மூர்க்கன் 18
“அஹ்! எப்படி அது எப்படி அந்த மித்ரா எனக்கு தெரியாம நான் சொல்லாம இந்த வீட்டை விட்டு போயிருப்பா. கண்டிப்பா அதுக்கு வாய்ப்பே இல்ல.. அவளா இங்க இருந்து போயிருக்கவே முடியாது” என்று ஹாலில் கோபமாக குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டு இருந்தான் மோகன்.
அவன் கோபத்தை கண்டு இங்கு ஒருத்தி குலை நடுங்கிக்கொண்டு இருந்தாள்.
“ஹையோ! இவன் வேற.. நோண்ட ஆரம்பிச்சுட்டானே.. நான் தான் மித்ரா வெளிய போனதுக்கு காரணம்னு மட்டும் கண்டு பிடிச்சுட்டான் அப்பறோம் அவ்ளோ தான், அக்காவும், தம்பியும் சேர்ந்து லேப்ல இருக்க மொத்த ட்ரக்ஸையும் எனக்கு போட்டு டெஸ்ட் பன்னிருவனுங்க, இப்போ நான் என்ன செய்றது. உடனே இங்க இருந்து கிளம்பினாலும் சந்தேகம் வந்திருமே…” என்று உள்ளுக்குள் புலம்பிக்கொண்டு கைகளை பிசைந்தபடி நின்று இருக்க..
“எதுக்கு மோகன் இவ்ளோ டென்ஷன் ஆகுற.. அவ எங்க போயிருப்பா அந்த ராவண் தான் வழக்கம் போல அவளை இங்க இருந்து அழைச்சிட்டு போய் இருப்பான். அவனோட இடத்துல தானே மறைச்சு வெச்சிருப்பான். அவ அங்க இல்லேன்னா நமக்கு தெரியாம வேற இடத்துல வெச்சிருப்பான். நீ போய் அவளை கண்டு பிடிச்சு அவ முன்னாடி நின்னாவே போதும். உன்கூடவே நாய் மாதிரி வாளை ஆட்டிட்டு வரப் போறா.. அப்பறோம் ஏன் இவ்ளோ டென்சன் ஆகுற.. ” என்று லேப்டாப்பில் CCTV பூட்டேஜ்களை ஓடவிட்டு அதை பார்வையிட்ட ரக்ஷணா கூலாக சொன்னாள்
“அது சரி தான் ரக்ஷு.. ஆனா ஒவ்வொரு வாட்டியும் அவ இங்க இருந்து எப்படி வெளிய போறா நம்மளால அதை கண்டுபிடிக்கவே முடியலையே.. யாரு அவனுக்கு இங்க இருந்து ஹெல்ப் பண்றங்கண்ணே தெரியலையே.. ” என்றவன் பார்வை அங்கே நின்று இருந்த அவன் வீட்டு வேலையாட்கள் , ரக்ஷனாவுக்கு லேபிள் உதவும் கயலும், அவள் தோழியும். அவன் பிஸினெஸிற்காக வேலை செய்பவர்களும் இருக்க அவர்கள் மீது பதிந்தது.
“ஹையோ! பாக்குறானே.. பாக்குறானே .. ” என்று உள்ளுக்குள் நடுங்கினாள் கயல்.
ஒவ்வொருவரையும் பார்த்தவன் “ரக்ஷு.. அந்த CCTV பூட்டேஜ் பாத்து முடிச்சுட்டியா.. ” என்றான் பார்வையை அவர்கள் மேல் இருந்து திருப்பாமல்.
அவன் விடியோவை பற்றி பேசியதும் அவர்கள் முக மாற்றத்தை கவனித்தான்.
“ம்ம்.. முடிஞ்சிருச்சு மோகன். அந்த மித்ரா ராத்திரி உன்கூட தானே இருந்தா இடையில் நீ அவளை விட்டுட்டு எங்கையும் போனியா? “என்றாள்.
“1 மணி வரை அவ கூட தான் இருந்தேன் ரக்ஷு.. ” என்றான்.
“அப்பறோம் எங்க போன?” என்றாள் ரக்ஷணா.
“நைட் ஒரு கலையெண்ட் போன் பண்ணி சரக்கு அர்ஜென்ட்டா வேணும்னு சொன்னாங்க அதை டெலிவெரி பண்ணறதுக்கு நம்ம பசங்களை கூப்டு விவரம் சொல்ல வெளியே போயிருந்தேன். திரும்ப ரூம்க்கு 4மணிக்கு மேல தான் வந்தேன்” என்றவன். “ஆனா நான் வரும்போது மித்ரா ரூம்ல தானே இருந்தாளே” என்றான்.
“திரும்ப நீ எழுந்த அப்பறோம் மித்ரா இல்ல ரைட்” என்றாள் ரக்ஷணா.
“ம்ம்.. ஆமா ” என்றான் யோசனையோடு.
“சரக்கு எடுத்துட்டு போனது யாரு?” என்றாள் ரக்ஷணா.
“அறிவு..!” என்றான்.
“எங்க அவன் ?”
“அவன் இன்னும் வரல..” என்றவன் சந்தேகம் இப்பொது அறிவின் பக்கம் திரும்பியது.
“ஹையோ! கண்டுபிடிச்சுட்டாங்களே… அவன் கூட தானே நான் மித்ராவை அனுப்பி வெச்சேன்” என்று நடுங்கினாள் உள்ளுக்குள் கயல்விழி.
“நீங்க எல்லாம் போங்க… ” என்று ரக்ஷணா சொன்ன அடுத்த நொடி முதல் ஆளாக கயல் தான் அங்கிருந்து கிளம்பி இருந்தாள்.
அவளோடு சென்ற ரம்யா அவர்கள் தங்கி இருந்த அறைக்குள் நுழைந்ததும் கதவை தாளிட்டவள் “ஏய் கயல் ” என்று அவளிடம் அவசரமாக வந்தவள் “உண்மையை சொல்லு டி அந்த மித்ராவை நீதானே அனுப்பி வெச்ச ” என்றாள்.
அவள் கேட்டதும் தூக்கி வாரிப் போட்டது கயலுக்கு.
நெஞ்சை பிடித்துக்கொண்டு கட்டிலில் அமர்ந்துவிட்டாள் “ஹே! ரம்யா! உனக்கு எப்படி டி தெறியும்” என்றாள் கயல்விழி.
“காலையில் நான் பாத்ரூம் போக எழுந்தேன். அப்போ உன்படுக்கையில் நீ இல்ல. பாத்ரூம்லயும் இல்ல.. அந்த நேரத்துல எங்க போயிருப்பன்னு யோசனையா இருந்துச்சு . இப்போ மேடம் அந்த வீடியோ பார்த்துட்டு பேசிட்டு இருந்தார்களே அப்போ கொஞ்சமா உன் மேல சந்தேகம் வந்துச்சு.” என்றாள்.
“அப்போ எப்படி டி நான் தான்னு கண்போர்ம் பண்ணின.. ” என்ற கயல் ரம்யாவின் கை பிடித்து தன் அருகில் அமர்த்திக்கொண்டே கேட்டாள்.
“இதோ உனக்கு எப்படி தெரியும்னு இப்போ நீதானே கேட்ட.. அப்போ தான் கண்போர்ம் பண்ணினேன்” என்றாள்.
“ஹையோ ! நான் தான் அவசரத்துல ஒளறிட்டேனா?.. ” என்றவள் “ஹேய்! ரம்யா இந்த விஷயம் நமக்குள்ளையே இருக்கட்டும் டி.. மேடம்கிட்ட சொல்லிடாதே…”என்றாள் .
“ச்சே! நான் எதுக்கு டி சொல்லப்போறேன். நீ பண்ணினது நல்ல விஷயம் தானே.. பாவம் அந்த மித்ரா இவங்க ரெண்டு பேர் கிட்டேயும் மாட்டிகிட்டு எவ்ளோ கஷ்டப்பட்டா . அவளுக்கு நீ நல்லது தான் டி பண்ணிருக்க..” என்று ஆறுதலாக ரம்யா சொல்லவும் தான் கயலுக்கு போன உயிர் வந்தது போல இருந்தது.
“ரொம்ப தேங்க்ஸ் டி.. மித்ராவோட அண்ணன் நைட் திடீர்னு எனக்கு போன் பண்ணி காலையில அறிவு சரக்கு எடுத்துட்டு வெளிய வருவான் . அவன் வர வண்டியில மித்ராவை அனுப்பிடுன்னு சாதாரணமா சொல்லிட்டு வெச்சுட்டார், மித்ராவை வெளியே அனுப்ப நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா ” என்றாள்.
“என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லிருந்தா நான் உனக்கு ஹெல்ப் பண்ணிருப்பேனே.. டி” என்றாள் ரம்யா.
“அதான் எல்லாம் முடிஞ்சிருச்சே டி.. ” என்றவள் “முதல்ல இந்த வேலையை விட்டுட்டு இங்க இருந்து கிளம்பனும் . நாம ரெண்டு பெரும் இங்க இருக்க இருக்க .. .நமக்கு தான் டி பிரச்சனை அதிகமாகும்” என்றாள் கயல்விழி.
“ம்ம்.. சரி டி..” என்றவள் குளிக்க சென்றுவிட..
“அப்பாடா என்மேல யாருக்கும் சந்தேகம் வரல … ” என்ற நிம்மதியோடும், மித்ராவை இங்கிருந்து அனுப்பி வைத்த த்ரிப்தியோடும் கண் மூடி தூங்க சென்றாள் கயல்விழி.
இங்கே.. ராவண் ஹாலில் அமர்ந்து ஈஸ்வரிடம் போனில் மித்ராவை பற்றி விசாரித்துக் கொண்டிருந்தான்.
“என்ன பண்ரா அவ. ” என்றான்,
“ம்ம்ம் உன் தங்கச்சி உன்னை விட கேடியா இருக்கா டா. அவளை என் வழிக்கு கொண்டு வர நான் பாக்குறேன். ஆனா அவ வழிக்கு தான் என்னை இழுத்துட்டு போறா. அவளுக்கு என்ன வேணுங்குறதுல இதுல மட்டும் எப்படி தான் அவளால தெளிவா இருக்க முடியுதோ தெரியல எனக்கு” என்றான் ஈஸ்வர்
அவன் சொன்னது கேட்டு லேசாக சிரித்தவன் “சரி நீ மித்ராவை பத்திரமா பாத்துக்க.. நான் அப்பறோம் கால் பண்றேன் ” என்று போனை வைத்தான்.
அவன் எதிரே தரையில் அமர்ந்து பூ காட்டிக்கொண்டிருந்த இளங்கிளி மித்ராவின் பெயரை சொன்னதுமே அவனை பார்த்தாள் . போனை வைத்துவிட்டு “என்ன டி சைட் அடிக்கிறயா?” என்றான் ராவண் சிரித்துக்கொண்டே.
“ம்ஹும்.. இல்லையே..” என்று அவசரமாக தலையை ஆட்டினாள்.
தன் இருக்கையில் இருந்து எழுந்து வந்தவன் அவள் அருகே இருந்த சோபாவில் வந்து அமர்ந்தான். அவனையே இன்னமும் பார்த்துக்கொண்டு இருந்தாள் இளங்கிளி.
“என்ன டி ஏதாவது கேட்கணுமா ?” என்றான்.
“ம்ம்.. ஆமா ” என்றாள் தயக்கத்தோடு.
“என்ன கேளு..” என்றான்.
“மித்ரா… மித்ராவுக்கு என்ன ஆச்சு?” என்றாள்.
அவளையே பார்த்தவன் “இங்க வா.. ” என்று கையை அவள் முன் நீட்டினான்.
கட்டிக்கொண்டிருந்த பூவை அப்படியே வைத்துவிட்டு அவன் கையை பிடித்தவள் எழ…
அவளை இழுத்து தன் மடியில் அமர்த்திக்கொண்டான்.
“ஏங்க கிட்ச்சன்ல எல்லாரும் இருகாங்க” என்றாள்.
“பரவால்ல ” என்றவன் அவள் இடையில் கை வைத்து வருடியவன் “என்ன திடீர்னு மித்ரா பத்தி கேக்குற.” என்றான்.
அவன் கையை ஒரு பக்கம் பிடித்துக்கொண்டே அவனை பார்த்தவள் “அத்தை என்கிட்டே பேசுற அப்போ மித்ராவை பத்தி நினைச்சு ரொம்ப வருத்தப்பட்டாங்க. அதான் உங்க கிட்டே கேட்கலாம்னு நினைச்சேன் ” என்றவள் “நீங்க இப்போ மித்ராவை பத்திரமா பாத்துக்க சொல்லி யார் கூடவோ போன்ல பேசுனீங்களே.. அதான் கேட்டேன் ” என்றாள்.
“இப்போ மித்ராவுக்கு என்ன ஆச்சுன்னு உனக்கு தெரிஞ்சு ஆகணும் அப்டி தானே.. ” என்றான் அவள் இடையில் கிள்ளி.
“ஷ்..வலிக்குதுங்க..” என்றவள் “எனக்கு தெரிஞ்சுக்கணும்னு தோணுச்சு… அப்டியே இப்போ யார் கூட பேசுனீங்கன்னும் தெரிஞ்சுக்கிட்டா நல்லா இருக்கும்..” என்று தலையை கவிழ்த்த படி கேட்டாள் .
அவள் கேட்டவிதமும் , கண்களை மட்டும் உயர்த்தி அவனை பார்த்த விதமும் கண்டு சத்தமாக சிரித்தவன் “இப்போ மித்ராவை பத்தி உனக்கு தெரியனுமா? இல்ல நான் யார் கூட பேசினேன்னு தெரியனுமா?” என்றான்.
அவனை மீண்டும் விழியை மட்டும் உயர்த்தி பார்த்தவள் “ரெண்டுமே … ” என்றாள் .
“ஓஹோ… மித்ரவ பத்தி தெரிஞ்சுக்கணும் ஓகே. ஆனா நான் யார் கூட பேசினேன்னு எதுக்கு தெரிஜுக்கும்” என்றான்.
“யார் கூட பேசினீங்கன்னு தெரிய வேணாம். அது பொண்ணா பையனான்னு மட்டும் தெரிஞ்சா போதும்”என்றாள்.
“அடிப்பாவி! ” என்று உள்ளுக்குள் நினைத்தவன் .
தன் நாவை சுழற்றி கன்னத்தில் கொண்டு வந்து நிறுத்தி அவளை பார்த்து “பொண்ணு தான் ஏன்?” என்றான் வேண்டுமென்றே..
“பொண்ணா!” என்று அதிர்ந்து அவனை விழிவிரித்து பார்த்தாள்.
வந்த சிரிப்பை உதட்டை கடித்து மறைத்துக்கொண்ட ராவண். “ம்ம்ம் ஆமா பொண்ணு தான் . ஏன்?” என்றான் .
“அவங்களை உங்களுக்கு எப்படி தெரியும், எப்போ இருந்து தெரியும் ” என்றாள் சற்று பதட்டமாக,
“நீ மித்ராவை பத்தி தானே தெரிஞ்சுக்கணும்னு சொன்ன.. இப்போ என்ன அந்த பொண்ணை பத்தி கேக்குற ” என்றான்.
“நான் மித்ராவை பத்தி அத்தைகிட்டேயே கேட்டுக்கிறேன். நீங்க முதல்ல அந்த பொண்ணை பத்தி என்கிட்டே சொல்லுங்க. அவ பேரு என்ன? உங்களுக்கு அவளை எப்படி தெரியும்” என்றாள் சற்று கோபமாக,
“ஹேய்! என்ன டி இது அந்த பொண்ணை பத்தி தெரிஞ்சுக்க இவ்ளோ ஆர்வம் காட்டுற . கண்டிப்பா அவளை பத்தி தெரிஞ்சுக்கணுமா?” என்றான் வந்த சிரிப்பை காட்டிக்கொள்ளாமலேயே .
“ம்ம் ஆமா இப்பவே தெரியணும் . சொல்லுங்க ” என்று அவன் மடியில் இருந்து எழுந்தாள்.
“இங்க வெச்சே சொல்லனுமா? எல்லாரும் இருக்காங்களே.. ” என்றான் .
“அவங்க இருந்தா என்ன சொல்லுங்க நீங்க முதல்ல யாரு அவ? ” என்றாள் . இப்பொது இளங்கிளியின் ஆர்வம் என்ன என்று முழுதாக புரிந்துவிட்டது ராவனுக்கு.
“இங்க எப்படி டி அந்த பொண்ணுக்கும், எனக்கும் எப்படி பழக்கம் ஆச்சுன்னு சொல்றது. யாராவது கேட்டா என்ன நினைப்பாங்க.” என்றான்.
அவன் சொன்னதில் அதிர்ச்சியானவள் விழி விரித்து ராவணை பார்க்க…
“சிணுங்கி.. எனக்கும் இல்லாத அந்த பொண்ணுக்கும் எதுவும் பழக்கம் இருகான்னு தெறிஞ்சுக்க எவ்ளோ ஆர்வம் உனக்கு” என்று நினைத்து அவளை மேலும் சீண்டினான்.
“என்ன டி இதுக்கே இவ்ளோ ஷாக் ஆகுற.. அப்போ எனக்கும் அவளுக்கும் இடையில் என்ன பழக்கம்னு தெரிஞ்சா அவ்ளோ தான் போலையே நீ… ” என்று அவளை பார்த்தான்.
“ஹா! அப்படி என்ன உங்களுக்குள்ள பழக்கம் இருக்கு.” என்று நெஞ்சில் கை வைத்தவள் சுற்றிலும் பார்க்க.. எல்லோரும் இவர்கள இருவரையும் தான் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.
“நீங்க… நீங்க முதல்ல எழுந்து ரூமுக்கு வாங்க அங்க போய் பேசிக்கலாம்” என்று அவனை அழைத்தாள்.
“இப்போவே ரூமுக்கு போகணுமா டி.. எனக்கு வேற பசிக்குது. அவளை பத்தி அப்பறோம் சொல்றேனே…” என்றான் வேண்டுமென்றே.
“பசிக்குதா? அதெல்லாம் அப்பறோம் நான் உங்களுக்கு ரூமுக்கே எடுத்துட்டு வரேன் நீங்க முதல்ல சொல்லுங்க ” என்று அவன் கையை பிடித்து மேலே அவர்கள் அறைக்கு ராவணை இழுத்து சென்றாள்.
“கிளி அதுவா வந்து மாட்டிக்கிச்சு இன்னிக்கு .. ஒரு புடி புடிச்சிர வேண்டியது தான் ” என்று அவள் இழுப்பிற்கு கட்டுப்பட்டு அவள் பின்னாள் சென்றான் ராவண்
