Home Uncategorizedஅயோக்கியனின் அரியாசனம் இராக்கதன் part-2 -27

அயோக்கியனின் அரியாசனம் இராக்கதன் part-2 -27

by Layas Tamil Novel
199 views

அயோக்கியன் 27

சிவராஜனிடம் பேசிவிட்டு அறைக்கு வந்தவனை முறைத்த படி அமர்ந்து இருந்தாள் திகழினி.

அவளை கண்டும் காணாமலும் வந்தவன் நேராக டவலை எடுத்துக்கொண்டு பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டான்.

அதில் மேலும் கோபம் அதிகமானது. குளித்துவிட்டு தலை துவட்டிக்கொண்டே இடையில் ஒற்றை டவலுடன் வெளியே வந்த வேலு இன்னமும் அதே இடத்தில அபப்டியே அமர்ந்து இருந்தவளைப் பார்த்தவன்.

“இன்னிக்கு என்ன வம்பிழுத்து சண்டை போடப் போறாளோ..” என்று யோசனையாக வந்தவன் கண்ணாடியின் முன் நின்று சீப்பை எடுத்து தலையை வார ஆரம்பித்தான்.

அவனையே பார்த்துக்கொண்டிருந்த திகழ் வேகமாக எழுந்து வேலுவிடம் வந்தவள் “எத்தனை முறை சொல்றேன் உன்கிட்டே என்னோட தினக்ஸ் ஏதும் யூஸ் பண்ணாத உனக்குன்னு இருக்கறதை எடுத்து யூஸ் பண்ணுன்னுனு சொல்லிருக்கேனா? இல்லையா? என்னோட சீப்பை எதுக்கு டா நீ யூஸ் பண்ற… ” என்று அவன் கையில் இருந்த சீப்பை பிடுங்கிக்கொண்டாள்.

“இதில் என்ன இருக்கு போர்ஜெரி, உனக்கும், எனக்கும் கல்யாணம் ஆகிருச்சு  என்னோடது நீ யூஸ் பண்ணலாம், உன்னோடது நான் யூஸ் பண்ணலாம் தானே.. ” என்றவனை விழுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள்.

அவன் பேசிய இரட்டை அர்த்த பேச்சை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அவள் ஒன்றும் சிறுபிள்ளை இல்லையே.

அவள் பார்வையில் புரிந்தது கொண்டவன் உதட்டை கடித்து சிரிப்பை அடக்கிக்கொண்டே.. “அ.. அது உன்னோட சீப்பு, சோப்பு, ஷாம்பு, டவல் இதெல்லாம் நான் யூஸ் பண்ணலாம், அதே போல தான் நீயும் . அதை தான் நான் சொன்னேன்” என்றான்,

“டேய்.. டேய்.. லூசு.. நீ எந்த பார்த்ததுல பேசுறேன்னு எனக்கு தெரியாதுன்னு நினைக்குறியா நீ. உன் முழியே சரி இல்ல. உன் பேச்சும் சரி இல்ல.. என்னை தேவை இல்லாம கோபப்படுத்தாத ” என்றாள்.

“நான் எங்க போர்ஜெரி உன்னை கோபப்படுத்தினேன். நீ தான் நான் உள்ள வரும்போதே என்னை முறைச்சிட்டு உக்கார்ந்திருந்த, ” என்றான்.

“ஓஹோ ! சாருக்கு அப்போ நான் முறைச்சது தெரிஞ்சுது , ஆனா ஏன் என்னனு கேக்க மனசு வர்லியோ..” என்றாள்.

“கேட்கலாம்னு தான் நினைச்சேன். ஆனா கேட்டு என்ன செய்ய.. எப்படியும் நீ என்னை தான் தப்பு சொல்லப் போற.. ” என்று நினைத்தவன் “சரி சொல்லு , ஏன் என்னை முறைச்ச?” என்று மார்புக்கு குறுக்காக கையை கட்டிக்கொண்டு அவளைப் பார்த்தான்.

“ஏன் டா இங்க குறைச்சல் உனக்கு , என்கிட்டே கிட்டே ஒரு வார்த்தை சொல்லாம நீ நேரா வந்து என் அப்பாகிட்டே தனிக்குடுத்தனம் போகணும்னு சொல்ற.. “என்றாள் .

