Home Uncategorizedஜிம் மேட்டில் காதல் முத்தம் ,மூர்க்கன் 25

ஜிம் மேட்டில் காதல் முத்தம் ,மூர்க்கன் 25

by Sinamika Writes
66 views

மூர்க்கன் 25

மென்மையான விடியல் பொழுது. ஜன்னல் திரைகளை மீறி உள்ளே நுழைந்த சூரியக்கதிர்கள் இளங்கிளியின் முகத்தில் கோலமிட்டுக் கொண்டிருந்தன. மென்மையான போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு, கனவுகளின் தேசத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த இளங்கிளியின் உறக்கத்தைக் கலைக்க vவந்துவிட்டான் அவள் ராவண்.

  அவள் அருகே அமர்ந்து, aval காது மடலில் செல்லமாக  கடித்தான்.

“ஆஆ… அம்மா!” என்று அலறியபடி சிணுங்கிக் கொண்டே எழுந்தவள். கண்களைக் கசக்கிக் கொண்டே, “என்னங்க இது? விடியற்காலையில மனுஷனைத் தூங்க விடாம…” என்று அவன் மார்பில் செல்லமாக குத்தினாள்.

ராவணன் புன்னகைத்துக்கொண்டே, ” தூங்குனது போதும் சிணுங்கி … எழுந்திரு, உனக்காக ஒரு சர்ப்ரைஸ் காத்துட்டு இருக்கு,” என்று அவளை வலுக்கட்டாயமாக எழுப்பி, தனது பிரம்மாண்டமான ஜிம் அறைக்கு அழைத்துச் சென்றான்.

தூக்கக் கலக்கத்தில் கால்கள் தடுமாற அவன் பின்னாடியே சென்றவள், ஜிம் அறைக்குள் நுழைந்ததும் அப்படியே உறைந்து போனாள். அங்கே ஒரு பெண் ஜிம் டி ஷர்ட் , ட்ராக் பாண்ட் சகிதமாக நின்று இருந்தாள்.

“குட் மார்னிங் சார்! குட் மார்னிங் மேடம்!” என்றாள் இவர்கள் இருவரையும் பார்த்து அந்தப் பெண். 

அவளை புரியாமல் பார்த்த இளங்கிளி “என்னங்க யாரு இது? அதுவும் இந்த நேரத்துல.. ” என்றாள் .

ராவணன் அவளது அதிர்ச்சியை ரசித்தபடி, “இவங்கதான் ஷைலா. இனிமே தினமும் காலையிலும், மாலையிலும் உனக்கு டிரைனிங் கொடுக்க இவங்க வருவாங்க.” என்றான்.

“எனக்கா!” என்று மேலும் ஆச்சர்யமானவள் அவன் டி ஷர்ட்டை பிடித்து தன் பக்கம் இழுத்தவள். “எனக்கு எதுக்குங்க… ” என்றாள்.

“நீ தானே என்னை மாதிரியா உனக்கும் உடம்பு ஸ்டோரங்கா வேணும்னு சொன்ன.. அதான் ஏற்பாடு செய்துட்டேன்” என்றான்.

“அது.. அது ஏதோ நேத்து சும்மா ஒரு ஆர்வத்துல சொன்னது. பொண்ணுங்க உடம்பு பூ மாதிரி இருந்தா தான் நல்லா இருக்கும். உங்களை மாதிரி கல்லு மாதிரி உடம்பு இருந்தா பாக்க சகிக்காது” என்றாள்.

“அப்படின்னு யாரு சொன்னது. பூ மாதிரி பொண்ணுங்க இருந்தா அது அழகுக்கு வேணா சரியா இருக்கும். ஆனா உடம்ப கட்டுக்கோப்பா ஸ்ட்ரோங்கா வெச்சிருந்தா தான் உங்களுக்குள்ள ஒரு கான்பிடென்ஸ் வரும். உங்க போடு ஸ்ட்ரோங் ஆகுற மாதிரி உங்க மைண்டும் ஸ்ட்ரோங் ஆகும் ” என்றவன் “ஷைலு உன்னோட ஒர்க் அவுட் செஞ்ச ஆப்ஸ் அண்ட் மசில்ஸ் இவகிட்டே காட்டு ..”என்றவன் “நீ ஒர்க்-அவுட் ஸ்டார்ட் பண்ணு. நான் இங்கே இருந்தா உனக்கு டிஸ்டர்ப்-ஆ இருக்கும். நான் அப்படியே ஜாகிங் போயிட்டு வந்துடுறேன்,” என்று சொல்லிவிட்டு, அவள் பதிலுக்குக் காத்திருக்காமல் அங்கிருந்து கிளம்பினான்.

அவன் போவதையே வெறித்துப் பார்த்த இளங்கிளி, திரும்பி ஷைலுவைப் பார்க்க.. அவளோ ராவண் சென்ற அடுத்த நொடி தான் போட்டிருந்த டி ஷர்டை கழட்டிவிட்டு ஸ்போர்ட்ஸ் ப்ராவுடன் தன் உடற்கட்டை வளைத்து முறுக்கேற்றி இலங்கிள்ளிக்கு காட்டிக்கொண்டிருந்தாள் .

அவள் அபப்டி நின்றது ஒரு பக்கம் கூச்சமாக இருந்தாலும், அவள் உடற்கட்டை கண்டு இளங்கிளி அதிர்ச்சியில் பின்வாங்கினாள். ஷைலுவின் உடல் அந்த அளவுக்கு இருகிப் பொய் இருந்தது. அவளை அதிசயமென பார்த்தபடி அவள் பக்கம் சென்ற இளங்கிளி. அவள் கை தசைக்கோலங்களையும், வயிற்றில் இருந்து படிக்கட்டுக்களையும் பார்த்து ஆச்சர்யப்பட்டவள் ” இது எல்லாம் நிஜமா தான் உங்களுக்கு இருக்கா?” என்று சந்தேகமாகக் கேட்டாள்.

“எஸ் மேம், உங்களுக்கும் இது பல உடம்பு வர வைக்க என்னால முடியும்” என்றவள் “தொட்டு பாருங்க ” என்று தன் அர்ம்ஸை முறுக்கி அவள் முன் காட்டினாள்.

இளங்கிளி தயக்கத்தோடு தன் இரு கைகளையும் தூக்கி லேசாக கிள்ளுவது போல அவள் ஆர்ம்ஸை தொட்டு பார்த்தவள் “நிஜம் தான் ” என்று உள்ளுக்குள் நினைத்துக்கொண்டவள்.

“நேத்து ஏதோ ஒரு பேச்சுக்குச் சொன்னா… இன்னைக்கு நிஜமாவே ஆளைக் கூட்டிட்டு வந்து நிப்பாட்டிட்டாரே.. ” என்று மனதுக்குள் புலம்பத் தொடங்கினாள்.

‘அடியே இளங்கிளி… உன் வாயைக் கொடுத்து நீயே மாட்டிக்கிட்டியே! இவர்  மனுஷன் இல்ல, நிஜமாவே ராவணன் தான். ஒரு வார்த்தை சொன்னா உடனே அதைச் செஞ்சு முடிக்காம விட மாட்டாரே ! காலையில நாலு மணிக்கு யாராவது ஜிம்முக்கு வருவாங்களா? என் தூக்கம்…  எல்லாம் போச்சே!’ என்று சலித்துக்கொண்டவள் ஷைலுவை பார்த்தாள்.

அவளோ “மேம் ஸ்டார்ட் பண்ணலாமா?” என்றாள்.

“ஹையோ! அவர் விட்டாலும் இவ விடமாட்டா போலையே.. ” என்று புலம்பியவாறு “ம்ம் ..” என்று தலையை ஆட்டினாள்

இளங்கிளி கேரக்டரே ஒரு தனி அழகு. எதையும் கள்ளமில்லாமல் வெளிப்படையாகப் பேசிவிடுவாள். சட்டெனக் கோபம் வரும், மறுநிமிடமே அது மறைந்துவிடும். இப்போது கூட ராவனை மனதுக்குள் திட்டினாலும், அவளது ஆழ்மனதில் அவன் காட்டிய அந்த aகாரையும், உரிமையும் அவளுக்கு ஒருவிதப் பாதுகாப்பையே கொடுத்தது.

அவள் முகத்தைச் சுளித்துக் கொண்டு, அந்தப் பெண் ட்ரெய்னரைப் பார்த்தாள். “சின்னதா ஒரு பத்தியம் இருந்தா போதாதா? அதுக்காக இப்படியா?” என்று முணுமுணுத்தாள்.

ஷைலு சிரித்துக்கொண்டே.. “நோ மேம், டயட் மட்டும் போதாது. சரியான ஒர்க் அவுட் இருந்தா சீக்கிரமே நீங்க நினைச்ச மாதிரி உங்களை மாத்திடலாம்” என்றவள் ஒரு ஜிம் உடையை அவளுக்கு கொடுத்து இது போட்டுக்கோங்க மேம் ” என்று அவளிடம் நீட்டினாள்.

“இது வேறையா?” என்று அதை வாங்கி உள்ளே சென்றவள் உடையை மாற்றிவிட்டு திரும்ப ஜிம்முக்குள் வந்தாள். ஒருவித தயக்கம் , கூச்சம் அவளுக்கு, இந்த மாதிரி உடைகளை எல்லாம் அவள் போட்டதே இல்லையே. திருமணத்திற்கு பிறகு கூட பரிமளா சில மாடர்ன் உடைகள் வாங்கி கொடுத்திருக்கிறார் தான் அவளுக்கு. அவை எல்லாம் சுடிதார், மாக்ஸி அந்த போல முழுதாக மறைத்து தான் இருக்கும்.

இந்த உடை கூட அப்படி தான். ஆனால் உடலை ஒட்டிக்கொண்டு இருந்தது, அவள் உடல் வளைவுகளை அப்படியே காட்டியது அவளுக்கு.

“இந்த டிரஸ் போடணுமா ” என்றாள்.

“ஒர்க் அவுட் பண்ற அப்போ இது கொஞ்சம் கப்போர்ட்டா இருக்கும் மேம் ” என்றாள் ஷைலு.

‘என்ன இங்க மாட்டிவிட்டுட்டு இவரு மட்டும் ஜாகிங் போறாராம்! ராட்சசன் வரட்டும் இன்னைக்கு ராத்திரி… இருக்கு அவருக்கு!’ என்று  அவள் வாய் மட்டும் முணுமுணுத்தாலும், அவன் அவளுக்காக எடுத்துக்கொண்ட அந்த அக்கறையை நினைக்கும்போது அவளுக்குள் ஒரு சின்னப் பெருமிதம் பூத்தது. சலித்துக்கொண்டே, தன் கூந்தலை இறுகக் கட்டியபடி, “சரி மேடம்… எங்கே ஆரம்பிக்கலாம்?” என்று போர்க்களத்திற்குத் தயாராகும் வீர மங்கையைப் போல முதல் அடியை எடுத்து வைத்தாள் இளங்கிளி.

விடியற்காலையின் அந்தப் பனிமூட்டமான சூழலில், முதல் நாளிலேயே இளங்கிளியை ஒரு வழி பண்ணிவிட்டு ஷைலா விடைபெற்றுச் செல்ல, ஜாகிங் முடித்துத் திரும்பிய ராவணன் அவளை வாசலிலேயே சந்தித்தான்.

“ட்ரெய்னிங் எப்படிப் போச்சு ஷைலா? உங்க மேடம் ஒர்க் பண்ண கோ ஆபரேட் பண்ணினங்களா ?” என்றான் ராவண்  புன்னகையுடன் .

“சார், உங்க மேல இருக்கிற பயத்துலயும் மரியாதையிலயும் தான் அவங்க இதையெல்லாம் செய்றாங்கன்னு நல்லாவே தெரியுது. அவங்களுக்கு இதில் கொஞ்சம் கூட இஷ்டமில்லை. ஆனா, போகப் போகப் பழகிடும்.”என்று ஷைலா மெல்லச் சிரித்தவாறு ” ஒண்ணு மட்டும் நிஜம் சார்… மேடம் ரொம்ப இன்னசென்ட். உலகமே தெரியாத ஒரு குழந்தையை ஜிம்ல கொண்டு வந்து விட்ட மாதிரி இருக்கு,” என்று சொல்லிவிட்டுப் போனாள்.

‘அவளைப் பத்தி எனக்குத் தெரியாதா ஷைலா? அவ மனசுல தான் குழந்தை. ஆனா மத்த விசயத்துல அவ குழந்தை இல்லை… என் மனசைத் திருடின ஒரு மாயக்காரி’ என்று மனதுக்குள் நினைத்தபடி ராவண்  ஜிம் அறைக்குள் நுழைந்தான்.

அங்கே… இளங்கிளி ஜிம் மேட்  மீது ஒர்க் அவுட் செய்த களைப்பில் அப்படியே மல்லாக்கப் படுத்துக் கிடந்தாள். கைகளும் கால்களும் விரிந்து கிடக்க, கலைந்த கூந்தலும், வியர்வையில் மின்னிய முகமுமாக அவள் அங்கே ஒரு சோர்வுற்றவளாய் நிலத்தில் படுத்திருந்தாள்.

ராவண்  மெல்லச் சிரித்துக்கொண்டே அவள் அருகே வந்தான். அவனும் ஓடி வந்த களைப்பில் இருந்ததால், அவளுக்கு இணையாக அவளருகில் தரையில் வந்து படுத்துக்கொண்டான். அவன் விடும் மூச்சுக் காற்று அவள் தோள்களில் தழுவ..

“என்னை அந்த ஷைலு ஒரு வழி பண்ணிட்டாங்க.!” இப்படி என்னை மாட்டி விட்டுட்டீங்களே..” என்று கண்களை மூடிக் கொண்டே அவனை பார்க்காமலேயே முணுமுணுத்தாள்.

“ஏன் சிணுங்கி…. இந்த ஒரு மணி நேரத்துக்கே இப்படி டயர்ட் ஆகிட்டா எப்படி? இன்னும் ஈவினிங் ஒரு செஷன் இருக்குல்ல?” – ராவணன் கிண்டலாகக் கேட்டான்.

இளங்கிளி சட்டெனக் கண்களைத் திறந்து அவனை முறைத்தாள். “உங்களுக்கு இரக்கமே இல்லையா? அந்தப் பொண்ணு ‘ஒன்… டூ… த்ரீ’ன்னு சொல்லச் சொல்ல எனக்கு உங்க நினைப்பு தான் வந்துச்சு. இப்படி இவகிட்டே வந்து என்னை மாட்டி விட்டுட்டீங்களேன்னு கோபம் . நீங்க மட்டும் அப்போ என் முன்னாடி இருந்தா உங்களை கடிச்சு குத்தறிருப்பேன்.. எதுக்குடா இந்த ஜிம்னு தோணிடுச்சு தெரியுமா?” என்றாள்.

அவள் சலித்துக் கொள்வதைப் பார்க்க அவனுக்கு அவ்வளவு அழகாக இருந்தது. அவன் மெல்லத் திரும்பி, தன் ஒரு கையால் தலைக்கு முட்டுக் கொடுத்துப் படுத்துக்கொண்டு அவளைப் பார்த்தான்.

“ஏன்… என் பொண்டாட்டி அழகா, ஃபிட்டா இருக்கணும்னு நான் ஆசைப்படக்கூடாதா?”  அவன் குரல் இப்போது தழைந்து, காதலால் கசிந்திருந்தது.

அவள் பதில் பேச அவன் பக்கம் திரும்பி கண்களை திறக்க.., அவன் முகம் அவளுக்கு மிக அருகில் இருந்ததைக் கண்டு அவள் பேச்சு நின்றது. அவன் கண்களில் தெரிந்த அந்தத் தீவிரம் அவளை உறைய வைத்தது.

“என்னங்க… ரொம்பப் பக்கத்துல வராதீங்க… எனக்கு மூச்சு முட்டுது,” என்று அவள் தடுமாற்றத்துடன் சொன்னாள்.

“இப்போ ஜிம்னால மூச்சு வாங்குதா… இல்ல நான் பக்கத்துல இருக்கிறதுனாலயா?” – என்று ராவண் குரல் அவள் காதருகே மென்மையாகக் கேட்டது.

அவனிடம் பேச முயன்ற அவள் உதடுகளைத் தன் விரலால் வருடினான் ராவண் . அந்த ஸ்பரிசத்தில் அவளது அத்தனை சோர்வும் மறைந்து, ஒருவித மின்சாரம் உடல் முழுக்கப் பாய்ந்தது. அவள் அவனைத் தள்ளிவிட நினைக்கவில்லை,

அந்த அதிகாலையின் நிசப்தத்தில், ஜிம் மேட்டில் அருகருகே படுத்துக் கிடந்த இருவருக்கும் இடையே ஒரு மெல்லிய தவிப்பு பரவியது.

இளங்கிளியின் சீரான மூச்சுக் காற்று, ராவணனின் கழுத்தில் பட்டுத் தெறிக்க, அவனது இதயம் வழக்கத்திற்கு மாறாகத் துடிக்கத் தொடங்கியது.

“நான்.. நான் போய் குளிக்குறேன்…  டயர்டா இருக்கு, குளிச்சா தேவலாம் போல இருக்கு ” என்று அவள் முணுமுணுத்தபடி திரும்பிப் படுக்க முயன்றாள்.

ஆனால், ராவன அவளை விடவில்லை. சட்டெனத் தன் வலது கையால் அவளது இடையைப் பற்றித் தடுத்தவன், அவளைத் தன் பக்கம் மெல்ல இழுத்தான். அந்தத் இழுப்பில், இளங்கிளி நிலைகுலைந்து அவன் மார்போடு மோதி நின்றாள்.

“என்னங்க…” என்ற அவள் குரலில் ஒருவித நடுக்கம்.

அவள் கண்களை ஏறிட்டுப் பார்த்தான். வியர்வையில் நனைந்து, நெற்றியில் ஒட்டியிருந்த அவளது கூந்தலை மென்மையாக ஒதுக்கிவிட்டான். அவனது விரல் நுனிகள் அவள் காதோரம் உரசிச் சென்றபோது, இளங்கிளிக்கு ஒரு கணம் உலகமே நின்று போனது போலிருந்தது.

“ஏன்  சிணுங்கி…. என்கிட்டே இருந்து தப்பிக்க வழி இருக்குன்னு நினைக்கிறியா?” – அவன் குரல் அவள் காதுமடலை உரச., ஒரு காந்தம் போல அவளை ஈர்த்தது.

அவளது கண்கள் அவனது இதழ்களில் நிலைத்து நின்றன. அந்தப் பார்வையை ராவண்  மிகச் சரியாகப் புரிந்து கொண்டான். அவனது கரம் மெல்ல அவளது கன்னங்களை ஏந்த, இளங்கிளி தன் இமைகளை இறுக மூடிக்கொண்டாள். அவள் மறுக்கவில்லை, மாறாக அவனது அந்த நெருக்கத்திற்காகக் காத்திருப்பவள் போல அவன் தோளில் கை வைத்தாள்.

ராவண்  குனிந்து, அவளது நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான். அந்த ஒரு ஸ்பரிசமே அவளை உருக வைத்தது. அங்கிருந்து அவனது இதழ்கள் மெல்ல நகர்ந்து, அவளது மூக்கு நுனியை உரசிச் செல்ல, இளங்கிளி தன் கைகளால் அவன் டி ஷர்ட்டை இறுகப் பற்றினாள்.

“ஐரா!…” என்று அவள் அழைத்தது ஒரு கெஞ்சலைப் போல இருந்தது.

அடுத்த நொடி, அவனது இதழ்கள் அவளது இதழ்களோடு சங்கமித்தன. அது ஒரு மென்மையான, அதே சமயம் அதிகாரம் நிறைந்த முத்தம். அவளது அத்தனை சோர்வும், புலம்பல்களும் அந்த ஒரு நொடியில் கரைந்து போயின. அவளது உலகமே அவன்தான் என்பது போல, இளங்கிளி அவனது காதலில் முழுமையாகத் தன்னைத் தொலைத்தாள்.

வெளிச்சம் மெல்ல அறைக்குள் படரத் தொடங்க, அந்த ஜிம் மேட்டில், அவர்களின்  காதல் முத்தம் ஒரு நீண்ட காவியத்தின் தொடக்கமாக அமைந்தது.

“இனிமே தினமும் இதே மாதிரிதான் ஒர்க்-அவுட் முடியும்னா… நான் எத்தனை வருஷம் வேணும்னாலும் ஜிம்முக்கு வருவேன் ,” என்று அவள் அவன் மார்பில் சாய்ந்து கொண்டு மெல்ல சொன்னாள் இளங்கிளி., ராவணின் இதழ்களில் ஒரு வெற்றிப் புன்னகை பூத்தது.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured