Home Uncategorizedஅவ்வளவு காதலிக்கிறேன் டி உன்னை, மூர்க்கன் 30

அவ்வளவு காதலிக்கிறேன் டி உன்னை, மூர்க்கன் 30

by Sinamika Writes
22 views

மூர்க்கன் 30

முத்தமிட்டு மித்ராவை விட்டு மெல்ல விலகினான் ஈஸ்வர்.

மித்ரா இன்னும் கண்களை மூடியபடியே நின்றிருந்தாள். அவன் சட்டையை பற்றிய விரல்கள் கொஞ்சம் கூட தளரவில்லை.

“மித்ரா..” என்று மெல்லிய குரலில் அழைத்தான்.

மெதுவாக கண்களை திறந்தவள். அவன் முகத்தை பார்த்தாள். பார்வையில் குழப்பமும், ஒரு வித படபடப்பும் இருந்தது.

“நீங்க ஏன் அப்படி பண்ணீங்க?” என்று கேட்டாள் குரல் நடுங்க.

ஈஸ்வர் சிரித்தான். அந்த சிரிப்பில் இத்தனை நாட்களின் தனிமையும், காத்திருப்பும், வலியும் கலந்திருந்தன.

“நீ என் பொண்டாட்டி. உனக்கு முத்தம் கொடுக்க என்னோட ரைட் இருக்கு” என்றான்.

மித்ரா கன்னம் சிவந்தது. அவனிடம் இருந்து தன் கையை விலக்கி கொள்ள.. அவன் அதை கவனித்த ஈஸ்வர். அவள் கையை பிடித்து தன் கைகளில்  மெல்லக் கோர்த்துக் கொண்டான்.

“என்னை விட்டுடுவீங்களா?” என்று கேட்டாள்.

“இல்லடி. இனி விட மாட்டேன்” என்றான்.

அவள் கீழே பார்த்தாள். அவன் விரல்களோடு சேர்ந்திருந்த தன் விரல்களை பார்த்தாள். ஏதோ ஒரு சொல்ல முடியாத உணர்வு உள்ளே கிளர்ந்தது. என்ன என்று புரியவில்லை அவளுக்கு..

“சந்திரிகா ஆண்டி சொன்னாங்க… நீங்க என்னை ரொம்ப கஷ்டப்பட்டு காப்பாத்தீங்கன்னு. நான் ரொம்ப தப்பு பண்ணிட்டேனா?” என்றாள் மெல்ல.

ஈஸ்வர் அவளை பார்த்தான். மித்ராவின் இந்த மாற்றம் அவனுக்கு புதிது என்றாலும் அவளது பழைய நினைவு அவனை உள்ளிருந்து கலைத்தது. எத்தனை இரவுகள் அவள் திரும்பி வருவாளா என்று கண் கொட்டாமல் காத்திருந்தான். எத்தனை முறை அவள் பெயர் சொல்லி கத்தி இருந்தான் யாரும் இல்லாத இடத்தில்.

“அது உன்னோட தப்பு இல்லை.. உன்னை பாத்துகிறதுல எனக்கு கஷ்டம் இல்லடி. உன்னை பாதுகாக்கிறது என்னோட கடமை இல்ல… உன்னை அவ்ளோ காதலிக்குறேன் நான். அதனால இதெல்லாம் பண்றேன்” என்றான்.

மித்ரா ஒரு கணம் அமைதியாக அவனை பார்த்தாள்.

“நீங்க லவ் பண்றிங்களா என்னை?” என்று மெல்ல கேட்டாள்.

“ம்ம்.. ஆமா” என்றான் தெளிவாக.

“எவ்வளவு?” என்று குழந்தை போல கேட்டாள்.

ஈஸ்வர் அவள் கையை இழுத்து வராந்தாவிற்கு அழைத்துச் சென்றான். இரவு நேர மலேசியா வானம் நட்சத்திரங்களால் நிறைந்திருந்தது. கீழே நகரம் விளக்குகளால் மின்னியது.

“அந்த வானத்தில  நட்சத்திரம் எவ்ளோ இருக்கு. அதை எண்ண முடியுமா உன்னால?” என்று கேட்டான்.

மித்ரா வானத்தை அதிசயமாகப் பார்த்தாள். “முடியாது” என்றாள்.

“அவ்வளவு காதலிக்குறேன் டி உன்னை” என்றான்.

அவள் திரும்பி அவனை பார்த்தாள். அவன் கண்களில் பொய் இல்லை என்று அவளுக்கே புரிந்தது.

“நான்… எனக்கு தான் எதுவுமே நியாபகம்  இல்லியே.. உங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குமே” என்றாள் குரல் தழுதழுத்து.

ஈஸ்வர் அவள் அருகே வந்து நின்றான். அவள் தலையை மெல்ல தன் தோளில் சாய்க்க வைத்தான். அவள் விலகவில்லை. ஆச்சரியமாக அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். அவன் கைக்குள் அவளுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வு தோன்றி இருக்க வேண்டும்.

“உன் நியாபகம் போனாலும் நீ நீ தானே 

. அதுவே எனக்கு போதும்” என்றான்.

“ஆனா நான் வேற மாதிரி இருக்கேன் தானே..  உங்களை யாரோ மாதிரி தானே பாத்தேன் . உங்களை பிடிக்கலைனு சொன்னேனே.. உங்களை பார்த்தா பயமா இருக்குனு சொன்னேனே.. கோபமா இல்லியா?” என்றாள்.

“நீ பயந்தே. கோபப்படுவேன்னு நான் எதிர்பாக்கல தான். ஆனா நியாயம் தானே பழசெல்லாம் மறந்துட்ட நீ திடீர்னு என்ன பார்த்ததும் உனக்கு அப்படியா thondrathu சகஜம்தான் . ஒருத்தன் மேல பயம் வருதுன்னா அது அவன் தான் தப்பு. உன்னோடது இல்ல” என்றான்.

மித்ரா அமைதியாக அவன் தோளில் சாய்ந்து இருந்தாள். அவன் சுவாசத்தை அவள் உணர்ந்தாள்

“நான் திரும்பவும் பழையபடி ஆவேனா?” என்று கேட்டாள்.

“ஆவ. கண்டிப்பா ஆவ” என்றான் தயக்கமே இல்லாமல்.

“உங்களுக்கு நம்பிக்கையா இருக்கா?”

“உன்மேல எனக்கு எப்பவும் நம்பிக்கை இருக்கு” என்றான்.

மித்ரா மெல்ல கண்களை மூடியபடி அவன் தோளில் இன்னும் சாய்ந்தாள்.

“நான் உங்களை நீ, வா, போன்னு கூப்பிடட்டுமா? உன் பேர் சொல்லி கூப்பிடட்டுமா?” என்றாள் தலையை நிமிர்த்தி அவன் தோள்களில் சாய்ந்து அவனை ஏறிட்ட படி..

ஈஸ்வர் கண்கள் கலங்கியது. அதை அவளிடம் இருந்து மறைந்தவன் “கூப்பிடு. ரொம்ப நாளா கேக்கணும்னு இருந்தேன்” என்றான்.

“ஈஸ்வர்” என்று முதல் முறையாக அவன் பெயர் சொல்லி பிரியமாக அழைத்தாள் மித்ரா.

அவன் இதயம்  உடைந்தது போன்ற ஒரு உணர்வு.. ஆனால் அது இனிமையாக இருந்தது அவனுக்கு.

மீண்டும் ஈஸ்வர்! என்று அழைத்தாள்.

“என்னடி” என்றான் குரல் கம்மி.

“பாத்தியா நான் இப்போ உன்னை பார்த்து  பயப்படல. ” என்றாள்.

ஈஸ்வர் அவள் தலையில் மெல்ல கைவைத்து அழுத்தியவன் . “இனி பயப்படவே வேண்டாம்டி. நான் இருக்கேன்” என்றான்.

அந்த இரவின் குளிர் காற்று அவர்களை சுற்றி வீசியது. நட்சத்திரங்கள் மின்னின. மித்ரா நினைவை இழந்திருந்தாள். ஆனால் அவன் தோளில் இப்போது உணர்ந்த அந்த அரவணைப்பு புதிதாக   தோன்றியது.

இரவு காற்று மெல்லிதாக வீசிக்கொண்டிருந்தது.

மித்ரா இன்னும் அவன் தோளில் சாய்ந்தபடியே நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஈஸ்வர் அவளை பார்த்தான். அந்த முகம். அந்த கண்கள். இத்தனை நாட்கள் தன்னை வெறுத்து விலகிய அதே முகம் இப்போது அவன் தோளில் அமைதியாக இருந்தது. அவனால்  நம்பவே முடியவில்லை.

“என்ன பாக்குற ஈஸ்வர் ?” என்று கேட்டாள் அவன் பார்வையை உணர்ந்து.

“நட்சத்திரம்” என்றான் அவள் கண்களை பார்த்து 

மித்ரா குழம்பி வானத்தை பார்த்தவள் “நட்சத்திரம் அங்க இல்ல இருக்கு நீ எதை பாத்து சொல்ற ?” என்றாள்.

“இந்த நட்சத்திரம் என்னோட வானத்துல இருக்கு” என்றான் அமைதியாக.

மித்ரா புரியாமல் அவனைப் பார்த்தாள். ஈஸ்வர் நேரடியாக அவள் கண்களை பார்த்தான்.  அவள் கன்னம் மெல்ல சிவந்தது. புரிந்தது போல திரும்பி வானத்தை பார்த்தாள்.

“ஈஸ்வர்…  நீ ஒரு மாதிரி பேசுற” என்றாள்.

“எப்படி?” என்றான் சிரித்துக்கொண்டே.

“தெரியல. ஆனா புரியுது” என்றாள் மெல்லிய குரலில்.

ஈஸ்வர் மீண்டும் சிரித்தவன். “புரிஞ்சா சரிதானே.” என்றான்.

இருவரும் மவுனமாக வானத்தை பார்த்தனர். மித்ரா திடீரென்று கேட்டாள்.

“ஈஸ்வர், நான் சின்னப்பொண்ணு மாதிரி பேசுறேன்னு நினைக்கிறியா?” என்றாள்.

ஈஸ்வர் ஒரு கணம் அவளை பார்த்தான். “ம்ஹும்..” என்றான்.

“பொய் சொல்லாதே. சந்திரிகா ஆண்டியே சொன்னாங்க நான் குழந்தை மாதிரி ஆயிட்டேன்னு” என்று கீழே பார்த்தாள்.

ஈஸ்வர் அவள் கன்னத்தை மெல்ல தொட்டு முகத்தை தன்னை நோக்கி திருப்பினான்.

“குழந்தை மாதிரி இருக்கன்னு சொன்னா என்னவாம்? குழந்தைங்க நல்லா இருக்காங்க. மனசுல எதுவும் இருக்காது. யாரையும் நம்புவாங்க. சின்னசின்ன விஷயத்துல சந்தோஷப்படுவாங்க. அது தப்பா?” என்றான்.

மித்ரா ம்ம்… என்று தன் கண்ணத்தில் கை வைத்து யோசித்தவள். “தப்பு இல்லன்னு நினைக்குறேன்?” என்றாள் அவனைப் பார்த்து சிரித்தபடி.

“நான் ஒரு விஷயம் சொல்லட்டுமா?” என்று கேட்டான் ஈஸ்வர்

“சொல்லு.” 

“குழந்தைங்களை எல்லாரும் ரொம்ப கவனமா வெச்சுக்குவாங்க. விழுந்துடுவாங்கன்னு பக்கத்துல இருந்து பாதிப்பாங்க.. கூடவே கூட்டிட்டு நடப்பாங்க. தூக்கி வெச்சுக்குவாங்க. அப்படி சின்ன குழந்தை மாதிரி இருக்கிற ஒருத்தியை கவனிக்கிற சான்ஸ் கிடைச்சா நான் விட்டுடுவேனா?” என்றான்.

மித்ரா அவனை ஏறிட்டு பார்த்தாள். அவன் கண்களில்  ஒரு குறும்பு இருந்தது.

“நீ என்னை பத்திரமா பாத்துக்கணும்னு நினைக்கிறியா ?” என்றாள்.

“இல்ல. நீ என்கூட இருக்கிற வரைக்கும் எப்பவுமே பத்திரமா தான் இருப்ப ” என்றான்.

மித்ரா சின்னதாக சிரித்தாள். அந்த சிரிப்பை பார்த்தவன் உள்ளுக்குள் ஏதோ நிறைந்தது.

“பசிக்குதா?” என்று கேட்டான்.

“ம்ம்.. கொஞ்சம்” என்றாள்.

“என்ன சாப்பிடணும்?”

“தெரியல. ஈஸ்வர் என்ன குடுப்பியோ அதை சாப்பிடுவேன்” என்றாள் அப்பாவியாக.

ஈஸ்வர் ஒரு நிமிடம் அவளை பார்த்தான். “என்னை நம்பறியா நான் உனக்கு வேற எதுவும் கொடுத்துட்டா என்ன பண்ணுவ ?” என்றான்.

“ம்ம்” என்று யோசித்தவள் “நீ என்னை எதுவும் பண்ண மாட்டே.. நீ ரொம்ப நல்லவன் ஈஸ்வர்” என்றாள்.

அவன் இதயம் கனத்தது. இந்த ஒரு வார்த்தைக்காக எத்தனை இரவுகள் காத்திருந்தான். அவள் தன்னை முழுமையாக நம்பவேண்டும் என்று எவ்வளவு நாள் தவமிருந்தான். அவன் நினைத்ததை இன்று நடந்திருக்கிறது.  ஆனால் அவள் நினைவுகள் தான் இப்போது இல்லை பழைய நினைவுகளில் அவன் எதிர்பார்த்ததெல்லாம் இப்போது அவனுக்கு மித்ராவிடமிருந்து கிடைத்திருந்தது 

“சரி வா” என்று அவள் கையை மெல்ல பிடித்தான். அவள் விலகவில்லை.

சமையலறைக்கு அழைத்துச் சென்று நாற்காலியில் அமரவைத்தான். அவள் அங்கே உட்கார்ந்து அவன் சமைப்பதை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

“உனக்கு சமைக்க தெரியுமா?” என்று கேட்டாள்.

“உனக்காக எதுவும் கத்துக்கலாம்டி” என்றான் திரும்பாமலே.

“ஏன்?”

“உனக்காக தான் எல்லாமே..” என்றான்.

“சொல்லு.”

” நான் சமைச்சு தரத நீ சாப்பிட்டு சந்தோஷமா இருக்கணும். அது பார்க்க எனக்கு ஆசை” என்றான்.

மித்ரா கால்களை ஆட்டியபடி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஈஸ்வர்.”

“ம்.”

“நீ எனக்காக கவலை பட்டிருக்கியா?”

ஈஸ்வரின் கை நின்றது. திரும்பி அவளை பார்த்தான்.

“நீ திரும்பி வந்துட்டே. இனி கவலை இல்ல” என்றான்.

மித்ரா கண்கள் கலங்கியது. “நான் தான் காரணம் உன் கவலைக்கு. நீ நிறைய கஷ்டப்பட்டிருக்க தானே என்னால… சாரி.” என்றாள் குழந்தையாக.

ஈஸ்வர் உடனே அவள் அருகே வந்தான். மண்டியிட்டு அமர்ந்து அவள் கண் கலங்குவதை பார்த்தான்.

“டி.. அழாதே.”

“ஏன்?”

“உன் கண்ணீர் பார்க்க எனக்கு தெம்பு இல்லை டி. ஏன்னு தெரியல..” என்றான்.

“ஏன் தெரியல?”

“ஏன்னா…” என்று நிறுத்தி அவள் கன்னத்தில் விழுந்த கண்ணீரை தன் கட்டைவிரலால் மெல்ல துடைத்தவன். “இந்த கன்னத்துல கண்ணீர் இருக்கக் கூடாது. வேற ஒன்னு மட்டும் தான் இருக்கணும்.” என்றான் குறும்பு சிரிப்போடு..

மித்ரா புரியாமல் “என்ன?” என்று கேட்டாள்.

ஈஸ்வர் மெல்ல சிரித்தான். “சின்னப்பொண்ணுக்கு புரியாது” என்றான்.

மித்ரா முறைத்தாள். “சொல்லு ஈஸ்வர்…” என்றாள்.

“வளர்ந்தா சொல்றேன்” என்று எழுந்து திரும்பி சமைக்க போனான்.

“ஈஸ்வர்!” என்று கூப்பிட்டாள் முறைத்தபடி.

“ம்ம்” என்று திரும்பாமலே சிரித்தபடி சொன்னான்.

மித்ரா கன்னம் சிவந்து கீழே பார்த்தாள். புரிந்தது. அவளுக்கே தெரியாமல் அவள் உதடுகள் சின்னதாக வளைந்தன.

அவன் திரும்பி பார்த்தான். அந்த சிரிப்பை பார்த்தான்.

இந்த சிரிப்புக்காக எந்த விலையும் கொடுக்கலாம் டி.. என்று அவன் மனசு மட்டும் சொல்லிக்கொண்டது. இன்னும் நேரம் இருக்கிறது என் மித்ரா என்னை முழுசா நம்ப என்று நினைத்துக்கொண்டே அவளுக்காக சமைதான்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured