு “என்ன டி ஆச்சு?” என்றாள்.
“ம்ம். என் அண்ணாவுக்கும், அப்பாவுக்கும் சண்டை ” என்றாள்.
“இது என்ன புதுசா டி.. வீட்ல தினமும் நடக்குறது தானே.. ‘ என்றாள்
“அப்படி இருந்திருந்தா தான் பரவல்லையே.. அப்பா கோபத்துல அண்ணாவை வீட்டை விட்டு போக சொல்லிட்டார் ” எனும்போதே அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.
“என்ன டி சொல்ற! வீட்டை விட்டு போக சொல்ற அளவுக்கு என்ன தான் டி உன் அண்ணா பண்ணினார். ” என்றாள்.
“குடி தான்..” என்றாள் கண்களை துடைத்துக்கொண்டே.
“சரி அழாத ” என்றவள் “அதை விட்டொழிஞ்சா எல்லாருக்கும் நல்லது. உன் அண்ணா எப்படி இருந்தவர் அவர் ஏன் இப்படி திடீர்னு மாறினாருனு தெரியல.. ” என்றாள்.
“எனக்கும் அது தான் டி புரியல.. ” என்று எழுந்து அமர்ந்தவள் “உன் அண்ணாவும், என் அண்ணாவும் பிரெண்ட்ஸ் தானே. நீ கொஞ்சம் அவர்கிட்டே சொல்லி என் அண்ணாவைப் போய் பார்க்க சொல்றியா? அவர்கிட்டே சொல்லி எப்படியாச்சும் என் அண்ணாவை வீட்டுக்கு திரும்ப கூட்டி வர சொல்றியா டி.. ” என்று கனிஸ்காவின் கையை பற்றிக்கொண்டு கெஞ்சுவது போல கேட்டாள்.
“ஹே! எதுக்கு டி இப்படி பேசுற.. கேக்க சொல்றேன் டி என் அண்ணாவை . நீ பீல் பண்ணாத கிளம்பு சாப்பிட்டு ஆபீஸ் போகலாம் ” என்றாள்.
“இல்ல டி எனக்கு வேணாம் ” என்றாள்.
“ஏய் எப்படியும் நீ சாப்பிட்டிருக்க மாட்ட.. என் முதலாளி அம்மா சாப்பிடலையின்னா இந்த தொழிலாளிக்கு கஷ்டமா இருக்கும் இல்ல. வாங்க மேடம் ” என்று அவள் கை பற்றி இழுத்தாள்.
“உனக்கு இந்த குசும்புக்கு ஏதும் குறைச்சல் இல்ல டி. “என்ற மீனு எழுந்து அமர்ந்தவள் “திரும்பி நான் பின்னி விடறேன் ” என்று கனிஸ்காவை அமரவைத்து அவளுக்கு தலைவாரி விட்டவள் அவளுடன் கீழே சாப்பிட சென்றாள்.
இருவரும் டைனிங் டேபிளில் வந்து அமர்ந்த நேரம் சரியாக அங்கு வந்தான் கனிஸ்காவின் அண்ணன் , மாறனின் தோழன் ஆர்யன்
“மீனு என் அண்ணாக்கிட்டே நீயே சொல்லு , நான் சொல்றதை விட நீ சொன்னா அவன் கொஞ்சம் சீரியசா எடுத்து செய்வான் “என்றாள் கனிஸ்கா.
“என்ன டி நீ ” என்று மீனு தயங்க.
“உன் அண்ணாக்கிட்டே தைரியமா பேசக்கூடிய ஆள் இவன் ஒருத்தன் தான் , இவனை விட்டா அவர்கிட்டே பேச வேற ஏதும் வழி இருக்கா சொல்லு ” என்றாள்.
“ம்ஹும் இல்ல டி.. ” என்று உதட்டை பிதுக்கினாள் மீனு.
“அப்போ கேளு “என்றாள்.
இவர்கள் இருவரும் தங்களுக்குள் மாறி மாறி பேசுவதை கவனித்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆர்யன் ” மாறன் என்ன பன்றான் ? ‘என்றான் அவர்களைப் பார்க்காமலேயே..
பேசிக்கொண்டிருந்த இருவரும் அப்டியே பேச்சை நிறுத்திவிட்டு அவனைப் பார்க்க..
“அவனை பத்தி தானே ஏதோ சொல்லணும்னு பேசிக்கிறிங்க. அவன் என்ன பண்ணிட்டு இருக்கான்” என்றவன் நிமிர்ந்து மீனுவைப் பார்த்தான்.
அவனை பார்த்த மறுகணம் அவள் உதடுகள் தந்தி அடிக்கத் துவங்கியது.
“என்ன நான் கேட்டது காதுல விழலையா?” என்றான் சற்று அதட்டலாக.
“ஹா .. அது .. வந்து. .அண்ணா கோச்சிட்டு வீட்டை விட்டு கிளம்பி போயிருச்சு. அவர் வாங்கின வீட்ல இருக்கார் “என்றாள் பதட்டமும் , பயமுமாக.
“டேய் புள்ளகிட்டே இப்படி தான் பேசுவியா? பாரு அவ பயந்துட்டா” என்றார் பாக்கியம்.
அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு கைகளை கழுவிவிட்டு எழுந்தவன் “கனிஸ்கா நான் அவனைப் பார்த்து பேசிட்டு உன் ஆபிஸ்க்கு வரேன். அதுவரை உங்க மேதமை ஆபிஸ் விட்டு எங்கையும் போக வேணாம்னு சொல்லிரு ” என்றவன் மீனுவை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.
அவன் சென்றபிறகு தான் மீனுவிற்கு பேச்சே வந்தது , “ஏன் ஆண்டி , உங்க பையன் எப்பவும் இப்படி தான் முசுடா இருப்பாரா? அதுக்கு எங்க அண்ணாவே தேவலாம் போல.. ” என்றாள்.
“என்ன டி பண்றது. எல்லாம் அந்த சோபனா பண்ணினதால வந்தது. அவ மட்டும் பொண்ணு பார்க்க போன அப்போவே இந்த கல்யாணத்துல இஷ்டமில்லையின்னு சொல்லிருக்கலாம் அதை விட்டுட்டு இவன்கிட்டே நல்லவளாட்டம் பேசி நிச்சயதார்த்தம் வர கொண்டு வந்துட்டா.. அவளுக்காக எப்படி பார்த்து பார்த்து புடவை , நகை எல்லாம் வாங்கினான் தெரியுமா? அதெல்லாம் கூட இன்னமும் அவன் ரூம்ல வெச்சிருக்கான் ” என்றார்.
“ஏன் ஆன்டி என்ன ஆச்சு?” என்றாள்.,
“அதை ஏன் கேக்குற.. சரியா நிச்சயம் செஞ்ச அப்போ இவனுக்கு மோதிரம் போட வந்தவ.. என் மகன் கல்யாணத்திற்கு முன்னையே அவகிட்டே தப்பு தப்பா பேசினான். அவளை தப்பு தப்பா போட்டோ அனுப்ப சொல்லி டோர்சேர் பண்ணினான்னு போய் சொல்லிட்டா. இவன் பேச்சை யாரும் நம்பலை .எங்களுக்கும் என்ன சொல்றதுன்னு தெரியல.. “என்றவர் பெருமூச்சு விட்டபடி “அந்த பொண்ணு மேலே தான் தப்புனு அவனுக்கு அப்போவே தெரியும். ஆனா அவனுக்கு அவளைப் பிடிச்சிருச்சுனு ஒரே காரணம் தான் , அத்தனை பலியையும் என் புல்லை சுமந்துட்டு இப்படி கல்யாணம் பண்ணிக்காமலேயே வாழுறான் “என்றார் கவலையாக.
“ஆன்டி கவலைப் படாதீங்க . ஒரு நாள் இல்ல ஒரு நாள் உங்க பையன் பழசெல்லாம் மறந்துட்டு ஒரு புது வாழ்க்கை வாழ்வார் பாருங்க ” என்று ஆறுதல் சொன்னவள் கனிஷ்காவை அழைத்துக்கொண்டு ஆஃபீஸிற்கு கிளம்பி இருந்தாள்.
அவள் அப்பாவின் லெதர் எஸ்ப்போர்ட் பிசினஸை அவருடன் சேர்ந்து நடத்துகிறாள் மீனு . மாறன் செய்ய வேண்டிய வேலைகளையம் சேர்த்து மீனு செய்து அவள் அப்பாவிற்கு துணையாக இருக்கிறாள். அவளுக்கு அசிஸ்டன்ட்டாக தான் கனிஸ்கா அதே ஆபிசில் வேலை செய்கிறாள்.
