EPISODE 13
வீட்டில் இருந்து கிளம்பி அவசரமாக ஆஃபீஸிற்கு வந்த விஜய்யை வாசலிலேயே காத்திருந்த அர்ஷ் “விஜய் வந்துட்டியா அப்பாடா… எனக்கு இப்போ தான் உயிரே வந்துச்சு ” என்று பெருமூச்சுவிட்டபடி காரில் இருந்து இறங்கி உள்ளே சென்றவன் பின்னால் சென்றான் .
“எதுக்கு அர்ஷ் என்னை இவ்ளோ சீகிரியாம் ஆஃபீச்க்கு வர சொன்ன… அப்டி என்ன தலை போற விஷயம் போன்ல கூட சொல்ல முடியாத அளவுக்கு, இனியாவை பத்தி ஏதோ சொல்லணும்னு சொன்னியே என்ன அது ? ” என்றான் தன் கோர்ட்டை சரி செய்துகொண்டே லிப்ட் பக்கம் வந்து அதன் பட்டனை அழுத்திவிட்டு நின்றான் .
“ஆமா விஜய் இனியாவை பற்றியது தான் . அதை நீ வீட்ல இருக்க அப்போ போன் பண்ணி சொல்லி நீ எதுவும் ரியாக்ட் பண்ணிட்டா என்ன செய்றது . அப்பறோம் அதை பார்த்துட்டு வீட்டில் இருக்கவங்க எதுவும் கேட்டுடா என்ன சேராது அதான் உன்னை இவ்ளோ காலையில் ஆபீஸ்க்கு வரவழைச்சிட்டேன் ” என்று லிப்ட் திறந்ததும் அதன் குறுக்கே நின்று விஜய்யின் பாடிகார்ட்களை பார்த்து .
“நீங்க எல்லாரும் கொஞ்சம் அலர்ட்டா இருங்க.. இங்கே கொஞ்ச நேரத்துல ஒரு கலவரமே நடக்க வாய்ப்பு இருக்கு ” என்று அவர்களிடம் எச்சரித்தவன் விஜய்யுடன் உள்ளே ஏறினான் .
“என்ன அர்ஷ் உளர்ர கொஞ்சம் தெளிவா சொல்லு” என்றான் விஜய் .
“நம்ம இனியாவை இந்தியா அழைச்சிட்டு வந்தது யார்க்கும் தெரியாதுன்னு நம்ம தான் நினைச்சிட்டு இருந்தோம் . ஆனா துபாயில் எவனோ இனியாவை சொந்தம் கொண்டாடிட்டு வந்து இருக்கான்” என்றான் அர்ஷ் .
“வாட்! இனியாவை சொந்தம் கொண்டாடிட்டு வந்திருக்காங்களா ? யாரு ? இனியாதான் அவளுக்குன்னு யாரும் இல்லைனு சொன்னாலே அப்பறோம் யாரு அவளுக்கு சொந்தம்னு வந்து இருக்குறது ” என்றான் விஜய் குழப்பமாக .
“நானும் அதையே தான் நினைச்சேன் விஜய் . வந்த அந்த ஆள்கிட்டையும் கேட்டு பார்த்துட்டேன். ஆனா அவன் உன்கிட்டே தான் பேசணும்னு வந்ததுல இருந்து சொல்லிட்டு இருக்கான் ” என்றான் அர்ஷ் .
அர்ஷ் சொன்னதை கேட்டு யோசித்துக்கொண்டே லிப்ட் அவர்கள் இருந்த தளத்திற்கு வந்ததும் வெளியே வந்தவன் நேரே அவன் ஆபீஸ் ரூமிற்கு சென்றான் . கதவை திறந்துகொண்டு உள்ளே செல்ல… அங்கே சோபாவில் சூடான காபியை அருந்திக்கொண்டு அமர்ந்து இருந்தான் ராகேஷ்.
அவனை பார்த்ததும் விஜய்யின் முகம் இறுக்கத்தை தத்தெடுத்துக் கொண்டது . வேகமாக அவன் முன்பு வந்தவன் “ராகேஷ் நீயா ? நீ எதுக்காக இங்கே வந்த? ” என்றவன் அர்ஷை திரும்பி பார்த்து “இவனை எதுக்காக உள்ளே விட்டே … யார் என்னன்னு கேட்காம கண்ட கண்டவர்களை எல்லாம் உள்ளே உக்கார வெச்சு உபசரிச்சிட்டு இருக்க.. ” என்று திரும்பி கோபமாக ராகேஷை பார்த்தான் .
“விஜய் நீ சொல்றறது எல்லாம் பார்த்தா இவரை உனக்கு ஏற்கனவே தெரியும் போல..” என்றான் அர்ஷ் .
“எனக்கு தெரிஞ்சவன்னு இவனை சொல்ற அளவுக்கு ஒன்னும் இவன் பெரிய ஆள் இல்லை . நான் அமெரிக்காவில் ஹையர் ஸ்டடீஸ் படிச்ச அப்போ என்னோட காலேஜில் ஒண்ணா படிச்சவன் ” என்றான் விஜய் பல்லைக்கடித்துக்கொண்டு .
“அப்போ உன்னோட பிரெண்டா விஜய் ” என்ற அர்ஷ் ராகேஷிடம் திரும்பி “என்ன சார் இது நீங்க விஜய்யோட படிச்சவர்னு முன்னமே சொல்லி இருக்கலாமே ” என்று சிரித்துக்கொண்டே பேசியவன் .
“நானும் வந்ததுல இருந்து இவரை பத்தி கேட்டுட்டு இருக்கேன் உங்களுக்கு விஜய்யை எப்படி தெரியும்னு . ஆனா இவர் எந்த கேள்வி கேட்டாலும் விஜய்யை வரச்சொல்லு.. விஜய்யை வர சொல்லுன்னு தெரிஞ்ச ரெகார்ட் மாதிரி சொல்லிட்டே இருந்தாரு ” என்று அர்ஷ் சகஜமாக பேசிக்கொண்டே விஜய்யை பார்க்க.. அவன் பல்லைக்கடித்துக்கொண்டு அர்ஷை முறைத்தான் .
“ஆத்தி இப்போ எதுக்கு இவன் நம்மள இப்படி முறைக்குறான் . நான் ஏதும் வழக்கம் போல நேரகாலம் தெரியாம ஒளறிட்டு இருக்கேனான்னு தெரியலையே . ம்ஹும்… விஜய் முறைக்குறதுதே சரி இல்லை , இனி இங்கே இருந்தா என் தலை உருளுறதுக்கு வாய்ப்பு இருக்கு முதல்ல இங்கே இருந்து எஸ் ஆகிடு டா அர்ஷ் ” என்று திருதிருவென விழித்துக்கொண்டே அங்கிருந்து மெல்ல நகர போனான்
விஜய் இவ்வளவு கோபத்தோடு பேசினாலும் அதை எல்லாம் கேட்டுக்கொண்டே கையில் இருந்த காபியை முழிவதும் பொறுமையாக ரசித்து ருசித்து குடித்தபின் காபி கப்பை மேஜையில் வைத்துவிட்டு ராகேஷ் “என்ன விஜய் என்னை இங்கே பார்த்ததும் உனக்கு BP எகுறும் போல ” என்று சிரித்தவன் .
எழுந்து வந்து அங்கிருந்து வெளியே செல்ல போன அர்ஷின் தோள் மீது கையை போட்டு அவனை தன் பக்கம் இழுத்தவன் “என்ன கேட்டீங்க மிஸ்டர்… ” என்று அர்ஷை பார்க்க… ” அர்ஷ் என்னோட நேம் ” என்றான் அசடு வழிந்தபடி சிரித்துக்கொண்டே சொன்னான்.
“ஆஹ் மிஸ்டர் அர்ஷ் உங்க போஸும் நானும் 2 வருஷம் ஒரே காலேஜ்ல ஒண்ணா படிச்சோம் . காலேஜ் டேஸ்ல நான் ஒரு பொண்ணை அம்மாவாக்கிட்டேன் . அந்த பொண்ணே என்கிட்டே காசை வாங்கிட்டு அபார்ஸன் பண்ணிக்க போய்ட்டா .. ஆனா இவன் என்னவோ பெரிய நியாயஸ்தன் மாதிரி அந்த பொண்ணு கிட்டே அதையும் இதையும் பேசி எனக்கே கல்யாணம் செய்துவேகுறேன்னு என்கிட்டே கூட்டிட்டு வந்துட்டான் . நீயே சொல்லு ஏதோ தடவை பாஸுக்கு பழகினவளை நான் கல்யாணம் பண்ணிக்கணுமா தசரதர் மாதிரி எனக்கும் 60000 பொண்டாட்டி இருந்திருக்கும், ஏன் அதுக்கு மேல கூட இருந்திருக்கலாம் . அப்படி இருக்குற என்னை போய் என் கூட படுத்து ஏதோ நான் கொஞ்சம் கேர்லெஸ்ஸா இருந்தததுனால அவளை கல்யாணம் செய்துக்க முடியுமா ” என்று அர்ஷை பார்த்தான் .
“ஆத்தி !! இவன் என்ன இவன் என்ன பெரிய தில்லாலங்கடியா இருப்பான் போல இருக்கு . இதுல இவன் பண்ணின காரியத்துக்கு என்னை கூட கூட்டு சேர்த்து என்கிட்டேயே நியாயம் கேக்குறான்.” என்று உள்ளுக்குள் புலம்பியவன் தன் கழுத்தில் இருந்த ராகேஷின் கையை எடுத்துவிட்டவன்.
“நீங்க பணிந்து சரியா தப்பான்னு சொல்ற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை சார் . ஆனா நீங்க செய்தது என் பாஸுக்கு பிடிக்கலையினு எனக்கு நல்லாவே தெரியும் . எதுவா இருந்தாலும் நீங்க ரெண்டு பெரும் பேசி தீர்த்துக்கோங்க . நடுவுல நான் எதுக்கு ” என்று அங்கிருந்து வெளியே செல்ல போனான் .
“டேய் அர்ஷ் இவன் எதுக்காக இங்கே வந்திருக்கானு கேட்டு சொல்லு டா… அதை கேட்காம நீ வெளியே போற.. ” என்றான் உட்சபட்ச கோபத்தில் .
அப்படியே நின்ற அர்ஷ் விஜய் சொன்னதும் திரும்பி ராகேஷை பார்த்தான் .
“நான் இவனை பார்த்து என்ன பிசினஸ் பேசவா வந்திருக்கேன் . எனக்கு சொந்தமான ஒரு பொருள் இவன்கிட்டே இருக்கு. சொல்லப்போனா இவன் என் பொருளை என்கிட்டே இருந்து திருடிட்டு இந்தியா வந்துட்டான் . அதை திரும்பி வாங்கிட்டு போலாம்னு இங்கே வந்திருக்கேன் . அதை கொடுக்க சொல்லு . நான் கிளம்பிடறேன் சொல்லு அர்ஷ் .” என்றவன் “உன்னை பேர் சொல்லி கூப்பிட்றதுனால உனக்கு பிரச்சனை இல்லையே ” என்றான் .
அர்ஷ் இல்லை என்று இடவலமாக ஆட்ட… விஜய் அவன் தலையாட்டியதை பார்த்து முறைக்கவும் “ஐயோ ,.. இன்னிக்கு யார் முகத்துல முழிச்சேனோ தெரியலையே. எங்கிருந்தோ வந்தவன் என் வேளைக்கு வெட்டு வெச்சிட்டு போயிடுவான் போல இருக்கு . உசார் ஆகிடு டா அர்ஷு… ” என்று உள்ளுக்குள் புலம்பிக்கொண்டே “விஜய் இவரு பொருளை எதை நீ வெச்சிருக்க … அதை கொடுத்துட்டு வேண்டியதுதானே ” என்றான் அர்ஷ் .
“அதான் உன்னோட பியேவே சொல்லிட்டாருல்ல விஜய் . என்னோட பொருளை என்கிட்டே கொடுத்திரு நான் நெஸ்ட் பிலைட்டில் துபாய் கிளம்பிடறேன் ” என்றான் ராகேஷ் .
“ஏய் வந்ததுல இருந்து அதையே சொல்லிட்டு இருக்க… உன்னோட பொருள் எதுவும் என்கிட்டே இல்லை . எனக்கு யாரோட பொருளையும் எடுத்து வெச்சுக்குற பழக்கமும் கிடையாது. ” என்றான் கோபமாக .
“அப்படியா ! அப்போ நான் ஏலத்துல காசு கொடுத்து வாங்கின அந்த பொண்ணு அதான் நீ என்கிட்டே இருந்து திருடிட்டு வந்தியே இனியா அவளை என்கிட்டேயே கொடுத்திரு நான் கிளம்பிடறேன் ” என்றான் .
ராகேஷ் இனியா என்று சொன்னது விஜய் சட்டென்று அவனை பார்க்க..
“ஆத்தி இனியாவை இவன் தான் விலைக்கு வாங்கினானா !.. ஆமா இவன் வந்ததுமே இனியாவை பத்தி பேசணும்னு சொன்னானே அதை எப்படி மறந்தேன் நான் ” என்று யோசித்த அர்ஷ் வேகமாக விஜய்யிடம் வந்து ” என்ன விஜய் இவன் என்னவோ கடையில் வாங்கின பொம்மையை கேக்குற மாதிரி இனியாவை வேணும்னு கேக்குறான் . இப்போ என்ன பண்ண போறே ” என்றான் .
அர்ஷ் பேசிக்கொண்டு இருக்க… ராகேஷை முறைத்த விஜய் அவனிடம் வந்து “இனியா ஒன்னும் கடைத்தெருவுள வாங்குற பொருள் கிடையாது . உயிர் உள்ள ஒரு பொண்ணு. அவளை நீ கேட்டதும் உன்கூட அனுப்ப நான் ஒன்னும் மடையன் கிடையாது ” என்றான் .
“ஹாஹாஹா…. என்ன விளையாடுறியா விஜய் . அவ மார்க்கெட்டுக்கு வந்து விலை போனவ … அதுவும் அவளை நான் ஒன்னு இல்ல , ரெண்டு இல்ல… முழுசான பத்து கோடி விலை கொடுத்து வாங்கியிருக்கேன் . அவ அவ்ளோ ஒர்த் பீஸ் . இந்த் மாதிரி ஒரு குட்டியை நான் எவ்ளோ வருசமா தேடிட்டு இருக்கேன் தெறியுமா ? நீயும் அவளை பார்த்தே இல்ல… ஆள் எப்படி சும்மா தல தளன்னு பிரெஷா இருக்கா தானே .. இப்போதான் அவளுக்கு 18 வயசு கம்ப்ளீட் ஆகியிருக்கு. பசங்க வாசனையே இல்லாம வளர்ந்து இருக்கா … இப்படி பட்ட ஒரு பொண்ண அவ்ளோ சீகிரியாம் எங்கே தேடினாலும் கிடைக்காது தெரியுமா ?” என்றவன் .
விஜய் அருகில் வந்து அவன் காதில் “அப்பறோம் முக்கியமான ஒரு விஷயம் அவ வெர்ஜின் ” என்று அவனை விட்டு விலகி நின்றவன் சிரித்துக் கொண்டே ” இப்படி பட்ட ஒரு பொண்ணை கன்னி கழிய வைக்குற பெருமை என்னையே சேரணும்னு தான் அவ்ளோ விலை கொடுத்து அவளை விலைக்கு வாங்கினேன் . ஆனா நீ எதுமே பண்ணாம அவளை உன்கூட கூட்டிட்டு வந்து மஜா பண்ணிட்டு இருக்க போல.. சொல்லு அவளை எங்கே வெச்சிருக்க… அவ கூட எல்லாம் முடிச்சுட்டியா ? ” என்று கண்ணடித்துக்கொண்டே கேட்டான் ராகேஷ் எகத்தாளமாக .
அவன் பேசியதை கேட்டு கோபத்தின் உச்சிக்கே சென்ற விஜய் “ராகேஷ் !!” என்று எட்டி வந்து அவன் சட்டையை பிடிக்க… இனியாவை பற்றி இழிவாக பேசியது கேட்டு அர்ஷிற்கும் கோபம் வந்துவிட்டது . ஆனால் அவன் சட்டையை பிடிப்பதற்குள் விஜய் அந்த வேலை செய்திருக்க கோபமுகத்தோடு அர்ஷும் ராகேஷை விஜய் என்ன செய்யபோகிறானோ என்று ஏறிட்டான் .
