EPISODE 4
“என்னடியம்மா பொழுது விடிஞ்சிருச்சா உனக்கு.. அப்படியே இந்த வீடு மகாராணி மாதிரி ஆடி அசைஞ்சு வர.. ” என்று பர்வதம் மாடியில் இருந்து இறங்கி வந்த பூவிழியை பார்த்துக் கேட்டார்.
யுகேந்திரனின் அப்பா ராஜேந்திரனின் ஒரே தங்கை தான் இந்த பர்வதம். திருமணம் ஆன நாளில் இருந்து இன்று வரை புகுந்த வீட்டிற்கு செல்லாமல் தாய்வீட்டிலேயே தங்கிவிட்டார். அவர் கணவர் கார்த்திகேயனும் அவரோடு இங்கு தான் இருக்கிறார். ராஜேந்திரனின் ஆபீஸ் கணக்கு வழக்குகளை பார்த்துக்கொண்டு மிக நேர்மையாக வேலை செய்யும் ஒரு ஆள் அவர்.
“ஹா அது வந்து மா உடம்பு கொஞ்சம் முடியல அதான் தூங்கிட்டேன்” என்று இரவெல்லாம் யுகேந்திரன் அவளை விடாமல் கட்டில் கழியாட்டம் செய்ததில் சோர்வில் உறங்கிவிட்டதை மறைந்து பொய் சொன்னாள் பூவிழி.
“உனக்கு என்ன டி வந்துச்சு.. நல்லா மூணு நேரமும் மூக்கப் பிடிக்க தின்னுட்டு சொகுசா தானே சுதிங்கிட்டு இருக்க.. அப்பறோம் என்ன உடம்பு முடியல.. ” என்று கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் பேசினார் பர்வதம்.
அவருக்கு பூவிழியின் மீது இவ்வளவு வெறுப்பு வரக் காரணமே அவள் யுகேந்திரனை திருமணம் செய்து கொண்டதால் தான். தன் மகள் ஆராதனா இருக்கும்போது இவளை .. அதுவும் இந்த வீட்டு வேலைக்காரியை திருமணம் செய்தது அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
அப்போது யுகேந்திரன் இருந்த நிலையில் கூட அவனுக்கு தன் பெண்ணான ஆராதனாவை திருமணம் செய்த்து வைக்க கிட்டும் அவர் சம்மதித்திருக்கவில்லை. கை , கால் வராதவனுக்கு என் பொண்ணைக் கல்யாணம் செய்து கொடுத்து அவ வாழ்க்கையை நான் நாசம் பண்ணனுமா ? என்று கேட்டவர் தான் அவர், இருந்தாலும் பூவிழியின் மீது ஏனோ வெறுப்பு அவருக்கு.
“அம்மா! அது வந்து.. ” என்று பூவிழி கொஞ்சம் தயக்கத்தோடு அவரைப் பார்க்க..
“சரி போ.. போய் மத்தியானம் சாப்பிட நல்லா கார சாரமா மீன் குழம்பு , இறால் கிரேவி செஞ்சு வை. என் பொண்ணு இன்னிக்கு வந்திருவா.. அவளுக்கு நல்லா கார சாரமா இருந்தா ரொம்பப் பிடிக்கும். அந்த ஊர்ல வெறும் ரொட்டியும். ,பன்னும் சாப்பிட்டு என் பொண்ணுக்கு நாக்கு செத்துப் போயிருக்கும்.” என்றார்.
அவர் மகள் ஆராதனா கனடாவில் பட்டப்படிப்பை முடித்துக்கொண்டு நாடு திரும்புகிறாள். அவள் வருவதற்கு தான் இந்த ஏற்பாடு.. எல்லாம்.
“ம்ம்..சரிங்க அம்மா ” தன் சேலை தலைப்பை இடையில் செருகிக்கொண்டு கிச்சனுக்குள் போக எத்தனிக்க..
அப்போது ஹாலில் இருந்த அந்த மஞ்சள் வண்ண விளக்கு சத்தத்தோடு ஒளிர்ந்தது. யுகேந்திரன் தான் அழைத்து இருந்தான்,
“இவன் ஏன் இந்த நேரத்துக்கு கூப்பிட்றான்” என்று யோசித்தவர் “ஏய் இன்னும் என்ன இங்கையே நின்னுட்டு இருக்க.. போ .. போய் நீ சமையல் வேலையைப் பாரு. நான் போய் என் மருமகனுக்கு எதுவும் வேணுமான்னு கேட்டு சொல்றேன்” என்று மெதுவாக எழுந்தவர் அவர்கள் வீட்டிலேயே யுகேந்திரனுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட லிப்டில் ஏறி மேலே அவன் அறைக்கு சென்றார்.
இங்கு கிச்சனுக்குள் வந்தவள் “கஸ்தூரி அக்கா, பர்வதம் அம்மா சொன்னது எல்லாம் செய்யணும். நீங்க கொஞ்சம் குமார் அண்ணாக்கிட்டே சொல்லி மீனும், இறாலும் வாங்கி வர சொல்றிங்களா?” என்றாள்.
“சரி கண்ணு.. இது காலையில இருந்து நீ வருவேன்னு மாடியையே பாத்துட்டு இருந்துச்சு” என்றவர் “ஆமா உனக்கு உடம்பு எதுவும் சரி இல்லையா? ஏன் இவ்ளோ நேரம் ஆச்சு நீ வர.. ” என்று கரிசனத்தோடு அவள் நெற்றியை தொட்டுப் பார்த்தார் கஸ்தூரி.
“இல்.. இல்ல.. நான் நல்லா தான் இருக்கேன் அக்கா. கொஞ்சம் சலுப்பா இருந்துச்சு, ராத்திரி தூக்கமே இல்ல.. அதான் இவ்ளோ லேட்டாச்சு எழுந்து வர.. பர்வதம் அம்மாகிட்டே சொன்ன திட்டுவாங்கனு தான் பொய் சொன்னேன்” என்றாள் பூவிழி.
“ம்ஹும்.. நியாப்படி நீ இந்த வீட்டுல உக்காந்து எல்லாரையும் அதிகாரம் பண்ணி வேலை வாங்கணும், ஆனா இங்க இருக்க எல்லாரும் உன்னை தான் வேலைக்காரி போல நடத்துறாங்க. உன் புருஷன் கூட இதை பத்தி வாயே தொறக்குறது இல்ல.. புள்ளத்தாச்சி ஆச்சே.. கொஞ்சமாச்சும் கரிசனமா இருக்கணும்னு தோணுதா இவங்களுக்கு” என்று மொத்த குடும்பத்தையும் திட்டினார் கஸ்தூரி.
“அக்கா! சும்மா ஏன் எல்லாரையும் திட்டுறீங்க.. வாங்க நாம வேலையை பாக்கலாம்” என்று சமையல் செய்ய தயாரானாள்.
இங்கே மேலே யுகேந்திரனைப் பார்க்க சென்ற பர்வதம் “யுகா!.. கூப்ட்டியாப்பா.. எதுவும் வேணுமா?” என்று அவன் அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றார்.
பூவிழியை அழைத்துவிட்டு அவள் வருகைக்காக காத்திருந்தவன் பர்வதம் வரவும் ஏமாந்து போனான். அதில் கொஞ்சம் கோபமும் தலையைத் தூக்க..
“அத்தை நீங்க எதுக்கு மேல வந்திங்க.. அவ எங்க?” என்றான் கோபத்தை காட்டி.
“ஐயோ! மேல வந்தது குத்தமா” என்று நினைத்தவர். “அவ சமைக்குறாப்பா.. மதியம் சாப்பாடு செய்யணும் இல்ல.. அப்பறோம் நம்ம ஆராதனா வேற வந்திருவா அவளுக்கு வாய்க்கு ருசியா சமைக்க சொல்லிருக்கேன். ஏன்ப்பா என்ன வேணும் என்கிட்டே சொல்லு நான் கொண்டு வந்து கொடுக்கிறேன்” என்றான்.
“இவங்க பொண்ணு ஊர்ல இருந்து வந்தா இவ எதுக்கு வேலை பாக்குறா ., நான் கூப்பிட்டதும் இருக்குற வேலையை போட்டுட்டு மேல வரணும்னு தெரிய வேணாம் இவளுக்கு.” என்று நினைத்தவன். “அத்தை இனிமேல் நான் பெல் அடிச்சா என் ரூமுக்குள்ள வேற யாரும் வரக்கூடாது. எனக்கு எது வேணும்னாலும் அவ தான் வரணும்” என்றான் தெளிவாக.
“ஏன்ப்பா என்ன ஆச்சு? இத்தனை நாங்க யாராவது தானே உனக்கு வேணுங்குறதை செய்தோம். அவ உன்னை ரெடி பண்ணி சாப்பிட வெக்க மட்டும் தானே மேல வருவா ” என்றார்.
“ம்ம்.. ஆனா இனி அவ தான் எனக்கு எது வேணும்னாலும் செய்யனும். என்னை பாத்துக்க தானே அவளை கல்யாணம் பண்ணி வெச்சிருக்கீங்க. அப்பறோம் எதுக்கு நீங்க எல்லாரும் வேலை பாக்கணும். இப்போ இருந்து அவ என் கூட தான் இருக்கனும். அவளை யாரும் கீழ கூப்பிடாதிங்க. எனக்கு இங்க நிரைய வேலை இருக்கு புரிஞ்சுதா ” என்றான் ஆணையாக.
“யுகா! அப்போ சமைக்க , மத்த வேலை எல்லாம் செய்ய.. ” என்று அவர் கேட்க..
“ஏன் நம்ம வீட்ல வேலைகாரங்க யாரும் வர்ரதில்லையா? ஏன் நீங்க இருக்கீங்க இல்ல.. ஆராவுக்கு என்ன புடிக்கும்னு உங்களுக்கு தெரியாது? நீங்க சமைக்க வேண்டியது தானே.. ” என்றவன் “இனிமேல் என்னோட எல்லா வேலையும் அவ மட்டும் தான் பார்க்கணும் , தேவை இல்லாம யாரும் என் ரூமுக்கு வரக்கூடாது” என்றான் கறாராக.
“என்ன ஆச்சு இவனுக்கு.. ” என்று யோசித்தவர் “சரி யுகா, நான் போய் அவளை வர சொல்றேன்” என்றார்.
“எனக்கு பிரட் டோஸ்ட் வேணும், கூடவே சாப்பிட பிரூட்ஸ் கொண்டு வர சொல்லுங்க அவளை” என்றான்.
“சரிப்பா ” என்று அவர் கீழே வந்தவர். “ஏய் இவளே.. வாடி இங்க ” என்றார்.
“ம்கூம்.. ஆரம்பிச்சிருச்சு இந்த பொம்பளை . உன்னைப் பார்த்துட்டா போதுமே உடனே ஏய் இவளே.. இதை கொண்டா.. ஏய் இவளே அதைக் கொண்டான்னு ஆரம்பிச்சுர வேண்டியது ” என்று பர்வதம் பேசுவது போல பாவனை காட்டி பேசினார் கஸ்தூரி.
“அக்கா! சும்மா இருங்க அவங்களுக்கு கேட்டுறப்போகுது ” என்று சிரித்துக்கொண்டே சொன்னவள் வெளியே செல்ல..
“உன் புருசனுக்கு பிரெட் டோஸ்ட், அப்பறோம் பிரூட்ஸ் கட் பண்ணி வேணுன்னு சொன்னான் கொண்டு போய் கொடுத்துரு.. ” என்றார்.
“நானா?” என்று கேள்வியாக அவரைப் பார்த்தாள் பூவிழி.
“பின்ன நானா கொண்டு போய் கொடுக்கட்டும் , இனிமேல் அவன் எப்போ கூப்பிட்டாலும் நீ தான் அவனுக்கு என்ன வேணும்னு கேக்க மேல போகணுமாமே.. வேற யாரும் வந்து அவனை தொந்தரவு செய்யக்கூடாதுனு சொல்லிட்டான் . இந்த சமையல் வேலை எல்லாம் கஸ்தூரியே பாத்துக்கட்டும் . நீ அவனுக்கு என்ன வேணுமோ அது மட்டும் செஞ்சா போதும்னு சொல்லிருக்கான்” என்றார் கடுப்பாக.
பூவிழிக்கு அதுவும் விளங்கவில்லை. “என்ன இது திடீர்னு இப்படி சொல்லிட்டார். நான் பகல் நேரம் அவர் ரூமுக்கு போறதே பிடிக்காதே.. ” என்று யோசித்தவள் கிச்சனுக்குள் வந்து அவன் கேட்டதை செய்து எடுத்துக்கொண்டு படிகளில் ஏறி சென்றாள்.
இங்கே அறைக்குள் இருந்த யுகேந்திரன் “இங்க இருக்க ரூமுக்கு வர இவளுக்கு இவ்ளோ நேரமா, வரட்டும் அவளுக்கு இருக்கு.. “என்று குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டு இருந்தான். வாசலைப் பார்ப்பது பின் நடப்பதுமாக இருக்க..
அப்போது அவன் அறை திறக்கும் சத்தம் கேட்டதும் வேகமாக சென்று தன் வீல் சேரில் அமர்ந்து கொண்டு முகத்தை வழக்கம் போல இறுக்கமாக வைத்துக்கொண்டான்.
கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த பூவிழி நேராக அவனிடம் சென்றாள் “இவ்ளோ நேரமா மேல வர.. ” என்றான்.
“அது நீங்க சொன்னதும் செஞ்சு எடுத்துட்டு வந்துட்டேன் மாமா.. ” என்றாள்.
“சரி அதை அங்க வெச்சுட்டு போய் கதவை லாக் பண்ணிட்டு வா.. “என்றான்.
அவளோ புரியாமல் அவனைப் பார்க்க..
“என்ன?” என்றான் அதட்டலாக.
“ம்ஹும்.. ” என்றவள் கொண்டு வந்த ட்ரேயை அருகே இருந்த மேஜையில் வைத்துவிட்டு சென்று அறைக்கதவை தாளிட்டு அவனிடம் வந்தாள்.
அவள் அருகே வந்த அடுத்த நொடி அவளை இழுத்து தன் மடி மீது அமர்த்திக் கொண்டவன் நிமிட நேரம் கூட தாமதிக்காமல் அவள் இதழில் தன் இதழை பொருத்தி அவளை தன் வசமாக்கத் துவங்கி இருந்தான்.
இதை சற்றும் எதிர் பார்த்திராத பூவிழியோ அதிர்ந்து விழிக்க..
அவளை முத்தமிட்டுக் கொண்டிருந்தவன் அவள் அதிர்ந்த விழிகளை ஏறிட.. அவன் விழிகளை இவ்வளவு நெருக்கத்தில் பார்த்தவள் சட்டென கண்களை மூடிக்கொண்டாள்.
அவள் செயலில் சிரித்தவன் “அமுக்காஞ்சி.. You are gorgeous” என்று அவளை முத்தமிட்டபடியே மனதிற்குள் செல்லமாக திட்டினான்.
அவன் தோள்களில் கையை வைத்திருந்தவள் அவன் முத்தம் செய்த ஜாலத்தில் தன்னையே மறந்து அவன் தோள்களை உணர்ச்சிப் பெருக்கில் அழுந்த பற்றிக்கொண்டாள். அவள் இதழில் ஆட்சி செய்ய ஆரம்பித்த அவன் இதழ்கள் அதில் இருந்து மீண்டெழுந்து கொஞ்சம் கொஞ்சமாக முத்தம் வைத்து அவள் கழுத்து வளைவிற்குள் முகம் புதைக்க..
பூவிழி தன் கணவனின் தீண்டலில் நிலைகுலைந்து போனாள். அவன் இதழ்கள் அவள் கழுத்து வளைவில் ஆழமாகப் பதிந்து, மென்மையான முத்தங்களால் அவளுக்குள் புதுவித அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தன.
அடுத்தடுத்த அவன் வேகம் தாங்காமல் அவன் தோளிலேயே துவண்டு சரிய.. அவளை பார்த்து மென்மையாகப் புன்னகைத்தவன் அவள் மோக விழிகளைப் பார்த்துக்கொண்டே அவள் சேலையில் கைவைத்து அதை கீழே நழுவ விட..
சட்டென்று பெண்மை விழித்துக்கொள்ள.. அவன் கைகளை இருக்கமாகப் பற்றிக்கொண்டு அவனைப் பார்த்தாள் பூவிழி .
அவள் செயலில் யுகேந்திரன் மோகம் அறுபட.. அவளை சிவந்த விழிகளோடு பார்த்தான்.
உங்க ஆதரவை கமெண்ட்ல சொல்லணும்

1 comment
Super epi sis please upload next epi as soon as possible