அயோக்கியன் 20
“என்ன சுறா நம்ம ஐயா கிட்ட வேலை பார்த்துட்டு எதிர்க்கட்சியில் போய் சேர்ந்திட்ட போல” என்று உதயாவின் குரல் நக்களாக போனில் ஒலித்தது.
” என் வேலைக்கு எனக்கு எங்கு மதிப்பிற்கோ அங்க வேலை பார்க்க வேண்டியது தான். இதுல ஆளுங்கட்சி என்ன எதிர்கட்சினு எனக்கு அக்கறை இல்லை” என்றான் சுறா.
“அப்போ அந்த சிவராஜன் கூடவே இருக்கிறதுன்னு முடிவு பண்ணிட்ட. அப்படித்தானே! என்றான்.
“அப்படின்னு நீங்க நினைச்சுட்டு இருக்கீங்களா?” என்று சத்தமாக சிரித்தாn சுறா.
” அப்புறம் எதுக்காக வந்தால் கிட்ட போய் சேர்ந்து இருக்க நம் அய்யா உனக்கு எவ்வளவு செஞ்சிருக்காரு” என்றான் உதயா
” ஐயா எனக்கு நான் கேட்டதை விட அதிகமாவே செஞ்சிருக்காரு நான் இல்லைன்னு சொல்லலையே ஆனா ஏதோ ஒரு தடவை மிஸ் ஆயிடுச்சுங்கிறதுக்காக நான் லாய்க்கு இல்லைன்னு என்ன தள்ளி வெச்சிட்டாரு இல்ல” என்றான்.
“அது… ஆமா பின்ன அந்த சிவராஜனை கொல்ல ஒரு ப்ளான் போட்டு கொடுத்தேன். நீ கடைசில சொதப்பீட்டுல்ல வந்த அந்த கோபத்துல ஐயா ஏதாவது சொல்லி இருப்பாரு” என்று மலுப்பினான்.
“ஐயா எப்பவும் என் மேல கோவப்பட்டது இல்ல. ஆனா நீ எப்போ அய்யாகிட்ட வந்தியோ. அப்போவே அவர் மாறிட்டார் ம்ஹும் நீ அவர மாத்திருக்க.. ” என்றான் அழுத்தமாக.
“யாரு நா… நானா?” என்று உதயா சற்று திணற..
” என்ன பேச்சு வர மாட்டேங்குது நான் சொன்னது சரிதானே எனக்கு உன் மேல ஆரம்பத்தில் இருந்து ஒரு சந்தேகம் இருக்குது டா.. அவர் எப்பவும் என்னோட வேலையில எந்த தப்பும் சொன்னதில்லை ஆனா நீ எப்போ எங்கய்யா கூட சேர்ந்தியோ அந்த மனுஷன நீ மாத்திட்ட . இதெல்லாம் எனக்கு தெரியாதுன்னு நெனச்சிட்டியா? ” என்று நக்களாக சிரித்தான் சுறா
” ஆமா யாரும் இல்லைன்னு சொன்னது நான் வந்ததுக்கப்புறம் தானே இந்த பரமசிவத்தோட மதிப்பு அரசியல் வட்டத்தில் அதிகமாக பேசப்படுது. எல்லாரும் அவரைக் கண்டாலே நடுங்குறாங்களே அது எப்படி எல்லாம் என்னோட சாமர்த்தியத்தால்தான்” என்றான்.
” ஆமா நானும் கேள்விப்பட்டேன் என்னோட சாமர்த்திய தனத்தை இங்கே வந்து பார்த்ததுக்கு அப்புறம் தான் நீ எப்படிப்பட்ட ஆளுன்னு எனக்கு தெரிஞ்சது” என்ற சுறா. ” சரி அதெல்லாம் விடு இப்ப நீ எதுக்கு எனக்கு போன் பண்ண அதை முதல்ல சொல்லு. தேவையில்லாம கண்டத பேசி என்ன கடுப்பேத்திட்டு இருக்காத” என்று எரிச்சலாக கேட்டான்.
” அது ஒன்னும் இல்ல ஐயாவை விட்டு நீ தனியா போயிட்டேன்னு அதுவும் வந்த சிவராஜ் என்கிட்ட போய் சேர்ந்துட்டேன்னு அவரும் உன் மேல பயங்கர கோவத்துல இருக்காரு. உனக்கு கடைசியா ஒரு வாய்ப்பு கொடுக்கிறதா சொன்னார். நீ உடனே நம்ம ஐயா கிட்ட வந்து சேர்த்துடு அவர் உன்ன மன்னிச்சு விடுறேன்னு சொன்னார்.இத விட்டா உனக்கு வேற நல்ல வாய்ப்பே கிடைக்காது” என்றான்.
” நான் யார்கிட்டயும் திரும்ப வரல இல்ல எனக்கான வாய்ப்பு நானே ஏற்படுத்துகிறேன் அது எனக்கு நல்லாவே தெரியும் ” என்றவன் உன்னோட விஷ்வாத் விசுவாசத்தை நம்பாமல் உன் பேச்சை கேட்டு என்ன ஐயா தள்ளிவிட்ட நீ என்ன நெனச்சாலும் நான் அங்க வரப்போவதில்லை அதுக்காக இங்க வந்து நான் வேலைக்கு சேர்ந்துட்டேன்னு உடனே அந்த சிபிராஜனுக்கு நான் ஜால்ரா அடிப்பேன் என்று மட்டும் நினைக்காதே நான் யாருன்னு கூடிய சீக்கிரத்துல உங்க ஐயாவுக்கு புரியும் என்ன நம்பாம விட்டுட்டோம்னு அப்போ அவர் வருத்தப்படுவார். சீக்கிரமா அந்த சிவராஜனோட கண்ணீர் அஞ்சலி போஸ்டர் எல்லா தெருவுலயும் ஒட்ட போறோம் அத பாத்ததுக்கு அப்பறமாவது என்ன பத்தி யாரும் புரிஞ்சுக்குவாருன்னு என்று நினைக்கிறேன்” என்று போனை வைத்தான்
” ஓஹோ அப்போ இதுக்கு தான் அந்த சிவராஜன்கிட்டே போய் வேலைக்கு சேர்ந்து இருக்கானா. அதுவும் ஒரு வகையில நமக்கு சாதகமாக தான் முடியுது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய், இந்த பக்கம் இந்த பரமசிவத்தோட நம்பிக்கையை முழுசா நான் சம்பாதித்து விடுவேன் அதேப் போல அந்த பக்கம் சிவராஜன் செத்துட்டா அதுவும் எனக்கு ஒரு வகையில் நல்லது தான்” என்று கணக்கு போட்ட படி பரமசிவத்தை காண சென்றான் உதயமூர்த்தி.
இங்கே போனை வைத்துவிட்டு திரும்பிய சுரா அதிர்ந்து நின்றான். அவன் முன்னே இடையில் கைகளை வைத்துக்கொண்டு அவனை முறைத்து பார்த்தபடி நின்று இருந்தாள் ஹரிணி
“ஐயையோ இந்த கிறுக்கி எப்படி இங்க வந்தா. நான் பேசுனது ஒருவேளை கேட்டுட்டாளோ.. இவ என்ன பாக்குறதே சரி இல்லையே ” என்று நினைத்தபடி ” நீ என்ன பண்ற? ” என்றாந அதிகாரமாக உள்ளுக்குள் இருந்த சந்தேகத்தை காட்டிக் கொள்ளாமல்
” நான் ஒரு தடவை உன் பேர சொல்லி கூப்பிட்டதும் நீ வந்திருந்தேன்னா நான் எதுக்கு இங்க வரப் போறேன். எவ்வளவு தடவை கத்துறது நான். உன் காதுல விழலையா? அப்படி யார் கூட போன் பேசிட்டு இருந்த நீ” என்றாள் அதிகாரமாக..
” என்ன கூட்டியா? எனக்கு கேட்கவே இல்லையே? ” என்றான்.
” வாசல்ல ஒரு தடவை நின்னு கூப்பிட்டேன். நீ திரும்பல.. அந்த காரிடர்ல வந்து நின்னு மறுபடியும் கூப்பிட்டேன். அப்பவும் நீ திரும்பி பார்க்கவே இல்லை. அதான் இங்கேயே வந்துட்டேன்” என்று சிஎம் வீட்டு வாசலில் நின்றிருந்தவனை பார்த்து கோபமாக சொன்னாள்.
சுறாவின் அருகில் நின்றிருந்த ஒரு எம்எல்ஏ வை பார்த்தவன் “ஏன் சார் இந்த புள்ள என்ன கூப்பிட்டச்சா? உங்களுக்கு கேட்டுச்சா? ” என்றான்.
“ஏய்! எதுக்கு அவர்கிட்ட கேக்குற நான் சொன்னதை நம்பவில்லையா நீ” என்றாள் ஹரிணி அவன் முன்பு சோடக்கிட்டு.
சுடக்கிட்ட அவள் கைகளை பட்டனை பிடித்தவன் “என் முன்னாடி சொடக்கு போட்டு பேசுற வேலை எல்லாம் வெச்சுக்காத, கை இருக்காது ஞாபகத்துல வச்சுக்கோ” என்று அவளை முறைக்க..
அவன் பிடியில் கை வலிக்க முகம் சுருங்கிப்படியே “விடுடா ராஸ்கல் கை வலிக்குது” என்று அவனிடமிருந்து கஷ்டப்பட்டு கையை உருவியப்படியே பேசினாள்.
“சரி விடு இப்ப எதுக்கு என்னை கூப்பிட்ட” என்றான்.
” சொல்ல முடியாது போடா, அதை நான் கூப்பிடும்போதே நீ ஒழுங்கா பதில் பேசி இருந்தேன்னா உன்கிட்டே சொல்லி இருப்பேன்” என்று திரும்பி விறு விறு என அவர் வீட்டுக்குள் செல்ல..
” சரியான அரை மெண்டல் இது எப்படி இந்த வீட்டுக்குள்ள வந்துச்சு” என்று நினைத்தவன் உள்ளே யாரும் அவனை அழைத்து இருப்பார்கள் என்று அவள் பின்னே விறுவிறுவென்று வீட்டுக்குள் நுழைந்தான்.
அதுவரை கம்பீரமாக நெஞ்சை நிமித்துக்கொண்டு நடந்து வந்த சுறா வீட்டுக்குள் வந்ததும் பவ்வியமாக நடந்து சென்றான்.
அதை கவனித்த ஹரிணி “என்னம்மா நடிக்கிறான். சரியான ஆளுதான்” என்று அவனை முறைந்தவள். “இவன் மேல ஒரு கண்ணு வச்சுக்கணும் இவன் இங்க வந்ததுல இருந்து பாத்துட்டு இருக்கேன். இவன்கிட்டே ஏதோ இருக்கு” என்று தன் டிடெக்டிவ் மூலையை முடுக்கி விட்டிருந்தாள்.
ஹாலில் செல்வியுடன் பேசிக் கொண்டிருந்த சிவராஜன் சுறா வந்ததும் “வாப்பா..” என்றார்
“சொல்லுங்கய்யா கூப்பிட்டு இருந்தீங்களா?” என்றான்.
“ஆமா சுறா, என் பசங்க இன்னைக்கு நைட் இந்தியா வந்துருவாங்க. அவங்கள ஏர்போர்ட்ல போய் பிக்கப் பண்ணிட்டு வீட்டுக்கு கூட்டிட்டு வந்துரு. ராக்கி அவன் வீட்டுக்கு போவேன்னு சொல்லுவான் யாரும் எங்கேயும் போக வேண்டாம் எல்லாரும் இங்கே வரணும்” என்றார்.
“ராக்கியா வரட்டும் வரட்டும் அவனை நேர்ல பாக்கணும்னு ரொம்ப நாளா நான் நெனச்சிட்டு இருந்தேன். இன்னைக்கு தான் அந்த வாய்ப்பு கிடைச்சிருக்கு” என்று நினைத்தவன். “சரிங்கய்யா நான் எல்லாரையும் இங்க கூட்டிட்டு வந்துடறேன்” என்றவன் வீட்டை விட்டு வெளியே வர…
மற்றொரு டிரைவரை அழைத்து “இன்னைக்கு அய்யாவோட பசங்க இந்தியா வராங்க. அவங்க எல்லாரையும் பிக்கப் பண்ணனும் மத்த ஆளுங்க கிட்ட சொல்லி கார ரெடி பண்ணு” என்று சொல்லிவிட்டு ராக்கியை நேரில் சந்திக்கும் அந்த நேரத்திற்காக காத்திருந்தான்.
அப்போது அங்கு வந்த மாரிஸ் “எத்தனை மணிக்கு அவங்க வராங்க. நானும் உன் கூட வருவேன்” என்றான்.
“நீயா..” என்று அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு நைட் 11 மணிக்கு வந்துருவாங்க என்று மட்டும் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட..
” ஒழுங்கா நின்னு பதில் சொல்றானா பாரு திமிர் பிடிச்சவன்.மாப்பிள்ளை மட்டும் வரட்டும். இவன் கொட்டத்தை அடக்கி வைக்கணும். ரொம்ப தான் துள்ளுறான். ராக்கியவிட ஓவரா பண்றானே” என்று நினைத்தப்படி மாரி வீட்டின்னுள் சென்றான்.
பிளைட் ஒரு மணி நேரம் டிலே ஆகிவிட நல்லிரவு 12 மணிக்கு தான் இந்தியா வந்திருந்தனர் அண்ணன் சென்றிருந்த ஜோடிகள் அனைவரும்.
ஏர்போர்ட்டை விட்டு வந்த ஆறு பெரும் அனுமன் சென்றபோது இருந்த சந்தோஷமும் நிம்மதியும் திரும்பி வரும்போது இல்லை. அதற்கு அங்கு நடந்த சம்பவம் தான் காரணம்.
ரதி இன்னமும் ராக்கியிடம் அவனிடம் பேசாமல் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருக்க..
திகழினியும் வேலுவும் எப்போதும் போல அவர் உண்டு அவர் வேலை உண்டு என இருந்தனர். ஓவியாவும், ராகவ்வும் மட்டுமே ஹனிமூனை கொண்டாடிய களைப்பில் இருந்தனர்.
” சி எம் பசங்கன்னா சும்மா வா.. அப்பன் கோடி கோடியா செம்பருத்தி வச்சிருக்கான் அவனுக்கு பொறந்த புள்ளைங்க அதை அனுபவிக்கிடுங்க ஏன் அப்புறம் தான் இருக்கான்னு கேட்டு குப்பை தொட்டில போட்டுட்டு போயிட்டான் இன்னைக்கு வரைக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை” என்று நினைத்தபடி அவர்களை நோக்கி வந்தவன்.
அவர்கள் கொண்டு வந்த லக்கேஜ்களை வாங்கி தன்னோடு வந்த ஆட்களிடம் கொடுத்துக் காரில் வைக்க சொன்னான்
அவனை வந்ததுமே பார்த்துவிட்டான் ராக்கி. சுறாவை தாண்டி மாப்பிள்ளை என்று கைகள் இரண்டையும் நீட்டியப்படி அவனை வந்தான் மாரிஸ்.
“டேய் நீயுமாடா வந்த எங்களை பிக்கப் பண்ண” என்றான் ராக்கி.
“ஆமா டா மாப்பிளை சும்மாவே இருக்கேன். நீ இருந்தா எதுவும் வேலை இருக்கும். அதன் கிளம்பி வந்துட்டேன்” என்றான்.
“அண்ணா! மாரிஸ்க்கு நம்ம இல்லாம கையும் ஓடாது காலும் ஓடாthu” என்றாள்.
“ஆமா கொலைகாரன் கூட கூட்டு வெச்சுக்க அவ்ளோ ஆர்வம் அவனுக்கு” என்று நினைத்துக்கொண்டாள் ரதி.
“நீதான சுறா, அந்த பரமசிவத்துகிட்டே கையால நீதான வேலை பாத்துட்டு இருந்த” என்றான்.
” ஆமா உங்களை போல தான் நானும் அவர்கிட்ட கையாளா வேலை பாத்துட்டு இருந்தேன். நீங்க சி எம் ஓட புள்ளையாயிட்டீங்க, எனக்கு அப்படி யாரும் இல்லையே” என்றான் நக்கலாக.
அவனை முறைத்த ராக்கி..
” சரி கார்க்கியை கொடு நான் வீட்டுக்கு கிளம்பனும்” என்று அவளிடம் சாவியைக் கேட்டான்.
“இல்ல சிஎம் உங்கள அவர் வீட்டுக்கு வர சொன்னாரு” என்று சாவியை அவனிடம் தர மறுத்தான்.
“அங்கையா..” என்று ராக்கி புருவம் சுருக்க..
” உங்கள மட்டும் இல்ல எல்லாரையுமே அவர் வீட்டுக்கு தான் கூட்டிட்டு வர சொன்னாரு. எதுவும் முக்கியமான விஷயம் பேசணுமாம்” என்றான்.
ராக்கியும் யோசனையோடு ராகவ் வேலுவை பார்க்க சரி போகலாம் என்றனர்.
