EPISODE 14
தன் அப்பாவின் மடியில் படுத்துக்கொண்டு தன் அம்மா சமையல் அறையில் தனி ஆளாக கஷ்டப்படுவதை எடுத்து சொல்லி குருவிடம் வேளைக்கு ஆள் சேர்க்க பூஜா சொல்லிக்கொண்டு இருக்க..
அவள் அம்மாவும் தன் நிலையை மகள் எடுத்து சொல்வதை கேட்டுவிட்டு தன் எண்ணங்களையும் அங்கே சொல்ல..
” என்ன ப்பா… நான் பேசிட்டே இருக்கேன் நீ அமைதியா எதுவும் பேசாம இருக்க… ” என்றவாரே அவர் மடியில் இருந்து எழுந்தவள் நிமிர்ந்து குருவை …. பார்த்தவள் ” அம்மா!!” என்று கத்தினாள்.
“இப்போ எதுக்கு டி கத்துற…” என்றவாறே சமையல் கட்டில் இருந்து குரல் கொடுத்தபடி ஜனனி வெளியே வந்தவர்.
ஹாலில் சோபாவில் அவளுக்கு அருகில் மற்றொரு புரத்தில் கையில் போனுடன் சந்தோஷ் சிரித்த முகமாக அமர்ந்து இருந்தான். அவனை பார்த்தவர் ” அடடே தம்பி எழுந்துட்டீங்களா? இருங்க காபி போட்டு எடுத்துட்டு வரேன் ” என்று சமயற்கட்டிற்குள் செல்ல திரும்பியவர் பூஜாவை பார்த்து ” ஏன் டி பூஜா இங்கே சந்தோஷ் மட்டும் தான் இருக்காரு. உன் அப்பா எங்கே? நான் பேச ஆரம்பிச்சதும் தப்பிச்சா போதும்னு எழுந்து போய்ட்டாரா?’ என்றார்.
” நான் எதுக்கு உன்கிட்டே இருந்து தப்பிச்சு போகணும். அப்படி போறதா இருந்திருந்தா கல்யாணம் ஆன மறுநாளே நான் ஓடி இருக்கனும் ” என்றவாரே கஜேந்திரனுடன் உள்ளே நுழைதார் குரு.
” ஏங்க நீங்க ரெண்டு பேரும் எப்போ எழுந்து வெளியே போனீங்க.. நான் உங்க ரெண்டு பேரையும் பாக்களையே… ” என்றார் ஜனனி ஒன்றும் புரியாமல்.
” இல்லை சம்மந்தி அம்மா எனக்கு புது இடங்குறதுனால சரியா தூக்கம் வரலை. சம்மந்தியும் நான் காலையில நேரமே முழிச்சிட்டு இருக்கறதை பார்த்துட்டு வாங்க அப்படியே காலாற போய்ட்டு வரலாம்னு கூப்பிட்டாரு. அதான் காலையில் நேரமே ரெண்டு பேரும் எழுந்து வெளியே கிளம்பிட்டோம். இப்போதான் நாங்க வரோம் ” என்றார்.
” அப்படியா அண்ணா… அப்போ பூஜா இவ்ளோ நேரம் அவங்க அப்பா கூட பேசிட்டு இருந்தாலே?'” என்று திரும்பி பூஜாவை பார்க்க…
அவளோ இன்னமும் தான் சந்தோஷ் மடியில் இவ்வளவு நேரம் படுத்து இருந்ததை நம்ப முடியாமல் அவனையே பார்த்துக்கொண்டு இருக்க… ” ஏய் பூஜா.. உன்னை தான் டி கூப்பிடுறேன் காது கேக்கலையா? இவ்வளவு நேரம் நீ உன் அப்பாகிட்டே தான பேசிட்டு இருந்த… ஆனா உன் அப்பா காலையில நேரமே வெளியே போய்ட்டதா அண்ணா சொல்லறாரு ” என்றார் ஜனனி.
தன்னை அதிர்ச்சி நிறைந்த பார்வை பார்த்துக்கொண்டு பூஜா இருக்க… ” என்ன பூஜா அதான் அம்மா கேக்குறாங்கல்ல.. இப்படி பெரியவங்க பேசுற அப்போ பதில் சொல்லாம அமைதியா இருக்குறது நல்லவா இருக்கு. முதல்ல பெரியவங்களுக்கு மரியாதையை கொடுக்க பழகிக்கோ.. ” என்று அவளை வெறுப்பெற்ற..
” நல்லா சொல்லுங்க தம்பி இவ எப்பவுமே இப்படித்தான் என்னை குழப்பிவிடுறதையே வேலையா வெச்சிருப்பா.. ” என்றவர். ” நான் கேக்குற கேள்விக்கு இவ பதில் சொல்ற மாதிரி தெரியலை. இருங்க உங்க எல்லாருக்கும் காபி போட்டு எடுத்துட்டு வரேன் ” என்றவர் கிட்சனிற்குள் சென்றுவிட்டார்.
கஜேந்திரன், குரு இருவரும் அவர் அவர் அறைக்கு சென்று குளிடித்துவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்றுவிட..
அவர்கள் சென்றதும் சோபாவின் மறுமுனையில் இருந்து சர்… என்று பூஜாவின் அருகில் சறுகிக் கொண்டு வந்த சந்தோஷ் ” என்ன பூஜா எதுவும் பேசாம என்னை அப்படியே வெச்ச கண்ணு வாங்காம பாத்துட்டு இருக்க..நான் என்ன அவ்ளோ அழகாவா இருக்கேன் ” என்றான் சந்தோஷ்.
அவன் தனக்கு மிக அருகில் இருப்பதை பார்த்தவள் சோபாவில் இருந்து வேகமாக எழுந்தவள் ” நான் தான் என் அப்பான்னு நினைச்சு உன் மடியில வந்து படுத்தேனே.. நீ சொல்லி இருக்க வேண்டாமா என்கிட்டே நீ என் அப்பா இல்லைன்னு ” என்றான் பூஜா கோவமாக.
” இப்படி ஒரு சூப்பர் சான்ஸ் என்னை தேடி தானா என் மடியில் வந்து விழற அப்போ நான் எப்படி அதை கெடுப்பேன். அதான் கொஞ்ச நேரம் ஜாலியா இந்த மொமெண்டை என்ஜாய் பண்ணலாம்னு அமைதியா இருந்துட்டேன் ” என்று அவள் படுத்து இருந்த தன் தொடையை தடவிக் காட்டி ” ச்சே.. கொடுத்து வெச்சது ” என்றான் அவளை ஓரக் கண்ணால் பார்த்து.
” யூ… யூ… இடியட் நீ வேணும்னே என்கிட்டே சொல்லாம நான் உன் மடியில் படுத்ததை என்ஜோய் பண்ணிட்டு இருந்து இருக்க.. ” என்று ஆத்திரதோடு அவன் கழுத்திற்கு அருகில் தன் கைகள் இரண்டையும் கொண்டு வந்தாள்.
” ஆண்ட்டி எனக்கு காபி வேண்டாம் ‘ என்று சந்தோஷ் திடீர் என்று கத்தவும். எங்கே அவன் சத்தம் கேட்டு தன் அம்மா கிட்சனில் இருந்து வந்து விடுவாரோ என்று பூஜா பின்னால் நகர்ந்து கொள்ள…சரியாக காபி கப்களுடன் ஜனனி வெளியே வந்தவர் ” ஏன் சந்தோஷ் காபி வேணாம்னு சொல்றிங்க? காலையில காபி கொஞ்சமா குடிச்சா புத்துணர்ச்சியா இருக்கும்ல… ” என்றார்.
” இல்லை ஆன்டி ஆல்ரெடி நான் ரொம்ப புத்துணர்வா இருக்க மாறி பீல் பண்றேன். இப்போ காபி குடிச்ச அந்த பீல் போய்டும். அதனால எனக்கு காபி வேண்டாம் ஆன்டி ” என்று பூஜாவை ஓரக் கண்ணால் பார்த்து கூறினான்.
“ராஸ்கல் நான் அவன் மடியில படுத்து இருந்தது அவனுக்கு புத்துணர்வா இருந்துதுன்னு எப்படி சொல்றான் பாரு ” என்று நினைத்தவாரு பூஜா அவனை தன் மனதிற்குள் திட்டிக்கொண்டு இருக்க.. ” சரி தம்பி அப்போ குளிச்சிட்டு பிரெஷ் ஆகிட்டு வாங்க நான் உங்களுக்கு டிபன் எடுத்து வெக்குறேன் ” என்றவரர் பூஜைவிடம் திரும்பி ” பூஜா இந்த உன் அப்பாவுக்கும்,
சமந்திக்கும் காபியை கொடுத்துட்டு வா.. ” என்று காபி ட்ரேவை அவள் கையில் திணிக்க… அவளை பார்த்து ” எப்படி ” என்பது போல தன் புருவத்தை உயர்த்தி கட்டிய சந்தோஷ் குளிக்க சென்றுவிட…
காபி ட்ரேயை எடுத்துக்கொண்டு தன் அம்மாவை முறைத்துவிட்டு அங்கிருந்து சென்றவள் சுற்றிலும் யாரேனும் இருக்கிறார்களா? என்று பார்த்துவிட்டு ” ஏய் பூஜா நீ சரியான ஆளுதான் டி.. சோபாவுல உன் பக்கத்துல சந்தோஷ் உக்காந்து இருக்கான்னு தெரிஞ்சு வேணும்னே உன் அப்பா தான் அங்கே இருக்கா மாறி பேசிட்டு சீன் போட்டு அவன் மடியில் படுத்துட்டு, கடைசில அவனையே தப்பு பண்ணினவன் மாதிரி அவன்கிட்டயே சண்டைக்கு போற டி… பலே ஆள் தான் நீ ” என்று தன்னை தானே மனதிற்குள் மெச்சிக்கொண்டாள்.
பின் காபியை எடுத்துக்கொண்டு அங்கிருத்து சென்றாள்.
இங்கே இரவு லேட்டாக தூங்கியதில் மீனு சற்று லேட் ஆக கண் விழிக்க அவள் எதிரே குளித்து முடித்து வேறு உடை மாற்றிக்கொண்டு ஜெய் தன் வீல் சேரில் அமர்ந்து இருந்தான்.
சோகமான முகமும், முகம் முழுவதும் தாடியுடன் சற்று பருத்து இருந்த தேகத்தோடு அமர்ந்து இருந்தவன் இத்தனைக்கும் பிறகும் அவன் பார்வை மட்டும் கம்பீரமாக கூர்மையாக அவளையே பார்த்துக்கொண்டு இருந்த ஜெய்யை பார்த்த மீனு “எழுந்துட்டீங்களா? என்னையும் எழுப்பி விட்டு இருக்கலாமே..” என்றவாறு தன் கலைந்த கூந்தளை சரி செய்தவாறே எழுந்து மெத்தையில் அமர்ந்தாள்.
ஆனால் அவனோ எதுவும் பேசாமல் மீனுவையே பார்த்து முறைத்துக்கொண்டு அமர்ந்து இருக்க.. ” என்ன நான் பேசுறேன் இவன் பத்தில் சொல்லாம என்னை இப்படி முறைச்சிட்டு இருக்கான் ” என்று நினைத்தபடி அவன் எதுவும் பேவானா? என்று ஜெய்யையே பார்த்தாள் மீனு.
” நீ யாரு? என்னை ஏன் நீயா முன் வந்து கல்யாணம் செய்துகிட்டே.. உன்னை பத்தி எனக்கு தெரிஞ்ச வகையில் எல்லாம் விசாரிச்சு பார்த்துட்டேன் என்னால உன்னை பத்தி தகவலை மட்டும் தேடி தெரிஞ்சுக்க முடிஞ்சுதே தவிர,, நீ எதுக்காக என்னை கல்யாணம் செய்துக்கிட்டேன்னு கண்டு பிடிக்க முடியலை ” என்றான் சற்று கோபமாக..
” ஓஹோ… இதுக்கு தான் இப்படி முகத்தை உருன்னு வெச்சிட்டு இருக்கானா? ” என்று உள்ளுக்குள் சிரித்துக்கொண்டவள்.
” நைட் என்னவோ நான் சொல்லலையின்னாலும் உங்களால் கண்டுபிடிக்க முடியும்னு வீம்பா சொன்னிங்க… எங்கே உங்க வீம்பு இப்போ நான் சொன்ன விஷயத்தை கண்டு பிடிக்க முடியலையின்னு கோபமா மாறிடுச்சா? ” என்றாள் சிரித்துக்கொண்டே.
தன்னை இப்படி காலை வாரும் மீனுவின் மீது ஜெய்க்கு கோபம் வரவில்லை இப்பொது. அதற்கு மாறாக அவள் சிரிக்கையில் அவள் கன்னத்தில் விழும் குழியை தன்னையும் மரந்து ரசித்துக்கொண்டு இருந்தான்.
ஜெய் எதுவும் பதில் கூறாமல் அமைதியாக அவளையே பார்த்துக்கொண்டு இருக்க… “என்ன இவனை கிண்டல் பண்ணி பேசினா எதுவும் சொல்லுவான்னு பார்த்தா அமைதியா என்னையே பார்த்துட்டு இருக்கான். ஒரு வேலை என்னை எப்படி திட்டுறதுன்னு யோசிச்சிட்டு இருப்பானோ?” என்று யோசித்தவள் ஜெய் முகத்திற்கு முன்பு கையை ஆட்டினால்.
அதில் சுயம் பெற்றவன் வேண்டும் என்றே கோபத்தை வரவழைத்துக்கொண்டு நான் கேட்டதுக்கு பதில் சொல்ல போறியா? இல்லையா? ‘ என்றான்.
“ம்ம்ம்…”என்று தன் கன்னத்தில் கைவைத்து ஏதோ யோசித்தவலாக “நான் ஏன் உங்களை கல்யாணம் செய்துக்கிட்டேன்னு சொல்றேன். ஆனா நான் சொல்றதை நீங்க செய்யணும். அதாவது நான் என்ன எல்லாம் சொல்றேனோ அதை எல்லாம் மறுக்காம நீங்க செய்தா நான் உங்களை கல்யாணம் செய்துங்கிட்டதுகான காரணத்தை சொல்றேன் ” என்றாள்.
‘ என்ன நீ சொல்றதெல்லாம் நான் செய்யணுமா? ” என்று சொல்லி நக்கலாக சிரித்தவன்”இப்போ சொல்ல போறியா? இல்லையா?” என்றான் கடுப்பாக.
” கேட்க போறிங்களா? இல்லையா? அப்போ தான் நான் சொல்லுவேன் ” என்றாள்.
ஜெய் எதுவும் பேசாமல் அமைதியாக அவளையே பார்த்துக்கொண்டு இருக்க…”நீங்க என்ன செய்யணும்னு நான் சொல்லிடறேன். அது எப்போ நடக்குதோ அப்போ நானாகவே வந்து உங்களை திருமணம் செய்துக்கிட்டதுக்கான காரணத்தை சொல்றேன் ” என்றவள்.
அடுத்து அவன் எதும் கேட்பானா என்று ஆவலாக அவனையே பார்க்க… அவனோ அமைதியாக அந்த வீல் சேரை திருப்பிக்கொண்டு வாசல் கதவு நோக்கி சென்றான்.
‘ நீங்க ன்னா சொல்றதை கேட்காம போனாலும் நான் சொல்றதை செய்தா தான் நீங்க கேட்டதுக்கு
பதில் சொல்லுவேன். ” என்றவள் ” நீங்க இப்படி சோகமா முகத்தை வெச்சுட்டு தாடி விட்டுட்டு இருக்கறதை மாத்திக்கணும். உங்களை இப்படி பார்க்க நல்லாவே இல்லை. அப்பறோம் அந்த குடியூண்டு தொப்பை இருக்கே அதை கொஞ்சம் குறைச்சுக்கணும் நீங்க ஹேண்ட்ஸமா இருப்பிங்கனு தெரிரியும் ” என்றவள் அவன் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்று ஆர்வமாக அவன் முன்பு வந்து வழி மறித்துக்கொண்டு நிற்க…
“நீ சொன்னதுக்கங்க நான் என்னை மதிக்கிட்டு உன் முன்னாடி வந்து நிக்கணுமா? அது கனவுலயும் நடக்காது? என்றவன்.”வழியை விடு எனக்கு எந்த காரணமும் தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றான்,
” சரி தெரிஞ்சுக்க வேண்டாம்னா விடுங்க…” என்றவள் “வேணும்னா நீங்க அந்த தாடியை எடுத்தாளாவது நான் நீங்க கேட்ட கேள்விக்கு க்ளூ தருவேன் ” என்று தன்னை தாண்டி சென்றவனை பார்க்க… அவள் அப்படி சொன்னதும் ஆர்வத்தில் வீல் சேர் இயக்குவதை நிறுத்திவிட்டு ” என்ன க்ளூ? ” என்றான்.
“ஐ… இப்படி கேட்டா உடனே சொல்லிருவேனா? நீங்க ஷேவ் பண்ணிட்டு வாங்க சொல்றேன் ” என்றாள்.
அதன் பின் அவன் அங்கிருந்து சென்றுவிட.. ” பார்ட்டியை சொன்ன பேச்சு கேக்க வெக்குறது கஷ்டம் போலையே… ம்ஹும்… என்று பெருமூச்சு விட்டவள் குளிக்க சென்றாள்.
இங்கே அறையை விட்டு வெளியே வந்த ஜெய் தன் தாடியை தடவியபடியே ஏதோ யோசனையில் மூழ்கினான்.