“ஏன் சொல்லக்கூடாதா? எப்படியும் உன்கிட்டே சொன்னா நீ வேணாம், முடியாதுனு சொல்லிடுவ. அதான் நேரா அத்தை, மாமாகிட்டேயே சொல்லிட்டேன்,” என்றான்.

“சரி அது கூட பரவால்ல. இப்போ எதுக்காக உன் வீட்டுக்கு போகனுன்னு சொல்ற.ஏன் வீட்டுக்கு என்ன குறைச்சல்” என்றாள் தன் இடையில் கையை வைத்துக்கொண்டு அவனிடம் நெஞ்சை நிமிர்ந்துகொண்டு சண்டைக்கு சென்றாள்.

“உன் வீட்டுக்கும் சரி  உன்கிட்டேயும் சரி எந்த குறைச்சலும் இல்ல.. எல்லாமே தாராளமா தான் இருக்கு ” என்று அவளை மேலிருந்து கீழாக பார்வையாலேயே அளந்தான்.

அதில் திகழுக்கு ஒரு மாதிரி ஆகிவிட.. சட்டென்று அவன் பார்வை சென்ற இடத்தை புரிந்து கொண்டவள். வேறு பக்கம் திரும்பிக்கொண்டே.. “இங்க பாரு என்னால எல்லாம் உன் வீட்டுக்கு வர முடியாது , நான் இங்க தான் இருப்பேன் புரியுதா ” என்றாள்.

“ஏன் வர முடியாது”

“அது.. எனக்கு இங்க இருக்க தான் கப்போர்ட்டா இருக்கு. உன் வீட்ல எப்படி இருக்குமோ தெரியல. ” என்றாள்.

“என் வீட்டுக்கு முன்னபின்ன நீ வந்திருக்கியா? நான் எங்க இருக்கேன் என் வீடு எங்க இருக்கு, நான், என் குடும்பம் எப்படின்னு உனக்கு தெரியுமா?” என்றான்.

அப்படிகேட்டவனை திரும்பி பார்த்தவள் “ஆமா சரி தானே.. இவன் குடும்பம் நம்ம வீட்ல தான் இருக்காங்க , அத்தை, மாமா, ஹரிணி எல்லாரும் ரொம்ப நல்லா தான் பேசிப்பழகுறாங்க, ஆனா அவங்க வீடு பத்தி,அவங்களை பத்தி , இந்த பியேவை பத்தி எனக்கு எதுமே தெரியாதே..” என்று யோசித்தவள். “ஆஹ்,, நீ என்ன பெரிய ஜாமீன் பரம்பரையா? உன் வீடு என்ன அரண்மனை மாதிரி பெருசா இருக்குமா? ரொம்ப பில்டப் எல்லாம் கொடுக்குற… ” என்றாள்.

அவளை பார்த்து மென்மையாக புன்னகை சிந்தியவன் அவள் கையில் இருந்த சீப்பை வாங்கி கண்ணாடியை பார்த்துக்கொண்டே தலையை சீவியபடி. “நீ வீட்டுக்கு வருவே இல்ல அப்போ தெரிஞ்சுக்கோ.. ” என்றான் கண்ணாடியினூடே குட்டி ஷார்ட்ஸும், பனியனும் அணிந்து நின்றிருந்தவளை ரசித்தபடி நின்று இருந்தான்.

“ஹேய்! கொடுடா என் சீப்பை என்னோடது எதுவும் யூஸ் பண்ணகூடாதுனு சொன்னேன்னா இல்லையா?” என்று மீண்டும் அவனிடம் வந்து அவன் கையில் இருந்த சீப்பை அவள் பிடுங்கப் போக..

இம்முறை அவள் கையில் சீப்பை கொடுக்காமல் தலைக்கு மேலாகத் தூக்கியவன் “ஏன் யூஸ் பண்ணக்கூடாது. நீ என் பொண்டாட்டி டி. ” என்றான்  கரகரத்த குரலில்.

“பொண்டாட்டின்னா எல்லாமே யூஸ் பண்ணுவியா டா.. ” என்று அவனிடம் இருந்து சீப்பை பறிக்கும் ஆர்வத்தில் அவன் குரலில் இருந்த மாற்றத்தையும் அவன் பேசிய அர்த்தத்தையும் இம்முறை கவனிக்காமல் விட்டுவிட்டாள்.

“பண்ணுவேன் டி.. எனக்கு எல்லா உரிமையும் இருக்கு  “என்று அவன் மார்போடு மார்பு உரசியபடி நின்று எம்பிக்குதித்து அவன் கையை எட்டிப் பிடிக்க முயன்றவளை இடையோடு இழுத்து அணைத்து தன்னோடு நெறுக்கிக்கொண்டவன் தன் முகத்திற்கு மிக அருகில் இருந்த அவள் முகத்தைப் பார்க்க..

அப்போதுதான் அவன் கைக்குள் தான் இருப்பதை உணர்ந்த திகழினி அவனைப் பார்த்தாள்.

தன் புருவம் உயர்த்தி அவளை ஏறிட்டவன் அவள் இதழ்களை பார்த்துக்கொண்டே..

“உரிமை எடுத்துக்கலாம் தானே.. ” என்றபடி குனிந்து அவள் இதழில் தன் இதழைப் பொருத்தி இருந்தான்.

இதை சற்றும் எதிர்பார்த்திராத திகழ் அதிர்ந்து அவனைப் பார்க்க.. அவனோ கண்கள் மூடி அவள் இதழில் ஆழமாக.. அழுத்தமாக தன் முத்தத்தை பதித்திக்கொண்டிருந்தான்.

“ம்ம்.. ம்ம்ம்.. “என்று முனகிக்கொண்டே அவனிடம் இருந்து திகழ் விலக முயற்சிக்க..

அவனோ அவள் இடையில் அழுத்தம் கூட்டி தன் உடலோடு அழுந்தப் பிடித்து அணைத்தபடியே அவள் இதழில் தன் இதழை கலக்க விட்டுக்கொண்டிருந்தான்.

அவள் திமிரில் கொஞ்ச நேரம் தான். அவன் முத்தம் நீள.. பெண் அவளோ அந்த முத்தத்திற்கு இணங்கியே போய் இருந்தாள்.

அவளையும் அறியாமல் விழிகள் மூடிக்கொள்ள..

அவள் மூடிய விழிகளை கண்களைத் திறந்து பார்த்துக்கொண்டே முத்தமிட்டவன் அவளை மெல்ல தன்னிடம் இருந்து விலகி நிற்க வைத்தவன் திரும்பி கண்ணாடியைப் பார்த்துக் கொண்டு நின்று இருந்தான்.

அவன் விலகிய சிறிது நேரத்திலேயே தன்னிலை வந்தவளுக்கு ஆத்திரமாக வந்தது முதலில் அவன் மேல். பின் தன் மேல் வெட்கம் இல்லாமல் சண்டையிட்டுக் கொண்டிருந்தவன் முத்தத்திற்கு மெய் மறந்து போய் நின்றுவிட்டோமே.. என்ற கோபம் அவளுக்கு .

“யூ.. யூ … இடியட் , ராஸ்கல். உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா எனக்கு கிஸ் கொடுத்திருப்ப.. ” என்று அவனை அடிக்க கையை ஓங்கிக்கொண்டு சென்றாள் திகழினி.

ஓங்கிய கையை அவள் முதுகுக்கு பின்னால் வளைத்து பிடித்தவன் அவளை அப்படியே தன்னோடு சேர்த்து பிடித்து அவள் கழுத்தோடு மற்றொரு கையை போட்டுக் கொண்டே அவள் காதருகில் குனிந்தவன் கண்ணாடியில் தெரிந்த அவள் பிம்பத்தை பார்த்து.

“நீ முழுக்க எனக்கு சொந்தம் , என்னோட ப்ரொபேர்ட்டி உன்னோட திங்க்ஸையும் சரி, உன்னையும் சரி யூஸ் பண்ண எனக்கு புல் ரைட்ஸ் இருக்கு கண்ணம்மா.. ” என்று கிரங்கிய குரலில் சொன்னவன் கண்ணாடியில் தெரிந்த அவள் பிம்பத்தை பார்த்துக்கொண்டே அவன் கையை அவள் பாண்டியனுக்கும் , ஷார்ட்ஸுக்கும் இடையில் தெரிந்த இடையில் மேயவிட்டான்.

அதில் அதிர்ந்தாலும் அவனிடம் அதை காட்டிக்கொள்ளாமல் திரும்பி அவனை முறைத்த திகழ் “அப்போ அதே உரிமை எனக்கும் உன்கிட்டே இருக்கு தானே.. ” என்றாள்.

“அஃப்கோர்ஸ் கண்ணம்மா.. ” என்றான் அவள் தோளில் சிறு சிறு முத்தங்களாக பத்திக்கொண்டே.

அவன் அப்படி சொன்ன அடுத்த நொடி அவனிடம் இருந்து திமிறிக்கொண்டு விலகியவள் திரும்பி அவன் தோளின் மீது இரு பக்கமும் கையைப் போட்டவள் அவன் கிரகமான பார்வையை பார்த்தபடியே.. நெருங்கி வந்தாள்.

வேலுவும் அதே முகத்தோடு தன்னை நெருங்கி வந்தவளைப் பார்த்தான்,

அவளும் அவன் முகத்திற்கு அருகில் தன் முகத்தை கொண்டு சென்றவள் “எல்லா உரிமையும் இருக்கா ?” என்றாள் அவன் விழிகளை பார்த்தபடி.

“ம்ம்…” என்று அவள் இதழ்களை மீண்டும் சுவைக்கும் ஆர்வத்தில் வேலு முகத்தருகே வர,,

“இந்தா அப்போ இது உனக்கு தான்” என்று அவன் நெற்றியில் தன் நெற்றியால் ஓங்கி அடித்தாள்.

“அம்மா!” என்று வேலு வலியில் நெற்றியைப் பிடித்துக்கொண்டே அவளை பார்க்க..

“இதுவும் உனக்கு தான் ” என்றவள் அவன் கால்களுக்கு இடையில் தன் முஷ்டியை வேகமாக உயர்த்தி ஒரு ஏத்துவிட்டிருக்க..

“ஐயோ! ” என்று அவன் உயிர்நாடியை பிடித்துக்கொண்டு அலறியே விட்டான்.

“மவனே  எனக்கு முத்தமா கொடுக்குற நீ.. இன்னோரு தடவை என்கிட்டே வந்த இந்த அடி தான் உனக்கு முதல்ல நியாபகம் வரணும் ” என்றவள் அவன் வலியில் துடிப்பதை பார்த்து நக்கலாக சிரித்துக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தாள்.

வேலுவோ அவளிடம் இருந்து இந்த அதிரடியை எதிர்பார்த்திராதவன் அப்படியே கண்ணாடியின் முன் இருந்த டேபிளைப் பிடித்துக்கொண்டு மெல்ல அமர்ந்தான்.

அவன் வலியில் துடிப்பதை பார்த்து ரசித்தபடி அவள் அறையில் இருந்த பிரிட்ஜை திறந்து அதில் இருந்து ஐஸ்க்ரீமை எடுத்துப் பிரித்தவள் அவனை பார்த்துக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தாள்.

அவன் முகமெல்லாம் சிவந்து , கண்கள் சிவந்து கண்களில் கண்ணீரே வந்துவிட்டது.

தன் மூச்சை இழுத்துப் பிடித்து ஆசுவாசப்படுத்த முயன்றான் வேலு அவனால் முடியவில்லை.

“என்ன டா பிஏ எப்படி என் அடி கண்ணு கலங்கிருச்சு போல.. ” என்றாள்.

வலியினூடே அவளை முறைத்தவன். உயிர்நாடியில் கையை வைத்துக் கொண்டு அமர்ந்து இருந்தவன் கண்களை மூடி மூச்சிழுத்துக்கொண்டு இருந்தான். கொஞ்சம் வலி மட்டுப்பட்டது போல தோன்ற.. கண்களை திறந்து அவளை ஏறிட்டான்.

“என்ன டா பாக்குற.. என் அடி எப்படி இருந்துச்சு. தலை சுத்திருச்சா ? ” என்று நக்கலாக சிரித்தவள் “கராத்தேல  பிளாக் பெல்ட் வாங்கியிருக்கேன் டா நான் . என்கிட்டேயே உன் வேலையை காட்டுற நீ.. ” என்று எழுந்து அவனிடம் வந்தாள்.

அவனோ அருகில் வந்தவளை இழுத்து தன் மடியில் அமர வைத்தவன் நொடியும் தாமதிக்காமல் அவள் இதழை மூர்க்கமாக இம்முறை கவ்வி இருந்தான்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured