மூர்க்கன் 40
“மித்ரா..” என்று ஹாலில் சோபாவில் குத்துக்காலிட்டு அமர்ந்தபடி டிவி பார்த்துக் கொண்டிருந்தவளை அழைத்தபடி பார்வதி சந்தோஷமாக வீட்டிற்குள் நுழைய…
அவரை மிரட்ச்சியாக பார்த்த மித்ரா வேகமாக சோபாவிலிருந்து எழுந்து பின் வாங்கியவள்.
“ஈஸ்வர்! ஈஸ்வர்!” என்று கத்திக்கொண்டே சமையல் அறையை நோக்கி வேகமாக ஓடினாள்.
“ஏய் மித்ரா! நான் தாண்டி உன் அத்தை. ஏன்டி என்ன பாத்து இப்படி பயப்படுற, இங்க வா” என்று கையில் கொண்டு வந்த பைகளை வைத்துவிட்டு அவள் பின்னால் சென்றார் பார்வதி.
“ஈஸ்வர்! ஈஸ்வர்!… எனக்கு பயமா இருக்கு” என்று கத்திக் கொண்டு உள்ளே ஓடினாள்.
மித்ராவின் பதற்றமான குரல் கேட்ட ஈஸ்வர் அவளுக்காக சமைத்துக்
கொண்டிருந்தவன் கையில் இருந்ததை அப்படியே போட்டுவிட்டு என்னவோ ஏதோ என்று பதறிக்கொண்டு திரும்ப…அவனே ஓடிச்சென்று இறுக்கமாக கட்டிக் கொண்டுவள்.
“ஈஸ்வர் எனக்கு பயமா இருக்கு. யாருன்னு தெரியல என் பேர சொல்லி கூப்பிட்டு நம்ம வீட்டுக்குள்ள வந்துட்டாங்க.. எனக்கு பயமா இருக்கு” என்று நடுங்கிய குரலில் பேசினாள்.
அவள் பின்னால் வந்த பார்வதி “டேய் என்னடா இவ என்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மொத்தத்தையும் மறந்துட்டாளா? நான் ஆசையா மித்ரான்னு அவகிட்ட போறேன். அவ என்ன பார்த்து மிரண்டு உள்ள ஓடிவரா” என்றார் கவலையாக.
“அம்மா நான் தான் சொன்னேனே அவளைப் பத்தி அவளுக்கே எந்த ஞாபகமும் இல்லை. அப்புறம் நம்ம எல்லாம் எங்க..” என்று விரக்தியாக புன்னகைத்தவன் “கிளம்புறேன்னு சொல்லவே இல்ல” என்றான்.
“நான் தான் ரெண்டு நாள்ல வரேன்னு சொன்னேனேடா” என்றவர். அவனை கட்டிக் கொண்டு ஈஸ்வர் மார்பில் தலை சாய்த்தபடி அதே நிலையில் திரும்பி பார்வதியை மிரண்டு போய் பார்த்த மித்ராவை பார்த்தார்.
“என்ன பாத்தா உனக்கு பயமா இருக்கா?” என்றார் மித்ராவிடம்.
அவளோ சிறிதும் யோசிக்காமல் ஆம் என்று தலையை மேலும் கீழும் ஆட்ட.
அவள் சிறுபிள்ளைத்தனமான முகத்தை பார்த்து கோபம் வரவில்லை பார்வதிக்கு மாறாக அவள் மீது பறிவுதான் உண்டானது.
“ஈஸ்வர் இருக்கானே அவன் அம்மா நான். உனக்கு அத்தை முறை வேணும், உங்க அப்பா இருக்காரு இல்ல அவரு என் கூட பிறந்தவர் , அவருக்கு நான் தங்கச்சி. அதனால நீ என்ன பார்த்து பயப்படனும்னு அவசியம் இல்ல” என்று தன்னை பற்றி விவரம் சொல்லி அவளிடம் புரிய வைக்க முயன்றார்.
“எனக்கு அப்பா இருக்கு சொல்றீங்க, ஆனா அவரை நான் பார்க்கவே இல்லையே” என்றாள்.
அவள் அப்படி கேட்டதும் தான் ஈஸ்வருக்கு உரைத்தது. இந்த மாதிரியான நிலைமையில் தன் குடும்பத்தோடு அவள் இருந்தால் இன்னும் அவள் மனமும் உடலில் முன்னேற்றம் அடைய வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் என்று அவனுக்கு தோன்றியது.
தன் மார்பில் தலை சாய்த்தபடி பார்வதியை பார்த்துக் கொண்டிருந்த மித்ராவின் முகத்தைப் பற்றி தன்னை பார்க்குமாறு நிமிர்த்தியவன். “உனக்கு உன் வீட்டில் இருக்கவங்களை பார்க்கணுமா? சொல்லு நம்ம அடுத்த பிளைட்ல இந்தியா போலாம்” என்றான்.
“நீயும் என் கூட வருவியா ஈஸ்வர்” என்றாள் அதே நிலையில் அவனை பார்த்து.
அவள் தலையை மென்மையாக வருடிவிட்டவன். வேண்டுமென்றே அவளிடம் “நான் வரல நீ மட்டும் கிளம்பு உன்னோட சொந்தம் எல்லாம் அங்க தானே இருக்கு” என்றான்.
அவன் தன்னோடு வரவில்லை என்று சொன்னதும் மித்ராவின் இதயத்தில் ஏனோ ஒரு வலி ஏற்பட்டது. அவனை மேலும் இருக்க அணைத்து கொண்டு “அப்ப நானும் போகல. நீ எங்க இருக்கயோ நானும் அங்கயே இருக்கேன். எனக்கு யாரும் வேணாம்” என்றாள் கண்களை நீர்த்துளிக்க.
அவள் கண்களில் துளிர்த்த கண்ணீரை பார்த்ததும் ஈஸ்வர் ஆடிவிட்டான். சட்டென சிறிதும் யோசிக்காமல் சொந்தங்களை பார்க்க போகவில்லை என்று சொல்லிவிட்டாளே அதுவும் கண்ணீரோடு என்று நினைக்கையிலே அவள் தன் மீது வைத்திருக்கும் அன்பு அவனுக்கு புரிந்தது.
தன்னை பிரிய வேண்டும் என்று சொன்னதும், மித்ராவுக்கு விழித்திருக்க வேண்டும் என்று நினைக்கையில் உள்ளுக்குள் ஒரு சந்தோஷம் உண்டானது அவனுக்கு. அவள் முகத்தையே பார்த்தவன் “நான் இல்லாம நீ எங்கையும் போக வேணாம். நானும் வரேன் நம்ம இந்தியா போகலாம்” என்றான்.
“டேய் ஈஸ்வர், என்ன டா என்னை இங்க வர சொல்லிட்டு நீங்க இந்தியா போறேன்னு பிளான் பண்ணிட்டு இருக்கீங்க” என்றார் பார்வதி. இருவரின் நெருக்கத்தியும் , ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த அன்பையும் பார்த்து நெகிழ்ந்து தான் போனார்.
“ம்மா… நானும் இவ்ளோ நாள் இந்தியா போகணும்னு நினைக்கவே இல்ல.. மித்ராவுக்கு அந்த மோகன், ரக்ஷணா ரெண்டு பேரால எதுவும் பிரச்சனை வருமோன்னு யோசிச்சு தான் இவ்ளோ நாள் அங்க போகல. ஆனா மித்ரா இப்போ இருக்க நிலைமைக்கு அவ அங்க எல்லார் கூடவும் இருந்தா அவளுக்கு கொஞ்சம் மாறுதலா இருக்கும்னு தோணுது. அதுவும் நீங்க அவ அப்பாவை பத்தி சொன்னதும் . மித்ரா கேட்டாளே. அதுக்கு அப்ரோம் தான் தோணிச்சு” என்றான்.
“சரி டா.. நீ சொல்றதும் சரி தான். ஆனா மோகன்,ரக்ஷணா ரெண்டு பேருக்கும். இவ இருக்குறது தெரிஞ்சிட்டா மறுபடி மித்ராவுக்கு எதுவும் பிரச்சனை வந்திராதா” என்றார்.
“இத்தனை நாள் மித்ரா இருக்க இடத்தை தெரியாம தானே வெச்சிருந்தோம். அதே போல அங்க போய் இவளை பத்திரமா பாத்துக்கலாம். இங்க நான் மட்டும் தான், அங்க ராவண் , ராஜ் இருக்கான். அப்பறோம் மாமா இருக்கார். பாத்துக்கலாம் அம்மா” என்றான் உறுதியாக.
“சரி நீயே சொல்லிட்டே .. அப்போ எப்போ இந்தியா போகலாம். உன்னோட ஆபீஸ் ஒர்க் எல்லாம் என்ன ஆகுறது” என்றார்.
“போகலாமா?” என்று சிரித்தவன் குனிந்து அவர்கள் பேசுவதையே பார்த்துக்கொண்டிருந்த மித்ராவிடம் “மிது , இவங்களும் நம்ம கூட இந்தியா வரேன்னு சொல்றாங்க கூட்டிட்டு போகலாமா?” என்றான்.
பார்வதியை ஒரு முறை பார்த்துவிட்டு “ம்ம்ம்..” என்றாள்.
“என்னை பார்த்தா பயமா இருக்குன்னு சொல்ற.. அப்பறோம் என்னை உன்கூட இந்தியா கூட்டிட்டு போக ஓகே சொல்லிட்டே… நான் உன் கூட வந்தா உனக்கு பயமா இருக்காதா?” என்றார் சிரித்துக்கொண்டே.
“என் கூட தான் ஈஸ்வர் இருக்கானே.. அவன் என்னை பத்திரமா பாத்துப்பான் . அவன் என்கூட இருக்குறதால தான் உங்களையும் வர சொன்னேன்” என்றாள் .
“அடிப்பாவி அப்போ என்னை நம்பள நீ.. ” என்றார் பார்வதி பொய் கோபத்தோடு.
“இல்லை.. “என்று ரீதியில் தலையை இடவலமாக ஆட்டினாள் மித்ரா,
“அடிப்பாவி.. அவனை பெத்தவளே நான் தான், என்னை நம்ப மாட்ட.. ஆனா அவனை கண்ணை மூடிட்டு நம்புற நீ.. ” என்று சிரித்தவர் எட்டி மித்ராவின் கன்னத்தை கிள்ளினார்.
“ஈஸ்வர்!.. பாரு உன் முன்னாடியே அவங்க என்னை கிள்ளுறாங்க..” என்று சிணுங்கினாள்.
அவளை ஒரு கையால் அனைத்துக்கொண்டே.. “அம்மா.. மித்துவை எதுவும் சொல்லாதீங்க.. அவ வேணாம்னு சொன்னா நான் உங்களை அழைச்சிட்டு போக மாட்டேன்” என்றான் ஈஸ்வர் சிரித்துக்கொண்டே.
“நல்லா சேர்ந்திருக்கிங்க.. ” என்று சிரித்தவர், “உன் மித்துவை நான் எதுவும் சொல்லப்பா… ” என்றார்.
“அப்போ நாளைக்கு ஏர்லி மோர்னிங் பிலைட் புக் பண்ணட்டுமா?” என்றான் இருவரையும் பார்த்து.
“எனக்கு எப்போனாலும் ஓகே. நீ உன் மித்துவை கேட்டுக்கப்பா” என்றவர் “என்ன சமைச்சிட்டு இருக்க? எனக்கு பசிக்குது” என்று அவனை தாண்டி கிச்சனில் என்ன சமைத்திருக்கிறான் என்று பார்த்தார்,
“சாப்பிடாமையே கிளம்பி வந்துட்டீங்களா? டேப்ளெட்ஸ் போடணுமே நீங்க” என்றான்,.
“இங்க வந்து சாப்டுக்கலாம்னு வந்துட்டேன் டா.. ” என்றவர். “நீ வா.. என் புள்ளை உனக்கும் எனக்கும் சமைக்கட்டும். நாம சேர்ந்து டிவி பார்க்கலாம் ” என்று மித்ராவின் கையை பற்றி இழுத்தார்,
அவர் இழுப்பிற்கு செல்லாமல் ஈஸ்வரை கட்டிக்கொண்டே அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“அம்மா எதுவும் உன்னை சொல்ல மாட்டாங்க , ரெண்டு பேரும் ஹாலுக்கு போங்க நான் சமைச்சிட்டு கூப்பிடறேன்” என்றான்,
“ம்ம்..” என்று அவனுக்கு தலையாட்டி பதில் சொன்னவள் “என்னை கிள்ளி வெக்க மாட்டீங்களே.. ” என்று பார்வதியை கேட்டாள்.
“உன்னை பூ மாதிரி பாத்துக்கிறேன் டி ” என்றவர் “என் புள்ளையை ஆட்டை மாதிரி ஓடிக்கிட்டே இருந்தா அப்பறோம் எப்படி அவன் மத்த வேலை எல்லாம் செய்யுறது , நீ வா.. ‘ என்று அவள் கரம் பற்றி ஹாலுக்கு அழைத்து சென்றார்.
அவர் வந்ததும் ஈஸ்வருக்கு ஏனோ ஒருவித நிம்மதி அவன் இதயத்தில் உண்டானது போல தோன்றியது. அதே நிம்மதியோடு அவருக்கும் சேர்ந்து சமைக்க ஆரம்பித்து இருந்தான்.
இங்கே ஹாலுக்கு மித்ராவுடன் வந்த பார்வதி டிவியில் கார்ட்டூன் ஓடிக்கொண்டிருக்க.. “இது என்ன சின்ன புள்ள மாதிரி இதை பாத்துட்டு இருக்க? ” என்றார்.
மித்ராவோ அவரை வெள்ளந்தியாக பார்த்தவர் “ஈஸ்வர் இது தான் பாக்க சொன்னான்” என்றாள் . கைகளை தலைக்கு மேலே தூக்கிக்கொண்டே .
” அவன் கிடக்குறான் சின்ன குழந்தைக பாக்குறதை எல்லாம் உனக்கு போட்டுவிட்டிருக்கான். நாம சீரிஸ் பார்க்கலாமா? ” என்றார் அந்த மாடர்ன் மாமியார்.
“அப்டின்னா?” என்றாள் மித்ரா புரியாமல்.
“நான் போட்டு விடறேன் , நீயே பாரு.. ” என்றவர் அவளை சோபாவில் அமர செய்துவிட்டு அவள் அருகே அமர்ந்த பார்வதி ரிமோட்டை எடுத்து OTT தளத்திற்கு மாற்றி, தான் பாதியில் விட்டிருந்த ஒரு விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் தொடரை ஓடவிட்டார்.
கார்ட்டூன் உலகத்திலிருந்து சட்டென துப்பாக்கிச் சத்தமும், பின்னணி இசையின் மிரட்டலும் டிவியில் ஒலிக்கத் தொடங்கியதும், மித்ரா பயத்தில் சோபா முனக்கே சென்று பார்வதியை இன்னும் மிரட்சியோடு பார்த்தாள்.
“ஏய் மித்து! இது சும்மா நடிப்புடி. இந்த போலீஸ்காரன் எப்படி அந்த திருடனை பிடிக்கிறான்னு பாரு, செமையா இருக்கும்” என்று பார்வதி அவளுக்கு புரிய வைக்க முயன்றார்.
ஆனால், மித்ராவோ டிவியையும் பார்வதியையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு, “ஈஸ்வர்ர்ர்…” என்று சமையலறை நோக்கி மீண்டும் குரல் கொடுத்தாள்.
அவள் குரல் கேட்டு கையில் கரண்டியோடு ஓடி வந்த ஈஸ்வர், டிவியில் ஓடிக்கொண்டிருந்த வன்முறை காட்சியைப் பார்த்ததும் நிலைமையை புரிந்து கொண்டான்.
“அம்மா! அவளுக்கு இதெல்லாம் செட் ஆகாதுமா. அவ மனசு இப்போ ரொம்ப லேசா இருக்கு. நீங்க போய் உங்க ரூம் டிவில பாருங்க, இல்லனா மொபைல்ல பாருங்க. என் மித்துவை பயமுறுத்தாதீங்க” என்று செல்லமாகக் கண்டித்தபடி ரிமோட்டை வாங்கி மீண்டும் கார்ட்டூன் சேனலுக்கே மாற்றினான்.
“அடப்பாவிகளா! என்னையே ரெண்டு பேரும் சேர்ந்து துரத்துறீங்களா?” என்று மித்ராவை பொய்யாக அவர் முறைக்க..
“ஈஸ்வர் என்னை முறைக்குறாங்க… ” என்று அவன் சட்டையை பிடித்துக்கொண்டு பார்வதியை கை காட்டினாள்.
“நான் முறைக்கல டிம்மா .. நீயே டிவியை பாரு..” என்றவர், ” நீயும் உன் குழந்தையும் கார்ட்டூனே பாருங்க. நான் போய் என் ரூம்ல பாத்துக்கிறேன்” என்று சலித்துக் கொள்வது போல் பாவனை செய்தபடி, பார்வதி சிரித்துக்கொண்டே எழுந்து தன் அறைக்குச் சென்றார்.
அவர் சென்றதும் மித்ராவின் அருகில் அமர்ந்த ஈஸ்வர், அவளது தலையைக் கோதிவிட்டான். “இப்போ பயம் போயிடுச்சா மித்து?” என்றான்.
“ம்ம்…” என்று தலையசைத்தவள், அவன் தோளில் தன் தலையைச் சாய்த்துக் கொண்டாள். “ஈஸ்வர்.. நாம எப்போ இந்தியா போவோம்? எனக்கு அங்கே போக பயமா இருக்கு. இவங்களை மாதிரியே அங்கையும் என்னை மிரட்டிவங்ளா?” என்று தன் மனதில் இருந்ததை அவனிடம் கேட்டாள்.
அவள் முகத்தை கைகளில் ஏந்திய ஈஸ்வர், அவளது நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான். “உன்னை எல்லாரும் ரொம்ப ஆசையா பாத்துப்பாங்க மித்து. அங்க உனக்காக உன் அப்பாவும், உன்னோட அண்ணன்களும் இருக்காங்க. உன்னை கண்ணுக்குள்ள வச்சு பாத்துப்பாங்க. எதைப்பத்தியும் யோசிக்காம நிம்மதியா இரு” என்றான் நம்பிக்கையூட்டும் குரலில்.
அவன் வார்த்தைகள் அவளுக்குள் ஒரு புதிய நிம்மதியைத் தந்தது.
“நான் சமைச்சிட்டு வரேன் , நீ டிவி பாரு ” என்றவன் எழுந்து உள்ளே சென்றான்.
சிறிது நேரத்தில் சமைத்து முடித்தவன் பார்வதியையும், மித்ராவையும் சாப்பிட அழைக்க..
இருவரும் வந்து டைனிங் டேபிளில் அமர…
பார்வதிக்கு ஒரு தட்டில் உணவை எடுத்து வைத்தவன் இன்னோரு தட்டில் மித்ராவுக்கு வைத்தான்.
“டேய் நீ சாப்பிடலையா?” என்றார் பார்வதி.
“மித்துவுக்கு சாப்பிட கொடுத்துட்டு நான் சாபிட்றேன் ” என்று அவர் அருகே இருந்த நாற்காலியில் மித்ராவை அமர சொன்னவன் அவள் அருகே மற்றொரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்து அவளுக்கு ஊட்டிவிட ஆரம்பித்தான்.
“ம்ஹும்.. நீ சரியான ஆளு தாண்டி .. சாப்பிட்ட தட்டை கூட என் புள்ள கழுவி வெக்க மாட்டான். இன்னிக்கு அவனே சமையல் செஞ்சு உனக்கு ஊட்டிவேர விடறான்” என்று பெருமூச்சு விட்டபடி சொன்னவர் சாப்பிட துவங்க..
ஈஸ்வர் அவர் சொன்னது கேட்டவன் சிரித்துக்கொண்டே மித்ராவுக்கு ஊட்டிவிட ஆரம்பித்தான் .
பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தவர்கள் ஹாலுக்கு வர..
“அம்மா , நீங்க மித்துவை பார்த்துக்கோங்க. நான் ஆபீஸ் போய்ட்டு ஆனந்த்கிட்டே ஆபீஸ் ஒர்க்கை பார்த்துக்க சொல்லிட்டு, அப்டியே பெண்டிங் ஒர்க் எல்லாம் முடிச்சிட்டு வந்துடறேன்” என்றான்.
“சரிப்பா நீ வேலையை முடிச்சிட்டு வா,, நான் என் மருமகளை பார்த்துகிறேன்” என்று வாஞ்சையாக மித்ராவின் கேசத்தை வருடிக்கொடுத்தார்.
“என்ன மித்து, என் அம்மாவை நீ பத்திரமா பாத்துப்பியா?” என்றான்.
“ம்ம்.. நீ போய்ட்டு வா ஈஸ்வர். நான் உன் அம்மாவை பத்திரமா பாத்துப்பேன்” என்றாள்.
“அடியே நல்லா பாத்துப்ப நீ என்னை ” என்று அவளை என்ற இறங்க பார்த்தவர், “நீ போய்ட்டு வா டா.. உன் பொண்டாட்டி என்னை தான் பத்திரமா பத்துக்கறேன்னு சொல்லிட்டாளே.. ” என்றார் கிண்டலாக.
“அம்மா” என்று சத்தமாக சிரித்தவன். “சரி நான் கிளம்புறேன்” என்று சோபாவில் இருந்து எழப்போக..
“ஈஸ்வர்.. ” என்று அவன் சட்டையை பிடித்து தன் பக்கம் இழுத்தாள்.
அவள் எதற்காக தன்னை அழைக்கிறாள் என்று ஈஸ்வருக்கு புரிந்தாலும் தன் அம்மா இருப்பதை கருதி அவள் காதருகே குனிந்தவன் “என் அம்மா முன்னாடி உனக்கு லிப்ல கிஸ் பண்ண முடியாது. அதனால ..” என்று அவள் கன்னத்தில் முத்தம் பதித்தவன் தன் தாய் முகத்தை பார்க்க வெட்கபட்டுக்கொண்டே சிரித்தபடி தலையை அழுந்த கோதியபடி வேகமாக அங்கிருந்து கிளம்பி இருந்தான்.
இவர்கள் நெருக்கத்தை கண்டு வாய் மேல் விரல் வைத்த பார்வதி. எழுந்து சென்று
கதவை அடைத்தவர் “தினமும் என் புள்ள உனக்கு கன்னத்தில முத்தம் கொடுத்துட்டு தான் ஆபீஸ் கிளம்புவானா?” என்றார்.
“ம்ஹும்.. கன்னத்துல இல்ல. ஈஸ்வர் எனக்கு இங்க தான் டெய்லி கிஸ் பண்ணுவான் , நீங்க இருக்கீங்களாம் அதான் இன்னிக்கு கன்னத்துல கொடுத்தான்” என்றாள்.
அதை கேட்டு அதிர்ந்தவர் “ம்ம்ம்.. எதுவும் நியாபகம் இல்லேன்னாலும் உனக்கு இதெல்லாம் நல்லா தான் வரும் போல.. ” என்றவர் “இன்னிக்கு நான் போட்டு விட்ற சீரிஸ் தான் நீ என்னோட சேர்ந்து பாக்கணும் ” என்றார்.
“ஹா.. நான் மாட்டேன் எனக்கு சண்டை பிடிக்காது” என்று மருண்ட விழிகளில் அவரை பார்த்தாள்.
“அந்த படமெல்லாம் நான் அப்பறோம் பாத்துக்கிறேன் . கொரியன் ட்ராமா ஒன்னு புதுசா வந்திருக்கு , அதை பாக்கலாம் வா.. ” என்று அவள் அருகே அமர்ந்தவர் டிவியை ஆன் செய்தார்.
