Home Uncategorizedஎன் பொண்டாட்டி நீ தான்டி! 15

என் பொண்டாட்டி நீ தான்டி! 15

by Layas Tamil Novel
815 views

காலையில் ராஜன் கண்விழிக்கையில் இதழ்யா அவன் அருகில் இல்லாதது கண்டு ஏமாற்றம் அடைந்தான் .

கண்களை தேய்த்துவிட்டுக்கொண்டே வேஷ்டியை கட்டிக்கொண்டு வெளியே வர… ஹாலில் சோபாவில் குத்துக்காலிட்டு முகத்தை புதைத்துக்கொண்டு அழுதுகொண்டு இருந்தாள் இதழ்யா.

அதை பார்த்ததும் “காலங்காத்தால எழுந்து வர அப்போ இப்படியா உக்காந்துட்டு இருப்ப… ” என்று கேட்டுக்கொண்டே அவள் அருகில் வந்து அமர்ந்தான்.

ராஜன் வந்து அமர்ந்ததும் வேகமாக எழுந்தவள் அழுத கண்களோடு அவனை முறைத்துக்கொண்டு நின்றாள்.

“என்ன டி பாப்பா முறைக்குற… ஏன் ராத்திரி பண்ணினது பத்தலையா உனக்கு. வேணும்னா சொல்லு இன்னொரு ரவுண்டு போகலாம் ” என்று எழுந்து அவள் அருகில் வர…

“ச்சீ… உனக்கு இதை விட்டா பேச வேற எதுவும் தெரியலையா ” என்றாள் .

“தெரியலையே… நான் என்ன பண்றது . உன்னை பார்த்தாலே இப்படி தான் எனக்கு பேச வருது ” என்று அவள் தோளில் கைபோட்டு தன் அருகில் இழுத்து நிப்பாட்டினான்.

” இப்படி என் வாழ்க்கையை ஒட்டு மொத்தமா நாசம் பண்ணிட்டு உன்னால எப்படி இந்த மாதிரி பேச முடியுது. உனக்கு வெட்கமா இல்ல.. ” என்றாள் கோபமாக .

“ஏன் நான் உன் வாழ்க்கையை நாசம் பண்ணின அப்போ பேசாம தானே நீ படுத்திருந்த… யுவா யுவான்னு என் பேரை சொல்லி எத்தனை முறை கூப்ட்டிருப்ப… அப்போ நல்லா இருந்துச்சா உனக்கு … சும்மா சொல்ல கூடாது டி பாப்பா… ராத்திரி முழுக்க என்னை உறுஞ்சி எடுத்துட்டு இப்போ எல்லா பழியையும் என்மேல போடுற.. இது எந்த ஊரு நியாயம் ” என்றான்.

“ச்ச்சே … உன்கிட்டே போய் நான் நியாயம் கேட்குறேன் பாரு. என்னை சொல்லணும் உன்னால் என் வாழ்க்கை , என் கனவு , என் லட்சியம் எல்லாம் நாசமா போய்டுச்சு. நான் எவ்ளோ கனவு கண்டு வெச்சிருக்கேன் தெரியுமா? இப்படி எல்லாத்தையும் உன்னோட  இந்த அல்ப சுகத்துக்காக என் வாழ்க்கையை இப்படி நாசம் பண்ணிட்டியே… என் குடும்பத்தை பகடைக்காயா வெச்சு என்கிட்டே நீ காரியம் சாதிச்சதுனால நீ ஜெயிச்சிட்டதா அர்த்தம் இல்லை அதை தெரிஞ்சுக்க முதல்ல ” என்று தன் மனக்குமுறலை அவனிடம் கொட்டினாள்.

“இங்க பாரு என்னால மத்தவங்க மாதிரி எல்லாம் உன்கிட்டே மானே , தேனே , பொன்மானேன்னு எல்லாம் கொஞ்சி டூயட் பாடி உன் மனசுல இடம் பிடிச்சு நீயா என்கிட்டே வர வரைக்கும் எல்லாம் பொறுமையா இருக்க முடியாது. எனக்கு உன்னை பிடிச்சிருக்கு உன்னை எனக்கு அடிபணிய வைக்க நான் எந்த எல்லைக்கும் போவேன் ” என்றான்.

அவள் இவன் எல்லாம் ஒரு மனிதனா என்ற ரீதியில் ராஜனை முறைத்துக்கொண்டு பார்த்துக்கொண்டு நின்று இருக்க…

“இப்போ உனக்கு என்ன குறை வந்துச்சு. இந்த் வீட்ல எல்லா வசதியும் இருக்கு.. நீ இங்க எந்த வேலையும் செய்ய வேண்டாம். எல்லாத்துக்கும் ஆளுங்களை ஏற்பாடு பண்ணிட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்துல அவங்க இங்க வந்திருவாங்க … இந்த வீட்ல ராணி மாதிரி காலாட்டிட்டு உக்காந்து இருந்தா போதும். உனக்கு இந்த வீட்ல இருக்க ஒரே வேலை என்னை கவனிச்சுக்கிறது தான். நான் காலையில் எழுந்துகிறதுல இருந்து , ராத்திரி தூங்குற வரைக்கும் என்னை கவனிச்சுக்கிறது மட்டும் தான் உன்னோட வேலை சரியா… இதுக்கு மேல வேற என்ன வேணும் உனக்கு … ” என்று அவளை பார்த்தான்.

அவன் கை வளைவில் இருந்து விலகி நின்று அவனை பார்த்தவள் “ஓஹோ… அப்போ சம்பளம் இல்லாத வேலைக்காரியா உன்னை பாத்துகிறதுக்காக என்னை தூக்கிட்டு வந்து என் கழுத்துல தாலியை கட்டிட்டே அப்படித்தானே ” என்றாள் கோபம் குறையாமல்.

“ஏய் என்ன நீ நான் சொல்றதை கொஞ்சமும் புரிஞ்சுக்காம லூசு மாதிரி பேசிட்டு இருக்க… நீ இந்த் வீட்டோட மகாராணி பாப்பா… உன்னை ராணி மாதிரி நான் வெச்சுக்கணும்னு நினைக்குறேன் . ஆனா நீ என்ன சம்பளம் வாங்காத வேலைக்காரின்னு சொல்லி உன்னை நீயே மட்டமா நினைச்சுக்கிறே…இங்க வா … ” என்று அவளை தன் பக்கம் அழைக்க…

“மகாராணியா !! நானா!! ” என்று சத்தமாக சிரித்தவள் .

“அதுக்கு அர்த்தம் என்னனு உனக்கு தெரியுமா? வெறும் காசு பணத்தை கொட்டி கொடுத்து வேணுங்குறதை செய்து கொடுக்கிறதுனால மட்டும் இந்த் வீட்டுக்கு மகாராணியா மாறிட முடியாது . என்ன சொன்ன.. என்னோட வேலை உன்னை கவனிச்சுக்கிறது அப்படி தானே…  என்னை பிளாக் மெயில் பண்ணி நீ சொல்றதை எல்லாம் என்னை கேக்க வைக்குறியே… அதையே நான் மனசார செய்யணும், உன்னை என் புருஷனா முழு மனசோட ஏத்துக்கிட்டு உன்மேல காதல் , ஆசை எல்லாம் முழுசா என் மனசுல இருந்து பொங்கி வழியனும். அப்படி ஆசையோட காதலோட நீ கேட்காமையே ஒவ்வொண்ணையும் நான் பார்த்து பார்த்து செய்ற அப்போ அதில் சந்தோசப்பட்டு நீ ஒரு முழம் பூ  எனக்கு வாங்கி வந்து வெச்சு விடுற அப்போ ஒரு சந்தோசம் வரும் பாரு .. அப்போ என் மனசுக்குள்ள ஒரு சந்தோசம், திமிரு தோணும். இந்த வீட்டுக்கு நான் தான் ராணி… மகாராணின்னு அது தான் உண்மையான சந்தோசம் அதை புரிஞ்சுக்க முதல்ல..” என்று மூச்சு வாங்க பேசி முடித்து அவனை பார்த்தாள்.

அவள் பேசுவதை எல்லாம் பொறுமையாக கேட்டபடி ராஜன் நின்று இருக்க… அவனிடம் பேசிவிட்டு அங்கு நிற்காமல் தலை முடியை முடிந்துவிட்டு பெட்ரூமிற்குள் சென்றவள் திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்தாள்.

ராஜனும் அவளை தான் பார்த்துக்கொண்டு இருந்தான்.

அடுத்த நொடி அவன் முகத்தில் அறைந்தார் போல கதவை பட்டென்று சாற்றிவிட்டு சென்றாள்.

நீண்ட நேரம் ராஜன் அங்கேயே நின்று கொண்டு இருந்தவன் “ராசா! உள்ள வரட்டுங்களா … ” என்று வாசலில் இருந்து குரல் கேட்கவும் .

வாசல் பக்கம் பார்த்தவன்  அங்கே 60களின் தொடக்கத்தில் கண்டாங்கி சேலை கட்டி மங்களகரமாக முகமெல்லாம் மஞ்சள் பூசி ஒரு ரூபாய் நாணயத்தை விட சற்று பெரிதாக குங்குமம் வைத்து கொண்டையிட்ட தலையில் மல்லிகை சூடியபடி நின்று இருந்த அந்த வயதான பெண்மணியை பார்த்ததும் சிரித்த முகமாக “வா செல்லத்தாயி ஏன் அங்கையே நிக்குற… ” என்று வாசலுக்கே சென்று செல்லத்தாயை கை பிடித்து உள்ளே அழைத்து வந்தான்.

“அட என்ன ராசா இது … வாசலுக்கே வரணுமா நீங்க ” என்றவர் .

“வீட்டை தேடி கண்டுபிடிச்சு வரதுக்கு நேரம் ஆகிருச்சு ” என்றார்.

“பரவால்ல கிழவி அதான் வந்துட்டியே… எனக்கு போன் போட்டு சொல்லி இருந்தா நானே வந்து உன்னை கூப்டு வந்திருப்பேன் ” என்றவன்

“ஒரு நிமிஷம் இரு நான் என் பொண்டாட்டியை கூப்டு வரேன் ” என்றவன் பெட்ரூம் வரை வேகமாக சென்றவன் சற்று தயங்கியபடி கதவை தட்டி “பாப்பா… பாப்பா… ” என்று சாந்தமாக அமைதியின் மறு உருவமாக ராஜன் இதழ்யாவை அழைக்க…

“ராசா பொண்டாட்டி வந்ததும் பேச்சே மாறிடுச்சு .. உனக்கு  இவ்ளோ பொறுமையா எல்லாம் பேச தெரியுமா !! ” என்று மோவாயில் கை வைத்து ராஜனிடம் கேட்டார் செல்லதாய் .

“என்ன பண்றது கிழவி பொண்டாட்டின்னு ஒருத்தி வந்துட்டாளே பொட்டிப்பாம்பா அடங்கி போக பழகிக்கணும் போல இருக்கு… ” என்று சொல்லி சிரித்தவன் . மீண்டும் அறைக்கதவை தட்டி இதழ்யாவை அழைக்க…

சற்று நேரத்தில் வந்து வேகமாக கதவை திறந்தவள் “இப்போ என்ன வந்துச்சு பாப்பா… பாப்பான்னு ஏன் என் உயிரை எடுக்குற.. என்னை நிம்மதியா குளிக்க கூட விடமாட்டியா நீ… ” என்று எரிந்து விழுந்தாள் .

அவள் பேசினதெல்லாம் ராஜன் காதில் விழவே இல்லை .பச்சை நிற ஜாக்கெட் அணிந்து  மஞ்சள் நிற புல்வாயில் சேலையில் ஈரம் சொட்ட சொட்ட அவன் கட்டிய மஞ்சள் தாலி கழுத்தில் மின்ன… புதிதாக பூத்த தாமரையை போல குளித்துவிட்டு வந்ததில் சிவந்த மேனியாய் கோபம் கூடிய சிவந்த முகத்தோடு நின்று இருந்தவளை அனு .. அணுவாக ரசித்தபடி வாயை பிளந்து நின்று இருந்தான் யுவராஜன்.

“ஏன் கண்ணு ராசாகிட்ட இப்படி கோபமா பேசுற… பாவோம் புள்ளைய பாரு எதுவும் பேச முடியாம வாயடைச்சு போய் இருக்கு” என்று அவள் அருகில் வந்த செல்லத்தாய் .

“என்ன கண்ணு இது இப்படியா தலையை கூட துவட்டாம இருப்ப… அந்த துண்டை குடு  கண்ணு  ” என்று அவள் கையிலிருந்த ஈர துண்டை உரிமையாக வாங்கியவர் “நீ வா… ” என்று அவளை அழைத்துக்கொண்டு போய் சோபாவில் அமர்த்தியவர் இதழ்யாவின் தலையை துவட்டி விட…

“ஐயோ ! என்ன இது விடுங்க பாட்டி . அவன் என்னை அவசரப்படுத்தினதுல அபப்டியே வந்துட்டேன். நானே துவட்டிக்கிறேன் ” என்று அவர் கையில் இருந்து டவலை வாங்க போனாள் இதழ்யா .

“பரவால்ல கண்ணு உன்னை ராணி மாதிரி பாத்துக்க சொல்லி என் ராசா இங்க என்னை வர சொல்லி இருக்கு… நீ எதுவும் செய்ய வேணாம் . நான் துவட்டி விடுறேன் .” என்று இதழ்யாவுக்கு தலையை துவட்டி விட…

அவர் சொன்னதை கேட்டு இதழ்யா திருப்பி ராஜனை பார்த்தாள் . அவனோ எப்படி என்பது போல முகத்தை வைத்துக்கொள்ள…

அதை கண்டதும் முகத்தை வெடுக்கென்று திருப்பிக்கொண்டாள்.

அவள் செய்கையில் சிரித்தவன் சென்று குளித்து முடித்து தயாராகி வெளியே வர… மணக்க மணக்க கறிக்குழம்பு வாசம் அவன் நாசியை நிறைத்திருக்க… அவன் கிச்சனை நோக்கி வர…

” நீ நல்லா சாப்பிடு கண்ணு.. உடம்புல தெம்பு வேணும்ல என் ராசாவை சமாளிக்க… பாரு எப்படி ஒல்லியா இருக்கேன்னு ” என்று சொல்லிக்கொண்டே அவள் தட்டில் மேலும் இரண்டு இட்லியை வைத்து அதில் கறிக்குழம்பை ஊற்றி இதழ்யாவை சாப்பிட சொல்லி திக்குமுக்காட வைத்தார்.

“பாட்டி எனக்கு போதும் ஏற்கனவே நான் 4 இட்லி சாப்பிட்டுட்டேன். மறுபடியும் வெக்காதிங்க அப்பறோம் நான் வெயிட் போட்டுடுவேன் ” என்று அவரிடம் போராடிக்கொண்டு இருந்தாள் சாப்பிட முடியாமல்.

அழகாக தலை சீவி இடை வரை பின்னி முடித்து பாட்டியிடம் கெஞ்சிக்கொண்டு  இருந்தாள் அவன் பாப்பா…

அவளை ரசித்தபடியே டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தவன் “அட என்ன கிழவி நீ அதான் பாப்பா… போதும்னு சொல்லுது இல்ல… விடவேண்டியது தானே…  அவ சாப்பிடலையின்னா என்ன அவளுக்கும் சேர்த்து நான் சாப்பிடுறேன் ” என்று இதழ்yaa சாப்பிட்ட தட்டை தன் பக்கம் இழுத்து அதில் இருந்த இட்லியை பிட்டு சாப்பிட ஆரம்பித்தான்.

“ராசா அது பாப்பா சாப்பிட்ட எச்சில் தட்டு.. இருங்க உங்களுக்கு வேற தட்டு எடுத்துட்டு வரேன் ” என்று அவனிடம் இருந்த தட்டை அவர் வாங்க போக..

“அட என்ன கிழவி நீ இது என் பொண்டாட்டி சாப்பிட்ட தட்டு தானே… இருந்துட்டு போகட்டும். அதுவே தேவாம்ருதம் மாதிரி இருக்கும் ” என்று அவன் பாப்பாவின் இதழை பார்க்க…

அவனை முகம் சுழிக்க பார்த்தவள் எழுந்து கை கழுவிவிட்டு ஹாலிற்கு வந்து அமர்ந்து கொள்ள…

டைனிங் டேபிளில் இருந்து பாப்பாவை ரசித்துக்கொண்டே செல்லதாய் வைக்க வைக்க சாப்பிட்டு முடித்தவன் “கிழவி அப்படியே நாலு இட்லியும், கறிக்குழம்பையும் கட்டி கொடு. ஆஸ்பத்திரியில் அண்ணனுக்கு அடி பட்டு படுத்து இருக்காரு.  அண்ணியும் எப்படியும் சாப்பிட்டு இருக்க மாட்டாங்க . நான் போய் அவங்கள பார்த்துட்டு சாப்பிட கொடுத்து வரேன்” என்றான்.

“சரி ராசா நீங்க போய் கிளம்பி வாங்க அதுக்குள்ள நான் எடுத்து வைக்குறேன் ” என்று கிச்சனுக்குள் சென்றார்.

இதழ்யா சோபாவில் சாய்ந்து அமர்ந்தபடி உம்மென்று அமர்ந்து இருக்க… அவளை தாண்டி சோபாவிற்கு பின்னால் சென்றவன் சோபாவை தடவிக்கொண்டு நடப்பதை போல இதழ்யாவின் முதுகை வருடிவிட்டு உள்ளே செல்ல…

அதில் அதிர்ந்தவள் ரூமுக்குள் சென்றவனை பார்த்து பொருக்கி என்று திட்டினாள். அது அவனுக்கும் கேட்டது. சிரித்துக்கொண்டே சட்டையை மாட்டிக்கொண்டு வெளியே வர… செல்லதாய் ரெடியாக டிபன் பாக்ஸசை பேக் செய்து வைத்து இருந்தார்.

அதை வாங்கியவன் ” சரி கிழவி நான் போயிட்டு வரேன் என் பாப்பாவை பத்திரமா பாத்துக்க … ” என்று இதழ்யாவை சைட் அடித்துக்கொண்டே செல்ல போக…

அதை கண்டும் காணாதவள் போல அமர்ந்து இருந்தவள் “ஒரு நிமிஷம் ” என்றாள்.

“என்ன பாப்பா… ஏதாவது வேணுமா? இந்த மாமன் கிட்டே… ” என்று அவளிடம் வந்தான் .

அவனை துச்சமென பார்த்தவள் “நானும் ஹாஸ்பிடல் வரேன் ” என்றாள் .

“நீ எதுக்கு அங்க.. அதெல்லாம் எதுவும் வேணாம் . அங்க கசகசன்னு இருக்கும் . உனக்கு அதெல்லாம் சரியா இருக்காது ” என்று சதாசிவத்திடம் இருந்து இதழ்யாவை தள்ளி வைக்கும் நோக்கில் பேசினான் அவளிடம் .

“அதெல்லாம் எனக்கு எந்த பிரச்னையும் இல்ல… தேன்மொழி அக்கா அங்க தனியா இருப்பாங்க, இந்த் மாதிரி சமயத்துல அவஙக கூட இருக்கனும் . நான் வருவேன் ” என்றாள் வீம்பாக எழுந்து நின்று.

“நான் சொல்றதை கேட்குறது இல்லேனு முடிவுலையே இருக்கா இவ… ” என்று அவளை முறைத்தவன் “சரி வா… ” என்றான்.

“கண்ணு ஒரு நிமிஷம் இருங்க…” என்றவர் வேகமாக கிச்சனுக்குள் சென்று கை நிறைய பூக்களை எடுத்து வந்தவர் “காலையில வரும்போது மார்க்கெட்டுல வாங்கிட்டு வந்தேன் கண்ணு . உனக்கு எந்த பூ பிடிக்கும்னு தெரியல . புதுசா கல்யாணம் ஆன பொண்ணு இப்படி பூ இல்லாம போனா நல்லாவா இருக்கும் . அப்பறோம் என் ராசா ஒரு மூலம் பூ கூட உனக்கு வாங்கி தரலையின்னு மார்க்கெட் பூரா பேசுவாளுங்க… உனக்கு எந்த பூ கண்ணு புடிக்கும் ” என்று அவள் முன்பு நீட்டினார் .

இதழ்யாவுக்கு ஜாதி முல்லை என்றால் கொள்ளை பிரியம் அவர் வாங்கி வந்ததில் அந்த பூ இருக்கிறதா என்று பார்த்தவள் முகம் ஏமாந்து போனது . அதில் ஜாதி முல்லை இல்லை. அவள் முகம் வாடியதை கவனித்தனர் “ஏன் கண்ணு உனக்கு பிடிச்ச பூ இதுல இல்லையா ?” என்றார் .

“ஆமாம் ” என்று தலையாட்ட

“எந்த பூ உனக்கு பிடிக்கும் கண்ணு ” என்றார்.

“ஜாதி முல்லை ” என்றாள்.

“அட அது இப்போ சீசன் இல்லையே.. ” என்றவர் “சீசன் வரட்டும் நிறையா வாங்கி தரேன் . இப்போ இதை வெச்சிட்டு போ கண்ணு ” என்று முல்லை பூவை அவளுக்கு சூட்டி அழகு பார்த்தவர் . “அழகு கண்ணு நீ..”. என்றவர் . அவர் கண் மையில் இருந்து சுண்டுவிரலில் எடுத்து அதை இதழ்யாவின் இதழுக்கு கீழே வைத்தவர் “ஊர்ல இருக்குற கண்ணெல்லாம் உன்மேல தான் விழும் ” என்றார்.

“ஏன் கிழவி அவளுக்கு மட்டும் திருஷ்டி போட்டு வெக்குற எனக்கு இல்லையா ?” என்றான்.

அவனை திரும்பி மேலும் கீழும் பார்த்தவள் “அதான் உடம்பு பூரா மை பூசுன மாதிரி இருக்கே.. உனக்கு த்ரிஷ்டி வெச்சா மட்டும் தெரிஞ்சிருமா ” என்று அவனை மனதிற்குள் கலாய்த்தவளுக்கு சிரிப்பு வந்துவிட…

“ஏய் நீ எதுக்கு சிரிச்சேன்னு எனக்கு நல்லாவே தெறியும். எனக்கு எதுக்கு டி திரஸ்ட்டி போட்டு … ” என்றவன் முன்னே நடக்க…

செல்லதாயின் கையில் இருந்த பையை வாங்கிக்கொண்டு அவன் பின்னால் ஓடினாள்

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured