News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகும் மூர்க்கன் 51

by Layas Tamil Novel
109 views
A+A-
Reset

மூர்க்கன் 51

“டேய் என் புள்ளைக்கு என்ன டா ஆச்சு? என் மருமக எங்க போனா? இப்படி ஒரே நாள்ல என் மகன் என்னை விட்டு போட்டானா?” என்று பரிமளா ராஜ்ஜின் சட்டையைப் பிடித்துக்கொண்டு கதறினார்.

“ஈஸ்வர் என் மகன் என்னை விட்டு போக மாட்டான். எனக்கு நம்பிக்கை இருக்கு. அவன் பீனிக்ஸ் பறவை மாதிரி டா.. எத்தனை முறை எதிரிங்க அவனை அளிக்கணும்னு நினைச்சாலும் அவன் அதில் இருந்து எழுந்து வந்திருவான், அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு ” என்று வரதராஜன் நம்பிக்கையாக சொன்னார்.

“என்னோட பிரெண்ட்டை மச்சான் தங்கி இருந்த ஐ லாண்டுக்கு போக சொல்லிருக்கேன் மாமா. அவன் அங்க தான் அந்த ஊர் போலீசோட போயிருக்கான் . மச்சானுக்கும் , சிஸ்டருக்கும் எதுவும் ஆகியிருக்காது. அவங்க கூட சண்டை போட்டதுல போன் விழுந்து உடைஞ்சிருக்கும். அவங்களுக்கு எதுவும் ஆகியிருக்காது ” என்று ஈஸ்வர் அங்கு கவலையில் மூழ்கி இருந்தவர்களுக்கு ஆறுதல் கூறினான்.

“ஈஸ்வர் எதுக்கும் நாமளே ஒரு முறை நேர்ல பாத்துட்டு வருவோமா? இப்பவே கிளம்பினா ஏவினீங்குள்ள அங்க ரீச் ஆகிடலாம். நாமளே நேர்ல போய் பார்த்துட்டா கொஞ்சம் என்னனு தெரிஞ்சுக்கலாம். த்ரிப்தியாவும் இருக்கும்” என்றான் ராஜ்.

“நீ சொல்வதும் சரி தான் ” என்றவன் “மாமா, நானும் ராஜும் கிளம்பறோம். இங்க இருக்கவங்களை நீங்க பத்திரமா பாத்துக்கோங்க. ஏன்னா எதிரிங்க எந்த இடத்துல இருந்தும் வரலாம் . அவ்ளோ தூரம் தள்ளி இருந்த மச்சானை தேடி போய் பிரச்சனை பண்ண தெரிஞ்சவங்களுக்கு நம்ம குடும்பத்தை எதுவும் செய்றதுக்கு வாய்ப்பு அதிகமா இருக்கு. நம்ம ஆட்களை சீக்கிரமே இங்க வர சொல்லுங்க . யாரும் தேவை இல்லாம வெளிய போக வேணாம். வெளிய இருந்து யாரையும் தெரியாம கூட விட வேணாம்” என்று சொன்னவன் ராஜுடன் அவர்கள் கிளம்புவதற்காண் ஏற்பாடுகளை செய்ய புறப்பட்டான்.

மித்ரா அவனையே பார்த்திருக்க.. “சீக்கிரம் வந்துடறேன் மித்து” என்று அவள் னெதிரியில் முத்தம் வைத்துவிட்டு சென்றான்.

ராஜும் செல்லும் வழியில் தன் நம்பிக்கையான ஆட்களை அனுப்பி ராவண் வீட்டில் தனியே இருந்த கயலை அழைத்து வந்து தன் வீட்டில் சேர்த்துவிட சொல்லிவிட்டு கயலிடம் போனில் விபரத்தை கூறியவன் கிளம்பி இருந்தான்.

அன்று மாலையே இராவணன் இளங்கிளி  இருந்த அந்த தனித்தேவிற்கு பிரைவேட் செக் மூலம் ஈஸ்வரும் ராஜும் வந்து சேர்ந்திருந்தனர்.

அங்கே செல்லும்போது சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பெரிய மனிதர்களை தொடர்பு கொண்டு அவர்களின் உதவியோடு காவல்துறையினரையும் தங்களோடு அழைத்துச் சென்றிருந்தனர்.

 அந்த தீவில் வந்து இறங்கியதுமே அங்கு எதுவுமே சரி இல்லை என்பதை புரிந்து கொண்டனர் மாலை வேலை அதனால் இருட்டவும் தொடங்கியிருந்தது.

ஜெட்டை விட்டு இறங்கிய வேகத்தில் ஈஸ்வர், ராஜ் இருவரும் பாதுகாப்பு உபகரணங்களோடு எச்சரிக்கையாக அந்த பிரம்மாண்ட மாளிகைக்குள் நுழைந்தனர்.

போலீஸ் ஒரு பக்கம், அவர்கள் ஏற்பாடு செய்த ஆட்கள் ஒரு பக்கம் என அந்த மாளிகையையே சுற்றி வளைத்து சூழ்ந்திருந்தனர்.

ஆளுக்கு ஒரு பக்கம் ஒரே நேரத்தில் அந்த பங்களாவிற்குள் நுழைய அங்கே யாரும் இருந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை.

அனைவரும் அந்த பங்களாவை சல்லடை போட்டு அலச தேடத் தொடங்கியிருந்தனர். ராவண் ள், இளங்கிளி இருவருமே அங்கு இல்லை என்பதை வந்ததுமே இருவரும் அறிந்து கொண்டனர். இருந்தும் யார் இப்படி செய்தது, அதற்கான காரணம் என்ன என்று ஏதாவது ஒரு துப்பு கிடைக்குமா என அலசி ஆராய்ந்தனர்.

அவர்களின் துரதிஷ்டம், ரக்ஷனாவின் அதிர்ஷ்டம் எந்த துருப்பும் அவர்கள் கையில் சிக்கவில்லை. அங்கே கலவரம் நடந்ததற்கான அறிகுறிகள் தென்பட்டாலும் அதற்கான எந்த ஒரு எவிடன்ஸும் கிடைக்காமல் போகவே ஈஸ்வர் ராஜ் இருவரும் சோர்ந்து போயினர்.

அங்கே இருந்த சிசிடிவிகள் அனைத்தும் செயலிழக்கப்பட்டு இருந்தது. அதற்கான ஆதாரங்கள் முற்றிலுமாக அளிக்கப்பட்டிருந்தது அவர்களால் எந்த தடையத்தையும் கண்டுபிடிக்கவே முடியவில்லை 

“டேய் ஈஸ்வர் யாருடா  இப்படி பண்ணி இருப்பா. அண்ணாவுக்கு அண்ணிக்கும் என்ன ஆச்சுன்னு தெரியல, எனக்கு ரொம்ப பயமா இருக்கு. இந்த இடத்தை பார்த்தியா ஒரு பெரிய கலவரமே நடந்து ஓஞ்சது போல இருக்கு. அவங்க ரெண்டு பேருக்கும் என்ன ஆகியிருக்கும், எதுவும் ஆயிருக்காது இல்ல என்று பதட்டமும் பயமும் ஆக ஈஸ்வரிடம் கேட்டான் ராஜ்.

 இந்த இடத்தைப் பார்த்தா  எனக்கும் பயமா இருக்கு அவங்க ரெண்டு பேருக்கும் எதுவும் ஆகியிருக்க கூடாதுடாதுன்னு மனசு சொல்லுது ஆனா நடந்தது எல்லாம் பார்க்க அது நம்ப மனசு மறுக்குதுடா என்று குரல் தொலைதொழுக்க சொன்னா ஈஸ்வர்.

இந்த குடும்பத்தின் ஆணிவேரே ராவணன் அல்லவா அவன் இல்லாமல் போனால் அது ஆட்டம் கண்டு விடுமோ இன்று இருவருக்கும் உள்ளுக்குள் நடக்கும் ஏற்பட தொடங்கியது அவர்களின் எதிரிகள் எல்லாம் ராவண் இல்லை என்று தெரிந்தாலே அடுத்தடுத்த வேலைகளில் ஈடுபட்டு தங்கள் குடும்பம் மொத்தமாக சரிந்து விட அனைத்து வேலைகளையும் பார்ப்பார்கள் என்று ஒரு பக்கம் தோன்றினாலும்.

தங்கள் மொத்த குடும்பமும் ராவண் இளங்கிளி பற்றிய எந்த தகவலும் தெரியாமல் அவர்களின் இருப்பு நிலை அறியாமல் எந்த மாதிரி மனநிலைக்கு செல்வார்கள் என்று யோசிக்கவே முடியவில்லை.

இப்படி ஒரு விஷயத்தை பண்ணினது நிச்சயமா ரக்ஷனாவா தான் இருக்கும்னு எனக்கு தோணுது. ஏன்னா நான் மோகன் மேல கை வச்சிருக்கேன். அதுக்கப்புறம் தான் இங்கே இந்த பிரச்சனை வந்திருக்கு கண்டிப்பா அவளுக்கும் இதுக்கும் எதுவும் சம்பந்தம் இருக்கும் என்றான்.

நீ சொல்றதும் சரி தான் டா எனக்கும் அவ மேல தான் சந்தேகமா இருக்கு என்றவன் முதல்ல அவ எங்க இருக்கா என்ன பண்ணிட்டு இருக்கான்னு தேடி கண்டுபிடிக்கணும் என்றவன்.

அங்கிருந்து போலீசிடம் எதுவும் விபரம் கிடைத்தால் தங்களுக்கு கண்டிப்பாக செய்தி அனுப்ப வேண்டும் என்று சொல்லிவிட்டு வந்த ஜெட்டிலேயே இருவரும் கிளம்பி இருந்தனர்.

இங்கு இருப்பது இனி எந்த பிரயோஜனமும் இல்லை தாங்கள் அடுத்தடுத்த வேலைகளில் ஈடுபட்டால் தான் சீக்கிரம் ராவண் இளங்கிளி  இருவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லாமல் அவர்களை மீட்க முடியும் என்ற அவசரம் இருவருக்கும்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு கெட்டிமேளம் கெட்டி மேளம் என்று ஐயர் உரக்கச் சொல்ல.. அந்த திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் அர்ச்சதை தூவி வாழ்த்து சொல்ல..

 தன் கையில் இருந்த மங்கள நானை உறுத்து விழித்தபடி முகத்தில் எந்த ஒரு உணர்வையும் காட்டாமல் தன் அருகே இருந்தவள் கழுத்தில் கட்டி மூன்று முடிச்சிட்டான் அவன் முகத்தில் புது மாப்பிள்ளை என்ற எந்த கலையும் இல்லை இறுக்கமாக எதையோ எழுந்தது போன்ற ஒரு உணர்வு அந்த முகத்தில் இருந்தது.

 அவன் கட்டிய தாலியை ஏற்றுக் கொண்டவள் முகத்திலும் அதே நிலைதான். புதுப் பெண் என்ற எந்த ஒரு பொலிவும் இல்லாமல் சோகத்தோடு தலையை கவிழ்ந்தபடி தன் மார்பில் விழுந்த மாங்கல்யத்தை பார்த்து கண்களில் நீர் துளிர்க்க அமர்ந்திருந்தாள். 

வந்திருந்த சொந்தங்களின் முகத்தில் ஒரு திருமணம் நடந்த சந்தோசம் இருந்தாலும் இந்த புதுமண தம்பதியின் மிக நெருங்கிய உறவுகள் யார் முகத்திலும் சந்தோசமோ, சிரிப்போ இல்லை.

இவர்களைப் போலத்தான் அவர்கள் முகமும் இறுக்கமாக இருந்தது.

 ஏண்டி என்னதான் சோகம் இருந்தாலும் இப்பதான் புதுசா கல்யாணம் பண்றாங்க அவங்களுக்காவது சந்தோசமா வாழ்த்தலாமே இப்படி முகத்தை தூக்கி வச்சிட்டா நடந்தது இல்லைனு ஆயிடுமா என்று வந்திருந்த சொந்தங்களில் ஒரு பெண்மணி கமலாவிடம் கூறினார்.

 எப்படி விஜயா என்னால சந்தோஷமா இருக்க முடியும் ஏன் மூத்த பிள்ளை அவன் பொண்டாட்டி இரண்டு பேருமே உயிரோடு இப்ப இல்ல. அவன் இருந்திருந்தா இந்த கல்யாணத்தை நாங்க நடத்த என்னத்தை விட இன்னும் பிரம்மாண்டமா ஜாம் ஜாம் நடத்தி இருப்பான்.

யாரையும் கூப்பிடாம இந்த கல்யாணத்தை சிம்பிளா ரெஜிஸ்டர் ஆபீஸ்ல வெச்சுக்கலாம்னு தான் நான் சொன்னேன். ஆனா பெரிய அத்தான் தான் அவர் மகன் இருந்திருந்தார்னா எப்படி இந்த கல்யாணத்தை நடத்தி இருப்பானோ அதேபோல என் மகன் கல்யாணத்தையும் நடத்தணும்னு முடிவா சொல்லிட்டார்.

அவர் பேச்சை தட்டுற அளவுக்கு தைரியம் இங்க யாருக்குமே இல்ல அதனால தான் ஊர கூட்டி இந்த கல்யாணத்தை நடத்தினோம் என்றார் வருத்தத்தோடு.

உன் வருத்தம் எங்க எல்லாருக்கும் புரியுதுடி அவர் மகன் உயிரோட இருக்கானா? இல்லையா? அவர் மருமக எப்படி இருக்கா? என்ன ஆச்சு? இப்படி எந்த தகவலுமே இல்லாம நீங்களும் என்னதான் செய்வீங்க.

அதுக்காக அதையே நினைச்சுட்டு இருந்தா வாழ்க்கையை எப்படி கடத்துவது? அடுத்தடுத்த விசேஷங்கள் தான் நம்மள அடுத்த கட்டத்திற்கு மனச மாத்தி கொண்டு போகும். கொஞ்சம் கொஞ்சமா அதிலிருந்து வெளிவர பாருங்க என்று அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்து விட்டு மேடையில் இருந்து கீழே இறங்கினார் விஜயா.

மணமக்கள் இருவரும் சாஸ்திர சம்பிரதாயங்களை முடித்துக் கொண்டு மேடையை விட்டு எழ..

முதலில் எழுந்த ராஜ் அவனோடு சேர்ந்து எழுந்திருக்க சிரமப்பட்டு கொண்டிருந்த கயலின் கையை பிடித்து கைத்தாங்களாக அவளை தூக்கி விட்டான்.

தன் ஆறு மாத குழந்தையை வயிற்றில் சுமந்தபடி வயிற்றைப் பிடித்துக் கொண்டு மெல்ல எழுந்தாள் கயல்.

இருவரும் ராவண் வீட்டில் இருக்கும் போது ஒன்றாக இருந்ததன் விளைவு தான் இப்போது அவள் கர்ப்பமாக இருக்க காரணமே இராவண் இருந்திருந்தால் சீக்கிரமே இவர்கள் திருமணம் நடந்திருக்கும்.

அவன் இல்லாததால் அனைவரும் அவனைத் தேடுவதிலேயே கவனம் செலுத்தி இருக்கவும் கயலும் தன் கர்ப்பத்தை அறியாமல் மூன்று மாதங்களை கடந்து இருக்க.. 

அதன் பிறகுதான் இவர்கள் திருமணம் பேச்சை வீட்டில் எழுந்தது. அவள் கர்ப்பத்திற்கு தான்தான் பொறுப்பு என ராஜ் ஏற்றுக்கொண்டாலும் அவளை திருமணம் செய்து கொள்ள மனம் வரவில்லை.

ராவண் இல்லாமல்  திருமணம் தனக்கு நடக்க வேண்டுமா என்ற தவிப்பு அவனுக்கு…  ராவண், இளங்கிளி பற்றிய எந்த ஒரு விஷயத்தையும் தெரிந்து கொள்ளாமல் தான் மட்டும் திருமணம் செய்து சந்தோஷமாக இருக்க முடியுமா என தவிர்த்து வந்தான். 

நாட்கள் செல்ல செல்ல கயலின் வயிறும் பெருத்துக் கொண்டே வர வேதவல்லி தான் ஒரு முடிவாக இந்த திருமணத்தை நடத்தியே தீர வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து இவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார்.

கயலுக்கும் இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை தான். இப்படியே இருந்து விடலாம் ராஜ் தன்னை எப்படியும் கைவிட மாட்டான் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது.

அவள் பழகிய கொஞ்சம் நாட்களிலேயே இளங்கிளியின் மீது வைத்திருந்த பாசம் அவளுக்கும் இந்த திருமணத்தை நடத்த இஷ்டம் இல்லாமல் போனது. இவர்கள் இருவரையும் சமாதானம் செய்து திருமணத்தை நடத்தி வைப்பதற்குள் மொத்த குடும்பத்திற்கும் போதும் போதும் என்று ஆகிவிட்டது.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.