Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 105

உன் ரகசிய ரசிகை நான் 105

by Layas Tamil Novel
226 views

EPISODE 105

கதிர், ராதா கல்யாண தேதி எல்லாம் நிச்சயமாகிவிட, அவர்கள் திருமணத்திற்காகப் பத்திரிகை எல்லாம் அடித்து முடித்து வெங்கடாசலமும், துறையும் ஒருபுறம் பத்திரிகை கொடுப்பதில் பிஸியாக இருக்க…. கனகாவும், விசாலாட்சியும் தங்கள் சொந்த பந்தங்களுக்கும் நெருங்கிய நண்பர்களுக்கும் பத்திரிகை கொடுக்கச் சென்றுவிட…. செண்பகம் மட்டுமே தனியாக வீட்டில் இருந்தார்.

ராதாவின் கால் இப்போது ஓரளவுக்குக் குணமாகிவிட சக்கர நாற்காலியின் உதவி இல்லாமல் மெல்ல மெல்ல நடந்து லிப்ட் வழியாகக் கீழே வந்தால். லிப்டில் இருந்து வெளியே வந்த ராதா… செண்பகம் மட்டும் தனியாக அமர்ந்து எதையோ யோசித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தவள் நேராகச் செண்பகத்திடம் வந்தவள், “என்ன செண்பகம் அம்மா தனியாக உட்கார்ந்து எதுவோ ரொம்பத் தீவிரமா யோசிச்சிட்டு இருக்கீங்க?” என்று கேட்டால். “ஒன்னும் இல்லடா. நான் சும்மாதான் உட்கார்ந்து இருக்கேன்,” என்றார் அவர் சுரத்தே இல்லாமல்.

“நீங்க என்கிட்டப் பொய் சொல்றீங்க…. என் செண்பகம் அம்மாவோட முகத்தைப் பார்த்தாலே தெரியுது ஏதோ சோகமா இருக்கீங்கன்னு…. எனக்குத் தெரியாதா நீங்க நார்மலா இருக்கும் போது எப்படி இருப்பீங்கன்னு… என்கிட்டச் சொல்ல மாட்டீங்களா செண்பகம் அம்மா?” என்றாள் ராதா.

ராதா செண்பகத்திடம் என்ன விஷயம் என்று கேட்டுக் நச்சரித்துக் கொண்டு இருக்க…. அப்போது சரியாக உள்ளே வந்த கீர்த்திகாவும், வடிவும் உள்ளே வந்தவர்கள் ராதா செண்பகத்திடம் எதையோ கேட்டுக் நச்சரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த கீர்த்திகா, “ஏன் என்ன டி…. செண்பகம் அம்மாகிட்டே எதையோ கேட்டு அவங்களத் தொந்தரவு பண்ணிட்டு இருக்க?” என்று கேட்டால் கீர்த்திகா.

“வாடி நீயும் சரியா வந்துட்டியா… நீயே பாரு செண்பகம் அம்மா முகத்தைப் பார்த்தா அவங்க ஏதோ யோசனைல முகத்தைச் சோகமா வச்சிருக்க மாதிரி தானே இருக்கு…” என்று கேட்டால் ராதா. அவர் அருகில் அமர்ந்து செண்பகத்தின் முகத்தை உற்றுப் பார்த்த கீர்த்திகா… “ஆமா!!! ராதா எனக்கும் அப்படித்தான் தெரியுது,” என்று சொன்ன கீர்த்திகா.. செண்பகத்திடம் திரும்பி, “ஏம்மா ஒரு மாதிரியா இருக்கீங்க… உங்களுக்கு உடம்புக்கு எதுவும் சரியில்லையா?” என்று கேட்டால் கீர்த்திகா.

“அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா…. இப்போ நம்ம வீட்ல ஒரு நல்ல விசேஷம் நடக்குது…. காணாம போன என் பொண்ணும் என் கூட இருந்திருந்தால்… அவளுக்கு இந்நேரம் இதே மாதிரி ஒவ்வொரு விசேஷம் பண்ணி… நானும் கண்குளிரப் பார்த்து இருப்பேன்னே. அது முடியாமல் போயிடுச்சே… அவ இப்ப எங்க இருக்கா? என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்னு? எனக்கு ரொம்பக் கவலையா இருக்கு…. அவளுக்கு ஏதோ சரியில்லையோன்னு என் மனசுக்குத் தோணுது…. காலைல நான் எழுந்ததிலிருந்து என் மனசு ரொம்ப நெருடலா… கஷ்டமா இருக்கு…. எல்லாரும் பத்திரிக்கை கொடுக்கப் போகும் போது என் கவலையை அவங்க கிட்டச் சொல்லி அவங்களையும் சங்கடப்படுத்த வேண்டாம் என்று தான் நான் யார்கிட்டயும் சொல்லல…. ஆனா என் சின்ன பொண்ணு என்ன வந்துப் பார்த்ததுமே என் முகத்தைப் பார்த்துக் கண்டுபிடிச்சிட்டா….,” என்று சொல்லி ராதாவின் கன்னத்தில் கிள்ளினார் செண்பகம்.

“நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க செண்பகம் அம்மா. உங்க பொண்ணு எங்க இருந்தாலும் பத்திரமாக நல்லா இருப்பாங்க…. அவங்களுக்கு எதுவும் ஆகாது சரியா… நீங்க எதையும் போட்டு மனசுல குழப்பிக்காதீங்க… அவங்க கூடிய சீக்கிரமே உங்களுக்குக் கிடைச்சிடுவாங்க…. கிடைச்சிடனும்னு நான் சாமிக்கிட்ட வேண்டுகிறேன்,” என்று சொன்னால் கீர்த்திகா.

நீ கீர்த்திகா சொன்னதைக் கேட்ட செண்பகத்தின் மனது சற்று ஆறுதலாக இருக்க…. கீர்த்திகாவின் தலையை வாஞ்சையாகத் தடவி கொடுத்து… “நீ சொன்ன வார்த்தையே என் மனசுக்குச் சந்தோஷமா இருக்குமா… என் பொண்ணு நல்லா இருப்பான்னு நான் நம்புறேன்,” என்று செண்பகம் சொல்ல…. இவர்கள் அனைவரையும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த வடிவு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

பிறகு வேலையாட்களிடம் சொல்லி இவர்களுக்கு ஜூஸும், ஸ்நாக்ஸும் எடுத்து வரச் சொன்ன செண்பகம் வடிவைப் பார்த்து… “வா வடிவு ஏன் வந்ததிலிருந்து நீ ஏதோ மாதிரி இருக்க… எதுவுமே பேசாமல் அமைதியாக இருக்கியே?” என்று கேட்டார் செண்பகம். “ஆங்…. அ.. அது… அது ஒன்றுமில்லை செண்பகம். லேசாத் தலைவலிக்குது. அதனாலதான் ஒரு மாதிரியா இருக்கு,” என்று சொல்லி சமாளித்தார் வடிவு.

“தலைவலிக்குதா? அது நீ முன்னையே சொல்ல வேண்டாமா…. அப்போ உனக்கு ஜூஸ் வேண்டாம். சூடாகக் காபி கொண்டு வரச் சொல்றேன். கொஞ்சம் காபி சூடாகக் குடிச்சேன்னா தலைவலிக்கு நல்லா இருக்கும்,” என்று சொல்லிவிட்டு வடிவிற்கு மட்டும் காபி கொண்டு வரச் சொன்னார் செண்பகம். பிறகு அனைவரும் பேசிக் கொண்டிருக்க…. அவர்களுக்கு ஸ்னாக்ஸ், ஜூஸும், காப்பியும் வந்துவிட… அதைப் எடுத்து வேக வேகமாக காபியை எடுத்துக் குடித்த வடிவு… “சரி செண்பகம். நாங்கள் சும்மா உங்க எல்லாரையும் பார்த்துட்டுப் போலாம்னு தான் வந்தோம்…. எங்களுக்கு வெளியே கொஞ்சம் வேலை இருக்கு. உங்க ரெண்டு பேரும் கிளம்பறோம்..” என்று சொல்லிவிட்டு கீர்த்திகாவை, “வா போலாம்,” என்று அவள் கை பிடித்து இழுத்துக்கொண்டு வேகமாக அவர்கள் வீட்டில் இருந்து செண்பகத்தின் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் கிளம்பிச் சென்றார் வடிவு.

வடிவு ஏதோ சரி இல்லாமல் இருப்பதை கவனித்து செண்பகம், “ஏன் வடிவு ஒரு மாதிரியா இருக்கா? எல்லார்கிட்டயும் எப்பவுமே நல்லா பேசுவா… ஆனா என்கிட்ட பேசும்போது மட்டும் ஏதோ பதட்டமா இருக்கிற மாதிரியே பேசுறாளே,” என்று யோசித்தவர். பிறகு ராதாவிடம், “ஜூஸ் குடிமா,” என்று சொல்லிவிட்டு யோசனையில் மூழ்கினார் செண்பகம்.


போதிக்குச் சங்கவி இரவு குடித்துவிட்டுச் சொன்ன விஷயங்கள் எல்லாம் காலையில் ஒவ்வொன்றாக நினைவிற்கு வர…. நிஜமாகவே துர்காவிற்கும் ஆதிக்கும் திருமணம் ஆகிவிட்டதா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்த போதி தனக்குத் தெரிந்த நபரிடம் சொல்லி ஆதியைப் பற்றியும் துர்காவைப் பற்றியும் விசாரிக்கச் சொன்னான்.

அவன் கேட்ட தகவல்கள் அவனுக்குச் சீக்கிரமே கிடைத்துவிட சங்கவி சொன்னது போல ஆதிக்கும் துர்காவிற்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்பதைத் தெரிந்து கொண்டவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. தன்னை எல்லோரும் சேர்ந்து முட்டாள் ஆகி விட்டார்களே. தன்னிடம் உண்மையைத் சொல்லாமல் ஏமாற்றி விட்டார்களே என்று அனைவர் மீதும் போதிக்கு மிகுந்த கோபம் இருந்தது. தன்னை ஏமாற்றுபவர்களை எல்லாம் சும்மா விடக்கூடாது. அவர்களை ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தவன். இதற்கு எல்லாம் முக்கிய காரணமே துர்கா தானே. அவளுக்கு நான் அவளிடம் நெருங்கிப் பழகுவது புரியாமலா போய் இருக்கும். அப்படி இருக்க அவளாவது தனக்கும் ஆதிக்கும் திருமணம் ஆகிவிட்டது என்று எனக்குத் தெரியப்படுத்தி இருக்கலாமே… என்று அவன் மொத்தக் கோபமும் துர்காவின் மேலே திரும்பியது.

இதையெல்லாம் யோசித்துக் கொண்டு ஹோட்டலில் இருந்த ரெஸ்டாரண்டில் போதி காபி குடித்துக் கொண்டிருக்க…. காபி குடித்துக் கொண்டிருந்த போதியைப் பார்த்ததும் அங்கு வந்த சங்கவி அவன் தீவிர யோசனையில் அமர்ந்திருப்பதைப் பார்த்தவள். அவன் எதிரே சேரில் வந்து அமர்ந்தவள், “என்ன போதி எதையோ ரொம்பத் தீவிரமா யோசிச்சிட்டு இருக்கே போல இருக்கே…. நேத்து நான் என் லவ் ஸ்டோரி சொன்னதும் நீ ரொம்ப ஏதோ தீவிரமா யோசிச்சிட்டு இருந்தியே என்ன விஷயம்?” என்று கேட்டால் சங்கவி. “அதெல்லாம் ஒன்னும் இல்ல சங்கவி. என் அம்மா சொன்ன விஷயத்தைப் பற்றித்தான் யோசிச்சிட்டு இருந்தேன்,” என்று ஏதோ சொல்லி சமாளித்தான்.

“உன் அம்மாவைப் பற்றிச் சொன்னதும் தான் நீ சொன்ன விஷயமே ஞாபகத்துக்கு வருது. நேத்து நீ ஏதோ ஒரு பொண்ணை லவ் பண்றேன்னு சொன்னியே…. அந்தப் பொண்ணு யாருன்னு என்கிட்ட சொல்லவே இல்லையே நீ…. நீ யாருன்னு சொல்றதுக்கு முன்னாடி நான் வேற குடிச்சிட்டு என்னோட லவ் ஸ்டோரியே உன்கிட்ட சொல்லி உன் மூட ஸ்பாயில் பண்ணிட்டேன்,” என்று சொன்னால் சங்கவி. “சேச்சே…. அதெல்லாம் ஒன்னும் இல்ல சங்கவி. நானே நேரம் வரும்போது உன்கிட்டே கண்டிப்பா சொல்றேன். அதுவரைக்கும் நீ அதை பத்தி கேட்காதே ஏன் ப்ளீஸ்,” என்றான் போதி. “சரி ஓகே போதி. நான் எதுவும் நீயா சொல்ற வரைக்கும் உன்கிட்ட கேட்கல,” என்று சொன்னால் சங்கவி.

போதியுடன் சங்கவி பேசிக் கொண்டிருக்கும் போதே அவள் போன் அடிக்க, “ஒரு நிமிஷம் போதி,” என்று சொல்லித் தன் போனை எடுத்துப் பார்க்க அவள் அப்பா தான் அவளுக்கு அழைத்திருந்தார். அதைப் பார்த்ததும் சிரித்துக் கொண்டே போனை ஆட்டன்ட் செய்தவள், “அப்பா சொல்லுங்க. எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா?” என்று மகிழ்ச்சியாகப் பேசினால் சங்கவி. “நான் நல்லா இருக்கேமா… நீ நல்லா இருக்கியா? அப்பா ஒரு முக்கியமான விஷயம் பேசலாம்னு தான் உனக்கு கால் பண்ணேன். நீ இப்போ ஃப்ரீயா இருக்கியா மா?” என்று கேட்டார் வேதாச்சலம்.

“நான் ஃப்ரீயா தான் இருக்கேன் சொல்லுங்கப்பா,” என்று சொல்லிவிட்டுப் போதியிடம் ஒரு நிமிஷம் என்று சைகை காட்டி விட்டு எழுந்து வேறு பக்கம் சென்றவள். வேதாச்சலத்திடம், “சொல்லுங்கப்பா என்ன விஷயம்? நான் தனியா தான் இருக்கேன்,” என்று பேசினால் சங்கவி. “உனக்கு விஷயம் தெரியுமா சங்கவி…. அந்தக் கதிருக்கும் சிவகாமியோட தம்பி துரையின் இரண்டாவது பொண்ணு ராதாவுக்கும் கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டாங்க. இன்னும் ஒரு வாரத்தில் அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம்,” என்று சொன்னார் வேதாச்சலம்.

“என்னப்பா சொல்றீங்க? கல்யாணம் நிச்சயமே பண்ணிட்டாங்க. என்ன சொல்றீங்க? என்னால நம்பவே முடியல,” என்று கேட்டால் சங்கவி. “ஆமாமா. இன்னைக்குக் காலையில தான் வெங்கடாசலமும், துறையும் வந்து எனக்குப் பத்திரிக்கை வச்சிட்டுப் போனாங்க…. என்னால நம்பவே முடியல. வெங்கடாசலத்தின் சொத்தை பங்கு போட்டுக்க இன்னொருத்தி வந்துட்டா,” என்றார் வேதாச்சலம்.

“ஏன் அப்படிச் சொல்றீங்க… எப்படியும் கதிர் கல்யாணம் பண்ணினாலும் பண்ணாட்டியும் வெங்கடாசலம் மக்களோட சொத்து ஆதிக்கும் கதிருக்கும் தானே போகப்போகுது. இதுல நம்ம ஆத்திரப்பட என்ன இருக்கு?” என்று கேட்டால் சங்கவி. “என்னம்மா இப்படிச் சொல்லிட்ட? ஆதிக்கோ இல்ல கதிர் இரண்டு பேரில் யாரோ ஒருத்தர நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா தான் அந்தச் சொத்து எல்லாம் நமக்குத் தகுந்த மாதிரி மாத்திக்க முடியும் என்று நான் ஏற்கனவே சொன்னேன். உனக்கு அது ஞாபகம் இருக்கா? இல்லையா? நீயும் எந்த ஒரு ஸ்டெப்பும் எடுக்கிற மாதிரியும் தெரியல…. சரி ஆதிக்கு உன்னைக் கல்யாணம் பண்ண முடியலையே. கதிரையாவது கேட்கலாம்னு நான் நினைச்சுட்டு இருக்கும்போது தான் அந்த வெங்கடாசலம் பத்திரிகை எடுத்துட்டு வந்து கல்யாணத்துக்கு வந்துடுன்னு சொல்லிட்டுப் போறான். இப்போ நமக்கு இருக்க அந்த ஒரு ஆப்ஷனும் போயிடுச்சே. என்ன பண்றது மா?” என்று கேட்டார் வேதாச்சலம்.

“நான் அன்னைக்கே உங்க கிட்டத் தெளிவா சொல்லிட்டேன். நான் என்னோட பிளான்ல சரியா இருக்கேன். அதுக்காகத்தான் நான் இவ்வளவு தூரம் வந்து இங்கே ஆதி கூடத் தங்கி இருக்கேன். உங்களுக்குத் தெரியாதா?” என்றாள் சங்கவி. “நீ எல்லாப் பிளானும் பண்ணிட்டு இருக்கேன்னு சொல்லிட்டுத்தான் இருக்கு….. ஆனா அந்தப் பிளான் எல்லாம் சரியா நடக்குதா? எனக்கு எதுவுமே தெரியாது. இருக்கிற ஒரு சந்தர்ப்பத்தையும் விட்டுட்டு நம்ம என்ன பண்ண முடியும்?” என்று கேட்டார் வேதாச்சலம்.

“அப்பா நீங்க எது நினைச்சும் கவலையே படாதீங்க. அந்த ஆதி எனக்குத் தான்,” என்று சொன்னால் சங்கவி உறுதியாக. “என்னம்மா சொல்ற? கொஞ்சம் புரியும் படியாகச் சொல்லு…. அவன் துர்காவைத் தான் கல்யாணம் பண்ணி இருக்கான். உன்னை இல்ல. அது ஞாபகம் இருக்கா?” என்று கேட்டார் வேதாச்சலம். “அப்பா நான் சொல்றத முதல்ல கொஞ்சம் பொறுமையாக் கேளுங்க. ஆதி என்னதான் துர்காவைக் கல்யாணம் பண்ணி இருந்தாலும் அவனும் அவளும் இன்னும் ஒன்னாச் சேர்ந்து வாழல.. அது உங்களுக்கு நான் ஏற்கனவே தெரியப்படுத்தி இருக்கிறேன். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தான் நான் ஆதியிடம் கொஞ்சம் கொஞ்சமா… நெருங்கிப் பழக ஆரம்பிச்சேன். அவனும் நான் சொல்றது எல்லாம் கேட்டு நான் காமிச்ச சில விஷயங்கள் எல்லாம் நம்பி என் பக்கம் சாய்ந்துட்டான்,” என்று சொல்லி துர்காவும், விக்கியும் ஒன்றாக இருந்த போட்டோவை ஆதியிடம் காட்டியதும், அதை அவன் நம்பி விட்டு துர்காவையும், விக்கியையும் எப்படி நடத்தினான் என்பது வரை வேதாச்சலம் இடம் சொன்னால்.

“இது எல்லாத்தையும் விட ஒரு முக்கியமான விஷயம் இங்கே ஸ்விட்சர்லாந்தில் வச்சு நடந்துச்சு,” என்று சொன்னால் சங்கவி. “என்னம்மா பெரிய பெரிய விஷயமா சொல்ற!!! நீ சொல்றத அப்படியே நம்பிட்டானா அந்த ஆதி….” என்று கேட்டவர். “அப்படி என்னம்மா ஸ்விட்சர்லாந்தில் எனக்குத் தெரியாமல் நடந்துச்சு?” என்று கேட்டார் வேதாச்சலம்.

அவர் அப்படி கேட்டதும் தன்னைச் சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்துவிட்டு யாரும் இல்லை என்பதை உறுதி செய்த பின் ஆதியுடன் அவள் வெளியே டின்னருக்குச் சென்றதும். அதன் பிறகு ரூமுக்கு வந்தவுடன் அவனுடன் சேர்ந்து தான் எடுத்துக் கொண்ட சில போட்டோக்களைப் பற்றியும் மற்ற விபரங்களையும் அது எப்படி நடந்தது என்பதையும் ஒன்று விடாமல் அவள் அப்பாவிடம் சொன்னாள் சங்கவி.

சங்கவி சொல்வதை எல்லாம் கேட்ட வேதாச்சலம் மிகவும் மகிழ்ச்சியாக, “பரவால்லம்மா….. ரொம்ப நல்லக் காரியம் தான் பண்ணி இருக்கே…. இந்த விஷயத்தை கொண்டு போய் வெங்கடாசலத்துக்கு முன்னாடி காண்பிச்சு நமக்கு நியாயம் கேட்டா… அவனால எதுவுமே செய்ய முடியாது. அவனே உன்னை ஆதிக்குக் கட்டி வைத்துவிட்டு துர்கா அவன் வாழ்க்கையில் இருந்து பிரித்து வைத்து விடுவான்,” என்று சொன்னார் வேதாச்சலம்.

“அதே தான் பா. நான் இந்த விஷயத்தை வச்சு ஆதியைப் பிளாக் மெயில் பண்ணினாலும் அவன் எதையாவது செஞ்சு என்னச் சமாளிச்சிடுவான். அதனாலதான் யாரும் எதிர்பாராத நேரத்துல வெங்கடாசலம் அங்கிள் கிட்ட நான் இந்தப் போட்டோவை காமிச்சு விஷயத்தை அப்படியே நடந்தது போல நான் சொன்னா நான் சொல்றத அவரு கண்டிப்பா உண்மைன்னு நம்பித்தான் ஆகணும். அதன் பிறகு அவருக்கு வேற வழியே இல்ல. அந்தத் துர்கா ஆதியின் வாழ்க்கையை விட்டுத் துரத்திட்டு என்ன ஆதிக்குக் கண்டிப்பா அவர் கல்யாணம் பண்ணி வச்சுருவார்,” என்று சொன்னால் சங்கவி உறுதியாக.

“சரிமா. அதுவரைக்கும் இந்த ஆதாரத்தை எல்லாம் யார் கண்ணிலும் படாமல் பத்திரமாக் வச்சுக்கோமா…. நாளைக்கு இது கண்டிப்பா நமக்குத் தேவைப்படும்,” என்று சொன்னார் வேதாச்சலம். “சரிப்பா அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். ஊரில் எல்லாரும் எப்படி இருக்காங்க… அந்தச் சந்தோஷ் எப்படி இருக்கான். அம்மா எப்படி இருக்காங்க?” என்று கேட்டால் சங்கவி.

“சந்தோஷ் நம்ம கெஸ்ட் ஹவுஸ்ல தான்மா தங்கி இருக்கான். அவனால எந்தப் பிரச்சனையும் இல்ல. அவன் காலேஜுக்குப் போயிட்டு வந்துட்டுத் தான் இருக்கான் சங்கவி,” என்றவர். “உங்க அம்மாவுக்குத் தான் கொஞ்சம் உடம்பு சரியில்லை,” என்று சொன்னார் வேதாச்சலம். “அம்மாவுக்கு உடம்பு சரி இல்லையா? ஏன்ப்பா? என்ன ஆச்சு?” என்று கேட்டால் சங்கவி சற்றுப் பதட்டமாக.

“எப்பவும் போல தான் சங்கவி. உன் அம்மா காணாமல் போன தன் மூத்தப் பிள்ளையை நினைச்சு இவ்வளவு வருஷம் ஆகியும் இன்னும் வருந்திக் கிட்டு இருக்கா…. அவ வருத்தப்பட்டுட்டு எதுவுமே சரியா சாப்பிடாமல் அவ உடம்பையும் சரியாகக் கவனிச்சுக்காமல் இருந்ததுனால அவளுக்கு உடம்பு கொஞ்சம் வீக் ஆயிடுச்சு. வீட்ல தான் ரெஸ்ட்ல தான் இருக்கா. நான் அவளைச் சத்தம் போட்டு ஒழுங்காகச் சாப்பிட்டு உடம்பைக் கவனிச்சுக்க சொல்லிட்டுத் தான் இருக்கேன். அவ தான் கேட்காமல் அதையும் இதையும் நெனச்சுப் புலம்பிக் கொண்டே இருக்கா,” என்று சொன்னார் வேதாச்சலம்.

“ஏம்பா இந்த அம்மாவுக்கு என்னப்பா ஆச்சு… இத்தனை வருஷம் கழிச்சு காணாமப் போன பிள்ளை அவங்களுக்குக் கிடைச்சிடும்னு இன்னமும் நம்பிகிட்டு இருக்காங்களா? நான் ஊருக்கு வந்ததுக்கு அப்புறம் அம்மா கிட்டப் பேசிக்கிறேன். நான் போனை வைக்கிறேன்பா… நான் ரொம்ப நேரமா போன் பேசிட்டு இருக்கேன். எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு,” என்று சொல்லிவிட்டுச் சங்கவி போனை கட் செய்தால்.

போனை வைத்துவிட்டுப் போதி இருந்த டேபிளுக்கு வர… போதித் தன் போனை நோண்டிக் கொண்டு காபி குடித்துக் கொண்டிருந்தான். அவனிடம் வந்த சங்கவி, “சாரி போதி. அப்பா போன் பண்ணி இருந்தாரு. ரொம்ப நாள் கழிச்சுப் பேசுறேன். அதனாலதான் ரொம்ப நேரம் பேசிட்டேன். நமக்கு மீட்டிங் டைம் ஆயிடுச்சு. நம்ம போலாமா?” என்று சங்கவி கேட்டல். “ஓகே சங்கவி போலாம்,” என்று அவளுடன் கிளம்பினான் போதியும்.


இன்று துர்காவிற்குச் ஷூட்டிங்கின் கடைசி நாள். இந்த விளம்பரச் சூட் முடிந்ததும் இரண்டு நாட்களில் இந்தியா செல்லப் போவதில் துர்கா மிகவும் சந்தோஷமாக இருந்தாள். அவளை விடவும் அதிக சந்தோஷத்தில் இருந்தது விக்கி தான். ஏனென்றால் கிட்டத்தட்டத் திருமணம் முடிந்த கையோடு மனைவியை விட்டுப் பிரிந்து இன்றோடு ஒரு மாதத்திற்கு மேல் ஆனது. இருவரும் போனிலும், வீடியோ காலிலும் மட்டுமே பேசி கொஞ்சிக் குலாவிக் கொண்டிருக்க…. சீக்கிரம் அவளை நேரில் சென்று பார்த்து ஆசை தீரக் கொஞ்ச வேண்டும் என்பதால் விக்கிக்குச் சீக்கிரம் இந்தியா செல்வோம் என்று ஆர்வத்தில் மிகவும் சந்தோஷமாக இருந்தான்.

இன்றைய கடைசி நாள் படப்பிடிப்பில் துர்கா தான் நடிக்கும் மிகப் பிரபலமான வைரம் மற்றும் பிளாட்டினம் சம்பந்தப்பட்ட ஆபரண விளம்பரத்தில் நடித்துக் கொண்டிருந்தாள். இந்த ஷூட்டிங்கில் துர்கா அந்தரத்தில் இருந்து ஒரு தேவதையாகப் பறந்து கீழே வருவது போலவும்…. அவளுக்காக வடிவமைக்கப்பட்ட நகைகள் எல்லாம் காற்றில் மிதந்து கொண்டு வந்து தேவதையின் அழகில் மயங்கி அந்த நகைகள் எல்லாம் தானாகவே சென்று தேவதைக்கு மாட்டி அழகு பார்ப்பது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தது.

துர்கா கிட்டத்தட்ட 15 அடிக்கு மேல் இருந்து பறந்து வருவதால் அவள் உடலைச் சுற்றி கயிற்றைக் கட்டி அதன் வழியே அவள் கீழே இறங்குவது போலக் காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருந்ததால்…. அது மிகவும் ரிஸ்க் நிறைந்த காட்சி என்பதால் ஒரு முறைக்கு பலமுறை எல்லாம் சரியாக இருக்கிறதா என்று அனைவரும் சரி பார்த்து இருக்க…. விக்கியும் ஒருமுறை வந்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று நேரில் கண்டு சரிபார்த்துவிட்டுத் தான் அந்தச் சூட்டுக்கு ஓகே சொன்னான்.

15 அடிக்கு மேலே அமைக்கப்பட்டிருந்த மேடையில் துர்கா நின்றிருக்க…. அவள் உடலை அவள் பாதுகாப்பிற்காக அவள் கீழே விழுந்து அடிபடாமல் இருப்பதற்காக அவள் உடலைச் சுற்றி கம்பிகள் பாதுகாப்பிற்காகக் கட்டப்பட்டு மேலே இருந்து ரிமோட் மூலம் துர்கா கீழே இறக்குவதற்காக அனுப்பிய படுகும் சரியாக இருந்தது.

அப்போது இந்த விளம்பரத்தை எடுத்துக் கொண்டிருந்த டைரக்டர், “ரெடி… ஆக்ஷன்….” என்று சொன்னதும். துர்காவை ரிமோட் மூலம் மேலே இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மெதுவாக இறக்கிக் கொண்டு வந்தார்கள். துர்காவும் அந்தக் காட்சிக்கு ஏற்றது போல தேவதை போல தன் கைகளை விரித்துச் சிரித்தவாறு அழகாக அழகு மிளிரக் காற்றில் அசைந்தாடிய படியே கீழே இறங்கிக் கொண்டிருந்தாள்.

மேலே இருந்து துர்கா கீழே ஒரு ஐந்து அடி போல இறங்கி வந்து கொண்டிருக்க…. அதுவரை மெதுவாக வந்தவள் ஐந்து அடியைத் தாண்டியதும் வேகமாக சர்….. என்று பத்தடியில் இருந்து தரையை நோக்கி கீழே வரவும் துர்காவிற்குப் பயமாகிவிட கண்களை மூடிக்கொண்டு காதைத் பொத்திக் கொண்டு பயத்தில் கத்திக்கொண்டே மேலிருந்து கீழே வந்தாள்.

ஷூட்டிங் நடத்திக் கொண்டிருந்தவர்களும் அதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களும் திடீரென்று துர்கா கத்திக்கொண்டு வேகமாக கீழே வருவதைப் பார்த்ததும் ஏதோ சரியில்லை என்பதைப் புரிந்து கொள்ள…. அவளை எப்படி காப்பாற்றுவது என்று பதறியவர்கள் எதுவும் செய்ய முடியாமல் துர்காவைப் பார்த்துக் கொண்டிருக்க விக்கிக்கு இப்போது எப்படி துர்காவை காப்பாற்றுவது என்று பரபரப்பு என இங்கு மங்கும் ஓடியவன் அங்கே வைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய மேஜையைப் பார்த்தவன். துர்கா கீழே வந்து கொண்டிருக்கும் இடத்திற்கு நேராக அந்த மேஜையை வேகமாகத் தள்ளியவன் அருகில் ஷூட்டிங்கில் எதுவும் விபத்தில் விழுந்து அடிபடாமல் இருப்பதற்காக மெத்தை அங்கு வைத்திருந்ததைப் பார்த்தவன் எடுத்து மேஜையில் தூக்கிப் போட்டான்.

அவள் நேராக அந்த மேஜை மேல் தான் விழப்போகிறாள் என்று பார்த்துக் கொண்டிருக்க….. திடீரென்று அவள் அவள் தொங்கிக் கொண்டிருந்த கம்பி ஒருபுறம் அறுந்து விட…. துர்கா அந்தரத்தில் இங்கும் அங்கும் ஊசிலாடிக் கொண்டே கீழே வர … அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் துர்காவைப் பார்க்க அவள் தொங்கிக் கொண்டிருந்த மற்றொரு கம்பியும் அறுந்து கொண்டிருப்பதைப் பார்த்தவர். “மேலப் பாருங்க துர்காவைக் கட்டியிருக்கிற இன்னொரு கம்பியும் அறுந்து விழப்போகுது…. எப்படியாவது துர்காவைக் காப்பாத்துங்க,” என்று அதைக் கவனித்தவர் கத்த….

அனைவருக்கும் பயம் தொற்றிக் கொண்டது. எப்படி அவளைக் காப்பாற்றுவது? அவள் 10 அடிக்கு மேலே இருக்கிறாள். அவளை எப்படிப் பிடிப்பது என்று பயந்து யோசித்துக் கொண்டே இருக்க…. அவர் சொல்லி முடிக்கும் போதே இன்னொரு கம்பியும் படார்…. என அறுந்து விட துர்கா இப்போது எந்தப் பிடிமானமும் இல்லாமல் முன்பை விட வேகமாகத் தரையை நோக்கி கீழே வந்தால்.

துர்கா அலறிய படியே வேகமாகத் தரையை நோக்கி வேகமாக வந்து கொண்டிருக்க அவளைச் சுற்றி இருந்தவர்கள் துர்காவை எப்படி காப்பாற்றுவது என்று தெரியாமல் அதிர்ச்சியில் துர்காவையே பார்த்துக் கொண்டிருக்க….. அவர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கக் கயிறு அறுபட்ட துர்கா தரையை நோக்கி வேகமாக வந்து பொத்து என்று கீழே விழுந்தாள்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured