News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

நான் ஸ்டார்ட் பண்றேன்.. நீ என்ஜோய் பண்ணு,EPISODE  3

by Layas Tamil Novel
798 views
A+A-
Reset

EPISODE  3 நான் ஸ்டார்ட் பண்றேன்.. நீ என்ஜோய் பண்ணு

ராவணின் உடும்புப் பிடியில் ரக்ஷனாவின் இடை லேசாக வலித்தாலும் அதை பொருட்டாக எடுத்துக் கொள்ளாதவள் “இருங்க ராகவ் எதுக்கு அவசரம். நான் இங்க தானே இருக்கேன். முதல்ல இந்த பாலைக் குடிச்சிட்டு அப்பறோம் டேப்ளெட்ஸ் சாப்பிடுங்க.. அதுக்கு அப்பறோம் மத்ததெல்லாம் தானா நடக்கும் ” என்று அவனிடம் மாத்திரையையும், பாலையும் எடுத்து நீட்டினாள்.

அவளை பார்த்துக்கொண்டே அவள் கொடுத்த மாத்திரைகளைப்  போட்டவன் பாலையும் குடித்துமுடித்தான்.

அவனையே ஆர்வமாக பார்த்த ரக்ஷனா “ராகவ் நீங்களும் நானும் ஒண்ணா இருந்து எவ்ளோ நாள் ஆச்சு தெரியுமா.. இந்த நாளுக்காக நான் எவ்ளோ நாள் வெய்ட் பண்ணிட்டு இருக்கேன் தெறியுமா ” என்று அவன் திண்ணிய மார்பில் முத்தம் வைத்தவள் அவனை அபப்டியே தள்ளிக்கொண்டு போய் கட்டிலில் அமரவைத்து அவன் முன் நெருங்கி நின்றாள்.

ரக்ஷ்னா கொடுத்த முத்தத்தில் ஏனோ அவனுக்கு எந்த ஒரு உணர்வும் தோன்றவில்லை. அப்படியே கற்சிலை போல அமர்ந்து இருந்தான் ராவண் . இருந்தும் அவளிடம் அதை காட்டிக்கொள்ளாமல் “உனக்கு என்ன வேணுமோ அதெல்லாம் இன்னிக்கு நான் உனக்கு கொடுக்கிறேன். நீ வா.. ” என்று தன் கைகளை அவளை நோக்கி நீட்டினான்.

அவளோ அவனைப் பார்த்தபடி தான் கட்டி இருந்த சேலையை வேண்டுமென்றே நழுவவிட்டவள் அவனை நோக்கி நெருங்கி செல்ல..

சட்டென தன் பார்வையை தன்னிச்சையாக வேறு பக்கம் திருப்பிக்கொண்டான் ராவண். அவன் உள்ளுணர்வு அவளை அப்படி பார்க்க விடாமல் தடுத்தது.

“ஏன் ராகவ் என்னை பார்த்ததும் திரும்பிக்கிட்டிங்க.. என்ன ஆச்சு ” என்று வந்து அவன் தொடையில் அமர்ந்து கொண்டாள்.

அவளின் இந்த நெருக்கம் ராவணுக்கு அசௌகரியமாக இருந்தது. இருந்தும் அதை காட்டிக்கொள்ளாமல் அவளை வலுக்கட்டாயமாக பார்த்தவன் “அப்படி எல்லாம் இல்ல ரக்ஷு.. ” என்று அவள் இடையில் கை கொடுத்து தன்னோடு இழுத்து அணைத்தான்,

அவன் உடலில் அவள் கொடுத்த போதை மருந்தின் வீரியம் கொஞ்சம் கொஞ்சமாக வேலை செய்யத் துவங்கி இருந்தது, தன் உடல் நரம்புகள் முறுக்கேறி அவன் மோக உணர்வுகள் மேல் எழ..

அவன் தோள்களில் கையைப் போட்டு அவன் முகத்தருகே ரக்ஷனா குனிய..

ராவனோ அவள் நெற்றியில் தன் ஒற்றை விரலை வைத்துத் தடுத்தவன் “நான் ஸ்டார்ட் பண்றேன்.. நீ என்ஜோய் பண்ணு” என்றான்.

அவனை பார்த்து குறும்பாக புன்னகை சிந்திய ரக்ஷணா “ஐயம் ரெடி ராகவ்..” என்று அவன் மேல் அப்படியே சரிந்தாள்.

அதை சற்றும் எதிர்பாராத ராவண் “ஹேய்! ரக்ஷு.. என்ன அவசரம் உனக்கு.. நான் தான் சொல்றேனே.. ” என்று தன் மேல் விழுந்தவள் தோள்கள் இரண்டிலும் கையை வைத்து அப்படியே அவளை கட்டிலில் தள்ளியவன் வேகமாக எழுந்து கொண்டான்.

இதை எதிர்பார்த்திராத ரக்ஷனாவோ “என்ன ஆச்சு ராகவ் , ஏன் எழுந்துட்டீங்க.. ” என்றாள் புரியாமல்.

“அது அது  வந்து ரக்ஷனா . நான் பாத்ரூம் யூஸ் பண்ணிட்டு வந்துடறேன். எனக்கு ஒரு மாதிரி இருக்கு உடம்பு..” என்று சொல்லிவிட்டு அவள் பதிலுக்கு கூட காத்திராமல் வேகமாக அவர்கள் அறையில் இருந்த பாத்ரூமில் போய் கதவை அடைத்துக் கொண்டான்.

“ஒரு மாதிரி இருக்கா ராவண் , நான் கொடுத்த மாத்திரை தான் இப்போ வேலை செய்யுது. இவ்ளோ மாசம் உன்னோட உடம்பு சரியாகணும்னு நான் உன்னை தொந்தரவு செய்யாம இருந்தேன். இன்னிக்கு தான் உன்னோட டெஸ்ட் ரிஸல்ட்ஸ் எல்லாமே வந்துச்சு. நௌ யூ ஆர் பெர்பெக்ட்லி ஆல்ரைட். இன்னிக்கு கண்டிப்பா நீயும், நானும் சேர்ந்தே ஆகணும். அப்போ தான் உன்னால என்னை விட்டுப் பிரிய முடியாது. உன்னை எனக்கு அடிமையா நான் வெச்சுக்கணும். நான் சொல்றதை எல்லாம் நீ செய்யணும். தினமும் எனக்காக நீ ஏங்கித் தவிக்கும்..” என்று நயவஞ்சகத்தோடு நினைத்தவள். அப்படியே கட்டிலில் படுத்து கால் மேல் காலைப் போட்டுகொண்டு விட்டத்தைப் பார்த்தாள்,

” உனக்கு நான் தினமும் கொடுக்குற அந்த மாத்திரைகள் எல்லாம் சாதாரண வைட்டமின் டேப்ளெட்ஸ்னு தான் நீ நினைச்சிட்டு இருக்க. அது தான் இல்ல. உன்னோட பழைய நினைவுகள் மொத்தமும் அழிஞ்சு போகணும்னு நானே உருவாகின டேப்ளெட்ஸ் அது. நீ எப்படி இங்க நான் கொடுக்குற மாதிரியை தினம் சாப்பிட்டு உன்னோட கடந்த கால நினைவுகளை எல்லாம் மறந்திருக்கியோ.. அதே போல அங்க அந்த கர்ணன் தினமும் உன் பொண்டாட்டிக்கு மாதிரியை கொடுத்துட்டு இருக்கான். இப்போ நீயே போய் அவ முன்னாடி நின்னாலும் அவளுக்கு உன்னை அடையாளம் தெரியாது”  என்று நினைத்து சந்தோஷப் பட்டுக்கொண்டிருந்தாள்.

ராவணையம், இளங்கிளியையும் அழைத்து வந்து தனித்தனியாக சில நாட்கள் அடைத்து வைத்திருந்தாள் ரக்ஷணா.

இருவரில் யாரேனும் ஒருவருக்கு பழைய நினைவுகள் முற்றிலும் மறந்து போகட்டும் என்று நினைத்து அவள் அந்த வைன் கிளாஸை நீட்டி இருக்க.. ஆனால் இவர்கள் இருவரும் போட்டிபோட்டுக்கொண்டு ஒருவரை ஒருவர் காத்துக்கொள்ள.. அந்த மருந்தை இருவருமே குடித்து இருந்தனர்.

அடைத்து வந்திருந்த சில நாட்களிலேயே ராவண் கண்விழித்துவிட்டான். அவன் கண் விழித்ததில் இருந்து தான் யார் என்று தெரியாமல் தினமும் தலையை பிடித்துக்கொண்டு அவன் கதறி அழுவதை தன் CCTV கேமிரா மூலம் பார்த்து ரசித்தாள் ரக்ஷணா .

ஒரு கட்டத்தில் ராவண் மிகவும் பிரச்சனை பண்ணவும் அவனை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்று அவனுக்கு முறையாக டிரீட்மென்ட் கொடுத்த ரக்ஷனா. அங்கிருந்தே அவள் தயாரித்த மருந்தையும் அவனுக்கு கொடுக்க ஆரம்பித்து இருந்தாள். தன்னை அவன் மனைவி என்றும் இருவருக்கும் திருமணம் ஆகி சில மாதங்கள் தான் ஆனது என்றும். அவனுக்கு ஒரு ஆக்சிடெண்டில் பழைய நினைவுகள் மறந்து போனதை சொல்லி அதனால் தான் அவனை தனி அறையில் வைத்திருந்ததாகவும், இப்பொது தான் கொஞ்சம் உடல் நலன் முன்னேறி இருப்பதாகவும் சொல்லி சமாளித்து அவனை தன்னோடு அழைத்து வந்திருந்தாள் .

முற்றிலுமாக தாங்கள் இருந்த இடத்தை மாற்றி வேறு ஊருக்கு வந்திருந்தாள். இளங்கிளியும் அவள் கர்ணனிடம் ஒப்படைத்து அவளை பத்திரமாக பார்த்துக்கொள்ள சொல்லி இருந்தான். அவளை  வெளியே எங்கேயும் அனுப்பாமல் பத்திரமாக பார்த்துக்கொள்ள அவனை நியமித்து இருக்க..

இன்று தன்னுடைய அடுத்த கட்ட பிளானை நிறைவேற்ற வழக்கமாக கொடுக்கும் மாத்திரையின் கூடவே உணர்ச்சிகளைத் தூண்டும் போதை மாத்திரையையும் சேர்ந்து கொடுத்திருந்தாள்.

இன்று ராவணை அடைந்தே தீர வேண்டும் என்ற வெறி அவளுக்குள் கனன்று கொண்டிருந்தது. அவன் வரவிற்காக எதிர்நோக்கி காத்திருந்தாள் ரக்ஷணா .

இங்கே பாத்ரூம் சென்ற ராவனோ தலையைப் பிடித்துக்கொண்டு கிளோஸ்ட்டை மூடி அதன் மேல் அமர்ந்து இருந்தான்.

“ஏய் ரக்ஷணா! இன்னிக்கு வழக்கமா கொடுக்குற மாத்திரையில ஒரு மாத்திரையை புதுசா நீ கொடுத்த அப்போவே ஏதோ சரி இல்லேனு நான் நினைச்சேன். இப்போ அது என்ன மாத்திரையின்னு எனக்கு நல்லாவே புரிஞ்சிருச்சு. நீ என்ன நினைச்சாலும் என்னோட இளங்கிளியைத் தவிர வேற யாரையும் நான் செத்தாலும் தொட மாட்டேன் டி.. ” என்று பாத்ரூமிற்குள் இருந்த படி கர்ஜித்தவன். வேகமாக எழுந்து அங்கே கப்போர்டுக்கு மேலே உள்ள ஸெல்ப்பில் மறைத்து வைத்திருந்த ஒரு பாக்ஸை எடுத்து அதில் இருந்து சில மாத்திரைகளை எடுத்து விழுங்கினான்.

அவன் சாப்பிடும் மாத்திரைகள் ரக்ஷணா கொடுக்கும் மாத்திரைகளின் தாக்கத்தை முறியடிக்கும் மருந்து. அதை மட்டும் தான் இப்பொது போட்டிருக்கிறான், ஆனால் உணர்ச்சிகளை தூண்டும் மாத்திரைக்கு மாற்று மருந்து இல்லையே..

அதை விழுங்கிவிட்டு அப்படியே சிறிது நேரம் அமர்ந்து இருந்தவன் எழுந்து அறைக்கதவை திறந்துகொண்டு வெளியே வந்தான். அங்கே அவனுக்காக காத்திருந்த ரக்ஷணா ராகவ் வந்துட்டியா என்று எழுந்து வந்து அவனை கட்டிக்கொண்டாள் ரக்ஷணா.

ராவணும் தன் உணர்ச்சிக்குகளை கட்டுப்படுத்த முடியாமல் உடல் முறுக்கேறி இருக்க.. அபப்டியே ரக்ஷணாவை அணைத்து அவளை மெத்தையில் தள்ளி அவள் மேல் முழுவதும் படர ஆரம்பித்தான். 

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.